Tag: pandian stores2

  • ஆண்டி ஹீரோ ஸ்டைல சம்பவம் செய்யும் கதிர்… பாண்டியன் ஸ்டோர்ஸ்ல மூணாவது வில்லனா?

    ஆண்டி ஹீரோ ஸ்டைல சம்பவம் செய்யும் கதிர்… பாண்டியன் ஸ்டோர்ஸ்ல மூணாவது வில்லனா?

    Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் பெரிய அளவில் வில்லத்தனம் இல்லாத சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் ஹீரோவாக பார்க்கப்பட்ட கதிர் செய்திருக்கும் வில்லத்தனம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    முதல் சீசன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசனில் அப்பா, மகன் பாசத்தை மையமாக வைத்து கதை நகர்ந்து வருகிறது. அந்த வகையில் இரண்டாவது சீசன் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    கடந்த சில வாரங்களாகவே கதை இல்லாமல் காமெடி செய்து வந்த தயாரிப்பு குழு ஒரு வழியாக தேறும் கதைக்களத்தினை உருவாக்கி வைத்துள்ளனர். ஒரு பக்கம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் வீட்டுக்கு தெரிந்து விட்டது. 

    ஆனால் சரவணன் தன்னுடைய முதல் காதலியை சந்தித்து அவரை கட்டிக்கொள்வதாக சத்தியம் செய்து விட்டார். வீட்டினர் மயிலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, ராஜீயின் அப்பா வெற்றிவேலுக்கு கேன்சர் இருப்பதாக கதை கொண்டு செல்லப்படுகிறது. 

    அவருடைய சிகிச்சை நடந்து கொண்டு இருக்கும் நிலையில் அம்மாவுடன் இருக்க வேண்டும் என வெற்றிவேல் விரும்புகிறார். இதனால் உண்மையை சொல்லாமல் அப்பத்தாவை வெளியேத்த ஏசி இருக்க வீட்டுக்கு போங்க இங்க ஏன் இருக்கீங்க எனத் திட்டி வீட்டை விட்டு அனுப்புகிறார். 

    இதனால் சரவணன், செந்திலை தொடர்ந்து கதிருக்கும் ரசிகர்களிடம் கெட்ட பெயர் உருவாக போகும் வாய்ப்பே அதிகம் இருப்பதாக ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். ஹீரோயினுக்காக ஹீரோவை எல்லாம் காலி செய்ய பாக்குறாங்களே என பலரும் கலாய்த்து வருகின்றனர். 

  • பரபரக்கும் விஜய் டிவி சீரியல்கள்…. டாப் சீரியல்களில் நடக்க இருக்கும் மாஸ் அப்டேட்!!

    பரபரக்கும் விஜய் டிவி சீரியல்கள்…. டாப் சீரியல்களில் நடக்க இருக்கும் மாஸ் அப்டேட்!!

    Vijay TV: விஜய் தொலைக்காட்சி கடந்த சில மாதங்களாகவே டிஆர்பியில் சிக்கி கொண்டு இருக்கும் நிலையில் அதை சரி செய்யும் விதமாக டாப் சீரியலின் கதைக்களமே மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

    சிறகடிக்க ஆசை எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இந்த சீரியல் கடந்த சில மாதங்களாகவே டல்லடித்து வந்தது. ரோகிணி மீண்டும் வீட்டுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. மனோஜ் திருமணம் செய்ய ப்ளான் போடுகிறார் என நீதிமன்ற படியேறி ரோகிணி இதை சாதிக்கலாம்.

    தொடர்ந்து சிந்தாமணிக்கும் மீனாக்கும் இருக்கும் பிரச்சனையை தாண்டி ரேகா சத்யா கல்யாணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் சிறகடிக்க ஆசை பரபரப்பாகலாம். 

    மகாநதி சீரியலில் காவேரிக்கு எல்லாம் மறந்து விட்ட நிலையில் விஜய் அவருக்கு மீண்டும் நியாபகத்தை கொண்டு வர போராடுகிறார். ஆனால் காவேரி அவருக்கு பெண் பார்த்து கடுப்பேத்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சின்ன காவேரி படிக்கும் பள்ளியில் அன்னையர் தினம் நடக்க இருக்கிறது. 

    இதனால் அம்மா பிரச்சனையை பெரிதாக்கி அப்போது உண்மையை விஜய் உடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அய்யனார் துணை சீரியலில் சோழன் நிலாவுக்கு காதல் இன்னும் சில எபிசோட்களில் தொடங்கி விடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. 

    பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் மயிலை துரத்தி விட்ட நிலையில் தற்போது அவர் கர்ப்பம் வீட்டினருக்கு தெரிந்துவிட்டது. சரவணனுக்கு இன்னொரு ஜோடியும் அறிமுகமாகி விட்ட நிலையில் இந்த பிரச்சனை பெரிதாக என்ன நடக்கும் என்பதே பரபரப்பாக மாறி இருக்கிறது. 

  • கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

    கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

    Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

    பல மொழிகளில் டப் செய்த சீரியலை ஒளிபரப்பி வந்த விஜய் டிவி முதல்முறையாக ஒரிஜினல் எடுத்து ஹிட் அடித்த சீரியல் லிஸ்ட்டில் முக்கிய இடம் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு உண்டு. அண்ணன் தம்பிகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. 

    எந்தவித வில்லத்தனமும் இல்லாமல் சாதாரண மக்களின் கதையாக அமைக்கப்பட்டது. அந்த வகையில் சூப்பர்ஹிட்டான இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. தொடர்ந்து தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் நடந்து வருகிறது. 

    இந்த முறை அப்பா மகனுக்கு இடையேயான கதையை வைத்து உருவாக்கி இருக்கின்றனர். பாண்டியன் மற்றும் அவர் மூன்று மகன்களின் கதையை பேசி வருகிறது. இதில் முதல் மகன் சரவணனுக்கு தங்கமயிலை அப்பா பாண்டியன் பாத்து கட்டி வைத்து இருப்பார். 

    ஆனால் மயில் குடும்பம் வயதில் இருந்து நகை வரை எல்லாத்தையும் பொய் சொல்லி கட்டி வைத்து இருக்க அந்த உண்மை உடைந்து விட்டது. இந்நிலையில் சரவணன் தற்போது தன்னுடைய முன்னாள் காதலியுடன் பழகி வருகிறார். இதனை கேட்ட பாண்டியனும் விவகாரத்து வரை அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறார். 

    இந்நிலையில் மயிலின் அம்மாவாக நடிக்கும் பாக்கியம் மற்றும் சைவம் ரவி ஒரு இண்டர்வியூவில் கலந்துக்கொண்ட நிலையில் அவர்களிடம் மயில் உங்களால் தான் கஷ்டபடுறாங்க. உங்க ரெண்டாவது பொண்ணு சுடர் அவங்க இஷ்டப்படி திருமணம் செய்து கொண்டதாக ஒரு போட்டோவை காட்ட அதில் மாப்பிள்ளை கோலத்தில் சிம்பு இருக்கிறார். 

    ஒருவேளை கதை இல்லாமல் இப்படியும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 கதை திரும்புமா என கிசுகிசு கிளம்பிய நிலையில் இல்லை இது வெறும் ஏஐ போட்டோ தான் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

  • Pandian stores2: ஆம்பளைங்கனாவே அப்பாவி தான் போல! தியாகியாக்கப்படும் தங்கமயில்! அடி வாங்க போகும் சரவணன்!

    Pandian stores2: ஆம்பளைங்கனாவே அப்பாவி தான் போல! தியாகியாக்கப்படும் தங்கமயில்! அடி வாங்க போகும் சரவணன்!

    Pandian stores2: விஜய் தொலைக்காட்சியின் ஒரு தொடரில் எந்த வில்லத்தனமும் இல்லாமல் எதார்த்தமான காட்சிகளால் ஹிட் அடித்த சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். அதன் இரண்டாம் பாகம் தற்போது தொடர் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

    முதல் சீசனில் அண்ணன் தம்பி பாச போராட்டத்தை சொல்லிய இந்த தொடரில் இந்த முறை அப்பா, மகன் பாசம் காட்டப்பட்டது. பாண்டியனாக ஸ்டாலினும், கோமதி என்ற கேரக்டரில் அவர் மனைவியாக நிரோஷாவும் களமிறங்கினார். இருவரின் நடிப்பும் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது. 

    அந்த வகையில் மருமகள்களாக முதல் சீசன் ஹேமா, கதாநாயகி ஷோவில் வென்ற ஷாலினி, பிரபல நடிகை சரண்யா உள்ளே வந்தனர். இதில் எப்போதும் போல நல்ல மருமகள் கேரக்டரில் முதல் இருவரும் செட்டாகி விட சரண்யாவுக்கு கிட்டத்தட்ட முதலில் நெகட்டிவ் ரோலாக தான் இருந்தது. 

    திருமணத்தில் படிப்பிலிருந்து நகை வரை எல்லாமே பொய் சொல்லி ஒரு கட்டத்தில் கணவரிடமே மாட்டிக்கொள்கிறார். ஆனாலும் தன் குட்டு உடைய கூடாது என தன்னை நல்லவளாக காட்டிக்கொள்ள கணவரை மாட்டிவிட தயங்காமல் இருக்கிறார். 

    இதில் சரவணன் பொறுக்க முடியாமல் உண்மையை போட்டு உடைக்க அம்மா பேச்சை கேட்டு புகுந்த குடும்பத்தையே ஜெயிலில் வைக்கிறார். இப்படி பல சேட்டைகள் செய்தாலும் தற்போது அம்மணி கர்ப்பமாக அவரை தியாகி போல உருவகப்படுத்தி பிரச்சனையில் சிக்கிய சரவணனை ஆணாதிக்கவாதியாக காட்ட துவங்கிவிட்டனர்.

    இப்பொழுது அப்பாவி போல பேசும் மயில் இதை முதலில் செய்து இருந்தால் கூட அவர் மீது ரசிகர்களுக்கு இரக்கம் வந்து இருக்கும். தற்போது சிந்து பைரவி சீரியல் போல இதிலும் ஹீரோயின் அடி வாங்கினால் கூட சந்தோஷம் அடையும் நிலையில் உள்ளனர் ரசிகர்கள். அப்பப்பா!

  • பழைய மாவை அரைக்கும் விஜய் டிவி… என்னங்க எல்லா சீரியலும் இப்டி மொக்கை போடுறீங்களே!

    பழைய மாவை அரைக்கும் விஜய் டிவி… என்னங்க எல்லா சீரியலும் இப்டி மொக்கை போடுறீங்களே!

    விஜய் டிவியின் தற்போதைய பிரபல சீரியல்கள் என அனைத்துமே தற்போது ரூட்டை மாற்றி பூமர் லெவல் காட்சிகளுடன் ரசிகர்களை கடுப்பேற்றி கொண்டு இருக்கிறது. 

    தமிழ் சின்னத்திரையில் ஓஜி எனக் கூறப்படுவது சன் டிவியை தான். இவர்கள் சீரியல் பொதுவாக மெகா தொடர் என சொல்வதற்கு ஏற்ப பல ஆண்டுகள் ஓடும். குறைந்தது ஒரு காட்சி 1 மாசம் வரை எடுத்த கதையெல்லாம் அனைவரும் அறிந்ததே.

    இருந்தும் பொழுது போகாமல் இன்னும் அதை பார்க்கும் கூட்டம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். இதற்கு மாறாக பரபரப்பாக காட்சிகள் எடுத்து சீரியலை அறிமுகம் செய்தது விஜய் டிவி. இதனால் பல இளசுகள் விஜய் டிவி பக்கம் தாவினர். 

    அந்த வகையில் விஜய் டிவியின் ஒரிஜினல் சீரியல் தயாரிப்பு அதிகரித்தது. ஆனால் என்ன புயல் அடித்ததோ அவர்கள் மீண்டும் சன் டிவி லாஜிக்கையே கையில் எடுத்து இருக்கின்றனர். தற்போது டாப்பில் இருக்கும் சிறகடிக்க ஆசையில் ரோகிணி ஒருவழியாக மாட்டிக்கொண்டார்.

    ஆனால், அவர் கதை இன்னும் முடியவில்லை. விவாகரத்துக்கு அவர் செய்யும் கூத்து காமெடியாக இருக்கிறது. வில்லியை காப்பாற்ற லாஜிக்கே இல்லாமல் சில கதைகள் நடக்கிறது. டிஆர்பிக்கு ஆசைலாம் படாதீங்க என்ற ரீதியில் கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள். 

    பாண்டியன் ஸ்டோர்ஸிலும் போர் அடிக்கும் கதை களமே சென்று கொண்டு இருக்கிறது. எதோ கடைக்கு போறேன் என்ற ரீதியில் டைரக்ட் செய்து வருகின்றனர் போல. இதில் ட்விஸ்ட்டே மகாநதி தான்! பெரும்பாலும் ப்ரவீன் பென்னட் இயக்கத்தில் வரும் கதையில் ஜோடிகளுக்கு நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும்.

    ஆனால் அதை சேரவே விடாமல் கொடுமை பண்ணி வைப்பார். அந்த ஒரே கதைகளத்தை கொண்டே மொத்த சீரியலும் நகரும். அந்த வகையில் தற்போது விஜயிற்கு காவேரி இருப்பது தெரிந்து வந்துவிட்டார். காவேரிக்கு இன்னும் நியாபகம் வரவில்லை. 

    இன்னும் கொஞ்ச காலம் இவர்கள் மீண்டும் சேர கதை போகும். சேர்ந்தால் பிரிக்க ஆயத்தம் ஆவார். வேற கதையே இல்லையா பாஸ் எனக் கடுப்பாகலாம். மற்ற சீரியல்கள் சொல்லிக்கொள்ளும் நிலை கூட இல்லை. டிஜிட்டல் எராவில் அப்டேட் ஆகுங்க பாஸ்!

  • Pandian Stores2: ராஜியை வீட்டுக்கு அழைத்து செல்ல முடிவெடுக்கும் வடிவு…

    Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள். 

    வடிவு முத்துவேலுவிற்காக காத்திருக்க அவர் வந்ததும் குமார் குறித்து கேட்கிறார். உன்கிட்ட சக்திவேல் சொல்லலையா. நாளைக்கு குமார் வந்துவிடுவான் என்கிறார். வடிவு ரொம்ப சந்தோஷப்படுகிறார். 

    முத்துவேல் ரூமில் இருக்க அவர் வந்து ராஜியை வீட்டுக்கு அழைச்சிட்டு வரணும். அரசி வந்து இருந்த போது விஷயம் தெரிந்தவுடன் அவங்க அப்பா உடனே கூப்பிடதும் அவ கிளம்பிட்டா? அதுபோல நானும் அரசி இடத்தில் இருந்ததா ராஜி சொன்னாளே. 

    அப்போ அவளும் எப்போ என்னை வந்து அழைச்சிட்டு போனீங்கனு கேட்கிற மாதிரி தானே என்கிறார். பிரச்னையால் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. என்னைக்குமே கதிரை பிடிச்ச மாதிரி அவங்க காட்டிக்கலையே என்கிறார். வடிவு நம்ம பெண்ணை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரணும் என்கிறார். 

    காலையில் கோமதி மருமகள்கள் வாசலில் கோலம் போட்டு கொண்டு இருக்க ராஜி நான் தூங்கவே இல்லை என்கிறார். மீனா ஏன் எனக் கேட்க மயில் தனக்கு தெரியும் என்கிறார். மீனா, ராஜி அவரை கேள்வியாக பார்க்க அரசி விஷயம் தெரிந்தவுடன் எப்படி அழைச்சிட்டு வந்தாங்களோ. அது போல ராஜியும் அவங்க வீட்டுக்கு போக ஆசைப்படுறா என்கிறார். 

    இதை கேட்டு ராஜி கடுப்பில் எழுந்து நிற்க அப்போ வரும் கோமதி யார் யாரு வீட்டுக்கு போக போறா எனக் கேட்க தங்கமயில் அவரிடமும் சொல்கிறார். இதில் கடுப்பான கோமதி அந்த குமாரு அரசியை மிரட்டிக்கட்டிக்கிட்டான். என் பையன் அப்படியா செஞ்சான். 

    #image_title

    நீ வேற மாசமா இருக்க. அதான் சும்மா இருக்கேன். ஒழுங்கா உள்ள போ என அவரை திட்டி அனுப்புகிறார். ராஜி கடுப்பில் ரூமுக்கு வந்து அமர கதிர் என்ன கோபமா இருக்கீயா எனக் கேட்கிறார். ஆமா என் மேலயா எனக் கேட்க கொஞ்ச நேரம் வரை உன் மேல உப்போ எல்லார் மேலையும் என்கிறார். 

    என்ன ஆச்சு எனக் கேட்க மயில் சொன்ன விஷயத்தை சொல்ல கதிரும் அவங்க சொல்றது சரிதானே என்கிறார். இதில் கடுப்பான ராஜி அவரை திட்டிவிட்டு செல்கிறார். அடுத்தநாள் காலை குமார் விடுதலையாகி வீட்டிற்கு வருகிறார். முத்துவேல் குடும்பம் அவரை சந்தோஷமாக அழைத்து கொண்டு வீட்டிற்குள் வருகின்றனர். 

    இதை பார்க்கும் சரவணன் பாண்டியனிடம் சென்று குமார் வந்ததை சொல்கிறார். கோமதி உனக்கு யார் சொன்னா எனக் கேட்க இப்போ தான் பார்த்துவிட்டு வந்தேன் என்கிறார். குமார் வீட்டில் முத்துவேல் அவரை வீட்டிலேயே இரு. கேஸை நான் பார்த்துக்கிறேன் என்கிறார். 

    பின்னர் வடிவு ராஜியை வீட்டிற்கு அழைத்து வர இருப்பதாக சொல்கிறார். எல்லாரும் அதிர்ச்சியுடன் அவரை பார்க்கிறார். 

  • Pandian Stores2: செந்திலை மட்டம் தட்டும் பாண்டியன்… மாமனார் செய்த திடீர் சம்பவம்… செமையா இருக்கே!

    Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

    சக்திவேல் வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். அப்போது குமார் சாப்பிட உட்கார அரசியை பரிமாற சொல்கிறார். அவர் சாப்பாட்டை வைக்கும் போது குமார் தட்டை தள்ள சாப்பாடு டேபிளில் விழுந்து விடுகிறது.

    இதை பார்த்த குமரவேல் கடுப்பாகி உன்னை எல்லாம் என்ன வளர்த்தாங்க. உனக்கு இது எதுவும் சொல்லி கொடுக்கலையா எனத் திட்டுகிறார். அப்போ குமார் அம்மா வந்து நீ சாப்பிட உட்காரு நான் பாத்துக்கிறேன் என்கிறார். ஆனால் குமரவேல் அப்போ இதை யார் சுத்தம் பண்ணுவா எனக் கேட்க அரசி தானே சுத்தம் செய்து விட்டு செல்கிறார். இதில் கடுப்பாகி அப்பத்தா குமரவேலை திட்டுகிறார். ரூமில் குமரவேல் இருக்க அரசியை பார்த்து உன்னை அசிங்கப்படுத்த சந்தோஷமா இருக்கு என்கிறார்.

    அப்போ அரசி குமாரை அடித்து தாலி கயிறை வைத்து குமார் கழுத்தை நெறிக்கிறார். குமார் அலற அரசி அழுத்தி பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் நீ புலி வாலை பிடிச்சி இருக்கணு உனக்கு தோணலையா. ரூமை விட்டு வெளியில் போய் படு என்கிறார்.

    குமார் என்ன திமிரா வீட்டில் கேட்டா என்ன சொல்லுறது எனக் கேட்க என் பொண்டாட்டி என்னை துரத்தி விட்டானு போய் சொல்லு என்கிறார். குமாரை வெளியில் தள்ளி கதவை சாத்தி விடுகிறார். சக்திவேல் வர அங்கு அவ கூட படுக்க பிடிக்கலை என்கிறார்.

    உடனே சக்திவேல் நான் கூட அந்த பாண்டியன் பொண்ணு சாம்பாரை கொட்டியே உன்னை கொன்னுடுவானு நினைச்சேன். ஆனா நீ திமிரா இருந்து என் பையனு நிரூபிச்சிட்ட என்கிறார். வீட்டில் செந்திலுக்கு கால் செய்து உடனே வர சொல்கிறார் மீனாவின் அப்பா.

    என்ன விஷயம் எனச் சொல்லாத காரணத்தால் மீனா மற்றும் செந்தில் பதற்றமாக கிளம்பி செல்கின்றனர். வீட்டில் சொல்லிவிட்டு செல்லாமல் என செந்தில் வர ஆனால் அவருக்கு பாண்டியன் ஒரு வேலை சொல்கிறார். செந்தில் மீனா வீட்டுக்கு போய்ட்டு வரவா எனக் கேட்க இப்போ எதுக்கு போற.

    நைட் போகலாமே. இல்ல சாப்பாடு டைமில் போகலாமே என்கிறார். மீனா வந்து அப்பா அவசரமா வரச்சொன்னாரு. அவருக்கு உடம்புக்கு எதுவும் செய்யுதோனு பயமா இருக்கு என்கிறார். உடனே கோமதி நீங்க இரண்டு பேரும் உடனே போய் அப்பாவை பாருங்க. என்ன ஆச்சுனு எனக்கு கால் பண்ணி சொல்லுங்க என்கிறார்.

    இரண்டு பேரும் கிளம்பி மீனா வீட்டிற்கு வர மீனா அப்பாவிடம் உங்க உடம்புக்கு எதுவும் இல்லையே அப்பா எனக் கேட்க அவர் அதெல்லாம் இல்ல என்கிறார். வேலை விஷயம் என்ன ஆச்சு எனக் கேட்க மாப்பிள்ளைக்கு பொது பணித்துறைல வேலை போட்டு கொடுத்து இருக்காங்க. போன் வந்ததும் ஆர்டர் வாங்க போகணும் என அதிர்ச்சி கொடுக்கிறார்.

  • Pandian Stores2: செந்திலுக்கு கிடைத்த அரசு வேலை… பாண்டியனுக்காக சரவணன் எடுத்த திடீர் முடிவு!

    Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

    கதிர், சரவணன், பழனியை வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கிறார். கோமதி எதுக்கு வந்தீங்க எனக் கேட்க செந்தில் தான் போன் செய்து வரச்சொல்லி இருந்தான் எனக் கூற எதுக்கு வரச் சொன்னான். அதெல்லாம் தெரியாது எனக் கூற கோமதி கடுப்பாகி விடுகிறார்.

    அதே நேரத்தில் சரியாக பாண்டியனும் வீட்டுக்கு வர ஏங்க நீங்களும் செந்தில் சொல்லி தான் வந்தீங்களா எனக் கேட்கிறார். நான் ஏன் டி அவன் சொல்லி வரணும். அவன் யாரு என்னை வரச்சொல்லுறதுக்கு என்கிறார். அப்போது சரியாக செந்தில் மற்றும் மீனா வீட்டுக்கு வருகின்றனர்.

    செந்தில் வர என்னாச்சு எனக் கேட்க ஒரு லெட்டரை படிக்க கொடுக்கிறார். உடனே பாண்டியன் அதை வாங்கி பார்க்க ஆங்கிலத்தில் இருக்க தங்கமயிலிடம் படிக்க கொடுக்கிறார். அவர் முழிக்க பின்னர் கதிர் வாங்கி படித்து ராஜியும் சந்தோஷப்படுகிறார்.

    என்னடா நீங்களே சிரிச்சிட்டு இருந்தா எப்படி எனக் கேட்க செந்திலுக்கு அரசு வேலை கிடைச்சி இருப்பதாக சொல்கிறார். பாண்டியனும் சந்தோஷப்பட வேலை கிடைத்த விவரத்தினை சொல்லி விடுகிறார் மீனா. எல்லாரும் செந்திலுக்கு வாழ்த்து சொல்லி சந்தோஷப்படுகிறார்.

    பாண்டியன் தன் கடையில் வந்து போனவருக்கு எல்லாம் அந்த அப்பாயின்மெண்ட் லெட்டரை காட்டி பெருமை பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது சரவணன் வர நான் வேணா இனி செந்திலுக்கு பதில் கடைக்கு வரேன் என்கிறார்.

    பாண்டியனும் சந்தோசம் தான். நீ உன் முதலாளியிடம் பேசிட்டு வா என்கிறார். வீட்டில் கதிர், செந்தில், ராஜி, மீனா உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். நிலம் வாங்க எவ்வளோ ஆகும் எனக் கேட்க கதிர், மீனா கடுப்பாகின்றனர். இன்னும் வேலைக்கே சேரலை எனக் கலாய்க்கின்றனர்.

    பின்னர் கதிர் டிராவல் பிசினஸ் ஆரம்பிக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக சொல்கிறார். அதற்கு 15 லட்சம் செலவு ஆகும் எனக் கூற பேங்க் லோன் விசாரித்து கொண்டு இருப்பதாகவும் சொல்கிறார். மீனா தனக்கு தெரிந்தவர்களிடம் லோன் விஷயம் பேசுவதாக சொல்கிறார்.

  • Pandian Stores2: செந்திலின் திருட்டுத்தனத்தை மாட்டிவிட்ட மாமனார்… ஆடி தீர்த்த பாண்டியன்!

    Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

    தங்கமயில் தன்னுடைய அம்மாவுக்கு கால் செய்து செந்திலுக்கு அரசு வேலை கிடைத்த விஷயத்தினை சொல்கிறார். இனிமே இவருதான் கடைக்கு போக போறாரு போலம்மா என்கிறார். அது நல்ல முடிவுதான் டி. இனிமே கடையை உங்களுக்கு வாங்கிக்கணும்.

    என்னம்மா சொல்ற நீ என தங்கமயில் கேட்க மாப்பிள்ளை கடைக்கு போய் அங்க உன் மாமனார் நம்பிக்கையை சம்பாரிச்சிட்டு அவரை வீட்டில் உட்கார வைக்கணும். அதும் இல்லாம வீட்டையும் உங்களுக்கு மாத்தி கொடுக்கணும் என்கிறார்.

    என்னம்மா இது அஞ்சு பேருக்கு உரிமை உள்ளது எனக் கேட்க பெரிய செலவு செய்து வச்ச பொண்ணைக்கும், ஓடிப்போன பொண்ணைக்கும் சொத்து கொடுக்கணுமா? அப்படியும் மூணு பேருக்கு உரிமை இருக்கேம்மா என்கிறார். அதான் செந்திலுக்கு அரசு வேலை கிடைச்சிட்டு, கதிர் கடைக்கே வரது இல்ல என்கிறார். Pandian Stores 2 episode update, Pandian Stores 2 today episode, Pandian Stores 2 latest episode, Pandian Stores 2 episodio update, Pandian Stores 2 serial update, Pandian Stores 2 episode summary, Pandian Stores 2 episode recap, Pandian Stores 2 vijay tv, Pandian Stores 2 story update, Pandian Stores 2 episode highlights, Pandian Stores Season 2 update, Pandian Stores 2 spoiler, Pandian Stores 2 serial news, Pandian Stores 2 cast update, Pandian Stores 2 new episode release

    சும்மா இரும்மா என தங்கமயில் பேசிக்கொண்டு இருக்க அங்கு சரவணன் வர போனை வைத்துவிடுகிறார். என்ன செய்ற எனக் கேட்க நான் தான் கஷ்டப்பட்டு சமைச்சேன் என்கிறார். சரவணன் பெரிதாக தங்கமயிலிடம் பேசாமல் சமாளிக்கிறார்.

    அடுத்த நாள் காலையில் செந்தில் கனவுக்கண்டு கொண்டு இருக்கிறார். சம்பளம் குறித்து பேச பாண்டியன் வேலைக்கே போகாமல் இந்த கனவு தேவையா எனத் திட்டுகிறார். அப்போ மீனாவின் அப்பா வர அவரை வரவேற்று வீட்டிற்குள் உட்கார வைத்து பேசுகின்றனர்.

    அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது, நான் வேலை வாங்கி கொடுத்தது கூட பிரச்னையா இல்ல. நீங்க பத்து லட்சம் வரை தேற்றி கொடுக்கும் வரை அந்த வேலையை தக்க வைப்பதுதான் பிரச்னையா போச்சு. நல்லவேளை நீங்க ரெடி பண்ணி கொடுத்துட்டீங்க என்கிறார். எல்லாரும் அதிர்ச்சியாகி விடுகின்றனர். மீனா அப்பா கிளம்ப பாண்டியன் செந்திலை திட்டி தீர்க்கிறார்.

    பத்து லட்சம் பணத்தை என்ன செஞ்ச வீட்டு பத்திரத்தை அடகு வச்சியா எனத் திட்ட அவர் சொல்வதற்கு முன் பத்து லட்சம் பணத்தினை லோன் போட்டு கொடுத்தேன் என்கிறார். இதில் மேலும் அதிர்ச்சியாகி விடுகிறார். மீனாவையும் கண்டப்படி பாண்டியன் திட்டிவிட்டு அங்கிருந்து செல்ல மீனா பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.

  • Pandian Stores2: செந்தில் செய்ததை மறைக்கும் மீனா… கோமதியின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பம்!

    Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

    வீட்டில் கோமதி மற்றும் மீனா பேசிக் கொண்டிருக்கின்றனர். உன் மேல நான் எவ்வளவு பாசம் வச்சிருந்தேன். என் பொண்ண விட அதிகமா உன்ன தான் நேசிச்சேன். எல்லா விஷயமும் உன்னிடம் வந்து தான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

    இதை என்னிடம் நீ ஏன் சொல்லவில்லை என கோமதி கேட்கிறார். வீட்டில் மற்ற பிரச்சனைகள் நடந்தது அதனால் சொல்லவில்லை எனக் கூற, சரி நேத்து வேலை கிடைச்சுச்சு இல்ல அப்ப கூட இதை ஏன் சொல்லல எனக்கு கேட்க மீனா தடுமாறுகிறார்.

    உன்னுடைய அலுவலகத்தில் வாங்கிய வடையில் உப்பு குறைந்தது கூட நீ என்னிடம் சொல்லி இருக்க, ஆனா இதே மாதிரி பெரிய விஷயத்தை என்கிட்ட சொல்ல எனக்கு தகுதி இல்லை என்று நினைத்துவிட்டாயோ என்னவோ என கோமதி மீனாவை கடுமையாக சாடிவிட்டு என்று சொல்கிறார்.

    இதில் மீனா அழுது கொண்டிருக்க தங்கமயில் அத்த கேக்குறதுல எந்த தப்பும் இல்லை மீனா. எங்களை விட உன்மேல தான் அவங்க ரொம்ப பாசமா இருந்தாங்க என்கிறார். ஆனால் ராஜி நீங்களும் ஏன் அக்கா. மீனா அக்கா மறைச்சாங்கனா அதுல ஒரு காரணம் இருக்கு என்கிறார்.

    வீட்டில் அப்பத்தா மற்றும் அரசி இருவரும் பேசிக் கொண்டிருக்க பழனி அங்கு வருகிறார். வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா மாமா என அரசி தீர்க்க நீ பண்ணிட்டு போனதுக்கு எப்படி நல்லா இருப்பாங்க. எதோ நல்ல விஷயம் நடக்கிறதால் இருக்காங்க என்கிறார்.

    அப்பத்தா சரவணன் பொண்டாட்டிக்கு சத்தான ஆகாரமா செஞ்சி கொடுக்க சொல்லுடா என்கிறார். அக்கா நல்லாதான் பாத்துக்குது என்கிறார் பழனி. பின்னர் செந்திலுக்கு அரசு வேலை கிடைச்ச விஷயத்தையும் சொல்ல அப்பத்தா மற்றும் அரசி சந்தோஷப்படுகின்றனர்.

    மறுபக்கம் எல்லாரும் சாப்பிட உட்கார்ந்து இருக்க செந்தில் மற்றும் மீனா மட்டும் இல்லாமல் இருக்கின்றனர். ராஜி அக்கா இல்லாம நல்லாவே இல்ல என்கிறார். பாண்டியன் நான் யாரையும் சாப்பிட வரக்கூடாதுனு சொல்லலையே என்கிறார்.

    கதிர் சென்று செந்தில் மற்றும் மீனாவை அழைத்து வர அவர்களுடன் பழனி பேசி கலாய்த்து கொண்டு இருக்கிறார்.