Tag: Parasakthi

  • கோடிகளில் சம்பளம்!. மீண்டும் வில்லனாக நடிக்கும் ரவி மோகன்!.. ஜெய் பராசக்தி!..

    ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் ரவி. ஜெயம் ஹிட் என்பதால் ஜெயம் ரவியாக மாறினார். அதன்பின் கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் படங்கள் சூப்பர் ஹிட் இல்லையென்றாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து வருகிறது. அதேநேரம் தனி ஒருவன், கோமாளி போன்ற படங்கள் அவருக்கு நல்ல வசூலை கொடுத்தது..

    நடிகராக மட்டுமே இருந்த ஜெயம் ரவி தற்போது இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமாவில் அவதாரங்கள் எடுத்திருக்கிறார். ரவி மோகன் புரடெக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதில் தற்போது இரண்டு படங்கள் உருவாகி வருகிறது.. அதில் ஒன்றை யோகி பாபுவை வைத்து ஜெயம் ரவியே இயக்கி வருகிறார்..

    ஒருபக்கம், சினிமாவில் இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த ஜெயம் ரவி சுதா கொங்கராஅ இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வாதி ஆகியோர் நடித்த பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு பலரும் பாராட்டினாரக்ள். இந்நிலையில்தான் லோகேஷ் கனகராஜ் கதை எழுதி, தயாரித்து, பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வரும் பென்ஸ்(Benz) படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கவிருக்கிறாராம்,,

    வில்லனாக நடித்தால் அதிக சம்பளம் கேட்கலாம். ஜெயம் ரவி தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருப்பதால் நிறைய பணம் தேவைப்படுகிறது. எனவேதான், வில்லன் என்றாலும் ஓகே என்கிற மனநிலைக்கு அவர் வந்துவிட்டதாக தெரிகிறது. ஏற்கனவே இந்த படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது..

  • OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ் அப்டேட்.. ஓடிடியிலாவது ஓடுமா பராசக்தி!..

    புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி 3 வாரங்கள் கழித்து அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. ஓடிடி-யில் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அதேபோல், தியேட்டரில் வெளியாகி வரவேற்பை பெறாத சில படங்கள் கூட ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெறுவதுண்டு. அந்தவகையில் இந்த வார வெள்ளிக்கிழமை என்னென்ன திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதை பார்ப்போம்.

    சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து ஜனவரி 10ம் தேதி வெளியான திரைப்படம் பராசக்தி. 1960களில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை இது. ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் வெளியாகிறது என சொன்னதால் விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு இப்படம் ஆளானது.

    எனவே, படம் வெளியானபோது படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பினார்கள். ஒருபக்கம், படத்திற்கும் கலவையான விமர்சனங்கள் வந்ததால் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்த படம் வருகிற வெள்ளிக்கிழமை Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஓடிடியிலாவது இப்படம் வரவேற்பை பெறுமா என பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

    அடுத்து, விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன், சரத்குமார் நடித்து பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த கொம்பு சீவி திரைப்படம் Tentkotta என்கிற ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த படமும் தியேட்டரில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஓடிடியில் என்னவாகிறது என பார்ப்போம்.

    அடுத்து, தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஹீரோவோக நடித்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பேன் இண்டியா படமான ராஜாசாப் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்த படம் ஆந்திராவிலேயே ஓடவில்லை. மொத்தத்தில் தியேட்டரில் ஓடாத 3 படங்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது.

  • எல்லாம் தெரிஞ்சமாதிரி பேசாதீங்க!.. சுதா கொங்கராவை நோஸ்கட் பண்ணிய எஸ்.கே!…

    இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. மணிரத்தினிடம் சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்து சினிமாவை கற்றுக் கொண்டவர் இவர். சுதா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் ஹிந்திலும் கூட ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்த்தையும் அவரே இயக்கியிருந்தார்.

    அதன்பின் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா போன்ற நடிர்களை வைத்து பராசக்தி என்கிற திரைப்படத்தை இயக்கினார்.. 1960களில் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில்தான் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    படப்பிடிப்பு தளத்தில் ஜெயம் ரவி, அதர்வா, சிவகார்த்திகேயன் ஆகிய ஆகிய எல்லோரையும் அருகில் வைத்துக் கொண்டு ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும் சுதா கொங்கரா ‘ கதையை வாங்கி முழுவதுமாக படித்துவிட்டு தயார்படுத்திக் கொண்டு நடிக்க வரும் நடிகர்கள் மிகவும் குறைவு.. ரவி மோகன் மணி சார் கூட ஏற்கனவே வேலை செஞ்சிருக்கார்.. அதனால கதையை படித்து பார்த்து தயார்படுத்திகொண்டு வரும் பழக்கம் அவரிடம் இருக்கு.. ஆனா சிவகார்த்திகேயனுக்கு இந்த பழக்கம் இல்லை’ என கூறினார்.

    இதில் கோபமடைந்த சிவகார்த்திகேயன் ‘என் வாழ்க்கைய நீங்க பக்கத்தில் இருந்து மாதிரியே பேசுறீங்க.. நானும் கதையை படித்து பிரிப்பேர் பண்ணி நடிச்சிருக்கேன்.. அமரன், மாவீரன், மதராஸி படங்களில் நடிக்கும்போது ஃபுல் ஸ்கிரிப்ட் படிச்சிட்டு பிரிப்பேர் செய்துதான் நடித்தேன். விளையாட்டுத்தனமா பேசுறதால வேலை செய்யலைன்னு ஆகிடாது’ என்று கூறினார். இந்த வீடியோவை பகிர்ந்து ‘எஸ்.கே-விடம் மொக்கை வாங்கிய சுதா கொங்கரா’ என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

  • பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்விய பராசக்தி.. வா வாத்தியார்!.. இவ்ளோதான் வசூலா?!…

    பிரபலமான பெரிய நடிகராக இருப்பதாலேயே திரைப்படங்கள் இப்போதெல்லாம் ஓடி விடுவதில்லை. படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை கவர வேண்டும்.. இல்லையென்றால் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி.. படம் பிளாப்தான்.. இதை இப்போதும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் உணர்வதில்லை. ஆனால் நல்ல கதையோடு சின்ன பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெறுகிறது.

    ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் ஆதரவோடு உருவான பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி வெளியானது.. படம் வெளியான போது இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன.

    ஒருபக்கம் இந்த படத்திற்கு எதிராக விஜய் ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பினார்கள்.. படம் வெளியாகி 2 நாட்களிலேயே தியேட்டர்கள் காத்து வாங்கியது. தமிழகத்தில் இந்த படம் 51 கோடிகளை மட்டுமே வசூல் செய்திருக்கிறது என்கிறார்கள். அதில் சினிமாவில் மொத்தமாக வசூல் என்பதை விட எவ்வளவு பங்கு என்பதைத்தான் பார்ப்பார்கள். அப்படி பார்க்கும்போது பராசக்தி படம் 21 கோடி மட்டுமே ஷேர் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

    அதேபோல் கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படமும் கடந்த 15ம் தேதி வெளியானது. இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்வியது. இந்த படம் தமிழகத்தில் 9 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதில் 3 கோடி மட்டுமே ஷேர் வந்திருப்பதாக வினியோகஸ்தர்கள் சொல்கிறார்கள்.

    பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் படமும் வெளியாகவில்லை.. வெளியான இரண்டு பெரிய நடிகர்களின் படங்களும் ஓடவில்லை.. கடைசியில் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம்தான் வசூலை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

  • Parasakthi: ‘பராசக்தி’ படத்துல நடிக்க நடிகை சொன்ன ஒரு பொய்! இப்படிலாம் சொல்வாங்களா?

    இந்த பொங்கலுக்கு ரிலீஸான படங்களின் ரிசல்ட் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக மாறியுள்ளது. நினைத்தது ஒன்னு.. நடந்தது ஒன்னுனு சொல்வாங்க. அப்படித்தான் இந்த பொங்கல் அமைந்திருக்கிறது. அரசியல் காரணங்களால் கண்டிப்பாக ஜன நாயகன் படத்திற்கு பிரச்சினை வரும் என எதிர்பார்த்தது உண்மைதான். ஆனால் படத்தையே ரிலீஸ் செய்ய முடியாத வகையில் பிரச்சினை வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

    அந்த பிரச்சினை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க சோலோவா நம்ம சிவகார்த்திகேயன் அண்ணே மாஸ் காட்டப் போறாரு என சிவகார்த்திகேயன் கூட நினைச்சிருப்பாரு. ஆனால் வச்சான் பாரு ஆப்பு என அடுத்தடுத்து பொங்கல் ரேஸில் வந்து இறங்கினார்கள் கார்த்தியும் ஜீவாவும். ஆனால் கார்த்தியின் வா வாத்தியாரே படம் அந்தளவு ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.

    இன்னொரு பக்கம் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் பிச்சுக்கிட்டு போகுதுனுதான் சொல்லணும். பராசக்தி படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 10 நாள்கள் ஆன நிலையில் வசூல் எதிர்பார்த்த அளவு வரவில்லை என்பதுதான் உண்மை. சுதா கொங்கரா இயக்கத்தில் புரட்சிகரமான வசனங்கள் இருந்தாலும் வழக்கமான கதையும் இந்தப் படத்தில் டிராவல் ஆனது.

    ஹிந்தி திணிப்பு எதிர்ப்புனு சொல்லிட்டு அந்த போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமானவர்களை படத்தில் காட்டவே இல்லை. மாணவர்களில் ஒருவராகத்தான் சிவகார்த்திகேயனையும் அதர்வாவையும் காட்டினார்கள். இந்த நிலையில் படத்தில் ஒரு துணை நடிகையாக நடித்தவர் பாப்ரி கோஷ். சிவகார்த்திகேயன் ஜெயிலில் இருந்து தப்பி வட மாநிலத்திற்கு செல்ல அங்கு அவருடைய புறநானூற்று படைதான் சிவகார்த்திகேயனுக்கு அடைக்கலம் கொடுப்பார்கள்.

    அதில் இருந்த ஒரு நடிகைதான் பாப்ரி கோஷ். இவர் ஏற்கனவே சீரியலில் நடித்திருக்கிறார். இவர் இந்தப் படத்தில் நடித்ததை பற்றி கூறும் போது சீரியலில் நடிக்க கூட நான் யாரிடமும் சான்ஸ் கேட்க மாட்டேன். ஆனால் இதுவே சினிமாவாக இருந்தால் ஓடி ஓடி போய் சான்ஸ் கேட்பேன். சினிமாவில் நடிப்பதற்காக என்ன பொய் வேண்டுமானாலும் சொல்வேன். ஏன் பராசக்தி படத்தில் நடிக்கும் போது கூட சீரியலில் நடித்திருக்கிறேன் என ஆரம்பத்தில் நான் யாரிடமும் சொல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.

  • SK: அன்று ஃபோட்டோவுக்கு மாலை.. இன்னைக்கு? SK ஃபேன்ஸ்களிடம் சிக்கிய பிஸ்மி, அந்தணன்

    தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பராசக்தி. படத்திற்கு ஜிவி இசையமைத்திருக்கிறார். படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார். படத்திற்கு ஒரு வெயிட்டான தலைப்பைத்தான் வைத்திருக்கிறார்கள்.

    ஏற்கனவே சிவாஜி நடிப்பில் கலைஞர் வசனத்தில் ஒரு எழுச்சிமிக்க படமாக வந்ததுதான் பராசக்தி. சிவாஜி அறிமுகமான படம். அனல்பறிக்கும் கலைஞரின் வசனம் கேட்பவர்களை வீறு கொண்டு எழச்செய்தது. அப்படி பார்த்து வியந்த ஒரு படத்தின் தலைப்பை சிவகார்த்திகேயன் படத்திற்கு வைத்திருக்கிறார்கள் என்றதும் என்னதான் இருக்கிறது என்பதை பார்க்கவே ஆர்வமாக சென்றனர் மக்கள்.

    அதற்கு முன்பு இந்தப் படம் ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் சில இடங்களில்தான் ஹிந்தி திணிப்பு பற்றி பேசியிருக்கிறார்கள். பெரும்பாலும் காதல், இன்னொரு பக்கம் ஹீரோ வில்லனுக்கு இடையே நடக்கும் மோதல் இவைகள்தான் இடம்பெற்றிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் ஜன நாயகன் படம் வராத கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்களை மேலும் கடுப்பேற்றினார் சுதா கொங்கரா.

    குண்டர்கள், ரவுடிகள் என மறைமுகமாக விஜய் ரசிகர்களை தாக்கி பேசியிருந்தார் சுதா கொங்கரா.இதுவும் பராசக்தி படத்திற்கு மேலும் சிக்கலைத் தந்தது. இப்படி ஒரு பிரச்சினை போய்க் கொண்டிருக்க சிவகார்த்திகேயனை அவ்வப்போது சீண்டி வந்தனர் வலைபேச்சு சேனலின் பிஸ்மி மற்றும் அந்தணன். ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் பேசும் போது மாநாடு படத்தில் சிம்பு நடித்தார். ஆனால் பாதியிலேயே அவர் விலகுவதாகவும் அதன் பிறகு நான் நடிக்க வேண்டும் என்றும் தன்னிடம் வந்ததாக சிவகார்த்திகேயன் கூறினார்.

    ஆனால் இது சிம்பு சார் தொடங்கிய படம். அதுமட்டுமில்லாமல் அந்தப் படம் ஹிட் ஆகும். அதனால் சிம்பு சாரையே நடிக்க சொல்லுங்கல் என்று சொன்னதாகவும் சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். இதை வலைப்பேச்சு சேனலில் அந்தணன் பேசும் போது அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை, சிவகார்த்திகேயன் சொல்வதை பார்க்கும் போது சிம்பு ஒழுங்காக கால்ஷீட் கொடுக்காததனால்தான் தன்னிடம் வந்ததாக அல்லவா காட்டிக் கொள்கிறார் என்று அந்தணன் பேசியிருந்தார்.

    ஆனால் சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ் சும்மா இருப்பார்களா? ஏற்கனவே மாநாடு படம் பற்றி 2019 ல் வலைப்பேச்சில் அந்தணன் பேசிய ஒரு வீடியோவை பதிவிட்டு தமிழ் சினிமாவின் சாபக்கேடு நீங்கள் தான் என சுட்டிக் காட்டியிருக்கின்றனர். 2019 ல் பேசும் போது மாநாடு படம் நடக்கும். ஆனால் சிம்பு நடிப்பாரானு தெரியல. அடிக்கடி காணாமல் போறாராம். அதனால் அந்தப் படத்தை சிவகார்த்திகேயனை வச்சு எடுக்கலாமா என்ற முடிவில் இருக்கிறார்களாம்.

    வீடியோவை காண : https://x.com/TamilSecondShow/status/2012797173855846434/video/1

  • பராசக்தி பட ரிசல்ட்!.. வெங்கட்பிரபு நிலமை இப்படி ஆகிப்போச்சே!.. ஐயோ பாவம்…

    திரையுலகில் ஒரு நடிகரின் ஒரு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தால் அந்த படத்தில் நடித்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என எல்லாருக்குமே ஜாக்பாட்தான். ஏனெனில் ஒரு படத்தின் ரிசல்ட் சம்பந்தப்பட்டவர்களின் அடுத்த படத்தில் எதிரொலிக்கும். அதாவது, ஒரு நடிகரின் படம் ஓடிவிட்டால் உடனே அந்த நடிகர் தனது சம்பளத்தில் பல கோடிகளை ஏற்றிவிடுவார்.

    அதை கொடுக்க தயாரிப்பாளரும் முன்வருவார். அதேதான் இயக்குநருக்கும்.. தயாரிப்பாளரை பொருத்தவரை ஹீரோவின் முந்தைய படம் ஹிட் என்பதால் அதிக விலைக்கு வியாபாரம் செய்வார். இதனால் அவருக்கு அதிக லாபம் கிடைக்கும். எனவே ஒரு நடிகரின் சம்பளம் மற்றும் படத்தின் வியாபாரம் அவரின் முந்தைய படத்தின் ரிசல்ட்டில் இருக்கிறது.

    சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் நடித்து வெளியான பராசக்தி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.. இன்னும் சொல்லப்போனால் இந்த படம் 100 கோடி வசூலை கூட தொடாது என்கிறார்கள். பல தியேட்டர்களும் காத்து வாங்குவதால் ஏறக்குறைய படம் தோல்வி என்பது உறுதியாகிவிட்டது.

    இந்த ரிசல்ட் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை பாதித்திருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். பராசக்தி படத்தின் ரிசல்ட் பார்த்த தயாரிப்பாளர் வெங்கட்பிரபுவை அழைத்து ‘பராசக்தி சரியாக போகவில்லை. படத்தின் பட்ஜெட்டை குறையுங்கள்.. நீங்கள் சொல்லும் பட்ஜெட்டில் படம் எடுக்க முடியாது.. அப்படி எடுத்தால் வியாபாரம் செய்ய முடியாது’ என்று சொல்ல வெங்கட் பிரபு அப்செட் ஆகிவிட்டாராம்.

    ஏனெனில் ஏற்கனவே தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதற்காக பல கோடி பட்ஜெட்டை அவர் குறைத்தார். இனிமேல் இதில் பட்ஜெட்டை குறைக்க எந்த வாய்ப்பும் இல்லை. இது மூன்று மாநாடு. தைரியமாக செலவு செய்யுங்கள். படம் கண்டிப்பாக ஹிட்’ என தயாரிப்பாளரை சம்மதிக்கவைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.

  • பராசக்திக்கு வாழ்த்து!.. ஆனா ஜனநாயகன் பத்தி பேசமாட்டாரு ரஜினி!.. தவெகவினர் கோபம்!…

    இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இந்திய சினிமா உலகில் தலைவர் என்றால் எல்லா நடிகர்களுக்கும் நினைவுக்கு வருவது ரஜினிதான். கடந்த 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 74 வயதிலும் இன்னமும் ஹீரோவாக நடித்த வருகிறார் ரஜினி.

    தான் நடிக்கும் திரைப்படத்தோடு நின்றுவிடாமல் அவ்வப்போது வெளியாகும் நல்ல படங்களை பார்த்துவிட்டு படம் நன்றாக இருந்தால் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டுவது ரஜினியின் வழக்கம். அப்படி இதுவரை பல படங்களை பாராட்டி இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது.

    இந்நிலையில்தான் சமீபத்தில் சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான பராசக்தி படத்தை பார்த்த ரஜினி சிவகார்த்திகேயனை செல்போனில் தொடர்பு கொண்டு ‘இது ஒரு தைரியமான முயற்சி.. இரண்டாம் பாதியாக அருமையாக இருந்தது.. உங்களின் நடிப்பு அபாரம்’ என்று பாராட்டியிருந்தார் இந்த தகவலை பராசக்தி படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருந்தார்.

    இதை கையில் எடுத்துள்ள விஜய் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும் ‘ பராசக்தி படத்துக்கு ரஜினி வாழ்த்து சொல்கிறார்.. ஆனால் ஜனநாயகன் திரைப்படம் சென்சாரில் சிக்கி வெளிவராமல் இருக்கிறது.. அது பற்றி பேசாமல் மௌனம் காத்து வருகிறார்.. அதுபற்றி வாயை திறக்கவில்லை’ என கோபத்தை காட்டி வருகிறார்கள்.

  • நல்லவேளை பராசக்தி படத்தை நமக்கு கொடுக்கல!.. சந்தோஷத்தில் தியேட்டர் அதிபர்கள்…

    விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதியும் பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதியும் ரிலீஸ் ஆன அறிவித்தார்கள். இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி சிவகார்த்திகேயனை திட்ட துவங்கினார்கள். அதோடு பராசக்தி படத்தை வெளியிடுவது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் என்பதால் அவர்களின் கோபம் திமுக பக்கமும் திரும்பியது. விஜய் திமுகவை விமர்சித்து பேசிவருவதால் வேண்டுமென்றே ஜனநாயகன் படத்தின் வசூல் பாதிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த படத்திற்கு போட்டியாக பராசக்தியை வெளியிடுகிறார்கள் என விஜய் ரசிகர்கள் நம்பினார்கள்.

    ஆனால் இது வியாபாரம் காரணமாக தயாரிப்பாளர் எடுத்த முடிவு என்ன சிவகார்த்திகேயன் விளக்கமளித்தும் விஜய் ரசிகர்கள் கேட்கவில்லை. சமூகவலைத்தளங்களில் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் விஜயா/ சிவகார்த்திகேயனா? என பார்க்கும்போது விஜய்தான் எனக்கு யோசித்த சில தியேட்டர் அதிபர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ‘நாங்கள் ஜனநாயகன் படத்தையே எங்கள் தியேட்டரில் திரையிட திட்டமிட்டிருக்கிறோம்.. பராசக்தி படம் வேண்டாம்’ என சொல்லிவிட்டார்கள். இது ரெட்ஜெண்ட் தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    ஆனால், சென்சார் பிரச்சினையில் சிக்கியதால் ஜனநாயகன் படம் ரிலீஸாகவில்லை. எனவே பராசக்தி வேண்டாம் என சொன்ன சில விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டு ‘பராசக்தி படத்தை கொடுங்கள்’ என கேட்டால் ‘உங்களுக்கு படம் கொடுக்க முடியாது’ என மறுத்து விட்டதாம் ரெட் ஜெயண்ட் தரப்பு.

    எனவே வேறு வழியின்றி விக்ரம் பிரபு இயக்கத்தில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற்ற சிறை படத்தை திரையிட துவங்கி விட்டார்களாம். தற்போது தமிழ்நாட்டில் பல தியேட்டர்களிலும் சிறை படம் ஓடிக் கொண்டிருக்கிறது.. இப்போதும் இந்த படம் ஓரளவுக்கு நல்ல வசூலையும் பெற்று வருகிறதாம்.. ஒருபக்கம், பராசக்தி படத்திற்கும் பெரிய வசூல் இல்லை. ஆனால், சிறை படத்திற்கு இப்போதும் வசூல் இருக்கிறது. ஒருவகையில் சிறை படத்திற்கு ஜனநாயகன் வாழ்வு கொடுத்தது மாதிரி ஆகிவிட்டது.

  • ஜனநாயகனால் தப்பித்த பராசக்தி!.. விஜய் படம் வந்திருந்தா சோலி முடிஞ்சிருக்கும்!…

    விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாவதாக இருந்தது. விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் இது அவரின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சென்சார் பிரச்சனையில் சிக்கியதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த படம் தொடர்பான வழக்கு வருகிற 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அநேகமாக இந்த மாத இறுதிக்குள் இந்த படம் வெளியாகலாம் என தெரிகிறது.

    ஒருபக்கம் இந்த படத்திற்கு போட்டியாக பராசக்தி படத்தை ரிலீஸ் என்கிற அறிவிப்பை விஜய் ரசிகர்கள் விரும்பவில்லை. ‘விஜயுடனே சிவகார்த்திகேயன் போட்டி போடுகிறாரா?’ என்கிற கோபம் அவர்களுக்கு ஏற்பட சிவகார்த்திகேயனை சமூகவலைத்தளங்களில் கடுமையாக திட்ட துவங்கினார்கள்.

    ஆனால் ‘இது வியாபாரம் காரணமாக தயாரிப்பாளர் எடுத்த முடிவு.. இது விஜய் சாரிடமே சொல்லிவிட்டோம்.. அவர் எனக்கு வாழ்த்தும் சொன்னார்’ என சிவகார்த்திகேயன் சொன்னார். ஆனாலும் விஜய் ரசிகர்கள் மாறவில்லை.. இப்போது வரை அவரைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. மேலும் பராசக்தி படத்தின் முதல் காட்சி வெளியாவதற்கு முன்பே நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் பரவ துவங்கினார்கள்,,
    ஒரு பக்கம் படத்திற்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.

    parasakthi (1)
    parasakthi (1)

    பராசக்தி படம் நல்ல முயற்சி தான் என்றாலும் சொன்ன விதம் சரியில்லை.. படத்தின் நீளம் போரடிக்க வைக்கிறது என விமர்சனங்கள் வந்தன.. ஒரு பக்கம் விஜய் ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பியதால் இந்த படத்திற்கான வசூல் குறைந்தது.. முதல் நாள் இப்படம் 11.5 கோடி மட்டுமே வசூல் செய்ததாக சில இணையதளங்கள் செய்து வெளியிட்டது.. ஆனால் முதல் வசூல் 27 கோடி என இப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் சொன்னது.. ஆனால் அதை பலரும் நம்பவில்லை.

    இந்நிலையில் படம் வெளியான இரண்டாம் நாளான நேற்று தமிழகத்தின் பல தியேட்டர்களிலும் பராசக்தி படம் காத்து வாங்கியது.. பல தியேட்டர்களில் ரசிகர்கள் இல்லாமல் காட்சியை காட்சியை ரத்து செய்துள்ளனர். இதையடுத்து ‘இப்படிப்பட்ட ஒரு படத்தை வைத்துக்கொண்டுதான் ஜனநாயகனுடன் மோத முடிவெடுத்தீர்களா? ஜனநாயகன் படம் மட்டும் 9ம் தேதி வந்திருந்தால் பராசக்தி படம் ஒரே நாளில் காலியாகியிருக்கும்.. இப்போது வந்திருக்கும் வசூல் கூட வந்திருக்காது’ என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி வருகிறார்கள்..