Tag: radhika

  • நான் அப்படி பேசியிருக்கக் கூடாது.. ஏழரை நாட்டுச்சனி விவகாரம் பற்றி பப்லு கொடுத்த விளக்கம்

    சில நாட்களுக்கு முன்பு ஒரு மேடையில் வாணி ராணி சீரியல் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி திரையில் காட்ட அதை பார்த்ததும் நடிகர் பப்லு இது வேண்டாம் ஏழரை நாட்டு சனி என சொல்லி அந்த புகைப்படத்தை பற்றி சொல்ல மறுத்துவிட்டார். அதை பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் விளக்கமாக கூறியிருக்கிறார். என்னுடைய கெரியரில் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் என்று சொன்னால் அரசி என்ற தொடர் அதன் பிறகு வாணி ராணி என்ற தொடர். இந்த இரண்டு தொடர்களை தான் சொல்லுவேன். என்னுடைய பெர்ஃபார்மன்சை வெளிப்படுத்திய நிறுவனமும் ரேடான் நிறுவனம் தான்.

    வாணி ராணி சீரியலில் என்னை அழைத்து ஏன் சார் ஓவரா நடிக்கிறீங்க? அந்த சீனில் ஏன் ஓவரா பண்ணுறீங்க? மேடம் திட்டுறாங்க என கூறினார்கள். அதனால் கண்ட்ரோல் பண்ணி திட்டு வாங்காமல் நடிக்கணும். அப்படின்னா திட்டு வாங்காமல் நடிக்க முடியுமா என நானே கண்ட்ரோல் பண்ணி ட்ரை பண்ணேன். வாணி ராணியில் என்னை ஃப்ரீயாக விட்டிருந்தால் வேறு மாதிரி பண்ணி இருப்பேன். ஆனால் ஓவரா பண்ணா திட்டுவாங்களே என நினைத்து நினைத்து நினைத்தது தான் அந்த சீரியல் நடிப்புடா.

    என்ன சார் நீங்க? நூறு ரூபா கொடுத்தா நான் இந்த மாதிரி நடிப்பேன். சின்ன கேமரானா வேறு மாதிரி நடிப்பேன். பெரிய கேமரானா வேற மாதிரி நடிப்பேன். அப்படி எல்லாம் இல்லாமல் இதற்கு இவ்வளவு கொடுத்தால் போதும் என கணக்கு போட்டு நடித்தது தான் வாணி ராணி சீரியல். ஆனால் அன்று நான் மேடையில் பேசியது என்னுடைய ஆதங்கம் தான். என்னை பொறுத்த வரைக்கும் இப்போ நாம் நன்றாக இருக்கிறோம். அதனால் நல்ல விஷயங்களை பேசுவோம். கெட்ட விஷயங்களை எல்லாம் நாம் நினைக்க வேண்டாம்.

    அதையெல்லாம் தாண்டி வந்து விட்டோம். அப்படி இருக்கும் பொழுது இந்த புகைப்படத்தை காட்டுனீங்க. அதனால் என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. கொட்டி விட்டேன். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நல்ல விஷயங்கள் எவ்வளவு பேசினாலும் வைரல் ஆகாது. கெட்ட விஷயங்கள் வைரல் ஆகின்றன. என்ன சார் ராதிகா மேடத்தை பற்றி இப்படி பேசிட்டீங்கனு கேப்பாங்க. இதுதான் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது என நிறைய பேரு கேட்டால் அப்படியா சார் வைரல் ஆயிருச்சா அப்படின்னு நான் நினைப்பேன்.

    ஆனால் அந்த புகைப்படத்தை பார்த்து நல்ல ஒரு அனுபவம். நல்ல ஒரு தொடர் என பொய் பேசி இருக்கலாம். ஆனால் அது எனக்கு வராது. அதிலிருந்து எல்லா பேட்டிகளிலும் இதைப் பற்றி தான் கேட்கிறார்கள். ஆமா சார் சொல்லிட்டேன். அவங்க அப்படித்தான் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதே கேள்வியை ராதிகாவிடம் போய் கேட்டால் அதற்கு அவருடைய பதில் ஆமாம் அவனை நான் செருப்பால அடிச்சேன். கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுனேன். அதை அவங்க பெருமையா தான் எடுத்துப்பார்கள் .இதையெல்லாம் விட்டு அப்படியா வைரல் ஆகிடுச்சா என்ன பத்தி தப்பா பேசிட்டானா என அவர்கள் hurt ஆக மாட்டார்கள். அது ராதிகாவுடைய பர்சனாலிட்டி. ஆனால் நான் இதை சொல்லி இருக்கக் கூடாது தான். பேசி இருக்க கூடாது தான் .சொல்லிட்டேன் என பப்லு கூறி இருக்கிறார்.

  • நம்பி வந்ததேன்! 18 லட்சம் பணத்தை ஏமாற்றிய ராதிகா.. புலம்பும் நடிகை..

    80களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ராதிகா. ஒரு பக்கம் பழம்பெரும் நடிகரான எம்.ஆர். ராதாவின் மகள் என்று பேர் இருந்தாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் நடிப்பு இளவரசி என்ற பெயரை தனதாக்கிக் கொண்டார். குறிப்பாக கிழக்கு சீமையிலே திரைப்படம் ராதிகாவின் கெரியரை உச்சத்திற்கு கொண்டு சென்ற படமாக அமைந்தது. அதை போல் ரஜினி படத்தில் இட்லி கொடுப்பது மாதிரியான காமெடி காட்சியிலும் பட்டையை கிளப்பியிருப்பார்.

    செண்டிமெண்ட்டா? காமெடியா? ரொமாண்டிக்கா? எந்த ஐட்டம் வேண்டும்? எல்லாமே ராதிகாவிடம் அத்துப்புடி. நடிகையாக பல ஆண்டுகள் சர்வே செய்து வந்த ராதிகா அடுத்து தயாரிப்பிலும் களமிறங்கினார். குறிப்பாக தன்னுடைய ராடன் நிறுவனம் மூலம் ஏராளமான சின்னத்திரை தொடர்களை தயாரித்தார். அவருடைய தயாரிப்பில் பல சீரியல்கள் வெற்றித்தொடர்களாக மாறின.

    இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர் ராதிகாவின் சீரியலில் நடிக்க அந்த சீரியலில் நடித்ததற்காக அந்த நடிகைக்கு தர வேண்டிய 18 லட்சம் சம்பளத்தை இன்னும் கொடுக்கவில்லையாம். இதை பற்றி ஒரு பேட்டியில் அந்த நடிகை பேசியிருக்கிறார். அவர் வேறுயாருமில்லை. பிரபல குணச்சித்திர நடிகை விஜி சந்திரசேகர். பெரும்பாலான படங்களில் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

    முதல் மரியாதை படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக வருவார். சமீபத்தில் கூட மாமன் திரைப்படத்தில் ராஜ்கிரணுக்கு இணையாக நடித்திருப்பார். இவர்தான் ராதிகாவை பற்றி இப்படி பேசியிருக்கிறார். அதாவது ராதிகா நடித்துக் கொண்டிருந்த ஒரு சீரியலின் நேரம் மாற்றப்பட்டதாம். அதனால் அந்த சீரியலில் ராதிகாவால் நடிக்க முடியவில்லையாம். அவருக்கு பதிலாக விஜி சந்திரசேகரை நடிக்க சொல்லியிருக்கிறார்கள்.

    முதலில் விஜி முடியாது என சொல்லியிருக்கிறார். எனக்காக நடிக்க கூடாதா என ராதிகா தரப்பில் கேட்க ராதிகாவுக்காக நடிக்க ஒப்புக் கொண்டாராம். சரியாக ஒரு மாதம் தான் அந்த சீரியலை மேலும் தொடர முடியாத சூழ்நிலை. அதுதான் கடைசி சூட்டிங் என தெரியாமலேயே விஜி சந்திரசேகர் சூட்டிங்கிற்காக சென்றிருக்கிறார். ஆனால் மற்ற துணை நடிகர்களுக்கெல்லாம் இதுதான் கடைசி சூட்டிங் என தெரிந்திருக்கிறது.

    viji

    viji

    அன்று முடிந்ததும் அந்த சீரியலையே அப்படியே நிறுத்திவிட்டார்களாம். இதில் விஜிக்கு கொடுக்க வேண்டிய 18 லட்சம் பாக்கி இருக்கிறதாம். இப்போ தருகிறேன்.. அப்போ தருகிறேன் என இதுவரை கொடுக்கவில்லையாம். கர்மா என ஒன்று இருக்கிறது என விஜி பொறுமையாக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்.

  • ஹீல்ஸ் போட்டு வந்த ராதிகா.. ராத்திரியே பொட்டிய தூக்கிட்டு கிளம்பிட்டாங்க! ஏன்னு தெரியுமா?

    முன்னணி நடிகை: 80களில் தன்னுடைய நடிப்பாலும் சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமான ராதிகா முதல் படத்திலேயே தன்னுடைய அற்புதமான நடிப்பால் தமிழ் ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்தார். இவரை இந்த சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது பாரதிராஜா .ராதிகா எப்படி சினிமாவிற்குள் வந்தார்? கிழக்கே போகும் ரயில் படத்தில் ஹீரோயின் ஆனது எப்படி என்பதை பற்றி பாரதிராஜா பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். அது மிகவும் சுவாரஸ்யமானது.

    இவர் ஹீரோயினா?: இந்த படத்தில் பாக்கியராஜ் நடித்திருப்பார். முதலில் ஹீரோயினாக யாரை போடலாம் என தேடிக் கொண்டிருந்த பொழுது ராதிகாவை பிடித்து படப்பிடிப்பில் வந்த நிறுத்தி இருக்கிறார் பாரதிராஜா. லண்டனில் படித்து அப்பொழுதுதான் சென்னைக்கு வந்திருந்தார் ராதிகா. ஆரம்பத்தில் கருமையான நிறம் கொண்டவர். குண்டான உடல் எடையும் கொண்டவர். இவரை பார்த்ததும் பாக்கியராஜ் இவரா இந்த படத்திற்கு ஹீரோயின் என நக்கலாக கேட்டாராம்.

    லண்டன் ரிட்டர்ன்: அனைவருக்கும் இப்படி ஒரு ஹீரோயினா என ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கிறது .ஆனால் அந்த படத்தில் அவருடைய நடிப்பு எந்த அளவுக்கு மிரட்டியது என அதன் பிறகு தான் அனைவருக்கும் புரிந்தது .அந்த படத்திற்கு நடனம் அமைத்துக் கொடுத்தவர் புலியூர் சரோஜா. அதில் ஒரு பாடலில் ராதிகா பரதநாட்டியம் உடை அணிந்து ஆடுவது போல படமாக்கி இருப்பார்கள். லண்டனில் இருந்து வந்தவர் என்பதால் மிகவும் ஸ்டைலாக அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ் செருப்புடன் வந்து இறங்கி இருக்கிறார்.

    படப்பிடிப்பில் இருந்து கிளம்பிய ராதிகா:ஆனால் அந்த பாடலில் நடனத்திற்கான பயிற்சி கொடுத்த போது அவருடைய கால்கள் மிகவும் வலித்து விட்டதாம் .அதனால் அன்று இரவே தன்னுடைய அம்மாவையும் அழைத்துக் கொண்டு, தான் கொண்டு வந்த பெட்டியையும் எடுத்துக்கொண்டு நான் திரும்பிப் போகிறேன் என கிளம்பி விட்டாராம் ராதிகா. போனவரை திரும்பி அழைத்து வந்து புலியூர் சரோஜா இந்த நடனத்திற்கான காஸ்ட்யூம் டிரஸ் இதுதான் என பரதநாட்டியம் உடையை காட்டி இருக்கிறார்.

    அதை பார்த்ததுமே ராதிகாவுக்கு பிடித்து விட்டதாம். சரி நான் ஆடுகிறேன் என சொல்லி இருக்கிறார். அதன் பிறகு ராதிகாவின் அம்மா அவருடைய காலுக்கு தைலம் எல்லாம் தேய்த்து அவருடைய காலை எல்லாம் பிடித்து விட்டு அப்படி தான் அந்த பாடல் காட்சியை படமாக்கினோம் என புலியூர் சரோஜா கூறினார். அதன் பிறகு ராதிகா இந்த தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட ஒரு நடிகையாக மாறினார் என்பது அனைவருக்குமே தெரியும் .

    ரஜினி கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து மக்கள் மத்தியில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். நடிப்பின் இளவரசி என்று அவரை அழைக்கின்றனர் .சமீபகாலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக தான் ராதிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பாக்கியராஜை இங்கிலீஷ்ல கண்டபடி திட்டிய நடிகை… அப்புறம் நடந்தது தான் விசேஷம்!

    நடிகர் பாக்கியராஜ் உடன் பணியாற்றிய போது நடந்த சுவையான அனுபவங்களை நடிகை ராதிகா பகிர்ந்து கொண்டார். அப்போது பாக்கியராஜ், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தார். அந்த சமயம் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா அறிமுகம் ஆகிறார். அப்போது என்ன நடந்ததுன்னு பாருங்க.

    ரொம்ப திமிர் பிடிச்ச பொண்ணு: பாக்கியராஜ் சார் முதல்ல அசோசியேட்டா இருந்தப்ப எனக்கு டயலாக் சொல்லிக் கொடுப்பார். நான் எங்கேயோ பார்த்துக்கிட்டு இருப்பேன். உடனே பாரதிராஜா சாருக்கிட்ட ‘ரொம்ப திமிர் பிடிச்ச பொண்ணு சார்’னு கம்ப்ளைண்ட் பண்ணுவாரு. ‘இதுமாதிரி இந்தப் பொண்ணு சொல்ற பேச்சைக் கேட்குறது இல்ல. ரொம்ப மோசம் சார்’னு சொன்ன உடனே அவர் கூப்பிடுவாரு.

    ஞாபக சக்தி அதிகம்: ‘என்ன சொல்ற பேச்சைக் கேட்க மாட்டேங்கறீயாமே. டயலாக் சொல்லச் சொன்னா சொல்ல மாட்டேங்கறீயாமே, ராஜன்?’ சொன்னான்னு சொல்வாரு. ‘இல்ல சார். அது பொய் சொல்லுது’ன்னு சொல்வேன். ‘அப்ப டயலாக் சொல்லு’ன்னு சொல்வார். எனக்கு வந்து ஞாபக சக்தி அதிகம்.

    அவர் எழுதுன டயலாக் இது. ‘கையைக் கை தூக்கி கை மேல வச்சித் திங்குமாம் கை. கைகார மகன் கண்டுபிடிக்குன்னா கையைத் தூக்கிட்டு ஓடுமாம் கை. அது என்ன கை? சொல்லடி ஆத்தா. இதை மட்டும் சரியா சொல்லிட்டன்னா எட்டுக்கட்டு வெத்தலை, பட்டினம்பாக்கமும், மதுரை சீவலும் வாங்கித் தர்ரேன்’னு சொன்னேன். அதுக்கு அப்புறம் எனக்கு ஒரே வீராப்பு வந்துடுச்சு.

    இங்கிலீஷ்ல திட்டிட்டேன்: நான் இங்கிலீஷ்ல இவரைப் பயங்கரமா திட்டிட்டேன். எனக்கு ஒரே பாவமாப் போச்சு. அப்புறம் நேரா போய் ‘சாரி ராஜன். நான் உங்களை இங்கிலீஷ்ல திட்டிட்டேன் ராஜன்’னு சொன்னேன். ‘பரவாயில்ல. பரவாயில்ல. எனக்கு இங்கிலீஷ் புரியல’ன்னுட்டாரு. அதுக்கு பாக்கியராஜ் சொன்னது இதுதான். ‘எங்க டைரக்டருக்கிட்டேயே சொல்வேன். அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்துருக்குன்னு சொல்வாங்க. அதுக்குக் கரெக்டான உதாரணம் இதுதான்யா’ன்னு என்றார் பாக்கியராஜ்.

  • கமலுடன் நடிக்க மறுத்ததால் நிறைய படங்களில் மறுக்கப்பட்டேன்… பிரபல நடிகை சொன்ன ஷாக்

    Kamalhassan: ஏற்கனவே மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அதிகம் இருப்பதாக ஹேமா கமிட்டியின் அறிக்கை கசிந்த நிலையில் மற்ற மொழி சினிமா துறையில் இருக்கும் சில ரகசியங்கள் தற்போது உடைந்து வருகிறது.

    சினிமா என்றாலே பெண்களுக்கு பயம் என்னும் நிலைமை தற்போது பரவலாக மாறியிருக்கிறது. அதற்கு காரணம் டிஜிட்டல் மீடியாக்கள் பெரிதாகி பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை எப்படியாவது வெளியுலகத்தில் சொல்லி விடுவதால் உச்சத்தில் இருக்கும் பிரபலங்கள் தங்கள் கொட்டத்தை கொஞ்சம் அடக்கி கொண்டிருக்கின்றனர்.

    இதையும் படிங்க: எஸ்.பி.பி பாடததால் கிடைத்த பாட்டு!.. மலேசியா வாசுதேவனின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்!…

    ஆனால் சில காலம் முன்னர் நடிகைக்கு நடந்த பாலியல் அத்துமீறல் மலையாள சினிமாவையே உலுக்கியது. இதைத்தொடர்ந்து, ஹேமா கமிட்டி உருவாக்கப்பட்டது. பல நாள் விசாரணைக்கு பின்னர் அந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது வெளியிடப்படாமல் இருந்த நிலையில் சில விஷயங்கள் மட்டும் கசிந்து இருக்கிறது.

    radhika

    இதை தொடர்ந்து அம்மா என்னும் மலையாள நடிகர் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் பதவி விலகினர். இதைத்தொடர்ந்து நடிகைகள் தங்களது நடந்த பிரச்சனைகளை தொடர்ச்சியாக இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இதில் பல பிரபல நடிகர்கள் சிக்கி இருப்பது தான் அதிர்ச்சியான தகவல்.

    இதையும் படிங்க: ஆரம்பிச்சாச்சு லோகேஷின் எல்சியூ! ஆனா அதுல ஒரு சின்ன ட்விஸ்ட்.. கூலிதானே நினைக்கீங்க

    அதற்கு பயந்து கொண்டே அவருடன் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்தேன். என்னைப் போன்ற சில நடிகைகளும் பயந்து கொண்டு அவருடன் நடிக்க மறுத்து வந்தனர். நான் மறுப்பு சொன்னவுடன் சினிமாவில் நடிக்க எனக்கு பல நாட்களாக வாய்ப்புகளே இல்லாமல் இருந்தது என குறிப்பிட்டு இருக்கிறார்.  தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • படுத்துக்கிடந்து எச்சில் துப்பினது யாரு? ராதிகாவைப் பொளந்து கட்டிய பயில்வான்!

    சமீபத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம் பற்றிய பேச்சு தான். மலையாளத் திரையுலகில் நடந்த அந்த விஷயத்திற்காக அமைக்கப்பட்டது ஹேமா கமிட்டி. இந்த அறிக்கை தான் இவ்வளவு மேட்டரையும் பேச வைத்துள்ளது.

    Also read: மம்மூட்டி வச்சு வொர்க் அவுட் ஆகல.. நயன் வந்ததும் ஹைப் ஏறிருச்சு! அதான் லேடி சூப்பர்ஸ்டார்

    கேரளாவில் கொண்டு வந்த ஹேமா கமிட்டி பற்றி நிருபர் கேட்கையில் பலமாக சிரித்தார் பயில்வான் ரங்கநாதன். இவர் தொடர்ந்து பேசுகிறார். இவ்ளோ பெரிய மேட்டரைப் பேசுறீங்க. நான் ஏன் சிரிக்கிறேன்னு தெரியுதா? இந்த ஹேமா கமிட்டில இடம்பெற்று இருக்கிறவர் நடிகை சாரதா.

    இவங்க தெலுங்கானால எம்பியா தேர்ந்தெடுக்கப்பட்டாங்க. இவங்க நேத்து பேட்டி கொடுத்துருக்காங்க. 2 வருஷமாச்சுங்க. ஒண்ணும் நடக்காது. இது ஒரு ஷோ அவ்வளவு தான். இதைப் பத்திப் பேசாதீங்க. திரும்பவும் வயநாடு இயல்பு நிலைக்குத் திரும்ப நடவடிக்கை எடுங்கன்னு சொன்னாங்க.

    ஹேமா கமிட்டி அறிக்கைக் கொடுத்த உடனே எல்லாரையும் பிடிச்சி தூக்குல போட்டுருவாங்களா? இது இப்போ திடீர்னு ஏன் வெளியிட்டாங்கன்னா வயநாடு நிலச்சரிவு மேட்டரை மறைக்க. அந்தப் பேச்சை எல்லாம் திசை திருப்பத் தான்.

    ராதிகா தான் பாலியல் பலாத்காரத்தைப் பத்தி சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க நாக்குல ஏழரை சனி புகுந்து விட்டது. கேரளா சூட்டிங்ல கேரவன்ல நடந்ததைப் பத்தி சொல்லிட்டாங்க. அவங்க அந்த உடனேயே யாரு கேமரா வச்சிப் பார்த்தாங்கன்னு பார்த்து நாலு அறை அறைஞ்சா அப்பவே பிரச்சனை முடிஞ்சிடும். ஆனா இதை இப்ப வாயைத் திறந்துருக்காங்க.

    Also read: நடிகையின் உள்ளங்கையை சுரண்டிய இயக்குனர்… பரதேசி வேதிகாவுக்கு நடந்தது மட்டும்… எனக்கு நடந்தா?

    இப்போ கேரளா போலீஸ் ராதிகா மீது விசாரணை போட்டாங்க. உடனே ராதிகா நான் பேருலாம் சொல்ல மாட்டேன்னு அந்தர்பல்டி அடித்து விட்டார். துணிச்சலும், திரானியும் இருந்தால் ராதிகா யார் யாரைப் பார்த்து சிரிச்சான்னு சொல்லட்டும். சட்டப்படி நடவடிக்கை எடுப்பாங்க.

    நான் சொன்னா படுத்துக்கிடந்து எச்சில் துப்பின மாதிரி ஆகிடும்னு சொன்னாங்க. இப்ப மட்டும் என்னாச்சு? அதான நடந்துருக்கு. உங்களுக்கு சோறு போட்ட தொழில்ல மோசமா நடக்குதுண்ணு நீங்களே இப்படி சொல்வீங்க. புகார் சொல்லத் தெரியுது. சாட்சி சொல்லத் தெரியலையே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி கூட இருக்குற பெண்களுக்காக குரல் கொடுங்க… விளாசிய ராதிகா

    நடிகைகளில் தைரியமானவர்களில் ஒருவர் ராதிகா. சமீபத்தில் ஹேமா கமிட்டி குறித்து தனது கருத்துகளை ரொம்பவே தைரியமாக முன்வைத்துள்ளார். மலையாளத் திரையுலகில் நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஒட்டுமொத்தமாக தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து உள்ளார்.

    Also read: அந்த கெழட்டுப் பைய கூடலாம் முடியாது! மஞ்சுவாரியர் நோ சொன்னதுக்கான காரணம்

    அந்த அட்ஜெஸ்ட்மெண்ட் அவரது அப்பா காலத்தில் இருந்தே நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் அது போன்ற ஒரு சம்பவம் அதாவது என் ரூமோட கதவை யாராவது திறந்தால் மூஞ்சை சிதைச்சிடுவேன்னு கோபாவேசமாக பேட்டி கொடுத்துள்ளார்.

    அது மட்டுமல்லாமல் ஹேமா கமிட்டி குறித்தும் இது போன்ற அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்தும் வேறு என்னென்ன சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போமா…

    நடிகையர் சங்கமா… நடிகர் சங்கத்துலயே மதிப்பு கிடையாது. இதுல நடிகைகள் சங்கமா. உலகத்துல எந்தத் தவறு நடந்தாலும் ஒரு சின்மயியா இருக்கட்டும். யாரா வேணாலும் இருக்கட்டும். நடிகைகளைத் தான் தப்பு சொல்றாங்க. இந்த ஆம்பளைங்கள யாராவது தப்பு சொல்றாங்களா? இப்போ நான் சொன்னா உங்களுக்கு நியூஸ்.

    எல்லாரும் கேட்குற கேள்வி வந்து யாரது? அதுல தான் இன்ட்ரஸ்ட்டே தவிர இதை எப்படி சால்வ் பண்றதுன்னு யாருமே பேசல. இதுவரைக்கும் நானும் ரெண்டு மூணு நாளா தொடர்ந்து இன்டர்வியு கொடுத்துக்கிட்டு இருக்கேன். வெளிநாடு கிளம்புறேன்.

    Also read: எங்க அப்பா காலத்துல இருந்தே நடக்குது.. பேர கேட்டா பயந்துருவீங்க! உண்மைய உடைத்த ராதிகா

    இந்த நடிகர் வந்து இவ்ளோ வருஷமா ஆச்சே இவருக்கு வாழ்த்து சொல்லுங்கன்னு ஒரு பத்திரிகையாளர் எங்கிட்ட கேட்டாரு. நான் 46 வருஷமா இருக்கேன். 350 படங்கள் நடிச்சிருக்கேன். 4000 மணி நேரம் டெலிவிஷன்ல நடிச்சிருக்கேன். எனக்கு யாராவது வாழ்த்து சொன்னாங்களா? இல்ல. அப்போ கேட்காதே.

    தமிழ்ல இருக்குற எல்லா நடிகர்களும் எங்கேயோ ஒரு வகையில அரசியலுக்கு வரணும்கற ஆசை. அரசியல்ல செயல்படுறவங்களுக்கு ஆசை. நீங்க எல்லாம் மக்களுக்காக செயல்படுறீங்களே. உங்க கூட இருக்குற பெண்களுக்காக ஒரு வார்த்தை சொல்லுங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    பாரதிராஜாவின் அறிமுகம், நடிக வேள் M.R.ராதாவின் மகள் என்று பார்க்கும்போது ராதிகாவின் தைரியம் குறித்து சொல்லவா வேண்டும்.

  • என்ன வேணா சொல்லுங்க!.. சிவாஜிக்கு அப்புறம் விஜய்தான்!.. ராதிகா சொல்றத பாருங்க!…

    Actor vijay: சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் விஜய். இவரின் அப்பா எஸ்.ஏ.சி இயக்கிய சில படங்களில் சிறு வயது விஜயகாந்தாகவும் நடித்திருக்கிறார். கல்லூரி படிப்புக்கு பின் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டார் விஜய். ஆனால், அதில் எஸ்.ஏ.சிக்கு விருப்பமில்லை.

    ஆனாலும் விஜய் அடம்பிடிக்க நாளைய தீர்ப்பு படம் மூலம் அவரை அறிமுகம் செய்தார். அதன்பின்னரும் சொந்த தயாரிப்பில் ரசிகன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து இயக்கினார். அந்த படங்களில் பெரும்பாலும் கவர்ச்சியான காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்தது. அதன்பின்னரே விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படத்தில் நடித்தார்.

    இது விஜய் மீதிருந்த இமேஜை மாற்றியது. அதன்பின் துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை ஆகிய படங்கள் விஜய்க்கு ரசிகர்களை கொண்டு வந்ததது. கில்லி படத்தின் மெகா வெற்றி விஜயை பெரிய ஸ்டாராக மாற்றியது. ஒருகட்டத்தில் ஆக்‌ஷன் படங்களில் நடிக்க துவங்கி லியோ வரை அது தொடர்கிறது.

    விஜய் தனது திரையுலகில் ரஜினியையே பின்பற்றினார். துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து பின்னர் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறி இப்போது மாஸ் நடிகராகவும் மாறி இருக்கிறார். ரஜினியை போலவே இவருக்கும் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. உடல் மொழிக்கு அவர் சில படங்களில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை பின்பற்றினார் என சிலர் சொல்வார்கள்.

    இந்நிலையில், விஜய்க்கு அம்மாவாக சில படங்களில் நடித்த ராதிகா ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘முன்பெல்லாம் புதிதாக நடிக்க வரும் நடிகர்கள் சிவாஜியை போல நடிக்க முயற்சி செய்வார்கள். இப்போது எல்லோரும் விஜயின் ஸ்டைலை பின்பற்ற நினைக்கிறார்கள். எல்லோருக்கும் விஜயை போல வர வேண்டும் என்கிற ஆசைதான் அதற்கு காரணம்’ என சொல்லி இருக்கிறார்.

    விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுவே விஜய் நடிக்கும் என கடைசிப்படம் எனவும் சொல்லப்படுகிறது. அதன்பின் அவர் தீவிர அரசியலில் செயல்படவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • சனியன் ஒன்னுத்துக்கும் யூஸ் இல்ல!.. டோட்டலி வேஸ்ட்!.. ராதிகாவை திட்டித்தீர்த்த கமல்ஹாசன்!..

    பழம்பெரும் நடிகர், பகுத்தறிவை சினிமாவில் பேசி நடித்த நடிகவேள் எம்.ஆர்.ரதாவின் மகள்தான் ராதிகா. பாரதிராஜா தனது ‘கிழக்கு போகும் ரயில்’ படத்திற்கு ஒரு புதுமுகத்தை தேடி வந்தார். அப்போது ஒரு திருமண புகைப்படத்தில் ராதிகாவின் புகைப்படத்தையும், அவரின் சிரிப்பையும் பார்த்து இவர்தான் நமது கதாநாயகி என முடிவு செய்தார் பாரதிராஜா.

    ராதிகாவின் அம்மாவிடம் அனுமதி கேட்டு ராதிகாவை அப்படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருந்த ராதிகாவுக்கு அப்போது தமிழ் கூட சரியாக பேச வராது. ஆங்கிலமும், சிங்களமும் கலந்து பேசுவார். ஆனாலும், அவரை சொந்த குரலில் பேசி நடிக்க வைத்தார் பாரதிராஜா.

    இதையும் படிங்க: கர்ப்பத்தினை கன்பார்ம் செய்த ராதிகா… ஷாக்கான கோபி… கலாய்த்த ராமமூர்த்தி..

    அதன்பின் பல படங்களில் கதாநாயகி, சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் ராதிகா. விஜயகாந்துடன் அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்தார். அதோடு, ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ் என பலருடனும் நடித்திருக்கிறார். 90களில் கதாநாயகியாக கலக்கியவர் இப்போது அம்மா வேடத்தில் கலக்கி வருகிறார்.

    radhika

    சினிமா மட்டுமில்லாமல் சீரியலிலும் ஒரு கலக்கி கலக்கியவர்தான் ராதிகா. சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கிறார். இரண்டு திருமணங்கள் தோல்வியில் முடிந்த நிலையில் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது அரசியலிலும் இறங்கிவிட்டார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டி போட்டிருக்கிறார்.

    இதையும் படிங்க: ஆஸ்கார் விருதுக்கு வந்த ஆபத்து.. 15 வருஷம் கழிச்சு ரஹ்மான் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டா

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனிடம் ராதிகா திட்டு வாங்கிய சம்பவம் பற்றி அவரே ஊடகம் ஒன்றில் பேசி இருக்கிறார். கமலுடன் சிப்பிக்குள் முத்து, பேர் சொல்லும் பிள்ளை ஆகிய படங்களில் நடித்தேன். எனக்கு அப்போது எனக்கு ரத்தக்கொதிப்பு இருந்தது. திடீரென மயங்கி விழுந்துவிடுவேன். என் முகத்தில் தண்ணீர் தெளித்து என்னை சரிசெய்து சிறிது நேரம் கழித்து படப்பிடிப்பு நடக்கும்.

    ஒருநாள் கமல் என்னிடம் வந்து ‘இன்னைக்கு மயக்கம் வந்தது போல நடி. ஷூட்டிங் டிமிக்கி கொடுத்துட்டு கொஞ்சம் வெளிய போற வேலை இருக்கு’ என கேட்டார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். ’எப்படியோ போய் தொலை’ என திட்டிவிட்டு போய்விட்டார். 2 நாட்கள் கழித்து உண்மையிலேயே மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன். தண்ணீர் தெளித்து எழுந்தவுடன் கமலின் முகத்தைத்தான் முதலில் பார்த்தேன். அப்போது ‘சனியன் எப்ப மயக்கம் போட்டு விழுன்னு சொன்னா, இப்ப விழுது பாரு’ என கோபப்பட்டார் கமல்’ என ராதிகா சொல்லி இருந்தார்.

  • உங்களுக்கு வெட்கமா இல்லையா? ராதிகாவை திட்டிய தனுஷ்… என்னங்க இப்படி கேட்டுட்டீங்க!

    Radhika: நடிகை ராதிகா தன்னுடன் பழகிய பிரபலங்களுடன் ரொம்பவே நட்பாக தான் பழகுவாராம். அப்படி இருக்க ஒருமுறை தனுஷ், ராதிகாவுக்கு கால் செய்து திட்டியது குறித்து அவரே தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

    கிழக்கே போகும் ரயிலிலே திரைப்படத்தில் தொடங்கிய சினிமா பயணம் ராதிகா உடையது. அங்கு தொடங்கியவர் ஹீரோயினாக நடித்து முடித்தார். அதை தொடர்ந்து, இன்று பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தும் தொடர்ந்து புகழில் இருந்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் ராதிகா எப்போதுமே ஓபனாக தனக்கு தோன்றுவதை பேசும் பழக்கம் கொண்டவர்.

    இதையும் படிங்க: லால்சலாமில் முதல் பாதி சரியில்லை தான்… டைரக்டராக நான் செஞ்சது தப்பு… ஓபனா சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…

    அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரு படத்தினை குறித்து கமெண்ட் செய்து இருந்தார். ஆனால் அது எந்த படம் என்பது குறித்து மட்டும் சொல்லவில்லை. அவரின் அந்த ட்வீட் மிகப்பெரிய அளவில் வைரலானது. இதை தொடர்ந்து, ராதிகா அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு தனுஷ் ஒருமுறை கால் செய்தார்.

    நான் அட்டர்ன் செய்து பேசிக்கொண்டு இருக்கும் போது அக்கா, விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் கல்யாணம் ஆக போகிறது. தெரியுமா உங்களுக்கு எனக் கேட்டார். நான் கொஞ்சம் ஷாக்காகி என்னடா விளையாடாதே. நான் இப்போ தானே அவங்களோட ஷூட்டிங் முடிச்சிட்டு வந்தேன் எனக் கூறினாராம்.

    இதில் கடுப்பான தனுஷ், உங்களுக்கு வெட்கமா இல்லையா? பெரிய நடிகைனு சொல்லிக்கிறீங்க. இதைக்கூட உங்களால கண்டுப்பிடிக்க முடியலை எனத் திட்டினான். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகி விட்டது. அவங்க ரெண்டு பேரும் உண்மையான நடிகர்கள் தான். எந்த இடத்திலும் முறைத்தவறாமல் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தினர். அதனாலே எங்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை என ராதிகா தெரிவித்தார்

    இதையும் படிங்க: எத்தனை ஹீரோக்கள் நடிக்க வேண்டிய படம் தெரியுமா? ஆனால் சொன்ன காரணம்.. அதான் லேடி சூப்பர் ஸ்டார்