Tag: prabudeva

  • விஜயகாந்த் சார் ஒரு தங்கம்!. அந்த சம்பவத்தை மறக்கமாட்டேன்!. பிரபுதேவா ஃபீலிங்…

    மதுரையிலிருந்து சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி பல அவமானங்களை சந்தித்து, அதன்பின் வாய்ப்புகளை பெற்று துவக்கத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து, இடையிடையே வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னேறியவர்தான் விஜயகாந்த்.

    அவரிடத்தில் யாராக இருந்தாலும் சினிமாவை விட்டு போய் இருப்பார்கள். ஆனால் தன்னம்பிக்கையுடன் முயற்சிகள் செய்து முக்கிய இடத்தை பிடித்தார். ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் ஆகியோருக்கு போட்டி நடிகராக விஜயகாந்த் மாறினார். அவர்கள் இரண்டு பேரின் படங்களை விட விஜயகாந்தின் படங்கள் அதிக வசூலை பெற்றது..

    விஜயகாந்த் ஒரு நடிகர் என்பதைத் தாண்டி ஒரு மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதர் என்றே அவர் அடையாளம் காணப்படுகிறார். திரைத்துறையில் இவரால் வளர்ந்தவர்கள் பலர். யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை விஜயகாந்த் செய்யாமல் இருந்ததில்லை. எனவேதான் அவரை மரணத்திற்கு பின்னரும் மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள்.. ஒருபக்கம் தான் ஒரு பெரிய நடிகர் என்கிற எந்த பந்தாவும் இல்லமால் எளிமையாக வாழ்ந்தவர்தான் விஜயகாந்த்.

    1992ம் வருடம் வெளியான பரதன் படத்தில் புன்னகையில் மின்சாரம் என்ற பாடலுக்கு விஜயகாந்த் பானுப்பிரியாவுடன் இணைந்து அசத்தலாக நடனமாடியிருப்பார். அந்த பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குனர் பிரபுதேவா ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘விஜயகாந்த் சார் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது.. அவருடைய பரதன் படத்துல ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலுக்கு நான் டான்ஸ் மாஸ்டரா வேலை செஞ்சேன்.

    எனக்கு தெரிஞ்சு தமிழ் சினிமாவுல வந்த பாட்டிலேயே அதிக கட் இருக்கிறது அந்த பாட்டுதான். அந்த ஒரு பாட்டை 10 நாள் எடுத்தோம். அந்த பாட்டு எடுத்தப்ப அவர் பீக்ல இருந்தார்.. ஆனால் நான் என்ன பண்ண சொன்னேனே அது அப்படியே பண்ணினார். அதுதான் அவருக்கு முதல் சினிமா மாதிரி நடந்துகிட்டார்.. அவர் ஒரு தங்கம்.. அவர் மாதிரி வராது’ என புகழ்ந்து பேசியிருக்கிறார்.

  • பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி எப்படி இருக்காரு பாருங்க!.. பிரபல கோயிலில் சாமி தரிசனம்!..

    நடிகர் பிரபுதேவா தனது இரண்டாவது மனைவி ஹிமானி சிங்குடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மூத்த நடன இயக்குனரான சுந்தரம் அவர்களுக்கு ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத், பிரபு தேவா என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் மூவருக்குமே நடனம் மற்றும் நடிப்பில் இருக்கும் திறமையால் 90களில் பல ரசிகர்களை கவர்ந்த்துள்ளனர். அதிலும் பிரபுதேவாவின் ரசிகர்கள் எண்ணற்ற அளவில் உள்ளனர்.

    பிரபுதேவா இந்து, காதலன், லவ் பேர்ட்ஸ், காதலா காதலா, பெண்ணின் மனதை தொட்டு, டபுள்ஸ், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்னி நட்சத்திரம், இதயம், ஜென்டில்மேன் போன்ற படங்களில் நடனமாடி இருந்தாலும் அவர் கதாநாயகனாக நடித்திருந்த மின்சார கனவு படத்தில் வரும் வெண்ணிலவே பாடலுக்கு சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றார்.

    டான்ஸ் மற்றும் நடிப்பை தொடர்ந்து போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். கடைசியாக அவர் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த கோட் படத்தில் நெகடிவ் ரோலிலும் அசத்தியிருந்தார்.

    பிரபுதேவாவின் முதல் மனைவி ராம்லாத், இவர்களுக்கு இரு மகன்கள் அதில் முதல் மகன் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டான். அதன் பின் பிரபுதேவாநடிகை நயந்தாராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதை தொடர்ந்து ராம்லாத் வழக்கு தொடர்ந்து பல போராட்டத்திற்கு பின்னர் தன் கணவரை நயந்தராவிடம் இருந்து மீட்டெடுத்தார். பின்னர் பிரபுதேவா ராம்லாத்தை சட்டபூர்வமாக விவாகரத்து செய்து டாக்டர் ஹிமான் சிங் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

    இந்நிலையில் பிரபு தேவா தன் இரண்டாவது மனைவி ஹிமானி சிங்குடன் கோவிலுக்கு சென்று பக்தியுடன் கடவுளை வணங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • ஃபங்சனுக்கு போனா வாயில விரல விட்டு ஆட்டுறான்!.. ஃபன்னி கய்!. பிரபுதேவாவை திட்டிய வடிவேலு!..

    Vadivelu: பிரபுதேவாவுக்கும், நடிகர் வடிவேலுவுக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. இருவரும் ஒன்றாகவே சினிமாவில் வளர்ந்தவர்கள். பிரபுதேவா ஹீரோவாக நடித்த பல படங்களில் அவருடன் வடிவேலு நடித்திருக்கிறார். காதலன், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, மனதை திருடி விட்டாய், லவ் பேட்ஸ், எங்கள் அண்ணா என சொல்லிக்கொண்டே போகலாம்.

    இந்த எல்லா படங்களிலுமே வயிறு குலுங்க வைக்கும் காமெடி காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதிலும், மனதை திருடி விட்டாய் படத்தில் படம் முழுக்க பட்லர் இங்கிலீஷ் பேசும் வேடத்தில் அசத்தியிருப்பார் வடிவேலு. அதிலும், ‘ஒய் பிளட் சேம் பிளட்’ என்கிற வசனம் இப்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தில் வடிவேலு பேசும் ‘நீங்களா மனசுங்களாடா’ என்கிற வசனம் இப்போதுவரை மீம்ஸ் மெட்டீரியலாக இருக்கிறது.

    இந்நிலையில்தான் சமீபத்தில் ஒரு பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில், பிரபுதேவா பல பாடல்களுக்கும் நடனம் ஆடினார். இந்த நிகழ்ச்சியில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பாக்கியராஜ், மீனா, ரம்பா, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். புதிய மற்றும் பழைய நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டதால் நிகழ்ச்சி களைகட்டியது.

    அப்போது காதலன் படத்தில் இடம் பெற்ற ‘பேட்ட ராப்’ பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்த பிரபுதேவா மேடையிலிருந்து வடிவேலுவை பார்த்துகொண்டே இருந்தார். திடீரென கீழே இறங்கி வந்து அவரின் வாயில் விரலை விட்டு ஆட்டினார். மேலும், தலைமுடியை கலைத்துவிட்டு அங்கிருந்து போய்விட்டார்.

    வடிவேலுவோ ‘ஏன்டா டேய்’ என்பது போல ரியாக்‌ஷன் கொடுத்தார். இது எல்லாவற்றையும் வடிவேலு அருகில் அமர்ந்திருந்த தனுஷ் கைத்தட்டி ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார். இதனால், நிகழ்ச்சியே வைப்பாக மாறியது. இது தொடர்பான் வீடியோக்கள் நேற்று இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது.

    இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு ‘இந்த நிகழ்ச்சிக்கு வர சொன்னாருன்னு வந்தேன். ஆனா வாய்க்குள்ள விரலை விட்டு ஆட்டிக்கிட்டு இருக்காரு. ஷூட்டிங் ஸ்பாட்லயும் இப்படித்தான் என்கிட்ட விளையாடிக்கிட்டே இருப்பாரு.. அதற்கு ரோஜாதான் சாட்சி. உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் அவர்தான்’ என சொல்லியிருக்கிறார்.

  • அடுத்த பிரபுதேவா ரெடி!.. அப்படியே அவர் மாதிரியே இருக்காரே!. செம வைப் போட்டோ!….

    Prabudeva: 80களில் பல படங்களுக்கும் நடனம் அமைத்தவர் நடன இயக்குனர் சுந்தரம். அவருக்கு மூன்று மகன்கள். மூத்தவர் ராஜு சுந்தரம். அடுத்து பிறந்தவர்தான் பிரபுதேவா. சிறு வயது முதலே அப்பாவுக்கு உதவியாக திரைப்படங்களில் வேலை செய்தவர். மௌன ராகம் படத்தில் வரும் பனிவிழும் இரவு பாடலில் கூட பிரபுதேவா வருவார்.

    அதேபோல், மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்தில் வரும் ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ பாடலிலும் கார்த்திக்குடன் இணைந்து நடனமாடியிருப்பார். ஒருகட்டத்தில் சினிமாவில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அப்படி அவர் ஆடிய ஜென்டில்மேன் படத்தில் சிக்குபுக்கு ரயிலே, சூரியன் படத்தில் ‘லாலாக்கு டோல் டப்பிமா’, வால்டர் வெற்றிவேல் படத்தில் ‘சின்ன ராசாவே சிட்டெறும்பு உன்ன கடிக்குது’ பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்.

    இந்த பாடல்களில் நடனமாடிய அவரின் ஸ்டைலை பார்த்து இந்திய மைக்கேல் ஜாக்சன் என எல்லோரும் அவரை புகழ்ந்தார்கள். அந்தன்பின் இந்து, காதலன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். காதலன் படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து பல படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். அவர் நடித்த எல்லா படங்களிலும் அவரின் நடனத்திறமையை காட்டுவது போல பாடல்கள் இருக்கும்.

    ஒருகட்டத்தில் இயக்குனராகவும் மாறினார். விஜயை வைத்து போக்கிரி, வில்லு உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். சினிமாவில் நடனமாடிக்கொண்டிருந்த போதே ரம்லத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 மகன்கள். இதில் ஒருவர் பிரபுதேவா வில்லு படத்தை இயக்கிகொண்டிருந்தபோது நோய்வாய்பட்டு இறந்துபோனார். இடையில் நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டு மனைவியையும் பிரிந்தார். இப்போது பிரபுதேவா தனியாக வாழ்வதாகவே சொல்லப்படுகிறது.

    சமீபத்தில் ‘ எனது மகன் திடீரென சினிமாவில் நடிக்க வேண்டும் என என்னிடம் கேட்டான். நான் உனக்கு எந்த உதவியும் செய்யமாட்டேன் என சொல்லிவிட்டேன். அவனின் திறமையால் வரட்டும்’ என சொல்லியிருந்தார். அனேகமாக அது அவரின் இளையமகன் ரிஷி ராகவேந்தர் தேவா என சொல்லப்படுகிறது. இந்நிலையில், கேரவானில் மகனுடன் ஸ்டைலாக நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘தொடர்ச்சி’ என பதிவிட்டிருக்கிறார்.

    உடல் அமைப்பு, தாடி எல்லாம் பார்ப்பதற்கு பிரபுதேவாவை போலவே இருக்கிறார் அவரின் மகன் ரிஷி ராகவேந்தர் தேவா. இதைப்பார்த்த பலரும் குட்டி பிரபுதேவாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ரிஷி ராகவேந்தர் தேவாவிரைவில் சினிமாவில் நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  • வடிவேலுவை வச்சும் செல்ப் எடுக்கலயே!. பிரபுதேவா நடன நிகழ்ச்சி பல கோடி நஷ்டம்!..

    Prabudeva: 80களில் பல திரைப்படங்களுக்கு நடனமைத்து முன்னணி நடன இயக்குனராக இருந்த சுந்தரத்தின் 2வது மகன்தான் பிரபுதேவா. அப்பா நடனமைத்த சில படங்களில் இவர் நடனமாடியிருக்கிறார். ஒருகட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகராக மாறினார். அப்படி அவர் ஆடியே சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே, சின்ன ராசாவே சிட்டெறும்பு, லாலாக்கு டோல் டப்பிமா போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.

    எனவே, அவரை ஹீரோவாக வைத்து படமெடுக்க இயக்குனர்கள் முன்வந்தனர். இந்து என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தாலும் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த காதலன் படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த படத்தில் பிரபுதேவாவின் நண்பனாக வடிவேலுவும் நடித்திருந்தார். இந்த படத்தில் பிரபுதேவா நடனமாடும்படியே பல பாடல்களையும் அமைத்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

    அதன்பின் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க துவங்கினார். ஒருபக்கம், கமல், ரஜினி, சிரஞ்சீவி போன்ற நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராகவும் வேலை செய்தார். மேலும், விஜய் நடித்த போக்கிரி படம் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதன்பின் சில படங்களை இயக்கினாலும் அவை ஓடவில்லை. சில ஹிந்தி படங்களையும் இயக்கினார்.

    இந்நிலையில்தான் சமீபத்தில் பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வந்த வடிவேலுவை பிரபுதேவா கலாய்க்கும் வீடியோக்களும் வெளியானது. வடிவேலுவின் வாயில் கைவிட்டு ஆட்டியது. அவரின் தலைமுடியை கலைத்துவிட்டது என அலப்பறை செய்தார் பிரபுதேவா.

    ‘ஃபங்சனுக்கு வான்னு கூப்பிட்டு வாய்க்குள்ள விரல் விட்டு ஆட்டுறாரு பிரபு. அவர் எப்பவும் அப்படித்தான். ஷூட்டிங்கிலும் இப்படித்தான் செய்வாரு. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா. அதுல சந்தேகமே இல்லை’ என நிகழ்ச்சி முடிந்த பின் பேசினார் வடிவேலு. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி நஷ்டத்தில் முடிந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

    பிரபுதேவா நடனத்தை பார்க்கலாம் என போனால் அங்கு மார்க்கெட் போன சின்ன சின்ன நடிகர்களை கூட்டிவந்து நடனமாட விட்டிருக்கிறார்கள். பிரபுதேவா 4 பாடலுக்கு மட்டுமே நடனமாடியிருக்கிறார். எனவே, தொலைக்காட்சி உரிமையை யாரும் வாங்கவில்லை. மேலும், டிக்கெட் விலை அதிகம் என்பதால் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு போகவில்லை. மொத்தத்தில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு 4 கோடிக்கும் மேல் நஷ்டம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

  • ஃபிளாப் பட இயக்குனரிடம் மகனை ஒப்படைத்த ஷங்கர்.. இதெல்லாம் சரியா வருமா?….

    Direcor Shankar: ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் ஷங்கர். முதல் படமே அதிக பட்ஜெட் என்பதால் தொடர்ந்து அதிக பட்ஜெட் படங்களையே இயக்க அதுவே அவரின் அடையாளமாக மாறிவிட்டது. ஒருகட்டத்தில் ஷங்கரே நினைத்தாலும் மினிமம் பட்ஜெட்டில் படங்களை இயக்க முடியாது என்கிற நிலை உருவானது.

    இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன், 2.0 என தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களை இயக்கியவர். ரசிகர்கள் இவரை பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்க துவங்கினார்கள். தமிழ் சினிமாவில் கிராபிக்ஸ், வி.எப்.எக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்தியவர் இவர்.

    இப்போது படமெடுக்கும் பல இளம் இயக்குனர்களும் ஷங்கரின் ரசிகர்களாக இருந்தவர்கள்தான். ரஜினியை வைத்து எந்திரன், சிவாஜி, 2.0 போன்ற படங்களை இயக்கினார். கமலை வைத்து இவர் இயக்கிய இந்தியன் படம் இப்போதும் தமிழ் சினிமாவின் முக்கிய படமாக இருக்கிறது. அதேநேரம், கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் போன்ற படங்கள் தோல்வி அடைந்துவிட்டது.

    எனவே, ஷங்கர் டிரெண்டிங்கில் இல்லை. அவரின் ஃபார்முலா இனிமேல் வொர்க் அவுட் ஆகாது என்றெல்லாம் பலரும் பேசி வருகிறார்கள். அவர்களின் வாயை அடைக்கும்படி விரைவில் ஒரு ஹிட் படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் அவரின் வீட்டிலேயே ஒரு ஹீரோ உருவாகிவிட்டார்.

    ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர்தான் அந்த ஹீரோ. இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் அர்ஜித். இந்தியன் 2 புரமோஷன் நிகழ்ச்சியில் அக்கா அதிதி ஷங்கருடன் இணைந்து நடனமும் ஆடியிருந்தார். இவருக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதே ஆசை.

    தான் எடுக்கும் பிரம்மாண்ட கதைகள் மகனுக்கு செட் ஆகாது என்பதால் பிரபுதேவாவிடம் ஒப்படைத்துவிட்டார் ஷங்கர். பிரபுதேவா இயக்கத்தில் அர்ஜித் நடிக்கவுள்ள புதிய படத்தை ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ளார். பிரபுதேவாவை காதலன் படம் மூலம் நடிகராக்கியவர் ஷங்கர். அந்த நன்றி கடனுக்காக இந்த படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும், விஜயை வைத்து போக்கிரி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர். ஹிந்தியில் சல்மான்கான், அக்‌ஷய்குமார் ஆகியோரை வைத்து படம் இயக்கியவர்.

    அதேநேரம், ஒரு நடிகராக பெரிய வெற்றியை கொடுத்தவர் இல்லை பிரபுதேவா. கடந்த பல வருடங்களாகவே அவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களுமே ஃபிளாப்தான். மேலும், கடந்த சில வருடங்களில் அவர் இயக்கிய தமிழ் மற்றும் ஹிந்தி படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது. ஆனாலு,ம் அவரை நம்பி மகனை ஒப்படைத்திருக்கிறார் ஷங்கர்.

  • விஜயுடன் நடிக்க மறுத்த 3 டாப் நடிகர்கள்!.. கடைசியாக நடித்த அந்த நடிகர்!.. இவ்வளவு நடந்திருக்கா!..

    பொதுவாக ஒரு வளர்ந்துவிட்ட ஹீரோ தனியாக நடிக்கவே ஆசைப்படுவார். ஏனெனில், அந்த படத்தின் எல்லா சண்டை காட்சிகளும், பாடல்களும் தனக்கு மட்டுமே அமைய வேண்டும் என நினைப்பார்கள். அதோடு, வெற்றியை யாரோடும் பங்கு போட்டுக்கொள்ள பெரும்பாலான ஹீரோக்கள் விரும்பமாட்டார்கள், கமலும், ரஜினியும் தொடர்ந்து பல வருடங்களாக நடிக்காமல் இருப்பதற்கும் அதுதான் காரணம்.

    மேலும், இன்னொரு நடிகருடன் சேர்ந்து நடிக்கும்போது தனது ரசிகர்களை திருப்திபடுத்தும்படி காட்சிகள் இருக்குமா?. அல்லது அந்த நடிகருக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்குமா? என யோசிப்பார்கள். இதனால்தான் பெரிய நடிகர்கள் இணைந்து நடிப்பது தமிழ் சினிமாவில் மிகவும் குறைவாக இருக்கிறது.

    இதையும் படிங்க: தளபதி 69 படம் டிராப்பா?!.. கோட் முடிஞ்சவுடனே நேரா அரசியலா?!.. என்னதாம்பா நடக்குது!..

    இயக்குனர் பாலா கேட்டுக்கொண்டதால் பிதாமகன் படத்தில் சூர்யாவுடன் நடித்தார் விக்ரம். அதேபோல், மணிரத்னம் இயக்குனர் என்பதால் கார்த்தியுடன் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். வேறு நடிகருடன் அவர் நடிக்கவில்லை. ஆனால், இதே விக்ரம் சினிமாவில் சரியான வாய்ப்பு இல்லாத காலத்தில் அஜித்துடன் உல்லாசம் படத்தில் நடித்தார்.

    விஜய்க்கும், அஜித்துக்கும் இடையேயான போட்டி என்பது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. வளரும் போது இருவரும் ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர். அதன்பின் வஸந்த் இயக்கத்தில் உருவான நேருக்கு பேர் படத்தில் விஜயுடன் இணைந்து அஜித் நடித்தார். 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் சில காரணங்களால் அப்படத்திலிருந்து அஜித் விலகினார்.

    Ajith, Vijay in Nerukku Ner

    அதன்பின் அந்த வேடத்தில் நடிக்க பிரசாந்தை கேட்டார்கள். ஆனால், ஜீன்ஸ் படத்தில் நடித்து கொண்டிருந்ததால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அடுத்து அப்போது நடிகராக பிரபலமாகி வந்த பிரபுதேவாவிடமும் கேட்டார்கள். இன்னொரு நடிகரின் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என அவரும் மறுத்துவிட்டார்.

    அதன்பின்னர்தான் சிவக்குமாரின் மகன் சூர்யாவை அந்த வேஷத்தில் நடிக்க வைத்தார் வஸந்த். இதுதான் சூர்யா அறிமுகமான முதல் படம். விஜயுடன் நடிக்க மறுத்த பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகிய இரண்டு பேரும் இப்போது அதே விஜயுடன் கோட் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.