Tag: vignesh shivan

  • இரவு 2 மணிக்கு நயனின் மைண்ட்செட் இப்படிதான் இருக்கும்- விக்னேஷ் சொன்ன சீக்ரெட்

    இரவு 2 மணிக்கு நயனின் மைண்ட்செட் இப்படிதான் இருக்கும்- விக்னேஷ் சொன்ன சீக்ரெட்

    தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பின்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சுமார் 7 ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்தத் திருமணம் இந்திய அளவில் ட்ரெண்டானது. தற்போது உயிர், உலக் என இரண்டு அழகிய ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோராய் தங்களது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சினிமா, தயாரிப்பு, பிசினஸ் என இருவரும் பிஸியாகச் சுழன்று கொண்டிருந்தாலும், தங்களுக்கான பிரத்யேக நேரத்தை ஒதுக்க இவர்கள் தவறுவதில்லை.

    இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த விக்னேஷ் சிவன் கூறுகையில், நாங்கள் இருவரும் இரவில் ஏதாவது படம் பார்த்துக் கொண்டிருப்போம், அப்போது நள்ளிரவில் திடீரென ஒரு லாங் ட்ரைவ் போகலாம் என்று தோன்றும். இல்லை என்றால் எதையாவது சாப்பிடலாமா என்று தோன்றும். இரவு இரண்டு அல்லது இரண்டரை மணிக்கு, வா எங்கேயாவது போயிட்டு சாப்பிட்டு வரலாம் என்று நான் கூப்பிட்டால், நயன் வேறு எதுவும் சொல்லாமல் சரி வா என்று சொல்லி அமைதியாக என்னுடன் கிளம்பி வந்து விடுவார். அவரது மைண்ட்செட் நள்ளிரவில் அப்படித்தான் மிகவும் இயல்பாக இருக்கும் என்று கூறினார்.

    எங்களுக்கு பிலால் ஹோட்டலில் கிடைக்கும் பன் மிகவும் பிடிக்கும். நள்ளிரவில் அங்கு போனால் அங்கே எங்களுக்குத் தெரிந்த ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு ஒரு மெசேஜ் போட்டால் போதும், நாங்கள் வெளியே கூட வர வேண்டாம், அவரே எங்கள் காருக்கே வந்து பன்னை கொடுத்து விட்டுச் செல்வான் என கூறினார்.

  • உயிர், உலக் நல்லா வளர்ந்துட்டாங்களே.. LIK ஃப்ளாப் ஆனாலும் ஹேப்பியா இருக்கும் விக்கி, நயன்!..

    உயிர், உலக் நல்லா வளர்ந்துட்டாங்களே.. LIK ஃப்ளாப் ஆனாலும் ஹேப்பியா இருக்கும் விக்கி, நயன்!..

    நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால் அடிக்கடி கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் கூட இவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, தங்கள் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” திரைப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிடையில், கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் பெரிதும் வைரலான “நார்மல் பீப்பிள்” குறித்த கருத்து தொடர்பாக அவர் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த கருத்து பொதுமக்களை குறிவைத்து கூறப்பட்டதல்ல; அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    மேலும், நடிகர் தனுஷ் உடனான தனது நட்பு முறிவு குறித்து விக்னேஷ் சிவன் மனமுடைந்த நிலையில் பேசியது ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றுள்ளது. “என் வாழ்க்கையில் அது ஒரு பெரிய இழப்பு” என்று அவர் உணர்ச்சியுடன் கூறியுள்ளார்.

    நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரட்டை மகன்கள் உள்ளனர்; அவர்களுக்கு “உயிர்” மற்றும் “உலக்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கையையும் தொழிலையும் சமநிலைப்படுத்தி சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.

    நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான “மன சங்கர வர பிரசாந்த் காரு” தெலுங்கு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், யஷ் உடன் நடித்த டாக்ஸிக், மம்மூட்டி, மோகன்லால் உடன் நடித்த பேட்ரியாட் படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளன. பாலிவுட்டில் சல்மான் கான் ஜோடியாகவும் கமிட் ஆகியுள்ளார். இப்படியாக பிஸியான தொழில் வாழ்க்கையிலும், குடும்பத்திற்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

    இந்த நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்கள் குழந்தைகளான உயிர் மற்றும் உலகுடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

  • விஜய் ரேஞ்சுக்கு உயருவாருன்னு பார்த்தா.. கென் ரேஞ்சுக்கு பிரதீப் ரங்கநாதனை இறக்கிய விக்னேஷ் சிவன்!

    விஜய் ரேஞ்சுக்கு உயருவாருன்னு பார்த்தா.. கென் ரேஞ்சுக்கு பிரதீப் ரங்கநாதனை இறக்கிய விக்னேஷ் சிவன்!

    சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தொடர்ந்து 100 கோடி வசூலை கொடுத்து வந்த பிரதீப் ரங்கநாதனை, அடுத்து விஜய் ரேஞ்சுக்கு உயர்த்துவார் விக்னேஷ் சிவன் என்று பார்த்தால் கென் கருணாஸ் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டாரே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    கடந்த வாரம் வெளியான எல்.ஐ.கே. திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறாத நிலையில், அதனை முன்கூட்டியே உணர்ந்தது போலவே விழாவில் விக்னேஷ் சிவன் உரையாற்றினார். “இந்த படத்தை நான் முழுமையாக என் சொந்த செலவில் தான் தயாரித்தேன். சமூக வலைத்தளங்களில் படத்தைப் பற்றி பலவிதமான கருத்துகள் வெளியிடப்படுகின்றன. இனி இப்படிப் பெரிய செலவுகளை செய்ய என்னிடம் வசதி இல்லை,” என்று அவர் கூறினார்.

    மேலும், தற்போது நிலவி வரும் ‘தம்ப்நெயில் கலாச்சாரம்’ குறித்து அவர் கவலை தெரிவித்தார். “நல்ல விஷயங்களையும் தவறாகச் சொல்லி தான் ஆரம்பிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது. என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பலரும் ஏதாவது பேசுகிறார்கள். அதை பார்த்து மக்கள் நம்பி விடுகிறார்கள்,” என்றும் கூறினார்.

    அதோடு, “இன்னும் சிலருக்கு நான் பணம் வழங்க வேண்டியுள்ளது. அதனால், இந்த படத்திற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று ரசிகர்களிடம் அவர் வேண்டுகோள் வைத்தார்.

    திரைப்பட விமர்சனங்களைப் பற்றியும் அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார். “நான் படம் எடுத்தால், ‘நீ செய்த கேசரி ஏன் காரமாக இருக்கிறது? நீ வைத்த கறி குழம்பு ஏன் இனிப்பாக இல்லை?’ என்று கேட்பது போல கதையையும் குறை கூறுகிறார்கள். என்னால் ஒரு அளவிற்கு தான் படம் எடுக்க முடியும். மற்றவர்கள் போல் மிகப் பிரம்மாண்டமாக எடுக்க முடியாது,” என்று அவர் தெரிவித்தார்.

    லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு, க்ரித்தி ஷெட்டி, கெளரி கிஷன், மாளவிகா என ஏகப்பட்ட நடிகர்களை தாண்டி அனிருத் இசை, ரவி வர்மன் ஒளிப்பதிவு, நயன்தாரா 100 கோடி வரை செலவு செய்து எடுக்க அனுமதித்த நிலையில், படத்தை சொதப்பி விட்டார் விக்னேஷ் சிவன் என்றும் 20 கோடி செலவில் படங்களை எடுத்து 100 கோடி வசூல் ஈட்டி வந்த பிரதீப் ரங்கநாதனை 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்து 50 கோடி நாயகனாக மாற்றிவிட்டாரே என ட்ரோல் செய்து வருகின்றனர்.

  • விஜய்யே எப்படி சார் லீக் பண்ணுவார்.. கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாம்.. பொங்கிய விக்னேஷ் சிவன்!..

    விஜய்யே எப்படி சார் லீக் பண்ணுவார்.. கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாம்.. பொங்கிய விக்னேஷ் சிவன்!..

    இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான LIK திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாத நிலையில், தற்போது அவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் லீக் விவகாரம் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பிரதீப் ரங்கநாதன் நடித்த படங்கள் இதுவரை 100 கோடி வசூலைத் தாண்டிய நிலையில், “எல்.ஐ.கே” திரைப்படம் வெளியான ஆறு நாட்களாகியும் சுமார் 44 கோடி வசூல் மட்டுமே பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

    இப்படத்தை ப்ரோமோட் செய்வதற்காக விக்னேஷ் சிவன் தொடர்ந்து பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அப்போது, “ஜனநாயகன்” திரைப்படத்தின் லீக் சர்ச்சை குறித்து அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது: சினிமாவை நான் ஒரு கடவுளாகவே பார்க்கிறேன். என் படத்தின் எடிட்டர் கூட ஏதாவது காட்சிகளை அனுப்ப வேண்டுமானால், பாதுகாப்புடன் (பாஸ்வர்ட் வைத்து) தான் அனுப்புவார். அதனால், எடிட்டர்கள் போன்ற தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படி ஒரு செயலில் ஈடுபடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இதில் யாரோ திட்டமிட்டு செய்கிறார்கள் போல தெரிகிறது என்றார். மேலும், சிலர் விஜய் தான் லீக் செய்தார் என்று அரசியல் பண்றது எல்லாம் சுத்தமாக சரியில்லை என்றும் கூறியுள்ளார்.

    மேலும், இந்த லீக் விவகாரம் எந்த விதத்திலும் அந்தப் படம், தயாரிப்பாளர் அல்லது விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மக்கள் இதை புரிந்து கொண்டு, படம் வெளியாகும் போது திரையரங்கிற்கு சென்று பார்த்து ஆதரிப்பதே நடிகர் விஜய்க்கு நாம் செலுத்தும் மரியாதை எனவும் கூறினார்.

    இறுதியாக, “ஒரு ஹீரோவாக விஜய் அவர்களை நாம் திரையில் கடைசியாக பார்க்கும் தருணமாக ‘ஜனநாயகன்’ இருக்கலாம். அதற்குள் எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை தாண்டி ரசிகர்கள் திரையரங்கில் சென்று படம் பார்த்து கொண்டாட வேண்டும்” என்று விக்னேஷ் சிவன் உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.

  • LIC டைட்டிலுக்கு 112 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பினாங்க.. விக்னேஷ் சிவன் சொன்ன ஷாக்கிங் தகவல்!..

    LIC டைட்டிலுக்கு 112 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பினாங்க.. விக்னேஷ் சிவன் சொன்ன ஷாக்கிங் தகவல்!..

    கடந்த வாரம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான LIK படத்தின் தலைப்பு தொடர்பான ஷாக்கிங் பின்னணியை அவர் சமீபத்தில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரீத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளியான பாடல்கள் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டன.

    மேலும், பிரதீப் ரங்கநாதன் நடித்த முந்தைய படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், இந்த படத்திற்கும் அதே அளவிலான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தற்போது படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில், சுமார் 44 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த படம் 100 கோடி கிளப்பை எட்டுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

    இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு குறித்த ஒரு ஷாங்கிங்கான தகவலை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு “LIC” என்று பெயரிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், Life Insurance Corporation of India (LIC) நிறுவனம் அந்த பெயரை பயன்படுத்தியதற்காக ரூ.112 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.

    இந்த பிரச்சனை ஏற்படலாம் என முன்கூட்டியே கணித்திருந்ததால், “LIK”, “LIP”, “LID”, “LIF” போன்ற பல மாற்று தலைப்புகளை முன்பே தயார் செய்து வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இறுதியில், அவற்றில் “LIK” (Love Insurance Kompany) என்ற தலைப்பை தேர்வு செய்ததாகவும் கூறினார்.

    இந்த தலைப்பு மாற்றத்தின் பின்னணி தற்போது ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

  • பிரதீப் ரங்கநாதனின் LIK படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!

    பிரதீப் ரங்கநாதனின் LIK படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், மிஸ்கின், கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, மாளவிகா, ஆனந்த்ராஜ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் இன்று ஒருவழியாக வெளியான நிலையில், தாறுமாறாக உள்ளதா? அல்லது பிரதீப் ரங்கநாதனின் அடுத்த கிரிஞ்ச் குடோனா என்பது குறித்த விமர்சனத்தை தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

    விக்னேஷ் சிவன் மொக்கை பீஸ் என அஜித் நினைத்து ஒதுங்கிய நிலையில், விடாமுயற்சி எனும் படத்தை மகிழ் திருமேனியை வைத்து எடுத்துக் கொடுத்து ரசிகர்களை அழ வைத்தது தான் மிச்சம். கண்டிப்பாக அஜித் குமார் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தால் குட் பேட் அக்லி படத்தை விட ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருப்பார் என்றே தெரிகிறது.

    டிராகன் படம் அளவுக்கு எல்ஐகே இல்லை என்றாலும் டியூட் படத்தை விட ரொம்பவே பெட்டராக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்

    என்னதான் உலக நாயகன் கமல்ஹாசன் ஹேராம், ஆளவந்தான், விருமாண்டி என படம் பண்ணினாலும் பாக்ஸ் ஆபீஸில் ஓடியது ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா தான். அதே பாணியை தான் பிரதீப் ரங்கநாதனும் பிடித்துள்ளார். ரஜினிகாந்தை தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன் என பலரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் பக்காவாக சேர் போட்டு அமர்ந்துவிட்டார்.

    சிவகார்த்திகேயனும் கொஞ்சம் ரூட்டை மாற்றி நடுவில் புரட்சி கருத்தை எல்லாம் பேசி போர் அடித்து வரும் நிலையில், ஜென் ஸி கிட்ஸ்களை கவரும் விதமாக லேசான கருத்துடன் ஜாலியான படத்தை லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார்.

    சீமான் வரும் காட்சிகள், எஸ்.ஜே. சூர்யா வரும் காட்சிகள் எல்லாமே தியேட்டரே தெறிக்கும் காட்சிகளாக எங்கேயும் காம்ப்ரமைஸ் பண்ணாமல் விக்னேஷ் சிவன் இயக்கிய விதம் சிறப்பு.

    LIK ஆப் மூலம் இன்னார்க்கு இன்னார் என்பதை கண்டு பிடிக்கும் லவ் மீட்டரை எஸ்.ஜே. சூர்யா அறிமுகப்படுத்த பிரதீப் ரங்கநாதன் – கீர்த்தி ஷெட்டி காதலை அது பிரிக்கிறது. ஆப்பை விட மனித இதயத்துக்கு வேல்யூ அதிகம் என்பதை ஹீரோ நிரூபிப்பதே படத்தின் கதை.

    பிரதீப் ரங்கநாதன் படத்தை ஜாலியாக குழந்தைகள் என்ஜாய் செய்யும் விதமாக விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தாலும், கெளரி கிஷன் உடனான லிப் லாக் காட்சி மற்றும் ஹீரோயின் அசிங்கமாக பேசும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

    எல்ஐகே ரேட்டிங்: 3.25/5.

  • புருஷனை நம்பி பல கோடி போட்டுருக்கேன் கோயிந்தா.. காப்பாத்திடு கோயிந்தா!..

    புருஷனை நம்பி பல கோடி போட்டுருக்கேன் கோயிந்தா.. காப்பாத்திடு கோயிந்தா!..

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள எல்.ஐ.கே திரைப்படம் வெற்றி பெற வேண்டி, விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த பக்தி தருணங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    நடிகை நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ.கே திரைப்படம் பல தடைகளைத் தாண்டி தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், அனிருத் இசையமைத்த இந்த படத்தின் “தீமா”, “எனக்கேன் யாருமில்லை” போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து “வைப் வாசி” என்ற புதிய பாடலும் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற பட விழாவில், விக்னேஷ் சிவன் “நானும் ரவுடிதான்” படப்பிடிப்பின் போது நயன்தாராவுடன் ஏற்பட்ட தனது காதல் கதையை மனம் திறந்து பகிர்ந்தார். மேலும், “நான் நயன்தாராவின் கணவர் என்று அனைவராலும் அறியப்படுவது எனக்கு மிகுந்த பெருமை. வாழ்க்கையில் அன்பே மிக முக்கியம்” என அவர் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

    இந்நிலையில், நயன்தாரா தனது படப்பிடிப்பு மற்றும் தொழில் தொடர்பான பணிகளில் பிஸியாக இருந்தபோதிலும், தனது கணவருக்காக எல்.ஐ.கே படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது முழு ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

  • சிம்பு படத்தை இயக்கினாலும் பாக்கெட்டில் சில்லறை இல்லை.. அனிருத் தான் 50 ஆயிரம் கொடுத்தாரு – விக்கி!

    சிம்பு படத்தை இயக்கினாலும் பாக்கெட்டில் சில்லறை இல்லை.. அனிருத் தான் 50 ஆயிரம் கொடுத்தாரு – விக்கி!

    இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள LIK படம் பல தடைகளுக்கு பிறகு வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் இசைவெளியிட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்ற நிலையில் விக்னேஷ் சிவன் அனிருத் தனக்கு செய்த உதவியை பற்றி எமோஷனலாக பேசியது தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகை நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, கௌரி கிஷன், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    மேலும், விக்னேஷ் சிவன் தான் சிம்புவை வைத்து போடா போடி படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான பின்னரும் தன்னிடம் நானும் ரவுடி தான் படத்திற்காக பாண்டிச்சேரிக்கு செல்ல பஸ்ஸுக்கு மட்டும் வெறும் 250 ரூபாய் தான் புலம்பிக்கொண்டே என்ன செய்வதென்றே புரியாமல் சென்று கொண்டிருந்த போது அனிருத் போன் செய்து உன் பேகில் 50 ஆயிரம் பணம் வச்சிருகேன்னு சொன்னார், அதை கேட்டதும் நான் அப்படியே கலங்கிப் போயிட்டேன். என் கண்ணீரால் பஸ்ஸின் கம்பிகள் எல்லாம் நனைந்தது என எமோஷனலாக பேசியிருந்தார். விக்னேஷ் சிவன் தனக்கு ஆரம்பத்திலிருந்து தற்போது வரை எல்லா விதத்திலும் அனிருத் செய்த உதவிகளுக்கு உருக்கமாக தனது நன்றியினை தெரிவித்தார்.

    பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் வெளியான டிராகன் மற்றும் டியுட் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு LIK படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பை வைத்துள்ளனர். மேலும், இப்படமும் பிரதீப்பிற்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2040ல் தமிழ்நாட்டில் நடக்கும் லவ் ஸ்டோரிக்கு ஆப் மூலம் பிரச்னை வருவதே படத்தின் கதை.

  • தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

    தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

    தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன். அந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் விக்னேஷ் சிவன் நடித்தும் இருந்தார். அதன்பின் விக்னேஷ் சிவன் சிம்புவை வைத்து போடா போடி என்கிற திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் ஓடவில்லை. ஆனாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து தனது சொந்த தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார் தனுஷ்..

    ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டு சொன்ன பட்ஜெட்டை விட அதிக செலவு செய்ததால் கடுப்பான தனுஷ் இதற்கு மேல் என்னால் பணம் கொடுக்க முடியாது என மறுத்துவிட்டார். எனவே, தனது காதலனுக்காக நயன்தாரா தனது சொந்த காசை போட்டு படத்தை முடிக்க உதவி செய்தார்.. அப்படி உருவானதுதான் ரவுடி பிக்சர்ஸ்.

    அந்த படம் வெற்றி என்றாலும் தனுஷ் விக்னேஷ் சிவனையோ, நயன்தாராவையோ சந்திக்கவே இல்லை. அவர்களுடனான நட்பையும் அவர் முறித்துக்கொண்டார். அதோடு நயன்தாரா தனது திருமண வீடியோவை நெட்பிலிக்ஸுக்கு விற்றபோது அதில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர்கள் சேர்க்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் தனுஷ். இதனால் கோபமடைந்த நயன்தாரா தனுஷை திட்டி ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டார். ஆனால், தனுஷ் அமைதியாக இருந்தார்.

    அப்போது தனுசுக்கு எதிராக சில கருத்துக்களை விக்னேஷ் சிவனும் பேசினார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விக்னேஷ் சிவன் ‘எனக்கு தனுஷ் சாரை மிகவும் பிடிக்கும்.. வேலையில்லா பட்டதாரி படம் உருவானபோது இரண்டரை வருடங்கள் நான் அவருடன்தான் இருந்தேன்..

    அவர் சாப்பிட்டால்தான் நான் சாப்பிடுவேன்.. அப்படி ஒரு அன்பு எங்களுக்குள் இருந்தது.. தனுஷ் சாரின் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதிதான் என் அப்பா இறந்தார். எனவே, தனுஷை என் அப்பாவை போல நான் கருதுகிறேன். ஆனால் சில விஷயங்கள் நம் கையை மீறி நடக்கிறது. சூழ்நிலை அப்படி இருந்தது.. சில தவறுகள் நடந்தது.. அவரின் நட்பை இழந்ததை பெரிய இழப்பாக நினைக்கிறேன்’ என பீல் பண்ணி பேசியிருருக்கிறார்.

  • நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

    நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

    லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி வெளியாகிறது.

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவர உள்ள படம் எல்.ஐ.கே. கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இரண்டு பாடல்கள் யூடியூப்பில் வெளியாகி சக்கை போடு போட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட நாட்களாக வெளியாகவில்லை. கடண்டஹ் வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்ட இந்த படம் ஒரு வழியாக ஏப்ரம் 10ல் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளது படத்திற்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முதலில் படத்திற்கு ‘எல்.ஐ.சி’ (Love Insurance Corporation) எனப் பெயரிடப்பட்டது. ஆனால், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) காப்புரிமைப் பிரச்சனை மற்றும் சட்ட ரீதியான நோட்டீஸ் காரணமாகப் படத்தின் தலைப்பு எல்ஐகே (Love Insurance Kompany) என மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இது குறித்த தகவலை படக்குழு இன்றூ அறிவித்துள்ளனர்.