Tag: pradeep ranganathan

  • சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் எல்லாம் வேண்டாம்!.. யூத் ஹீரோவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!..

    சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் எல்லாம் வேண்டாம்!.. யூத் ஹீரோவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!..

    விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி 400 கோடி வசூல் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு இன்னமும் தனது அடுத்த படத்தை இயக்க முடியாமல் தவித்து வருகிறார். சிவகார்த்திகேயனை வைத்து சயின்ஸ் ஃபிக்‌ஷன் எடுக்கலாம் என அமெரிக்காவுக்கு எல்லாம் போய் வேலை பார்த்தார்.

    ஆனால், பெரிய பட்ஜெட் படம் இப்போதைக்கு வேண்டாம் நான் சேஃப்டி ஜோனில் சேயோன் படம் பண்ணுறேன் என சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் தாய் கிழவி இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்க கிளம்பி விட்டார்.

    துப்பாக்கி கொடுத்த டைரக்டருக்கு டாட்டா காட்டியது தான் மிச்சம். இதற்கு மேல் அவர்கள் இணைந்து பணியாற்றுவார்களா என்பது இப்போதைக்கு சந்தேகம் தான்.

    சிவகார்த்திகேயன் போனால் என்ன அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷனை பிரதீப் ரங்கநாதனை வைத்து பண்ணலாமே என லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் வெற்றிக்கு காத்திருந்த வெங்கட் பிரபுவுக்கு விக்னேஷ் சிவன் பெரிய ஆப்பாக அடித்து விட்டார்.

    இந்நிலையில், சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் என இருவருமே வேண்டாம். யூத் படத்தை இயக்கி 80 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய கென் கருணாஸை வைத்து தனது ஸ்டைலில் இன்னொரு ஜாலியான படத்தைக் கொடுத்து பார்ட்டி கொண்டாடலாம் என வெங்கட் பிரபு முடிவு செய்துவிட்டார் என்கின்றனர். வெற்றிமாறன் படத்தை சீக்கிரமே முடித்து விட்டு கென் கருணாஸ் வெங்கட் பிரபு பக்கம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 3-வது வாரத்தில் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே : மாஸ் காட்டும் வசூல் நிலவரம்

    3-வது வாரத்தில் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே : மாஸ் காட்டும் வசூல் நிலவரம்

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் எல்ஐகே படம் இன்று வெற்றிகரமாக 3-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

    204ம் ஆண்டுகளில் காதல் செய்வதற்குகூட கேட்ஜெட்களின் ஆதிக்கம் வந்துவிடும் என்ற ஒரு கற்பனையான மற்றும் புதுமையான கான்செப்டை மையமாக வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது வழக்கமான ரொமாண்டிக் காமெடி பாணியில் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    தொட்ர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவரும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மற்றும் எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ட்ரெண்டிங்கில் உள்ளன. இப்படம் வெளியாகி கலவையான விமர்சங்களையே பெற்றது. இருப்பினும் வசூலை பொறுத்தமட்டில் அனைவ்ருக்கும் மைழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.

    கோடை விடுமுறை என்பதால், வார நாட்களில் கூட கூட்டம் ஓரளவிற்கு வருவதாக கூறுகிறார்கள். கடந்த இரண்டு வார முடிவில் இப்படம் உலக அளவில் இதுவரை சுமார் ரூ. 50 முதல் 60 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. லாஜிக் மீறல்களைத் தாண்டி, இரண்டரை மணி நேரம் திரையரங்கில் ஜாலியாகச் சிரித்து மகிழலாம் என்ற ரசிகர்களின் விமர்சனமே படத்தினை 3-வது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடச் செய்து வருகிறது.

  • LIK vs Mr X: தமிழ் சினிமாவை காப்பாத்தப்போவது யாரு?.. சார் இங்கே ஒரே பைத்தியமா இருக்காங்க சார்!..

    LIK vs Mr X: தமிழ் சினிமாவை காப்பாத்தப்போவது யாரு?.. சார் இங்கே ஒரே பைத்தியமா இருக்காங்க சார்!..

    ஒரு படம் வெளியானால் இயக்குநர்களை தான் பலரும் பாராட்டுவார்கள். அந்த படத்தில் மற்ற இடங்களில் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுவார்கள். ஆனால், சமீப காலமாக தமிழ் சினிமா தொடர்ந்து டல் அடித்து வரக் காரணமே இயக்குநர்கள் தான் என்கின்றனர்.

    கடந்த வாரம் விக்னேஷ் சிவன் 100 கோடி பட்ஜெட்டில் எடுத்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் இதுவரை இந்தியாவில் வெறும் 35 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. உலகளவில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சனிக்கிழமையான நேற்றும் படத்துக்கு பெரிதாக கூட்டம் வரவில்லை. இந்நிலையில், இந்த வாரம் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக் நடித்த மிஸ்டர் எக்ஸ் படமும் மண்ணைக் கவ்வி விட்டதாக கூறுகின்றனர்.

    பிரதீப் ரங்கநாதனுக்காக இந்த வசூல்: விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களிலேயே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி அதிக வசூல் ஈட்டும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதற்கு காரணம் பிரதீப் ரங்கநாதன் தான். லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து 100 கோடி வசூல் ஈட்டியதாக போஸ்டர் அடித்து வெளியிட்டனர். இந்த படம் 50 கோடியை கடக்கவே படாதபாடு பட்டுவிட்டது. நல்லவேளை 210 கோடி பட்ஜெட்டில் திட்டமிட்டதை போலவே இதே மொக்கை கதையை விக்னேஷ் சிவன் படமாக்கியிருந்தார் என்றால் இன்னமும் ஒரு 100 கோடி இழப்பு தயாரிப்பாளருக்கு ஏற்பட்டு இருக்கும் என்கின்றனர்.

    மிஸ்டர் எக்ஸ் வசூல்: ஆர்யா, கெளதம் கார்த்திக்கு எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நல்லா ஹேண்ட்ஸம் ஆகவும் சிக்ஸ் பேக் வைத்து வாட்ட சாட்டமாகவும் இருக்கின்றனர். ஆனால், இயக்குநர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து தவறு செய்து வருகின்றனர். எஃப்ஐஆர் படமே அதிகபட்சமாக 24 கோடி வசூல் ஈட்டிய நிலையில், பெரிய பட்ஜெட்டில் அவர் இயக்கத்தில் உருவான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் 2 நாட்களில் அதிகபட்சமாக 1.36 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமா இந்த ஏப்ரல் மாதத்தில் ரொம்பவே டல் அடித்து வருகிறது. தனுஷின் கர திரைப்படமாவது கை கொடுக்குமா? அல்லது இட்லி கடை போல கவிழ்த்து விடுமா என தியேட்டர் ஓனர்கள் முதல் திரையுலகமே அச்சத்தில் உள்ளது.

  • விஜய் ரேஞ்சுக்கு உயருவாருன்னு பார்த்தா.. கென் ரேஞ்சுக்கு பிரதீப் ரங்கநாதனை இறக்கிய விக்னேஷ் சிவன்!

    விஜய் ரேஞ்சுக்கு உயருவாருன்னு பார்த்தா.. கென் ரேஞ்சுக்கு பிரதீப் ரங்கநாதனை இறக்கிய விக்னேஷ் சிவன்!

    சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தொடர்ந்து 100 கோடி வசூலை கொடுத்து வந்த பிரதீப் ரங்கநாதனை, அடுத்து விஜய் ரேஞ்சுக்கு உயர்த்துவார் விக்னேஷ் சிவன் என்று பார்த்தால் கென் கருணாஸ் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டாரே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    கடந்த வாரம் வெளியான எல்.ஐ.கே. திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறாத நிலையில், அதனை முன்கூட்டியே உணர்ந்தது போலவே விழாவில் விக்னேஷ் சிவன் உரையாற்றினார். “இந்த படத்தை நான் முழுமையாக என் சொந்த செலவில் தான் தயாரித்தேன். சமூக வலைத்தளங்களில் படத்தைப் பற்றி பலவிதமான கருத்துகள் வெளியிடப்படுகின்றன. இனி இப்படிப் பெரிய செலவுகளை செய்ய என்னிடம் வசதி இல்லை,” என்று அவர் கூறினார்.

    மேலும், தற்போது நிலவி வரும் ‘தம்ப்நெயில் கலாச்சாரம்’ குறித்து அவர் கவலை தெரிவித்தார். “நல்ல விஷயங்களையும் தவறாகச் சொல்லி தான் ஆரம்பிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது. என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பலரும் ஏதாவது பேசுகிறார்கள். அதை பார்த்து மக்கள் நம்பி விடுகிறார்கள்,” என்றும் கூறினார்.

    அதோடு, “இன்னும் சிலருக்கு நான் பணம் வழங்க வேண்டியுள்ளது. அதனால், இந்த படத்திற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று ரசிகர்களிடம் அவர் வேண்டுகோள் வைத்தார்.

    திரைப்பட விமர்சனங்களைப் பற்றியும் அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார். “நான் படம் எடுத்தால், ‘நீ செய்த கேசரி ஏன் காரமாக இருக்கிறது? நீ வைத்த கறி குழம்பு ஏன் இனிப்பாக இல்லை?’ என்று கேட்பது போல கதையையும் குறை கூறுகிறார்கள். என்னால் ஒரு அளவிற்கு தான் படம் எடுக்க முடியும். மற்றவர்கள் போல் மிகப் பிரம்மாண்டமாக எடுக்க முடியாது,” என்று அவர் தெரிவித்தார்.

    லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு, க்ரித்தி ஷெட்டி, கெளரி கிஷன், மாளவிகா என ஏகப்பட்ட நடிகர்களை தாண்டி அனிருத் இசை, ரவி வர்மன் ஒளிப்பதிவு, நயன்தாரா 100 கோடி வரை செலவு செய்து எடுக்க அனுமதித்த நிலையில், படத்தை சொதப்பி விட்டார் விக்னேஷ் சிவன் என்றும் 20 கோடி செலவில் படங்களை எடுத்து 100 கோடி வசூல் ஈட்டி வந்த பிரதீப் ரங்கநாதனை 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்து 50 கோடி நாயகனாக மாற்றிவிட்டாரே என ட்ரோல் செய்து வருகின்றனர்.

  • தமிழ் புத்தாண்டுக்காவது வசூல் வேட்டை நடத்தியதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி?.. LIK 5 நாள் வசூல் இதோ!..

    தமிழ் புத்தாண்டுக்காவது வசூல் வேட்டை நடத்தியதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி?.. LIK 5 நாள் வசூல் இதோ!..

    நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சுரன்ஸ் கம்பெனி படம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி, தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ஐந்தாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து பார்க்கலாம். முதல் நாளை விட தமிழ் புத்தாண்டு தினமான நேற்று அதிக வசூல் அள்ளியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை நயன்தாரா தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

    இந்த படம் அறிவியல், காதல் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றை இணைத்து, தொழில்நுட்ப வளர்ச்சியால் இயற்கையான காதலை அளவிட முடியுமா என்ற கேள்வியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இந்த புதிய கதைக்களத்தை சுவாரஸ்யமாக திரையில் கொண்டு வந்துள்ளார்.

    முன்னதாக லவ் டுடே, டிராகன், டியுட் போன்ற வெற்றி படத்தின் மூலம் 100 கோடி வசூலை கடந்த பிரதீப் ரங்கநாதன், இந்த படத்திலும் அதே சாதனையை நிகழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தயாரிப்பாளர்களும் அவரை வைத்து படம் எடுத்தால் 100 கோடி வசூல் எளிதாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

    ஆனால், தற்போது இந்த படம் வெளியான 5 நாட்களில் சுமார் 44 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. ஆரம்ப வரவேற்பு இருந்தாலும், 100 கோடி கிளப்பை எட்டுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. வரும் நாட்களில் படம் எப்படி செயல்படுகிறது என்பதே இதை தீர்மானிக்கும்.

    விக்னேஷ் சிவனை பொறுத்தவரையில் படம் வெளியானதே தனக்கு மிகப்பெரிய வெற்றி எனக் கூறியுள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யவில்லை என்றால் தோல்விப் படமாகவே மாறும் என்கின்றனர்.

  • நயன் கம்மியா நடிங்க!. கலாய்த்த பிரதீப் ரங்கநாதன்!.. விக்கி பழ் வாங்கிட்டாரோ!…

    நயன் கம்மியா நடிங்க!. கலாய்த்த பிரதீப் ரங்கநாதன்!.. விக்கி பழ் வாங்கிட்டாரோ!…

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் எல்.ஐ.கே. பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி வெற்றி.

    அதேபோல், அவர் நடித்து இயக்கிய லவ் டுடே படம் சூப்பர் ஹிட். அதன்பின் அவர் மற்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வெளியான டிராகன், டியூட் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்து 100 கோடி வசூலை அள்ளியது. இதையடுத்து, கோலிவுட்டின் கவனிக்கத்தக்க நடிகராக பிரதீப் ரங்கநாதன் மாறினார்.

    இந்நிலையில்தான், பிரதீப்பின் நான்காவது படமாக வெளியான எல்.ஐ.கே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதில் பெரும்பாலும் நெகட்டிவாக இருக்கிறது. பிரதீப்பின் முந்தைய மூன்று படங்களுக்கும் கிடைத்த வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. எனவே, அந்த அளவு வசூலை இப்படம் பெறவில்லை என்கிறார்கள்..

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்து நானும் ரவுடிதான் படம் வெளியான போது ட்விட்டரில் இந்த படம் பற்றி பதிவிட்ட பிரதீப் ரங்கநாதன் ‘இது என்னுடைய ஸ்டைல் திரைப்படம்.. விஜய் சேதுபதி வசனம் பேசும் ஸ்டைல்.. பார்த்திபனின் புதுமையான நடிப்பு.. அனிருத்தின் இசை.. விக்னேஷ் சிவன் ஸ்டைல்’ என பதிவிட்டிருந்தார்..

    மேலும் ‘நயன் ப்ளீஸ் கொஞ்சம் கம்மியா நடிங்க’ எனவும் நக்கலடித்திருந்தார். தற்போது சிலர் இந்த ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து ‘ஒருவேளை பிரதீப் பழி வாங்கிட்டாரா? இல்லை பிரதீப்பை விக்னேஸ்வரன் பழிவாங்கிட்டாரா?’ என பதிவிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

  • LIK Box Office Day 2: படக்குழுவினரை சந்தோசத்தில் தள்ளிய 2ம் நாள் வசூல் நிலவரம்

    LIK Box Office Day 2: படக்குழுவினரை சந்தோசத்தில் தள்ளிய 2ம் நாள் வசூல் நிலவரம்

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் எல்ஐகே. லவ்டுடே, டிராகன், ட்யூட் என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த பிரதீப் ரங்கனாதனின் 4வது படம் என்பதால ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர்.

    இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, கவுதம் வாசுதேவ் மேனன், சீமான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் நயன்தாரவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

    2040ல் ஆண்டு காலகட்டங்களில் ஒரு கேட்ஜெட் இளஞர்களின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் விளையாடுகிறது என்பதை வைத்து நடைபெறும் சம்பவங்கள் அடிப்படையில் இக்கதை எடுக்கப்பட்டுள்ளது. நல்ல கதை என்றாலும் சுவாரஸ்யமில்லாத திரைக்கதையால் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் எல்ஐகே படத்தின் 2ம் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பபடி சாக்நில்க் இணையதளம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, எல்ஐகே திரைப்படம் வெளியான இரண்டாவது நாளான நேற்று மட்டும் சுமார் 3316 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. நேற்று ஒரு நாளில் மட்டும் இந்திய அளவில் 7.70 கோடி ரூபாய் வசூலித்து அசத்தியுள்ளது. முதல் நாள் வசூலையும் சேர்த்து, ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு நாட்களில் இந்த படம் 17.08 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வலுவான நிலையில் உள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் கலவையான விமர்சனக்களை பெற்றாலும் வசூலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • பிரதீப் ரங்கநாதனால் மீண்டும் வைரலாகும் கனா காணும் காலங்கள் ஜோ!! 

    பிரதீப் ரங்கநாதனால் மீண்டும் வைரலாகும் கனா காணும் காலங்கள் ஜோ!! 

    KKK Jo: 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த சீரியல் என ஒரு லிஸ்ட் கேட்டால் கண்டிப்பாக அதில் கனா காணும் காலங்கள் பள்ளி கதை இடம்பெறும் என்பதில் துளி சந்தேகமும் இல்லை. அதிலிருந்த பெரும்பாலான கேரக்டர்கள் ரசிகர் மனதில் இன்றும் இன்னுமும் இடம் பிடித்து வருகின்றனர்.

    இதில் ஒரு முக்கிய கேரக்டராக வந்தது ஜோ. அதில் நடித்தவர் யுதன். காமெடி ரோலில் நடித்தாலும் அவருடைய கேரக்டர் பலரிடமும் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது. அதை தொடர்ந்து சினிமாவிலும் காதல் சொல்ல வந்தேன் பட்டாளம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

     ஆனால் தொடர்ந்து நடிப்பிலிருந்து விலகி தற்போது சோசியல் மீடியாக்களில் மட்டுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரை தற்போது  சமூக வலைத்தளம் மீண்டும் வலை போட்டு தேட தொடங்கியுள்ளதற்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் காரணமாக இருக்கிறார். தன்னுடைய அடுத்த படமான எல் ஐ கே பட நிகழ்ச்சியில் பேசியவர் என்னுடைய ஆரம்ப காலங்களில் கனா காணும் காலங்கள் மிகப் பிரபலமாக இருந்தது.

    அதில் நடித்த ஜோவை நாங்கள் இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக் கொண்டோம். நான் இயக்குனராக ஆசைப்பட்டு பரபரப்பாக இருந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் ரெஸ்டாரண்டில் எஸ் ஜே சூர்யாவை சந்தித்தேன். அவரிடம் இயக்குனராக வேண்டும் என வாய்ப்பு கேட்டபோது ப்ரொபைல் கொடுத்து விட்டு செல்லுங்கள் பார்த்துவிட்டு சொல்கிறேன் என பதில் கூறியிருந்தார்.

    பெரிய மறுப்பு இல்லை என்றாலும் அது எனக்கு பெரிய அளவில் மன உளைச்சலை கொடுத்தது. நானும் அதை நினைத்துக் கொண்டு கீழே இறங்கியபோது யுதனை நேரில் சந்தித்தேன். அவரிடம் என்ன பேசினேன் என தற்போது எனக்கு ஞாபகம் இல்லை.

     ஆனால் அவர் எனக்கு பெரிய அளவில் ஆறுதல் கொடுத்ததால் தான் அதை மீண்டும் என்னுடைய உழைப்பில் காட்டி நான் உயர்வதற்கு காரணமாக இருந்ததாக குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் யுதன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னை இன்னும் பல ஞாபகம் வைத்திருப்பதற்கு நன்றி எனக்கூறி பதிவிட்டு இருக்கிறார்.

  • பிரதீப் ரங்கநாதனின் LIK படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!

    பிரதீப் ரங்கநாதனின் LIK படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், மிஸ்கின், கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, மாளவிகா, ஆனந்த்ராஜ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் இன்று ஒருவழியாக வெளியான நிலையில், தாறுமாறாக உள்ளதா? அல்லது பிரதீப் ரங்கநாதனின் அடுத்த கிரிஞ்ச் குடோனா என்பது குறித்த விமர்சனத்தை தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

    விக்னேஷ் சிவன் மொக்கை பீஸ் என அஜித் நினைத்து ஒதுங்கிய நிலையில், விடாமுயற்சி எனும் படத்தை மகிழ் திருமேனியை வைத்து எடுத்துக் கொடுத்து ரசிகர்களை அழ வைத்தது தான் மிச்சம். கண்டிப்பாக அஜித் குமார் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தால் குட் பேட் அக்லி படத்தை விட ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருப்பார் என்றே தெரிகிறது.

    டிராகன் படம் அளவுக்கு எல்ஐகே இல்லை என்றாலும் டியூட் படத்தை விட ரொம்பவே பெட்டராக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்

    என்னதான் உலக நாயகன் கமல்ஹாசன் ஹேராம், ஆளவந்தான், விருமாண்டி என படம் பண்ணினாலும் பாக்ஸ் ஆபீஸில் ஓடியது ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா தான். அதே பாணியை தான் பிரதீப் ரங்கநாதனும் பிடித்துள்ளார். ரஜினிகாந்தை தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன் என பலரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் பக்காவாக சேர் போட்டு அமர்ந்துவிட்டார்.

    சிவகார்த்திகேயனும் கொஞ்சம் ரூட்டை மாற்றி நடுவில் புரட்சி கருத்தை எல்லாம் பேசி போர் அடித்து வரும் நிலையில், ஜென் ஸி கிட்ஸ்களை கவரும் விதமாக லேசான கருத்துடன் ஜாலியான படத்தை லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார்.

    சீமான் வரும் காட்சிகள், எஸ்.ஜே. சூர்யா வரும் காட்சிகள் எல்லாமே தியேட்டரே தெறிக்கும் காட்சிகளாக எங்கேயும் காம்ப்ரமைஸ் பண்ணாமல் விக்னேஷ் சிவன் இயக்கிய விதம் சிறப்பு.

    LIK ஆப் மூலம் இன்னார்க்கு இன்னார் என்பதை கண்டு பிடிக்கும் லவ் மீட்டரை எஸ்.ஜே. சூர்யா அறிமுகப்படுத்த பிரதீப் ரங்கநாதன் – கீர்த்தி ஷெட்டி காதலை அது பிரிக்கிறது. ஆப்பை விட மனித இதயத்துக்கு வேல்யூ அதிகம் என்பதை ஹீரோ நிரூபிப்பதே படத்தின் கதை.

    பிரதீப் ரங்கநாதன் படத்தை ஜாலியாக குழந்தைகள் என்ஜாய் செய்யும் விதமாக விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தாலும், கெளரி கிஷன் உடனான லிப் லாக் காட்சி மற்றும் ஹீரோயின் அசிங்கமாக பேசும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

    எல்ஐகே ரேட்டிங்: 3.25/5.

  • சீமானின் சேட்டை வாய்ஸ்.. போனை தூக்கிப் போட சொல்லும் பிரதீப் ரங்கநாதன்.. ’வைப் வாஸி’ வேலைக்கு ஆகுமா?

    சீமானின் சேட்டை வாய்ஸ்.. போனை தூக்கிப் போட சொல்லும் பிரதீப் ரங்கநாதன்.. ’வைப் வாஸி’ வேலைக்கு ஆகுமா?

    லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து 100 கோடி பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ.கே படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இன்று அப்படத்தின் புதிய பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

    நடிகை நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள லவ் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கீர்த்தி ஷெட்டி, சீமான், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் சமீபத்தில் எல்.ஐ.கே படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அதில் விக்னேஷ் சிவன், நயன்தாரா, பிரதீப் ரங்கநாதன், அனிருத் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். அதில் பேசிய பிரதீப் என்னுடைய படத்தின் சுமாரான வசூலே 100 கோடி என்று அனைவரும் ஃபிக்ஸ் செய்துவிட்டனர். அப்படி என் படம் வசூல் செய்யாவிட்டால் தோல்வி படமாக பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் எனக்கு படத்தின் வசூல் முக்கியம் இல்லை மக்களுக்கு படம் பிடித்தால் போதும் என்று பேசியிருந்தார்.

    மேலும், எல்.ஐ.கே படத்தின் அனிருத் இசையில் ’வைப் வாசி’ பாடல் வெளியாகி சமூகவலைத்தளங்களை கலக்கிவருகிறது. டியூட் படத்தின் ஊறும் பிளட் பாடல் ரீச்சான அளவிற்கு இப்பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெருமா என்பதை காத்திருந்து பார்க்கலாம். அனிருத் பாடியுள்ள இப்பாடலில் லிரிக்ஸை விட சீமானின் டைலாக் தான் அதிகமாக உள்ளதாக சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    2 வருஷத்துக்கு முன்னாடியே வெளியான தீமா, 10 வருஷத்துக்கு முன்னாடி வெளியான எனக்கென யாரும் இல்லையே, போன வருஷம் வெளியான பட்டும்மா, சமீபத்தில் வெளியான அடாவடி பாடல்களுடன் இந்த பாடல்களும் ரசிகர்களின் ரிங்டோன் லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.