Tag: legend saravanan

  • மனுசன் ஒரு முடிவோடத்தான் இருக்கார் போல…லெஜண்ட் சரவணனின் 3-வது படத்தில் ட்ரிபிள் ஆக்‌ஷன்…

    மனுசன் ஒரு முடிவோடத்தான் இருக்கார் போல…லெஜண்ட் சரவணனின் 3-வது படத்தில் ட்ரிபிள் ஆக்‌ஷன்…

    தமிழ் சினிமாவில் தி லெஜண்ட்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன். முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமலாமல் ரசிகர்கள் அந்த படக் காட்சிகளை ட்ரோல் செய்து வந்தனர். ஆனாலும் மனம் தளராமல் அடுத்த படத்திற்கு தயாரானார். கொடி, காக்கி சட்டை மற்றும் சமீபத்தில் சூர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த கருடன் பட இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் படத்தில் நடித்து முடித்தார். அடுத்த மாதம் வெளியாகும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. தனத் இரண்டாவது படத்தில் பக்குவப்பட்ட நடிகராகவே மாறியுள்ளார் சரவணன்.

    இந்த நிலையில் சமீபத்தில் பேசிய லெஜண்ட் சரவணன், இந்த புதிய படத்தில் தான் ஏற்கும் மூன்று வேடங்களும் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் முயற்சிக்காத முற்றிலும் புதிய பரிமாணத்தில் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரம்மாண்டமான ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி உடல்மொழி, தோற்றம் மற்றும் அதிரடியான சண்டைக் காட்சிகள் வடிவமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
    தனது மூன்றாவது படத்தையும் ‘லீடர்’ இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் தான் இயக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Leader Teaser: வெளியானது லெஜெண்ட் சரவணா லீடர் டீஸர்

    Leader Teaser: வெளியானது லெஜெண்ட் சரவணா லீடர் டீஸர்

    லெஜெண்ட் சரவணா நடிக்கும் லீடர் படத்தின் டீஸர் இன்று வெளியானது

    தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன் நடித்து வெளியீட்டு தயாராக உள்ள படம் லீடர். முதல் படமான லெஜெண்ட் தோல்வி படமாக அமைந்ததால் லீடரை மிகவும் கவனமுடன் எடுத்துள்ளனர். காக்கிசட்டை, எதிர் நீச்சல் கருடன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். லெஜெண்ட் சரவணாவுடன், ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    படத்தின் டைட்டில் க்ளிம்பஸ் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முதல் படமான தி லெஜெண்ட் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்திருந்தார். இந்த நிலையில் லீடர் படத்தின் டீஸர் இன்று வெளியானது

  • Leader Title Glimpse: எப்படியிருகிறது லீடர் டைட்டில் க்ளிம்பஸ் ?

    லெஜெண்ட் சரவணா நடிப்பில் அடுத்த் வெளியாக உள்ள லீடர் டைட்டில் க்ளிம்பஸ் இன்று வெளியானது.

    தொழிலதிபரான லெஜ்ண்ட் சரவணன் அவ்வப்போது தனது கடை விளம்பரத்தில் நடித்து வந்தார். திடீரென தி லெஜெண்ட் படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் சரியாக போகவில்லை. அதுமட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் அவரை ட்ரோல் செய்து வந்தனர்.

    ஆனாலும் மனம் தலராத அவர் இரண்டாவது படத்திற்காக தன்னை தயார் செய்துவந்தார். காக்கிசட்டை, கொடி ,கருடன் என வெற்றிபடங்களை தந்த துரை செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் படத்தில் நடித்து முடித்தார். இந்த படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றினார். படம் தொடர்பான அவரது ஸ்டில்ஸ்கள் வெளியான போதே படம் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டது. லீடர் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் லீடர் படத்தின் டீசர் வெளியானது. அதில் சரவணன் அதிரடியாக சண்டையில் கலக்கியுள்ளார். தன்னை ஒரு மாஸ் ஹிரோவாக மாற்றியுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது. முதல் படத்தின்போது வெளியான எதிர்மறை கருத்துக்களுக்கு இப்படம் மூலம் பதிலளித்துள்ளார். இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் லெஜெண்ட் அண்ணாச்சி வேற லெவலில் கலக்கியிருக்கிறார் என பதிவிட்டு வருகின்றனர்.

    அப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கும் பாசத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருப்பதாக டீசரை பார்க்கையில் தெரிகிறது.

  • அந்த மாதிரி இந்த மாதிரி இல்ல.. வேற மாதிரி! அடுத்த படத்திற்கான முரட்டு லுக்கில் லெஜண்ட் சரவணா

    Legend Saravana: சில தினங்களுக்கு முன்பு சூரியின் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கருடன். படம் வெளியாகி தாறுமாறாக ஓடியது. சூரியின் சினிமா வாழ்க்கையில் கருடன் திரைப்படம் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது. வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில் கருடன் படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இந்த படத்திற்குப் பிறகு அடுத்ததாக லெஜெண்ட் சரவணனை ஹீரோவாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்க இருக்கிறார்.

    வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் துரை செந்தில்குமார். ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் என்ற படத்தை இயக்கினார். அந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கி சட்டை என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு கொடி, பட்டாஸ் போன்ற படங்களையும் இயக்கியவர் துரை செந்தில்குமார்.

    இதையும் படிங்க: பண்றத எல்லாம் பண்ணிட்டு சாரி வேற.. இமான் குறித்து சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்

    இந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பதிவு செய்யாததால் மீண்டும் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். விடுதலை படத்தில் சூரியுடன் ஏற்பட்ட பழக்கம் இப்போது கருடன் திரைப்படம் உருவாக காரணமாக அமைந்தது. இந்த நிலையில் கருடன் படவெற்றியை தொடர்ந்து லெஜெண்ட் சரவணாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார் துரை செந்தில்குமார்.

    legend
    legend

    இந்த படத்திற்காக லெஜெண்ட் சரவணன் வேறு மாதிரி உருமாறி இருக்கிறார். அதுவரை ஒரு காமெடி பீஸ் ஆகவே காணப்பட்ட லெஜெண்ட் சரவணன் இந்தப் படத்திற்காக ஒரு புதிய லுக்கில் தன்னை தயார்படுத்தி இருக்கிறார். அவருடைய இந்த புதிய தோற்றம்தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

    இதையும் படிங்க: எல்லா அங்கிளிலும் செம ஹாட்டு!.. டாப் கிளாஸ் கிளாமரில் தூக்கி அடிக்கும் கீர்த்தி சுரேஷ்!..

    ஒரு ஆக்சன் கலந்த படமாக இந்த படம் உருவாகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதற்கான அந்த தோற்றம்தான் லெஜெண்ட் சரவணனிடம் காணப்படுகிறது. கருடன் படம் எப்பேர்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும். அந்த படத்திற்கு பிறகு துரைசெந்தில்குமார் இயக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

  • லெஜண்ட்க்கு மட்டுமல்ல பிரபல இயக்குனருக்கும் அல்வா தந்த நயன்தாரா!… ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதுங்கோ…

    Nayanthara: நயன்தாரா நேரம் சரியில்லை போல தொடர்ந்து அவரை பற்றிய நெகட்டிவ் செய்திகளே அதிகமாக கசிந்து வருகிறது. அந்த வகையில் லெஜண்ட் சரவணா முதல் தன்னை வளர்த்த இயக்குனர் ஹரி வரை அம்மணி காட்டிய திமிர்த்தனங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

    தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக கருதப்படுபவர் நயன்தாரா.  ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த அவரின் சினிமா கேரியர் தற்போது மிகப்பெரிய சறுக்கலை சந்தித்து இருக்கிறது. அருந்ததிக்கு பிறகு தனிநாயகியாக ஒரு நடிகை நடித்தாலும் அப்படம் ஹிட் கொடுக்கும் என்ற  நம்பிக்கையை விதைத்தவர் நயன்தாரா.

    இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருதுக்கு சோக்கா போஸ் தந்த நயன்தாரா… முழுசா சொல்லாமல் ஊழலா செய்றீங்க?

    ஹீரோக்களுடன் இணைந்து நடித்ததை விட தனிநாயகியாக நயன்தாரா நடித்த திரைப்படத்தின் பட்டியல் அதிகம்.  ஒரு கட்டத்தில் அப்படங்கள் ஹிட் கொடுத்தாலும் சமீபத்திய காலங்களில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகிறது. கிட்டத்தட்ட அவரின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தையே ரசிகர்கள் கலாய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். 

    சினிமா கேரியர் ஆட்டம் கொண்டிருக்கும் நிலையில் நயன்தாரா மேக்கப்,  பெண்களின் சானிட்ரி நாப்கின் உள்ளிட்ட சில தொழில்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் நயனின் கேரியர் மிகப்பெரிய அடியை வாங்கி இருக்கிறது. முன்பாக, நயன்தாரா உச்சத்தில் இருக்கும் போது சில இயக்குனர்களிடம் காட்டிய ஓவர் ஆட்டிடியூட் தான் தற்போது பேசு பொருளாகி இருக்கிறது. 

    அதாவது லெஜண்ட் படத்தில் முதல் முதலில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவை தான் படக்குழு அணுகி இருக்கிறது.  அப்போது அவர் வாங்கிய இரண்டு கோடி சம்பளத்தை 5 மடங்கு அதிகமாக தருவதாகவும் கூறப்பட்டதாம். ஆனால் தனக்கு 100 கோடி கொடுத்தாலும் அந்தப் படத்தில் நடிக்க விருப்பமில்லை என நயன் விலகிவிட்டார். இதில் கடுப்பான லெஜண்ட் சரவணா நயனின் ஆடம்பர அப்பார்ட்மெண்டிற்கு முன்னர் இருந்த பிளாட்டை சொந்தமாக வாங்கினாராம்.

    இதையும் படிங்க: 24 மணி நேரமும் நான்வெஜ்… ஷூட்டிங்கில் அணையவே கூடாத அடுப்பு… பிரபல இயக்குனர் சொல்லிய கண்டிஷன்…!

    அவரிடம் கால்ஷீட் கேட்டுப் போன ஹரியிடம் டேட்களை பிரித்துக் கொடுக்கிறார்.  ஆனால் ஹரி தொடர்ந்து சில நாட்களைக் கேட்க அதை தன்னால் தர முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டாராம்.  இதனால் கடுப்பான ஹரி அவருக்கு பதில் பானுவை ஹீரோயின் ஆக களம் இறக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.