Tag: padai thalaivan

  • பிரபு மகன் போல வெற்றி ஓபனிங் இருக்குமா?.. கேப்டன் மகனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி இதுதானாம்!..

    கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கடந்த 2015ம் ஆண்டே சகாப்தம் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. அடுத்ததாக 2018ல் அவர் நடித்த மதுர வீரன் படம் வெளியானது. அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

    சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமான போது கும்கி யானைகளை வைத்து கும்கி எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். அவருக்கு அந்த படம் பெரிய வெற்றிப் படமாகவே அமைந்தது. ஆனால், தாத்தா, அப்பாவை போல தொடர்ந்து அவரா வெற்றிப் படங்களை கொடுக்க முடியவில்லை.

    இந்நிலையில், யானைகளுடன் ரொம்பவே கஷ்டப்பட்டு உடல் உழைப்பை போட்டு ஆளே மாறி சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன் படம் ஒரு வழியாக வரும் ஜூன் 13ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    கடந்த மாதம் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் வெளியாகும் போதே படை தலைவன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ் நாட்டில் கேப்டன் சினி கிரியேஷனே சண்முக பாண்டியன் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.

    மற்றவர்கள் யாரும் வாங்கி வெளியிட மறுத்துவிட்ட நிலையில் தான் படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகிவிட்டதா அல்லது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமே மகனின் கம்பேக் படத்தை வெளியிடும் முடிவுக்காக காத்திருந்து ஜூன் 13ம் தேதி வெளியிடுகின்றனரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

    கேப்டன் விஜயகாந்த் போலவே அவரது மகனும் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என திரை பிரபலஙக்ளும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த படம் ஹிட் ஆனால், ரமணா 2 படத்தையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவேன் என உறுதியளித்துள்ளார்.

  • என்னை நடிகராக ஏற்றுக்கொண்டால் போதும்!.. கண் கலங்கிய சண்முக பாண்டியன்!…

    Padai thalaivan: நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். அப்பாவை போலவே நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டவர். 2015ம் வருடம் சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. அதன்பின் 3 வருடங்கள் கழித்து மதுர வீரன் என்கிற படத்தில் நடித்தார். இந்த படமும் பெரிய அளவில் ஓடவில்லை.

    அதன்பின் தமிழனென்று சொல் என்கிற படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சண்முக பாண்டியனின் அப்பா விஜயகாந்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரெல்லாம் வெளியானது. அதன்பின் படப்பிடிப்பு துவங்கி சில நாட்கள் நடந்தது. விஜயகாந்த் கடைசியாக கலந்துகொண்ட படப்பிடிப்பு இதுதான்.

    ஆனால், விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. அதோடு, சண்முக பாண்டியன் அப்பாவை கவனித்துக்கொண்டார். எனவே, மதுர வீரன் படத்திற்கு பின் கடந்த 7 வருடங்களாக சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்கவில்லை. தற்போது படை தலைவன் படம் மூலம் மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறார்.

    இந்த படம் நேற்று காலை தமிழகத்தில் வெளியானது. விஜயகாந்தின் ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பார்த்து வருகிறார்கள். தான் ஆசையாக வளர்க்கும் யானையை சிலர் கடத்தி சென்றுவிட சண்முக பாண்டியன் எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பையே சண்முக பாண்டியன் கொடுத்திருக்கிறார்

    பல காட்சிகளில் அப்பாவை நினைவு படுத்துகிறார். அப்பாவை போலவே சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்புகிறார். படத்தின் திரைக்கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருந்தால் படம் சிறப்பான வெற்றியை பெற்றிருக்கும் என பலரும் சொல்லி வருகிறார். இந்நிலையில், சண்முக பாண்டியனும், அவரின் சகோதரர் விஜய பிரபாகரனும் சென்னையில் ரசிகர்களுடன் படம் பார்த்தார்கள். ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள்.

    படம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது சண்முக பாண்டியன் அழுதபடி வந்தார். செய்தியாளர்களிடம் அவரால் பேசவே முடியவில்லை. அதன்பின் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசிய அவர் ‘என்னை நடிகராக மக்கள் ஏற்றுக்கொண்டால் போதும்’ என பேசி கண் கலங்கினார். அவருக்கு பின் பேசிய விஜய பிரபாகரன் ‘சண்முக பாண்டியனின் கடைசிப்படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிவிட்டது. அப்பாவை கவனித்துகொண்டதால் அவரால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை’ என சொல்லிவிட்டு அதற்கு மேல் பேசமுடியாமல் அழுதார்.

    அதன்பின் பேசிய அவர் ‘சண்முக பாண்டியனுக்கு ஆதரவு கொடுங்கள். இதை கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது. அதை செய்யும் கடமை உங்களுக்கு இருக்கிறது. நாங்கள் இருவரும் மக்களுக்காக வந்திருக்கிறோம். உங்கள் ஆதரவு தேவை’ என கோரிக்கை வைத்தார்.

  • லாரன்ஸ் நடிக்குறதா சொன்னாரே! ஏன் நடிக்கல? படைத்தலைவன் குறித்து இயக்குனர் சொன்ன தகவல்

    விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் படைத்தலைவன். விஜயகாந்த் இருக்கும் பொழுதே இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இடையில் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் சண்முக பாண்டியன் தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க முடியாமல் அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

    இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் நேற்று இந்த படம் வெளியானது. படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலமாக கொண்டு வந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல பொட்டு வச்ச தங்க குடம் பாடலையும் இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் .இதுவே விஜயகாந்த் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து வைத்த மாதிரி இருந்தது.

    படத்தை விஜயகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் இறப்புக்கு பிறகு லாரன்ஸ் ஒரு வாக்குறுதி அளித்திருந்தார். சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் நான் ஒரு கேமியோ ரோலில் நடிக்க தயார் எனக் கூறியிருந்தார். அது இந்த படத்தில் தான் என செய்தி வெளியானது. ஆனால் ஏன் படைத்தலைவன் படத்தில் லாரன்ஸ் நடிக்கவில்லை என இந்த படத்தின் இயக்குனரிடம் கேட்டபோது படத்தின் இறுதியில் தான் லாரன்ஸ் வந்தார்.

    அவரை வைத்து எடுக்கலாம் என்று தான் நினைத்தோம் .ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் வேறொரு படத்தில் லாரன்ஸ் கண்டிப்பாக நடிக்கிறேன் என கூறி இருப்பதாக இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்திருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக சண்முக பாண்டியன் கொம்பு சீவி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸும் சண்முக பாண்டியன் வைத்து ரமணா 2 திரைப்படத்தை பண்ண தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார் .அதனால் அடுத்தடுத்து சண்முக பாண்டியன் நடிப்பில் தொடர்ந்து படங்களை பார்க்கலாம்.

  • பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் குட்டி கேப்டன்!.. படைத்தலைவன் 4 நாள் வசூல் விவரம்!..

    Padai thalaivan: விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் நடிப்பில் கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம்தான் படை தலைவன். இந்த படத்தை அன்பு என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக யாமினி சந்தர் நடித்திருக்கிறார். மேலும் தனுஷின் அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

    இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். அதோடு, இந்த படத்தில் சண்முக பாண்டியனின் அப்பா விஜயகாந்தை ஏஐ மூலம் சில காட்சிகளில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இது விஜயகாந்த் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸை கொடுத்திருக்கிறது. தான் ஆசையாக வளர்க்கும் யானையை சிலர் கடத்தி சென்றுவிட சண்முக பாண்டியன் எப்படி போராடி மீட்டார் என்பதுதான் படத்தின் கதை.

    விஜயகாந்த் மகன் என்பதால் படம் முழுக்க ஆக்சன் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். எனவே, விஜயகாந்த் ரசிகர்கள் இவரை குட்டி கேப்டனாகவே பார்த்து ரசிக்கிறார்கள். நாளுக்கு நாள் விஜயகாந்தின் ரசிகர்கள் இப்படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசிப்பது அதிகரித்துக்கொண்டே போகிறது.

    படம் வெளியான 13ம் தேதி இப்படம் 1.29 கோடியும், 14ம் தேதி 1.22 கோடியையும், 15ம் தேதி 1.75 கோடியையும் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், 4வது நாளான நேற்று இப்படம் 0.67 கோடி (67 லட்சம்) வசூல் செய்திருக்கிறது. பொதுவாக சின்ன பட்ஜெட்டில் வரும் படங்களுக்கு வசூல் இருக்காது. அதுவும் ஞாயிறு முடிந்துவிட்டால் தியேட்டர்களில் காத்து வாங்கும்.

    ஆனால், 4வது நாளான நேற்றும் இப்படம் 67 லட்சம் வசூல் செய்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை இப்படம் தமிழகத்தில் 5 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை குபேரா உள்ளிட்ட புதிய படங்கள் வெளியாகவுள்ளதால் வியாழக்கிழமை வரை படை தலைவனுக்கு வசூல் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

  • சொன்ன வார்த்தையை காப்பாத்திட்டாரே… கேப்டன் மகன் படத்துக்கு கால்ஷூட் கொடுத்த முக்கிய நடிகர்

    Shanmuga pandian: நடிகர் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சில வருடங்களாக நடிகராக இருக்கிறார். இருந்தும் அவரால் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. இந்நிலையில் அவரின் படைத்தலைவன் படம் குறித்த முக்கிய அப்டேட் ரிலீஸாகி இருக்கிறது.

    2015ம் ஆண்டு சகாப்தம் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். விஜயகாந்தின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும் படம் பெரிய ரீச்சை கொடுக்கவே இல்லை. அதை தொடர்ந்து 2018ம் ஆண்டு பி.ஜி.முத்தையா இயக்கத்தில் மதுர வீரன் படத்தில் நடித்தார்.

    இதையும் படிங்க: லோகேஷ் பற்றி எஸ்.ஏ.சி சொன்னது உண்மையா?!.. இதுதான் நடந்திருக்கும்!.. பிரபலம் பேட்டி!…

    அப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இருந்தும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவரின் அடுத்த படமான படைத்தலைவன் அறிவிப்பு வெளியானது. பெரிய அளவில் எதிர்பார்ப்பையும் உருவாக்கியது. படத்தினை அன்பு என்பவர் இயக்க இருக்கிறார்.

    இந்நிலையில் இப்படத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கேப்டன் விஜயகாந்த் இறந்தவுடன் பல நடிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி இருந்தனர். ஆனால் நடிகர் ராகவா லாரன்ஸ் தான் முதல் ஆளாக அவர் மகன் சண்முக பாண்டியன் படத்தில் நடித்து தருகிறேன் என அறிவித்தார்.

    இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டாருனா சும்மாவா? இயக்குனரை கடுப்பாக்கிய நயன்தாராவின் காஸ்டியூம். என்ன நடந்துச்சு தெரியுமா

    தற்போது அந்த அறிவிப்பை பூரித்து செய்யும் விதமாக படைத்தலைவன் படத்தில் ஒரு சின்ன வேடம் ஏற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ராகவா லாரன்ஸுக்கு ரசிகர்கள் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதே போல அறிவிப்பை பொதுவெளியில் வெளியிட்ட விஷால் இன்னமும் எதுவும் சொல்லாமல் தான் இருக்கிறார். அவர் நடிக்கவில்லையா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.