Tag: ott release

  • OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் – ஒரு பார்வை

    ஓடிடியில் இந்த வாரம் என்ன படங்கள் எந்த ஓடிடியில் வெளியாகிறது என்பதை இங்கு பார்ப்போம்.

    தமிழ் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்

    sirai movie

    சிறை (Sirai): கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை ஒட்டி வெளியான படம் சிறை. டாணாகாரன் படத்தை அடுத்து காவலராக விக்ரம் பிரபு இப்ப இடத்திலும் நடித்திருந்தார் சிறை விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விக்ரம் பிரவுடன் மாஸ்டர், லியோ படங்களின் தயாரிப்பாளர் லலித்குமார் மகன் அக்ஷய்குமார் நாயகியாக அனிஷ்மா ,ஆனந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுரேஷ் ராஜகுமாரி படத்தை இயக்கியிருந்தார்

    திரையரங்குகளில் வெற்றியை அடுத்து இப்படம் ஜனவரி 23 அன்று Zee5 தளத்தில் வெளியாகிறது.

    தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishk Mein):

    பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ்நடித்த சமீபத்தில் வெளியான படம் தேரே இஷ்க் மெய்ன். தனுசுடன் நாயகியாக கீர்த்தி சனோன் நாயகியாக நடித்திருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இப்படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் காதல் காவியம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஜனவரி 23 அன்று வெளியாகிறது.

    1. பிற மொழித் திரைப்படங்கள்:

    ஏ நைட் ஆஃப் தி செவன் கிங்டம்ஸ் (A Knight of the Seven Kingdoms): கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) சீரிஸின் இந்த முன்கதை (Prequel) ஜனவரி 19 அதாவது இன்று காலை 8.30க்கு ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.

    சீக்கட்டிலோ (Cheekatilo): சோபிதா துலிபாலா நடித்துள்ள இந்த க்ரைம் திரில்லர் தெலுங்குத் திரைப்படம் அமேசான் பிரைமில் ஜனவரி 23 அன்று வெளியாகிறது.

    குஸ்தாக் இஷ்க் (Gustakh Ishq): விஜய் வர்மா, பாத்திமா சனா சாய்க் மற்றும் நஸ்ருதின் ஷா நடித்துள்ள இந்தப் படம் ஜனவரி 23 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

  • OTT: ஆசைக்காட்டி மோசம் பண்ணிட்டீங்களே… இந்த வாரம் ஓடிடி ரிலீஸுக்கு வந்த திரைப்படங்கள்…

    OTT: பிரபல திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதன் அதிகாரப்பூர்வ லிஸ்ட் குறித்த தொகுப்புகள்.

    மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான இப்படம் பெரிய ஏமாற்றத்தை கிளப்பியது.

    படம் ரிலீசாவதற்கு முன்னர் 8 வாரம் கழித்தே இந்த படம் ஓடிடிக்கு வர நிறுவனம் சம்மதித்து விட்டதாக கமல் பேசி இருப்பார். ஆனால் தற்போது அதிர்ச்சியாக 5 வாரத்தில் நெட்பிளிக்ஸில் Thuglife திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது.

    காளிவெங்கட், ரோஷினி நடிப்பில் உருவான Madras Matinee திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது பிரைம் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.

    இரு மதத்தில் இருக்கும் பிரச்னையை பேசும் Paramashivan Fathima திரைப்படம் நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும் பெரிய ஹிட் கொடுக்கவில்லை. தற்போது இப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

    நல்ல படங்களைக் கொடுத்து வந்த வெற்றி சமீபத்தில் பல படங்களில் சரியாக தேர்வு செய்யவில்லை. அந்த வரிசையில் அவர் நடிப்பில் Rajputhiran இந்த வாரம் சிம்ப்ளிசவுத்தில் ரிலீஸாக இருக்கிறது. ஆனால் ரசிகர்களை ஈர்க்குமா என்பது தெரியவில்லை.

    பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் இந்த வாரம் ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளிவர இருக்கிறது The Good Wife வெப்சீரிஸ். கணவருக்கு ஏற்படும் பிரச்சனையை வக்கீலாக பிரியாமணி எப்படி எதிர்கொண்டார் என்பதை மையமாக வைத்து வெளிவரும் இந்த சீரிஸ் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுமட்டுமல்லாமல் பிரைம் ஓடிடியில் UppuKappuRambu பல மொழிகளில் வெளிவர இருக்கிறது. ஜீ5 ஓடிடியில் இந்தி திரைப்படமான Kaalidhar Laapata, சன் நெக்ஸ்ட் ஓடிடியில் Jagamerigina Satyam திரைப்படம் வெளியாக இருக்கிறது. சோனி லைவில் TheHunt இந்தி வெப்சீரிஸ், ஹாட்ஸ்டாரில் Companion ஆங்கில படம் வெளியாக இருக்கிறது.

    பிரைம் ஓடிடியில் ஆங்கில படமான Heads Of State, நெட்பிளிக்ஸில் ஆங்கில படமான The Old Guard2, நெட்பிளிக்ஸில் ஆங்கிலத்தில் All The Sharks வெப்சீரிஸ் ரிலீஸாக இருக்கிறது. ரொம்ப வாரங்கள் கழித்து நிறைய தமிழ் படங்கள் ஓடிடிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Criminal Justice 4: கள்ளக்காதலியை கொன்றது கணவனா? மனைவியா? மிஸ்ராவின் சம்பவம்… பெஸ்டா? வேஸ்டா?

    Criminal Justice 4: பிரபல கிரிமினஸ் ஜஸ்டிஸ் நான்காவது சீசன் இறுதி எபிசோட் ஒரு வழியாக வெளியாகிவிட்ட நிலையில் இந்த சீசன் எப்படி இருக்கு என்ற பாசிட்டிவ், நெகட்டிவ் பேசும் திரைவிமர்சனம் இங்கே.

    பங்கஜ் திரிபாதி நடிப்பில் வெளியான கிரிமினல் ஜஸ்டிஸ் இதுவரை மூன்று சீசன்கள் வெளியாகி இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டு குற்றவாளியாக சித்திரிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீலாக மாதவ் மிஸ்ரா என்ற லாயர் ஆஜராகிறார்.

    அவர் எப்படி குற்றச்சாட்டுக்களை முறியடித்து தன்னுடைய கட்சிக்காரரை காப்பாற்றினார் என்பதே மொத்த சீரிஸின் கதையாக இருக்கும். மூன்று சீசன்களுமே நல்ல வரவேற்பை பெற்றதால் நான்காவது சீசன் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.

    மற்ற மூன்று சீசன்களை போல இல்லாமல் நான்காவது சீசன் முதலி நான்கு எபிசோட்கள் மட்டுமே வெளியிடப்பட்டது. இதனால் இந்த வெப்சீரிஸின் மீது ஆர்வம் குறைந்துவிடுமோ என்ற பேச்சு எழுந்தது. ஆனால் இந்த வாரம் கடைசி எபிசோட் வெளியாகி நான்காவது சீசனும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வந்துள்ளது.

    ராஜ் நாக்பால் என்ற பெரியர் மருத்துவர். அவருக்கும் மனைவி அஜ்சு நாக்பாலுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். அவர்கள் ஒரே மகளின் ஐராவுக்கு நியோரோ சம்மந்தப்பட்ட ஒரு நோய் இருக்க அவரை பார்த்துக்கொள்ள வருகிறார் நர்ஸ் ரோஷினி.

    இதில் ராஜ் நாக்பாலுக்கும், ரோஷினிக்கும் காதல் மலர இவர்கள் திருமணம் செய்துக்கொள்ளும் முடிவில் உள்ளனர். ஆனால் எதிர் அப்பார்ட்மெண்ட்டில் மனைவி அஞ்சு இருக்க இது ரோஷினிக்கும் பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஒரு நாள் ஐராவின் பிறந்தநாளில் சண்டை முற்றுகிறது.

    காலை ரோஷினி இரத்தவெள்ளத்தில் இறந்துக்கிடக்க ராஜ் நாக்பால் கட்டிப்பிடித்து கொண்டு இருக்கிறார். போலீஸ் வந்து ராஜ் நாக்பாலை குற்றவாளி என சிறையில் அடைக்கின்றனர். ஒரு கட்டத்தில் மகள் அஞ்சு நாக்பாலும் சந்தேகப்பட்டவர்கள் லிஸ்ட்டில் சிறையில் அடைக்கப்படுகிறார்.

    ராஜ் நாக்பாலுக்கு ஆதரவாக மாதவ் மிஸ்ராவும், அஞ்சுவிற்கு ஆதரவாக மந்திராவும் கோர்ட்டில் ஆஜராகின்றனர். லேகா அகஸ்தியா அரசு வக்கீலாக ஆஜராக கோர்ட் விசாரணை தொடங்குகிறது. யார் கொலை செய்தார் என்பதை கடைசி வரை தெரியவிடாமல் பரபரப்பாகவே கொண்டு சென்றுள்ளனர்.

    இதில் அஞ்சு வக்கீலுக்கு படித்தவர் என்பதால் அவர் கிளைமேக்ஸில் கொடுத்த ட்விஸ்ட்டை மிஸ் பண்ணவே முடியாது. மூன்று சீசன்களை விட இந்த நான்காவது சீசன் கண்டிப்பாக பரபரப்பாக இருக்கும் என்பது தான் உண்மை. இதை மிஸ் செய்யாமல் ஹாட்ஸ்டாரில் பார்க்க தவறாதீர்கள்.

  • OTT: மார்கன் முதல் படைத்தலைவன் வரை… இந்த வார ஓடிடி லிஸ்ட் செமையா இருக்குதே!

    OTT: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய டைம் பாஸாக அமைந்துள்ளது தற்போதைய ஓடிடி காலம். வாரா வாரம் திரையரங்க ரிலீஸுக்கு காத்திருந்த காலம் மாறி ஓடிடி வெளியீட்டுக்கு வெயிட் செய்யும் நேரம் வந்துவிட்டது.

    அந்த வகையில் இந்த வாரம் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் குறித்த அப்டேட்கள். அமேசான் பிரைம் ஓடிடியில் இந்த வாரம் விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. பல வருடங்கள் கழித்து வித்தியாசமான கதையில் நடித்து வெற்றி கண்டுள்ளார். திரில்லிங்காக இப்படம் பார்ப்பவரை ரசிக்க வைக்கும்.

    மேலும், பிக்பாஸ் சீசன் 3 வின்னர் முகின் ராவ் நடித்த ஜின் தி பெட், ஆங்கிலத்தில் Novacaine, இந்தியில் Hunter S2, Rangeen, கொரியனில் ThePlot, HandsomeGuys உள்ளிட்ட படங்களும் அமேசான் தளத்தில் இந்த வாரம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மலையாளத்தில் சமீபத்திய காலமாக வெளிவரும் படங்கள் பல மொழி ரசிகர்களிடம் வரவேற்பை பெற அந்த வகையில் ரோன்த் இந்த வாரம் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியில் Sarzameen, ஆங்கிலத்தில் WashingtonBlack S1ம் வெளியாகியுள்ளது.

    சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படைத்தலைவன் மற்றும் கலியுகம் திரைப்படம் டெண்ட் கொட்டா ஓடிடியில் வெளியாக இருக்கிறது. சன் நெக்ஸ்ட்டில் ஷோ டைம் மற்றும் கன்னட மொழியில் எக்ஸ் அண்ட் வொய் படமும் வெளியாகி இருக்கிறது.

    ஆஹா ஓடிடியில் ராஜ புத்திரன் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. நெட்பிளிக்ஸில் இந்தி படமான MandalaMurders, ஆங்கில படமான UntilDawn, HappyGilmore2, கொரியன் படமான Trigger ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

  • சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியான சூப்பர் அப்டேட்!..

    நடிகர் சந்தானம் நடிப்பில் சென்ற மே மாதம் 16ம் தேதி வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை, சந்தானம் படத்தை விட சூரியின் மாமன் படம் வசூலை அள்ளியது. இந்iநிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஒடிடி ரிலிஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

    நடிகர் ஆர்யா தயாரிப்பில் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த கோவிந்தா பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியதன் காரணமாக நீக்கப்பட்டது.

    டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானம் ஒரு திரைப்பட விமர்சகராகவும் இப்படத்தில் ஒரு முகம் தெரியாத இயக்குனர் அழைத்ததற்காக மர்மமான திரையரங்கிற்கு செல்கிறார். பின்னர் திரைப்படம் தொடங்கியதும் சந்தானமும் அவர் குடும்பமும் படத்திற்குள் மாட்டிக்கொள்கின்றனர். தனது குடும்பத்தை காப்பாற்ற, மர்மமான புதிர்களை தீர்த்து, ஆவியின் அச்சுறுத்தல்களில் இருந்து எப்படி தப்பிக்க போகிறார் என்று கதை செல்கிறது. இப்படம் நகைச்சுவை, திகில் மற்றும் திரைப்பட விமர்சகர்களை கேலி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்படம் கலவையான விமர்சங்களை பெற்று வெற்றி பெறவில்லை.

    இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வரும் ஜூன் 13ம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் ரசிகர்களுக்கு வொர்க்கவுட் ஆகவில்லை என்றாலும், ஓடிடி ரசிகர்களுக்கு நல்லாவே இந்த படம் வொர்க்கவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளுடன் வீட்டில் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். ஆபாச காட்சிகள் பெரிதாக ஏதுமில்லை.

  • OTT: இந்த வாரம் ஓடிடி ரிலீஸில் வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு!

    OTT: தமிழ் ரசிகர்களுக்கு வாராவாரம் வெளியாகும் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

    பிரபல சன் நெக்ஸ்ட் ஓடிடியில் மலையாள திரைப்படமான Azadi, தமிழில் Verdict, Okapathakamprakaram திரைப்படம் இந்த வார ரிலீஸாக வெளியாக இருக்கிறது.

    இதை தொடர்ந்து பிரைம் ஓடிடியில் மலையாளத்தில் ஹிட்டடித்த Pariwar திரைப்படம் வெளியாக இருக்கிறது. Ghatikachalam திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் கவுண்டவுன் சீசன் 1 வெப்சீரிஸ் வெளியிடப்பட்டுள்ளது.

    ஜியோ ஹாட்ஸ்டாரில் ஆங்கிலத்தின் TheBrutalist வெளியிடப்படுகிறது. இந்தியின் Mistry, ஆங்கிலத்தின் TheGiledAge S3வெளியாகி இருக்கிறது. இதை தொடர்ந்து #IronHeart S 1 ஆங்கில வெப்சீரிஸும் ரிலீஸாகி இருக்கிறது.

    நெட்பிளிக்ஸில் இந்தியின் ரெய்ட் இரண்டாம் பாகமும் வெளியாகி இருக்கிறது. வெறும் கேம்களை வைத்து பரபரப்பை கொடுத்து ஹிட்டடித்தது ஸ்குவிட் கேம் வெப்சீரிஸ். முதல் சீசன் சூப்பர்ஹிட் அடித்த நிலையில் இரண்டாவது சீசனுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

    இதையடுத்து அந்த சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி இருக்கும் நிலையில் இந்த வாரம் மூன்றாவது சீசன் வெளியாகி இருக்கிறது. தமிழில் எவோள் திரைப்படம் டெண்ட் கொட்டா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

    ஜீ5 ஓடிடியில் Viraatapalem ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழில் சூரி, ஸ்வாதிகா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மாமன் திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் லவ்லி மற்றும் தமிழில் அம்பி படங்கள் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் தமிழ் ரசிகர்களுக்கு பெரிய அளவு சூப்பர்ஹிட் படங்கள் லிஸ்ட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • அமேசான் ப்ரைம் அறிவிப்பால் கடுப்பா இருக்கீங்களா?.. இந்த வாரம் வடிவேலு படம் வருதே!..

    இயக்குநர் சுந்தர்.சி தயாரித்து, இயக்கி, நடித்தும் உருவான கேங்கர்ஸ் திரைப்படம் கடந்த மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலைவையான விமர்சனங்களை பெற்று சுமாராக ஓடியது. இந்நிலையில் தற்போது கேங்கர்ஸ் நாளை மே15ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான கேங்கர்ஸ் திரைப்படத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி, ஹரிஷ் பெரடி, அருள்தாஸ், சந்தானபாரதி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

    அரசன் கோட்டை என்ற கிராமத்தில் உள்ள ஒரு பள்ளி மாணவி மர்மமான முறையில் காணாமல் போகிறார். இதை ஆசிரியை சுஜாதா விசாரிக்க, காவல்துறை புறக்கணிக்கிறது. அதைத் தொடர்ந்து, உளவு போலீஸ் அதிகாரியாக சுந்தர். சி நியமிக்கப்படுகிறார். கதை நகைச்சுவை, ஆக்ஷன், மற்றும் சென்டிமென்ட் கலந்து முழு நீள பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.

    பல ஆண்டுகள் கழித்து சுந்தர்.சி மற்றும் வடிவேலுவின் காம்பினேஷன் வொர்க்கவுட் ஆகும் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் சிலர் கதை பழசு, டபுள் மீனிங் அதிகம், லாஜிக் குறைவு, கவர்ச்சி காட்சிகள் நிறைந்துள்ளது என கடுமையாக விமர்சிக்கப்பட்டு மூன்று வாரத்தில் ரூ11 கோடி வரை மட்டுமே வசூலித்தது.

    வடிவேலுவின் கம்பேக்காக இருக்கும் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் இப்படம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மேலும், தற்போது கேங்ஸ்டர் படம் அமேசான் ஒடிடி தளத்தில் நாளை மே 15ம் தேதி வெளியாக உள்ளது. சுந்தர்.சி இதையடுத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் பிஸியாக உள்ளார். தொடர்ந்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சுமாரான படங்களே வெளியாகி வரும் நிலையில், சந்தாவை வேறு இஷ்டத்துக்கு ஏற்றப்போவதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

  • OTT: ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கும் படம் மற்றும் வெப்சீரிஸ் அப்டேட்… மிஸ் பண்ணாதீங்க!…

    OTT: தமிழ் ரசிகர்களுக்கு வாரா வாரம் வெளியாகும் ஓடிடி அப்டேட் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் இந்த வார தொகுப்புகள்.

    கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம்ஜி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வல்லமை. திரைப்படம் திரையரங்குகளில் பெரிய அளவு வரவேற்பை பெறாத நிலையில் தற்போது ஓடிடி பக்கம் தலை காட்டி இருக்கிறது.

    ஹீரோவாக பிரேம்ஜி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் ரிலீஸாகி இருக்கிறது. குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகி இருக்கும் சைக்லாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் யாமறியா பிரம்மை.

    கடந்தாண்டு வெளியான இப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. மருத்துவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு கடந்தாண்டு வெளியான வெப் சீரிஸ் ஹார்ட் பீட். ஒவ்வொரு வாரமும் நான்கு எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தது.

    100 எபிசோடுகளை தாண்டிய இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாவது சீசன் வெளியாகி இருக்கிறது. ஹாட்ஸ்டாரில் வரும் இந்த வெப்சிரீஸ் இனிமேல் வாரா வாரம் நல்ல டைம்பாஸாக இருக்கும் .

    மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் வித்தியாசமான வில்லன் என வெளியான திரைப்படம் சுமோ. படம் திரையரங்கில் பெரிய தோல்வியை தழுவ தற்போது டெண்ட் கொட்டா ஓடிடிக்கு வந்து இருக்கிறது.

    திலீப் போத்தான் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அம் ஆ. இன்வெஸ்டிகேட்டிவ் ஜானரான மலையாள மண்ணின் ஆதிக்கத்தினை இந்த படம் மீண்டும் நிரூபித்து விட்டது. இப்படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

    ஓய்வு பெற்ற ஐபிஎஸ் விஜயசாந்தியின் மகன் கேங்ஸ்டாராக இருக்கும் திரைப்படம் தான் அர்ஜூன் சன் ஆஃப் வைஜெயந்தி. லாஜிக் இல்லாமல் ஒரு அதிரடி ஆக்‌ஷன் படம் பார்க்கணும் என்றால் ஆஹா ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

    நடுக்கமும், மிரட்டலுமான ஒரு பேய் படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடிக்கு வந்து இருக்கும் பவானி வார்ட் 1997 படத்தினை பார்க்கலாம். இன்னும் சில ஆங்கில வெப் சீரிஸ்களும் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்த வார ஓடிடி ரிலீஸ்… ஒருவழியா போராடி வரும் தங்கலான்… என்னைக்கு தெரியுமா?

    OTT Release: பிரபல ஓடிடி நிறுவனங்களில் இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த அப்டேட்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

    டிசம்பர் எட்டாம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட கங்குவா திரைப்படம் மோசமான விமர்சனங்களால் 24 நாட்களில் டிசம்பர் 8ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து பலமுறை தங்கலான் திரைப்படம் டிசம்பர் 10ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மேகனன் நடிப்பில் ரிலீஸான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    குஞ்சக்க போபன் மற்றும் ஜோதிர்மயி நடிப்பில் பூகேன்வில்லா கிரைம் திரில்லர் சோனி லைவ்வில் டிசம்பர் 13ந் தேதி வெளியாக இருக்கிறது. அமல் நீரத் இயக்கத்தில் இப்படத்தில் ஃபகத் பாசில் நடித்திருக்கிறார். மிகப்பெரிய வரவேற்பை இப்படம் பெற்றது.

    மலையாளத்தில் வெளியான கனகராஜ்யம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது. முரளி கோபி, லியோனா லிஷோய், தினேஷ் பிரபாகர், உன்னி ராஜ், ஸ்ரீஜித் ரவி, ஜாலி சிராயத் மற்றும் ரமேஷ் கோட்டயம் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை சாகர் இயக்கி இருக்கிறார்.

    டிஜே விஸ்வ பிரசாத் தயாரிப்பில் ஹரிகதா தெலுங்கு வெப் சீரிஸ் டிசம்பர் 12ந் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் சீரிஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கி இருக்கிறது.

  • ஒன்னு மட்டும் நமக்கு… ஓடிடியில் ரிலீஸாகும் திரைப்படங்கள் டூ வெப்சீரிஸ்… சுவாரஸ்ய அப்டேட்ஸ்…

    Ott Release: தமிழ் சினிமா ரசிகர்கள் தியேட்டர் ரிலீஸ் இருக்கு காத்திருப்பது போல வாராவாரம் ஓடிடி ரிலீஸ் இருக்கும் தற்போது காத்திருக்க தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

    நெட்பிளிக்ஸ்

    நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த வாரம் பெரிய அளவிலான தென்னிந்திய திரைப்படங்கள் வெளியாகவில்லை. ஆனால் சில பிரபல திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாக இருக்கிறது. பிரபல இந்தி டாக்குமெண்ட்ரி யோயோ ஹனி சிங் டிசம்பர் 21ல் வெளியாக இருக்கிறது.

    இதையும் படிங்க: முத்து செய்த சேட்டை… இனியா குழந்தையா குட்டி சாத்தான்… ஓவரா பேசாதீங்க கோமதி!…

    டிசம்பர் 18ல் தி டிராகன் பிரின்ஸ், ஆங்கிலத்தில் இனிக்மா, லவ் டூ ஹேட் இட் ஜூலியஸ் படங்கள் டிசம்பர் 17ல் வெளியாக இருக்கிறது.

    அமேசான் பிரைம்

    பிரபல அமேசான் பிரைம் ஓடிடியில் இந்தியில் கேர்ள் வில் பி கேர்ள்ஸ் டிசம்பர் 18ல், ஆங்கிலத்தில் பீஸ்ட் கேம்ஸ் வெளியாக இருக்கிறது.

    ஆஹா

    பிரபல கிரைம் திரில்லர் திரைப்படமான ஜீப்ரா டிசம்பர் 20ந் தேதி வெளியாக இருக்கிறது.

    டிஸ்னி ஹாட்ஸ்டார்

    ஓ கமான் ஆல் யே ஃபேயித்புல் ஆங்கில திரைப்படம் டிசம்பர் 17ல் வெளியாக இருக்கிறது. மார்வல் வெப் சீரிஸான வாட் இஃப் சீசன் 3 டிசம்பர் 22ல் வெளியாக இருக்கிறது.