பிரபுதேவாவின் மனைவி, மகளுடன் நடிகை ரம்பா வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்

actress ramba with prabhu deva

Written by

in

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தனது துள்ளலான நடிப்பாலும் கிளாமராலும் விரைவிலேயே முன்னணி நடிகையாக முன்னேறினார். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜீத் என அனைத்து நடிகர்களுடன் நடித்துள்ளார் இவர்.

பிரபுதேவாவுடன் விஐபி, காதலா காதலா என் இரு படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களில் பாடல்காட்சிகளில் பிரபுதேவாவுக்கு ஈடு கொடுத்து நடனத்தில் அசத்திருப்பார் ரம்பா. திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் ரம்பா. சமூக வலைதளங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து வரும் அவர், அவ்வப்போது தனது குடும்பப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருவார். அந்த வகையில், தற்போது தனது பழைய திரைக்கால நண்பரான பிரபுதேவாவை நேரில் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை நடிகை ரம்பா தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், எனது இனிய நண்பர் பிரபு மாஸ்டர் மற்றும் ஹிமானியுடன் ஒரு அருமையான சந்திப்பு என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு புகைப்படத்தில் பிரபுதேவாவின் மனைவி ஹிமானி மற்றும் அவர்களது அழகான பெண் குழந்தையும் இடம்பெற்றுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு டாக்டர் ஹிமானியைத் திருமணம் செய்துகொண்ட பிரபுதேவாவிற்கு, சமீபத்தில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

பொதுவாக தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை மீடியாக்களின் வெளிச்சத்தில் இருந்து சற்று தள்ளியே வைத்திருக்கும் பிரபுதேவா, பல வருடங்களுக்குப் பிறகு தனது மனைவி மற்றும் மகளுடன் ரம்பாவை சந்தித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.