விவாகரத்துக்குப் பிறகு ஃப்ரீயா டிரெஸ் போடும் ஹன்சிகா!.. எவ்ளோ ஃப்ரீன்னு நீங்களே பாருங்க!..

Written by

in

,

கணவரை பிரிந்து விவாகரத்து செய்த நிலையில், ஹன்சிகா மோத்வானி மீண்டும் தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களால் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளார். 

குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தைத் தொடங்கிய ஹன்சிகா, பின்னர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். தமிழ் ரசிகர்களுக்கு “எங்கேயும் காதல்”, “வேலாயுதம்”, “ஒரு கல் ஒரு கண்ணாடி”, “சிங்கம் 2”, “அரண்மனை” உள்ளிட்ட படங்கள் மூலம் மிகவும் பரிச்சயமான முகமாக மாறியுள்ளார்.

hansika

தற்போது ஹன்சிகா தனது திரைப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டாலும், அதுகுறித்து விரிவாக விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தனது வேலை மற்றும் தனிப்பட்ட அமைதிக்கே முன்னுரிமை கொடுத்து வருவதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், விவாகரத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் நேர்மறையான பதிவுகளை பகிர்ந்து வந்த ஹன்சிகா, அமிர்தசரஸில் உள்ள Golden Temple கோவிலுக்குச் சென்று ஆன்மிக தரிசனம் செய்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அந்த பதிவுகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் வெள்ளை நிற  சட்டையுடன் குட்டை டவுசர் அணிந்து ஸ்டைலான தோற்றத்தில் வெளியிட்டுள்ள  அவரது புதிய ஸ்டைலிஷ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. திரைத்துறையிலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா, தனது அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.