Tag: SPB

  • குரல் சரியில்லேயே… இதெல்லாம் எடுபடுமா? எம்ஜிஆர் சொன்ன எஸ்பிபியின் செய்த சாதனை..!

    குரல் சரியில்லேயே… இதெல்லாம் எடுபடுமா? எம்ஜிஆர் சொன்ன எஸ்பிபியின் செய்த சாதனை..!

    பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எப்படிப்பட்ட குரலுக்குச் சொந்தக்காரர் என்றும் அவருடைய இசைத்திறனுக்கு எத்தனை இசை ரசிகர்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அப்படிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலையே ஒரு காலகட்டத்தில் விமர்சித்தவர்கள் பலர் இருக்காங்க.

    இதை எம்ஜிஆரே ஒரு விழாவில் வெளிப்படுத்தியுள்ளார். சங்கராபரணம் படத்திலே மிகச்சிறப்பாகப் பாடியதற்காக குடியரசுத்தலைவரின் விருதும், பாராட்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குக் கிடைத்தது. அப்படி விருது கிடைத்த போது சென்னையிலே அதையொட்டி ஒரு பாராட்டு விழா அவருக்கு நடந்தது.

    அந்த விழாவில் எம்ஜிஆர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, இன்று இந்த விழாவில் பாராட்டு பெறும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்னுடைய அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடல் பதிவு முடிந்து அதை நான் கேட்டுக் கொண்டு இருந்த போது இந்தக் குரல் எல்லாம் சினிமா உலகத்திலே எங்கே எடுபடும் என்று என் காதுபடவே விமர்சித்தவர்கள் பலர் உண்டு.

    அந்த விமர்சனங்களை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ளாமல் அவருடைய குரலை நான் பயன்படுத்தினேன். ஆனால் அன்றைக்கு யார் யாரெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை விமர்சித்தார்களோ, அவர்கள் எல்லாம் பின்னாளில் எஸ்.பி.பி.யை தங்களது படங்களில் பாட வைத்தார்கள். அப்படிப் பாட வைத்ததுதான் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சாதனை என்று பாராட்டினார் எம்ஜிஆர்.

  • வைரமுத்து எழுதிய பாடலை முதலில் பாட மறுத்த எஸ்பிபி… ஆனா அதுதான் வேற லெவல் ஹிட்..!

    கண்ணதாசனை ‘கவியரசர்’ என்கிறார்கள். ஆனால் வைரமுத்துவை ‘கவிப்பேரரசர்’ என்கிறார்கள். இருவருமே சிறந்த கவிஞர்கள் தான். முன்னவர் நம் தாத்தா பாட்டி காலத்தைக் கட்டிப் போட்டிருந்தார். பின்னவர் 80, 90ஸ் குட்டீஸ்களையும் கட்டிப் போட்டு இருந்தார். ஆனால் இருவரின் பாடல்களும் இப்போது கேட்டாலும் நம்மை ரசிக்க வைக்கும் என்பதுதான் இவர்களின் தனித்துவம்.

    அந்த வகையில் வைரமுத்து எழுதிய ஒரு பாடல் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பிபி.யையே மிரண்டு போக வைத்துவிட்டது. அது என்ன பாடல்? என்ன படம் என்று பார்க்கலாமா…

    1999ல் அஜீத், ஷாலினி நடிப்பில் வெளியான படம் அமர்க்களம். சரண் இயக்கிய இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. படத்தின் கதை சுவாரசியமாக இருந்தது. ஒரு ரவுடி காதல்வயப்பட்டால் என்ன நடக்கும் என்பதுதான் கதை.

    படத்தில் அஜீத்குமார், ஷாலினி, நாசர், ரகுவரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின்போது தான் அஜீத், ஷாலினி இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து அவர்களும் திருமணம் செய்து கொண்டனர்.

    அமர்க்களம் படத்திற்கு பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். அவற்றில் ஒரு முக்கியமான பாடல் தான் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’. இந்தப் பாடல் உருவான விதம் சுவாரசியம்.

    ஒருமுறை வைரமுத்து காரில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவருக்கு வந்த ஒரு பார்சலைப் பிரித்துள்ளார். உடனே அருகில் இருந்தவர் ‘கவிஞரே இதுல இருந்து பூதம் கிளம்பினா என்ன செய்வீங்க? அதுகிட்ட என்ன கேட்பீங்க’ன்னு கேட்டுள்ளார்.

    அப்போது கவிஞருக்கு மனதில் தோன்றியது தான் இந்தப் பாடல். இதைப் படித்துப் பார்த்ததும் இயக்குனர் சரண் ‘தனது கதையின் நாயகனுக்கும், அதே போல பாடல் தேவைப்படுகிறது. இந்தப் பாடலை அப்படியே படத்தில் வைங்க’ன்னு சொல்கிறார். அதற்கு இந்தப் பாடலை பரத்வாஜ் பாடியே காட்டுகிறார். ஆனா இவ்ளோ பெரிய பாட்டை யார் பாடுவாங்கன்னு அவங்களுக்கே சந்தேகம் வருது.

    அப்புறம் எஸ்பிபி தான் இதற்கு சரியான ஆள்னு நினைச்சி அவரிடம் பேசுறாங்க. ஆனா பாடலைப் பார்த்ததும் அவர் மிரண்டு போய்விட்டார். ‘இவ்ளோ பெரிய பாடலை எல்லாம் என்னால பாட முடியாது’ன்னு சொல்லி விட்டார். அப்புறம் எஸ்பிபியை பரத்வாஜ், எப்படியோ சமாதானப்படுத்திப் பாட வைத்து விட்டார்.

    பாடலைப் பாடும்போது அருகில் இருந்து கேட்ட இயக்குனர் சரண் பாடலைப் பாடி முடித்ததும் எஸ்பிபி காலில் விழுந்து வணங்கினாராம். அடேங்கப்பா எவ்ளோ பெரிய பாடலை இவ்ளோ அற்புதமா பாடிட்டாரு எஸ்பிபின்னு அனைவருக்குமே பெரிய ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது என்றால் மிகையில்லை.

  • பாடும் நிலாவையே மிரள வைத்த இசைஞானி… இளமை இதோ இதோ பாடலின் பின்னணி…

    இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று நெல்லையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருக்க இடம் கூட கிடைக்காமல் நின்றபடி பலரும் ரசித்தனர். மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி சரியாக 10 மணிக்கு முடிந்தது. இசை மழையில் ரசிகர்களை நனைய வைத்துவிட்டார் இசைஞானி இளையராஜா என்றே சொல்ல வேண்டும்.

    ஆட்டம்: நெல்லை மக்களுக்கு இது புதுசு என்பதால் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். ஏஞ்சோடி மஞ்சக்குருவி, காட்டுக்குயிலு போன்ற பாடல்களுக்கு அவர்கள் போட்ட ஆட்டம் சொல்லி மாளாது. இளையராஜாவும் அவ்வப்போது சில சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

    வழக்கமாக ‘ஜனனீ ஜனனீ’ பாடலுடன் தொடங்கிய இளையராஜா அடுத்த பாடலில் ரசிகர்களிடம் உற்சாகத்தைக் கொண்டு வர நான் கடவுள் ‘ஓம் சிவோஹம்’ என்ற பாடலைப் போட்டார்.

    இளமை இதோ இதோ: அதன்பிறகு ரசிகர்களைக் குஷி படுத்த வேண்டும் என்று ஹேப்பி நியூ இயர் இளமை இதோ இதோ என்று கமலின் அக்மார்க் பாடலைப் போட்டார். எஸ்.பி.சரண் பாடினார். இந்தப் பாடலைப் பற்றி இளையராஜா பேசும்போது இந்தப் பாடல் கம்போசிங்கின்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு அந்த தகஜிகு தகஜிகுக்கு அவ்வளவு ரிகர்சல் கொடுத்தோம்.

    பயந்த பாலு: அவரும் ஒரு கட்டத்தில் பயந்தபடி என்ன இப்படி சொல்றீங்களே என்று ஒரு வழியாக சிரத்தையுடன் பயிற்சி எடுத்து பாடி முடித்தார். அந்த ‘தகஜிகு தகஜிகு’ மட்டும் ஒன்றரை பக்கத்துக்கு நோட்ஸ் வரும். அதைப் பார்த்த போது முதலில் பாலு பயந்தே போய்விட்டார். அப்புறம் நாங்க கொடுத்த உற்சாகத்தில் பாடி முடித்தார். எனக்கு திருப்தி வர்ற வரைக்கும் விடமாட்டேன்.

    எஸ்.பி.சரண்: அது பாலுவா இருந்தாலும் சரி. அவங்க மகனா இருந்தாலும் சரி என்று இளையராஜா சிரித்தபடி சொன்னார். அப்போது எஸ்.பி.சரண் சிரித்துக்கொண்டார். அவரும் ‘எங்க அப்பா தான் உங்கக்கிட்ட பாட அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார்’ என்றார்.

    ‘ஏன்… ஜாலியா பாடிட்டுப் போக வேண்டியதுதானே’ன்னு சொன்னார் இளையராஜா. அதான் ‘அந்த தகஜிகு தகஜிகு இருக்குல்ல’ன்னு சிரித்தபடி சொன்னார். பாடும் நிலா என்றால் பாலுதான். அவருக்கே இந்த நிலைமையா என்றே எண்ணத் தோன்றுகிறது.

  • எஸ்.பி.பிக்காக தன்னையே மாற்றிக் கொண்ட நடிகர் திலகம்!. இந்த பாட்டுக்கு இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!..

    எஸ்.பி.பி எனும் ஆளுமை: சினிமாவில் ஒவ்வொரு துறையிலும் ஒரு ஆளுமைகள் இருப்பார்கள். நடிப்புத்துறையில் அந்த காலம் முதல் இப்போது வரை எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என சொல்லிக்கொண்டே போகலாம். அதே போல் இசைத்துறையில் இளையராஜா, ஏஆர் ரஹ்மான். அப்படி பாட்டுத்துறையில் பல சாதனைகளை படைத்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் முதன்முதலில் எம்ஜிஆருக்காக பாடிய பாடல் என்றால் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல். அதை போல் சிவாஜிக்காக முதன் முதலில் பாடிய பாடல் ‘பொட்டு வைத்த முகமோ’ என்ற பாடல். இது சுமதி என் சுந்தரி படத்திற்காக பாடியிருந்தார்.

    சிவாஜி சொன்ன தைரியம்: அந்தக் காலத்தில் பெரும்பாலும் சிவாஜிக்கு டி.எம். சௌந்தர்ராஜன் தான் பாடல்களை பெரும்பாலும் பாடியிருப்பார். அவர் குரல் எவ்வளவு கம்பீரமாக இருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். அதற்காக டி.எம். சௌந்தராஜன் மாதிரி பாடி எஸ்.பி.பி தன்னுடைய தனித்திறமையை இழந்துவிடக்கூடாது என்பதற்காக சிவாஜி எஸ்.பி.பிக்கு தைரியம் சொன்னாராம். உன் குரலிலேயே பாடு. வாய்ஸ் மாற்றி பாட வேண்டாம். உன் குரலுக்கு ஏற்ப நான் என்னுடைய நடிப்பில் மாற்றிக் கொள்கிறேன் என்று தைரியம் சொன்னாராம் சிவாஜி.

    டி.எம்.எஸ் சிவாஜி பெஸ்ட்: அதுவரை டி.எம்.எஸ் , சிவாஜி காம்போவையே விரும்பிய மக்களுக்கு ஒரு வித்தியாசமான புது அனுபவத்தை பொட்டு வைத்த முகமோ பாடல் தந்தது. சுமதி என் சுந்தரி படத்திற்காக எஸ்.பி.பியை சிவாஜிக்காக பாட வைத்தது எம்.எஸ்.விஸ்வநாதன்தானாம். அவரது இசையில்தான் பெரும்பாலும் சிவாஜிக்காக டி.எம். எஸ் அதிக பாடல்களை பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஆனாலும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய சில பாடல்கள் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தது. அதில் வாழ்க்கை படத்தில் சிவாஜிக்காக எஸ்.பி.பி பாடிய பாடல் அன்பிருக்கும் என்ற பாடல். அது இன்று வரை சிவாஜி ரசிகர்களாலும் எஸ்.பி.பி ரசிகர்களாலும் கொண்டாடப்படக் கூடிய பாடலாகவே அமைந்திருக்கிறது. அதை போல் ஜல்லிக்கட்டு படத்திலும் ஹேய் ராஜா ஒன்றானோம் இன்று என்ற பாடல்.

    ஆனால் இந்தப் பாடல் எஸ்.பி.பியும் மனோவும் சேர்ந்து பாடியிருந்தார்கள். இதுவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்திருக்கிறது. எஸ்.பி.பியை பொறுத்தவரைக்கும் அவர் சுலபமாகத்தான் இந்த சினிமாத்துறையில் வந்துவிட்டார் என்றுதான் தோன்றும். ஆனால் அதுதான் இல்லை. ஆரம்பகாலங்களில் எல்லா கலைஞர்களும் எப்படிப்பட்ட போராட்டத்தை சந்தித்துவிட்டு சினிமாவிற்குள் நுழைகிறார்களோ அப்படித்தான் எஸ்.பி.பியும் நுழைந்தார். ஏகப்பட்ட அவமானங்கள், கஷ்டங்கள் எல்லாம் கடந்துதான் எஸ்.பி.பி இன்று வரை ஒரு மகத்தான கலைஞனாக திகழ்ந்து வருகிறார்.

  • பாட முடியாமல் காய்ச்சலால் அவதிப்பட்ட எஸ்.பி.பி… எம்ஜிஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

    பாடும் நிலா பாலு என்று அழைக்கப்படும் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் 80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ்சினிமா ரசிகர்களைத் தன்னகத்தே ஈர்ப்புடன் வைத்து இருந்தார். அவரது குரல் அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும்.

    அந்த வகையில் அருமையாக இருக்கும். குறிப்பாக அவர் ரஜினிக்குப் பாடினால் அவரோட வாய்ஸ் மாதிரி இருக்கும். கமலுக்குப் பாடினால் கமல் வாய்ஸ் மாதிரி இருக்கும்.

    மோகனுக்குப் பாடினால் மோகன் வாய்ஸ் மாதிரி இருக்கும். ஆனால் அவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் பாடியுள்ளார். அது தான் அவரது முதல் பாடலும் கூட.

    அது என்ன பாடல்? அதற்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி? அந்தப் பாடலைப் பாடுவதற்குள் எத்தகைய சிரமங்களை அனுபவித்தார் என்று பார்ப்போம். இதை எஸ்பிபி.யே பேட்டி ஒன்றில் இப்படி தெரிவித்துள்ளார்.

    ஒருமுறை தமிழ் பாடலை தெலுங்கு டப்பிங்கிற்காகப் பாடிக் கொண்டு இருந்தேன். அதைக் கேட்ட எம்ஜிஆர் ‘இது நம்ம படத்தின் பாடலா இருக்கே. யாரு பாடினான்னு பார்த்துட்டு வா’ன்னு சொல்லி ஒருவரை அனுப்பினார்.

    அவரும் பார்த்து விட்டு வந்து தெலுங்கு டப்பிங் வேலை நடக்கிறது என்றார். அதன்பிறகு சிறிது நாள்களுக்குப் பிறகு அடிமைப்பெண் படத்தின் இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவனிடம் என்னைப் பற்றி விசாரித்து வர அனுப்பினார்.

    அதற்கு கே.வி.மகாதேவன் ‘அந்தப் பையன் நல்லா பாடக்கூடியவன்’ என்று சொல்கிறார். உடனே ‘அவனுக்கு இந்தப் பாடலைப் பாட வாய்ப்பு கொடுங்கள்’ என்று எம்ஜிஆர் கூறினார். ராமாவரம் தோட்டத்தில் ரிகர்சல். சுசிலா அம்மாவுடன் பாடுகிறேன்.

    4 நாள்கள் முடிந்து ரெக்கார்டிங்கிற்குத் தயாரானோம். ஆனால் திடீரென எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்துவிட்டது. படுத்த படுக்கை ஆனேன். என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்தேன். அப்போது படத்தயாரிப்பாளர் வந்தார். எம்ஜிஆரின் பாடலைப் பாட ஒவ்வொருவரும் தவம் கிடக்கிறாங்க. உனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார்.

    ‘என் தலைவிதி அவ்ளோ தான்’னு நினைத்து நொந்து கொண்டேன். 15நாள்கள் கழிந்தது. எம்ஜிஆர் ஒருவரை அனுப்பி பார்த்துவிட்டு வருமாறு கூறியுள்ளார். அவரும் வந்து பார்க்க, ‘இன்னும் 5 நாள்களில் நான் பாடத் தயாராகி விடுவேன்’னு சொன்னேன். அதே மாதிரி அவர்களும் 5 நாள் கழித்து ரெக்கார்டிங்க் வைத்தார்கள். நான் பாடினேன். அதன்பிறகு எம்ஜிஆரிடம் எனக்காக ஏன் இப்படிச் செய்தீர்கள் என கேட்டேன்.

    அதற்கு நீ என்ஜினீயரிங் படிக்கிற பையன். உன் ப்ரண்ட்ஸ்கள் கிட்டே எல்லாம் எனக்குப் பாடப்போவது பற்றி சொல்லி இருப்ப. திடீர்னு பாட முடியாமப் போனா அவங்க உன்னைத் தப்பா நினைச்சிருப்பாங்க. அதனால தான் வெயிட் பண்ணினேன் என்று சொன்னாராம் எம்ஜிஆர். அதைக் கேட்ட எஸ்பிபி நெகிழ்ந்து போனாராம். அந்தப் பாடல் தான் எஸ்பிபி. முதன்முதலாகப் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல்.

    இப்போது கேட்டாலும் சுகமாக இருக்கும். இந்தப் பாடலுக்கு முன்பே சாந்தி நிலையம் படத்திற்காக ‘இயற்கை என்னும் இளையகன்னி’ என்ற பாடலைப் பாடினார். ஆனால் எம்ஜிஆர் படம் முந்திக்கொண்டு முதலாவதாக ரிலீஸ் ஆகிவிட்டது. அதனால் எம்ஜிஆருக்காகப் பாடிய பாடல் எஸ்பிபியின் முதல் பாடல் ஆனது.

  • SPB Ilaiyaraja: தப்பா நினைச்சுப் பாடிய எஸ்.பி.பி… இளையராஜா காட்டிய மேஜிக்… பாடலோ சூப்பர் டூப்பர் ஹிட்..!

    இளையராஜாவின் இசையில் பாடும் நிலா பாலு நம்ம எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எத்தனையோ ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். ஆனால் அவர் ஒரு பாடலைச் சிச்சுவேஷன் தெரியாமல் தப்பாகப் பாடிவிட்டார். அதாவது அது சந்தோஷமான பாடல்னு நினைச்சி சிரிச்சிக்கிட்டே பாடி விட்டார்.

    படத்தில் பார்த்தால் தான் அது சோகப்பாடல் என்றே தெரிந்ததாம். அது என்ன பாடல்? அந்தப் பாடல் உருவான கதை என்னன்னு பார்க்கலாமா… இதுபற்றி அவரது மகன் எஸ்.பி.பி.சரண் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க…

    ‘நிலாவே வா’ என்ற பாடல் தான் அது. இளையராஜா ரெக்கார்டிங் செய்யத் தயார். அப்பாவிடம் யாரும் அந்தப் பாடலுக்கு என்ன சூழல்னு சொல்லவே இல்லை. டைரக்டர், அசிஸ்டண்ட்னு யாருமே அங்கு இல்லை. அப்பா ஸ்டூடியோவில் பிராக்டிஸ்சும் செய்துவிட்டார்.

    ஆனால் படம் பார்த்ததும் தான் அது சோகப்பாட்டு தான் என்பதே தெரிந்ததாம். இந்தப் பாடலைக் கேட்டதும் அப்பா இப்படி சொன்னாங்களாம். ‘நான் இதை ஒரு ரொமான்டிக் பாடல்னு தான் நினைச்சேன். அதான் இதை சிரிச்சிக்கிட்டே பாடினேன்.ஆனா சோகப்பாட்டுன்னு தெரியாம தான் பாடினேன். என்கிட்ட யாருமே சிச்சுவேஷனை சொல்லல. சொன்னா அதுக்கு ஏற்ற மாதிரி பாடி இருப்பேன்’ என்றாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தப் பாடலை இப்போது கேட்டுப் பார்த்தாலும் அதுல எஸ்பிபியின் ஜாலி மூடு இருக்கும். ஆனா அதே நேரத்துல இளையராஜா அந்த மூடைத் தன் இசையால் மாற்றி சோகத்திற்குக் கொண்டு வந்து இருப்பார். மைக் மோகனும் சோகமான முகபாவனையுடன் பாடியது எஸ்பிபி செய்த தவறை நமக்கு உணர்த்தாமல் போய்விட்டது. இப்படி எல்லாம் கூட அப்போ சம்பவம் நடந்துள்ளதா என்று எண்ணிப் பார்த்தால் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

    1986ல் மணிரத்னம் இயக்கத்தில் மோகன், கார்த்திக், ரேவதி நடித்த சூப்பர்ஹிட் படம் மௌனராகம். இந்தப் படத்தில் இளையராஜா இசை அமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட். ஓஹோ மேகம் வந்ததோ, நிலாவே வா, சின்ன சின்ன வண்ணக்குயில், பனிவிழும் இரவு, மன்றம் வந்த தென்றலுக்கு ஆகிய இனிமையான பாடல்கள் உள்ளன.

  • இளையராஜா இசைல நாம மயங்கி கிடக்குற ரகசியம் தெரியுமா!. அவருக்காகவே பொறந்தவரு இவருதான்!..

    80, 90களில் இளையராஜா தான் தமிழ்சினிமாவின் வெற்றியை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய்ச் சேர்த்தவர். அவர் மியூசிக் இல்லாத படங்களே இல்லை என்னும் அளவில் இருந்தது. மொக்கையான படங்கள் கூட அவரது இசையால் ஹிட் அடித்த காலங்களும் உண்டு.

    அவரது இசையில் நாம் மயங்கிக் கிடப்போம். அவரது பாடல்கள் நமது சோகத்துக்கு மருந்தாகும். நமது உற்சாகத்தையும் ஊற்றாகப் பெருக்கச் செய்யும். அதற்கு அவர் பயன்படுத்தும் யுக்தி என்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

    இளையராஜாவின் இசையில் பெரும்பாலான பாடல்களில் தபேலா, மிருதங்கம், டிரம்ஸ், கீபோர்ட், புல்லாங்குழல் கருவிகளின் இசை அதிகமாக இடம்பெறும். குறிப்பாக பேஸ் கிட்டாரின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கும். இதை இன்னும் உன்னிப்பாகக் கேட்க வேண்டுமானால் கரோக்கியை கேட்டு மகிழலாம். உதாரணத்திற்கு ஒரு பாடலைப் பார்ப்போம்.

    பாடும் வானம்பாடி…. ஹ என்று ஒரு பாடல். 1984ல் வெளியான நான் பாடும் படத்தில் தான் இந்தப் பாடல் வருகிறது. இந்தப் பாடலில் முதல் வரியான பாடும் வானம்பாடி… ஹ… மார்கழி என பாடி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நிறுத்துவார். அப்போது பேஸ் கிட்டார் தான் அதை பில்லப் செய்யும்.

    Padum vanampadi song
    Padum vanampadi song

    அதே போல அந்தப் பாடலின் சரணத்தில் பாவை வண்ணம் கோயில் ஆகும்.. பார்வை காதல் பூச்சூடும் என்று முதல் வரியைப் பாடி முடிக்கவும் அதை புல்லாங்குழல் இசை பில்லப் செய்யும்.

    இதுதான் நாம் ராஜாவின் இசையில் மயங்கிக் கிடப்பதற்கு காரணம் என்று கூட சொல்லலாம். இந்தப் பாடலில் இன்னொரு முக்கியமான சிறப்பம்சம் உண்டு. இரு வாத்தியங்கள் ஆதிக்கம் செலுத்தும். அவற்றில் ஒன்று சித்தார். இன்னொன்று புல்லாங்குழல். இதில் சித்தார் கேள்வி கேட்க, புல்லாங்குழல் பதில் சொல்வது போல இசை அமைத்து இருப்பார் இசைஞானி.

    சித்தாருக்கு துணையாக மிருதங்கம் வரும். அதன்பிறகு புல்லாங்குழல். தொடர்ந்து ஸ்ட்ரிங்ஸ்சின் மாயாஜாலம். எஸ்பிபியும், இளையராஜாவும் சிறந்த ஜோடி தான். இளையராஜாவின் இசைக்காகவே எஸ்.பி.பி. பிறந்திருப்பார் போல என்று கூட நினைக்கத் தோன்றும். இருவரும் இணைந்து விட்டால் இனிமையான பாடல்களுக்குப் பஞ்சம் இருக்காது.

  • எஸ்.பி.பி வர லேட் ஆனதால் மலேசியா வாசுதேவனுக்கு கிடைத்த வாய்ப்பு!.. அது மட்டும் நடக்கலன்னா!..

    malaysi vasudevan: இளையராஜா மூலம் தமிழ் சினிமாவில் பல புதிய பாடகர்கள் மற்றும் பாடகிகள் அறிமுகமானார்கள். முக்கியமாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம், யோசுதாஸ் ஆகியோர் ஏற்கனவே சில பாடல்களை பாடியிருந்தாலும் இளையராஜாவின் இசையில் இவர்கள் மிகவும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார்கள்.

    எஸ்.பி.பி, மனோ, யோசுதாஸ், மலேசியா வாசுதேவன், சித்ரா, எஸ்.ஜானகி, ஜெயச்சந்திரன் என பலரையும் பல பாடல்களை பாட வைத்தார் இளையராஜா. ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கும் காதல் பாடல்களுக்கு எஸ்.பி.பி.யின் குரல் பொருத்தமாக இருந்தாலும் அவர்களுக்கு பல பாடல்களை மலேசியா வாசுதேவனும் பாடியிருக்கிறார்.

    இதையும் படிங்க: இளையராஜா பயோபிக்! இயக்குனரை டிக் செய்த இசைஞானி.. ஆனா கண்டீசன் என்ன தெரியுமா?

    அவர்களுக்கு மட்டுமல்ல சிவாஜிக்கும் பல பாடல்களை மலேசியா வாசுதேவன் பாடியிருக்கிறார். ‘ஒரு கூட்டுக்கிளியாக ஒரு தோப்பு குயிலாக’ பாடலை பார்த்தால் சிவாஜி பாடுவது போலவே இருக்கும். முதல் மரியாதை படத்தில் ‘பூங்காத்து திரும்புமா’ பாடலை ரசிகர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள்.

    malaysia

    அதேநேரம், மலேசியா வாசுதேவனுக்கு அதிகமான பாடல்களை பாட வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்பது பலருக்கும் தெரியாது. பதினாறு வயதினிலே படம் உருவானபோது மலேசியா வாசுதேவன் ஒரு அறிமுக பாடகராகத்தான் இருந்தார். பெரிதாக வாய்ப்பு இல்லை. எனவே, இளையராஜா இசையமைக்கும் ஸ்டுடியோவிலேயே இருப்பார். தேவைப்படும்போது அவரை பாட வைப்பார் இளையராஜா.

    அந்த படத்தில் இடம் பெற்ற ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடலை எஸ்.பி.பியே பாடுவதாக இருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் அவர வரவில்லை. எனவே, மலேசியா வாசுதேவனை பாடவைத்து ஒரு டிராக் எடுப்போம். எஸ்.பி.பி வந்ததும் பாடலை போட்டு காட்டி அவரை பாட வைக்கலாம் என இளையராஜா சொன்னார்.

    இதையும் படிங்க: என்னை உருவாக்கியதே அந்த பாடல்தான்!.. பலவருடங்கள் கழித்து இசைஞானி இளையராஜா சொன்ன மேட்டர்!..

    அதில் பாரதிராஜாவுக்கு விருப்பமில்லை என்றாலும் அரைமனதுடன் சம்மதித்தார். ஆனால், மலேசியா வாசுதேவன் பாடியதை கேட்டதும் ‘ஃபெண்டாஸ்டிக். இதுவே நல்லாருக்கு.. இதையே படத்துல வச்சிக்கலாம்’ என சொன்னார். அந்த பாடலுக்கு பின் பல படங்களிலும் பாட வாசுதேவனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

    அதன்பின் சிவாஜி உட்பட பலருக்கும் பாடல்களை பாடினார் வாசுதேவன். எஸ்.பி.பி இல்லாததால் கிடைத்த வாய்ப்பு என்பது கடைசி வரைக்கும் அவருக்கு நீடித்தது. அவரை பாட கூப்பிட்டாலே ‘எப்பா எஸ்.பி.பி. ஊர்ல இல்லயா?’ என கேட்டுவிட்டுதான் பாடவே வருவாராம். மறக்க முடியாத பல பாடல்களை பாடி விட்டு சென்றிருக்கிறார் அவர்.

  • அமராவதி படத்தில் நடிக்க இருந்தது இந்த சீரியல் நடிகரா? எஸ்.பி.பி கொடுத்த வாய்ப்பை பிடித்துக்கொண்ட அஜித்..!

    Amaravathi: அஜித்தின் தமிழ் அறிமுக படம் என்றால் அமராவதி தான். ஆனால் அந்த வாய்ப்பு முதலில் அவருக்கு கிடைக்கவில்லை. இன்னொரு சீரியல் நடிகருக்கு கிடைத்த வாய்ப்பை அவர் தவறவிட்டதையே அஜித் தட்டி தூக்கி இருக்கிறார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

    தலைவாசல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் செல்வா ரெடி செய்து வைத்திருந்த திரைப்படம் தான் அமராவதி. ஆனால் அப்படத்தில் புதுமுகங்களை போட வைக்கலாம் என்ற ஐடியாவில் இருக்கிறார். சோழா பொன்னுரங்கம் அப்படத்தினை தயாரிக்க இருந்தார்.

    இதையும் படிங்க: நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!.. கோபப்பட்ட வாலிக்காக விழாவை கேன்சல் பண்ண சொன்ன எம்.ஜி.ஆர்!..

    முதலில் இந்த வாய்ப்பு சீரியல் நடிகர் விஜய் அதிராஜுக்கு தான் சென்றதாம். ஆனால் அவர் போனை எடுக்காமல் மிஸ் செய்துவிட்டார். பின்னர் தான் செல்வா அவரின் நண்பரான எஸ்.பி.பாலசுப்ரமணியனிடம் ஒரு புதுமுக நடிகரை நடிக்க வைக்கலாம் எனப் பேசிக்கொண்டு இருக்கிறார்.

    கொஞ்சம் ஸ்மார்ட் மற்றும் யங்கான ஒரு நடிகர் வேண்டும் எனக் கேட்டாராம். அப்போது எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் தெலுங்கில் இப்போ பிரேமபுஸ்தகம் என்ற படம் வெளியாகி இருக்கிறது. அதில் நடித்திருக்கும் புதுமுக நடிகர் அஜித்தை கேட்டு பார்க்கலாம் என்றாராம்.

    ஆனால் அப்போ அழகா இருந்த அஜித்துக்கு தமிழ் முழுதாக தெரியாதாம். டான்ஸ் கூட சரியாக தெரியாதவரை அவர் அழகுக்காக மட்டுமே ஓகே செய்து தமிழுக்கு அழைத்து வந்து இருக்கிறார் செல்வா. இருந்தும் தயாரிப்பாளருக்கு அதில் துளியும் விருப்பமே இல்லையாம். அந்த படத்தில் போஸ்ட் படத்தில் கூட அஜித் விபத்தில் சிக்கினார்.

    அதனால் சில மாதங்கள் படுக்கையில் தள்ளப்பட்டார். இதனால் அந்த படத்தில் அஜித்துக்கு நடிகர் விக்ரம் தான் டப்பிங் பேசி இருந்தார். படம் வெளியாகி நல்ல ரீச்சை கொடுத்தது. பாசிட்டிவான வசூலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அங்கு தொடங்கிய தன்னுடைய கோலிவுட் பயணத்தினை இன்று சிகரமாக மாற்றி இருக்கிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..

  • வருஷத்துல எனக்கு இப்படி ஒரு பாட்டு கிடைச்சா போதும்யா!.. எஸ்.பி.பி.யை நெகிழ வைத்த பாடல் எது தெரியுமா?

    இசை அமைப்பாளர்களில் வித்யாசாகர் தவிர்க்க முடியாதவர். அவரது இசையில் உருவான பல பாடல்கள் செம மாஸானவை. இவற்றைப் பற்றி திரை இசை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

    வித்யாசாகர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இசைக்கருவிகளை அருமையாக வாசிப்பதில் வல்லவர். எஸ்.ஏ.ராஜ்குமாரிடமும் உதவியாக இருந்துள்ளார். சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தில் அவருக்கு உதவியாளராக இருந்தாராம்.

    ஆரம்பத்தில் கே.வி.மகாதேவன் பாடலைக் கொடுத்ததும் தான் மெட்டுப் போடுவார். அதே போல பாடல்களுக்கு இசை அமைக்க மிகவும் விருப்பப்பட்டவர் வித்யாசாகர். எம்எஸ்வி. காலகட்டத்தில் மெட்டுக்குப் பாட்டு எழுதுவார் கவிஞர். இளையராஜா காலகட்டத்தில் மெட்டுப் போடுவார். அதைக் கேசட்டில் ரெகார்ட் செய்து விட்டுப் போவார்கள். அதற்கேற்றவாறு வரிகளை எழுதுவார்கள். வித்யாசாகரிடம் தமிழ்ப்புலமை அதிகம். அவர் பாடலாசிரியரிடம் நல்லா வேலை வாங்குவார்.

    Karna
    Karna

    இசை அமைப்பாளருக்கு மொழி கைவரணும். பாடலாசிரியருக்கு இசை கைவரணும். இரண்டும் சரியாக இருந்தால் அருமையான பாடல் கிடைக்கும். அந்த வகையில் வித்தியாசாகரின் பாடல் தனித்துவமாக இருக்கக் காரணமே இதுதான்.

    90களில் அர்ஜூனுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். மலரே மௌனமா பாடல் எல்லாம் வேர்ல்டு கிளாசிக். இந்தப் பாடலைப் பாடியதும் எஸ்.பி.பி ‘வருஷத்துல இப்படி எனக்கு ஒரு பாட்டு கிடைச்சா போதும்யா’ன்னு சொன்னாராம். அப்படி சொல்லும் போது வித்யாசாகரின் கையைப் பிடித்துக்கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம்.

    95ல் வெளியான படம் கர்ணா. இந்தப் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்துள்ளார். படத்தில் வித்யாசாகர் அருமையான மெலடி பாடல் ஒன்றைக் கொடுத்து இருப்பார். அதுதான் மலரே மௌனமா என்ற பாடல். இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியனும், எஸ்.ஜானகியும் பாடியுள்ளனர். அவ்வளவு அருமையான மெலடி காதல் பாடல் என்றால் அது இதுதான். இப்போது கேட்டாலும் நம்மை மெலிதாக வருடும் தென்றலைப் போன்ற இதமான உணர்வைத் தரும் இந்தப் பாடல்.