பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பிய வாழ : ஓடிடி ரிலீஸ் தேதி இதோ…

vaazha 2 movie ott

Written by

in

மலையாளத் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி, இளைஞர்களைக் கவர்ந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த வாழ 2 படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆனந்த் மேனன் இயக்கத்தில், விபின் தாஸ் திரைக்கதையில் உருவான படம் வாழ. 2024ம் ஆண்டு வெளியான இப்படம் ரூ 40 கோடி வரி வசூல் செய்தது எனவே முதல் பாகம் வெற்றி பெறவே தற்போது 2ம் பாகம் ஏப் 2ம் தேதி வெளியானது. சவின் இயக்கியுள்ள இப்படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலானோர் புதுமுகங்களே. அப்படியிருந்தும் படம் இவ்வளவு பெரிய வெற்றிக்கு திரைக்கதெஇயே காரணமாக அமைந்தது. பள்ளி பருவ கால உணர்வுகள், நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கிறார்கள். பிரபல நடிகர் பசில் ஜோசப் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

சுமார் ரூ 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், திரையரங்குகளில் வெளியாகி இதுவரை ரூ 230 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஹிட் கொடுத்தது. குறிப்பாக கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றி வாகை சூடிய வாழ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் மே 8-ம் தேதி முதல் இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.