Tag: manju warrier

  • மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்.. ஆர்யாவுக்கும், கெளதம் ராம் கார்த்திக்கும் மறுபடியும் பல்பு தான்!..

    மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்.. ஆர்யாவுக்கும், கெளதம் ராம் கார்த்திக்கும் மறுபடியும் பல்பு தான்!..

    அபிஷன் ஜீவிந்த், கென் கருணாஸ் எல்லாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நிலையில், ஆர்யா, கெளதம் கார்த்திக்கு எல்லாம் என்ன ஆனது இப்படியொரு இடியாப்ப சிக்கல் கதையை தேடி நடித்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

    விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகனை வைத்து எஃப்ஐஆர் திரைப்படத்தை எடுத்த மனு ஆனந்த் அந்த படத்தை விட சூப்பர் படத்தைக் கொடுக்கிறேன் என தனது பேட்டியில் துரந்தர் எல்லாம் கொண்டு வந்து ரிலீஸுக்கு முன்பாக பேசினார்.

    ஆனால், படத்தை பார்த்தவுடன் இதுக்காக இவ்ளோ பில்டப் என்றும் இதுக்கு லெஜண்ட் சரவணா நடித்த லீடர் படமே ஸ்பை த்ரில்லர் படத்தை எப்படி எடுக்கணும்னு பாடம் நடத்தும் போல இருக்கே என ரசிகர்கள் தியேட்டரிலேயே கத்தத் தொடங்கி விட்டனர்.

    இடியாப்ப சிக்கல் கதை: நாட்டையே காப்பாற்றும் மிஸ்டர் எக்ஸ் ஆனால், அது ஆர்யாவும் இல்லை, கெளதம் கார்த்திக்கும் இல்லை என்கிற இடத்திலேயே இருவருக்கும் விபூதி அடித்துவிட்டு இயக்குநர் புதுசாக செட்டாகாத டோப்பாவை மாட்டி சரத்குமாரை ஹீரோவாக ஆரம்பத்தில் காட்டிவிட்டார். அப்புறம் அதே சரத்குமார் தான் ஆர்யாவின் அப்பா, இந்தியாவையும் உங்க அப்பாவையும் காப்பத்துறது தான் உன்னோட மிஷன் இம்பாசிபிள் என மஞ்சு வாரியர் மிஷனை தூக்கி தாலி கட்டி குடும்ப வாழ்க்கை நடத்த திட்டமிட்ட ஆர்யாவிடம் கொடுக்க, அவருக்கு வில்லனாக கெளதம் கார்த்திக் ரைசா வில்சன் உடன் ஜோடி போட்டு குதிக்க, கடைசியில் டைரக்டர் மெயின் வில்லனே நான் தான் என வச்ச ட்விஸ்ட்டை பார்த்து விட்டு ஆளவிடுங்கடா சாமி என தெறித்து ஓட ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.

    ஆர்யா, கெளதம் கார்த்திக்கு மீண்டும் பல்பு தான்: இப்படித்தான் ஆர்யா கேப்டன் படத்தில் நடித்தார். ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்கிறேன் என பிரடேட்டர்களை எல்லாம் கொண்டு வந்து உப்புமா படத்தைக் கொடுத்து காண்டாக்கினர். அதே வகையில் தான் இந்த படமும் கதை நல்லா இருந்தாலும் திரைக்கதை, உருவாக்கப்பட்ட விதம் எல்லாம் படு மோசம்.

    பிரதமர் மோடிக்கிட்ட பேசிட்டு இருந்துட்டே அடுத்த 10 நிமிஷத்துல கல்பாக்கம் அனல் மின் நிலையத்துக்கு வந்து கிளைமேக்ஸில் மஞ்சு வாரியர் சண்டை போடுறது எல்லாம் காமெடியின் உச்சம். இந்தியாவின் உளவுத்துறையை பெருமைப்படுத்துறோம்னு படம் எடுப்பாங்க பார்த்தால், ட்ரோல் பண்ணி வச்சிருக்காங்க. சரத்குமாருக்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

    ரேட்டிங்: 2.5/5.

  • மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

    மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

    தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது புன்னகை மாறா முகத்துடன் கலந்துகொள்பவர் இவர்.

    கேரளாவைச் சேர்ந்த மஞ்சு வாரியர் 1995-ஆம் ஆண்டு சாக்ஷ்யம் என்ற படத்தின் மூலம் மலையாள படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து ‘சல்லாபம்’, ‘ஈ புழையும் கடன்னு’, ‘ஆறாம் தம்புரான்’, ‘கண்மடம்’, ‘பத்ரம்’ என தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே மலையாள திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தையும் பெற்றார்.

    திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர், 2014-ஆம் ஆண்டு வெளியான ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய அதன் பிறகு ‘லூசிபர்’, ‘அசுரன்’, ‘பிரதி பூவன்கோழி’ என அழுத்தமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் அசுரன், ரஜினியுடன் வேட்டையன், அஜித்துடன் துணிவு என சில படங்களில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டமஞ்சுவாரியாருக்கு மேடைக்கு வந்த ரசிகை ஒருவர் அவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

    அண்மையில் ஒரு பொது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் மஞ்சு வாரியர். நிகழ்ச்சி நடைபெற்றுகொண்டிருக்கும்போது , கூட்டத்தில் இருந்த பெண் ரசிகை ஒருவர் திடீரென மேடையை நோக்கி ஓடி வந்தார். மேடையில் நின்றுகொண்டிருந்த மஞ்சு வாரியரை ஆசையாகக் கட்டியணைத்த அந்த ரசிகை, யாரும் எதிர்பாராத விதமாக அவரது உதட்டில் பசக் என முத்தம் கொடுத்தார்.

    இந்த திடீர் சம்பவத்தை எதிர்பார்க்காத மஞ்சு வாரியர் சற்று திகைத்து நின்றாலும், முகத்தில் எதையும் காட்டாமல் லேசாகப் புன்னகைத்தார். ஆனால், மேடையில் இருந்தவர்களும், பாதுகாவலர்களும் பதறியடித்துக் கொண்டு உடனடியாக அந்த ரசிகையை மேடையில் இருந்து கீழே இறக்கி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ரசிகையின் எல்லையற்ற அன்பு இது என்றும் கமெண்ட்களைப் பறக்கவிட்டு வருகின்றனர்.

  • அசுரனுக்கு முன்பே மஞ்சுவாரியார் நடிக்க இருந்த படம்.. அட அஜித்தின் அந்தப் படமா?

    பிறமொழி நடிகர்களின் ஆதிக்கம்:

    தமிழ் சினிமாவில் பிறமொழி நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கின்றது. நடிகர்களுக்கு இணையாக பிற மொழியில் இருந்து நடிகைகளும் தமிழ் மொழிக்கு வந்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விடுகின்றனர். அந்த வகையில் சென்னையில் பிறந்தவரானாலும் மலையாளத்தில் புகழின் உச்சியில் இருப்பவர் சாய் பல்லவி.

    அவர் இப்போது தமிழ் ரசிகர்களின் கனவு நாயகியாகவே மாறிவிட்டார். அதைப்போல மஞ்சு வாரியார் மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டார். இவரும் இப்போது தமிழ் படங்களில் நடிக்க வந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிபெயர்ந்து விட்டார். தமிழில் முதன் முதலில் இவர் நடித்த திரைப்படம் அசுரன்.

    சொந்தக் குரலிலேயே டப்பிங்:

    இவர் நடிக்கும் திரைப்படங்களில் இவருக்கு என டப்பிங் யாருமே கிடையாது. தனது சொந்த குரலிலேயே தான் பேசுவார். அசுரன் திரைப்படத்திலும் திருநெல்வேலி பாஷையில் அச்சு பிறழாமல் நன்றாக பேசி இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதற்கு அடுத்தபடியாக துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்து கலக்கி இருந்தார்.

    வேட்டையன் திரைப்படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக அதிலும் ஒரே ஒரு காட்சியில் ஆக்‌ஷன் காட்சியில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.இப்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் மகாலட்சுமி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.இந்த நிலையில் மஞ்சுவாரியார் அசுரன் திரைப்படத்திற்கு முன்பே ஒரு தமிழ் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததாம்.

    அழுத ஐஸ்வர்யா ராய்:

    ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அந்த வாய்ப்பு தவறிவிட்டது என அந்த படத்தின் இயக்குனர் கூறி இருக்கிறார். அது வேறு எந்த படமும் இல்லை. அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டான கண்டுகொண்டே கண்டுகொண்டேன் திரைப்படம்தான். அந்தப் படத்தின் இயக்குனரான ராஜீவ் மேனனுக்கு முதலில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க எண்ணமே இல்லையாம்.

    முதலில் மஞ்சுவாரியரை தான் அணுகியிருக்கிறார். மஞ்சு வாரியர் கதை என்ன? யார் யார் நடிக்கிறார்கள் என்பதையெல்லாம் கேட்டுவிட்டு ஓகே என சொல்லி இருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவர் நடிக்க முடியாமல் போனது. அடுத்து கன்னட நடிகை சௌந்தர்யாவை அவர் அணுகியிருக்கிறார். அவர் இரண்டு ஹீரோயின் என்பதால் மறுத்துவிட்டாராம் .

    அதன் பிறகு தான் கடைசியாக ஐஸ்வர்யா ராயை போய் பார்த்திருக்கிறார். அவர் படத்தின் கதையை கேட்டு அழுதே விட்டாராம். நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என மிகவும் சந்தோஷமாக கூறினார் என ராஜீவ் மேனன் ஒரு பேட்டியில் கூறினார். இந்தப் படத்தின் கதையை அஜித்திடம் கூறும் போது அந்த சமயம் அஜித் அப்போல்லோவில் அட்மிட் ஆகியிருந்தாராம். கதையை கேட்டு அஜித்தும் நான் பண்றேன்ஜி என கூறியிருக்கிறார்.

  • வேட்டையனில் என்னுடைய கேரக்டர் இதுதான்.. சீக்ரெட்டை உடைத்த மஞ்சு வாரியர்… ஜாலி பண்ணும் ரசிகர்கள்

    Vettaiyan: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல நடிகை மஞ்சுவாரியர் தன்னுடைய கேரக்டர் குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்த் பரபரப்பாக நடித்து வரும் திரைப்படம் தான் வேட்டையன். இப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

    இதையும் படிங்க: விஜயகாந்த் சீன் சொதப்பல்! அதற்கான காரணத்தை கூறிய கோட் ஒளிப்பதிவாளர்

    ஜெயிலர் திரைப்படத்தைப் போலவே இத்திரைப்படத்திலும் மல்டி ஸ்டார் கூட்டம் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில், ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

    அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் முதல் பாடலான மனசிலாயோ கடந்த வாரம் வெளியானது. எப்போதும் போல ரசிகர்களை ஏமாற்றாமல் இப்பாடல் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்பாடலில் ரஜினிக்கு பின்னர் அருகில் இருந்த மஞ்சு வாரியர் அதிகமாக ரசிக்கப்பட்டார்.

    இதையும் படிங்க: ஆத்தாடி…பிபி7 முடிஞ்சும் இந்த டீம் ஏ, டீம் பி அடிச்சிக்கிறத நிறுத்தலையா… இன்னொரு பஞ்சாயத்தா?

    இதை தொடர்ந்து, மஞ்சு வாரியர் இப்படத்தில் தாரா என்னும் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. யூடூபராக வரும் மஞ்சு வாரியர் ரஜினி்யின் மனைவியாகவும் நடித்துள்ளாராம். இவரின் கேரக்டரால் தான் படத்தில் திருப்புமுனை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. ரீ எண்ட்ரி கொடுத்து நடித்துவரும் மஞ்சு வாரியர் ரஜினியுடன் நடிப்பதே தனக்கு மிகப்பெரிய பெருமை எனவும் தெரிவித்து இருக்கிறார்.

    தற்போது தமிழில் இப்படத்துடன் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் விடுதலை 2 திரைப்படத்திலும் மஞ்சுவாரியார் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அஜித்தின் துணிவு படத்தில் நடித்திருந்தால் மஞ்சு வாரியர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் என்பதும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

  • இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா?.. மஞ்சு வாரியரின் திடீர் மாற்றம்!.. எல்லாம் அஜித் பார்த்த வேலை!

    எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துணிவு படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த ஹூமா குரேஷிக்கு பைக் மீது ஆர்வம் இல்லை என்றே தெரிகிறது.

    மஞ்சு வாரியர் அஜித்துடன் பைக் டூர் சென்ற நிலையில், அவருக்கு பைக் ஓட்டுவது ரொம்பவே பிடித்துப் போன நிலையில், தொடர்ந்து பைக் ஓட்டி வருகிறார். நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹைவே ஒன்றில் ஹெல்மட் போட்டுக் கொண்டு விலையுயர்ந்த பைக்கை மஞ்சு வாரியர் ஓட்டிச் செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: என்ன சொல்ல வராரு சூர்யா?.. புறநானூறு படம் குறித்து திடீரென அறிக்கை.. அப்போ அவ்ளோ தானா?..

    அந்த பைக் ஓட்டும் வீடியோவுக்கு “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” என அன்பே வா படத்தில் எம்ஜிஆர் மற்றும் சரோஜா தேவி தேர் ஓட்டிக் கொண்டு செல்லும் ட்ரீம் சாங்கை பேக்கிரவுண்டில் போட்டுள்ளார்.

    மலையாள நடிகையான மஞ்சு வாரியர் பிரபல நடிகர் திலீப்பை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், காவியா மாதவனை திலீப் காதலிக்க ஆரம்பித்த நிலையில், மஞ்சு வாரியர் பிரிந்து விட்டார். காவியா மாதவனுடன் வாழ்ந்து வரும் திலீப் பிரபல தென்னிந்திய நடிகையின் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: சரசரவென இறங்கிய சமந்தா சம்பளம்!.. ஒரு பாட்டுக்கு 5 கோடி வாங்கிய சமந்தா!.. இப்போ எவ்வளவு தெரியுமா?..

    45 வயதை கடந்தாலும் இன்னமும் மஞ்சு வாரியர் இளமையுடன் காட்சியளித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சு வாரியர் மீண்டும் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    https://twitter.com/ManjuWarrier4/status/1769690194842894649