Tag: lik

  • அந்தரத்தில் அனிருத்!.. அடேங்கப்பா என்னாம்மா ஃபீல் பண்ணி பாடுறாரு!.. களைகட்டிய கச்சேரி!..

    அந்தரத்தில் அனிருத்!.. அடேங்கப்பா என்னாம்மா ஃபீல் பண்ணி பாடுறாரு!.. களைகட்டிய கச்சேரி!..

    தமிழ் திரைப்பட இசையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் தான் நம்ம ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரன். இளம் வயதிலேயே தனது இசைத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், இன்று வரை தனது தனித்துவமான இசை ஸ்டைலின் மூலம் அவர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

    ஆரம்பத்தில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்த அனிருத் சமீப காலமாக அவர் இசையமைக்கும் படங்கள் எல்லாம் பெரிதாக ஓடாமல் பல்பு வாங்கி வருகின்றன. இந்தியன் 2, தேவரா சமீபத்தில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வரை ஏகப்பட்ட படங்கள் சொதப்பினாலும், அந்த படங்களில் கூட அனிருத்தின் இசை தனித்தே நிற்கிறது. சினிமா பட்ங்களை விட இசை கச்சேரிகள் மூலம் ஏகபோகமாக சம்பாதித்து வருகிறார்.

    இந்நிலையில், அவர் சமீபத்தில் நடத்திய கச்சேரியின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது இசைப் பயணம் 2012ஆம் ஆண்டு தனுஷ் நடித்ஹ்ட 3 திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. அந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி டி பாடல் உலகளவில் வைரலாகி, அனிருத்தை ஒரே இரவில் பிரபலமாக்கியது. இந்த பாடல் தமிழ் இசையை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்திய முக்கியமான படைப்பாகவும் கருதப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, மாஸ்டர், ஜெயிலர், விக்ரம் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து தனது திறமையை தொடர்ந்து நிரூபித்துள்ளார். இளம் தலைமுறையினரின் மனதில் ஆழமாக பதிந்துள்ள அவரது இசை, புதுமையான ஸ்டைலும் மனதை கவரும் பீட்ஸ்களும் கொண்டதாக அமைகிறது.
    மேலும், ரஜினிகாந்த், தனுஷ், விஜய், கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தது அவரது வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது. அனிருத் பல விருதுகளையும் பெற்றதுடன், அவரது கச்சேரிகள் மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்த ரசிகர் வட்டாரம் அவரை இந்திய இசை உலகின் முக்கியமான முகங்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.

    இந்நிலையில், அனிருத் சமீபத்தில் பாரிஸ் நகரில் நடத்திய கச்சேரியில் அந்தரத்தில் பறந்துக்கொண்டே பாடிய சாகசத்தை புகைப்படங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இசையில் புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் அனிருத் தமிழ் சினிமாவின் எதிர்கால இசையை வடிவமைக்கும் திறமையான கலைஞராக தொடர்ந்து திகழ்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அனிருத்துக்குப் போட்டியாக தற்போது சாய் அபயங்கர் வந்துள்ள நிலையில், டியூட், கருப்பு, அல்லு அர்ஜுனின் ராக்கா படம் வரை சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இருவருக்கும் இடையே தான் இப்போதைக்கு போட்டியே என்கின்றனர்.

  • LIK vs Mr X: தமிழ் சினிமாவை காப்பாத்தப்போவது யாரு?.. சார் இங்கே ஒரே பைத்தியமா இருக்காங்க சார்!..

    LIK vs Mr X: தமிழ் சினிமாவை காப்பாத்தப்போவது யாரு?.. சார் இங்கே ஒரே பைத்தியமா இருக்காங்க சார்!..

    ஒரு படம் வெளியானால் இயக்குநர்களை தான் பலரும் பாராட்டுவார்கள். அந்த படத்தில் மற்ற இடங்களில் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுவார்கள். ஆனால், சமீப காலமாக தமிழ் சினிமா தொடர்ந்து டல் அடித்து வரக் காரணமே இயக்குநர்கள் தான் என்கின்றனர்.

    கடந்த வாரம் விக்னேஷ் சிவன் 100 கோடி பட்ஜெட்டில் எடுத்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் இதுவரை இந்தியாவில் வெறும் 35 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. உலகளவில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சனிக்கிழமையான நேற்றும் படத்துக்கு பெரிதாக கூட்டம் வரவில்லை. இந்நிலையில், இந்த வாரம் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக் நடித்த மிஸ்டர் எக்ஸ் படமும் மண்ணைக் கவ்வி விட்டதாக கூறுகின்றனர்.

    பிரதீப் ரங்கநாதனுக்காக இந்த வசூல்: விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களிலேயே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி அதிக வசூல் ஈட்டும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதற்கு காரணம் பிரதீப் ரங்கநாதன் தான். லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து 100 கோடி வசூல் ஈட்டியதாக போஸ்டர் அடித்து வெளியிட்டனர். இந்த படம் 50 கோடியை கடக்கவே படாதபாடு பட்டுவிட்டது. நல்லவேளை 210 கோடி பட்ஜெட்டில் திட்டமிட்டதை போலவே இதே மொக்கை கதையை விக்னேஷ் சிவன் படமாக்கியிருந்தார் என்றால் இன்னமும் ஒரு 100 கோடி இழப்பு தயாரிப்பாளருக்கு ஏற்பட்டு இருக்கும் என்கின்றனர்.

    மிஸ்டர் எக்ஸ் வசூல்: ஆர்யா, கெளதம் கார்த்திக்கு எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நல்லா ஹேண்ட்ஸம் ஆகவும் சிக்ஸ் பேக் வைத்து வாட்ட சாட்டமாகவும் இருக்கின்றனர். ஆனால், இயக்குநர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து தவறு செய்து வருகின்றனர். எஃப்ஐஆர் படமே அதிகபட்சமாக 24 கோடி வசூல் ஈட்டிய நிலையில், பெரிய பட்ஜெட்டில் அவர் இயக்கத்தில் உருவான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் 2 நாட்களில் அதிகபட்சமாக 1.36 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமா இந்த ஏப்ரல் மாதத்தில் ரொம்பவே டல் அடித்து வருகிறது. தனுஷின் கர திரைப்படமாவது கை கொடுக்குமா? அல்லது இட்லி கடை போல கவிழ்த்து விடுமா என தியேட்டர் ஓனர்கள் முதல் திரையுலகமே அச்சத்தில் உள்ளது.

  • உயிர், உலக் நல்லா வளர்ந்துட்டாங்களே.. LIK ஃப்ளாப் ஆனாலும் ஹேப்பியா இருக்கும் விக்கி, நயன்!..

    உயிர், உலக் நல்லா வளர்ந்துட்டாங்களே.. LIK ஃப்ளாப் ஆனாலும் ஹேப்பியா இருக்கும் விக்கி, நயன்!..

    நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால் அடிக்கடி கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் கூட இவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, தங்கள் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” திரைப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிடையில், கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் பெரிதும் வைரலான “நார்மல் பீப்பிள்” குறித்த கருத்து தொடர்பாக அவர் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த கருத்து பொதுமக்களை குறிவைத்து கூறப்பட்டதல்ல; அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    மேலும், நடிகர் தனுஷ் உடனான தனது நட்பு முறிவு குறித்து விக்னேஷ் சிவன் மனமுடைந்த நிலையில் பேசியது ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றுள்ளது. “என் வாழ்க்கையில் அது ஒரு பெரிய இழப்பு” என்று அவர் உணர்ச்சியுடன் கூறியுள்ளார்.

    நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரட்டை மகன்கள் உள்ளனர்; அவர்களுக்கு “உயிர்” மற்றும் “உலக்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கையையும் தொழிலையும் சமநிலைப்படுத்தி சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.

    நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான “மன சங்கர வர பிரசாந்த் காரு” தெலுங்கு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், யஷ் உடன் நடித்த டாக்ஸிக், மம்மூட்டி, மோகன்லால் உடன் நடித்த பேட்ரியாட் படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளன. பாலிவுட்டில் சல்மான் கான் ஜோடியாகவும் கமிட் ஆகியுள்ளார். இப்படியாக பிஸியான தொழில் வாழ்க்கையிலும், குடும்பத்திற்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

    இந்த நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்கள் குழந்தைகளான உயிர் மற்றும் உலகுடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

  • விஜய் ரேஞ்சுக்கு உயருவாருன்னு பார்த்தா.. கென் ரேஞ்சுக்கு பிரதீப் ரங்கநாதனை இறக்கிய விக்னேஷ் சிவன்!

    விஜய் ரேஞ்சுக்கு உயருவாருன்னு பார்த்தா.. கென் ரேஞ்சுக்கு பிரதீப் ரங்கநாதனை இறக்கிய விக்னேஷ் சிவன்!

    சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தொடர்ந்து 100 கோடி வசூலை கொடுத்து வந்த பிரதீப் ரங்கநாதனை, அடுத்து விஜய் ரேஞ்சுக்கு உயர்த்துவார் விக்னேஷ் சிவன் என்று பார்த்தால் கென் கருணாஸ் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டாரே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    கடந்த வாரம் வெளியான எல்.ஐ.கே. திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறாத நிலையில், அதனை முன்கூட்டியே உணர்ந்தது போலவே விழாவில் விக்னேஷ் சிவன் உரையாற்றினார். “இந்த படத்தை நான் முழுமையாக என் சொந்த செலவில் தான் தயாரித்தேன். சமூக வலைத்தளங்களில் படத்தைப் பற்றி பலவிதமான கருத்துகள் வெளியிடப்படுகின்றன. இனி இப்படிப் பெரிய செலவுகளை செய்ய என்னிடம் வசதி இல்லை,” என்று அவர் கூறினார்.

    மேலும், தற்போது நிலவி வரும் ‘தம்ப்நெயில் கலாச்சாரம்’ குறித்து அவர் கவலை தெரிவித்தார். “நல்ல விஷயங்களையும் தவறாகச் சொல்லி தான் ஆரம்பிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது. என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பலரும் ஏதாவது பேசுகிறார்கள். அதை பார்த்து மக்கள் நம்பி விடுகிறார்கள்,” என்றும் கூறினார்.

    அதோடு, “இன்னும் சிலருக்கு நான் பணம் வழங்க வேண்டியுள்ளது. அதனால், இந்த படத்திற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று ரசிகர்களிடம் அவர் வேண்டுகோள் வைத்தார்.

    திரைப்பட விமர்சனங்களைப் பற்றியும் அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார். “நான் படம் எடுத்தால், ‘நீ செய்த கேசரி ஏன் காரமாக இருக்கிறது? நீ வைத்த கறி குழம்பு ஏன் இனிப்பாக இல்லை?’ என்று கேட்பது போல கதையையும் குறை கூறுகிறார்கள். என்னால் ஒரு அளவிற்கு தான் படம் எடுக்க முடியும். மற்றவர்கள் போல் மிகப் பிரம்மாண்டமாக எடுக்க முடியாது,” என்று அவர் தெரிவித்தார்.

    லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு, க்ரித்தி ஷெட்டி, கெளரி கிஷன், மாளவிகா என ஏகப்பட்ட நடிகர்களை தாண்டி அனிருத் இசை, ரவி வர்மன் ஒளிப்பதிவு, நயன்தாரா 100 கோடி வரை செலவு செய்து எடுக்க அனுமதித்த நிலையில், படத்தை சொதப்பி விட்டார் விக்னேஷ் சிவன் என்றும் 20 கோடி செலவில் படங்களை எடுத்து 100 கோடி வசூல் ஈட்டி வந்த பிரதீப் ரங்கநாதனை 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்து 50 கோடி நாயகனாக மாற்றிவிட்டாரே என ட்ரோல் செய்து வருகின்றனர்.

  • LIC டைட்டிலுக்கு 112 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பினாங்க.. விக்னேஷ் சிவன் சொன்ன ஷாக்கிங் தகவல்!..

    LIC டைட்டிலுக்கு 112 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பினாங்க.. விக்னேஷ் சிவன் சொன்ன ஷாக்கிங் தகவல்!..

    கடந்த வாரம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான LIK படத்தின் தலைப்பு தொடர்பான ஷாக்கிங் பின்னணியை அவர் சமீபத்தில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரீத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளியான பாடல்கள் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டன.

    மேலும், பிரதீப் ரங்கநாதன் நடித்த முந்தைய படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், இந்த படத்திற்கும் அதே அளவிலான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தற்போது படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில், சுமார் 44 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த படம் 100 கோடி கிளப்பை எட்டுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

    இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு குறித்த ஒரு ஷாங்கிங்கான தகவலை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு “LIC” என்று பெயரிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், Life Insurance Corporation of India (LIC) நிறுவனம் அந்த பெயரை பயன்படுத்தியதற்காக ரூ.112 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.

    இந்த பிரச்சனை ஏற்படலாம் என முன்கூட்டியே கணித்திருந்ததால், “LIK”, “LIP”, “LID”, “LIF” போன்ற பல மாற்று தலைப்புகளை முன்பே தயார் செய்து வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இறுதியில், அவற்றில் “LIK” (Love Insurance Kompany) என்ற தலைப்பை தேர்வு செய்ததாகவும் கூறினார்.

    இந்த தலைப்பு மாற்றத்தின் பின்னணி தற்போது ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

  • பிரதீப் ரங்கநாதனின் LIK படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!

    பிரதீப் ரங்கநாதனின் LIK படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், மிஸ்கின், கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, மாளவிகா, ஆனந்த்ராஜ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் இன்று ஒருவழியாக வெளியான நிலையில், தாறுமாறாக உள்ளதா? அல்லது பிரதீப் ரங்கநாதனின் அடுத்த கிரிஞ்ச் குடோனா என்பது குறித்த விமர்சனத்தை தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

    விக்னேஷ் சிவன் மொக்கை பீஸ் என அஜித் நினைத்து ஒதுங்கிய நிலையில், விடாமுயற்சி எனும் படத்தை மகிழ் திருமேனியை வைத்து எடுத்துக் கொடுத்து ரசிகர்களை அழ வைத்தது தான் மிச்சம். கண்டிப்பாக அஜித் குமார் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தால் குட் பேட் அக்லி படத்தை விட ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருப்பார் என்றே தெரிகிறது.

    டிராகன் படம் அளவுக்கு எல்ஐகே இல்லை என்றாலும் டியூட் படத்தை விட ரொம்பவே பெட்டராக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்

    என்னதான் உலக நாயகன் கமல்ஹாசன் ஹேராம், ஆளவந்தான், விருமாண்டி என படம் பண்ணினாலும் பாக்ஸ் ஆபீஸில் ஓடியது ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா தான். அதே பாணியை தான் பிரதீப் ரங்கநாதனும் பிடித்துள்ளார். ரஜினிகாந்தை தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன் என பலரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் பக்காவாக சேர் போட்டு அமர்ந்துவிட்டார்.

    சிவகார்த்திகேயனும் கொஞ்சம் ரூட்டை மாற்றி நடுவில் புரட்சி கருத்தை எல்லாம் பேசி போர் அடித்து வரும் நிலையில், ஜென் ஸி கிட்ஸ்களை கவரும் விதமாக லேசான கருத்துடன் ஜாலியான படத்தை லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார்.

    சீமான் வரும் காட்சிகள், எஸ்.ஜே. சூர்யா வரும் காட்சிகள் எல்லாமே தியேட்டரே தெறிக்கும் காட்சிகளாக எங்கேயும் காம்ப்ரமைஸ் பண்ணாமல் விக்னேஷ் சிவன் இயக்கிய விதம் சிறப்பு.

    LIK ஆப் மூலம் இன்னார்க்கு இன்னார் என்பதை கண்டு பிடிக்கும் லவ் மீட்டரை எஸ்.ஜே. சூர்யா அறிமுகப்படுத்த பிரதீப் ரங்கநாதன் – கீர்த்தி ஷெட்டி காதலை அது பிரிக்கிறது. ஆப்பை விட மனித இதயத்துக்கு வேல்யூ அதிகம் என்பதை ஹீரோ நிரூபிப்பதே படத்தின் கதை.

    பிரதீப் ரங்கநாதன் படத்தை ஜாலியாக குழந்தைகள் என்ஜாய் செய்யும் விதமாக விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தாலும், கெளரி கிஷன் உடனான லிப் லாக் காட்சி மற்றும் ஹீரோயின் அசிங்கமாக பேசும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

    எல்ஐகே ரேட்டிங்: 3.25/5.

  • சீமானின் சேட்டை வாய்ஸ்.. போனை தூக்கிப் போட சொல்லும் பிரதீப் ரங்கநாதன்.. ’வைப் வாஸி’ வேலைக்கு ஆகுமா?

    சீமானின் சேட்டை வாய்ஸ்.. போனை தூக்கிப் போட சொல்லும் பிரதீப் ரங்கநாதன்.. ’வைப் வாஸி’ வேலைக்கு ஆகுமா?

    லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து 100 கோடி பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ.கே படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இன்று அப்படத்தின் புதிய பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

    நடிகை நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள லவ் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கீர்த்தி ஷெட்டி, சீமான், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் சமீபத்தில் எல்.ஐ.கே படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அதில் விக்னேஷ் சிவன், நயன்தாரா, பிரதீப் ரங்கநாதன், அனிருத் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். அதில் பேசிய பிரதீப் என்னுடைய படத்தின் சுமாரான வசூலே 100 கோடி என்று அனைவரும் ஃபிக்ஸ் செய்துவிட்டனர். அப்படி என் படம் வசூல் செய்யாவிட்டால் தோல்வி படமாக பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் எனக்கு படத்தின் வசூல் முக்கியம் இல்லை மக்களுக்கு படம் பிடித்தால் போதும் என்று பேசியிருந்தார்.

    மேலும், எல்.ஐ.கே படத்தின் அனிருத் இசையில் ’வைப் வாசி’ பாடல் வெளியாகி சமூகவலைத்தளங்களை கலக்கிவருகிறது. டியூட் படத்தின் ஊறும் பிளட் பாடல் ரீச்சான அளவிற்கு இப்பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெருமா என்பதை காத்திருந்து பார்க்கலாம். அனிருத் பாடியுள்ள இப்பாடலில் லிரிக்ஸை விட சீமானின் டைலாக் தான் அதிகமாக உள்ளதாக சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    2 வருஷத்துக்கு முன்னாடியே வெளியான தீமா, 10 வருஷத்துக்கு முன்னாடி வெளியான எனக்கென யாரும் இல்லையே, போன வருஷம் வெளியான பட்டும்மா, சமீபத்தில் வெளியான அடாவடி பாடல்களுடன் இந்த பாடல்களும் ரசிகர்களின் ரிங்டோன் லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • சிம்பு படத்தை இயக்கினாலும் பாக்கெட்டில் சில்லறை இல்லை.. அனிருத் தான் 50 ஆயிரம் கொடுத்தாரு – விக்கி!

    சிம்பு படத்தை இயக்கினாலும் பாக்கெட்டில் சில்லறை இல்லை.. அனிருத் தான் 50 ஆயிரம் கொடுத்தாரு – விக்கி!

    இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள LIK படம் பல தடைகளுக்கு பிறகு வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் இசைவெளியிட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்ற நிலையில் விக்னேஷ் சிவன் அனிருத் தனக்கு செய்த உதவியை பற்றி எமோஷனலாக பேசியது தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகை நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, கௌரி கிஷன், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    மேலும், விக்னேஷ் சிவன் தான் சிம்புவை வைத்து போடா போடி படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான பின்னரும் தன்னிடம் நானும் ரவுடி தான் படத்திற்காக பாண்டிச்சேரிக்கு செல்ல பஸ்ஸுக்கு மட்டும் வெறும் 250 ரூபாய் தான் புலம்பிக்கொண்டே என்ன செய்வதென்றே புரியாமல் சென்று கொண்டிருந்த போது அனிருத் போன் செய்து உன் பேகில் 50 ஆயிரம் பணம் வச்சிருகேன்னு சொன்னார், அதை கேட்டதும் நான் அப்படியே கலங்கிப் போயிட்டேன். என் கண்ணீரால் பஸ்ஸின் கம்பிகள் எல்லாம் நனைந்தது என எமோஷனலாக பேசியிருந்தார். விக்னேஷ் சிவன் தனக்கு ஆரம்பத்திலிருந்து தற்போது வரை எல்லா விதத்திலும் அனிருத் செய்த உதவிகளுக்கு உருக்கமாக தனது நன்றியினை தெரிவித்தார்.

    பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் வெளியான டிராகன் மற்றும் டியுட் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு LIK படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பை வைத்துள்ளனர். மேலும், இப்படமும் பிரதீப்பிற்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2040ல் தமிழ்நாட்டில் நடக்கும் லவ் ஸ்டோரிக்கு ஆப் மூலம் பிரச்னை வருவதே படத்தின் கதை.

  • பாரதிராஜா, பாக்கியராஜ் போலத்தான் பிரதீப் ரங்கநாதன்!.. ராம் பேசியதும் கலங்கிய விக்னேஷ் சிவன்!..

    பாரதிராஜா, பாக்கியராஜ் போலத்தான் பிரதீப் ரங்கநாதன்!.. ராம் பேசியதும் கலங்கிய விக்னேஷ் சிவன்!..

    லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று வேல்ஸ் யூனிவர்சிட்டி ஆவடியில் நடைபெற்றது. அதில், பல பிரபலங்கள் பங்கேற்று பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனை பாராட்டிப் பேசினர்.

    நானும் ரவுடி தான் படம் உருவாக தான் எந்தளவுக்கு காரணமாக இருந்தேன் என்பதை இயக்குநர் ராம் ஓபனாக பேசியதும், விக்னேஷ் சிவனை அவர் புகழ்ந்த நிலையில், லேசாக கண் கலங்கிவிட்டார்.

    பாலிவுட்டில் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ் போன்ற படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி போல தமிழில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது படங்களை கொடுத்து வருகிறார் என பாராட்டினார். நானும் ரவுடி தான் படத்தின் ஹீரோ அனிருத் தான். ஆனால், அவர் நடிக்கவில்லை என்று சொன்னதும் அந்த ஸ்க்ரிப்ட்டை தமிழ்நாட்டில் உள்ள பல நடிகர்களிடம் விக்னேஷ் சிவன் சொன்னார்.

    நான் தான் விஜய் சேதுபதியிடம் பேசச் சொல்லி சொன்னேன். அவர் எப்படி செட் ஆவார் என்றார். ஆனால், அதன் பின்னர், அந்த படத்தில் விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை தயார் செய்து வந்து நடித்து படத்தை வெற்றிப்பெற செய்தார்.

    தமிழ் சினிமாவில் கதை ஆசிரியர்களும் இயக்குநர்களும் ஹீரோவாகலாம் என்பதை பாரதிராஜா, பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் போன்றவர்கள் நிரூபித்துக் காட்டினர். அதன் பின்னர், அது அப்படியே தேங்கி நின்றது. ஆனால், அதை திரும்பவும் கொண்டு வந்து கலர், உருவம், ஹைட்டு எல்லாம் தேவையில்லை, நல்லா நடிக்கத் தெரிந்தால் போதும் யார் வேண்டுமானால் ஹீரோவாக ஆகலாம் என்பதை பிரதீப் நீரூபித்துக்காட்டினார்.

    வித் லவ் ஹீரோ, கென் கருணாஸ் யூத் படம் எல்லாம் பிரதீப் ரங்கநாதன் போட்ட பாதையில் அடுத்தடுத்து வந்தவர்கள் தான் என்று புகழ்ந்து தள்ளினார்.