Tag: Suriya

  • Karuppu: காசே வாங்காம சம்பவம் பண்ணிய சிம்பு!.. சூர்யா அனுப்பிய காஸ்ட்லி கிஃப்ட்!..

    Karuppu: காசே வாங்காம சம்பவம் பண்ணிய சிம்பு!.. சூர்யா அனுப்பிய காஸ்ட்லி கிஃப்ட்!..

    நடிகர் சிம்புவுக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு குணம் உண்டு. தாங்கள் நடிக்கும் படங்கள் மட்டுமில்லாமல் நட்புக்காக மற்ற நடிகர்கள் உதவி கேட்டால் அதை செய்து கொடுப்பார்கள். விஜய் சேதுபதி ஒரு சில காட்சிகளில் வந்து நடித்து கொடுப்பார். சிம்பு பாடல்களை பாடி கொடுப்பார்.

    அல்லது இரண்டு பேருமே கேமியோ வேடத்தில் நடிப்பார்கள். அதேபோல், தான் நடிக்காத பல திரைப்படங்களில் பாடலை பாடி கொடுத்திருக்கிறார் சிம்பு. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் படத்தில் கூட ஒரு லவ் பிரேக்கப் பாடலை சிம்பு பாடியிருந்தார்,,

    இந்நிலைய்ல், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தில் வரும் ஓப்பனிங் பாடலி சிம்பு பாடியிருப்பதை தெரிய வந்திருக்கிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். எனவே இந்த பாடலை கம்போஸ் செய்த போது சிம்பு பாடினால் பொருத்தமாக இருக்கும் என நினைத்த சாய் அபயங்கர் சிம்புவை அணுகியிருக்கிறார்.

    மறுப்பேச்சு பேசாமல் வந்து பாடலை சூப்பராக பாடிக் கொடுத்தாராம் சிம்பு. இதில் முக்கிய விஷயம் விஷயம் என்னவென்றால் அந்த பாடலை பாடியதற்காக சிம்பு எந்த சம்பளமும் வாங்க வில்லையாம். பாடலைக் கேட்டு நெகழ்ந்து போன அப்படத்தின் ஹீரோ சூர்யா சிம்புவுக்கு ஒரு காஸ்ட்லி கிப்ட்டை பரிசாக அனுப்பினாராம்..

  • ரஜினி இல்லனா சூர்யா!.. ரூட்டை மாற்றிய டிராகன் பட இயக்குனர்!.. செம அப்டேட்!…

    இன்ஜினியரிங் படித்துவிட்டு சினிமா எடுக்கும் ஆசையில் கோலிவுட்டுக்கு வந்த பலரில் அஸ்வத் மாரிமுத்துவும் ஒருவர். அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் உள்ளிட்ட சிலரை வைத்து இவர் இயக்கி ஓ மை கடவுளே திரைப்படம் 2020ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
    இந்த படத்துக்கு பின்னர் அசோக் செல்வன் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். ஒரு சிறந்த ஃபீல் குட் படமாகவும் இது உருவாகியிருந்தது..

    அதன்பின், அதே திரைப்படத்தை தெலுங்கில் இயக்கினார் அஸ்வத் மாரிமுத்து. அதேநேரம், பிரதீப் ரங்கநாதனை வைத்து இவர் இயக்கிய டிராகன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று 100 கோடி வசூலை பெற்றது. இந்த படத்தில் கயாடு லோகர், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். எனவே கோலிவுட்டில் முக்கிய இயக்குனராக அஸ்வத் மாரிமுத்து மாறினார்.

    டிராகன் படம் உருவாகும்போதே நடிகர் சிம்புவின் 51-வது திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகியபோது ரஜினிக்கு கதை சொல்லப் போன சில இயக்குனர்களில் அஸ்வத் மாரிமுத்துவும் ஒருவர். அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும் அது டேக் ஆப் ஆகவில்லை. அதன் பின் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியானது..

    இந்நிலையில், ரஜினிக்கு சொன்ன அதே கதையை கொஞ்சம் மாற்றி சூர்யாவிடம் சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. இந்த படம் ஸ்டைலான ஒரு மாஸ் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்கிறார்கள்.. சிம்பு படத்தை முடித்துவிட்டு சூர்யாவின் படத்தை அஸ்வத் இயக்குவார் எனத்தெரிகிறது.

  • நான் பண்ண அயோக்கியத்தனத்தை சூர்யா பண்ணல!.. சிவக்குமார் ஓப்பன்!…

    80களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் சிவக்குமார். தொடர்ந்து பல படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தார் சிவக்குமார்.
    இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் இவர் நடித்த சிந்து பைரவி அவரின் முக்கிய படமாக அமைந்தது.

    ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார் சிவக்குமார். அதன்பின் பல படங்களிலும் கதாநாயகி அல்லது கதாநாயகனின் அப்பாவாக நடித்திருக்கிறார். சீரியலிலும் இவர் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் அதை நிறுத்திவிட்டார். அவருக்கு பின் அவரின் மகன் சூர்யா, கார்த்தி இருவருமே சினிமாவில் நடிக்க வந்தனர்.

    அவர்கள் இருவருமே தற்போது கோலிவுட்டின் முக்கிய நடிகர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சிவக்குமார் ‘சூர்யா 25 படத்துக்கு மேல நடிச்சிட்டான்.. ஒரு படத்துல கூட ஹீரோயின் மேல படுக்குற மாதிரி ஒரு காட்சியில் கூட நடிச்சதில்லை.. அந்த அயோக்கியத்தனத்தை நான்தான் பண்ணியிருக்கேன்.. எத்தனை கதாநாயகைகளுடன் உருண்டு பிரண்டேன்னு எனக்கே தெரியாது.. ஆனா சூர்யா ரொம்ப டீசன்ட்.. காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் கூட தொடாமதான் நடிப்பான்’ என சொல்லியிருக்கிறார்..

  • Suriya vs Ameer: சார்னு சொல்லணுமா? சூர்யாவிடமிருந்து அமீர் விலக இதான் காரணமா?

    வாடிவாசல் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் அந்தப் படத்தில் அமீர் இருப்பதால்தான் சூர்யா தரப்பிலிருந்து தாமதமாகிறது என்றெல்லாம் சில வதந்திகள் வந்தன. அந்த நேரத்தில் பருத்திவீரன் பிரச்சினை தலைத்தோங்க அமீருக்கும் சூர்யா குடும்பத்திற்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் வாடிவாசல் படத்தில் அமீரும் இருந்ததனால் சூர்யா யோசிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

    இதைப் பற்றி அமீர் சமீபத்திய ஒரு பேட்டியில் விளக்கமாக கூறியுள்ளார். சூர்யாவை நடிகராக பார்ப்பதற்கு முன்பே சூர்யாவும் அமீரும் நண்பர்களாம். நந்தா படத்தில் அமீர் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். அப்பொழுது இன்னும் நெருக்கமான நண்பர்களாக மாறியிருக்கின்றனர். அதன் பிறகு அமீர் முதன் முதலாக மௌனம் பேசியதே படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

    படத்தை பார்த்துவிட்டு சூர்யா அமீரிடம் ‘ஜீ.. படத்தை மக்கள் ரொம்ப ரசிக்குறாங்க’ என சந்தோஷமாக சொல்லியிருக்கிறார். ஆனால் அமீரோ ‘ஓ.. அப்படியா’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார். இது சூர்யாவுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் நான் இப்படித்தான். எதையும் பெருசாக அலட்டிக் கொள்ளமாட்டேன். அது சூர்யாவுக்கும் தெரியும். நாங்கள் பேசிக் கொள்ளும் போதே வாங்க ஜீ.. உட்காருங்க ஜீனு தான் பேசிப்போம்.

    ஆனால் சார் சொல்லணும்னு இந்த சினிமா துறை நிர்ப்பந்திக்கும் போது அதுக்கு நான் செட்டாகமாட்டேன். எனக்கு அது வரவும் வராது. இருக்கலாம். நான் 5 படங்கள் பண்ணியிருப்பேன். சூர்யா 50 படங்கள் பண்ணியிருக்கலாம். அவர் பேன் இந்தியா படம் ட்ரை பண்ணலாம். அப்போ அவருடைய உயரம் வேறு. அப்படியிருக்கும் போது நான் போய் சங்கடத்தை கொடுக்கக் கூடாது.

    அதனால் விலகி இருந்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும். இப்படித்தான் பாலாவிடமிருந்து விலகினேன். சீமானிடமிருந்து விலகினேன். ஒரு சமயம் எனக்கு காய்ச்சல்னு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஆனால் அந்த மருத்துவமனையின் சூழ் நிலை எனக்கு பிடிக்கவில்லை. அப்போது ஸ்ரீ பட சூட்டிங்கில் இருந்த சூர்யாவுக்கு விஷயத்தை சொல்லி எப்படியாவது வெளியே வர உதவி பண்ணுங்க ஜீனு சொன்னேன்.

    சூர்யா வந்து நிர்வாகத்திடம் பேசி என்னை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வந்தார். இப்படித்தான் எங்க நட்பு. இதே மாதிரி இப்போது அவரிடம் அணுக முடியுமா? அவருடைய உயரம் வேறு, ஆனால் இப்போது கூடுதலாக சார் சொல்லணும்னா நான் அதுக்கு உடன்பட முடியாது. சரி சொன்னாலும் என் உள்ளம் அதை ஏற்காது. அப்போ விலகி இருந்து ரசிப்போம்னு வந்துட்டேன் என அமீர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

  • எல்லாம் முடிஞ்சும் கருப்புக்கு ஏழரை முடியலயே!.. மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போகுமா?…

    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கருப்பு. இந்த படத்தை சூர்யாவின் உறவினர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். இந்த படம் உருவானபோது பல பிரச்சனைகளை சந்தித்தது. ஆர்.ஜே.பாலாஜிக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே சில பிரச்சனை வந்தது. அதன்பின் ஆர்.ஜே.பாலாஜிக்கும் திரிஷாவுக்கும் இடையே பிரச்சனை வந்தது.

    பல நாட்கள் ஷூட்டிங் நடக்கவில்லை. இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருந்தபோது கோபமடைந்த சூர்யா லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போய்விட்டார். அந்த படம் முடிந்து அடுத்து மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போய்விட்டார் சூர்யா.

    ஒருபக்கம் இந்த படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருந்தது. அதற்கு காரணம் இந்த படத்திற்கு 85 கோடி விலை சொன்னார் எஸ்.ஆர்.பிரபு. ஆனால் ஓடிடி நிறுவனங்கள் இந்த விலையை கொடுக்க முன்வரவில்லை. அதன்பின் ஒருவழியாக மீதி 20 நாட்கள் படப்பிடிப்பை முடித்து தற்போது படம் தயாராகிவிட்டது..

    தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமையை Zee5 வாங்கியிருக்கிறது. 85 கோடி சொல்லி, 60 கோடிக்கு வந்து தற்போது படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி என இரண்டு உரிமைகளையும் சேர்த்து 45 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறார்கள்..

    அதோடு படத்தை ஏப்ரல் 10ம் தேதி வெளியிடவும் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் தற்போது இதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அனேகமாக ஏப்ரல் முதல் பாதியில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாகஏப்ரல் 13-ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்கும் என சொல்கிறார்கள். எனவே தமிழ்நாடு தேர்தல் விஷயத்தில் பிஸியாக இருக்கும் போது படம் பார்க்க மக்கள் வர மாட்டார்கள் என்பதால் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அனேகமாக தேர்தலுக்கு பின்னரே கருப்பு படம் வெளியாகும் எனத் தெரிகிறது..

  • Suriya: மூணு ஹீரோயின்ஸ் இருந்தும் என்ன பிரயோஜனம்? சூர்யா ரொம்ப ஃபீல் பண்றாரே

    கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் மௌனம் பேசியதே. அந்த படத்தை 20 வருடங்களுக்குப் பிறகு காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 13ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். மௌனம் பேசியதே திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அது முற்றிலும் காதல் கதையை மையப்படுத்தி வெளியான திரைப்படம். அமீர் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சூர்யா த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்.

    20 வருடங்கள் ஆனாலும் அந்த படத்திற்கு இன்று வரை ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அந்த திரைப்படத்தை இப்போது வரை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அந்த படத்தில் அமைந்த பாடல்கள் காலத்திற்கும் நின்று பேசக்கூடியவையாக அமைந்திருக்கின்றன. ஆரம்பத்தில் காதல் என்றாலே வெறுப்பு என்ற மனநிலையில் சுற்றி வரும் ஒரு இளைஞனாக சூர்யா நடித்திருப்பார்.

    அதன் பிறகு அவருக்குள்ளும் ஒரு காதல் மலரும். பிறகு அந்த காதல் ஜெயித்ததா இல்லையா என்பதுதான் அந்த படத்தின் மீதி கதை. அந்த படத்தில் அமைந்த ஒரு சில வசனங்கள் இப்போது வரை சமூக வலைதளங்களில் மீம்ஸுகளாகவும் ரீல்ஸ்களாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மௌனம் பேசியதே திரைப்படம் ரீ ரிலீஸ் பற்றி சூர்யா ஒரு வீடியோவில் பேசி அதை வெளியிட்டு இருக்கிறார். அந்த படத்தில் அவர் பேசிய, ஒழுங்காதானடா இருந்தீங்க, திடீர்னு எங்க இருந்துடா வருது இந்த லவ், தனி மரம் தோப்பாகாது, காதல்ங்கிறது உள்ளிருந்து வரணும் போன்ற வசனங்களை அந்த வீடியோவில் பேசி இந்த படத்தை ரசிகர்களுடன் மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

    இதில் திரிஷா, லைலா, நேகா போன்ற கதாநாயகிகள் நடித்திருந்தனர். மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தும் இதில் ஒரு கட்டிப்புடி காட்சி கூட இருக்காது. அப்படி ஒரு தூய்மையான காதல் திரைப்படமாக இது அமைந்திருக்கும். இந்த படத்தை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதை வரும் பிப்ரவரி 13ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதனால் ரசிகர்களுடன் இந்த படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது என சூர்யா அந்த வீடியோவில் பேசி வெளியிட்டு இருக்கிறார்.

  • Suriya: WWE மேட்ச்சுக்கே டஃப் கொடுக்கும் சூர்யாவின் லைன் அப்! இதாவது கை கொடுக்குமா?

    சூர்யாவின் லைன் அப் இப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது. தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் வெளியான கங்குவா மற்றும் ரெட்ரோ போன்ற திரைப்படங்களுக்கு சுமாரான வரவேற்பே கிடைத்த நிலையில் அடுத்து சூர்யா பெரும் வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். கங்குவா படத்திற்காக கடின உழைப்பை போட்ட சூர்யா அந்தப் படம் பெரும் தோல்வியை தந்து ரசிகர்களை ஏமாற்றியது.

    தற்போது சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தியில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சூர்யா அடுத்து எந்தெந்த இயக்குனர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்? யாரெல்லாம் அவர் லைன் அப்பில் இருக்கிறார்கள் என்பது பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது.

    வெங்கி அட்லூரி படத்திற்கு பிறகு சூர்யாவின் 47வது படத்தை ஜித்து மாதவன் இயக்குகிறார். இந்த நிலையில் அபிஷன் ஜீவிந்த், நஹாஷ்ஹிதயாத், மாரிசெல்வராஜ், விவேக் ஆதிரயா,பரசுராம், சண்டு முண்டேட்டி, அமல் நீரத் என இவர்கள் சூர்யாவின் புராஜக்ட்டில் இருப்பார்கள் என்று தெரிகிறது. இந்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானால் சூர்யாவின் கெரியர் வேறு மாதிரி இருக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.

    ஏனெனில் இந்த இயக்குனர்கள் அனைவருமே சினிமாவில் நல்ல தரமான படங்களை கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் சூர்யா இணைவது மேலும் ஒரு பலம். அதனால் நல்ல கதைகள் அமைந்தால் இது சூர்யாவிற்கு எதிர்பார்க்காத வெற்றியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

  • அண்ணனும் தம்பியும் சேர்ந்து அமேசான் பிரைமை காலி பண்ணிட்டாங்களே!.. ஐயோ பாவம்….

    திரையுலகில் OTT என்பது தற்போது முக்கிய வியாபாரமாக மாறியிருக்கிறது. தியேட்டரில் வெளியாகும் புதிய திரைப்படங்கள் 3 வாரங்கள் கழித்து Netflix, Amazon Prime போன்ற OTT தளங்களில் ஒளிபரப்பு செய்கிறார்கள். எனவே புதிய படங்களை பல கோடிகள் கொடுத்து ஓடிடி நிறுவனங்கள் வாங்குகின்றன. அதிலும் ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் மிகவும் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

    ஓடிடி மூலம் பல கோடி வருமானம் வருவதால் அந்த நிறுவனங்கள் சொல்லும் தேதியில்தான் தயாரிப்பாளர்கள் படத்தையே ரிலீஸ் செய்கிறார்கள். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி.. ஒரு படம் ஓடிடியில் போனி ஆகவில்லை என்றால் ரிலீஸ் தேதியையே தயாரிப்பாளர்கள் தள்ளிப்போடுகிறார்கள். சூர்யாவின் கருப்பு திரைப்படம் கூட அதனால்தான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

    முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே ஓடிடி நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்கின. ஆனால், பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது ஓடிடி நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டன. எவ்வளவு பேர் படங்கள் பார்க்கிறார்களோ அதில் வரும் லாபத்தில் தயாரிப்பாளருக்கு பங்கு என வியாபாரத்தை மாற்றி கொண்டார்கள். ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர் என்றால் மட்டுமே முன் தொகையாக சில கோடிகளை கொடுக்கிறார்கள்.

    இந்நிலையில்தான் சூர்யா மற்றும் அவரின் தம்பி கார்த்தி இருவரின் படங்கள் சேர்ந்து அமேசான் பிரைம் நிறுவனத்தை காலி செய்திருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 81 கோடி கொடுத்து வாங்கியது. ஆனால் இந்த படம் தியேட்டரிலேயே ஓடவில்லை என்பதால் ஓடிடியிலும் யாரும் சீண்டவில்லை. ஓடிடி மூலம் அமேசான் நிறுவனத்திற்கு ஒரு கோடி மட்டுமே வருமானம் வந்திருக்கிறது. 80 கோடி நஷ்டம்..

    அதேபோல் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்து பொங்கலுக்கு வெளியான ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வாங்கிய விதத்திலும் அமேசான் பிரைம் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்திருக்கிறது. இதையடுத்து இனிமேல் அதிக விலை கொடுத்து படங்களை வாங்க வேண்டாம்.. மெலும், நெட்பிளிக்ஸ் போல சொந்தமாக வெப் சீரியஸ்களை தயாரித்து ஒளிபரப்பலாம். நேரடியாக ஓடிடியில் ப்ரீமியர் ரிலீஸ் செய்ய முன்வரும் படங்களை மட்டுமே வாங்குவோம் என்கிற முடிவை அமேசான் நிறுவனம் எடுத்திருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.

  • சிம்பு போய்.. ரஜினி போய்.. SK போய்… அந்த ஹீரோக்கிட்ட போன பார்க்கிங் பட இயக்குனர்…

    பார்க்கிங் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
    அதன்பின் சிம்பு வைத்து ராம்குமார் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை.

    ஒருபக்கம் ரஜினியின் 173 வது படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதையடுத்து ரஜினி பலரிடமும் கதை கேட்டார். அதில் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை அவருக்கு பிடித்துப்போக அவரையே இயக்குனராக டிக்கெட் அடித்திருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் திடீர் திருப்பமாக ரஜினியின் 173வது படத்தை இயக்குவது டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

    எனவே சிவகார்த்திகேயனை சந்தித்து ராம்குமார் பாலகிருஷ்ணன் ஒரு கதை சொன்னார்.. அவருக்கு கதை பிடித்திருந்தாலும் கையில் சில படங்கள் இருப்பதால் தற்போது அவரால் நடிக்க முடியவில்லை. இந்நிலையில்தான் நடிகர் சூர்யாவெ ராம்குமார் பாலகிருஷ்ணனை அழைத்து பேசியதாக தெரிகிறது.

    ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை சூர்யாக்கு பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், சூர்யாவுடன் ராம்குமார் படம் டேக்ஆப் ஆகுமா என்பது விரைவில் தெரிந்து விடும். கடந்த பல வருடங்களாகவே ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர்களு கூட படங்கள் அமைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Parasakthi: தெரிஞ்சிதான் சூர்யா கிரேட் எஸ்கேப்!.. ‘பராசக்தி’யை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

    இன்று பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது பராசக்தி திரைப்படம். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இந்தப் படம் உலகமெங்கும் ரிலீஸாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீலீலா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சிவாஜி கணேசன் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் பராசக்தி.

    அந்த படத்தின் தலைப்பை இந்தப் படத்திற்கு வைத்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகவே கருதப்படுகிறது. ஹிந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்களை நடத்தினார்கள். அந்த வரலாற்று சம்பவத்தை நியாபகப்படுத்தும் விதமாக இந்தப் படத்தை கையில் எடுத்துள்ளார் சுதா கொங்கரா. படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவிமோகன் நடித்துள்ளார். வில்லனாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார் என்றே கூறவேண்டும். சிவகார்த்திகேயனை விட ரவிமோகனின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. படம் வெளியானதிலிருந்தே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. படத்தை பார்க்க பல பிரபலங்கள் திரையரங்கிற்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் பராசக்தி படத்தை விமர்சனம் செய்யும் போது சூர்யாவிற்கு ரசிகர்கள் சபாஷ் போட்டு வருகின்றனர். ஏனெனில் நல்ல வேளை பராசக்தி படத்தில் சூர்யா நடிக்க வில்லை என்பதுதான் அந்த சபாஷுக்கு காரணம். ஏனெனில் பராசக்தி படத்திற்கு முன் புறநானூறு என்ற தலைப்பில்தான் சூர்யா இந்தப் படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்தப் படத்தில் இருந்து சூர்யா விலக அவருக்கு பதில் சிவகார்த்திகேயன் கமிட் ஆனார்.

    ஹிந்தி திணிப்புனு சொல்லிட்டு அதில் காதலையும் சேர்க்க சில சமயம் அது ரசிகர்களை கடுப்பேத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இடைவேளைக்கு பிறகு கதையில் கொஞ்சம் ஆறுதல் ஏற்படுவதாகவும் இரண்டாம் பகுதிக்கு பிறகு வேகம் எடுக்கும் என்று நினைத்தால் அதன் பிறகும் கொஞ்சம் தொய்வு ஏற்படுவதாகவும் கூறி வருகிறார்கள்.

    ரவிமோகன் தன்னை வில்லனாக காட்ட கஷ்டப்படுகிறார். ஜிவி பிரகாஷ் படத்தை காப்பாற்ற கஷ்டப்படுகிறார். சிவகார்த்திகேயனின் கேரக்டரை வலிமைப்படுத்து காப்பாற்ற அவரும் கஷ்டப்பட அதர்வா தன்னை போராட்டக்காரராக காட்டிக் கொள்ளவும் கஷ்டப்படுகிறார். மொத்தத்தில் ஹிந்தி திணிப்பு என்று கூறி அரசியல் திணிப்பை செய்துள்ள இந்தப் படத்தில் இருந்து சூர்யா தன்னை காப்பாற்றிக் கொண்டார். அவருக்கு சபாஷ் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.