Tag: rajinikanth

  • Thalaivar173: கமல் கேமியோ. ஷங்கர் வில்லன்.. எல்லாம் ரஜினி கையில் இருக்கு!..

    Thalaivar173: கமல் கேமியோ. ஷங்கர் வில்லன்.. எல்லாம் ரஜினி கையில் இருக்கு!..

    கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினியின் 173 வது படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் திடீரென அந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகினார். அதன்பின் அந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரும் வெளியானது..

    ஆனால் திடீரென சிபி சக்கரவர்த்தியும் இந்த படத்திலிருந்து இருந்து விலகவிருப்பதாகவும் அவருக்கு பதில் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது. அதன்பின் சில நாட்களில் அந்த கதையில் சில மாற்றங்களை ரஜினி செய்ய சொல்லியிருப்பதகவும், சிபி அதற்காக வேலையி ஈடுபட்டிருக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. கதையை மாற்றியபின் ரஜினிக்கு அது பிடித்திருந்தால் சிபியே இயக்குனதாக தொடர்வார்.. இல்லையெனில் அஸ்வத் மாரிமுத்து உள்ளே வருவார் எனவும் சொல்லப்பட்டது.

    ரஜினியை வைத்து தான் இயக்கவிருந்த படத்தில் கமல்ஹாசனை ஒரு கேமியோ வேடத்திலும், இயக்குனர் ஷங்கரை வில்லனாகவும் நடிக்க வைக்கலாம் என சிபிராஜ் சொல்ல கமல், ஷங்கர் இருவரிடம் பேசி ஒப்புதலையும் வாங்கி வைத்திருந்தார்களாம். அதேநேரம், ரஜினியின் 173வது படத்தை சிபி இயக்கினால் மட்டுமே இது நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

  • அந்த 1000 கோடியை எடுத்து வைங்க!.. அலப்பறை கிளப்ப ரெடியான ஜெயிலர் 2!.. படப்பிடிப்பு நிறைவு!

    அந்த 1000 கோடியை எடுத்து வைங்க!.. அலப்பறை கிளப்ப ரெடியான ஜெயிலர் 2!.. படப்பிடிப்பு நிறைவு!

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வெளியான “ஜெயிலர்” படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் மேலும் விறுவிறுப்பாகவும், அதிரடி காட்சிகளால் நிரம்பியதாகவும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் பவர்ஃபுல் ரோலில் நடிக்கிறார். அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்றதாகவும், முக்கிய ஆக்ஷன் காட்சிகள் மிகுந்த கவனத்துடன் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம், உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளியான முதல் வாரத்திலேயே பல கோடி ரூபாய் வசூல் செய்த இப்படம், தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நிலைத்த வெற்றியை பெற்றது. 2.0 படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து அதிக வசூல் ஈட்டிய படம் ஜெயிலர் தான். மேலும் அனிரூத் இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மொத்தத்தில், இந்த படம் 600 கோடி ரூபாயைத் தாண்டிய வசூலை எட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த சாதனையால், “ஜெயிலர்” படம் ரஜினிகாந்துக்கு திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    “ஜெயிலர் 2” படம் திரையரங்குகளில் வெளியானவுடன் மாபெரும் வரவேற்பைப் பெறும் என திரையுலக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் உடன் ரஜினிகாந்த் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஜெயிலர் 2 ஷூட்டிங் ஓவர்!.. கொண்டாடிய படக்குழு!.. வைரல் போட்டோஸ்!..

    ஜெயிலர் 2 ஷூட்டிங் ஓவர்!.. கொண்டாடிய படக்குழு!.. வைரல் போட்டோஸ்!..

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து ஏற்கனவே வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பற்றி 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ரஜினியின் நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூலை பெற்ற படமாக ஜெயிலர் இருக்கிறது.

    இந்த படத்தில் மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்திலிருந்து சிவ்ராஜ்குமார் என பலரையும் கொண்டுவந்து கேமியோ வேடத்தில் நடிக்க வைத்திருந்தனர். அவர்கள் சில நிமிடங்கள் நடித்திருந்தாலும் கேரளா மற்றும் கர்நாடகாவில் ஜெயிலர் படம் நல்ல வசூலை பெற்றது..

    இதையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உருவாக்கியது/ கடந்த பல மாதங்களாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த படத்தில் யோகி பாபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்தனர். இந்த படத்திலும் மோகன்லால், சிவ்ராஜ்குமார் ஆகியோர் கேமியோ செய்திருக்கிறார்கள். மேலும் கேமியோ வேடத்தில் ஷாருக்கானை நடிக்க கேட்டனர். ஆனால் அவர் நடிக்கவில்லை என்பதால் பவன் கல்யாணை வைத்து அந்த காட்சிகளை எடுத்ததாக சொல்லப்படுகிறது.

    பல மாதங்களாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதையடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறது., இதை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..

  • மொத்த கதையும் மாத்திட்டார்!.. வேட்டையன் தோல்விக்கு காரணமே ரஜினிதான்!…

    மொத்த கதையும் மாத்திட்டார்!.. வேட்டையன் தோல்விக்கு காரணமே ரஜினிதான்!…

    ஜெய்பீம் என்கிற ஒரு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படத்தை கொடுத்தவர் த.ச.ஞானவேல். சினிமாவுக்கு வருவதற்கு முன் பத்திரிக்கையாளராக இருந்தவர் இவர். ஜெய்பீம் படத்துக்கு இவர் அமைத்திருந்த கதை, திரைக்கதை சினிமா விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. எனவே ஞானவேல் அடுத்து இயக்கும் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது..

    ஆனால் அவரோ ரஜினியிடம் கதை சொல்லி ஒரு படத்தை இயக்கப்போனார். ஜெய்பீம் போன்ற படத்தை எடுத்த ஞானவேல் எதற்காக ரஜினியை வைத்து படமெடுக்கிறார் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஏனெனில், ரஜினி பக்கா கமர்சியல் ஹீரோ, அவருக்கும் ஞானவேலுக்கும் எப்படி செட்டாகும் என என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது..

    ரஜினியை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கினார் ஞானவேல். இந்த படத்தில் அமிதாப்பச்சன், தசரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியார், ஃபகத் பாசில், ராணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.. அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் 2024ம் வருடம் அக்டோபர் 10ம்
    தேதி வெளியானது..

    ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்துக்கு பின் வெளியான ரஜினி படம் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.. நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் ரிசல்ட் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ஞானவேல் ‘வேட்டையன் படத்தின் முதல் காட்சி வெளியாவதற்கு முன்பே விஜய் ரசிகர்கள் படம் பிளாப் என ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தார்கள்’ எனக் கூறியிருந்தார்..

    இந்நிலையில்தான், ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.
    உண்மையில் ஞானவேல் ரஜினிக்காக எழுதிய கதையை வேறு என்கிறார்கள்.. ஆனால் அதில் ‘அதை சேர்க்கலாம்.. இதை சேர்க்கலாம்.. இப்படி மாற்றலாம்.. அதை மாற்றலாம்’ என சொல்லி மொத்த கதையும் ரஜினி மாற்றிவிட்டாராம்.. அதோடு படத்தில் திருடனாக வந்து போலீசுக்கு உதவும் ஃபகத் பாசிலின் வேடமே ரஜினி கதையில் கொண்டு வந்ததுதான் என்கிறார்கள். ரஜினி தலையீட்டால்தான் வேட்டையன் படம் ஓடவில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

    ரஜினியின் 173வது படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக இருந்தது. ஆனால்,முழுக்கதையையும் அவர் எழுதி முடித்த பின் ரஜினி பல மாற்றங்களை சொன்னதால் சிபி வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு முன்பு சுந்தர்.சி-யு இப்படித்தான் அந்த படத்திலிருந்து வெளியேறியிருப்பார் என கருதப்படுகிறது..

    முன்பெல்லாம் ரஜினி ஒரு கதையில் நடிக்க சம்மதித்து விட்டால் அதன்பின் கதையில் தலையிட மாட்டார். இயக்குனர் செல்வதை கேட்டு நடிப்பார்.. ஆனால் கூலி படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பின் ரஜினி கதையில் நிறைவே தலையிடுகிறார் என்கிற புகார் எழுந்திருக்கிறது..

  • அமைதிப்படை பார்த்துவிட்டு சத்யராஜிடம் ரஜினி கேட்ட கேள்வி!. ஒரு பிளாஷ்பேக்!..

    அமைதிப்படை பார்த்துவிட்டு சத்யராஜிடம் ரஜினி கேட்ட கேள்வி!. ஒரு பிளாஷ்பேக்!..

    மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்த 1994ம் வருடம் வெளியான திரைப்படம் அமைதிப்படை. நடப்பு அரசியலை நக்கலடித்து மணிவண்ணன் இந்த படத்தை உருவாக்கியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனமும் ரசிகர்களிடம் கைதட்டலை பெற்றது. சத்யராஜ் வழக்கம் போல தனது அலட்டலான நடிப்பில் அசத்தியிருந்தார். அதிலும் அமாவாசையாகவும், அரசியல்வாதியாகவும் நடிப்பில் கலக்கியிருந்தார் சத்யராஜ்..

    இந்த படத்தில் இடம்பெற்ற பல அரசியல் வசனங்களை இப்போதுள்ள கால கட்டத்திற்கும் பொருந்துவது போல மணிவண்ணன் எழுதியிருந்தார்.. அதோடு, படத்தில் முக்கிய வேடத்திலும் அவர் நடித்திருந்தார். மேலும், கஸ்தூரி, ரஞ்சிதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.. இளையராஜா இசையமைத்திருந்தார். நடப்பு அரசியலை நக்கலடிக்கும் அமைதிப்படை போல ஒரு திரைப்படம் இப்போது வரை வெளியாகவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து சொல்கிறார்கள்.. மணிவண்ணனுக்கு பின் அப்படி ஒரு படத்தை எடுக்கும் திறமையும், தைரியமும் யாருக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

    இந்நிலையில்தான், பேட்டி ஒன்றில் இப்படம் பற்றி பேசிய சத்யராஜ் ‘அமைதிப்படை வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த நேரம் திடீரென ரஜினி போனில் கூப்பிட்டார். ‘அமைதிப்படை நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க.. நான் பார்க்கணுமே’ என்றார். ‘திடீர்னு கேட்கிறீங்களே.. எந்த தியேட்டரில் போடுவது’ என கேட்டேன். அவரே ஒரு தியேட்டரின் பெயரை சொன்னார்.. அங்கு அவரும் அவரின் மனைவி லதாவும் படம் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்தோம்..

    காலை 10 மணிக்கு வருகிறேன் என ரஜினி சொல்லியிருந்தார்.. நானும், மணிவண்ணனும் 10 மணிக்கு சென்றோம். ஆனால் அவர் 9:45 மணிக்கே ரஜினி வந்து படம் ஓடிக் கொண்டிருந்தது.. படம் முழுவதையும் பார்த்த ரஜினி ‘எப்படி தைரியமாக இந்த படத்தை எடுத்தீர்கள்? வசனங்கள் எல்லாம் முன்பே எழுதினீர்களா இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் தோன்றியதா? என்று பல கேள்விகளை கேட்டார்.. படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக எங்கள் இருவரையும் பாராட்டி சென்றார்’ என சொல்லியிருக்கிறார்.

  • அப்ப சுந்தர்.சி.. இப்போ சிபி சக்ரவர்த்தி!.. கூலி படத்துக்கு பின் குழப்பத்தில் ரஜினி..

    அப்ப சுந்தர்.சி.. இப்போ சிபி சக்ரவர்த்தி!.. கூலி படத்துக்கு பின் குழப்பத்தில் ரஜினி..

    கடந்த பல வருடங்களாகவே இந்திய சினிமா அளவில் சூப்பர்ஸ்டாராகவும், வசூல் சக்கரவர்த்தியாகவும் வலம் வந்தவர் நடிகர் ரஜினி. சில படங்களை தவிர அவரின் எந்த திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததில்லை. ஆனால் அவர் நடிப்பில் வெளியான பாபா அவருக்கு நஷ்டத்தை கொடுத்தது.

    அதன்பின் 4 வருடங்கள் கழித்து அவரின் நடிப்பில் வெளியான சந்திரமுகி அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஆனால், அதன்பின் வெளிவந்த லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. கதை, திரைக்கதை, இயக்குனர், காட்சிகள் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து சரியாக கணக்குப் போட்டு நடித்து வந்த ரஜினியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

    அதனால்தான் பல வருடங்களாகவே சீனியர் இயக்குனர்களின் படங்களில் மட்டும் நடித்துவந்த ரஜினி கடந்த பல வருடங்களாகவே இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி வெளிவந்த பேட்டை, ஜெயிலர் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தது
    . ஒருபக்கம் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் மாறினார்.. அதோடு விஜயின் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலையும் குவித்தது. அதை ஏற்றுக்கொள்ளமுடியாத ஆதங்கத்தில்தான் ஜெயிலர் பட விழாவில் ரஜினி காக்கா -கழுகு கதையை சொன்னதாக சொல்லப்பட்டது..

    அதேநேரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது ரஜினியை யோசிக்க வைத்திருக்கிறது.. ஒருபக்கம் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெயிலர் 2 படமும் பக்கா ஆக்சன் படம்தான்.

    இதையடுத்து இனிமேல் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் கொண்ட ஆக்சன் படங்கள் வேண்டாம்.. ஒரு குடும்ப பின்னணி கொண்ட ஒரு ஜாலியான, கலகலப்பான காமெடி படத்தில் நடிக்கலாம் என ரஜினி ஒரு நல்ல முடிவை எடுத்தார். அதனால்தான், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு போனது.

    ஆனால் ரஜினி என்ன மாறுதல் சொன்னாரே சுந்தர்.சி அந்த படத்திலிருந்து வெளியேறினார். அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்திதான் ரஜினியின் 173-வது படத்தை இயக்குகிறார் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.. கடந்த சில மாதங்களாக படத்திற்கான முழு கதையையும் சிபி சக்கரவர்த்தி உருவாக்கினார்.

    cibi

    இந்த படத்தில் டெய்லராக ரஜினி நடிப்பது போஸ்டரிலேயே சொல்லப்பட்டிருந்த்து. ஆனால் தற்போது இந்த படத்திலிருந்து சிபிச் சக்கரவர்த்தியும் விலகியிருக்கிறார். இந்த படத்தை டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது..

    சமீபத்தில் சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினி ‘கதைப்படி இந்த படத்தில் நான் ஒரு Spy – உளவாளி. எனவே துரந்த 2 படம் போல ஒரு பக்கா ஆக்சன் படமாக கதையை மாற்ற முடியுமா?’ என கேட்டிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியான சிபி சக்கரவர்த்தி ‘முழுக் கதையையும் எழுதி முடித்து விட்டேன்.. இனிமேல் நீங்கள் சொல்வது போல கதையை மாற்றுவது சிரமம்’ என சொல்ல அவரை தூக்கிவிட்டு அஸ்வத் மாரிமுத்துவை ரஜினி உள்ளே கொண்டு வந்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

    கூலி படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பின் ரஜினியின் நடவடிக்கைகளில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அவரால் ஒரு கதையை முழுமையாக நம்ப முடியவில்லை.. நிறைய தலையிடுகிறார். இயக்குனரிடம் அதை மாற்று.. இதை மாற்று என ரஜினி குழப்பத்தில் இருக்கிறார்’ என கோலிவுட்டில் பேச துவங்கியிருக்கிறார்கள்.

  • Thalaivar 173: கதையை மாற்ற சொன்ன ரஜினி!.. சிபி சக்ரவர்த்தி விலகியதன் பின்னணி!..

    Thalaivar 173: கதையை மாற்ற சொன்ன ரஜினி!.. சிபி சக்ரவர்த்தி விலகியதன் பின்னணி!..

    ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்திலிருந்து சுந்தர்.சி விலகிய நிலையில் டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி இயக்கப் போகிறார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கிய ஒரு இளம் இயக்குனருக்கு ரஜினி எப்படி வாய்ப்பு கொடுத்தார் என திரையுலகமே ஆச்சர்யப்பட்டது. ஆனால் ரஜினி டிரெண்டிங்கில் இருக்கும் இளம் இயக்குனர்களிடம் பயணிக்க விரும்புகிறார் என சொல்லப்பட்டது..

    திடீரென இந்த படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி விலகி விட்டதாக இன்று காலை முதலே செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான், இதற்கான பின்னணி வெளியே தெரிய வந்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. டான் படத்திற்கு பின் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கத்தை திட்டமிட்டார் சிபி சக்கரவர்த்தி. ஆனால் அது நடக்காமல் போகவே தெலுங்கு நடிகர் நானியை வைத்து ஒரு படத்தை இயக்குவது முடிவானது.

    அது தொடர்பான பணிகள் நடந்து வந்த நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் சிபிச் சக்கரவர்த்தியிடம் கதையை மாற்றுங்கள்.. அதை மாற்றுங்கள்.. இதை மாற்றங்கள் என்று சொல்லி அழுத்தம் கொடுத்த தயாரிப்பாளர் ஒரு கட்டத்தில் கதையை மட்டும் வைத்துக்கொண்டு சிபி சக்கரவர்த்தியை வெளியேற்ற முடிவெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட பின்னரே சிபி சக்கரவர்த்தி அந்த படத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்..

    தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை இயக்க சிபி சக்கரவர்த்தி கமிட் ஆனதும் ‘உங்களுக்காக இவ்வளவு செலவு செய்திருக்கிறோம்.. அதற்காக ரஜினி படத்தின் தயாரிப்பில் எங்களையும் இணைக்க சொல்லுங்கள்’ என்று அந்த தெலுங்கு தயாரிப்பாளர் சிபி சக்ரவர்த்திக்கு அழுத்தம் கொடுத்தாராம். ஆனால் ராஜ்கம்ல் பிலிம்ஸ் அதை ஏற்கவில்லை. இதையடுத்தே சிபி சக்கரவர்த்தி இந்த படத்திலிருந்து விலகியதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது..

    மற்றொன்று ரஜினி ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்கிறார்கள்.. அதாவது கூலி படத்திற்கு பின் ஆக்சன் படம் வேண்டாம் என முடிவெடுத்ததால்தான் சிபி சக்ரவர்த்தி சொன்ன கதையை ரஜினி டிக் அடித்தார். ஆனால், சமீபத்தில் சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினி ‘கதைப்படி நான் ஒரு உளவாளி.. என்னிடம் ரசிகர்கள் இதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள்.. எனவே துரந்தர் 2 படத்தில் வருவது போல ஒரு பெரிய ரேஞ்சுக்கு படத்தை செய்தால் என்ன’ என்று கேட்க சிபி சக்கரவர்த்தி ஆடிப் போய்விட்டாராம்.

    ‘சார்.. மொத்த கதையையும் எழுதி முடித்து விட்டேன்.. இனிமேல் என்னால் கதையை மாற்ற முடியாது’ என சிபி சக்ரவர்த்தி சொல்லவே அவரை தூக்கி விட்டு அஸ்வத் மாரிமுத்துவை ரஜினி உள்ளே கொண்டுவந்ததாக சொல்லப்படுகிறது.

  • Thalaivar 173: சுந்தர்.சியை தொடர்ந்து சிபியும் விலகல்?!.. ரஜினி படத்தை இயக்குவது அவரா?..

    Thalaivar 173: சுந்தர்.சியை தொடர்ந்து சிபியும் விலகல்?!.. ரஜினி படத்தை இயக்குவது அவரா?..

    கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் அவரின் 173வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது..

    ஆனால் திடீரென அந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகினார். அதன் பின் சிபிச் சக்கரவர்த்தி, ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து, ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்ட சில இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டார் ரஜினி. இறுதியில் சிபிச் சக்கரவர்த்தி ஓகே செய்யப்பட்டார்.. அதோடு ரஜினியின் புதிய படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது..

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என ரஜினியும் செய்தியாளர்களிடம் தொடர்ந்து சொல்லி வந்தார். திடீரென இந்த படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி வெளியேறிவிட்டதாகவும் அவருக்கு பதில் டிராகன் படத்தை இயக்கிய அஸ்வர் மாரிமுத்து இயக்கப்போவதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது.

    சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். ரஜினி 173-வது படத்திலிருந்து இதுவரை இரண்டு இயக்குனர்கள் விலகி விட்டது பேசுபொருளாக மாறியிருக்கிறது. சிபிச்சக்ரவரத்தி என்ன காரணத்திற்காக இந்த் படத்திலிருந்து விலகியிருக்கிறார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

  • 5 கோடி ஃபைன் கட்டு.. ரஜினிகாந்த் படத்தை இயக்க முடியாமல் தவிக்கும் டான் டைரக்டர்!.. இதான் காரணம்?

    5 கோடி ஃபைன் கட்டு.. ரஜினிகாந்த் படத்தை இயக்க முடியாமல் தவிக்கும் டான் டைரக்டர்!.. இதான் காரணம்?

    சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு டான் திரைப்படம் வெளியானது. டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அந்த படம் 100 கோடி வசூல் படமாக மாறியது. ஆனால், அந்த படத்தின் இயக்குநருக்கு அதன் பின் எந்தவொரு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் சுமார் 4 ஆண்டுகள் ஆபீஸில் சேரை தேய்த்துக் கொண்டிருந்தவருக்கு அடித்தது ஜாக்பாட் என்பது போல கமல் தயாரிப்பில் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர். சி வெளியேறிய நிலையில், கிடைத்தது.

    ஆனால், தற்போது அந்த படத்தை ஆரம்பிக்க முடியாமல் சிபி சக்கரவர்த்திக்கு பெரிய பிரச்சனை வந்துள்ளதாக கூறுகின்றனர். டான் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டான் 2 படத்தை இயக்கப் போகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் ஓடின.

    மேலும், தெலுங்கில் ஒரு பெரிய நடிகரின் படத்தை இயக்கப் போகிறார் என்றும் அந்த படத்துக்காக பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக வாங்கிவிட்டார் என்றும் கூறினர். ஆனால், ரஜினிகாந்த் பட வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த தெலுங்கு படத்தில் இருந்து விலகி விட்டார்.

    அதுமட்டுமின்றி வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் கொடுத்துவிட்டாராம். ஆனாலும், என்ன பிரச்னைப்பா என்று பார்த்தால், அட்வான்ஸ் பணம் ஓகே, படத்தின் ப்ரீ புரொடக்‌ஷனுக்காக நாங்க செலவு பண்ண 5 கோடியை கொடுத்துவிட்டு கம்பியை நீட்டுன்னு சொல்லிட்டாங்களாம் பட நிறுவனம். ரஜினி பட வாய்ப்புக் கிடைத்தாலும், கமல் தரப்பில் இருந்து பெரிய சம்பளம் எல்லாம் பேசப்படவில்லை என்கின்றனர். இதனால், 5 கோடி பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பதால் ரஜினி படத்தை ஆரம்பிக்க முடியாமல் தவித்து வருகிறார் என்கின்றனர். எப்படி இருந்தாலும், ரஜினி, கமல் தலையிட்டு சிபி சக்கரவர்த்தியின் பஞ்சாயத்தை பைசல் பண்ணிவிடுவார்கள் என்றே தெரிகிறது.

  • கதறுங்க கதறுங்க…விஜய்க்கு வரும் கூட்டத்தை கண்டு கடுப்பாகி விட்டார் தலீவர்…ரஜினியை தாக்கிய புளு சட்டை மாறன்

    கதறுங்க கதறுங்க…விஜய்க்கு வரும் கூட்டத்தை கண்டு கடுப்பாகி விட்டார் தலீவர்…ரஜினியை தாக்கிய புளு சட்டை மாறன்

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்து கிடந்தன. இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் அரசியல் வசனம் பேசி ரசிகர்களை உசுப்பேற்றியே படங்களை வெற்றிபெறச் செய்ததாக ரஜினி மீது நீண்ட காலமாகவே ஒரு விமர்சனம் உண்டு. இறுதியாக 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல என முழக்கமிட்டு கட்சி ஆரம்பிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கினார். ஆனால், திடீரென பின்வாங்கினர். அதற்கு தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக கூறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தாலும் தலைவரின் உடல் நலம் முக்கியம் என மனதை தேற்றிக் கொண்டனர். ஆனால் விஜயகாந்த், சரத்குமார் போன்றோர் அரசியலில் தைரியமாக நுழைந்தனர். அந்த லிஸ்டில் நடிகர் விஜயும் இணைந்துள்ளார்.

    தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. திரையுலகிலிருந்து விலகி அரசியல் கட்சி துவங்கியுள்ள விஜய் தமிழகமெங்கும் சுற்றிப்பயணம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் அலை மோதுகிறது. இது பல ரசியல் கட்சிகளை அதிர செய்துள்ளது.

    இந்த நிலையில் புளுசட்டை மாறன் ஒரு ட்விட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில்,

    இந்த தேர்தலில் தவெக தோற்றால்.. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விட பெரிய மகிழ்ச்சியில் இருக்கப்போவது தலீவர்தான். ஆனால் சினிமா வியாபாரத்தில் இவரை எப்போதோ முந்திவிட்டார் விஜய். இந்த தேர்தலில் தோற்றால் அடுத்த முறை ஜெயிக்கலாம். அப்போது அழுது புலம்ப போவதும் தலீவர்தான்.

    25 வருடங்களாக அரசியலுக்கு இதோ வரேன், அதோ வரேன் என ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. படங்களை ஹிட்டாக்கி கொண்டு.. பல கோடி சம்பாதித்தார்.
    2021 தேர்தலில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பேன் என கூறினார். கடைசியில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி அரசியலுக்கு வராமல் தப்பினார்.

    25 வருடங்களாக காத்திருந்து பெரிய ஏமாற்றம் அடைந்தாலும்.. அவர் உடல்நிலைதான் முக்கியம் என ஆறுதல் அடைந்தனர் ரசிகர்கள். ஆனால் அதன்பிறகு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு பச்சோந்தித்தனத்தை யாரும் செய்ததில்லை.

    சிரஞ்சீவி, பவன் கல்யாண், எம்ஜிஆர், விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்ட யாரும் இப்படி ரசிகர்களை ஏமாற்றவில்லை. சொன்னபடி அரசியலுக்கு வந்தார்கள். வெற்றி, தோல்வி இரண்டாம் பட்சம். இத்தேர்தலில் தவெக தோற்றாலும்.. அடுத்து வரும் உள்ளாட்சி, நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் சில பல இடங்களில் ஜெயிக்கலாம். ஆகவே தலீவரின் சந்தோஷம் நிலையானதாக இருக்காது.

    சினிமா மற்றும் அரசியலில் உங்களை விட பெரிய இடத்தை விஜய் பிடித்து விட்டார். அவருக்கு கூடும் பிரம்மாண்ட இளைஞர் கூட்டத்தை டிவியில் கண்டு கடுப்பாகி விட்டார் தலீவர். அதனால்தான் விஜய் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அவருக்கு எதிராக மறைமுக பதில்களை தந்து வருகிறார்.

    கதறுங்க தலீவரே. கதறுங்க என்று பதிவிட்டுள்ளார்.