Tag: Thuglife

  • OTT: ஆசைக்காட்டி மோசம் பண்ணிட்டீங்களே… இந்த வாரம் ஓடிடி ரிலீஸுக்கு வந்த திரைப்படங்கள்…

    OTT: பிரபல திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதன் அதிகாரப்பூர்வ லிஸ்ட் குறித்த தொகுப்புகள்.

    மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான இப்படம் பெரிய ஏமாற்றத்தை கிளப்பியது.

    படம் ரிலீசாவதற்கு முன்னர் 8 வாரம் கழித்தே இந்த படம் ஓடிடிக்கு வர நிறுவனம் சம்மதித்து விட்டதாக கமல் பேசி இருப்பார். ஆனால் தற்போது அதிர்ச்சியாக 5 வாரத்தில் நெட்பிளிக்ஸில் Thuglife திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது.

    காளிவெங்கட், ரோஷினி நடிப்பில் உருவான Madras Matinee திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது பிரைம் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.

    இரு மதத்தில் இருக்கும் பிரச்னையை பேசும் Paramashivan Fathima திரைப்படம் நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும் பெரிய ஹிட் கொடுக்கவில்லை. தற்போது இப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

    நல்ல படங்களைக் கொடுத்து வந்த வெற்றி சமீபத்தில் பல படங்களில் சரியாக தேர்வு செய்யவில்லை. அந்த வரிசையில் அவர் நடிப்பில் Rajputhiran இந்த வாரம் சிம்ப்ளிசவுத்தில் ரிலீஸாக இருக்கிறது. ஆனால் ரசிகர்களை ஈர்க்குமா என்பது தெரியவில்லை.

    பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் இந்த வாரம் ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளிவர இருக்கிறது The Good Wife வெப்சீரிஸ். கணவருக்கு ஏற்படும் பிரச்சனையை வக்கீலாக பிரியாமணி எப்படி எதிர்கொண்டார் என்பதை மையமாக வைத்து வெளிவரும் இந்த சீரிஸ் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுமட்டுமல்லாமல் பிரைம் ஓடிடியில் UppuKappuRambu பல மொழிகளில் வெளிவர இருக்கிறது. ஜீ5 ஓடிடியில் இந்தி திரைப்படமான Kaalidhar Laapata, சன் நெக்ஸ்ட் ஓடிடியில் Jagamerigina Satyam திரைப்படம் வெளியாக இருக்கிறது. சோனி லைவில் TheHunt இந்தி வெப்சீரிஸ், ஹாட்ஸ்டாரில் Companion ஆங்கில படம் வெளியாக இருக்கிறது.

    பிரைம் ஓடிடியில் ஆங்கில படமான Heads Of State, நெட்பிளிக்ஸில் ஆங்கில படமான The Old Guard2, நெட்பிளிக்ஸில் ஆங்கிலத்தில் All The Sharks வெப்சீரிஸ் ரிலீஸாக இருக்கிறது. ரொம்ப வாரங்கள் கழித்து நிறைய தமிழ் படங்கள் ஓடிடிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • கமலுக்கு வாய்ப்பூட்டு போட்ட கர்நாடகா நீதிமன்றம்!.. அடுத்து அன்பறிவு படமும் அங்கே ரிலீஸ் ஆகுமா?..

    தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமாரை அழைத்து வந்து அவரை தன்னோட சொந்தம் என்றும் கன்னட மொழியே தமிழில் இருந்து பிறந்தது தான் என உறவை வளர்க்கும் விதமாக கமல்ஹாசன் பேசியது, பெரும் பிரச்னையை கிளப்பியது.

    கன்னட மொழியை தமிழில் இருந்து பிறந்தது என்கிற கருத்தை கர்நாடகா ஏற்கவில்லை, கமல்ஹாசன் இப்படியெல்லாம் பேசி எங்களுடைய மக்களின் மனதை புண்படுத்த வேண்டாம் என எதிர்பாளர்கள் பேசியிருந்தாலே பிரச்னை பெரிதாக ஆகியிருக்காது.

    கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரது உருவ பொம்மைகளை எதிர்த்து தக் லைஃப் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்றும் ஏகப்பட்ட அலப்பறைகளை கிளப்பினர். கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று கிளாஸ் எடுத்தார் ஆனால், கடைசியில் வழக்கு கமல்ஹாசனுக்கு சாதகமாக படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து வந்தது.

    தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடவில்லை என கமல் அறிவித்த நிலையில், அங்கே இருந்து வரவேண்டிய 20 கோடி ரூபாய் ராஜ்கமல் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், படம் சரியாக இல்லாத நிலையில், டிசாஸ்டர் ஆகிவிட்டது.

    கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம் கன்னட மொழி குறித்தும் கர்நாடகா கலாசாரம் உள்ளிட்டவை குறித்தும் இனிமேல் எந்தவித கருத்தையும் கமல்ஹாசன் கூறக்கூடாது என தடை விதித்துள்ளது.

    இதன் காரணமாக அடுத்து கமல்ஹாசன் நடித்து வரும் அன்பறிவு மாஸ்டர் படமும் கர்நாடகாவில் வெளியாகவிடாமல் போராட்டம் நடைபெறும் என தெரிகிறது. அனல் அரசு மாஸ்டர் இயக்கிய பீனிக்ஸ் படமே இப்படி இருக்கே அன்பறிவ் மாஸ்டர்கள் இணைந்து இயக்கி வரும் படத்திலும் தக் லைஃப் போல கடைசி வரை கமல் மட்டுமே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் படம் எடுபடுமா? என்பதும் டவுட்டாக உள்ளது.

  • Thuglife: கர்நாடகாவில் தக் லைஃப் படத்துக்கு தடை… நஷ்டம் மட்டுமே இத்தனை கோடியா? அசருவாரா கமல்?

    Thuglife: தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு மற்ற மாநிலங்களில் ரசிகர்கள் ஜாலியாக இருந்தாலும், கர்நாடகாவில் இன்னமும் பரபரப்பு நிகழ்ந்து வருகிறது. இதனால் கமலுக்கு ஏற்பட்ட சோதனை குறித்த தகவல் கசிந்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். 80களில் ஹிட்டடித்த நாயகன் படத்தினை மையமாக வைத்தே இப்படம் ரவுடிசம் கதையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் நாயகன் படத்தினை விட தக் லைஃப் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் எனவும் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இப்படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கமல்ஹாசன் மேடை பேச்சு பெரிய பிரச்னையை உருவாக்கியது.

    தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்ததாக அவர் பேச கர்நாடகாவில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனே கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கமல்ஹாசன் நான் தவறாகவே பேசவில்லை.

    உண்மையை தான் பேசுகிறேன். எனக்கு கர்நாடகா மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் மீது என் பாசம் மாறாதது எனவும் பேசி இருப்பார். கர்நாடக சினிமா சங்கம், வர்த்தக சங்கம் என எல்லாமே 30ந் தேதிக்குள் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என உத்தரவிட்டது.

    இந்நிலையில் அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவே இல்லை. இதனால் தக் லைஃப் திரைப்படம் தற்போது கர்நாடகா மாநிலத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டு விட்டது. அங்கிருக்கும் எந்த திரையரங்கும் இப்படத்தினை வெளியிடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த தடையால் கமல்ஹாசனுக்கு படம் வெளியாவதற்கு முன்னரே 30 கோடி வரை நஷ்டம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தடை நீடிக்கும் பட்சத்தில் இது இரு மொழி துறைக்குமே பெரிய பிரச்னையை உருவாக்கும் என்ற பேச்சுகளுமே உருவாகி இருக்கிறது.

  • சின்மயி பிரச்னையை சரி செய்ய நினைச்சேன் முடியல!.. அவரோட குரலுக்கு நான் ரசிகன் – பிரபல தயாரிப்பாளர்!

    தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் தக் லைஃப் சம்பவமாக சின்மயியை மேடை ஏற்றி தமிழில் முத்த மழை பாடலை பாட வைத்தது தான் சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளாக பேசு பொருளாக மாறியுள்ளது.

    தெலுங்கு மற்றும் இந்தி வெர்ஷனில் மட்டுமே படத்தில் சின்மயி பாடியிருக்கிறார். தமிழில் அவருக்கு பாடவும் டப்பிங் பேசவும் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஹைதராபாத்தில் செட்டில் ஆன சின்மயி மற்ற மொழிகளில் தான் பணியாற்றி வருகிறார் என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.

    பாடகி சின்மயிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வைரமுத்து மீது அவர் வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை கிளப்பியது. டப்பிங் யூனியன் தலைவரான ராதா ரவி மீதும் சின்மயி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

    ஏ.ஆர். ரஹ்மான் தனத் படங்களில் வைரமுத்து பாட்டு எழுதுவதற்கு தொடர்ந்து அனுமதிக்காமல், சின்மயிக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார். இரண்டு பெரிய புள்ளிகளை பிரச்னைக்கு தொடர்பானவர்களை நேருக்கு நேர் அமர வைத்து எப்படியாவது பேசி பஞ்சாய்த்தை தீர்த்து வைக்க வேண்டும் என தான் எவ்வளவோ முயன்றதாகவும் அது முடியவில்லை என தனஞ்செயன் கூறியுள்ளார்.

    ஒரு தெய்வம் தந்த பூவே பாடலில் இருந்தே தான் சின்மயியின் மிகப்பெரிய ஃபேன் என்றும் அவருடைய மெஸ்மரிஸிங் குரல் தமிழ் சினிமாவுக்குத் தேவை என்றும் பல முன்னணி நடிகைகளுக்கு அவர் டப்பிங் கொடுத்தால் அந்த அளவுக்கு அற்புதமாக இருக்கும் என பாராட்டிப் பேசியுள்ளார். கூடிய சீக்கிரமே சின்மயி தமிழ் சினிமாவில் பாடல்கள் பாட வேண்டும் என ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

  • அன்று தீதான் பாடியிருக்கணும்.. ‘முத்த மழை’ பாடல் குறித்து சின்மயி சொன்ன தகவல்

    தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தில் அமைந்த முத்தம மழை பாடலை பாடியதன் மூலம் ஒரே நாளில் உலக அளவில் புகழ் பெற்றுள்ளார் பாடகி சின்மயி. இதற்கு முன் தமிழ் சினிமாவில் என்றுமே மறக்க முடியாத சில ரொமான்டிக் பாடல் காதல் பாடல் என பல பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் சின்மயி.

    குறிப்பாக கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் வரும் ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட். அந்தப் பாடலுக்குப் பிறகு சின்மயியின் குரல் எட்டுத்திக்கும் ஒலிக்க ஆரம்பித்தது. அவருடைய குரலில் எத்தனையோ மெல்லிசை பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. அத்தனையுமே சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் தமிழ் சினிமாவில் அவர் பாடுவதற்கும் டப்பிங் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதற்கு காரணம் அவர் கூறிய சில உண்மைகள். அதைப் பற்றி சின்மயி சில ஆண்டுகளுக்கு முன் பல உண்மைகளை நான் கூறியதனால் என்னை பேன் செய்து வைத்திருந்தார்கள். இருந்தாலும் அந்த உண்மைகளை நான் வெளியே சொன்னதற்கு காரணம் என்னை போல் இன்னும் நிறைய பேர் எதையும் தைரியமாக வெளியே சொல்ல வர வேண்டும் என்பதற்காகத்தான் என கூறி இருக்கிறார்.

    இந்த நிலையில் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முத்தமழை பாடலை அன்று தீதான் பாடியிருக்க வேண்டும். அன்று அவர் ஊரில் இல்லை. அதனால் நான் பாடினேன். இருந்தாலும் எனக்கு கிடைத்த அந்த வரவேற்பு என்னால் இன்னுமும் நம்ப முடியவில்லை. இன்னும் 15 ஆண்டுகளில் 100 சின்மயி, ஸ்ரேயா கோஷல் குரல்களை விழுங்கக்கூடிய ஒரு பாடகியாக தீ வலம் வருவார் என சின்மயி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

  • ரோஜா முதல் தக் லைஃப் வரை.. மணிரத்னத்திடம் மாறாத ஒரு விஷயம்.. நோட் பண்ணீங்களா?

    தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் படைப்புகளை பிரம்மாண்டமாக தரக்கூடியவர். அதே வகையில் மணிரத்னம் தன்னுடைய படைப்பை வித்தியாசமான முறையில் எக்காலத்துக்கும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் தந்து கொண்டிருப்பவர். கன்னடத்தில் பல்லவி அனு பல்லவி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மணிரத்னம் அதன் பிறகு தமிழில் பகல் நிலவு என்ற படத்தை இயக்கினார். அதிலிருந்து தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

    இயக்குனர்களை பொறுத்த வரைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான விஷயம் என ஒன்று இருக்கும். அந்த வகையில் மணிரத்னம் படங்களில் அப்போதிலிருந்து இப்போது வரை மாறாத ஒரு விஷயம் என்னவெனில் அது திருமணம் சம்பந்தப்பட்ட பாடல். அவருடைய எல்லா படங்களையும் எடுத்துக் கொண்டால் திருமணம் குறித்து ஒரு பாடல் அமைந்திருக்கும். அதுவும் மற்ற பாடல்களை விட அந்த திருமண பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கும். அந்த வகையில் அவருடைய இயக்கத்தில் இப்போதும் ஒரு ட்ரெண்ட் செட்டராக மாறி இருப்பது ரோஜா திரைப்படம் .

    அதில் அரவிந்த்சாமி மற்றும் மதுபாலா திருமணத்தின் போது பின்னணியில் ஒலிக்கக்கூடிய ருக்குமணி ருக்குமணி என்ற பாடல் பெரிய அளவில் ஹிட்டான ஒரு பாடலாகும் .அதன் பிறகு பாம்பே படத்தில் மனிஷா கொய்ராலா பாடுவது மாதிரி கண்ணாலனே பாடல் எல்லோருக்கும் ஒரு பிடித்தமான பாடலாக அமைந்தது. அடுத்து மோகன்லால் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான இருவர் திரைப்படத்திலும் திருமண சமயத்தின் போது ஒலிக்க கூடிய நறுமுகையே பாடலும் பெரிய அளவில் ஹிட்டான பாடலாக மாறியது.

    ஷாருக்கான் வைத்து அவர் இயக்கிய உயிரே திரைப்படத்தில் ப்ரீத்தி ஜிந்தா பாடும் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல் எந்த மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என அனைவருக்குமே தெரியும். இதில் அலைபாயுதே படத்தில் மாதவனும் ஷாலினியும் வீட்டுக்கு தெரியாமல் கோயிலில் திருமணம் செய்யும் போது ஒலிக்க கூடிய மாங்கல்யம் தந்துநானே பாடல் இன்றுவரை அனைவரும் திருமண நாளிலும் ஸ்டேட்டஸ் ஆக வைக்கக்கூடிய பாடலாகவே மாறி இருக்கிறது.

    அதே படத்தில் அமைந்த யாரோ யாரோடி பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த லிஸ்டில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் மாதவன் சிம்ரன் திருமணம் செய்யும் போது ஒலிக்க கூடிய எந்த வாசல் வழி பாடலும் அனைவருக்கும் பிடித்த பாடலாக மாறியது .

    mani

    mani

    இப்படி ராவணன் திரைப்படத்தில் பிரியாமணி திருமணம் நடக்கும்போது ஒலிக்க கூடிய பாடல் ,ஓகே கண்மணி படத்தில் நித்யா மேனனும் துல்கர் சல்மானும் திருமணம் செய்யும்போது ஒலிக்க கூடிய மனமன பாடல் காற்று வெளியிடை திரைப்படத்தில் அமைந்த புதுப்பொண்ணே பாடல் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் அமைந்த கீச் கீச் பாடல் என வரிசையாக திருமண பாடலுக்கு என முக்கியத்துவம் கொடுக்க வந்த மணிரத்தினம் இப்போது வெளியாக கூடிய தக் லைப் திரைப்படத்திலும் ஜிங்குச்சா பாடலையும் வைத்து அதையும் பெரிய அளவில் ஹிட்டாக்கி விட்டார்.

  • Thuglife: தக் லைஃப் திரைப்படத்தில் திரிஷாவின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா? ஆத்தாடி!!

    Thuglife: மணிரத்னம் இயக்கத்தில் நடித்திருக்கும் திரிஷா வாங்கிய சம்பளம் குறித்த சுவாரஸ்ய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

    90களில் நடிப்பிற்குள் வந்த திரிஷா தமிழின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். கோலிவுட்டின் டாப் லிஸ்ட்டில் இருந்தவர் திடீரென சறுக்கி மொத்த மார்க்கெட்டையும் இழந்தார். பல வருடங்களாக வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

    பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து தற்போது மீண்டும் டாப் நாயகியாக வந்து இருக்கிறார். லியோ, விடாமுயற்சி, குட் பேட் அக்லியை தொடர்ந்து தக் லைஃப் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்திற்கு தக் லைஃப் திரைப்படத்தில் நடித்ததற்காக ரூ.12 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, தென்னிந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த சம்பளமாகும்.

    முந்தைய படமான லியோவில் திரிஷா ரூ.5 கோடி சம்பளம் பெற்றிருந்தார். 2025ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில், திரிஷாவுக்கு ரூ.6 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

    தொடர்ந்து, அஜித் குமார் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், திரிஷா ரூ.8 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இது, ‘விடாமுயற்சி’ படத்துடன் ஒப்பிடுகையில் ரூ.2 கோடி அதிகமாக பெறப்பட்டது.

    ஆனால் தற்போது இந்த படங்களை விட தக் லைஃப் படத்துக்கு மிகப்பெரிய சம்பளத்தை பெற்று இருக்கிறார். திரிஷாவின் நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே உலகளவில் பல கோடி வசூலித்துள்ளதே திரிஷாவின் இந்த சம்பள உயர்வுக்கு காரணமாக கூறப்பட்டது.

    நயன்தாரா, ஷாருக்கானின் ஜவான் படத்தில் 10 கோடி சம்பளம் பெற்றிருந்த நிலையில் இதன் மூலம், திரிஷா, நயன்தாராவை முந்தி, தென்னிந்தியாவின் அதிகம் சம்பளம் பெறும் நடிகையாக உயர்ந்துள்ளார்.

    தற்போது கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • மன்னிப்பா? என் பிளானே வேற… தக் லைஃப் கர்நாடக ரிலீஸுக்கு கமல் எடுத்த முடிவு!..

    Thuglife: கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தினை கர்நாடகாவில் வெளியிட திடீர் முடிவு எடுத்து செயல்படுத்தி இருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

    மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசன், திரிஷா, அபிராமி, சிலம்பரசன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் டைட்டில் அறிவிப்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில் படம் ரிலீஸுக்கு தயாராகி விட்டது. இன்னும் 2 தினங்களே இருக்கிறது. படக்குழு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புரோமோஷன் பணிகளில் பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.

    ஒரு மேடையில் நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்ததாக பேசி இருந்தார். அந்த விஷயம் சர்ச்சையாக வெடித்தது. கன்னட அமைப்பு கமல்ஹாசன் எப்படி அப்படி பேசலாம் என கண்டனம் தெரிவித்தனர். இதனால் தக் லைஃப் படத்தினை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது எனக் கோஷம் எழுந்தது.

    கன்னட சினிமா சேம்பர் கண்டிப்பாக கமல்ஹாசன் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும். அப்படி அவர் கேட்கவில்லை என்றால் கண்டிப்பாக தக் லைஃபை இங்கு வெளியிட முடியாது எனவும் உத்தரவிட்டனர். ஆனால் கமலோ நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்?

    நான் தப்பே செய்யாத போது, மன்னிப்பு கேட்பது உடன்பாடில்லை என ஓபனாக சொல்லி இருந்தார். முதலில் 2 நாள் கெடு கொடுத்த போது அவர் முடியாது என மறுத்தார். தற்போது மேலும் ஒரு 24 மணிநேரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் கமலின் முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தற்போது அதிரடியாக தன்னுடைய ராஜ்கமல் நிறுவனம் மூலம் கர்​நாடக உயர் ​நீ​தி​மன்​றத்​தில் அவசர மனு ஒன்றை தாக்​கல் செய்து இருக்கிறார்.

    அந்த மனுவில்,‘‘கர்​நாட​கா​வில் தக் லைஃப் திரைப்படத்தினை தடை விதித்து இருப்பது சட்டத்திற்கு எதிரானது. அதனால் தடையை நீக்கி படத்தினை வெளியிட அனுமதி தரவும், திரையரங்குக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் கோரிக்கை வைத்து இருக்கிறார்.

    இந்த மனு மீதா விசாரணை இன்று நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து கர்நாடக சினிமா சேம்பரும் இந்த விஷயத்தினை சட்டப்படியே எதிர்கொள்வோம். அவர் மன்னிப்பு வேண்டும் வரை கர்நாடகாவின் எந்த திரையரங்கிலும் கமலின் படத்தினை வெளியிட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

  • கர்நாடகாவில் தக் லைஃப் வெளியிடுவதில் தொடரும் இழுபறி… கமல் கையில் தான் எல்லாம்..!

    கன்னட மொழி தமிழில் இருந்து வந்ததுதான் என கமல் சொன்னதும் சொன்னார்… கர்நாடகாவே கொந்தளித்துப் போய்விட்டது. தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவராஜ் குமாரைப் பார்த்து கன்னடம் தமிழில் இருந்து வந்ததுதான் என சொல்லிவிட்டார் கமல்.

    அதனால் கமல் எப்படி அப்படி சொல்லலாம். கன்னடத்துக்கு நீண்ட வரலாறு உண்டு என கர்நாடக முதல்வர் சித்தராமையாவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கமல் பேசிய பேச்சு அங்கு சூடுபிடித்து கமல் படங்களைத் தீயிட்டும், உருவபொம்மைகள் எரித்தும், பேனரைக் கிழித்தும் என பல அசம்பாவிதங்கள் அரங்கேறி விட்டன.

    கமலோ அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இந்தப் பிரச்சனை நாளுக்கு நாள் வளரவே செய்கிறது. கமல் இப்போது துபாயில் பட புரொமோஷனுக்காக சென்றுள்ளார். படம் வரும் 5ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் படம் திரையிடுவதில் சிக்கல் தொடர்கிறது. இதன் தொடர்ச்சி என்ன? இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

    ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கு கர்நாடக திரைப்பட சம்மேளனமோ அல்லது வேறு யாரோ இடையறு விளைவிக்கக்கூடாது. அதே நேரம் போலீஸ் பாதுகாப்பும் வேண்டும் என்று மனுதாக்கல் செய்து இருந்தார்கள். இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது அதில் தெரிவித்த விவரம் இதுதான்.

    நீதிமன்றம் உத்தரவிட்டால் என்ன? திரையரங்குகளில் திரையிட உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ளா விட்டால் சட்டரீதியாக ஒன்றும் செய்ய முடியாது என கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு தெரிவித்துள்ளார்.

    மொழி விவகாரத்தில் எந்த சமாதானமும் வேண்டாம் என கர்நாடக அரசும் எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. தேவைப்பட்டால் சட்டரீதியான உதவிகளை செய்வதாக அரசு உறுதியளித்துள்ளது. கர்நாடகாவில் 8 கோடி ரூபாய்க்கு விநியோக உரிமை பெற்றுள்ளவர் வெங்கடேஷ் தயாரிப்பு நிறுவனத்துடன் தொடர்ந்து பேசி வருகிறார். கமல் துபாயில் இருப்பதால் அவர் வந்த உடன் பதில் தெரிவிப்பதாக தகவல் வந்துள்ளது.

  • உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல… இளையராஜாவுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!

    ராக தேவன் இசைஞானி இளையராஜாவின் 82வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜூன் 3ம் தேதி பிறந்த இளையராஜா, கலைஞர் கருணாநிதி மீது கொண்ட பற்று காரணமாக அவருடைய பிறந்தநாளை ஒரு நாள் முன்பு கொண்டாடும் பழக்கத்தை கடைபிடிக்கத் தொடங்கி பல வருடங்களாக ஜூன் 2ம் தேதியே கொண்டாடி வருகிறார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் 7,000-க்கும் மேற்பட்ட பாடல்களையும், 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ள இளையராஜாவின் இசை, உணர்வுகளை ஆழமாகத் தொட்டு பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் பிரபலமாக உள்ளன.

    இளையராஜா ’அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரது பின்னணி இசை திரைப்படங்களுக்கு உயிரூட்டும் வகையில் அமைந்துள்ளது. பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற இந்திய அரசின் விருதுகள், 5 முறை தேசிய விருது , பல மாநில அரசு விருதுகள் மற்றும் திரைப்படத் துறை விருதுகள் என பல விருதுகளை வென்று குவித்துள்ளார்.

    கமல்ஹாசன் மற்றும் இளையராஜா இணைந்து பணியாற்ற தொடங்கிய முதல் படம் 16 வயதினிலே. அதை தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள், குணா, தேவர் மகன், ஹே ராம், விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பல அழகான தமிழ் பாடல்களை தமிழ் சினிமா ரசிகர்களின் காதில் தேன் போல பாய வைத்துள்ளனர். 16 வயதினிலே படத்தில் தொடங்கிய நட்பு இன்றும் இவர்கள் இடையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், கமல், இளையராஜாவின் இசையை “திரையிசைச் சகாப்தம்” என்று ஒரு நிகழ்ச்சியின் போது புகழ்ந்துள்ளார்.

    இந்நிலையில் 82வது பிறந்த நாளை கொண்டாடி வரும் இசைஞானி இளையராஜாவிற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல, அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவு ஒன்றை பதிவிட்டு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.