Tag: vaali

  • இது வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை டியூன்தானே? ரகுமானிடம் நேரடியாகவே கேட்ட வாலி

    இது வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை டியூன்தானே? ரகுமானிடம் நேரடியாகவே கேட்ட வாலி

    தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் ஜெண்டில்மேன். முதலில் சரத்குமார் நடிக்க பூஜை போட்ப்படட்து. ஆனால் என்ன் காரனத்தலோ அவ்ர் வில்க் அர்ஜூனுக்கு அடித்தது அதிர்ஷ்டம். இயக்குனர் ஷங்கர் இய்க்கிய் முத்ல் படமான இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிரமாண்டத்திற்கு பெயர்போன தயரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இப்படத்தை தயாரித்தார்.

    ஜெண்டில்மேன் படத்தின் வெற்ரியில் பிரமாண்டம், கதை என பல விசயங்கள் இருந்தாலும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களுக்கு பெரிய பங்கு உண்டு. படத்தில் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் ஆனது. குறிப்பாக சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே இன்றுவரை ஆட்டம் போடவைக்கும் பாடலாகும். அந்த பாடல் கம்போஸிங்கில் நடந்த சுவாரஸ்யமான விசயங்களை இயக்குனர் ஏ. வெஙகடேஷ் யூடியூப் சேனல் ஒன்றில் கூறியிருந்தர்.

    தமிழ் சினிமாவில் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் ஏ.வெங்கடேஷ். சரத்குமார் நடித்த ‘மகாபிரபு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து விஜய்யின் ‘பகவதி’, சிம்புவின் ‘தம்’, ‘குத்து’, மற்றும் ‘ஏய்’, ‘சாணக்கியா’, ‘வாத்தியார்’, ‘சண்டமாருதம்’ என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தனது நடித்து வருகிறார். இவர் துவக்கத்தில் ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அந்தப் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவத்தைத்தான் அவர் தற்போது நினைவுகூர்ந்துள்ளார்.

    இயக்குனர் ஏ. வெஙகடேஷ் கூறியபோது, சிக்கு புக்கு பாடலுக்கான டியூனை ஏ.ஆர். ரஹ்மான் கம்போஸ் செய்து முடித்ததும், அதற்கான வரிகளை எழுதுவதற்காகக் கவிஞர் வாலிக்கு அந்த டியூன் அனுப்பி வைக்கப்பட்டது. வாலியும் தனது பாணியில் நான்கு விதமான பாடல் வரிகளை எழுதி ரஹ்மானுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், வாலி எழுதி அனுப்பிய எந்த வரியும் ரஹ்மானுக்கு முழுமையான திருப்தியைத் தரவில்லை. பாடல் வரிகள் இன்னும் பெட்டராக, வித்யாசமாக வேண்டும் என்று கூறி, அந்த வரிகளை மீண்டும் வாலிக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார் ரஹ்மான்.

    தொடர்ந்து தான் எழுதிய வரிகள் நிராகரிக்கப்பட்டதால் நேரடியாகவே ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவிற்கே வந்துவிட்டார் வாலி. உங்களுக்கு என்ன மாதிரி வரிகள் வேண்டும்? என்று வாலி கேட்க, டியூனுக்கு ஏற்றவாறு கொஞ்சம் வித்தியாசமாக வேண்டும் என்று ரஹ்மான் பதிலளித்துள்ளார்.

    இதைக் கேட்டு வாலி, உங்களுடைய பாடல் டியூனில் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லையே! என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரஹ்மான் “ஏன்?” என்று கேட்க, நீங்கள் போட்டிருக்கும் இந்த டியூன், வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை என்ற படலின் டியூன்தானே என்று வாலி கூறியுள்ளார். வாலி சார் அப்படிச் சொன்னதும், ஸ்டூடியோவில் இருந்த எங்களுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அந்தச் சூழ்நிலையில் நாங்கள் அனைவரும் அப்படியே முழித்துக் கொண்டு நின்றோம்,” என்றுஅந்தப் பழைய நினைவுகளை ஏ.வெங்கடேஷ் கூறினார்.

    பின்னர் அந்த பாடல் வாலி எழுதி மிகப்பெரிய ஹிட் ஆனது நாம் அறிந்ததே.

  • கண்ணதாசனை விட ஒரு படி மேல போன வாலி… அப்படி என்னதான் நடந்தது?

    தமிழ்த்திரை உலகில் கவியரசர் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் கண்ணதாசன்தான். அவருடைய பாடல்கள் அத்தனையும் தேன் சிந்தும் ரகங்கள். அவருக்கு இணையாக ஒரு காலகட்டத்தில் வளர்ந்து வந்தவர் கவிஞர் வாலி. இவரை வாலிபக் கவிஞர் என்று அழைத்தனர். அந்த அளவு பல தலைமுறைகளாக இளம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் காதல் ரசம் சொட்டும் பாடல்களை எழுதித் தள்ளினார்.

    அந்த வகையில் ஒரு விஷயத்தில் கண்ணதாசனை விட வாலி ஒரு படி மேல் போய்விட்டார் என்றே சொல்லலாம். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அந்தக்காலத்தில் ரொம்பவே பிரபலமானது. அந்த நிறுவனத்தின் படங்கள் என்றாலே அதில் ஒரு தனித்தன்மை இருக்கும். படமும் ஹிட்டாகும்.

    கண்ணதாசனுக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரத்துக்கும் நல்ல நட்பு உண்டு. அதனால் அவர்கள் தயாரிக்கும் படத்துக்கு சம்பளம் குறித்து எதுவும் பேசமாட்டாராம். அவர்கள் தருவதை வாங்கிக் கொள்வாராம். அதே நேரம் வாலியிடம் ஒரு சமயம் அந்த நிறுவனத்திடமிருந்து 1964ல் பாடல் எழுத அழைப்பு வந்ததாம்.

    அப்போது அந்த நிறுவனம் கொடுக்கும் சம்பளம் வாலிக்கு குறைவாக இருக்கவே அவர் மறுத்து விட்டாராம். சம்பளம் இவ்வளவு தந்தால்தான் பாடல் எழுதுவேன் என கோரிக்கை வைத்துள்ளார் வாலி. அதைக் கேட்டதும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அவரைப் போகச் சொல்லுங்கள் என்று திருப்பி அனுப்பி வைத்து விட்டார்களாம்.

    அதன்பிறகு சென்னை திரும்பிய வாலிக்கு மீண்டும் ஒரு வாரம் கழித்து அதே நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்ததாம். அப்போது அவரைத் தொடர்பு கொண்டவர் அர்த்தநாரி. இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரத்துக்கு வலது கையாக இருந்தவர். இவர் வாலியிடம் நீங்கள் கேட்ட தொகையை தருவதற்கு நிறுவனம் சம்மதித்து விட்டது.

    ஆனால் மொத்த பாடல்களையும் எழுதிவிட்டுத் தான் சென்னை திரும்ப வேண்டும். அதுவரை சேலத்தில்தான் தங்கி இருக்க வேண்டும் என்றார். இன்முகத்தோடு அவர் சொன்னதால் வாலி சம்மதித்தார். அதன்பிறகு பாடல் எழுதி முடித்ததும் உங்க பாஸை நான் பார்க்கணும்னு வாலி அர்த்தநாரியிடம் சொன்னாராம்.

    அதற்கு ஏற்பாடு செய்ய வாலி சுந்தரத்தைப் பார்த்துள்ளார். அவருடைய தோற்றத்தைப் பார்த்ததும் அவர் மேல் வாலிக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. வாலி தன்னோட சம்பள டிமாண்டுக்காக வருத்தப்பட்டாராம். அதற்கு சுந்தரம் பரவாயில்லை என்று சொல்லி இருக்கிறார். தொடர்ந்து அந்த நிறுவனத்தின் 3 படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பும் வாலிக்குக் கிடைத்துள்ளது.

  • சிவாஜி பட இயக்குனர் சினிமாவில் நுழைந்த அதிசயம்… வாலியின் பேச்சையே மதிக்கலையே!

    சினிமா உலகில் எப்படியாவது தேர்ந்து விட வேண்டும் என்று துடித்த பலரை இந்த சினிமா உலகம் நிராகரித்துள்ளது. அதே போல சினிமாவையே விரும்பாத பலரையும் இந்த சினிமா உலகம் கட்டி அணைத்துள்ளது. அதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.

    திருச்சியில் சரிந்த சாம்ராஜ்யம் நாடகத்தைப் பார்க்க வாலி வந்து இருந்தார். அந்த நாடகத்தில் ஒல்லியாக நடித்த இளைஞரின் நடிப்பு வாலியை வெகுவாகக் கவர்ந்தது. சிறப்பாக வசனம் பேசிய அந்த நடிகரை மனம் திறந்து வாலி பாராட்டினார். அப்போது அந்த ஒல்லி நடிகர், வாலியிடம் உங்க நாடகத்துல ரொம்ப நாளா நடிக்கணும்னு ஆசை. வாய்ப்பு தருவீங்களான்னு கேட்டாராம். அதற்கு என் நாடகத்துல எப்போ வேணாலும் நடிக்கலாம். ஆனா உங்க தோற்றம், நடிப்பு எல்லாம் பார்க்கும்போது நீங்க சினிமாவுல சேர்ந்தா மிகப்பெரிய ஆளா வருவீங்கன்னு எனக்குத் தோணுதுன்னு வாலி சொன்னாராம்.

    அந்த இளைஞர் ஒரு கம்யூனிஸ்ட். அப்போது பீடியைப் புகைத்துக் கொண்டு இருந்த அந்த நடிகர் அதைத் தூக்கி எறிந்து விட்டு சினிமாவில் எல்லாம் நான் சேரமாட்டேன். அது சாத்தானின் உலகம்னு சொன்னாராம். அப்படி பேசியவர் தான் ‘பாதை தெரிகிறது பார்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

    அதன்பிறகு பல சிவாஜி படங்களை இயக்கினார். அவர் தான் இயக்குனர் கே.விஜயன். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் கே.விஜயன் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, கமல் நடித்த படங்களை இயக்கியுள்ளார். இவர் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். அண்ணன் ஒரு கோயில், திரிசூலம், விடுதலை, ரத்தபாசம் ஆகிய சிவாஜி படங்களை இயக்கியுள்ளார்.

    சிவாஜியின் படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். சினிமா ஆசையே இல்லாத ஒருவர் எப்படி இவ்ளோ சூப்பர்ஹிட் படங்களைத் தந்தார் என்றால் ஆச்சரியம்தான். அப்படி என்றால் சினிமா அவரை வாரி அணைத்துள்ளது அதிசயம்தானே..!

  • பாட்டு ஹிட்டாக இசையமைப்பாளர் மட்டும் காரணம் இல்ல.. இளையராஜாவுக்கு உரைக்கிற மாதிரி சொன்ன வாலி

    நான் இந்த வயதில் பொய் பேசக்கூடாது. அப்போ அந்த வயதில் பேசி இருக்கீங்களா என்று கேட்டால் பொய் பேசவில்லை என்றால் வேலையே கிடைக்காது. உண்மையைச் சொன்னால் ஒரு பையன் வேலை தர மாட்டான். கண்ணதாசன் சொன்ன பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது .வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி பெறவில்லை.

    இதிலிருந்து என்ன சொல்ல வருகிறேன் என்றால் நீ ஒரு பாட்டு என்ன பிரமாதமாக எழுதி இருந்தாலும் அதற்கு என்ன பிரமாதமாக இசையமைத்திருந்தாலும் என்ன பிரமாதமாக ஒரு பாடகரோ பாடகியோ பாடி இருந்தாலும் நான் எந்த கோயில் கோபுரத்தின் மீது ஏறி சத்தியம் செய்து சொல்லுவேன் .அது ஒரு டைரக்டரின் பிக்சரைஷேசனால்தான். அதனாலதான் வெற்றியடைகிறது.

    இது இந்த கால மியூசிக் டைரக்டர்கள் எல்லாம் புரிந்து கொள்ளவில்லை. அதுக்கு மீறி சொன்னால் கடிந்து கொள்கிறார்கள். இயக்குனரின் பிக்சரைசேஷனால்தான் அந்த படம் நிற்கும் என கவிஞர் வாலி பழைய ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இது சம்பந்தமான பிரச்சனை தான் சமீப காலமாக தமிழ் சினிமா எதிர்கொண்டு வருகிறது .அதுவும் குறிப்பாக இளையராஜா காப்பிரைட்ஸ் என்ற ஒரு பிரச்சனை தான் அவரின் பாடல்களை நாம் பயன்படுத்தும் பொழுது என் அனுமதி இல்லாமல் பாடக்கூடாது என்கிறார்.

    இன்னொரு பக்கம் எனக்கு இந்த தெனாவட்டு இருப்பதில் என்ன தவறு. எனக்குத்தான் திமிரு இருக்க வேண்டும் என்றெல்லாம் பல மேடைகளில் பேசி இருக்கிறார். என்னால் தான் அந்த பாடலே ஹிட் ஆனது. என் பாடல் ஹிட் ஆகவில்லை என்றால் அந்த படமே ஓடி இருக்காது என்றெல்லாம் அவர் கூறியதாக பல செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

    ஆனால் கவிஞர் வாலியே ஒரு மேடையில் ஒரு பாடலோ பாடல் வரிகளோ, ஹிட்டாகிறது என்றால் அதற்குப் பின்னணியில் ஒரு மூல காரணமாக இருப்பது இயக்குனர் தான். அதை இந்த கால மியூசிக் டைரக்டர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பேசியிருக்கிறார். இதை அப்படியே இளையராஜாவின் பக்கத்தில் டேக் செய்து ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

  • சூர்யாவுக்கு டஃப் கொடுத்த ஏஆர் முருகதாஸ்.. இந்த குத்து குத்துறாரே? வைரலாகும் வீடியோ

    ஏஆர் முருகதாஸ்:

    தீனா படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார் ஏ ஆர் முருகதாஸ். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராசி என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இது சிவகார்த்திகேயனுக்கு 23 வது திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் அந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் தீனா, கஜினி, ரமணா ,துப்பாக்கி போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார் ஏ ஆர் முருகதாஸ்.

    விஜய்க்கு மாஸ் படம்:

    அதிலும் துப்பாக்கி திரைப்படம் அவருடைய கெரியரையே மாற்றிய ஒரு திரைப்படமாக அமைந்தது. விஜய்க்கும் ஒரு மாஸ் ஆக்சன் திரைப்படமாக மாறியது. அதன் பிறகு ரஜினியை வைத்து தர்பார் என்ற படத்தை இயக்கினார் .அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதிலிருந்து தமிழில் ஏ ஆர் முருகதாஸுக்கு மார்க்கெட் குறைய தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை எடுத்தார்.

    மதராசி:

    அந்த படம் யாரும் எதிர்பார்க்காத ஒரு தோல்வியை தழுவியது. அப்போதிலிருந்தே ஏ ஆர் முருகதாஸை நெருங்க பல நடிகர்கள் யோசித்தார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் அவருடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டு இப்போது மதராசி திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

    மகளுடன் குத்தாட்டம்:

    இவர்களுடன் இணைந்து விக்ராந்த், டான்சிங் ரோஸ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை பட குழு வெளியிட்டது .அதிலிருந்து இந்த படத்தின் மீது மக்கள் மத்தியில் பெரிய அளவு எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது. இந்த படம் வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கின்றது .

    இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் அவருடைய மகளின் பூப்புனித நீராட்டு விழாவை அவருடைய சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் நடத்தி வருகிறார். இந்த விழாவில் தன் மகளுடன் ஏ ஆர் முருகதாஸ் இணைந்து சூர்யா நடித்த ரெட்ரோ படத்தில் வரும் கனிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார் .அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    அந்த வீடியோ காண: https://x.com/NanDhanDaBossUh/status/1934468483682808216

  • பத்மினிக்கு கூட சிவாஜி இப்படி முத்தம் கொடுக்கலயே!.. இளையராஜாவிடம் வாலி அடித்த கமெண்ட்!…

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் மீது அன்பு காட்டுவது என முடிவு செய்துவிட்டால் அதில் அளவெல்லாம் வைத்திருக்க மாட்டார். அள்ளி கொட்டி விடுவார். அவரிடம் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். அது அவருடன் நெருங்கி பழகியவர்கள் எல்லோருக்கும் தெரியும். நடிகர் கமல் கூட வெளியே செல்லும்போது சில சமயம் தனது இரண்டு குழந்தைகளையும் சிவாஜி வீட்டில் விட்டுவிட்டு செல்வாராம். அவர்களை மிகவும் அன்புடன் கவனித்துக்கொள்வாராம் சிவாஜி.

    சினிமாவில் சிவாஜி கணேசன் போடாத வேஷம் இல்லை. முதல் படமான பராசக்தியிலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் வாங்கினார். அதன்பின் பல திரைப்படங்கள், பல கதாபாத்திரங்கள் என வாழ்ந்து காட்டினார் சிவாஜி. சாதாரண ஏழை, பெரும் பணக்காரர், போலிஸ் அதிகாரி, வழக்கறிஞர், நீதிபதி, வயதான குமாஸ்தா, ஸ்டைலான பணக்காரர், கடவுள் அவதாரங்கள், வ.உசி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சுதந்திர போராட்ட தலைவர்கள், ஆன்மிகவாதிகள் என அவர் ஏற்காத கதாபாத்திரங்கள் இல்லை.

    அதனல்தான் அவருக்கு நடிகர் திலகம் என்கிற பட்டம் கிடைத்தது. ஆக்‌ஷன் பட விரும்பிகள் எம்.ஜி.ஆர் படம் பார்க்கப்போனால், நல்ல குடும்ப செண்டிமெண்ட் மற்றும் கதையம்சம் கொண்ட படங்களை பார்க்க விரும்பியவர்கள் சிவாஜி படம் பார்க்கபோனார்கள். சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்தவர் பத்மினி.

    இருவருக்குமான ஜோடிப்பொருத்தம் என்பது அவ்வளவு அழகாக இருக்கும். பல படங்களில் இருவரும் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். சிவாஜியை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் பத்மினிக்கு இருந்தாலும் சில காரணங்களால் அது நடக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தாலும் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.

    இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். தேவர் மகன் படத்தில் ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்கிற பாடலில் சிவாஜி அண்ணன் சில வசனங்கள் பேசுவார். அதை ரெக்கார்ட் செய்வதற்காக என்னுடைய ரிக்கார்டிங் தியேட்டருக்கு வந்தார். அவர் பேசி முடித்ததும் அவருடன் ஒரு போட்டு எடுத்துக்கொண்டேன்.

    போட்டோகிராபர் கிளிக் செய்யும்போது என் கன்னத்தில் சிவாஜி முத்தம் கொடுத்துவிட்டார். அது அப்படியே போட்டோவில் பதிவாகிவிட்டது. சிவாஜி அண்ணன் சென்றபின் அங்கிருந்த கவிஞர் வாலி ‘சிவாஜி பத்மினிக்கு கூட இப்படி முத்தம் கொடுக்கவில்லை’ என கமெண்ட் அடித்தார்’ என ஜாலியாக பேசியிருந்தார்.

  • வாலிக்கு வாய்ப்பு கொடுக்காதே… எம்எஸ்வியிடம் கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள்… இதெல்லாம் நியாயமா?

    தமிழ்த்திரை உலகில் கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். காதல் பாடல்களாக இருந்தாலும் சரி. தத்துவப் பாடல்களாக இருந்தாலும் சரி. அவரை மிஞ்சி யாரும் எழுதி விட முடியாது. அதே நேரம் வாலிபக்கவிஞராக உருவெடுத்தவர் வாலி.

    இவர் எழுதிய வேகத்தைப் பார்த்து கண்ணதாசனே கதிகலங்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப் போனால் கண்ணதாசனின் பாடலால் ஈர்க்கப்பட்டு சினிமா உலகில் போராடி ஒரு உச்சத்தைத் தொட்டவர்தான் கவிஞர் வாலி. அவரது வாழ்க்கையின் கரடுமுரடான பக்கத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா…

    இனியும் சென்னையில் இருந்தால் வேலைக்கு ஆகாது. திருச்சிக்கே போயிடலாம்னு வாலி முடிவு எடுத்த போது சென்னையிலேயே இருந்து பாடலை எழுத வைத்தது கண்ணதாசனின் பாடல்தான். ‘மயக்கமா கலக்கமா’ என்ற அந்தப் பாடலைக் கேட்டதும் வாலி மீண்டும் சினிமா உலகில் போராடி தனக்கென ஒரு இடம் பிடித்தார். ‘இதயத்தில் நீ’ என்ற படத்தில் வாலி பாடல் எழுதியதும் அவருக்கு வரிசையாகப் பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

    அப்போது அவர் பிரபலமான பாடல் ஆசிரியராக உருவெடுத்தார். எம்எஸ்வி. இசையில் காலையில் கண்ணதாசன் ஒரு பாடல் எழுதினார் என்றால், மதியம் வாலி ஒரு பாடல் எழுதுவார். இப்படி சென்று கொண்டு இருந்தது அந்தக் காலகட்டம்.

    அந்த நேரத்தில் ‘நீ யாருக்கு வேணாலும் வாய்ப்புகள் கொடுத்து பெரிய ஆளாக்கு. ஆனா வாலிக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்காதே’ என கண்ணதாசன் எம்எஸ்வியிடம் சொன்னாராம். அதற்கு அவரும் ஆச்சரியமாக ‘ஏன் அண்ணே’ என்று வெகுளித்தனமாகக் கேட்டாராம். அப்போது கண்ணதாசன் சொன்ன பதில்தான் ஹைலைட்.

    மற்றவரை நீ என்கரேஜ் பண்ணினா பரவாயில்லை. நிச்சயமா அவங்க போட்டியா வர மாட்டாங்க. ஆனா வாலி அப்படி இல்ல. விஷயம் தெரிஞ்சவன். நிச்சயமா எனக்கு ஒருநாள் போட்டியா அவன் வருவான் என்று எம்எஸ்வி.யிடம் சொன்னாராம் கண்ணதாசன். கண்ணதாசனுக்கு குழந்தை மனசுன்னு சொல்வாங்க. அதுக்கு உதாரணம்தான் இந்த சம்பவம். எந்தளவுக்கு வெகுளியா இருந்து இருந்தா இப்படி சொல்லிருப்பாரு கண்ணதாசன் என நம்மால் உணர முடிகிறது.

  • கடும் ஜுரத்திலும் இப்படி ஒரு பாடலா? வாலியின் வரியில் வெளியான எம்ஜிஆர் பட பாடல்

    படகோட்டி திரைப்படம்:

    பெரும்பாலும் எம்ஜிஆர் படங்களில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிவிடும். அவரின் இந்த பாடல் சரியில்லை என்று எந்த பாடலையுமே சொல்ல முடியாது. அப்படி படகோட்டி படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். படத்தில் அமைந்த மொத்த பாடல்கள் எட்டு. அந்த எட்டு பாடலுக்கும் ஒரே கவிஞர் வாலி. மெல்லிசை மன்னர்கள் இருவருமே இசையமைத்த பாடல்கள் தான் இந்த படத்தின் பாடல்கள்.

    இப்படிப்பட்ட படத்தில் ஒரு குறை இருந்ததாகவும் அது எப்படி நிவர்த்தி ஆனது என்பது பற்றியும் ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. எட்டு பாடல்களில் ஏழு பாடல்கள் கவிஞர் வாலி எழுதி அந்த ஏழு பாடல்களையும் படமாக்கி முடித்து விட்டார்களாம். திடீரென இன்னொரு பாடலையும் சேர்க்கலாம் என்ற சூழ்நிலை வர இந்த படத்தின் இயக்குனர் டி பிரகாஷ் ராவ் இதே பாடலையும் வாலியிடமே கொடுத்து விடலாம் என நினைத்திருக்கிறார்.

    நம்பியாருக்கான பாடல்:

    ஜி என் வேலுமணி தான் இந்த படத்திற்கு தயாரிப்பாளர். இயக்குனர், தயாரிப்பாளர் ,திரைக்கதை ஆசிரியர் என எல்லாருமே சேர்ந்து இந்த படத்திற்கு இன்னொரு பாடலை வைக்க வேண்டும் என முடிவெடுக்க வாலியை அணுகலாம் என போயிருக்கிறார்கள். அதாவது இந்த படத்தில் வில்லன் நடிகர் நம்பியார். இதில் நம்பியாருக்கு ஒரு ஆசை நாயகி இருக்கிறார்.

    அந்த ஆசை நாயகி வில்லன் நடிகர் நம்பியார் முன்னாடி ஆடும் போது நம்பியாருக்கு எம்ஜிஆரின் காதலியாக வரும் சரோஜாதேவி மீது கவனம் திரும்புகிறது. அதனால் இந்த ஆசை நாயகி ஆடி பாடும் போது நம்பியார் மதுபோதையில் ‘ஆடுவது ஆசைநாயகி அல்ல. சரோஜா தேவி தான்’ என நினைக்க வேண்டும். இதுதான் அந்த எட்டாவது பாடல் காட்சிக்கான சூழல். ஏற்கனவே ஏழு பாடல்கள் நடந்த முடிந்து விட்டது.

    கடுமையான ஜுரம்:

    அதனால் கடைசியாக எட்டாவது பாடல் வேண்டும் என தீர்மானம் செய்கிறார்கள். அதனால் வாலியை பார்க்க செல்ல அங்க வாலிக்கு கடுமையான ஜுரம். இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் போது உடனடியாக பாடல் வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் வாலியோ தன்னுடைய சூழ்நிலையை சொல்லி இந்த நிலைமையில் எப்படி நான் அந்த ரொமான்டிக்கான பாடலை கொடுக்க முடியும் என்று கேட்டிருக்கிறார்.

    ஆனால் பட குழு அடம் பிடித்திருக்கிறது. இருந்தாலும் வாலி இந்த ஒரு பாடலை மட்டும் வேறு யாரையாவது வைத்து எழுதிக் கொள்ளுங்கள் என்று கூற இது பட குழுவுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் விடவில்லையாம். ஏனெனில் ஏழு பாடல்களையும் எழுதியவர் நீங்கள். எட்டாவது பாடலை வேறு ஒருவர் எழுதினால் டைட்டிலில் பாடல்கள் என வரும்போது அது உங்கள் பெயருக்குத்தான் கேடு எனக் கூறியிருக்கிறார்கள்.

    வேறு வழியே இல்லாமல் கடும் ஜுரத்திலும் வாலி எழுதிய பாடல் தான் ‘அழகு ஒரு ராகம். ஆசை ஒரு தாளம்’ என்ற நம்பியார் மது போதையில் ஆடும் அந்த பாடல். இந்தப் பாடல் உடனே ரிக்கார்டிங் செய்யப்பட்டு உடனே ஷூட்டிங். உடனே அந்த படகோட்டி படத்தில் பிரிண்டில் இணைக்கப்பட வேண்டும். இது விறுவிறுப்பாக நடக்க படமும் ரிலீஸ் ஆனது. கடைசியில் படத்தின் வெற்றி மாபெரும் வெற்றியாக மாறியது. இன்றுவரை படகோட்டி என்றால் அதன் பாடல்களுக்கு என ஒரு தனி வரவேற்பே இருக்கிறது.

  • அட காகிதம் தின்னும் மூடா!.. வாலியை திட்டி பாட்டு எழுதினாரா கண்ணதாசன்?!..

    தமிழ்த்திரை உலகில் சில பாடல்களை வாலி எழுதினாரா, கண்ணதாசன் எழுதினாரா என்றே கண்டுபிடிக்க முடியாது. குழப்பம் வந்துவிடும். அந்த வகையில் எனக்கு அப்புறம் வாலி தான் என்றும் சொன்னார் கண்ணதாசன். நான் இறந்ததும் எனக்கு இரங்கல் கவிதை வாலிதான் எழுத வேண்டும் என்றும் பெருமையாகச் சொல்லி இருக்கிறார் கண்ணதாசன். அதே நேரம் வாலியை வறுத்தெடுக்கும் வகையில் பாடல் ஒன்றையும் எழுதியுள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

    கண்ணதாசனைப் பொறுத்தவரை அனுபவம், இலக்கியம், எளிமை என்ற மூணும் கலந்த கலவைதான். ஒரு பாடல் முழுக்க முழுக்க வாலியை வறுத்து எடுத்துவிட்டாராம் கண்ணதாசன். இதை பேராசிரியர் சண்முகசுந்தரம் சொல்கிறார். எங்க பாப்பான்னு ஒரு படம். அதுல வர்ற பாட்டுக்கு எம்எஸ்வி. இசை அமைத்துள்ளார்.

    இந்தப் பாட்டுல என்ன சூழல் என்றால் போலி கவிஞர்கள் வர்றாங்க. அவங்களை அடிச்சி உதைக்கிறாரு ரவிச்சந்திரன். நான்தான்யா ஒரிஜினல்னு பாடி சண்டையும் போடுறாரு. இந்தப் பாடலை டிஎம்எஸ் அருமையாகப் பாடியுள்ளார். நான் போட்டால் தெரியும் போடு. தமிழ் பாட்டால் அடிப்பேன் ஓடு என்று தான் பாடலே ஆரம்பிக்கிறது.

    அதே பாடலில் இந்தக் கவிதையைக் குறை சொல்வோரைக் கழியால் அடிப்பேன் வாடா. ‘நீ கம்பனைப் படித்தவனாடா… அட காகிதம் தின்னும் மூடா…’ அப்படின்னு ரொம்ப அழகா பாட்டைப் போட்டுருப்பாரு. அதிலும் முதல் சரணத்தில், ‘அம்மென்னும் முன்னே ஆயிரம் பாட்டை அள்ளி அள்ளி வீசட்டுமா, அப்போதும் உனக்கு புரியாதிருந்தால் சொல்லி சொல்லி உதைக்கட்டுமா’ என்றும் பாடியிருப்பார்.

    ‘வல்லினம், மெல்லினம் நல்ல இடையினம் என்னும் கம்பை எடுத்து வெண்பா விருத்தம் என்னும் விதவிதமாக சொல்லை எடுத்து நான் போட்டால் தெரியும் போடு. தமிழ் பாட்டால் அடிப்பேன் ஓடு’ என்று கவியரசர் கண்ணதாசன் வரிகளைப் போட்டுள்ளார்.

    அதுக்கு அப்புறம் எனக்கு வட்டார மொழியிலும் பாட்டு எழுத முடியும் என்று சொல்லி இருப்பார். ‘பட்டணத்து தமிழில் நைனா என்றால் அர்த்தம் என்ன கூறட்டுமா’ என்று போட்டு இருப்பார்.

    ‘பயில்வான் மொழியில் வஸ்தாத் என்றால் பொருள் என்ன காட்டட்டுமா? எதுகை மோனை உன் இடவலமாகக் கொடுக்கட்டுமா? அப்படின்னா என்ன உன் ரெண்டு பக்கமும் கோடு மாதிரி வரி வரியாகப் போடட்டுமா’ன்னு கேட்டுருப்பாரு.

    எனக்கு இணையா வேறு யாரும் இருக்காங்களாங்கற மாதிரி இறுமாப்புடன் பாடல் எழுதியிருப்பாரு. இந்தப் பாட்டுல வாலியைத் தான் குறை சொல்லி இருக்கறதா சொல்றாங்க. அப்படி சொன்னா கூட அதுல இவ்ளோ தமிழ் இலக்கணங்களை வச்சி எழுதணும்னா அது கவியரசர் கண்ணதாசனால மட்டும் தான் முடியும். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

  • கோபத்தில் நக்கலடித்த சிவாஜி!. வாலி கொடுத்த சூப்பர் ரிப்ளே!. ஒரு பிளாஷ்பேக்!…

    கவிஞர் வாலி எம்ஜிஆர், சிவாஜி என தமிழ்த்திரை உலகில் இருபெரும் ஜாம்பவான்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். இவர் எழுதிய பல பாடல்கள் சூப்பர்ஹிட் தான். சிவாஜி படத்திற்கு இவர் பாடல் எழுத வந்தது எப்படின்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

    வாலி, ‘கற்பகம்’ என்ற படத்தில் பாடல் எழுதினார். இதுதான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. எம்ஜிஆருக்கு நெருக்கமானவர் வாலி. இருந்தாலும் சிவாஜிக்கு எழுதிய பாடல்கள் தான் அதிகம் என்று சொல்லலாம்.

    1965ல் சிவாஜி, தேவிகா, பாலாஜி நடிப்பில் வெளியான படம் அன்புக்கரங்கள். இந்தப் படத்தை இயக்கியவர் கே.ஷங்கர். ஆர்.சுதர்சன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு வாலி தான் பாடல்கள் எழுதினார். இந்தப் படத்தின் பாடல் பதிவு முடிந்தநிலையில் சிவாஜி அதைக் கேட்க வந்தார்.

    அப்போது அவருக்கு ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ பாடலைப் போட்டுக் காட்டியுள்ளனர். சிவாஜி இந்தப் பாடலைக் கேட்கையில் வாலி வெற்றிலைப்பாக்கு போட்டு குதப்பிக்கொண்டு இருந்தார். அதைப் பார்த்ததும் இவன் எம்ஜிஆர் படத்துக்கு பாட்டு எழுதுறவன். இப்போ வாயில வெத்தலைப்பாக்குன்னு கடுப்பாகிவிட்டாராம்.

    பாடலைக் கேட்டு முடித்ததும் நேராக வாலியிடம் சென்று ‘பாட்டு நல்லாருக்கு. காபி சாப்பிட்டீங்களா’ன்னு கேட்டுள்ளார். ‘அதெல்லாம் ஆச்சு’ன்னாராம் வாலி. அப்புறம் சிவாஜி கொஞ்சம் கிண்டலாக ‘வெத்தலைப்பாக்கு போட்டா தான் பாட்டு வருமா..?’ன்னு கேட்டுள்ளார்.

    anpukarangal

    anpukarangal

    அதற்கு வாலியும் கிண்டலாக ‘அது போடலைன்னா வாசனை வரும்’னாராம். உடனே ‘அப்படின்னா அந்தப் பழக்கம் எல்லாம் உண்டா..?’ன்னு கேட்டுள்ளார் சிவாஜி. அதற்கு வாலி, ‘சிக்கன் சாப்பிடணும்னா அது இல்லாம இருக்குமா…’ன்னு கேட்டுள்ளார்.

    இதைக் கேட்டதும் சிவாஜி அவருடன் நட்பாகி விட்டாராம். அதன்பிறகு சிவாஜி பிலிம்ஸ் சார்பில் தயாரித்த பல படங்களுக்கும் பாடல் எழுதியது வாலிதானாம். வாலிபக்கவிஞர் வாலி என்றால் சும்மாவா? இவர் 4 தலைமுறை வரை பாடல் எழுதி அசத்தியுள்ளார். அந்தப் பெருமை இவரையேச் சேரும்.