Tag: singam puli

  • இந்த சீனை ஏன்டா டெலிட் பண்ணீங்க!.. தாய் கிழவி டெலிட்டேட் சீன் செம Fun!…

    இந்த சீனை ஏன்டா டெலிட் பண்ணீங்க!.. தாய் கிழவி டெலிட்டேட் சீன் செம Fun!…

    சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முக்கிய வேடத்தில் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தாய் கிழவி. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே புரடெக்‌ஷன் நிறுவனம் சார்பில் வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் ராதிகாவின் கெட்டப் பாராட்டை பெற்றது. மேக்கப் மன்னன் உலக நாயகன் கமலஹாசனே ராதிகாவின் மேக்கப்பை பாராட்டியிருந்தார். அதோடு படத்தை பார்த்து ராதிகா சிவஜ்குமார் முருகேசன், சிவகார்த்திகேயன் என அனைவரையும் அவர் பாராட்டிய வீடியோக்களும் வெளியானது..

    தாய் கிழவி படத்தில் சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களையும் சொல்லியிருப்பதால் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.. விரைவில் இப்படம் 100 கோடி வசூலை பெறவும் வாய்ப்புண்டு. இந்நிலையில்தான், இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சி தற்போது வெளியாகியிருக்கிறது.

    தீவிர கமல் ரசிகரான சிங்கம் புலி மருத்துவமனையில் ஒரு அறையின் வாசலில் வெளியே நின்று அழுது கொண்டிருக்க அங்கு வரும் அவரின் ஒரு சகோதரர்களும் அழுது கொண்டே ராதிகாதான் இறந்துவிட்டார் என நினைத்து அவர்களும் சேர்ந்து அழ சிங்கம் புலியோ ‘பிக்பாஸ்ல கமலை தூக்கிட்டு விஜய் சேதுபதியை போட்டு விட்டார்கள்.. கமல் அளவுக்கு இந்த பைய பண்ணுவானா?’ என சொல்ல கடுப்பான அவர்கள் அவரை போட்டு அடிக்கிறார்கள்.

    செம ஜாலியாக இருக்கும் இந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
    விஜய் சேதுபதியை மட்டம் தட்டுவது போல் இருப்பதால் இந்த காட்சி நீக்கப்பட்டிருக்கலம் எனத்தெரிகிறது. ‘இந்த காட்சியை ஏன்டா டெலிட் பண்ணீங்க?’ என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..

  • சும்மா பேசுறதுக்கு சம்பளம் கொடுத்த அஜித்!.. நடிகர் சொன்ன ஆச்சர்ய தகவல்!…

    சும்மா பேசுறதுக்கு சம்பளம் கொடுத்த அஜித்!.. நடிகர் சொன்ன ஆச்சர்ய தகவல்!…

    அஜித்தை வைத்து ரெட் திரைப்படத்தை இயக்கியவர் சிங்கம் புலி. ராம் சத்யா என்கிற பெயரில் அந்த படத்தை இயக்கியிருந்தார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர் சினிமாவில் கதாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குனர், இயக்குனர், நடிகர் என பல வேலைகளை செய்தவர். இயக்குனர் பாலா, சுந்தர்.சி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பவர். அவர்களின் பல படங்களில் இவர் வேலை பார்த்துள்ளார். நான் கடவுள் திரைப்படத்தில் கூட பிச்சைக்காரராக நடித்திருந்தார்..

    விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் கூட இவருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த சிங்கம் புலி அஜித்தை பற்றி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். ‘
    ரெட் படத்திற்கு மின் திடீரென ஒரு நாள் அஜித் சாரிடமிருந்து அழைப்பு வந்தது.. அப்போது சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.. அப்போது பில்லா 2 படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து கொண்டிருந்தது.. நான் 30 நாட்கள் அஜித் சாரோடு தங்கியிருக்க வேண்டும் என சொல்லி சுரேஷ் சந்திரா அழைத்தார்.. நானும் கோவாவுக்கு போனேன்.. அஜித் சாருக்கு அடுத்து எனக்கு ரூம் போட்டு கொடுத்தார்கள்.

    அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் முப்பது நாட்களும் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.. காலை முதல் சாயந்திரம் வரை என்னிடம் பேசிக் கொண்டிருப்பார். அதன் பின் ஷூட்டிங் போயிட்டு மீண்டும் காலை வருவார்.. மீண்டும் பேசுவோம்.. நிறைய திரைப்படங்களைப் பற்றி பேசுவார்.. ‘ஒரு படம் வந்திருக்கே. அது என்ன கதை?’ எனக்கேட்பார்.. தெலுங்கு படங்கள் பற்றி விசாரிப்பார்.

    சில ஹாலிவுட் படங்களை போட்டு காட்டி சண்டை காட்சியை எப்படி எடுத்திருக்கிறாங்க பாரு’ என்பார். 30 நாட்கள் முடிந்தவுடன் எனக்கு ஒரு சம்பளத்தையும் கொடுத்தார். ‘நான் நடிக்கவே இல்லையே.. சும்மா பேசிக் கொண்டிருந்தேன் எனக்கு எதற்கு காசு?’ என்று கேட்டேன்.. நீங்க நிறைய படங்களை விட்டுவிட்டு வந்திருக்க்க.. இது அதுக்கான சம்பளம்’ என்று சொன்னார். ‘அடுத்த படத்துக்கும் என்ன கூப்பிடுங்க’ ன்னு சொன்னேன். ‘என்னா இப்படி ஆரம்பிச்சிட்டே’ என்றார். அவரோடு நேரம் செலவழித்தது பசுமையான நினைவுகள்’ என அவர் பேசியிருக்கிறார்.

  • அஜித் படத்த எடுத்து முடிக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே!.. புலம்பிய இயக்குனர்…

    அஜித் படத்த எடுத்து முடிக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே!.. புலம்பிய இயக்குனர்…

    திரையுலகில் நடிகர், இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா என பல அவதாரங்கள் எடுத்தவர் சிங்கம் புலி. இயக்குனர் பாலாவுக்கு நெருக்கமானவர் இவர். பாலா இயக்கிய பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களில் இணை இயக்குனராக வேலை செய்திருக்கிறார். நான் கடவுள் படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அதன் பின் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், மிளகாய், தூங்கா நகரம், முத்துக்கு முத்தாக, மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களிலும் சிங்கம் புலி நடித்திருக்கிறார்.

    தேசிங்கு ராஜா படத்தில் இவர் ஒரு திருமண பந்தியில் சாப்பிடும் காட்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். அவர் ‘பாயாசம் எங்கடா’ என்று கேட்கும் அந்த காட்சி தொடர்பான புகைப்படத்தை இப்போதும் பலரும் மீம்சில் பயன்படுத்துகிறார்கள். அஜித் நடிப்பில் வெளியான ரெட் திரைப்படத்தை ராம் சத்யா என்கிற பெயரில் இயக்கியவர் இவர்தான்.

    Singampuli
    Singampuli

    அதன் பின் சூர்யா, ஜோதிகாவை வைத்து மாயாவி என்கிற படத்தையும் சிங்கம் புலி இயக்கினார்.. அதன்பின் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்திலும் நெகட்டிவ் வ்ஏடத்தில் நடித்து பலரின் கோபத்திற்கும் ஆளானார். தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள தாய் கிழவி படத்தின் ராதிகாவின் மகன்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.

    இந்நிலையில் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிங்கம் புலி ‘தாய் கிழவி படத்தைப் பொறுத்தவரை நான் இயக்குரிடம் கதை கூட கேட்கவில்லை.. கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது.. சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார் என்பது மட்டும்தான் தெரியும். நான் ஏன் கதையை கேட்கவில்லை என்றால் அஜித் சாரை வைத்து ரெட் படத்தை இயக்கியபோது கிட்டத்தட்ட 600 பேரிடம் கதை சொல்லியிருப்பேன். அங்க போய் சொல்லு.. இங்க போய் சொல்லு என்று கடைசியில் பூசாரி வரைக்கும் கதை சொன்னேன்.. படம் முடியு|றதுக்குள்ள எனக்கே கதையை மறந்து போயிடுச்சி.. அந்த நேரத்தில் நான் பட்ட பாடு இருக்கே… ஐயோ’ என ஜாலியாக பேசியிருக்கிறார்.

  • வேறவேலை செய்யப்போய் கவுண்டமணியுடன் முதல் வாய்ப்பு!.. சூரிக்கு ஒரு பிளாஷ்பேக்!..

    வேறவேலை செய்யப்போய் கவுண்டமணியுடன் முதல் வாய்ப்பு!.. சூரிக்கு ஒரு பிளாஷ்பேக்!..

    மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிப்பது, சுண்ணாம்பு அடிப்பது உள்ளிட்ட பல வேலைகளை செய்து சினிமாவில் வாய்ப்பு தேடியவர்தான் சூரி. சினிமாவில் சின்ன சின்ன எடுபிடி வேலைகளையும் கூட சூரி செய்திருக்கிறார். அவரின் விக்கிபீடியாவுக்கு போய் பார்த்தால் முதல் 10 படங்கள் லிஸ்டில் ‘அன்கிரெடிட் ரோல்; என இருக்கும். அதாவது ஒரு காட்சியில் வந்து போய் இருப்பார்..

    லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த ஜி படத்தில் சூரி கல்லூரி மாணவர்களில் ஒருவராக நடித்திருக்கிறார் என்பது கூட பலருக்கும் தெரியாது. எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான். அப்படிப்பட்ட சூரிக்கு கைகொடுத்த திரைப்படம் வெண்ணிலா கபடிக் குழு. அந்த படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி பரோட்டா சூரியாக மாறினார். அதன்பின் சூரியின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. தொடர்ந்து திரைப்படங்களில் காமெடி செய்து வந்த சூரி விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்..

    இந்நிலையில், நடிகர் மற்றும் இயக்குனர் சிங்கம் புலி பேட்டி ஒன்றில் பேசியபோது ‘சுந்தர்.சி இயக்கத்தில் கண்ணன் வருவான் என்கிற படத்தில் நான் கதை, வசனம் எழுதினேன். அதோட அந்த படத்துக்கு நான் இணை இயக்குனர்.. அப்போது அந்த படத்தில் ஒரு சின்ன வேலை செய்வதற்காக சூரி வந்தார். ‘எங்க ஊரு பையன் சார்’ அப்படின்னு சொல்லி அந்த படத்துல கவுண்டமணி கூட ஒரு சீன்ல அவரை நடிக்க வச்சேன். தம்பி எந்த பேட்டி கொடுத்தாலும் அதை சொல்றாரு.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு’ என சொல்லியிருக்கிறார்…

  • ஜெயிச்சுட்டா உங்கள வந்து சந்திப்பேன்.. அஜித்திடம் சவால் விட்ட நடிகர்! கடைசில என்னாச்சு தெரியுமா?

    Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

    விடாமுயற்சி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் இந்த வருடம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் அடுத்த வருடம் பொங்கல் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விடாமுயற்சி  படத்தை பொருத்தவரைக்கும் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலம் அந்தப் படத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழ இப்போதுதான் அதற்கு தீர்வு கிடைத்திருக்கிறது.

    இதையும் படிங்க: ஹாலிவுட் லெவல்ல சிவாஜி படம் இருக்கேன்னு பாராட்டிய புரட்சித்தலைவர்… என்ன படம்னு தெரியுமா?

    இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு அஜர்பைஜான் சென்றிருக்கிறது. இந்த நிலையில் அஜித்தை பற்றி ஒரு சுவாரசிய தகவலை பிரபல இயக்குனரும் நடிகருமான சிங்கம் புலி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம்  ‘உன்னை தேடி’. அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மாளவிகா நடித்திருப்பார்.

    சுந்தர் சி படங்கள் எல்லாமே காமெடி கலந்த கமர்சியல் படங்களாக அமைந்திருக்கும். அதே போல தான் உன்னை தேடி திரைப்படமும் காமெடியோடு காதல் செண்டிமெண்ட் என ஒரு ஃபுல் பேக்கேஜ் ஆக அந்த படத்தை கொடுத்திருப்பார் சுந்தர் சி. ஆனால் முதலில் இந்த படம் ஓடுமா ஓடாதா என்ற ஒரு சந்தேகத்திலேயே அஜித் நடித்தாராம் .

    இதையும் படிங்க:விஜயை பத்தி பேசினா ‘மூடிட்டுப் போ’ன்னு சொல்லுவாரு அஜித்!.. ரகசியத்தை பகிர்ந்த நடிகர்!..

    படத்திற்கான முழு ஸ்கிரிப்ட்டையும் சிங்கம்புலி தான் எழுதியிருந்தாராம். அதனால் சிங்கம்புலியிடம் அஜித்  ‘அடிக்கடி இந்த படம் ஹிட் ஆகுமா ஆகாதா’ என கேட்டுக்கொண்டே இருப்பாராம். அதற்கு சிங்கம் புலி  ‘இந்த படம் ஒரு வேளை ஹிட்டானால் மறுபடியும் உங்களை வந்து சந்திக்கிறேன். அப்படி படம் ஓடவில்லை என்றால் உங்கள் பக்கமே நான் வரமாட்டேன்’ என்று கூறினாராம்.

    singam
    singam

    ஆனால் உன்னை தேடி திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் வெற்றியடைய அந்த படத்தின் வெற்றி விழாவிற்கு அஜித் உட்பட அனைவரும் கலந்து கொண்டார்களாம். அப்போது அஜித் மெதுவாக சிங்கம்புலி அருகில் வந்து  ‘அடுத்ததாக நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம். அதற்காக கதையை தயார் செய்யுங்கள்’ என கூறினாராம். அதன் பிறகு வந்த படம் தான் ரெட் என சிங்கம் புலி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

    இதையும் படிங்க: கோட் படத்தை கைவிட்ட கலாநிதிமாறன்!.. சாட்டிலைட் உரிமை மட்டும் இவ்வளவு கோடியா?!.