Tag: review

  • தனுஷின் ‘கர’ படம் எப்படி இருக்கு?.. தாறுமாறா?.. டைம் வேஸ்ட்டா?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!..

    தனுஷின் ‘கர’ படம் எப்படி இருக்கு?.. தாறுமாறா?.. டைம் வேஸ்ட்டா?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!..

    தனுஷ் நடித்துள்ள படம் என்பதை விட போர் தொழில் பட இயக்குநர் படம் என்கிற நம்பிக்கையில் தான் முதல் நாளில் தனுஷின் ‘கர’ படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்றனர். ராயன், இட்லி கடை, தேரே இஷ்க் மெயின் என தனுஷ் தொடர்ந்து வச்சு செய்து வரும் நிலையில், இந்த முறையும் ரசிகர்களை தலைவலிக்க செய்தே அனுப்புகிறார்.

    ராமநாதபுரத்தில் ஈராக் போரின் போது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நடந்த காலக்கட்டத்தில் வங்கிகளில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு கதையை தனுஷுக்கு உருவாக்கியுள்ளார் விக்னேஷ் ராஜா.

    படத்தில் மமிதா பைஜுவே ஒரு 3 சீனுக்குத்தான் அதிக பட்சம் வருகிறார். இட்லி கடை படத்தில் தனுஷ் ஊருக்கு வந்த உடனே அப்பா ராஜ்கிரண், அம்மா இறந்துவிடுவார்கள். அதே போலத்தான் இந்த படத்திலும் தனுஷ் ஊருக்கு வந்த உடனே அப்பா கே.எஸ். ரவிக்குமார் இறந்துவிடுகிறார்.

    போலீஸ் ஸ்டேஷனிலேயே சுராஜ் வெஞ்சரமூடுவை அடித்துவிட்டு தனுஷ் எஸ்கேப் ஆகிவிடுகிறார். அவரை துரத்தி பிடிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் கொஞ்சம் ரசிக்க வைக்கின்றன. வங்கி மேனேஜராக வரும் ஜெயராம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

    வேலியே பயிரை மேயும் கதையாக பேங்க் மேனேஜரே பக்கா திருடனாக இருக்க, திருட்டுத் தொழில் செய்து வரும் தனுஷ் அவரது வலையில் சிக்குகிறாரா? அல்லது தனுஷ் வலையில் ஜெயராம் சிக்குகிறாரா? போலீஸ் அதிகாரியான சுராஜ் வெஞ்சரமூடு தனுஷை பழி வாங்கினாரா? என்பது தான் படத்தின் கதை.

    ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசை தரமாக உள்ளது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் கூரை வீடுகளும், ராமநாதபுரம் வறட்சியும் கண்களை கனக்க வைக்கிறது.

    கருணாஸ் எல்லாம் தனக்கு விருது கிடைக்கும் என்றார். ஆனால், அவருடைய கதாபாத்திரம் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. படத்தில் வரும் அந்த கல்ட் கிளாசிக் படத்தின் காட்சி ரசிகர்களுக்கு செம ட்ரீட்.

    கர படத்தின் கதையை ஒரே நேர்கோட்டில் கொண்டு செல்லாமல், எங்கெங்கோ கொண்டு சென்று கடைசியில், வங்கியில் இருந்து பணத்தை திருடி வங்கிகளிலேயே பணத்தைக் கட்டி மக்களின் நிலத்தை மீட்டுக் கொடுக்கும் கரசாமியாக மாறுகிறார் தனுஷ்.

    கர – கரை சேரவில்லை!

    ரேட்டிங்: 2.25/5.

  • மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்.. ஆர்யாவுக்கும், கெளதம் ராம் கார்த்திக்கும் மறுபடியும் பல்பு தான்!..

    மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்.. ஆர்யாவுக்கும், கெளதம் ராம் கார்த்திக்கும் மறுபடியும் பல்பு தான்!..

    அபிஷன் ஜீவிந்த், கென் கருணாஸ் எல்லாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நிலையில், ஆர்யா, கெளதம் கார்த்திக்கு எல்லாம் என்ன ஆனது இப்படியொரு இடியாப்ப சிக்கல் கதையை தேடி நடித்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

    விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகனை வைத்து எஃப்ஐஆர் திரைப்படத்தை எடுத்த மனு ஆனந்த் அந்த படத்தை விட சூப்பர் படத்தைக் கொடுக்கிறேன் என தனது பேட்டியில் துரந்தர் எல்லாம் கொண்டு வந்து ரிலீஸுக்கு முன்பாக பேசினார்.

    ஆனால், படத்தை பார்த்தவுடன் இதுக்காக இவ்ளோ பில்டப் என்றும் இதுக்கு லெஜண்ட் சரவணா நடித்த லீடர் படமே ஸ்பை த்ரில்லர் படத்தை எப்படி எடுக்கணும்னு பாடம் நடத்தும் போல இருக்கே என ரசிகர்கள் தியேட்டரிலேயே கத்தத் தொடங்கி விட்டனர்.

    இடியாப்ப சிக்கல் கதை: நாட்டையே காப்பாற்றும் மிஸ்டர் எக்ஸ் ஆனால், அது ஆர்யாவும் இல்லை, கெளதம் கார்த்திக்கும் இல்லை என்கிற இடத்திலேயே இருவருக்கும் விபூதி அடித்துவிட்டு இயக்குநர் புதுசாக செட்டாகாத டோப்பாவை மாட்டி சரத்குமாரை ஹீரோவாக ஆரம்பத்தில் காட்டிவிட்டார். அப்புறம் அதே சரத்குமார் தான் ஆர்யாவின் அப்பா, இந்தியாவையும் உங்க அப்பாவையும் காப்பத்துறது தான் உன்னோட மிஷன் இம்பாசிபிள் என மஞ்சு வாரியர் மிஷனை தூக்கி தாலி கட்டி குடும்ப வாழ்க்கை நடத்த திட்டமிட்ட ஆர்யாவிடம் கொடுக்க, அவருக்கு வில்லனாக கெளதம் கார்த்திக் ரைசா வில்சன் உடன் ஜோடி போட்டு குதிக்க, கடைசியில் டைரக்டர் மெயின் வில்லனே நான் தான் என வச்ச ட்விஸ்ட்டை பார்த்து விட்டு ஆளவிடுங்கடா சாமி என தெறித்து ஓட ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.

    ஆர்யா, கெளதம் கார்த்திக்கு மீண்டும் பல்பு தான்: இப்படித்தான் ஆர்யா கேப்டன் படத்தில் நடித்தார். ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்கிறேன் என பிரடேட்டர்களை எல்லாம் கொண்டு வந்து உப்புமா படத்தைக் கொடுத்து காண்டாக்கினர். அதே வகையில் தான் இந்த படமும் கதை நல்லா இருந்தாலும் திரைக்கதை, உருவாக்கப்பட்ட விதம் எல்லாம் படு மோசம்.

    பிரதமர் மோடிக்கிட்ட பேசிட்டு இருந்துட்டே அடுத்த 10 நிமிஷத்துல கல்பாக்கம் அனல் மின் நிலையத்துக்கு வந்து கிளைமேக்ஸில் மஞ்சு வாரியர் சண்டை போடுறது எல்லாம் காமெடியின் உச்சம். இந்தியாவின் உளவுத்துறையை பெருமைப்படுத்துறோம்னு படம் எடுப்பாங்க பார்த்தால், ட்ரோல் பண்ணி வச்சிருக்காங்க. சரத்குமாருக்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

    ரேட்டிங்: 2.5/5.

  • பிரதீப் ரங்கநாதனின் LIK படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!

    பிரதீப் ரங்கநாதனின் LIK படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், மிஸ்கின், கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, மாளவிகா, ஆனந்த்ராஜ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் இன்று ஒருவழியாக வெளியான நிலையில், தாறுமாறாக உள்ளதா? அல்லது பிரதீப் ரங்கநாதனின் அடுத்த கிரிஞ்ச் குடோனா என்பது குறித்த விமர்சனத்தை தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

    விக்னேஷ் சிவன் மொக்கை பீஸ் என அஜித் நினைத்து ஒதுங்கிய நிலையில், விடாமுயற்சி எனும் படத்தை மகிழ் திருமேனியை வைத்து எடுத்துக் கொடுத்து ரசிகர்களை அழ வைத்தது தான் மிச்சம். கண்டிப்பாக அஜித் குமார் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தால் குட் பேட் அக்லி படத்தை விட ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருப்பார் என்றே தெரிகிறது.

    டிராகன் படம் அளவுக்கு எல்ஐகே இல்லை என்றாலும் டியூட் படத்தை விட ரொம்பவே பெட்டராக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்

    என்னதான் உலக நாயகன் கமல்ஹாசன் ஹேராம், ஆளவந்தான், விருமாண்டி என படம் பண்ணினாலும் பாக்ஸ் ஆபீஸில் ஓடியது ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா தான். அதே பாணியை தான் பிரதீப் ரங்கநாதனும் பிடித்துள்ளார். ரஜினிகாந்தை தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன் என பலரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் பக்காவாக சேர் போட்டு அமர்ந்துவிட்டார்.

    சிவகார்த்திகேயனும் கொஞ்சம் ரூட்டை மாற்றி நடுவில் புரட்சி கருத்தை எல்லாம் பேசி போர் அடித்து வரும் நிலையில், ஜென் ஸி கிட்ஸ்களை கவரும் விதமாக லேசான கருத்துடன் ஜாலியான படத்தை லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார்.

    சீமான் வரும் காட்சிகள், எஸ்.ஜே. சூர்யா வரும் காட்சிகள் எல்லாமே தியேட்டரே தெறிக்கும் காட்சிகளாக எங்கேயும் காம்ப்ரமைஸ் பண்ணாமல் விக்னேஷ் சிவன் இயக்கிய விதம் சிறப்பு.

    LIK ஆப் மூலம் இன்னார்க்கு இன்னார் என்பதை கண்டு பிடிக்கும் லவ் மீட்டரை எஸ்.ஜே. சூர்யா அறிமுகப்படுத்த பிரதீப் ரங்கநாதன் – கீர்த்தி ஷெட்டி காதலை அது பிரிக்கிறது. ஆப்பை விட மனித இதயத்துக்கு வேல்யூ அதிகம் என்பதை ஹீரோ நிரூபிப்பதே படத்தின் கதை.

    பிரதீப் ரங்கநாதன் படத்தை ஜாலியாக குழந்தைகள் என்ஜாய் செய்யும் விதமாக விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தாலும், கெளரி கிஷன் உடனான லிப் லாக் காட்சி மற்றும் ஹீரோயின் அசிங்கமாக பேசும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

    எல்ஐகே ரேட்டிங்: 3.25/5.

  • ‘மாமன்’ஆக மாஸ் காட்டினாரா?.. அல்லது மண்ணை கவ்வினாரா சூரி?.. மாமன் விமர்சனம் இதோ!

    வெற்றிமாறன் பார்த்த வேலையால் காமெடி நடிகராக இருந்த சூரி சீரியஸ் மோடுக்கு விடுதலை படத்தில் இருந்தே மாறிவிட்டார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கொட்டுக்காளி படத்தில் மேலும், கொடூரமாக நடித்திருந்தார். ஆனால், வில்லேஜ் சப்ஜெக்ட் படமான மாமன் படத்தில் அவர் சிரித்து நடிக்க நிறைய இடங்கள் இருந்தும் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் சூரி நீங்க ஹீரோ சிரிக்கவே கூடாதுன்னு சொல்லிவிட்டாரா என்னவோ தெரியவில்லை மனுஷன் கடைசி வரைக்கும் ஒரே பர்ஃபார்மன்ஸ் தான்.

    லட்டு போல ஹீரோயினாக ஐஸ்வர்யா லட்சுமி கிடைத்த இடத்தில் காமெடி காட்சிகளுக்கு கட் அண்ட் ரைட்டாக தடை போட்ட சூரி, கட்டிப்பிடித்து முத்தமழை பொழியும் காட்சிகளில் எல்லாம் தனக்கு வேண்டியதை தாராளமாக எடுத்துக் கொண்டார். சூரியுடன் எந்தவொரு தயக்கமும் இன்றி ஐஸ்வர்யா லட்சுமி மற்ற ஹீரோக்களுடன் எப்படி ரொமான்ஸ் செய்வாரோ அதே போலத்தான் நெருங்கி பழகி கட்டி உருண்டு நடித்திருக்கிறார்.

    அக்காவாக வரும் சுவாசிகா திடீரென வில்லியாக மாறி தம்பியே செத்துட்டான் என தனது மகனிடம் சொல்லும் இடங்களும் அதன் பின்னர், தம்பியின் மனைவியை எதிர்கொள்ள முடியாமல் பால சரவணன் திருமண விழாவில் ஓடும் காட்சிகளும் நிறைவான நடிப்பை அவர் வெளிப்படுத்த துணையாக நிற்கிறது.

    லப்பர் பந்து படத்தின் வெற்றிக்கு பிறகு ரெட்ரோ, மாமன், சூர்யா 46 என தொடர்ந்து பல படங்களில் சுவாசிகா நடித்து வருகிறார். மருமகனாக நடித்துள்ள சிறுவன் மாமனான சூரியுடனே தூங்கும் பழக்கம் கொண்டிருக்கிறான். திருமணத்திற்கு பிறகு முதலிரவு அறைக்குள் அந்த குட்டி பையன் செய்யும் சேட்டைகள் மட்டுமே படத்தில் ரசிக்க வைக்கிறது.

    ஆனால், அதே ரிப்பீட் மோடில் தொடங்க ஐஸ்வர்யா லட்சுமியால் ஹனிமூனுக்கு கூட போக முடியாமல் தவிக்க வில்லங்கம் விஸ்வரூபம் எடுக்கிறது. மாமனையும் மருமகனையும் பிரித்து தனக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்து விட்டது என மதுரைக்கு கிளம்பி போய் ஜாலியான இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். அவரும் மாசமாக ஆனதும் மீண்டும் தனது அக்காவையும் மருமகனையும் பார்க்க நினைக்கும் சூரிக்கு அக்கா பண்ண காரியம் தெரிய வர மீண்டும் அவர்கள் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த மாமன் படம்.

    பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ரொமான்ஸ் போர்ஷன்கள் வடிவேலு அசின் உடன் ஆடும் சுட்டு விழிச் சுடரே பாடல் போலத்தான் தெரிகிறது. விமல் மேஜிக் மேனாக வரும் காட்சி சூப்பராக உள்ளது. இன்னும் கொஞ்சம் கதையை சுவாரஸ்யப்படுத்தி நகைச்சுவை காட்சிகளை சேர்த்திருந்தால் மாமன் மாஸ் காட்டியிருப்பார்.

    ரேட்டிங்: 2.5/5.

  • சூரியின் மாமனை ஓவர்டேக் செய்த சந்தானம்!.. செகண்ட் ஹாஃப் செம காமெடி.. டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்!

    தியேட்டருக்கு வரும் ரசிகர்களை கண் கலங்க வைத்து செல்ல சூரி இந்த வாரம் மாமன் படத்தைக் கொடுத்துள்ள நிலையில், அதற்கு நேர்மாறாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களை மட்டுமின்றி விமர்சகர்களையும் திருப்திப்படுத்தும் படமாக சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தைக் கிஸ்ஸாவாக கொடுத்துள்ளார்.

    தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 பாணியில் ஹாரர் படங்களை ஸ்பூஃப் செய்யும் படமாகவே இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உருவாகியிருக்கிறது. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் ஏகப்பட்ட பேய் காட்சிகளை வைத்து அடுத்த அடுத்த ரவுண்டுக்கு செல்ல வைத்து சிரிப்பு மூட்டிய பிரேம் ஆனந்த் இந்த முறை விமர்சகர் மற்றும் அவரது குடும்பத்தையே ஹிட்ச்காக் இருதயராஜாக வரும் நம்ம செல்வராகவன் தூக்கிக் கொண்டு போய் ஒரு படத்துக்குள் போட அங்கே இருந்து ஹீரோ எப்படி எஸ்கேப் ஆகிறார் என்பதையும் தனது குடும்பத்தையும் காதலையும் காப்பாற்றினாரா என்பதையும் கதையாக வடிவமைத்துள்ளார்.

    படத்திற்குள் ஹீரோவாக வரும் கெளதம் மேனன், ஹீரோயினாக வரும் யாஷிகா ஆனந்த் ரொமான்ஸ் எல்லாமே செம காமெடி. கஸ்தூரி வழக்கம் போல அதிகமாகவே பேசிக் கொண்டிருக்கிறார். நிழல்கள் ரவி எல்லாம் எப்பேர்பட்ட வில்லன் தெரியுமா? அவரையும் சந்தானம் தேவயானி புருஷன் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்.

    சந்தானம் மற்றும் மொட்டை ராஜேந்திரன் காம்பினேஷன் தில்லுக்கு துட்டு படத்தில் இருந்து டிடி நெக்ஸ்ட் லெவல் வரை பக்காவாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. லொள்ளு சபா மாறனை டிக்கிலோனா படத்தில் பயன்படுத்தியளவுக்கு இதில் பெரிதாக பயன்படுத்தவில்லை. ரெடின் கிங்ஸ்லி ஃபேனில் சுற்றுவது, தலைகீழாக நடப்பது என கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.

    முதல் பாதியில் இந்த படமும் கதையை நோக்கி நகர்வதால் இடைவேளைக்கு முன்பு தான் மஞ்சுமெல் பாய்ஸ் காமெடியை வைத்து ஓட்டிய இயக்குநர், இரண்டாம் பாதியில் மீண்டும் டிடி ரிட்டர்ன்ஸ் ரூட்டை கையிலெடுத்து ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்துகிறார். அதிலும், அந்த ஸ்லோமோஷன் சீனெல்லாம் செம மேட்டர்.

    நடிகர் ஆர்யா நண்பன் சந்தானத்தை நம்பி போட்ட காசு கோவிந்தா சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் தப்பித்து விடும் என்றே தெரிகிறது. மொத்தத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் சம்மருக்கு ஏற்ற சிரிப்பு சரவெடி.

    ரேட்டிங்: 3.25/5

  • மகாராஜா படம் போல மாஸ் காட்டியதா?.. விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் எப்படி இருக்கு?.. விமர்சனம் இதோ!..

    நடிகர் விஜய் சேதுபதி அதிகமாகவே சீரியஸான படங்களில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த ஜானரை விட்டு நாமும் கொஞ்சம் ஜாலியாகவும் சிரித்துக் கொண்டே பார்க்கும் படியான படத்தைக் கொடுக்கலாம் என்கிற நினைப்புடன் தான் இப்படியொரு படத்தில் ஓகே சொல்லி நடித்திருக்கிறார் என்று தெரிகிறது.

    மத கஜ ராஜா போல ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி இதுபோன்ற கதைகளில் ஹெய்ஸ்ட் படங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், வெளியான சுந்தர். சி, வடிவேலு நடித்த ஹெய்ஸ்ட் படம் கூட கதைப்படி நல்லாவே எழுதப்பட்டு இருந்தது.

    அந்த படத்திலேயே காமெடிக்கு வடிவேலு ரொம்பவே மெனக்கெட்டும் ரசிகர்களால் சிரிக்கத்தான் முடியவில்லை. ஆனால், அந்த விஷயத்தை யோகி பாபு இந்த படத்தில் சர்வ சாதாரணமாக செய்துக் காட்டியிருக்கிறார்.

    இந்த வாரம் அவர் ஹீரோவாக நடித்த ஸ்கூல் படத்தை விட ரசிகர்கள் பலரும் ஏஸ் படத்தை தான் பார்த்து கொண்டாடுவார்கள் என தாராளமாக சொல்லலாம். கடந்த வாரம் வெளியான சந்தானம் படமான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கூட இந்த அளவுக்கு காமெடி டைமிங் எல்லாம் வொர்க்கவுட் ஆகவில்லை.

    ஆனால், ஏஸ் படத்தில் பெரிய பிரச்னையே படத்தின் மேம்போக்கான கதைக்களம் தான். விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, பப்லு பிரித்விராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆறுமுக ராஜா தயாரித்து இயக்கியுள்ளார்.

    ஆளு கொஞ்சம் வெயிட் பார்ட்டி போல தெரிகிறது, மொத்த படத்தையும் மலேசியாவிலேயே படமாக்கியுள்ளார். முடிந்தவரை படம் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு மலேசியாவை சுற்றிக் காட்டி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    கதைப்படி பார்த்தால், துணிக்கடையில் வேலை செய்யும் காதலிக்காக 10 ஆயிரம் வெள்ளியில் ஒரு டிரெஸ் வாங்க யோகி பாபுவ்டன் சேர்ந்து தர்மராஜ் என்கிற டானிடம் கடன் வாங்க செல்கிறார் விஜய் சேதுபதி. அங்கே அவர், சூதாட்டம் மூலமாக பெரிய தொகையை சம்பாதிக்க நினைக்கிறார். விஜய் சேதுபதி ’ஏஸ்’ மூலமாக ஜெயித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவரை ஏமாற்றி வில்லன் ஜெயித்து விடுகிறார்.

    மேலும், தான் கொடுத்த கடனை ஒரு வாரத்தில் கட்டவில்லை என்றால் கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். தனது அம்மாவின் இரண்டாவது கணவரான பப்லு பிரித்விராஜ் போலீஸாக இருந்தாலும் மோசமான பெண் பித்தன். அவனிடம் இருந்து தன்னையும் வீட்டையும் காப்பாற்ற போராடும் ஹீரோயினுக்காகவும் சூதாட்டத்தில் தோற்று கடனாளியாக மாறி பெரிய பிரச்னையில் சிக்கிக் கொண்டிருப்பதையும் சமாளிக்க விஜய் சேதுபதி என்ன செய்தார் என்பதே கதை.

    விஜய் சேதுபதியின் லுக், ஹீரோயின் ருக்மணி வசந்தின் நடிப்பு, யோகி பாபுவின் டைமிங் காமெடி எல்லாம் நல்லா வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. படத்தின் கதை இன்னமும் வலுவாக இருந்திருந்தால் படம் பெரிய ஹிட்டாக அமைந்திருக்கும்.

  • அடிச்சு கிழிச்சு தொங்க விட்டுட்டீங்களே தலைவா!.. புஷ்பா 2 படத்துக்கு ப்ளூ சட்டை விமர்சனம்..!

    புஷ்பா 2 திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட விமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

    புஷ்பா 2:

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் இப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்கள். படம் வெளியாகி பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தால் இப்படத்தின் அடுத்த பாகத்தை எடுப்பதற்கு முடிவு செய்தார்கள்.

    இதையும் படிங்க: Serial TRP: கொத்தாக உள்ளே இறங்கிய விஜய் டிவி… சன் டிவிக்கு பலமான போட்டியா இருக்கே!..

    கடந்த 3 வருடங்களாக இப்படத்தின் 2-வது பாகம் எடுக்கப்பட்டு வந்தது. பின்னர் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் ப்ரீ புக்கிங்கிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில் படம் வெளியான நாளிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

    புஷ்பா 2 விமர்சனம்:

    புஷ்பா 2 திரைப்படம் வழக்கமான ஒரு மசாலா படம் என்றாலும் அல்லு அர்ஜுன். இந்த திரைப்படத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றார். மொத்த படத்தையும் அவர் தனது தோளில் சுமந்து இருக்கின்றார். ஒவ்வொரு சீனிலும் அவரின் நடிப்பு பட்டையை கிளப்பி இருக்கின்றது. முதல் பாகம் எந்த அளவுக்கு சிறப்பாக இருந்ததோ அதைவிட இரண்டாவது பாகம் சிறப்பாக இருந்தது என்று ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

    pushpa 2
    pushpa 2

    படம் வெளியான முதல் நாளில் 175 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருக்கின்றது. தொடர்ந்து இப்படம் உலகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும் எனவும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகிறார்கள்.

    ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

    எந்த திரைப்படம் வந்தாலும் அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கூறுபவர் ப்ளூ சட்டை மாறன். அவர் புஷ்பா 2 திரைப்படத்திற்கு தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: ‘முதல் பாகத்தில் எங்கு விட்டார்களோ அங்கிருந்து புஷ்பா 2 திரைப்படத்தை தொடங்கி இருக்கிறார்கள். பண பலம், படைபலம், செல்வாக்கு அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றார் புஷ்பா.

    இந்த பாகத்திலும் பகத் பாஸிலுக்கும் அல்லு அர்ஜுனுக்கும் வாய்க்கா தகராறு இருந்து வருகின்றது. இந்த முறை இன்னும் அதிகமாகவே இருக்கின்றது. இந்த சமயத்தில் ஹீரோவுக்கும் அவரது மனைவிக்கும் முதல்வரை பார்த்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. புகைப்படம் எடுக்க போகும்போது முதல்வர் கடத்தல்காரன் கூட புகைப்படம் எடுக்க முடியாது என்று கூறி மறுத்து விட்டார்.

    blue sattai maran
    blue sattai maran

    இதனால் அவமானப்பட்ட புஷ்பா அவரை அந்த பதவியில் இருந்து காலி செய்ய வேண்டும் என்பதற்காக முயற்சி செய்கின்றார். இதுதான் படத்தின் கதை. முதல் பாகம் எதுக்கு ஓடியது என்றே தெரியவில்லை. அதுவே ரொம்ப தெலுங்கு படமாக இருக்கும். உலகத்தில் உள்ள அனைத்து மாஸ் மசாலா படங்களையும் சேர்த்து இரண்டாவது பாகத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: குப்பை படத்தை வெற்றின்னு சொல்வாங்க…. காலா படம் எந்த விதத்தில் தோல்வி? சீறிய இயக்குனர்

    படத்தின் முதல் பாதி ஏதோ சுமாராக இருக்கின்றது. இரண்டாவது பாதி எல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.  அதிலும் படத்தின் முதல் சீனில் ஜப்பான்காரன் தமிழ்ல பேசுகிறான். ஆனால் இவர் ஜப்பான் மொழியில் பேசுகின்றார். கேட்டால் 45 நாட்களில் ஜப்பான் மொழியை கற்றுக்கொண்டாராம்.

    படத்தின் இன்டெர்வல் பிளாக், ஆக்ஷன் காட்சிகள் எல்லாமே நன்றாகவே இருந்தது. இரண்டாவது பாதி முதல் பாதிக்கு அப்படியே ஆப்போசிட்டாக இருந்தது. அனைத்து காட்சிகளையும் லென்த் லென்த்தாக எடுத்து வைத்திருந்தார்கள். எல்லோரும் கூறுவது போல படத்தை அல்லு அர்ஜுன் தனது தோளில் சுமந்து இருக்கின்றார் என்பதற்கு ஏற்ப அவரது தோள்பட்டையும் ஒரு பக்கம் சைடு வாங்கி இருக்குது. முடிவாக இந்த படத்தை பார்ப்பதற்கு ஒரு மன தைரியம் வேண்டும்’ என்று தனது விமர்சனத்தை பகிர்ந்து இருக்கின்றார்.

  • கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியா இருந்தா எப்படிடா?.. ஜோஷ்வாவை பொளந்த ப்ளூ சட்டை மாறன்!..

    மணி சார் படங்களே கேவலமாத்தான் இருக்கும். கெளதம் மேனன் உடம்புக்குள்ள மணி சார் ஆவி புகுந்து எடுத்தா அந்த படம் இன்னும் கேவலமா இருக்கும். அப்படித்தான் ஜோஷ்வா இமை போல் காக்க படம் உள்ளதாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் பொளந்துக் காட்டியிருக்கிறார்.

    வெளிநாட்டில் நீதித்துறையில் பெரிய போதைப் பொருள் குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப் போகும் நீதிபதி டீமில் இருக்கும் நபர்களை கூலிப் படையினர் கொன்று வருகின்றனர். அந்த டீமுக்கு வெளிநாட்டு போலீஸார் கொடுக்க முடியாத பாதுகாப்பை இந்தியாவில் உள்ள செக்யூரிட்டி ஏஜென்சி கொடுக்கிறது என்கிற இடத்திலேயே கதை தோல்வியை தழுவி விட்டது.

    இதையும் படிங்க: வெங்கட் பிரபுவை அசிங்கமா திட்டிய விஜய் ரசிகர்!.. கோட் படம் எடுக்குற இயக்குநருக்கு கிடைச்ச மரியாதை?..

    கெளதம் மேனன் என்னத்த தான் கதை எழுதி இந்த படத்தை எடுத்திருக்கிறாரோ தெரியலை என்றும் கால் வைக்கிற இடத்துல எல்லாம் கண்ணி வெடியா இருந்தா எப்படிடா படத்தை பார்க்கிறது என விளாசித் தள்ளி உள்ளார்.

    ஹீரோ வருணுக்கும் ஹீரோயின் ராஹிக்கும் பார்த்தவுடன் காதல் வருகிறது. அதன் பின்னர் தான் ஒரு கான்ட்ராக்ட் கில்லர் என்பதை ஹீரோ சொன்னவுடன் ஹீரோயின் பிரேக்கப் செய்து விட்டு வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். ஹீரோயினுக்கு பிடிக்கவில்லை என்பதால் உடனடியாக அந்த வேலையை விட்டு பாடிகார்டாக வருண் மாறிவிடுகிறார்.

    இதையும் படிங்க: அம்பானி வீட்டுத்திருமண விழாவில் குடும்பத்துடன் ஆஜரான அட்லீ!.. ஜவான்.. ஜவான் என ஒரே கோஷம்!..

    மீண்டும் ஹீரோயினை காப்பாற்றும் வேலை கிடைக்க அவரை எப்படி காப்பாற்றினார் என்று பார்த்தால் அங்கேயும் ஏகப்பட்ட சொதப்பல். சண்டைக் காட்சிகள் மட்டும் பார்க்கும் அளவுக்கு கெளதம் மேனன் உருவாக்கி இருக்கிறார். ஆனால், முழுசா படத்தை பார்க்க முடியவில்லை என விமர்சித்துள்ளார்.

  • ஜோஷ்வா இமை போல படத்தை காத்தாரா?.. இல்லை கதறவிட்டாரா?!.. விமர்சனம் இதோ!..

    கெளதம் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண், ராஹி, கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜோஷ்வா இமை போல் காக்க படம் ஒரு வழியாக சில ஆண்டுகள் கழித்து வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் அயலான் படம் லேட் ரிலீஸ் ஆனதை போல இந்த படமும் ரொம்ப லேட் ரிலீஸ் தான்.

    ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கில் ஆங்கிலம் பேசும் கதாபாத்திரங்களை அடுக்கி கெளதம் மேனன் ஒரு ரொமான்டிக் ஆக்‌ஷன் ஜானர் படத்தை கொடுத்திருக்கிறார்.

    இதையும் படிங்க: பிரெஞ்சுப் புரட்சிக்கு கூட இப்படி நடந்திருக்காது.. என்னய்யா செஞ்சாரு அஜித்? ரசிகர்களை கதறவிட்ட கேள்விகள்

    பிக் பாஸ் வருண் சிறப்பாக படத்தில் நடித்து சண்டை செய்தாலும் மாஸ் ஹீரோவுக்கான மாஸ் அவரிடம் ரொம்பவே மிஸ் ஆகிறது. அதை விட கொடுமை என்னவென்றால் படத்தில் ஹீரோயினுக்கும் அவருக்கும் லிப் லாக், ஷவர் பாத் காட்சிகள் என பல இருந்தாலும், ரொமான்டிக் ரொம்பவே மிஸ் ஆவது குறையாக மாறியிருக்கிறது.

    சர்வதேச போதை மாஃபியா தலைவனுக்கு எதிரான வழக்கில் வாதாடும் வழக்கறிஞராக வரும் குந்தவையை போட்டுத் தள்ள வரும் ஆட்களிடம் இருந்து உலகின் சூப்பர் கில்லரான ஜோஷ்வா எப்படி பாடிகார்டாக மாறி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை.

    இதையும் படிங்க: சுஷாந்த் சிங் போல கருவறுக்கப்பட்ட தமிழ் நடிகர்… இவ்வளோ கொடூரமான நெப்போடிசமா?

    கார்த்திக்கின் இசையில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஆறுதலாக இருந்தாலும், சில இடங்கள் நல்லா இருக்கு பல இடங்கள் பல் இளிக்கிறதே என்கிற ஃபீலிங் தான் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது.

    கெளதம் மேனன் சூட்டோடு சூடாக முன்பே இந்த ஜோஷ்வாவை பரிமாறியிருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்கும்.

    ஜோஷ்வா – ஜஸ்ட் பாஸ்!

    ரேட்டிங் – 2.5