Tag: SIMBU

  • எனக்கே விரலா?.. விஜய் டிரெஸ் கோட்.. சட்டென பதறிய சிம்பு!.. நல்லா இருக்கிறது புடிக்கலையா?..

    எனக்கே விரலா?.. விஜய் டிரெஸ் கோட்.. சட்டென பதறிய சிம்பு!.. நல்லா இருக்கிறது புடிக்கலையா?..

    நடிகர் சிம்பு இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார். சென்னை பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு மாலை நேரம் வந்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயக உரிமையை பயன்படுத்தினார்.

    வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். “ஒவ்வொருவரின் வாக்கும் முக்கியமானது. இளைஞர்கள் குறிப்பாக வந்து வாக்களிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

    விஜய் டிரெஸ் கோட் என வெள்ளை சட்டை மற்றும் காக்கி பேண்ட் தான் இன்று நடைபெற்ற தமிழ்நாடு தேர்தலில் செம டிரெண்ட் ஆனது. நடிகைகள் முதல் இளம் பெண்கள் வரை அதை அணிந்து வந்து ஓட்டுப்போட்டனர்.

    சினிமா பிரபலங்களில், சியான் விக்ரம், அனிருத், ஜெய், ரச்சிதா மகாலட்சுமி, சிபிராஜ் சத்யராஜ் உள்ளிட்ட பலர் அந்த டிரெஸ் கோடில் வந்தனர். எதிர்பாராத விதமாக நடிகர் சிம்புவும் அதே கலர் உடையை அணிந்துக் கொண்டு வந்த நிலையில், அண்ணா டிரெஸ் கோட் சூப்பர் என சிலர் கூற, அய்யய்யோ வெள்ளை சட்டை மாட்டிட்டு வந்தது குத்தமா எதிலும் கோர்த்து விட்டுடாதீங்க என்றார். ஆனால், ரசிகர்கள் அவர் விஜய்க்குத்தான் ஆதரவு எனக் கூறி வருகின்றனர்.

    மேலும், நீங்க அரசியலுக்கு வருவீங்களா என பத்திரிகையாளர்கள் கேட்க, இப்போதான் சினிமாவிலேயே பல பிரச்னைகளை சமாளித்து நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? என தனது பாணியில் ஜாலியாக பேசிவிட்டுச் சென்றார். மை வைத்த விரலை காட்டச் சொல்ல, எனக்கே விரலா என சிம்பு பஞ்ச் அடித்ததும் ரசிகர்களை கவர்ந்தது.

    வாக்குச்சாவடியில் சிம்புவை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருடன் புகைப்படங்கள் எடுக்க முயன்றனர். இருப்பினும், எந்த இடையூறும் இல்லாமல் அவர் தனது வாக்கை பதிவு செய்து வெளியேறினார்.
    தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

  • சிபியா? அஸ்வத் மாரிமுத்துவா?.. மங்காத்தா ஆடும் ரஜினி!.. அவரை நம்பி சிம்பு படம் போச்சே!..

    சிபியா? அஸ்வத் மாரிமுத்துவா?.. மங்காத்தா ஆடும் ரஜினி!.. அவரை நம்பி சிம்பு படம் போச்சே!..

    ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க அவரின் 173-வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே இந்த படத்திலிருந்து வெளியேறுவதாக சுந்தர்.சி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அஸ்வத் மாரிமுத்து, ஆர்.ஜே.பாலாஜி, சிபிச் சக்கரவர்த்தி, ராம்குமார் பாலகிருஷ்ணன் போன்ற இளம் இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி இறுதியாக சிபி சக்கரவர்த்தியை டிக் அடித்து அறிவிப்பும் வெளியானது..

    ரஜினி தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து விட்டதால் குடும்ப செண்டிமெண்ட், காமெடி மற்றும் ஆக்சன் கலந்து இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக செய்திகள் வெளியானது.
    ஆனால் சில நாட்களுக்கு முன்பு திடீரென இந்த படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தியும் வெளியேறி விட்டதாகவும், அஸ்வத் மாரிமுத்து ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது. சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினி கதையில் பல மாற்றங்களை சொன்னதோடு, துரந்தர் போல கதையை மாற்ற சொன்னதால்தான் இந்த படத்திலிருந்து சிபி வெளியேறியதாக சொல்லப்பட்டது..

    ஒருபக்கம் ஏஜிஎஸ் தயாரிப்பில் சிம்புவை வைத்து ஒரு புதிய அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக இருந்தது. அதன் சூட்டிங் விரைவில் துவங்கவிருந்த நிலையில்தான் ரஜினியிடமிருந்து அழைப்பு வந்ததது. இதையடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்திடமும், சிம்புவிடமும் சொல்லிவிட்டு ரஜினி படத்துக்கு தயாரானார் அஸ்வத்து மாரிமுத்து. ஆனால், ரஜினி சொன்ன மாற்றங்களை சிபி சக்ரவர்த்தி செய்து வருவதாகவும் அது ரஜினிக்கு பிடித்து விட்டால் சிபி சக்கரவர்த்தியே இயக்குனராக தொடர்வார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது.

    இதையடுத்து அஸ்வத் மாரிமுத்துவைன் நிலை என்னவாகும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் ஏஜிஎஸ் நிறுவனமும் சரி.. சிம்புவும் வரி.. அஸ்வத்துக்காக காத்திருக்க தயாராக இல்லை.. வேறு இயக்குனரை வைத்து ஒரு படத்தை துவங்கும் முடிவுக்கு வந்து விட்டார்கள். ஒருவேளை சிபி சக்ரவர்த்தியை மீண்டும் ரஜினியை டிக் அடித்துவிட்டால் ரஜினியை நம்பி சிம்பு படத்தை அஸ்வத் இழக்க நேரிடும். எல்லாம் ரஜினியின் முடிவில்தான் இருக்கிறது..

  • இவரையா வேணாம்னு சொன்னேன்!.. வெற்றிமாறனை அசரவைத்த அனிருத்!…

    இவரையா வேணாம்னு சொன்னேன்!.. வெற்றிமாறனை அசரவைத்த அனிருத்!…

    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். தற்போது சிம்புவை வைத்து அரசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வடசென்னையை மையப்படுத்தி உருவாகி வருகிறது. ஏற்கனவே தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் நீட்சியாக இந்த படம் பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு மூன்று கெட்டப்பில் நடிக்கிறார்.. அதில் ஒன்று வயதான கெட்டப் என சொல்லப்படுகிறது கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.. விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்..

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். வெற்றிமாறனை பொறுத்தவரை அவரின் முதல் படத்திலிருந்தே அவரின் படங்களுக்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்து வந்தார். விடுதலை, விடுதலை 2 இரண்டு படங்களுக்கு மட்டுமே இளையராஜா இசையமைத்தார். எனவே ஜிவி பிரகாஷையே இசையமைக்க வைக்கலாம் என வெற்றிமாறன் விரும்பியிருக்கிறார்.. ஆனால் கலைப்புலி தாணுவும், சிம்புவும் அனிருத் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டாராம்..

    ஆனால் இந்த படத்தின் புரமோ வீடியோவுக்கு அவர் கொடுத்த பின்னணி இசை வெற்றிமாறனுக்கு மிகவும் பிடித்துபோய்விட்டதாம். இவரையா வேண்டாம் என நினைத்தோம் என வெற்றிமாறன் நினைத்தாராம்.

  • சம்பளம் ரொம்ப கம்மி!. மணிரத்னத்துக்கு No சொன்ன தனுஷ்!.. என்ன நடந்தது?…

    சம்பளம் ரொம்ப கம்மி!. மணிரத்னத்துக்கு No சொன்ன தனுஷ்!.. என்ன நடந்தது?…

    தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய அளவில் கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவர் இயக்கிய மௌன ராகம், நாயகன் இருவர், தளபதி, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள் இந்திய அளவில் ரசிகர்களிடம் பேசப்பட்டன.
    மணிரத்தினம் ஒரு படத்தை இயக்கினால் உள்ளூர் முதல் வெளியூர் வரை அப்படம் பல விருதுகளை குவிக்கும்.. எனவெ, அவரின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்களும், நடிகைகளும் ஆசைப்படுவார்கள்..

    மணிரத்தினம் இயக்கத்தில் நடிப்பதை அவர்கள் ஒரு கௌரவமாக கருதுகிறார்கள். ஆனால் அப்படி தேடி வந்து வாய்ப்பை தனுஷ் மறுத்திருக்கிறார் என செய்திகள் வெளியே கசிந்திருக்கிறது. தக் லைப் படத்திற்கு பின் ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டிருக்கிறார்.

    அந்த கதையை தனுஷுடம் அவர் சொன்னதாக தெரிகிறது.. கதை பிடித்திருந்தாலும் தனுஷ் கேட்கிற சம்பளத்தை கொடுக்க முடியாது என மணிரத்னம் தரப்பு மறுத்து விட்டதாம். அதன்பின் சிம்புவுடன் பேசி அதுவும் முடியாமல் போய் தற்போது விஜய் சேதுபதியிடம் பேசி ஓகே செய்திருக்கிறார்கள்.

    விஜய் சேதுபதி தற்போது பாக்கெட் நாவல் என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு பின் அவர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை லைக்கான நிறுவனம் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது..

  • Simbu: சிம்பு அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு! அப்டேட் கொடுத்த இயக்குனர்

    இன்று சிம்புவின் பிறந்தநாள் என்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமாக பிறந்த நாள் கொண்டாட்டத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் அவருடைய பிறந்தநாளின் போது அவர் நடித்த சிலம்பாட்டம் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் ஆகின்றது. கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து இந்த திரைப்படம் அவருடைய பிறந்த நாளான இன்று ரீ ரிலீஸ் ஆகின்றது. அதற்கான துவக்க விழாவை சிம்புவின் தந்தை டி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

    அப்போது சிம்புவை பற்றி அவர் உருக்கமாக பேசியிருந்தார். தற்போது சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் வெற்றிமாறன் தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து வருகிறார். அதோடு நாவல் சார்ந்த கதைகளை படமாக எடுத்து மக்களிடம் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறார்.

    தனுஷுக்கு தொடர் வெற்றிகளை கொடுத்து தனுஷை ஒரு ஆக்சன் ஹீரோவாக மக்களிடத்தில் பிரதிபலித்ததில் வெற்றிமாறனுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கின்றது. அதேபோல் சிம்புவுக்கும் இந்த அரசன் திரைப்படம் ஒரு மகத்தான திரைப்படமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அரசன் திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து சிம்புவின் லைன் அப்பில் படங்கள் இருக்கின்றன.

    குறிப்பாக அரசன் திரைப்படத்திற்குப் பிறகு சிம்பு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதனால் சிம்புவின் பிறந்த நாளான இன்று அஸ்வத் மாரிமுத்து அவருடைய x வலைதள பக்கத்தில் சிம்புவுக்கு வாழ்த்துக்களையும் கூறி தன்னுடைய அடுத்த படத்திற்கான அப்டேட் ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார். அரசன் திரைப்படத்தை சீக்கிரம் முடித்துவிட்டு வாருங்கள்.

    உங்களுக்காக நான் காத்திருக்கிறேன். இந்தப் படம் ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். அதோடு படத்தின் தலைப்பு ‘I’ என்ற வார்த்தையில் தொடங்கும் என ஒரு ஹின்டையும் கொடுத்துள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

  • Arasan: மறுபடியும் முதல்லருந்து ஷூட்டிங்!.. வெற்றிமாறன் – சிம்பு குட் காம்பினேஷன்!..

    பொல்லாதவன் படம் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் போன்ற படங்கள் மூலம் இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனராக மாறியவர் வெற்றிமாறன். இவரின் படத்தில் கதாநாயகனை காட்டும் விதத்தைப் பார்த்து பல மொழிகளிலும் உள்ள நடிகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள்.

    ஆனால் ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் இடையே வெற்றிமாறன் நிறைய இடைவெளி விடுவார். மேலும், முழு கதையையையும் எழுதாமலேயே படப்பிடிப்பை நடத்துவார். மேலும் மற்ற இயக்குனர்கள் 6 மாதங்களில் எடுக்கும் படத்தை இவர் இரண்டு வருடங்கள் எடுப்பார். அதனால்தான் இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்களும் யோசிக்கிறார்கள். வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்காமல் போனதற்கு கூட காரணம் இதுதான்.

    விடுதலைப் படத்தில் வெறும் 8 நாட்கள் மட்டும் நடித்தால் போதும் என சொல்லி விஜய் சேதுபதியை கூட்டி வந்து பல மாதங்கள் நடிக்க வைத்தார். மாத கணக்கில் படப்பிடிப்பு நடத்துவார்.. அதை போட்டு பார்த்துவிட்டு ‘திருப்தியாக இல்லை.. மீண்டும் முதலில் இருந்து எடுப்போம்’ என்பார். நடிகர்கள் மிரண்டு போவார்கள்.. விஜய் சேதுபதி, சூரியெல்லாம் அப்படித்தான் விடுதலை மற்றும் விடுதலை 2 படங்களில் நடித்தார்கள்.

    தற்போது சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். கபடி வீரரான சிம்பு வடசென்னைக்கு வந்து ஒரு மோசமான ரவுடியாக மாறுவது போல கதையை வெற்றிமாறன் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது. பல பஞ்சாயத்துக்கு பின் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கியது. கடந்த சில மாதங்களாகவே மதுரை, கோவில்பட்டி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது.

    முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 26ம் தேதி துவங்கவிருக்கிறது. இந்நிலையில் இதுவரை எடுத்ததை போட்டு பார்த்த வெற்றிமாறனுக்கு திருப்தி ஏற்படவில்லையாம். எனவே ஏற்கனவே எடுத்த சில காட்சிகளை மீண்டும் எடுப்போம் என சொல்ல சிம்பு மிரண்டு விட்டாராம்.

    ஏனெனில் சிம்பு அடுத்து ஏஜிஎஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கும் நிலையில்தான் வெற்றிமாறன் பீதியை கிளப்பியிருக்கிறார். ஏற்கனவே சிம்பு ஒரு பக்கம் சரியாக ஷூட்டிங் வரமாட்டார் என்கிற பெயர் இருக்கிறது. வெற்றிமாறனும் வேறு மாதிரி குடைச்சல் கொடுப்பவர்.. இருவரும் சேர்ந்தால் குட் காம்பினேஷன் என சொல்லி சிரிக்கிறது தமிழ் சினிமா வட்டாரம்.

  • Sivakarthikeyan: அப்போ விஜய் இப்போ சிம்பு…சிவகார்த்திகேயனுக்கு போற இடமெல்லாம் பிரச்சனைதானா?

    விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையின் மூலமே ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர் மெரினா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வந்த 3 படத்தில் காமெடி வேடத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனின் நட்புக்காக தனுஷ் அவரை எதிர் நீச்சல் படம் மூலம்
    நாயகனாக உருவாக்கினார். தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் காக்கிசட்டை படத்திலும் நடித்தார். ஒரு கட்டத்தில் தனுஷுடன் நட்பு முறிவு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பொங்கலையொட்டி அவர் நடிப்பில் வெளிவந்த படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தோல்வியை தழுவியது. முன்னதாக விஜய் நடிப்பில், ஜனநாயகன் படத்துடன் இப்படம் வருவதாக இருந்தது. இதனை பலரும் விமர்சித்தனர். விஜய் கடைசி படம் என்பதால் சிவகார்த்திகேயன் தனது படத்தை சில நாட்கள் கழித்து வெளியிடலாமே என்று பலரும் கூறினர். இது சமூகவலைதளங்களில் விவாத பொருளாக மாறியது. விஜய் ரசிகர்களும் பராசக்தி படத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர்.

    simbu

    இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சிவகார்த்திகேயன் மாநாடு படம் முதலில் என்னிடம்தான் வந்தது. ஆனால் நான்தான் சிம்பு பிரதர் இப்படத்திற்கு சரியானவராக இருப்பார் என்று இயக்குனரிடம் கூறினேன் என்று பேட்டி அளித்தார். இதனை பிடித்துக் கொண்ட சிம்பு ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Arasan: மதுரையில் மாஸ் பண்ணும் சிம்பு.. ஒரே கறி விருந்து சாப்பாடுதான்.. ரசிகர்கள் உற்சாகம்

    சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் அரசன். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது. முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றது. சமீபத்தில் தான் இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இணைந்தார். ஏற்கனவே ஆண்ட்ரியா, கிஷோர், சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்த நிலையில் விஜய் சேதுபதியும் படப்பிடிப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால் சிம்புவை பார்க்க ரசிகர்கள் ஏராளமானோர் நாள்தோறும் அங்கு குவிந்து விடுகின்றனர். இருந்தாலும் ரசிகர்களுக்காக தன்னுடைய நேரத்தையும் ஒதுக்கி அவர்களை சந்தித்து தொடர்ந்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறார். முன்பு மாதிரி இல்லாமல் அரசன் திரைப்படத்தில் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் நடிப்பையும் கொடுத்து வருகிறார் சிம்பு.

    இந்த படம் மட்டும் வெற்றியடைந்து விட்டால் மாநாடு திரைப்படம் எப்படி சிம்புவுக்கு ஒரு சிறந்த கம்பேக்காக இருந்ததோ அதைப்போல அரசன் திரைப்படத்திற்கு பிறகு ஒரு அசைக்க முடியாத கலைஞராக மாறிவிடுவார் சிம்பு. சமீபத்தில் தான் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழு ரிலீஸ் செய்தார்கள். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

    வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அதில் ஆக்சன் காட்சிகள் நிறையவே இருக்கும். முதல் போஸ்டரிலேயே படம் எப்படிப்பட்ட படமாக வரப் போகிறது என தெரிந்துவிட்டது. போஸ்டரில் சிம்புவின் முகம் முழுவதும் ரத்தக்கரை படிந்த நிலையில் இருந்தது. அதிலிருந்து இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் மதுரையில் சிம்பு, ரசிகர்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறார்.

    அந்த கூட்டத்தில் சிம்புவின் ரசிகர்கள் பல பேர் வந்து சிம்புவை சந்தித்தனர். ரசிகர்களுக்காக தடபுடலாக கறிவிருந்து சாப்பாடும் ஏற்பாடு செய்திருந்தார் சிம்பு. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் சிம்பு தன் ரசிகர்களை சந்தித்திருக்கிறார்.

    இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DSjh9EqEszI/?igsh=ODR3ZHBjem92eW9k

  • Simbu:நல்லாதானே போய்கிட்டு இருக்கு! தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கும் சிம்பு

    தற்போது சிம்பு அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் சிம்பு கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அது ஒரு தனி மாஸ். இதுவரை அவர் எடுத்த படங்கள் எல்லாமே மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு மாபெரும் வெற்றியும் பெற்றிருக்கிறது .அந்த வகையில் சிம்பு வெற்றிமாறனுடன் இணைந்து இருப்பது சிம்புவுக்கு தான் ஒரு பிளஸ்.

    ஏனெனில் ஒரு நல்ல கம்பேக்குடன் சிம்பு மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். இதை அவர் சரியாக பயன்படுத்தி விட்டால் அவருடைய ரேஞ்சே வேறு மாதிரி மாறிவிடும். ஏற்கனவே விஜய் இப்போது அரசியலில் இறங்கி விட்டதால் விஜயின் இடம் காலியாக இருக்கும். அந்த இடத்திற்கு யார் வருவார்கள் என்ற ஒரு போட்டியே இப்போது தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது.

    அதை சிம்பு தக்க வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். அதற்கு அவருடைய ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். இனிவரும் காலங்களில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிம்பு நடித்தால் ஒழிய அவருடைய மார்கெட்டை தக்க வைத்துக்கொள்ள முடியும். இந்த நிலையில் அரசன் திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் அடுத்தடுத்த ப்ராஜெக்ட் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    அரசன் திரைப்படத்திற்கு பிறகு சிம்பு அஸ்வத் மாரிமுத்துவுடன் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். ஏற்கனவே தேசிங்கு பெரிய சாமியுடன் ஒரு படத்தில் கமிட்டாகி அந்த படம் டேக் ஆஃப் ஆகாமலேயே இருக்கிறது. இதற்கிடையில் இன்னொரு புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அஸ்வத் மாரிமுத்துவுக்கு பிறகு சிம்பு ஏ ஆர் முருகதாஸுடன் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

    அது சிம்புவின் 52 ஆவது படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் துப்பாக்கி படத்திற்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் எழுந்து மேலே வரவே இல்லை. கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய மதராசி திரைப்படமும் பெருசாக போகவில்லை. ஹிந்தியிலும் சல்மான்கான் நடிப்பில் சிக்கந்தர் என்ற படத்தை எடுத்தார்.

    அது அட்டர் ஃபிளாப்பானது. இப்படி அடுத்தடுத்து தோல்விகளையே கொடுத்து வரும் முருகதாஸுடன் சிம்பு இணைவது சரியாக இருக்குமா? இப்போதுதான் அவர் சரியான ரூட்டை பிடித்து போய்க் கொண்டிருக்கிறார். இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஏன் சிம்பு ரிஸ்கை எடுக்கிறார் என்ற ஒரு கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்து வருகிறது,

  • வேறலெவல் லுக்கில் சிம்பு!.. அரசன் ஷுட்டிங் ஸ்டார்ட்!.. வைரல் போட்டோஸ்!..

    சிம்பு நடிக்கும் ஒரு படம் அறிவிக்கப்பட்டு, அது படப்பிடிப்பு துவங்கி எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்து எந்த சிக்கலும் இல்லாமல் படம் வெளியானதாக இதுவரை சரித்திரம் இல்லை. சிம்புவின் படங்களுக்கு அவரே எமனாக இருப்பார், ஒழுங்காக ஷூட்டிங் போக மாட்டார்.. திடீரென அதிக சம்பளம் கேட்பார்.. தயாரிப்பாளருடன் பிரச்சனை செய்வார் என சிம்புவை பற்றி பல புகார்கள் இப்போதும் திரையுலகில் உண்டு.

    எனவேதான் சிம்பு நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாவது இல்லை. பத்து தலை படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கழித்து தக் லைப் வந்தது. அந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை.
    அந்த படம் வெளியாகி ஆறு மாதங்கள் கழித்து இப்போதுதான் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் ஷூட்டிங் துவங்கியிருக்கிறது.

    கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்க அரசன் என்கிற படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல மாதங்கள் பல காரணங்களால் ஷூட்டிங் துவங்கப்படவில்லை
    . சிம்புவோ துபாயிலேயே இருந்தார். அதேநேரம் அந்த படத்தின் புரோமோஷன் வீடியோ மட்டும் வெளியானது.

    கடந்த 2 வருடங்களாக நீண்ட தலைமுடி, தாடி வளர்த்திருந்த சிம்பு தற்போது அதை எல்லாம் மழித்துவிட்டு சாக்லேட் பாய் லுக்குக்கு மாறியிருக்கிறார். மலேசியாவில் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு சென்று சிம்பு அஜித்தை சந்தித்த புகைப்படங்களும் வெளியானது.

    ஒருபக்கம், சமீபத்தில் அரசன் படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் துவங்கியது. தற்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களை படக்குழு வெளியிட்டிருக்கிறது.