Category: photos

  • அமெரிக்காவில் விஜய் பட ஹீரோயினுக்கு கிடைத்த கெளரவம்!.. ஆன்ட்டி ரொம்பவே ஹேப்பி!..

    அமெரிக்காவில் விஜய் பட ஹீரோயினுக்கு கிடைத்த கெளரவம்!.. ஆன்ட்டி ரொம்பவே ஹேப்பி!..

    நடிகை பூஜா ஹெக்டே சுதந்திர தினத்தன்று நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். மேலும், தன்னை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்ட சான்றிதழையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

    ph

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 44-வது ஆண்டாக நடைபெற்ற இந்திய தின அணிவகுப்பில் பூஜா ஹெக்டே மற்றும் நடிகர் அதிவி சேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த அணிவகுப்பில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    pooja

    பூஜா ஹேக்டே பகிர்ந்துள்ள பதிவில், நியூயார்க் நகரையும், அங்கு நடைபெறவுள்ள சிறப்புக் கொண்டாட்டத்தையும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டேன் என்னைச் சிறப்பித்த நியூயார்க் நகரத்தின் பொது வழக்கறிஞர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். கிடைத்த இந்த அன்பிற்குப் பிறகு, மிகுந்த பணிவுடனும் நன்றியுணர்வுடனும், அதே சமயம் புதிய உற்சாகத்துடனும் மீண்டும் எனது பணிகளைத் தொடங்கத் தயாராக உள்ளேன். இது வெறும் ஆரம்பம் தான் இனி முன்னேற்றப் பாதையில் மட்டுமே பயணிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

    hegde

    மேலும், தற்போது பூஜா ஹெக்டே விஜய்யுடன் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ZEE5 ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 21 முதல் வெளியாக உள்ளது. இதற்கிடையே ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 4’ திரைப்படத்திலும் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

    ph

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் பூஜா ஹெக்டே, தற்போது இந்த நிகழ்வில் ரசிகர்களை சந்தித்த பூஜா ஹெக்டே, அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார். நியூயார்க்கில் இந்திய சமூகத்தின் முன்னிலையில் கவுரவிக்கப்பட்டது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • லைட் வெயிட் பேபியாக மாறிய நிவேதா தாமஸ்!.. வேறமாறி டிரான்ஸ்பர்மேஷன்!..

    லைட் வெயிட் பேபியாக மாறிய நிவேதா தாமஸ்!.. வேறமாறி டிரான்ஸ்பர்மேஷன்!..

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்த நிவேதா தாமஸ்,  தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    nt

    இந்த புகைப்படங்களுடன் நிவேதா தாமஸ், ஆம்ஸ்டர்டாம் நகரின் தெருக்களில் நடந்து சென்றபோது ஒரு பூக்கடையை கடந்து சென்றதாகவும், அங்கிருந்த பூக்களின் வாசனை தோட்டம் போல இருந்ததால் நின்று ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அப்போது அங்கிருந்த ஒரு பூங்கொத்தின் நிறங்கள் தனது அம்மாவின் 32 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் புடவையை நினைவுபடுத்தியதாக நிவேதா தெரிவித்துள்ளார். அந்த தருணத்தில் தான் உடலளவில் ஆம்ஸ்டர்டாமில் இருந்தாலும், மனதளவில் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வீட்டில் இருக்கும் அலமாரிக்குள் இருந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    nt

    மேலும், சில விஷயங்கள் நம்மை வேறு சில நினைவுகளுடன் எவ்வளவு அழகாக இணைத்துவிடுகின்றன என்பதை நினைத்துப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது என்றும் நிவேதா குறிப்பிட்டுள்ளார்.

    nt

    ‘தர்பார்’ படத்திற்குப் பிறகு நிவேதா பெரும்பாலும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள இந்த பட்டுப்புடவை அணிந்து புதிய லுக்கில் உள்ள புகைப்படங்கள் தமிழ் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • ரஜினிகாந்த் படமே கிடைத்தாலும்!.. இன்ஸ்டா ரசிகர்களை பட்டினிப்போடாத ராஷி கண்ணா!..

    ரஜினிகாந்த் படமே கிடைத்தாலும்!.. இன்ஸ்டா ரசிகர்களை பட்டினிப்போடாத ராஷி கண்ணா!..

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்மன் படத்தில் நடித்து வரும் நடிகை ராஷி கண்ணா, தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

    rk

    ராஷி கண்ணா, ‘மெட்ராஸ் கஃபே’ எனும் இந்தி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  மேலும், தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் பிரபலமான ராஷி கண்ணா, அடங்கமறு, அரண்மணை 3 மற்றும் 4, துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    rk

    அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘தர்மன்’ திரைப்படத்தில் செம டிரெண்டியான ரோல் என்பதால் தான் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி குயினாக மாறி வருகிறார் என்கின்றனர். இப்படம் 2027-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியிலும் ராஷி கண்ணாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஃபர்ஸி 2, லுக்கே உள்ளிட்ட இந்தி வெப்சீரிஸ்களிலும் அவர் நடிக்கவுள்ளார்.

    rk

    ஜெயிலர் படத்தில் தமன்னா காவாலா பாடலுக்கு படு கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். அதே போல அரண்மனை 4 படத்தில் தமன்னாவுடன் இணைந்து ராஷி கண்ணா அச்சச்சோ பாடலுக்கு எக்குத்தப்பாக ஆட்டம் போட்டார். இந்நிலையில், தர்மன் படத்திலும் ராஷி கண்ணாவின் கிளாமர் டான்ஸ் கன்ஃபார்ம் என்கின்றனர்.

  • எமி ஜாக்சனா இது?… சுத்தமா கண்டுபிடிக்க முடியலயே!

    எமி ஜாக்சனா இது?… சுத்தமா கண்டுபிடிக்க முடியலயே!

    எமி ஜாக்சன்… இந்த பெயரை நியாபகம் இருக்கா ரசிகர்களே. ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியாக தமிழில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் தான்.

    இவங்களுக்கு கோலிவுட்டில் ஃபர்ஸ்ட் படம் ‘மதராசபட்டினம்’ தான். இதுலையே இளசுகளோட அதிக லைக்ஸை அள்ளி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டானார்.

    Amy Jackson 1

    ‘தாண்டவம், தங்க மகன், ஐ, 2.0, தேவி, தெறி’ என ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என்று பல ஸ்டார்களுடன் டூயட் பாடி விட்டார். கடைசியாக எமி ஜாக்சன் நடித்த ‘மிஷன் சேப்டர் 1’ 2024-ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

    Amy Jackson 2

    தற்போது, கேள்விப்பட்ட வரையில் இவர் எந்த புது தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. இன்று இன்ஸ்டாவில் எமி லேட்டஸ்ட்டா எடுத்த ஸ்டில்ஸை வெளியிட்டிருக்கிறார்.

    Amy Jackson 3

  • சூர்ப்பனகையாக நடிச்சதும் போதும்!.. சும்மா கிளாமர் போட்டோஸா போடுறாரே ரகுல் ப்ரீத் சிங்!..

    சூர்ப்பனகையாக நடிச்சதும் போதும்!.. சும்மா கிளாமர் போட்டோஸா போடுறாரே ரகுல் ப்ரீத் சிங்!..

    நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற பல மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் பகிர்ந்துள்ள புதிய கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 

    rp

    மாடலிங் துறையின் மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய ரகுல் ப்ரீத் சிங், பின்னர் தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதைதொடர்ந்து தமிழில் என்ஜிகே, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். தற்போது இந்தி திரையுலகிலும் தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    rp

    சமீபத்தில் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது ராமாயணா. நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    rp

    மேலும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங், பகிர்ந்துள்ள அப்புகைப்படங்களில் கருப்பு நிற உடையில் ஸ்டைலான தோற்றத்தில் இருக்கும் அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளிக்கொடுத்து வருகின்றனர்.

  • கவர்ச்சியாக போஸ் கொடுத்து லைக்ஸை அள்ளும் சிவாத்மிகா!

    கவர்ச்சியாக போஸ் கொடுத்து லைக்ஸை அள்ளும் சிவாத்மிகா!

    பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் தான் சிவாத்மிகா ராஜசேகர். இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.

    இதில் ஹீரோவாக கெளதம் கார்த்திக் நடித்திருந்தார். இதன் பிறகு அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’, அர்ஜுன் தாஸின் ‘பாம்’ ஆகிய படங்களில் சிவாத்மிகா நடித்தார்.

    இவரது நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் ‘ஆரோமலே’. இதில் கதாநாயகனாக கிஷன் தாஸ் நடித்திருந்தார்.

     

     

    தற்போது, சிவாத்மிகா ராஜசேகர் எக்ஸ் தளத்தில் புது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இளசுகளை லைக்ஸ் போட வைக்கிறது.

  • 35 வயதினிலே.. கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா!..

    35 வயதினிலே.. கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா!..

    நடிகை ஹன்சிகா, தனது 35-வது பிறந்தநாளை நேற்று, ஆகஸ்ட் 9-ம் தேதி கொண்டாடினார். இப்பிறந்தநாளை தனது தாயாருடன் எளிமையாகக் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 

    hm

    தமிழில் ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா, தொடர்ந்து ‘எங்கேயும் காதல்’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2’, ‘அரண்மனை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 

    motvani

    பின்னர்,ஹன்சிகா தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை 2022-ம் ஆண்டுதிருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஹன்சிகா சினிமா பயணத்தில் இருந்து சற்று விலகினார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல் ஹன்சிகாவை ரொம்பவே கஷ்டப்படுத்தியது. கணவரை பிரிந்து வாழ முடிவு செய்த ஹன்சிகா தற்போது, 2025-ம் ஆண்டு பிறந்தநாளில் அவர் பகிர்ந்திருந்த உணர்வுப்பூர்வமான  அவர்களது விவகாரத்து பதிவு மேலும் பேசுபொருளாக்கியது. விவாகரத்துக்குப் பிறகு ஹன்சிகா குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

    hm

    குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, இளம் வயதிலேயே தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த ஹன்சிகா, தற்போது தனது 35-வது வயதில் வாழ்க்கையின் மற்றொரு கட்டத்தை எதிர்கொள்கிறார். இந்த நிலையில், நேற்று தனது பிறந்தநாளை தாயுடன் எளிமையாகக் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

  • ரைசா வில்சன் என்னம்மா ஒரு சைஸா போஸ் கொடுத்துருக்காரு!.. கவர்ச்சியின் உச்சம்!..

    ரைசா வில்சன் என்னம்மா ஒரு சைஸா போஸ் கொடுத்துருக்காரு!.. கவர்ச்சியின் உச்சம்!..

    பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன், தற்போது சமூகவலைத்தளங்களில் படு அக்டிவாக இருந்து வரும் நிலையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

    ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் ஒப்பந்தமானாலும், சில படங்கள் நீண்ட காலமாக வெளியாகாமல் தாமதமாகி வருகிறது.  குறிப்பாக, ஜி.வி. பிரகாஷ் உடன் நடித்த ‘காதலிக்க யாருமில்லை’ போன்ற படங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது. அதை தொடர்ந்து, ரைசா, நோவா என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார்.

    rw

    மேலும், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்ளாமரான புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து  ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

    raiz

    இந்நிலையில், தற்போது வெள்ளை நிற ஸ்டைலிஷ் உடையில் அவர் பகிர்ந்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன.

  • கவர்ச்சியான ஸ்டில்ஸால் இளசுகளை கவரும் கீர்த்தி!

    கவர்ச்சியான ஸ்டில்ஸால் இளசுகளை கவரும் கீர்த்தி!

    ‘ஊமை விழிகள், இணைந்த கைகள், அசுரன்’ போன்ற பல படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் அருண் பாண்டியன். இவரின் மகள் தான் கீர்த்தி பாண்டியன்.

    Keerthi Pandian 1

    இவர் அறிமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கிய ‘தும்பா’ மூலம் கதையின் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு ‘அன்பிற்கினியாள், கண்ணகி, ப்ளூ ஸ்டார், கொஞ்சம் பேசினால் என்ன, அஃகேனம்’ ஆகிய படங்களில் நடித்தார்.

    Keerthi Pandian 2

    இதுமட்டுமின்றி, ‘போஸ்ட்மேன்’ என்ற வெப் சீரிஸிலும் நடித்தார். 2023-ஆம் ஆண்டு நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கீர்த்தி.

    Keerthi Pandian 3

    தற்போது, கீர்த்தி பாண்டியன் இன்ஸ்டாவில் இளசுகளை கவரும் வகையில் கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

    Keerthi Pandian 4

    Keerthi Pandian 5

  • இலங்கை கடற்கரையில் என்ஜாய் பண்ணும் GDN ஹீரோயின்!

    இலங்கை கடற்கரையில் என்ஜாய் பண்ணும் GDN ஹீரோயின்!

    துஷாரா விஜயன் அறிமுகமானது வேற படம் என்றாலும், அவருக்கு அதிக ரசிகர்களை பெற்று தந்தது ‘சார்பட்டா பரம்பரை’ தான். இதை பா.இரஞ்சித் இயக்க, ஆர்யா கதாநாயகன் ஆக நடித்திருந்தார்.

    Dushara Vijayan 1

    விரைவில் இதன் பார்ட் 2 துவங்கப்போகிறது. துஷாரா விஜயன் நடிப்பில் இரண்டு புதிய படங்கள் உருவாகியுள்ளது.

    Dushara Vijayan 2

    ஒன்று ‘ஜி.டி.என்’. இது இந்த வாரம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது. இதில் ஹீரோவாக மாதவன் நடித்துள்ளார். 

    Dushara Vijayan 3

    இன்னொரு படம் விஷாலின் ‘மகுடம்’. இது வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகப்போகிறது. இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுலா சென்ற நடிகை துஷாரா விஜயன் சில ஸ்டில்ஸை இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார்.

    Dushara Vijayan 4

    Dushara Vijayan 5

    Dushara Vijayan 6