Tag: thalaivar 173

  • Thalaivar173: கமல் கேமியோ. ஷங்கர் வில்லன்.. எல்லாம் ரஜினி கையில் இருக்கு!..

    Thalaivar173: கமல் கேமியோ. ஷங்கர் வில்லன்.. எல்லாம் ரஜினி கையில் இருக்கு!..

    கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினியின் 173 வது படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் திடீரென அந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகினார். அதன்பின் அந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரும் வெளியானது..

    ஆனால் திடீரென சிபி சக்கரவர்த்தியும் இந்த படத்திலிருந்து இருந்து விலகவிருப்பதாகவும் அவருக்கு பதில் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது. அதன்பின் சில நாட்களில் அந்த கதையில் சில மாற்றங்களை ரஜினி செய்ய சொல்லியிருப்பதகவும், சிபி அதற்காக வேலையி ஈடுபட்டிருக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. கதையை மாற்றியபின் ரஜினிக்கு அது பிடித்திருந்தால் சிபியே இயக்குனதாக தொடர்வார்.. இல்லையெனில் அஸ்வத் மாரிமுத்து உள்ளே வருவார் எனவும் சொல்லப்பட்டது.

    ரஜினியை வைத்து தான் இயக்கவிருந்த படத்தில் கமல்ஹாசனை ஒரு கேமியோ வேடத்திலும், இயக்குனர் ஷங்கரை வில்லனாகவும் நடிக்க வைக்கலாம் என சிபிராஜ் சொல்ல கமல், ஷங்கர் இருவரிடம் பேசி ஒப்புதலையும் வாங்கி வைத்திருந்தார்களாம். அதேநேரம், ரஜினியின் 173வது படத்தை சிபி இயக்கினால் மட்டுமே இது நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

  • சிபியா? அஸ்வத் மாரிமுத்துவா?.. மங்காத்தா ஆடும் ரஜினி!.. அவரை நம்பி சிம்பு படம் போச்சே!..

    சிபியா? அஸ்வத் மாரிமுத்துவா?.. மங்காத்தா ஆடும் ரஜினி!.. அவரை நம்பி சிம்பு படம் போச்சே!..

    ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க அவரின் 173-வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே இந்த படத்திலிருந்து வெளியேறுவதாக சுந்தர்.சி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அஸ்வத் மாரிமுத்து, ஆர்.ஜே.பாலாஜி, சிபிச் சக்கரவர்த்தி, ராம்குமார் பாலகிருஷ்ணன் போன்ற இளம் இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி இறுதியாக சிபி சக்கரவர்த்தியை டிக் அடித்து அறிவிப்பும் வெளியானது..

    ரஜினி தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து விட்டதால் குடும்ப செண்டிமெண்ட், காமெடி மற்றும் ஆக்சன் கலந்து இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக செய்திகள் வெளியானது.
    ஆனால் சில நாட்களுக்கு முன்பு திடீரென இந்த படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தியும் வெளியேறி விட்டதாகவும், அஸ்வத் மாரிமுத்து ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது. சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினி கதையில் பல மாற்றங்களை சொன்னதோடு, துரந்தர் போல கதையை மாற்ற சொன்னதால்தான் இந்த படத்திலிருந்து சிபி வெளியேறியதாக சொல்லப்பட்டது..

    ஒருபக்கம் ஏஜிஎஸ் தயாரிப்பில் சிம்புவை வைத்து ஒரு புதிய அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக இருந்தது. அதன் சூட்டிங் விரைவில் துவங்கவிருந்த நிலையில்தான் ரஜினியிடமிருந்து அழைப்பு வந்ததது. இதையடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்திடமும், சிம்புவிடமும் சொல்லிவிட்டு ரஜினி படத்துக்கு தயாரானார் அஸ்வத்து மாரிமுத்து. ஆனால், ரஜினி சொன்ன மாற்றங்களை சிபி சக்ரவர்த்தி செய்து வருவதாகவும் அது ரஜினிக்கு பிடித்து விட்டால் சிபி சக்கரவர்த்தியே இயக்குனராக தொடர்வார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது.

    இதையடுத்து அஸ்வத் மாரிமுத்துவைன் நிலை என்னவாகும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் ஏஜிஎஸ் நிறுவனமும் சரி.. சிம்புவும் வரி.. அஸ்வத்துக்காக காத்திருக்க தயாராக இல்லை.. வேறு இயக்குனரை வைத்து ஒரு படத்தை துவங்கும் முடிவுக்கு வந்து விட்டார்கள். ஒருவேளை சிபி சக்ரவர்த்தியை மீண்டும் ரஜினியை டிக் அடித்துவிட்டால் ரஜினியை நம்பி சிம்பு படத்தை அஸ்வத் இழக்க நேரிடும். எல்லாம் ரஜினியின் முடிவில்தான் இருக்கிறது..

  • அப்ப சுந்தர்.சி.. இப்போ சிபி சக்ரவர்த்தி!.. கூலி படத்துக்கு பின் குழப்பத்தில் ரஜினி..

    அப்ப சுந்தர்.சி.. இப்போ சிபி சக்ரவர்த்தி!.. கூலி படத்துக்கு பின் குழப்பத்தில் ரஜினி..

    கடந்த பல வருடங்களாகவே இந்திய சினிமா அளவில் சூப்பர்ஸ்டாராகவும், வசூல் சக்கரவர்த்தியாகவும் வலம் வந்தவர் நடிகர் ரஜினி. சில படங்களை தவிர அவரின் எந்த திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததில்லை. ஆனால் அவர் நடிப்பில் வெளியான பாபா அவருக்கு நஷ்டத்தை கொடுத்தது.

    அதன்பின் 4 வருடங்கள் கழித்து அவரின் நடிப்பில் வெளியான சந்திரமுகி அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஆனால், அதன்பின் வெளிவந்த லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. கதை, திரைக்கதை, இயக்குனர், காட்சிகள் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து சரியாக கணக்குப் போட்டு நடித்து வந்த ரஜினியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

    அதனால்தான் பல வருடங்களாகவே சீனியர் இயக்குனர்களின் படங்களில் மட்டும் நடித்துவந்த ரஜினி கடந்த பல வருடங்களாகவே இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி வெளிவந்த பேட்டை, ஜெயிலர் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தது
    . ஒருபக்கம் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் மாறினார்.. அதோடு விஜயின் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலையும் குவித்தது. அதை ஏற்றுக்கொள்ளமுடியாத ஆதங்கத்தில்தான் ஜெயிலர் பட விழாவில் ரஜினி காக்கா -கழுகு கதையை சொன்னதாக சொல்லப்பட்டது..

    அதேநேரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது ரஜினியை யோசிக்க வைத்திருக்கிறது.. ஒருபக்கம் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெயிலர் 2 படமும் பக்கா ஆக்சன் படம்தான்.

    இதையடுத்து இனிமேல் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் கொண்ட ஆக்சன் படங்கள் வேண்டாம்.. ஒரு குடும்ப பின்னணி கொண்ட ஒரு ஜாலியான, கலகலப்பான காமெடி படத்தில் நடிக்கலாம் என ரஜினி ஒரு நல்ல முடிவை எடுத்தார். அதனால்தான், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு போனது.

    ஆனால் ரஜினி என்ன மாறுதல் சொன்னாரே சுந்தர்.சி அந்த படத்திலிருந்து வெளியேறினார். அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்திதான் ரஜினியின் 173-வது படத்தை இயக்குகிறார் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.. கடந்த சில மாதங்களாக படத்திற்கான முழு கதையையும் சிபி சக்கரவர்த்தி உருவாக்கினார்.

    cibi

    இந்த படத்தில் டெய்லராக ரஜினி நடிப்பது போஸ்டரிலேயே சொல்லப்பட்டிருந்த்து. ஆனால் தற்போது இந்த படத்திலிருந்து சிபிச் சக்கரவர்த்தியும் விலகியிருக்கிறார். இந்த படத்தை டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது..

    சமீபத்தில் சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினி ‘கதைப்படி இந்த படத்தில் நான் ஒரு Spy – உளவாளி. எனவே துரந்த 2 படம் போல ஒரு பக்கா ஆக்சன் படமாக கதையை மாற்ற முடியுமா?’ என கேட்டிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியான சிபி சக்கரவர்த்தி ‘முழுக் கதையையும் எழுதி முடித்து விட்டேன்.. இனிமேல் நீங்கள் சொல்வது போல கதையை மாற்றுவது சிரமம்’ என சொல்ல அவரை தூக்கிவிட்டு அஸ்வத் மாரிமுத்துவை ரஜினி உள்ளே கொண்டு வந்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

    கூலி படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பின் ரஜினியின் நடவடிக்கைகளில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அவரால் ஒரு கதையை முழுமையாக நம்ப முடியவில்லை.. நிறைய தலையிடுகிறார். இயக்குனரிடம் அதை மாற்று.. இதை மாற்று என ரஜினி குழப்பத்தில் இருக்கிறார்’ என கோலிவுட்டில் பேச துவங்கியிருக்கிறார்கள்.

  • Thalaivar 173: கதையை மாற்ற சொன்ன ரஜினி!.. சிபி சக்ரவர்த்தி விலகியதன் பின்னணி!..

    Thalaivar 173: கதையை மாற்ற சொன்ன ரஜினி!.. சிபி சக்ரவர்த்தி விலகியதன் பின்னணி!..

    ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்திலிருந்து சுந்தர்.சி விலகிய நிலையில் டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி இயக்கப் போகிறார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கிய ஒரு இளம் இயக்குனருக்கு ரஜினி எப்படி வாய்ப்பு கொடுத்தார் என திரையுலகமே ஆச்சர்யப்பட்டது. ஆனால் ரஜினி டிரெண்டிங்கில் இருக்கும் இளம் இயக்குனர்களிடம் பயணிக்க விரும்புகிறார் என சொல்லப்பட்டது..

    திடீரென இந்த படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி விலகி விட்டதாக இன்று காலை முதலே செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான், இதற்கான பின்னணி வெளியே தெரிய வந்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. டான் படத்திற்கு பின் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கத்தை திட்டமிட்டார் சிபி சக்கரவர்த்தி. ஆனால் அது நடக்காமல் போகவே தெலுங்கு நடிகர் நானியை வைத்து ஒரு படத்தை இயக்குவது முடிவானது.

    அது தொடர்பான பணிகள் நடந்து வந்த நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் சிபிச் சக்கரவர்த்தியிடம் கதையை மாற்றுங்கள்.. அதை மாற்றுங்கள்.. இதை மாற்றங்கள் என்று சொல்லி அழுத்தம் கொடுத்த தயாரிப்பாளர் ஒரு கட்டத்தில் கதையை மட்டும் வைத்துக்கொண்டு சிபி சக்கரவர்த்தியை வெளியேற்ற முடிவெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட பின்னரே சிபி சக்கரவர்த்தி அந்த படத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்..

    தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை இயக்க சிபி சக்கரவர்த்தி கமிட் ஆனதும் ‘உங்களுக்காக இவ்வளவு செலவு செய்திருக்கிறோம்.. அதற்காக ரஜினி படத்தின் தயாரிப்பில் எங்களையும் இணைக்க சொல்லுங்கள்’ என்று அந்த தெலுங்கு தயாரிப்பாளர் சிபி சக்ரவர்த்திக்கு அழுத்தம் கொடுத்தாராம். ஆனால் ராஜ்கம்ல் பிலிம்ஸ் அதை ஏற்கவில்லை. இதையடுத்தே சிபி சக்கரவர்த்தி இந்த படத்திலிருந்து விலகியதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது..

    மற்றொன்று ரஜினி ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்கிறார்கள்.. அதாவது கூலி படத்திற்கு பின் ஆக்சன் படம் வேண்டாம் என முடிவெடுத்ததால்தான் சிபி சக்ரவர்த்தி சொன்ன கதையை ரஜினி டிக் அடித்தார். ஆனால், சமீபத்தில் சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினி ‘கதைப்படி நான் ஒரு உளவாளி.. என்னிடம் ரசிகர்கள் இதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள்.. எனவே துரந்தர் 2 படத்தில் வருவது போல ஒரு பெரிய ரேஞ்சுக்கு படத்தை செய்தால் என்ன’ என்று கேட்க சிபி சக்கரவர்த்தி ஆடிப் போய்விட்டாராம்.

    ‘சார்.. மொத்த கதையையும் எழுதி முடித்து விட்டேன்.. இனிமேல் என்னால் கதையை மாற்ற முடியாது’ என சிபி சக்ரவர்த்தி சொல்லவே அவரை தூக்கி விட்டு அஸ்வத் மாரிமுத்துவை ரஜினி உள்ளே கொண்டுவந்ததாக சொல்லப்படுகிறது.

  • Thalaivar 173: சுந்தர்.சியை தொடர்ந்து சிபியும் விலகல்?!.. ரஜினி படத்தை இயக்குவது அவரா?..

    Thalaivar 173: சுந்தர்.சியை தொடர்ந்து சிபியும் விலகல்?!.. ரஜினி படத்தை இயக்குவது அவரா?..

    கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் அவரின் 173வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது..

    ஆனால் திடீரென அந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகினார். அதன் பின் சிபிச் சக்கரவர்த்தி, ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து, ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்ட சில இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டார் ரஜினி. இறுதியில் சிபிச் சக்கரவர்த்தி ஓகே செய்யப்பட்டார்.. அதோடு ரஜினியின் புதிய படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது..

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என ரஜினியும் செய்தியாளர்களிடம் தொடர்ந்து சொல்லி வந்தார். திடீரென இந்த படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி வெளியேறிவிட்டதாகவும் அவருக்கு பதில் டிராகன் படத்தை இயக்கிய அஸ்வர் மாரிமுத்து இயக்கப்போவதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது.

    சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். ரஜினி 173-வது படத்திலிருந்து இதுவரை இரண்டு இயக்குனர்கள் விலகி விட்டது பேசுபொருளாக மாறியிருக்கிறது. சிபிச்சக்ரவரத்தி என்ன காரணத்திற்காக இந்த் படத்திலிருந்து விலகியிருக்கிறார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

  • மீண்டும் தளபதி ஜோடி- ரஜினியுடன் இணையும் ஷோபனா

    மீண்டும் தளபதி ஜோடி- ரஜினியுடன் இணையும் ஷோபனா

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 172-வது படமான நெல்சன் திலீப்குமாரின் ‘ஜெயிலர் 2’ படத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்தோடு நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தபடமான தலைவர் 173படப்பிடிப்பு தயராகி வருகின்றனர் படகுழுவினர்.

    கமல்ஹாசனின் ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படத்தை சிவகார்த்திகேயன் நடித்த டான் வெற்றிபட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். ஆரம்பத்தில் இப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்பு அவர் விலகிகொண்டது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் இப்படம் குறித்து பேசிய ரஜினிகாந்த் இது முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னராக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கும் ரஜினியின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிய அனிருத் இசையமைக்கிறார்.

    இந்த நிலையில் தலைவர் 173 படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஷோபனா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தளபதி படத்துக்கு பின் இவர்கள் இப்படத்தில் இணைகிறார்கள். மற்றும் பிரியங்கா மோகனும் இப்படத்தில் நடிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஆரம்பிக்கலாமா!.. தலைவர் 173 படம் ஸ்டார்ட்!.. ராஜ்கமல் வெளியிட்ட செம போட்டோ!…

    ஆரம்பிக்கலாமா!.. தலைவர் 173 படம் ஸ்டார்ட்!.. ராஜ்கமல் வெளியிட்ட செம போட்டோ!…

    ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்க ரஜினி அவரின் 173வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சுந்தர்.சி சொன்ன கதையில் ரஜினிக்கு திருப்தி ஏற்படாததால் அந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகினார். எனவே, சிபி சக்ரவர்த்தி, அஸ்வத் மாரிமுத்து, ஆர்.ஜே. பாலாஜி, ராம்குமார் பாலகிருஷ்ணன் போன்ற இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டார் ரஜினி. இறுதியில் சிபி சக்ரவர்த்தியே இயக்குனர் என ரஜினி முடிவு செய்தார்.

    அதன்பின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஒரே ஒரு படத்தை இயக்கியுள்ள சிபிக்கு ரஜினி எப்படி படம் கொடுத்தார் என கோலிவுட்டே ஆச்சர்யமாக பார்த்தது. இதை ஒரு மேடையிலேயே சொன்ன சிபி ‘இவனா ரஜினி படத்தை இயக்கப்போகிறான் என பலரும் பார்க்கிறார்கள். தலைவர் ரசிகனாக சொல்கிறேன்.. இந்த படம் நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்’ என சொன்னார்.

    இந்நிலையில்தான், இந்த படத்தின் வேலைகள் தற்போது துவங்கியிருக்கிறது. படத்தின் முழுக்கதையையும் சிபி சக்ரவர்த்தி எழுதி முடித்துவிட்டார். முழுக்கதையையும் அவர் ராஜ்கமல் மகேந்திரன் கொடுப்பது உள்ளிட்ட சில புகைப்படங்கலை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பகிர்ந்து ‘ஆரம்பிக்கலாமா’ என பதிவிட்டிருக்கிறது.

  • ஆணும் பெண்ணும் சேர்ந்த கேரக்டர்… பேரு ரஜினி!.. உள்குத்து இருக்கா சுந்தர்.சி?…

    கோலிவுட்டில் 30 வருடங்களுக்கு மேல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இப்போதுள்ள பல இயக்குனர்களுக்கும் சீனியர் இவர். அதேநேரம் இப்போதுள்ள இளம் இயக்குனர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். காதல் கலந்த காமெடி படங்கள் இவருக்கு கை வந்த கலை. அதே நேரம் அரண்மனை படம் மூலம் ஹாரர் காமெடிக்கு மாறினார்.. தற்போது அதில் 4 பாகங்கள் வெளியாகிவிட்டது.

    திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமின்றி அவ்வப்போது திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் சுந்தர்.சி. அப்படி அவர் தயாரித்திருக்கும் திரைப்படம்தான் ஒன்றுதான் டபுள் ஆக்குபன்ஸி (Double Occupancy). இந்த திரைப்படத்தை அஸ்வின் கந்தசாமி என்பவர் இயக்க புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

    இந்த படத்தின் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு பெண் ஒரு ஆணை காதலிக்கிறார்.. ஒரு பக்கம் ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறார்.. ஒரு கட்டத்தில் காதலிக்கப்படும் அந்த ஆணும், பெண்ணும் ஒரே நபராக மாறுகிறார்கள். அது கூட பிரச்சினை இல்லை.. ஏதோ புதிதாக ஒன்றை முயற்சி செய்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.. ஆனால் அந்த கதாபாத்திற்கு ரஜினி என பெயர் வைத்திருக்கிறார்கள்..

    சுந்தர்.சி ரஜினியை வைத்து படமெடுக்க முயற்சி செய்தார். ஆனால் ரஜினிக்கு கதை பிடிக்காததால் வெளியேறினார். எனவே ரஜினி மீதுள்ள கோபத்தில் இப்படி அந்த கதாபாத்திரத்திற்கு பெயர் வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.. அல்லது கதையில் அந்த கதாபாத்திரத்திற்கு ரஜினி என தலைப்பு வைக்கப்பட்டதற்கு காரணம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் படம் வெளியான பின்னரே தெரியவரும்..

  • ஐஸ்வர்யாவுக்கு இந்த படம்!.. சௌந்தர்யாவுக்கு கடைசிப்படம்!. பங்கு பிரித்த ரஜினி….

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் இந்திய அளவில் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். 50 வருடங்களை தாண்டி சினிமாவில் நடித்து வருகிறார். எம்ஜிஆருக்கு பின் அதிக ரசிகர்களை கொண்டிருந்தவர். இப்போதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போது கூட விஜய்க்கு போட்டி நடிகர் போல டஃப் கொடுக்கிறார் ரஜினி. அபூர்வ ராகங்கள் தொடங்கி ஜெயிலர் 2 வரை 172 படங்களில் நடித்து முடித்து விட்டார் ரஜினி..

    அடுத்து சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப்போகிறார். அந்த படத்திற்கு பின் கமலுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
    கடந்த பல வருடங்களாகவே இதுதான் ரஜினியின் கடைசி திரைப்படம் என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் ரஜினி தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் . இந்நிலையில்தான் ரஜினி தனது கடைசி படத்தை முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.

    சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த படத்தில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் ஒரு தயாரிப்பாளராக இருக்கிறார்.. அதாவது ரஜினிக்கு சம்பளம் மற்றும் படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்கு என பேசியிருக்கிறார்கள். அந்த தொகை ஐஸ்வர்யாவுக்கு போகும் என்கிறார்கள். இதன் மூலம் ஐஸ்வர்யாவுக்கு ரஜினி செட்டில்மெண்ட் செய்கிறார் என்கிறார்கள்.

    அதேபோல், ரஜினி நடித்துள்ள கடைசி படத்தை அவரின் இளைய மகள் சௌந்தர்யா தயாரிக்கப் போகிறார் என்கிறார்கள்.. இப்படி சொத்தைப் பிரித்துக் கொடுப்பது போல தனது இரண்டு படங்களின் மூலம் வரும் லாபத்தையும் இரண்டு மகள்களுக்கும் பிரித்துக் கொடுக்க ரஜினி முடிவெடுத்திருக்கிறாராம்..

  • Thalaivar173: இவ்ளோ அவசரமா புரமோ ஷூட் எதுக்கு!.. இதான் மேட்டரா?!…

    கூலி படத்திற்கு பின் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற சனிக்கிழமையோடு முடிவடைவதாக சொல்லப்படுகிறது.

    இந்த படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது ரஜினியின் 173-வது திரைப்படமாகும். இந்த படத்தை ரஜினியின் நண்பர் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் முதல் வாரம் துவங்கவுள்ளது என்கிறார்கள்.

    இந்நிலையில்தான் சிபிச் சக்ரவர்த்தி படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான புரமோ வீடியோவை வருகிற பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் மரம் எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜுவ் மேனன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்கிற தகவலும் வெளியானது.

    ரஜினி எப்படியும் சிபிச் சக்கரவர்த்தி படத்தை முடித்துவிட்டுதான் கமலுடன் இணைந்து நடிக்கப் போகிறார்.. கண்டிப்பாக அதற்கு இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்கள் ஆகும். அப்படி இருக்கும்போது எதற்காக இவ்வளவு அவசரமாக புரமோ வீடியோவை எடுக்கிறார்கள் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.. இந்நிலையில்தான் அதன் பின்னணி தெரியவந்திருக்கிறது.

    இதற்கு பின்னணியில் ஓடிடி வியாபாரம் இருப்பதாக சொல்லப்படுகிறது. புரமோ வீடியோ எடுத்துக் காட்டி, எப்போது படம் ரிலீஸ் என்பதை அட்வான்ஸாக சொன்னால் மட்டுமே ஓடிடியில் படத்தை புக் பண்ண முடியும் என்கிற நிலை தற்போது உருவாகியிருக்கிறது. அதனால்தான் புரமோ வீடியோவை இவ்வளவு வேகமாக எடுக்கிறார்கள் என்கிறார்கள்.