Tag: youth movie

  • சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் எல்லாம் வேண்டாம்!.. யூத் ஹீரோவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!..

    சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் எல்லாம் வேண்டாம்!.. யூத் ஹீரோவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!..

    விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி 400 கோடி வசூல் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு இன்னமும் தனது அடுத்த படத்தை இயக்க முடியாமல் தவித்து வருகிறார். சிவகார்த்திகேயனை வைத்து சயின்ஸ் ஃபிக்‌ஷன் எடுக்கலாம் என அமெரிக்காவுக்கு எல்லாம் போய் வேலை பார்த்தார்.

    ஆனால், பெரிய பட்ஜெட் படம் இப்போதைக்கு வேண்டாம் நான் சேஃப்டி ஜோனில் சேயோன் படம் பண்ணுறேன் என சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் தாய் கிழவி இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்க கிளம்பி விட்டார்.

    துப்பாக்கி கொடுத்த டைரக்டருக்கு டாட்டா காட்டியது தான் மிச்சம். இதற்கு மேல் அவர்கள் இணைந்து பணியாற்றுவார்களா என்பது இப்போதைக்கு சந்தேகம் தான்.

    சிவகார்த்திகேயன் போனால் என்ன அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷனை பிரதீப் ரங்கநாதனை வைத்து பண்ணலாமே என லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் வெற்றிக்கு காத்திருந்த வெங்கட் பிரபுவுக்கு விக்னேஷ் சிவன் பெரிய ஆப்பாக அடித்து விட்டார்.

    இந்நிலையில், சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் என இருவருமே வேண்டாம். யூத் படத்தை இயக்கி 80 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய கென் கருணாஸை வைத்து தனது ஸ்டைலில் இன்னொரு ஜாலியான படத்தைக் கொடுத்து பார்ட்டி கொண்டாடலாம் என வெங்கட் பிரபு முடிவு செய்துவிட்டார் என்கின்றனர். வெற்றிமாறன் படத்தை சீக்கிரமே முடித்து விட்டு கென் கருணாஸ் வெங்கட் பிரபு பக்கம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • கென் கருணாஸின் இமாலய சாதனை: ரூ. 50 கோடியை கடந்த யூத்

    கென் கருணாஸின் இமாலய சாதனை: ரூ. 50 கோடியை கடந்த யூத்

    தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வசூலில் பட்டையை கிளப்பும் படங்கள் சமீபகாலமாக சாதனை நிகழ்த்தி வருகின்றன. சமீபத்தில் வந்த வித் லவ், தாய் கிழவி வரிசையில் கென் கருணாஸ் நடித்த யூத் படமும் இணைந்துள்ளது.

    கென் கருணாஸ் இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் படம் யூத். படம் வெளிவருவதற்கு முன்பே படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறப்பட்ட நிலையில் படம் வெளியாகி சக்கை போடு போடுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படம் ரூ 5.5 கோடி செலவில் உருவானது இப்படம்.

    யூத் வெளியான முதல் நாளில் சுமார் 3 கோடி ரூபாய் வசூலுடன் தனது கணக்கைத் தொடங்கிய யூத் , பார்வையாளர்களின் பாசிடிவ் விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் அதிகரித்தது.

    இந்த நிலையில் படம் வெளியான 11 நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 50.26 கோடியை வசூலித்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. படக்குழு இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் 2026-ஆம் ஆண்டில் மிக அதிக லாபம் ஈட்டிய தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் ‘யூத்’ முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

  • வித் லவ் முதல் நாள் வசூலை ஓவர்டேக் செய்த யூத்… முதல் நாள் வசூல் நிலவரம்

    வித் லவ் முதல் நாள் வசூலை ஓவர்டேக் செய்த யூத்… முதல் நாள் வசூல் நிலவரம்

    தனுஷ் நடித்த அசுரன் படம் மூலம் அறிமுகம் ஆனவர் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்து வெளிவந்துள்ள பட தான் யூத். நேற்று வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக இளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. பள்ளிப்பருவத்தில் எப்படியாவது ஒரு உண்மையான காதலைக் கண்டுபிடித்துவிட வேண்டும் எனத் துடிக்கும் 15 வயது மாணவனான பிரவீன், அவனது காதல் முயற்சிகள், ஏற்படும் தோல்விகள், மற்றும் இறுதியாக அவன் வாழ்க்கையையும் உண்மையான அன்பையும் எப்படிப் புரிந்து கொள்கிறான் என்பதே ‘யூத்’ படத்தின் மையக்கரு.

    கருப்பையா சி.ராம் இன்ற இளைஞர் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கெனவே ரீலிஸ்களில் கொண்டாடுகிறார்கள் இளசுகள். இப்படத்தில் கென் கருணாசுடன் அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் ஆகியோரும், முக்கியக் கதாபாத்திரங்களில் தேவதர்ஷினி மற்றும் மலையாள முன்னணி நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு நடித்துள்ளனர்.

    இந்த நிலையில் யூத் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை sacnilk தளம் வெளியிட்டுள்ளது. ‘யூத்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் ₹3.20 கோடி நிகர வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் முதல் நாள் மொத்தக் கட்டண வசூல் தோராயமாக ₹3.68 கோடியைத் தாண்டும் என கூறப்படுகிறது. தொடர்ந்து 3 தினங்கள் விடுமுறை என்பதால் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    சமீபத்தில் வெளிவந்து ஹிட் அடித்த வித் லவ் படத்தின் முதல் நாள் வசூல் ரூ 2 கோடி வரை வசூலானது. அந்த வசூலை இப்படம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • பொய் சொல்ல தெரிஞ்சா சொல்லுங்க.. மிஸ்கினால் விஜயிடம் மாட்டிக் கொண்ட நட்டி.. சுவாரஸ்ய சம்பவம்..!

    தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரத்திற்கும் பொருத்தமாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நடிகர் தான் நட்டி நடராஜ். சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியவர். தமிழ் முதல் ஹிந்தி வரை பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்திருக்கின்றார்.

    அதன்பிறகு நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவில் நடிக்க வந்த இவர் தற்போது குணச்சித்திர நடிகராக நடித்து அசத்தி வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மகாராஜா திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

    அதில் யூத் திரைப்படத்தின் போது நடந்த சம்பவத்தை கூறியிருக்கின்றார். யூத் திரைப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளிவந்தது. இந்த திரைப்படத்திற்கு நட்டி நடராஜன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார். இந்த திரைப்படத்தில் வின்சென்ட் செல்வா அவர்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர் மிஷ்கின். அப்போது அவரை சண்முகராஜா என்று அழைப்பார்கள்.

    அந்த திரைப்படத்தில் ஒரு காட்சி காலை தொடங்கி மாலை வரை எடுத்து முடிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு அந்த காட்சியை மறுநாள் பார்க்கும் போது தான் அதில் ஒரு சிறிய பிழை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது நடிகையின் உடையில் கண்டினியூட்டி மிஸ்-ஆகி இருந்தது. இதை பார்த்த மிஸ்கின் உடனே ஒளிப்பதிவாளரான நடராஜிடம் கூறியிருக்கின்றார். எப்படியாவது நடிகர் விஜய்யிடம் சொல்லி அந்த காட்சியை திரும்ப எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

    இதனால் இருவருக்கும் இடையில் யார் அவரிடம் போய் சொல்வது என்று தயக்கம் நிலவி இருக்கின்றது. அப்போது மிஷ்கின் நடராஜை பிடித்து தள்ளி போய் கூறு என்று தெரிவித்து இருக்கின்றார். இதை பார்த்த நடிகர் விஜய் நடராஜிடம் ‘என்ன ஆச்சு என்று கேட்க நட்ராஜ் ஃபிலிம் பாக் ஆகிவிட்டது. அதனால் அந்த காட்சி அனைத்தையும் நாம் மறுபடியும் எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார்.

    இதை கேட்ட நடிகர் விஜய் அது நேற்று காலை முதல் மாலை வரை எடுத்தது. தற்போது மதியம் ஆகிவிட்டது, இன்று மாலை எனக்கு வேறொரு இடத்தில் அப்பாயிண்ட்மெண்ட் உள்ளது என்று கூறி இருக்கின்றார். உடனே நட்ராஜ் நேற்று ஏற்கனவே எடுத்திருப்பதால் என்னால் விரைவில் எடுத்து முடித்து விட முடியும் என்று கூறி அந்த ஷார்ட் அனைத்தையும் மாலைக்குள் எடுத்து முடித்து இருக்கின்றார் நடராஜ்.

    படப்பிடிப்பு முடிந்த பிறகு நடராஜை அழைத்த நடிகர் விஜய் பொய் சொல்ல தெரிந்தால் சொல்ல வேண்டும். எதற்காக மற்றவர்களுக்காக பழியை உங்கள் மேல் போட்டுக் கொள்கிறீர்கள் என்று கேட்டாராம். அதற்கு திருதிருவென்று தான் முழித்ததாகவும் பின்னர் மிஷ்கின் காரணமாக தான் இப்படி ஒரு தவறு ஏற்பட்டது’ என்று அவர் கூறியதாக அந்த பேட்டியில் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து இருக்கின்றார்.