Tag: sundar c

  • ரஜினிகாந்த் மகளால் கடுப்பானாரா சுந்தர். சி?.. கமல்ஹாசன் – ரஜினிகாந்த் படத்தை கைவிட்டது ஏன்?

    ரஜினிகாந்த் மகளால் கடுப்பானாரா சுந்தர். சி?.. கமல்ஹாசன் – ரஜினிகாந்த் படத்தை கைவிட்டது ஏன்?

    ரஜினிகாந்த் – கமல்ஹாசனை இயக்கப் போகிறார் சுந்தர். சி என அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் இந்த படம் அருணாச்சலம் மாதிரி வருமா? அல்லது அன்பே சிவம் மாதிரி வருமா? என ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பினர். ஆனால், யார் கண் பட்டதோ படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வேண்டாம் என வெளியேறிவிட்டார் சுந்தர். சி.

    மேலும், சட்டமன்ற தேர்தலில் அதிரடியாக வேட்பாளராக மதுரையில் பிடிஆரை எதிர்த்து போட்டியிட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் படத்தை ஏன் இயக்கவில்லை என்கிற கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

    30 வருஷத்துக்கு முன்பாக ரஜினிகாந்த் சாரை அருணாச்சலம் படத்தில் இயக்கும் போது நிலைமை வேறு. அவருக்கு நான் சொன்ன குடும்ப பாங்கான காமெடி படத்தின் கதை ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால், இன்றைய சூழலில் அவருக்கு வேறு விதமான படம் பண்ன வேண்டிய நிலை உள்ளது.

    அதிக பிரஷர் காரணமாகவே படத்தில் இருந்து விலகிவிட்டேன். கண்டிப்பாக படம் எடுக்க ஆரம்பித்தாலும், பாதியில் வெளியேறும் சூழல் ஏற்பட்டால் அது நல்லா இருக்காதுன்னு நினைச்சுத்தான் வெளியேறினேன். வெளியேறுவதற்கு முன்பாக ரஜினி சாரிடம் என்னோட நிலைப்பாட்டை சொன்னேன். அவர் நீங்க எப்போ சொன்னாலும் உங்க கதையை பண்ணலாம் என சொல்லிவிட்டார் என்றார்.

    சுந்தர். சிக்கு ரஜினிகாந்தின் மகள்களில் ஒருவர் தான் அழுத்தம் கொடுத்ததாக வதந்திகள் பரவிய நிலையில், அதெல்லாம் வதந்தி தான் என்பது சுந்தர். சியின் பதில் மூலம் தெரிந்துள்ளது. வரும் மே 4ம் தேதி சுந்தர். சி வெல்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • ஜோசியத்தால் ஹிட் படத்தை மிஸ் பண்ணிய விஜய்!.. அது மட்டும் நடந்திருந்தா!…

    ஜோசியத்தால் ஹிட் படத்தை மிஸ் பண்ணிய விஜய்!.. அது மட்டும் நடந்திருந்தா!…

    சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து 1996ம் வருடம் ஜனவரி 15ம் தேதி வெளியான திரைப்படம் உள்ளத்தை அளித்தா. இந்த படத்தின் மெஹா ஹிட்தான் சுந்தர்.சியை ஒரு ஜனரஞ்சகமான இயக்குனராக மாற்றியது. மேலும் கார்த்திக்கு ஒரு கம்பேக் படமாக உள்ளத்தை அள்ளித்தா அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகளும், பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன..

    இந்நிலையில், இந்த படம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் சுந்தர்.சி ‘உள்ளத்தை அள்ளித்தா படத்தின் முதலில் நடிக்கவிருந்தது விஜய்தான். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்.. அவர் ஜோசியம் பார்த்து படத்தை 1996 ஜனவரி 15ம் தேதி வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற அழகிய லைலா பாடலை ஜனவரி 8ம் தேதி சூட் பண்ணினோம்.. லவ்யூ லவ்யூ பாடலை 10ம் தேதி சூட் பண்ணினோ..ம் அந்த அளவுக்கு கடுமையாக உழைத்து அந்த படத்தை அவர் சொன்ன தேதியில் வெளியிட்டோம்…

    ullathai

    விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகரிடம் இந்த படம் பற்றி பேசியபோது ‘ஏற்கனவே அதே தேதியில் விஜயின் கோயம்பத்தூர் மாப்பிள்ளை படம் வெளியாகிறது.. எனவே ஜனவரி 26ம் தேதி இந்த படத்தை வெளியிடுங்கள். 10 நாட்கள்தானே இடைவெளி’ என்று சொன்னார்.

    ஆனால் தயாரிப்பாளர் அதனை ஏற்கவில்லை.. அதனால்தான் அந்த படத்தில் விஜயுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அதன்பின் விஜயுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை.. அதே நேரம் உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் எனக்கு கார்த்திக் சார் நட்பு எனக்கு கிடைத்தது’ என சொல்லியிருக்கிறார்..

  • ஆணும் பெண்ணும் சேர்ந்த கேரக்டர்… பேரு ரஜினி!.. உள்குத்து இருக்கா சுந்தர்.சி?…

    கோலிவுட்டில் 30 வருடங்களுக்கு மேல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இப்போதுள்ள பல இயக்குனர்களுக்கும் சீனியர் இவர். அதேநேரம் இப்போதுள்ள இளம் இயக்குனர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். காதல் கலந்த காமெடி படங்கள் இவருக்கு கை வந்த கலை. அதே நேரம் அரண்மனை படம் மூலம் ஹாரர் காமெடிக்கு மாறினார்.. தற்போது அதில் 4 பாகங்கள் வெளியாகிவிட்டது.

    திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமின்றி அவ்வப்போது திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் சுந்தர்.சி. அப்படி அவர் தயாரித்திருக்கும் திரைப்படம்தான் ஒன்றுதான் டபுள் ஆக்குபன்ஸி (Double Occupancy). இந்த திரைப்படத்தை அஸ்வின் கந்தசாமி என்பவர் இயக்க புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

    இந்த படத்தின் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு பெண் ஒரு ஆணை காதலிக்கிறார்.. ஒரு பக்கம் ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறார்.. ஒரு கட்டத்தில் காதலிக்கப்படும் அந்த ஆணும், பெண்ணும் ஒரே நபராக மாறுகிறார்கள். அது கூட பிரச்சினை இல்லை.. ஏதோ புதிதாக ஒன்றை முயற்சி செய்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.. ஆனால் அந்த கதாபாத்திற்கு ரஜினி என பெயர் வைத்திருக்கிறார்கள்..

    சுந்தர்.சி ரஜினியை வைத்து படமெடுக்க முயற்சி செய்தார். ஆனால் ரஜினிக்கு கதை பிடிக்காததால் வெளியேறினார். எனவே ரஜினி மீதுள்ள கோபத்தில் இப்படி அந்த கதாபாத்திரத்திற்கு பெயர் வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.. அல்லது கதையில் அந்த கதாபாத்திரத்திற்கு ரஜினி என தலைப்பு வைக்கப்பட்டதற்கு காரணம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் படம் வெளியான பின்னரே தெரியவரும்..

  • என் சினிமா கெரியருக்கு ரூட்டு போட்டதே விஜய் படம்தான்!.. சுந்தர்.சி ஓப்பன் டாக்!…

    Actor vijay: இயக்குனர் மணிவண்ணனிடம் சினிமா கற்றவர் சுந்தர்.சி. முறை மாமன் என்கிற படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இவர். அதன்பின் இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றி சுந்தர்.சியை கவனிக்க வைத்தது.

    ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் போன்ற படங்களை இயக்கினார். காதல் கலந்த காமெடி படங்கள்தான் சுந்தர்.சியின் பலம். சுந்தர்.சி. படம் என்றாலே காமெடி அசத்தலாக இருக்கும் என்கிற இமேஜை உருவாக்கினார். இவர் இயக்கத்தில் வடிவேலு நடித்த கிரி, வின்னர் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

    ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்கவும் துவங்கினார். அப்படி அவர் ஹீரோவாக நடித்து வெளியான சில படங்கள் நல்ல வசூலை பெறவே தான் நடிக்கும் படங்களில் அவரே ஹீரோவாக நடிக்க துவங்கினார். ஒருபக்கம், காமெடி கலந்த பேய் படங்களையும் எடுக்க துவங்கினார். அப்படி அவர் இயக்கிய அரண்மனை படம் 4 பாகங்களாக வெளிவந்து வசூலை அள்ளியது.

    12 வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்,சந்தானம் நடித்து வெளிவந்த மதகஜராஜா படம் இந்த வருட துவக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்தது. இப்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். அதில், சுந்தர்.சியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சுந்தர்.சி. ‘நான் விஜய் நடித்த ரசிகன் படத்தை தியேட்டரில் பார்த்தேன். எனக்கு அப்படம் பிடிக்கவில்லை. ஆனால், படம் நன்றாக இருக்கிறது.. ஹிட் என சிலர் சொன்னர்கள். எனவே, மீண்டும் போய் படம் பார்த்தேன். ரசிகர்கள் கைத்தட்டி ரசித்து படம் பார்த்தார்கள். சரி ஒரு காட்சியில் அப்படி ரசிப்பார்கள் என நினைத்து அடுத்த காட்சி பார்த்தேன். அப்போதும் அதே இடத்தில் கைத்தட்டி ரசிகர்கள் ரசித்தார்கள்.

    எனவே எனக்கு பிடித்த மாதிரி படம் எடுப்பதை விட ரசிகர்களுக்கு பிடித்தது போல படமெடுக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அதனால்தான் ஜாலியான படங்களை இயக்க துவங்கினேன். என்னை மாற்றியது ரசிகன் படம்தான்’ என சொல்லியிருக்கிறார்.

  • நான் யாருன்னு காட்டுறேன்.. மூக்குத்தி அம்மன் 2-வில் சுந்தர்.சி செய்த தரமான சம்பவம்!,,

    தமிழ் சினிமாவில் வெற்றிக்கு உத்திரவாதம் உள்ள கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வருபவர் சுந்தர்.சி. ஹிட் கொடுத்த பல இயக்குனர்களே காணாமல் போய்விட்ட நிலையில் சுந்தர்.சி 30 வருடங்களாக வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்கிய எல்லா படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்த படங்கள்தான்.

    இடையில் நடிகர் அவதாரமும் எடுத்த சுந்தர்.சி பல ஹிட் படங்களையும் கொடுத்தார். ஒருகட்டத்தில் அவர் இயக்கும் படங்களில் அவரே ஹீரோவாக நடிக்க துவங்கிவிட்டார். அவர் இயக்கி நடித்த கேங்கர்ஸ் படம் சரியாக போகவில்லை. தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

    இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. ஒரு படத்தின் 2வது பாகத்திற்கு இவ்வளவு பட்ஜெட் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது தயாரிப்பாளருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    இதைத்தொடர்ந்து புரமோ ஷூட் போல ஒன்றையும், படத்தின் சில காட்சிகளையும் தயாரிப்பாளருக்கு போட்டு காட்டியிருக்கிறார் சுந்தர்.சி. இதைப்பார்த்ததும் போட்ட காசு வொர்த்துதான் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ஐசரி கணேஷ். சுந்தர்,சி உருவாக்கிய வீடியோ தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • லப்பர் பந்து நடிகை மட்டுமில்ல!.. குஷ்பு மகளும் ‘தக் லைஃப்’ படத்துல வொர்க் பண்ணியிருக்காராம்!..

    இயக்குனர் சுந்தர். சி மற்றும் குஷ்புவின் இளைய மகள் அனந்திதா சுந்தர் இன்று மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் படத்தில் பணியாற்றியுள்ளதாக நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுந்தர்.சி “முறை மாமன்” திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம் , அன்பே சிவம் , வின்னர் , கலகலப்பு , அரண்மனை, மத கஜ ராஜா போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இயக்குவதையடுத்து நடிப்பு மற்றும் தயாரிப்பிலும் ஈடுப்பட்டு வருகின்றார்.

    சுந்தர்.சி நடிகை குஷ்புவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரு மகள்கள் உண்டு. இதில் இளைய மகள் அனந்திகா மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஒரு தாயாக மகளின் பெயர் உதவி இயக்குனராக டைட்டிலில் பார்ப்பது ரொம்ப பெருமையா இருக்கு, காலில் எலும்பு முறிவு காரணமாக அவளால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. அவள் சிறிது காலம் உதவி இயக்குனராக இருந்திருந்தாலும் அவள் சேகரித்த அறிவும், மணி சாரிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்களும் அவளுடைய வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். இந்த அனுபவம் மிகவும் சிறப்பானது, அவளது பெயரை தவறவிடாமல் படத்தின் டைட்டிலிலும் பகிர்ந்த உங்கள் பெரிய மனதிற்கு மிக்க நன்றி என நடிகை குஷ்பு பதிவிட்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

    லப்பர் பந்து பட நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் தக் லைஃப் படத்தில் உதவி இயக்குனராகவும் நடிகையாகவும் பணியாற்றியுள்ளார்.

  • கேங்கர்ஸ் ஃபிளாப் ஆனதுக்கு காரணமே சுந்தர்.சி-தான்!. கடுப்பான வடிவேலு!…

    Vadivelu: தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக இருந்தவர் வடிவேலு. ராஜ்கிரண் தயாரித்து, நடித்த என் ராசாவின் மனசிலே படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல படங்கலிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அவற்றில் பெரும்பாலானவை கிராமம் சார்ந்த கதைகளாகும். அதுதான் வடிவேலுவுக்கும் செட் ஆனது.

    ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறி ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளம் என்கிற அளவுக்கு முன்னேறினார். நல்ல நடிகர் என்றாலும் அதிக தலைக்கணம் கொண்டவர் வடிவேலு. அதோடு, யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார். மேலும், தன்னோடு நடிக்கும் காமெடி நடிகர்களை மிகவும் மோசமாகவே நடத்துவார்.

    அதனால்தான் வடிவேலு 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தபோது அவரை பற்றி அவருடன் நடித்த பலரும் கழுவி ஊற்றினார்கள். அவருடன் நடித்த போண்டா மணி, அல்வா வாசு, பாவா லட்சுமணன் போன்றவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதும் வடிவேலு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. சினிமாவில் காமெடி நடிகன், நிஜவாழ்வில் சுயநலமும், காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும் கொண்ட ஒரு மனிதர் என்பதுதான் வடிவேலுவின் அடையாளமாக இருக்கிறது. சொந்த பிரச்சனை காரணமாக விஜயகாந்தை அவர் எப்படியெல்லாம் திட்டினார் என்பதே அவரின் குணத்திற்கு பெரிய உதாரணம்.

    4 வருட இடைவெளிக்கு பின் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்கிற படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார் வடிவேலு. அந்த படம் ஒடவில்லை. எனவே, மீண்டும் காமெடி நடிகராக நடிக்க துவங்கினார். ஆனால், முன்பு போல அவரை யாரும் கூப்பிடவில்லை. எனவே, கிடைக்கும் படங்களில் மட்டும் நடித்து வந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் சீரியஸான வேடத்தில் நடித்தார்.

    வடிவேலுவை வைத்து வின்னர், கிரி போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த சுந்தர்.சியின் இயக்கத்தில் கேங்கர்ஸ் என்கிற படத்தில் வடிவேலு நடித்தார். இந்த படத்தில் சுந்தர்-.சியே ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தின் காமெடி ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. எனவே, படம் தோல்வி அடைந்தது.

    இந்நிலையில், நான் நடித்த பல நல்ல காமெடி காட்சிகளை சுந்தர்.சி இந்த படத்தின் வைக்கவே இல்லை. அதனால்தான் படம் ஓடவில்லை என தன்னுடைய நெருங்கிய நட்பு வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம் வடிவேலு.

  • அமேசான் ப்ரைம் அறிவிப்பால் கடுப்பா இருக்கீங்களா?.. இந்த வாரம் வடிவேலு படம் வருதே!..

    இயக்குநர் சுந்தர்.சி தயாரித்து, இயக்கி, நடித்தும் உருவான கேங்கர்ஸ் திரைப்படம் கடந்த மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலைவையான விமர்சனங்களை பெற்று சுமாராக ஓடியது. இந்நிலையில் தற்போது கேங்கர்ஸ் நாளை மே15ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான கேங்கர்ஸ் திரைப்படத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி, ஹரிஷ் பெரடி, அருள்தாஸ், சந்தானபாரதி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

    அரசன் கோட்டை என்ற கிராமத்தில் உள்ள ஒரு பள்ளி மாணவி மர்மமான முறையில் காணாமல் போகிறார். இதை ஆசிரியை சுஜாதா விசாரிக்க, காவல்துறை புறக்கணிக்கிறது. அதைத் தொடர்ந்து, உளவு போலீஸ் அதிகாரியாக சுந்தர். சி நியமிக்கப்படுகிறார். கதை நகைச்சுவை, ஆக்ஷன், மற்றும் சென்டிமென்ட் கலந்து முழு நீள பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.

    பல ஆண்டுகள் கழித்து சுந்தர்.சி மற்றும் வடிவேலுவின் காம்பினேஷன் வொர்க்கவுட் ஆகும் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் சிலர் கதை பழசு, டபுள் மீனிங் அதிகம், லாஜிக் குறைவு, கவர்ச்சி காட்சிகள் நிறைந்துள்ளது என கடுமையாக விமர்சிக்கப்பட்டு மூன்று வாரத்தில் ரூ11 கோடி வரை மட்டுமே வசூலித்தது.

    வடிவேலுவின் கம்பேக்காக இருக்கும் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் இப்படம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மேலும், தற்போது கேங்ஸ்டர் படம் அமேசான் ஒடிடி தளத்தில் நாளை மே 15ம் தேதி வெளியாக உள்ளது. சுந்தர்.சி இதையடுத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் பிஸியாக உள்ளார். தொடர்ந்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சுமாரான படங்களே வெளியாகி வரும் நிலையில், சந்தாவை வேறு இஷ்டத்துக்கு ஏற்றப்போவதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

  • போலீஸ் டிரெஸ்ஸுக்கு நோ!. நயன்தாராவின் செண்டிமெண்ட்!.. நல்லா சிக்கிட்டாரு சுந்தர்.சி…

    ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தவர். ஐயா படத்தில் நடிக்க வரும்போது ஆம்னி பஸ்ஸில் வந்தவர் இப்போது எங்கு போனாலும் தனி விமானம் மூலம் செல்லும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.

    ரஜினி, விஜய், அஜித், விஜய் சேதுபதி, சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்து நம்பர் ஒன் நடிகையாகவும் மாறினார். அதோடு, கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார். ஒருகட்டத்தில் படத்தின் டைட்டில் தன் பெயருக்கு முன் லேடி சூப்பர்ஸ்டார் என போட வேண்டும் எனவும் அலப்பறை செய்தார்.

    இவரின் வளர்ச்சி பல நடிகைகளுக்கும் பொறாமையை ஏற்படுத்தியது. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும், வாடகைத்தாய் மூலம் 2 குழந்தைகளுக்கும் அம்மாவாக மாறினார். இப்போது நம்பர் ஒன் நடிகையாக மாறினாரோ அப்போது முதலே நடிப்பதற்கு பல கண்டிஷன்களையும் போட துவங்கினார் நயன்தாரா. படத்தின் புரமோஷன் விழாவுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்தே போடுவார்.

    இப்போது திருமணத்திற்கு பின் சென்னையில் மட்டுமே படப்பிடிப்பு, 3 மணி நேரம் மட்டுமே நடிப்பேன் என பல கண்டிஷன்களையும் போடுகிறாராம். எனவே, நயன்தாராவை நடிக்க வைக்கவே தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். ஒருபக்கம், நயன்தாராவுக்கு இப்போது மார்க்கெட்டும் இல்லை. கடந்த சில வருடங்களில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிதாக ஓடவில்லை.

    ஆனாலும், நயன்தாரா தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. இப்போது சுந்தர்.சியின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு வேடம் அம்மன் எனில், இன்னொரு வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நயன்தாராவுக்கு ஒரு செண்டிமெண்ட் உண்டு. படங்களில் போலீஸாக நடித்தாலும் போலீஸ் உடை அணிந்து நடிக்கமாட்டார். இமைக்கா நொடிகள், நெற்றிக்கண், ஜவான் போன்ற படங்களில் அவர் போலீஸ் என்றாலும் யூனிபார்ம் அணிந்திருக்கமாட்டார்.

    மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கில் சுந்தர்.சியிடம் நயன் இதை சொல்ல ‘ வேண்டுமானால் நீங்கள் போலீஸ் உடையில் வரும் காட்சிகளை குறைத்துக்கொள்கிறேன். ஆனால், சில காட்சிகளில் நீங்கள் போலீஸ் யூனிபார்ம் போட்டு நடித்தே ஆகவேண்டும்’ என சுந்தர்.சி சொல்லிவிட்டாராம். சுந்தர்.சியிடம் தன் பாட்சா பலிக்காது என்பதால் அவர் சொன்னபடி நடித்து வருகிறாராம்.

  • 30வருஷத்துல யாரும் கேட்காத கேள்வியை கேட்ட விஜய்சேதுபதி! உறைந்து போன சுந்தர் சி

    தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்து வருபவர் சுந்தர் சி. இவருடைய படங்கள் பெரும்பாலும் காமெடி கலந்த குடும்ப திரைப்படங்களாகவே அமைந்திருக்கின்றன. முதன் முதலில் முறை மாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சுந்தர் சி. அந்தப் படத்தில்தான் குஷ்பூவும் நடிக்க அதிலிருந்தே இருவருக்குமான காதல் ஆரம்பமானது.

    சுந்தர் சி படங்கள் என்றாலே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் கவுண்டமணி காமெடிதான் ஹைலைட். குறிப்பாக உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் எவர் கிரீன் நகைச்சுவை திரைப்படமாகும். கவுண்டமணிக்கு பிறகு வடிவேலுவின் காமெடி சுந்தர் சியின் படங்களுக்கு பெரிதும் உதவியது. குறிப்பாக நாய்சேகர் காமெடி இன்றளவும் பேசப்படும் காமெடியாகவே பார்க்கப்படுகிறது.

    இப்போது வரை சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் காம்போவில் வெளியான காமெடி இன்றளாவும் காமெடி சேனல்களில் பிரதான இடத்தை பிடித்துவருகிறது. இந்த நிலையில் சுந்தர் சியிடம் விஜய்சேதுபதி கவுண்டமணியின் ஒரு காமெடி காட்சியை பற்றி விவாதித்தது பெரும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது என ஒரு பேட்டியில் சிலாகித்து பேசியிருக்கிறார் சுந்தர் சி.

    முறைமாமன் படத்தில் வரும் ‘திரௌபதி அழகு கௌரவர்களை அழிக்க, கண்ணகி அழகு மதுரையை எரிக்க, இந்த அழகு யார் குடியைக் கெடுக்க?’ என்று கவுண்டமணி பேசும் வசனத்திற்கு விஜய்சேதுபதி மிகப்பெரிய ரசிகராம். இந்த வசனத்தை சொல்லி என்னிடம் ‘எப்படி எழுதினீங்க’ என்று கேட்டார். படம் ரிலீஸாகி 30 வருஷத்துக்கும் மேலாகிறது. ஆனால் இத்தனை வருடங்களில் யாருமே இத நோட் பண்ணி என்னிடம் கேட்டதில்லை என சுந்தர் சி நெகிழ்ந்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

    தற்போது சுந்தர் சி தன்னுடைய டிராக்கையே மாற்றியிருக்கிறார். நகைச்சுவை கலந்த திரில்லர் படங்களை எடுத்து பெரிய ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அரண்மனை படத்தின் தொடர்ச்சியான பாகங்களை கொடுத்து பெரும் வெற்றியை பதிவு செய்தார் சுந்தர் சி. அடுத்ததாக அரண்மனை 5 திரைப்படத்திற்காகவும் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.