Tag: Vikram Prabhu

  • Sirai Movie: 25 வது நாள் கொண்டாட்டம்: போஸ்டரை வெளியிட்ட சிறை படக்குழு

    விக்ரம் பிரபு இயக்கத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியான படம் சிறை. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் இப்படம் ப்ரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் L K அக்ஷய் குமார், அனிஷ்மா, அனந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இபடத்தை இயக்கியிருந்தார். டாணாக்காரன் இயக்குனர் தமிழ், தான் சந்தித்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய கதைதான் சிறை படமாகும்.

    இந்த நிலையில் இப்படம் 25 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதனை சிறப்பிக்கும்விதமாக அப்படக்குழு 25வது நாள் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சிரை விக்ரம்பிரபுவுக்கு 25வது படம் என்பது குறிப்பிடதக்கது.

  • சிறை விமர்சனம் : வழக்கமான பஞ்ச்ல் முடித்த புளுசட்டை மாறன்

    சிறை விமர்சனம் : வழக்கமான பஞ்ச்ல் முடித்த புளுசட்டை மாறன்

    விக்ரம் பிரபு நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் சிறை. இப்படம் வெளிவருவதற்கு முன்பே பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது இந்த படத்தை விஜய் நடிப்பில் வெளியான லியோ, மாஸ்டர் படங்களை தயாரித்த லலித்குமார் தயாரிப்பது மட்டும் தனது மகனை படத்தில் இன்னொரு நாயகனாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் இந்த படத்தை சுரேஷ் ராஜகுமாரி என்ற இயக்குனர் இயக்கியுள்ளார். இது அவருக்கு முதல் படம். இவர் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

    இந்த நிலையில் இப்படம் குறித்துபுளுசட்டை மாறன் தனது youtube சேனனில் இப்படத்தின் விமர்சனத்தை இன்று வெளியிட்டுள்ளார் அதில் படம் மிக அருமையாக வந்துள்ளதாகவும் விக்ரம் பிரபு மட்டுமின்றி படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். போலிஸரின் ரகசிய வார்த்தைகல் கோர்ட் சீன் எல்லாம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. படத்தில் மெல்லிய மத அரசியல் உள்ளது. அதனை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

    பொதுவாக புளுசட்டை மாறன் தனது விமர்சனத்தில் இறுதியில் படங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி முடிப்பார். சிறை விமர்சனத்திலும் அவ்வாறே செய்துள்ளார். இந்த படத்தில் காதல் காட்சிகள் படத்தில் ஒட்டாமல் இருக்கிறது. அதனை மட்டும் இன்னும் கவனமாக எடுத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். ஆனாலும் படம் நன்றாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.

  • இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படம்: சிறை படத்தின் முதல் விமர்சனம் இதோ

    விக்ரம் பிரபு நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் சிறை.

    கும்கி படம் முலம் அறிமுகம் ஆனவர் விக்ரம் பிரபு. முதல் படமே சூப்பர் ஹிட் மட்டுமின்றி சிவாஜி குடும்பத்திலிருந்து வந்ததால் விரைவில் முன்னணி இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்தது அவரது படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

    இந்த சூழ்நிலையில் அவர் நடிப்பில் வெளியான டாணாகாரன் என்ற படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. ஓடிடியில் வெளியான இப்படம் திரையரங்கில் வெளிவந்திருந்தால் நிச்சயம் ஹிட் அடித்திருக்கும் என்று பேசப்பட்டது.

    மீண்டும் ஒரு வெற்றி தேவை என்ற நிலையில் விக்ரம் பிரபு நடிப்பில் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ள படம் சிறை. இப்படத்தில் இன்னொரு நாயகனாக

    விஜய் நடித்த மாஸ்டர், லியோ உள்ளிட்ட பல உள்ளிட்டப் படங்களை தயாரித்த எஸ்.எஸ்.லலித்குமாரின் மகன் அக்ஷய்குமார் நடிக்கிறார். நாயகிகளாக அனந்தா, அனிஷ்மா நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வெற்றி மாறனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். இப்படத்தையும் லலித்குமார் தயாரித்துள்ளார்.

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் குறித்த முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் அருண் விஷ்வா இப்படத்தை சமீபத்தில் பார்த்தாராம். இது குறித்து அவர் தனது ட்விடடர் பக்கத்தில் கூறியபோது,

    சிறை இந்த ஆண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்று. அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி மற்றும் அவரது டீம் படத்தை சிறப்பாக எடுத்துள்ளனர். விக்ரம் பிரபு மற்றும் உடன் நடித்த அனைவருடைய நடிப்பும் நன்றாக இருந்தது. அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் தனது திரை வாழ்க்கையை இப்படியொரு படத்தில் தொடங்கியது மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

    இவரது இந்த கருத்தை பார்க்கையில் படம் நிச்சயம் வெற்றியடையும் என்பது தெரிகிறது.

  • ரியல் லேடி சூப்பர் ஸ்டார் வராரு!.. அனுஷ்காவின் ‘காதி’ ரிலீஸ் எப்போ தெரியுமா?.. செம அப்டேட் இதோ!..

    யுவி கிரியேஷன்ஸ் தயாரித்து இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ள பேன் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள காதி படத்தின் அப்டேட்டை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை அனுஷ்கா.

    ‘காதி’ ஒரு பெண்ணை மையமாகக் கொண்ட கதையாக உருவாக்கப்பட்டுள்ளது, இதில் அனுஷ்காவின் கதாபாத்திரம் தைரியமான தோற்றத்தில் காணப்படுகிறது. இப்படத்தில் அவரது தோற்றம் உணர்ச்சிகரமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். மேலும், நடிகர் விக்ரம் பிரபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இது அவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படமாகும்.

    அனுஷ்கா வேதம் படத்தை தொடர்ந்து கிரிஷ் ஜகர்லமுடியுடன் இணையும் இரண்டாவது படமாக காதி படம் உருவாகியுள்ளது. அனுஷ்கா ஷெட்டி தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘அருந்ததி’, ‘பாகுபலி’, ‘பாகமதி’ போன்ற படங்களில் தனது நடிப்பால் புகழ்பெற்று விளங்கினார்.

    ‘காதி’ படத்தின் மூலம் அனுஷ்கா மீண்டும் ஒரு வலிமையான கதாபாத்திரத்தில் தோன்றுவதாக அறியப்படுகிறது. முந்தைய படங்களை போலவே இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுஷ்காவின் 43வது பிறந்தநாளை முன்னிட்டு காதி படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டிருந்தனர்.

    இந்நிலையில், இன்று அனுஷ்கா ஷெட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் காதி திரைப்படம் வரும் ஜூலை 11ம் தேதி உலக அளவிலான திரையரங்குகளில் வெளியாகும் என்பதை போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டிக்குப் பிறகு அனுஷ்காவின் நடிப்பை காண ரசிகர்கள் அவலுடன் காத்திருக்கின்றனர்.

  • விக்ரம் பிரபுவுக்காக தனுஷ் செய்த சூப்பர் உதவி!.. ‘லவ் மேரேஜ்’ டிரைலர் ரொம்ப நல்லா இருக்கே!…

    நடிகர் விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடைசியாக அவருக்கு இறுகப்பற்று நல்ல வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு அவர் நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தற்போது வெளியிடுள்ளார்.

    ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் அஸ்யூர் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனரான சண்முக பிரியன் இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் திரைப்படம் வருகின்ற ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இப்படத்தில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சத்தியராஜ் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையில் “பேஜாரா ஆனேன்” மற்றும் “எடுடா பாட்டில்” ஆகிய பாடல்கள் வெளியாகி 1 மில்லியனுக்கும் மேல் பார்வைகளைப் பெற்று பிரபலமடைந்தது.

    இப்படம் ஒரு கிராமத்துப் பின்னணியில் காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது. திருமணம் தாமதமாவதால் ஒருவர் குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசுகிறது. மேலும், இப்படம் 90’s கிட்ஸ்களுடன் ஒப்பிடும் படமாக அமைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று லவ் மேரேஜ் படத்தின் ட்ரேயிலர் வெளியிட்டு விழா நடைப்பெற்ற நிலையில் நடிகர் தனுஷ் இப்படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டுள்ளார். மேலும், இப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் விக்ரம் பிரபுவின் முந்தைய படமான இறுகப்பற்று வெற்றிக்குப் பிறகு அவரது மற்றொரு முக்கியமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுஷ்காவுடன் விக்ரம் பிரபு இணைந்து நடித்துள்ள காதி படமும் விரைவில் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

  • அடுத்தடுத்து ரெண்டு லட்டு!.. திருப்பதிக்கே கிளம்பிப்போன விக்ரம் பிரபு!.. சுட சுட அப்டேட் வேற!..

    நடிகர் விக்ரம் பிரபு தான் நடித்த இரண்டு படங்களும் வெளியாக உள்ள நிலையில் அப்படங்கள் வெற்றிப்பெற திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். மேலும், அவரின் அடுத்த படத்திற்கான அப்டேட்டையும் தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் ப்ரியன் இயக்கத்தில் விகரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் படத்தில் சுஷ்மிதா பாட், மீனாட்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் அப்படத்தின் ட்ரெயிலர் வெளியான நிலையில் இப்படம் 90’s கிட்ஸ்களுடன் ஒப்பிடும் படமாக அமைந்துள்ளதாக கூறப்பட்டது. மேலும், இப்படத்தின் எடுடா பாட்டல் பாடல் ஒரு மில்லயனுக்கு மேல் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இப்படம் வருகின்ற ஜூன் மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    அதை தொடர்ந்து இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்து காதி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் விக்ரம் பிரபு தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் முதல் படமாக அமைந்துள்ளது. காதி வரும் ஜூலை 11, 2025 அன்று உலகளவிலான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இன்று தன் மனைவியுடன் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்த விக்ரம் பிரபு பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, தான் நடித்துள்ள காதி மற்றும் லவ் மேரேஜ் என இரண்டு படங்களும் தொடர்ந்து ரிலீஸாக உள்ளது எனவே படம் வெற்றி பெற சுவாமி தரிசனம் செய்தேன், ரொம்ப சந்தோசஷமாக இருக்கு, இதையடுத்து டாணாக்காரன் படத்தை இயக்கிய இயக்குனர் தமிழுடன் மீண்டும் இணைந்து அடுத்த படம் நடிக்கப்போவதாகவும், தெலுங்கிலும் இன்னொரு படம் நடிக்க உள்ளதாகவும் அப்டேட்களை கொடுத்துள்ளார் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு.

    விக்ரம் பிரபு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில், நடைபெற்ற சினிமா விழாவில் கூறியிருந்தார். அஜித்தை வைத்து ஆதிக் அடுத்து இயக்கும் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு வாய்ப்புக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • தாத்தா தவறி கூட அத சொன்னதில்ல.. சிவாஜி பற்றி விக்ரம் பிரபு சொன்ன ரகசியம்

    தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய ஆளுமையாக பார்க்கப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பு இவரை தவிற வேறு யாரையும் உதாரணமாக சொல்ல முடியாது. தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இவருக்கு என ஒரு தனி அங்கீகாரமே கொடுத்திருக்கின்றனர். இப்போது வரைக்கும் மற்ற மொழி சினிமாக்களும் சிவாஜி கணேசனை கொண்டாடி வருகின்றனர்.

    இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை. ஒவ்வொரு கேரக்டருமே மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகத்தான் இருந்திருக்கின்றன. இந்த நிலையில் சிவாஜி பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு சிவாஜி கணேசனை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். சிவாஜி கணேசன் இறந்த சமயத்தில் விக்ரம் பிரபு ஊரிலேயே இல்லையாம். படிப்புக்காக அமெரிக்கா சென்று விட்டாராம்.

    அதனால் அவரால் வரமுடியவில்லையாம். சிவாஜி கணேசனை பற்றி பிரபு கூறும் போது ‘ஏலே.. உங்க தாத்தா ஆலமரம் மாதிரி. அதிலிருந்து வருகிற ஒரு குச்சியின் விரல்தான் நான், நீ எல்லாம்’ என்று விக்ரம் பிரபுவிடம் அடிக்கடி கூறுவாராம். அதனால் சிவாஜி செய்ததில் கால்வாசியாக நாம பண்ண வேண்டும் என்றுதான் விக்ரம் பிரபு நினைத்திருக்கிறார். ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையே கிடையாதாம் விக்ரம் பிரபுவுக்கு.

    அசிஸ்டெண்ட் டைரக்டராகத்தான் இருந்திருக்கிறார். கும்கி படத்தின் கதையை படித்து பார்த்து பிடித்து போக பிரபுசாலமனிடம் நடிக்கிறேன் என்று சொன்னாராம் விக்ரம் பிரபு, இது பிரபுவுக்கே தெரியாதாம். பிரபுவிடம் இருந்ததை விட தாத்தா சிவாஜி கணேசனிடம்தான் தன் நேரத்தை செலவிட்டாராம் விக்ரம் பிரபு. ஏனெனில் அந்த நேரம் பிரபு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம்.

    vikramprabhu

    vikramprabhu

    சிவாஜி ஓய்வு எடுத்த நேரம். ஆனால் சிவாஜியுடன் இருந்த வரைக்கும் ஒரு போதும் சிவாஜி ‘ நீ நடி’ என ஒரு போதும் சொன்னதே இல்லையாம் விக்ரம் பிரபுவிடம் . ஆனால் பக்கத்தில் உட்கார வைத்து படங்களை பார்க்க வைப்பாராம். அதுவும் ஆங்கில ஆக்‌ஷன் படங்களைத்தான் பார்க்க வைப்பாராம்.

  • Love Marraigae: டீசன்ட்டா அப்ரோச் பண்ணிருக்கா லவ் மேரேஜ்…? 90ஸ் கிட்ஸ்களோட ஃபீலிங் தான் போல!

    விக்ரம் பிரபு நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ள படம் லவ் மேரேஜ். விக்ரம் பிரபுவுடன் சுஷ்மிதா பட், அருள்தாஸ், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். சண்முகப்பிரியன் இயக்கியுள்ளார். 36 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் இருக்கிறார். முதல் காட்சியே திருமணத்தைக் காட்டுறாங்க.

    இவரு இந்தத் திருமணத்தைப் பண்றதுக்குள்ள என்னென்ன மாதிரி கஷ்டப்பட்டாரோ அதை எல்லாம் பிளாஷ்பேக்ல காட்டுறாங்க. மதுரையில இருந்து கோபிச்செட்டிப் பாளையத்துக்குப் பொண்ணைப் பார்க்கப் போறாங்க. பார்த்த உடனே விக்ரம் பிரபுவுக்கு பிடிச்சிடுது. அப்போ தான் ஒரு சிக்கல் வருது.

    கொரோனா காலகட்டம். வீட்டை விட்டு வெளியே வர அரசு தடை விதிக்குது. நிச்சயதார்த்தம் பண்ணின மறுநாளே விக்ரம்பிரபு பொண்ணு வீட்டுலயே தங்க வேண்டிய சூழல். ஒரு கட்டத்துல அந்தப் பொண்ணு மிஸ் ஆகுது. வீட்டை விட்டு வெளியே போறாங்க. அவருக்கு வேறொரு லவ் இருக்கு. விக்ரம்பிரபு சாட் பண்றாரு.

    ஆனா அந்தப் பொண்ணும் சாட் பண்ணுது. ஆனா கல்யாணப் பொண்ணு அது இல்ல. அப்போ யாரு அந்தப் பொண்ணுன்னு ஒரு டுவிஸ்ட் இருக்கு. உண்மை தெரியவரும்போது வீட்டுல சின்ன பிரச்சனை வருது. அதுக்கு அப்புறம் கல்யாணம் நடந்ததா? இல்லையா? 36 வயதாகியும் கல்யாணம் ஆகாம விக்ரம்பிரபு இருக்காரே கதாநாயகன்?

    இது ஒரு ஃபீல்குட்டா, லவ் சென்டிமென்ட்டா, குடும்ப படமா வந்துள்ளதுதான் லவ் மேரேஜ். 90ஸ் கிட்ஸ்சுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும் நச்சுன்னு பொருந்தியுள்ள படம். ரமேஷ் திலக்கின் காமெடி சூப்பர். அருள்தாஸ் நடிப்பு டெரரா இருக்கு. படத்தின் 2ம் கதாநாயகி மீனாட்சியின் நடிப்பு அருமை. விக்ரம்பிரபு சைலன்டா வந்து அப்ளாஸை அள்ளுகிறார். படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 6 நிமிடம்தான்.

    குடும்பத்தோடு பார்க்கும் வகையில் டிசிப்ளினான டீசன்டான கன்டன்ட். திருமணமா காத இளைஞர்களின் மனக்குமுறல்களை எடுத்துள்ள படம். பாடல், மியூசிக் அருமை. படம் ஒரே இடத்தில நடப்பதால் சோர்வைத் தருது. இன்னும் கொஞ்சம் ஜாலியா எடுத்திருக்கலாம்.

  • விஜய்கிட்ட பிடிச்ச விஷயம் இதுதான்… ஒண்ணு சொன்னாலும் ‘நச்’சுன்னு சொன்ன விக்ரம்பிரபு

    ஷண்முகப்பிரியன் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்த லவ் மேரேஜ் படம் நேற்று வெளியானது. இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. பொதுவாக 90ஸ் கிட்ஸ்களுக்கு பொண்ணு கிடைப்பது குதிரைக்கொம்பான விஷயமாக இருக்கும். அதனால் அவர்களது திருமணம் தள்ளி தள்ளிப் போகும். வயதும் 30ஐத்தாண்டி விடும்.

    கல்யாணம் ஆகுமோ ஆகாதோ என்ற பயம்கூட வரும். அந்த வகையில் திருமணம் ஆனால் அவர்களது ஃபீலிங் எப்படி இருக்கும் என்பதை சொல்லும் படம் தான் லவ்; மேரேஜ். இது டிவி சீரியல் மாதிரி போவதாக பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் விமர்சித்துள்ளார். இதையொட்டி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நடிகர் விக்ரம்பிரபுவைப் பேட்டி காண்கிறார். அப்போது அவர் பகிர்ந்த தகவல்கள்தான் இவை.

    ஒரு ஆர்டிஸ்டா எவ்வளவு பண்ண முடியும்கறது அவங்கவங்க அனுபவத்தைப் பொருத்தது. விஜய் சேதுபதி அப்படி நிறைய விஷயங்கள் பண்றாரு. யதார்த்தமா பண்றதும் கஷ்டம்தான். எனக்கு பிடிச்சது விஜய் சாரோட விஷயங்கள். அவர் யதார்த்தமாகவும் இருப்பாரு. அதே நேரம் கேரக்டராகவும் மாறிடுவாரு. அந்த யதார்த்தம் எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கும்.

    அவரு மட்டும்தான் மேக்சிமம் அவராகவே இருந்து பண்றாரு. மாதவன் வித்தியாசமான கேரக்டரா பண்ணுவாரு. ராக்கெட்ரில அவ்ளோ விஷயம் பண்ணுவாரு. மகாராஜாவுல விஜய்சேதுபதி நல்லா பண்ணுவாரு என்கிறார் விக்ரம் பிரபு.

    அதே போல அவரது திரை உலக அனுபவங்கள் பற்றி இப்படி சொல்கிறார். நீங்க சொல்ற கதை என் மைன்ட்ல வேற மாதிரி ஓடும். அங்க தான் நிறைய தப்பு நடக்குது. அதனால முதல்ல உங்க மைன்ட்ல நீங்க சொல்ற கதை எப்படி இருக்கும்கறதை நான் புரிஞ்சிக்கணும். அதைத்தான் பட்டுப் பட்டுக் கத்துக்கிட்டு இருக்கேன். என்னைக்கு உங்க மேல நம்பிக்கை வச்சி வளருறீங்களோ அன்னைக்குத் தான் உங்களோட வளர்ச்சி இருக்குங்கறதைக் கத்துக்கிட்டேன் என்றும் சொல்கிறார் விக்ரம் பிரபு.

  • படத்தை சீரியல் மாதிரியா எடுப்பாங்க? லவ் மேரேஜை பொளந்து கட்டும் புளூசட்டை மாறன்

    விக்ரம்பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ் உள்பட பலர் நடித்துள்ள படம் லவ் மேரேஜ். நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் அசோக வனம்லோ அர்ஜூனா கல்யாணம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்.

    லவ் மேரேஜ் படத்தின் இயக்குனர் ஷண்முகப்பிரியன். படத்தின் ஹீரோவுக்கு 33 வயசாகியும் கல்யாணம் ஆகாம இருக்கு. அவரைப் பார்க்கறவங்க எல்லாம் இன்னும் கல்யாணம் ஆகலையான்னு கேட்டு உயிரை எடுக்குறாங்க. நானாடா கல்யாணம் பண்ண மாட்டேங்குறேன்.? எவன்டா பொண்ணு கொடுக்குறான்கற சூழலுக்கு அவரோட நிலைமை இருக்கு.

    அவருக்கு ஒரு பொண்ணைப் பார்க்கப் போறாங்க. சொந்தக்காரங்களோட பொண்ணைப் போய் பார்த்து நிச்சயதார்த்தம் பண்ணப் போறாங்க. இன்னையில இருந்து கொரோனா லாக் டவுன்னு சொல்லிடுறாங்க. அம்மா ‘இங்க தங்க வேணாம்டா. நாளைக்கு ஏதாவது ஒரு கோளாறு பண்ணி கல்யாணத்தை நிப்பாட்டிடுவாங்கடா. ஏற்கனவே தள்ளிப் போயிடுச்சு’ன்னு சொல்றாங்க. ஆனா ஹீரோ கேட்காம விட்டுறாரு. அங்கு தங்க வேண்டிய சூழல். திடீர்னு கல்யாணப் பொண்ணு காணாமப் போயிடுது. அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. இது ஒரு தெலுங்குபட கதை.

    ஒரு கல்யாண வீடுன்னா மாமனாரு, மாமியாரு, மச்சான், சித்தப்பா, பெரியப்பா, ப்ரண்ட்ஸ்னு எவ்வளவோ கேரக்டர்ஸ் இருக்கும். அதை எல்லாம் சேர்த்து அதுல இருந்து சுவாரசியமான கேரக்டர்களை மட்டும் கொஞ்சம் கொஞ்ச நேரம் செலவழிச்சி காட்சிகளை வச்சாலே படம் முழுக்க நல்ல கலகலப்பும், காமெடியுமா இருக்கும். இந்தப் படத்துல அப்படி எந்த ஒரு கேரக்டரையும் இன்ட்ரஸ்டிங்காக வைக்கல.

    இந்த ஒட்டுமொத்த படத்துலயே கல்யாணப் பொண்ணுக்கு ஒரு தங்கச்சி கேரக்டர் வரும். அந்த ஒரு கேரக்டர் தவிர வேறு எந்த ஒரு கேரக்டரையும் ஒழுங்காவே வடிவமைக்கல. ஹீரோ கேரக்டர் கல்யாணப் பொண்ணு காணாமப் போச்சுன்ன உடனே அங்கிருந்துதான் அந்தக் கேரக்டருக்கு வேல்யுவே வருது. அந்தக் கேரக்டர் மேல எல்லாருக்கும் ஒரு இரக்கம் வரணும். அந்தக் கேரக்டர் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி இருக்கணும்.

    அப்படி எந்த ஒரு வேலையையுமே அந்தக் கேரக்டர் செய்யவே இல்லை. படத்தோட மெயின் கேரக்டரையே ஒழுங்கா டிசைன் பண்ணாததுனாலே மொத்த கதையுமே ஆட்டம் கண்டுபோச்சு. இந்தக் கதையே சுமாரான படம் கொடுக்குறதுக்குப் போதுமானதுதான். இந்தக் கதையில கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சீரியஸ்.

    கொஞ்சம் எமோஷன்ஸ். பாட்டு, காமெடின்னு கலர்ஃபுல்லான படமா பண்ணிருந்தாங்கன்னா நிச்சயமா இது குறைந்தபட்சமான படமாவாவது வந்துருக்கும். இப்போ இதுல எந்த சுவாரசியமும் இல்லாம ப்ளாட்டா ஒரு கதையை வச்சி சீரியல் மாதிரி எடுத்து வச்சிருக்காங்க. அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.