Tag: Kara box office

  • இன்னும் அதே மரமா?.. 11 வருஷமா 3 நாளில் 30 கோடி.. தனுஷ் ட்வீட்டை கலாய்க்கும் ரசிகர்கள்!..

    இன்னும் அதே மரமா?.. 11 வருஷமா 3 நாளில் 30 கோடி.. தனுஷ் ட்வீட்டை கலாய்க்கும் ரசிகர்கள்!..

    கடந்த 2015ம் ஆண்டு கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர், கார்த்தி நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படம் 3 நாளில் 30 கோடி வசூலை ஈட்டியதை கொண்டாடி தனுஷ் போட்ட ட்வீட்டை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

    விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் வெஞ்சரமுடு, கே.எஸ். ரவிகுமார், எம்.எஸ். பாஸ்கர், கருணாஸ் நடித்த கர திரைப்படமும் 3 நாளில் 30 கோடி வசூலை அள்ள போராடி வருகிறது.

    தனுஷின் கர திரைப்படம் கிராமத்து ஹாலிவுட் படம் என்றெல்லாம் பில்டப் விட்டார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. ஆனால், படத்தை பார்த்த ரசிகர்கள் படம் ரொம்பவே போர் அடிக்கிறது என போர் தொழில் இயக்குநரை டேமேஜ் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தனுஷின் 11 வருட பழைய ட்வீட்டை போட்டு இன்னமும் அதே மரமா என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். தனுஷ் கண்டிப்பாக இந்த பிரச்னைகளை அடுத்த படத்தில் சரி செய்து கம்பேக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    சிவகார்த்திகேயனை வைத்து அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடித்து வரும் நிலையில், அந்த படம் கண்டிப்பாக விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும் என்கின்றனர்.

  • Kara 1 Day Box Office: கர முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    Kara 1 Day Box Office: கர முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான படம் கர. மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜ இப்படத்தை இயக்கியுள்ளார். 90களில் ஈராக், குவைத் போர் நடந்தது. இந்த சமயத்தில் இன்டர்நேஷனல் மில்டரி போய் போரை முடித்து வைத்தார்கள். அந்தக் காலகட்டத்தில் நடக்குற கதையமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. நேற்று வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இந்த நிலையில் கர படத்தின் முதல் நாள் கலெக்சன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்று முதல்நாள் 4172 காட்சிகள் நடைபெற்ற நிலையில் இந்திய அளவில் நெட் கலெக்சனாக ரூ 5.75 கோடி கிராஸ் கலெக்சன் ரூ.6.64 கோடியாகவும் இருந்தது. உலகளவில்(இந்தியாவை தாவிர்த்து) மட்டும் நேற்று 2.25 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. ஆக உலகளவில் ரூ 9.14 கோடி வசூல் செய்துள்ளது. இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.