Tag: tamil cinema news

  • நான் சொல்லாததை சொன்னதாக பரப்பினார்கள்.. 4 வருடங்களுக்கு முந்தைய பேட்டி குறித்து சாய் பல்லவி வேதனை!

    நான் சொல்லாததை சொன்னதாக பரப்பினார்கள்.. 4 வருடங்களுக்கு முந்தைய பேட்டி குறித்து சாய் பல்லவி வேதனை!

    மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த பிரேமம் படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவ்ர் சாய் பல்லவி. இன்று தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நாயகியாக நடித்து வருகிறார். குறிப்பாக இஅவ்ரது நடனத்திற்கும், இயல்பான நடிப்பிற்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.

    சமீபத்தில் சமூக வலைதளங்களில் சாய் பல்லவி குறித்த ஒரு தகவல் வேகமாகப் பரவியது. அதில், தன்னை ஒருவர் மலையாளி என்று அழைத்ததால் சாய் பல்லவி கடும் கோபமடைந்ததாகவும், நான் மலையாளி அல்ல, ஒரு தமிழ்ப் பெண் என்று அவர் பதிலளித்ததாகவும் செய்திகள் திரித்து வெளியிடப்பட்டன. இந்தத் தகவல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

    இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சாய் பல்லவி, நான் மலையாளி அல்ல, தமிழ்ப் பெண் என கூறியதை தவறாக சித்தரித்து, தன்னை மலையாளி அழைத்ததால் சாய் பல்லவி கோபமடைந்தாஎ என பொய்யான தகவல்களை பரப்பினர். 4 ஆண்டுகளுக்கு முன் தந்த பேட்டி தொடர்பான செய்திகள் தவறாக பரவியதை பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் சொல்லாத விசயங்களை சொன்னதாக என் மீது குற்றம் சுமத்தியது எனக்கு மன வலியை தந்தது. நான் கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்தவள். தமிழ் என் தாய் மொழி என்பதை மட்டுமே குறிப்பிட்டேன். மற்ற மொழிகள் மற்றும் மக்களை குறைத்து மதிப்பிடும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று வருத்தமாக பேசினார்.

  • அந்த வயசுக்கு மேல செட் ஆகாது.. கவனமா இல்லனா வம்புதான்! சிம்பு கொடுத்த வார்னிங்

    அந்த வயசுக்கு மேல செட் ஆகாது.. கவனமா இல்லனா வம்புதான்! சிம்பு கொடுத்த வார்னிங்

    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் சிம்பு. இளம் வயதிலேயே நடிப்பு, இசை, இயக்கம் என பண்முக திறமை கொண்டவர் இவர். சில ஆண்டுகளுக்கு முன் உடல் எடை விசயத்தில் கவனம் இல்லாததால் உடம் பருமனாக காணப்பட்டார். தற்போது தனது உடல்நலம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். உணவுக்கட்டுப்பாடுகள் மூலம் உடல் எடையை வெகுவாகக் குறைத்து மாநாடு , வெந்து தணிந்தது காடு போன்ற படங்களின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார்.

    இந்த நிலையில், தனது உணவு முறை குறித்தும், அசைவ உணவுகளைத் தவிர்த்ததற்கான காரணம் குறித்தும் நடிகர் சிம்பு சமீபத்தில் பேச்சிய கருத்து சமூக வலைடஹ்ளங்களில் பல்ராலும் பகிரப்பட்டு வருகிறது.

    அவர் கூறுகையில், முன்பெல்லாம் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தேன். ஆனால், அசைவம் சாப்பிடும்போது உடல் மிகவும் மந்தமாக இருப்பதை நான் உணர்ந்தேன். அதனால், தற்போது அசைவத்தை நிறுத்திவிட்டு முழுமையாகச் சைவ உணவு முறைக்கு மாறிவிட்டேன். சைவ உணவுக்கு மாறிய பிறகு, என் உடல் மிகவும் லேசாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதை என்னால் உணர முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

    இளம் வயதில் நாம் எதைச் சாப்பிட்டாலும் உடல் அதை ஏற்றுக்கொள்ளும். ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். உணவு விஷயத்தில் நாம் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் கூட, அது உடலுக்குப் பெரிய வம்பை கொண்டு வந்து சேர்த்துவிடும். என்று தனது அனுபவத்தில் இருந்து ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.

  • இரவு 2 மணிக்கு நயனின் மைண்ட்செட் இப்படிதான் இருக்கும்- விக்னேஷ் சொன்ன சீக்ரெட்

    இரவு 2 மணிக்கு நயனின் மைண்ட்செட் இப்படிதான் இருக்கும்- விக்னேஷ் சொன்ன சீக்ரெட்

    தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பின்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சுமார் 7 ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்தத் திருமணம் இந்திய அளவில் ட்ரெண்டானது. தற்போது உயிர், உலக் என இரண்டு அழகிய ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோராய் தங்களது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சினிமா, தயாரிப்பு, பிசினஸ் என இருவரும் பிஸியாகச் சுழன்று கொண்டிருந்தாலும், தங்களுக்கான பிரத்யேக நேரத்தை ஒதுக்க இவர்கள் தவறுவதில்லை.

    இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த விக்னேஷ் சிவன் கூறுகையில், நாங்கள் இருவரும் இரவில் ஏதாவது படம் பார்த்துக் கொண்டிருப்போம், அப்போது நள்ளிரவில் திடீரென ஒரு லாங் ட்ரைவ் போகலாம் என்று தோன்றும். இல்லை என்றால் எதையாவது சாப்பிடலாமா என்று தோன்றும். இரவு இரண்டு அல்லது இரண்டரை மணிக்கு, வா எங்கேயாவது போயிட்டு சாப்பிட்டு வரலாம் என்று நான் கூப்பிட்டால், நயன் வேறு எதுவும் சொல்லாமல் சரி வா என்று சொல்லி அமைதியாக என்னுடன் கிளம்பி வந்து விடுவார். அவரது மைண்ட்செட் நள்ளிரவில் அப்படித்தான் மிகவும் இயல்பாக இருக்கும் என்று கூறினார்.

    எங்களுக்கு பிலால் ஹோட்டலில் கிடைக்கும் பன் மிகவும் பிடிக்கும். நள்ளிரவில் அங்கு போனால் அங்கே எங்களுக்குத் தெரிந்த ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு ஒரு மெசேஜ் போட்டால் போதும், நாங்கள் வெளியே கூட வர வேண்டாம், அவரே எங்கள் காருக்கே வந்து பன்னை கொடுத்து விட்டுச் செல்வான் என கூறினார்.

  • முன்னணி ஹீரோக்களுக்கு இணையான ஓப்பனிங்: 1 மில்லியன் டிக்கெட்டுகள் விற்று எல் ஐ கே சாதனை

    முன்னணி ஹீரோக்களுக்கு இணையான ஓப்பனிங்: 1 மில்லியன் டிக்கெட்டுகள் விற்று எல் ஐ கே சாதனை

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் எல் ஐ கே. லவ் டுடே , டிராகன் மற்றும் ட்யூட் என தொடர்ந்து 3 பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த பிரதீப்பின் நான்காவது படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி அனிருத் இசையமைப்பில் வெளியாகி ஏற்கனவே வைரலான இப்படத்தின் பாடல்களும், வித்தியாசமான ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த எதிர்பார்ப்புகளினால் ஆன்லைனில் இப்படத்தின் டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்துள்ளது. ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களான புக் மை ஷோ மற்றும் டிஸ்ட்ரிக்ட் ஆப் ஆகியவற்றில் மட்டும் எல் ஐ கே படத்திற்காக இதுவரை சுமார் 1 மில்லியன் (10 லட்சம்) டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

    வழக்கமாக தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித், ரஜினி போன்றவர்களின் படங்களுக்குத் தான் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் வரவேற்பு இருக்கும். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே தொடர்ந்து 3 வெற்றிகள் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு, 1 மில்லியன் டிக்கெட்டுகள் புக்கிங் ஆகியிருப்பது கோலிவுட் திரை வர்த்தக வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • ஜனநாயகன் விவகாரம்: குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்

    ஜனநாயகன் விவகாரம்: குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்

    விஜய் நடிப்பில் அவரது இறுதி படமாக வெளிவர உள்ளது ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் தயாராகி பல மாதங்கள் ஆகியும் படம் வெளியாவதில் இழுப்பறி நீடிக்கிறது. இதுவரை படத்திற்கு தணிக்கை சான்று கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் படம் வெளியிடும் தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று சமூக வலைதளங்களில் ஜன நாயகன் படத்தின் காட்சிகள் லீக் ஆகின. இதனால் படக்குழு மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக படக்குழு இது குறித்து புகார் அளித்துள்ளனர். இது திரையுலகினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சூழ்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜன நாயகன் விவகரத்தில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒவ்வொரு படமும் நூற்றுக்கணக்கான மனிதர்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் உருவாகிறது. தியேட்டரில் வரும் வரை தயவுசெய்து தவறான வழியில் படம் பார்ப்பதை தவிருங்கள். இதனை வெளியிட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திறமையையும் கடின உழைப்பையும் மதியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

  • இணையத்தில் லீக்கான ஜன நாயகன் சண்டை காட்சி

    இணையத்தில் லீக்கான ஜன நாயகன் சண்டை காட்சி

    விஜய் நடிப்பில் கடைசி படமாக வெளியாகவிருக்கிறது ஜனநாயகன். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மலேசியாவில் கோலகலமாக நடைபெற்றது.

    சென்சார் பிரச்சனை இப்படம் வெளியாவதில் தொட்ர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. ஜூலை மாதம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜன நாயகன் படத்திலிருந்து சுமார் 5.30 நிமிடங்கள் ஓடக்கூடிய முழுமையான ஆக்‌ஷன் பிளாக் காட்சி அப்படியே இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ள இந்த சண்டைக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சி ஆன்லைனில் லீக் ஆனதை கண்ட விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • விஜய்யுடன் நடனமாட மறுத்த பிரபுதேவா: போக்கிரி படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த வையாபுரி!

    விஜய்யுடன் நடனமாட மறுத்த பிரபுதேவா: போக்கிரி படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த வையாபுரி!

    விஜய் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான படம் போக்கிரி. சூப்பர்ஹிட் ஆன அந்த படத்தை பிரபுதெவா இயக்கியிருந்தார். அசினி, வடிவேலு, வையாபுரி மர்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பல்ர் நடித்திருந்தனர்.

    போக்கிரி படத்தில் இடம்பெற்ற ஆடுங்கடா என்ன சுத்தி ஒரு பாடலில் விஜய்யும் பிரபுதேவாவும் இணைந்து ஆடிய நடனம் இன்றளவும் ரசிகர்களிடையே ரசிக்கப்படுகிறது. அந்த நடனக் காட்சி உருவானதற்குப் பின்னால் ஒரு சம்பவம் நடந்திருப்பதாக நகைச்சுவை நடிகர் வையாபுரி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

    போக்கிரியில் அந்த பாடல்காட்சி படமாக்கப்படும்போது விஜய்க்கு பிரபுதேவாவுடன் நடனமாட வேண்டும் என்று ஆசைபட்டார். அதனை நேரடியாகக் கூறத் தயங்கிய விஜய், பிரபுதேவாவிடம் மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய நடிகர் வையாபுரியிடம் தெரிவித்துள்ளார்.

    விஜய்யின் ஆசையைப் புரிந்துகொண்ட வையாபுரி, நடிகர் ஸ்ரீமனுடன் இணைந்து பிரபுதேவாவிடம் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு பிரபுதேவா சம்மதிக்கவில்லை. இருந்தாலும் விடாம இருவரும் தொந்தரவு செய்ததால் பிரபுதேவா சம்மதித்தார். இந்தச் செய்தி விஜய்க்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த நடனக் காட்சியின் இருவரும் அணிந்திருந்த ஆடையை கடையில் சென்று வாங்கித் தந்ததே நான்தான் என வையாபுரி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

  • டி.என்.ஏ பரிசோதனையில் வெளிவந்த உண்மை.. ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை!

    டி.என்.ஏ பரிசோதனையில் வெளிவந்த உண்மை.. ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை!

    பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்தது. இந்த நிலையில் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக்கிவிட்டு கைவிட்டுவிட்டதாகவும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மாநில மகளிர் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்

    இதனிடையே, ஜாய் கிரிசில்டாவிற்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘ராகா ரங்கராஜ்’ என அவர் பெயரிட்டார். ஆனால்,அந்தக் குழந்தை என்னுடையது அல்ல; மிரட்டி திருமணம் செய்து பணம் பறிக்கப் பார்க்கிறார். ஒருவேளை டி.என்.ஏ பரிசோதனையில் (DNA Test) அது எனது குழந்தை என நிரூபிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் அக்குழந்தையை நானே பராமரிப்பேன் என மாதம்பட்டி ரங்கராஜ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இருவருக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. அதன்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு பரிசோதனை நடைபெற்றது. தற்போது, அந்த டி.என்.ஏ பரிசோதனையின் முடிவுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி செந்தில்குமார், டி.என்.ஏ அறிக்கையின்படி ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பதை உறுதி செய்துள்ளார்.

  • பிரபுதேவாவின் மனைவி, மகளுடன் நடிகை ரம்பா வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்

    பிரபுதேவாவின் மனைவி, மகளுடன் நடிகை ரம்பா வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்

    தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தனது துள்ளலான நடிப்பாலும் கிளாமராலும் விரைவிலேயே முன்னணி நடிகையாக முன்னேறினார். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜீத் என அனைத்து நடிகர்களுடன் நடித்துள்ளார் இவர்.

    பிரபுதேவாவுடன் விஐபி, காதலா காதலா என் இரு படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களில் பாடல்காட்சிகளில் பிரபுதேவாவுக்கு ஈடு கொடுத்து நடனத்தில் அசத்திருப்பார் ரம்பா. திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் ரம்பா. சமூக வலைதளங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து வரும் அவர், அவ்வப்போது தனது குடும்பப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருவார். அந்த வகையில், தற்போது தனது பழைய திரைக்கால நண்பரான பிரபுதேவாவை நேரில் சந்தித்துள்ளார்.

    இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை நடிகை ரம்பா தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், எனது இனிய நண்பர் பிரபு மாஸ்டர் மற்றும் ஹிமானியுடன் ஒரு அருமையான சந்திப்பு என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

    இந்தச் சந்திப்பு புகைப்படத்தில் பிரபுதேவாவின் மனைவி ஹிமானி மற்றும் அவர்களது அழகான பெண் குழந்தையும் இடம்பெற்றுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு டாக்டர் ஹிமானியைத் திருமணம் செய்துகொண்ட பிரபுதேவாவிற்கு, சமீபத்தில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

    பொதுவாக தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை மீடியாக்களின் வெளிச்சத்தில் இருந்து சற்று தள்ளியே வைத்திருக்கும் பிரபுதேவா, பல வருடங்களுக்குப் பிறகு தனது மனைவி மற்றும் மகளுடன் ரம்பாவை சந்தித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • கைவிட்ட சிவா … நோ சொன்ன சிம்பு… கடைசியாக அஜித்தை தேடி ஓடும் வெங்கட் பிரபு

    கைவிட்ட சிவா … நோ சொன்ன சிம்பு… கடைசியாக அஜித்தை தேடி ஓடும் வெங்கட் பிரபு

    விஜய்யின் கோட் படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் வரது படம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் வெங்கட் பிரபு தற்போது வ்வெறொரு முயற்சியில் இருப்பது தெரியவந்துள்ளது.

    கோட் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு பிரம்மாண்ட சயின்ஸ் பிக்‌ஷன் படத்தை இயக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்தார். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளும் மும்முரமாக நடந்தன. ஆனால், படத்தின் பட்ஜெட்டை தயாரிப்பு தரப்பு ஏற்கவில்லை . அமரன் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறாததால், இந்த பட்ஜெட்டை ஏற்க சத்யஜோதி பிலிம்ஸ் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, சிவகார்த்திகேயனும் கதையில் பல மாற்றங்களைச் செய்யச் சொல்லி வெங்கட் பிரபுவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில், தயாரிப்பு தரப்புக்கு ஏற்றவாறு குறைந்த பட்ஜெட்டில் வேறு ஒரு புதிய கதையை பண்ணலாம் என எஸ்கே கூற, வெங்கட் பிரபு அப்செட் ஆகிவிட்டாராம். இது ஒருபுறமிருக்க, இதுவரை செய்யப்பட்ட முன் தயாரிப்புச் செலவுகளை திரும்பத் தருமாறு தயாரிப்புத் தரப்பும் வெங்கட் பிரபுவிடம் தயாரிப்பு தரப்பு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சிவகார்த்திகேயன் விவகாரத்தால் நொந்துபோன வெங்கட் பிரபு, அடுத்து ஹிட் நாயகனான சிம்புவிடம் சென்றுள்ளார். பிளாக்பஸ்டர் ஹிட்டான மாநாடு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என சிம்புவிடம் அவர் ஐடியா கேட்டுள்ளார். ஆனால், அந்தக் கதை முதல் பாகத்தோடு முழுமையாக முடிந்துவிட்டது. இனி எப்படி இரண்டாம் பாகம் எடுக்க முடியும்? என லாஜிக்காகக் கேள்வி எழுப்பிய சிம்பு, அந்த ஐடியாவையும் நாசூக்காக நிராகரித்துவிட்டாராம்.

    சிவா நம்ப வைத்து ஏமாற்ற, சிம்புவும் கையை விரிக்க, வேறு வழியில்லாமல் தனது கேரியரின் மிகப்பெரிய பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் வெங்கட் பிரபு. ஆம், தல அஜித்தை வைத்து மங்காத்தா 2 எடுக்கும் முடிவில் இறங்கியுள்ளார். இதற்கான கதை விவாதப் பணிகளையும் அவர் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

    ஆனால், இதில் உள்ள மிகப்பெரிய சிக்கலே அஜித்தின் சம்மதம்தான்.அஜித் தற்போது கார் ரேஸிங்கில் முழு வீச்சில் பிஸியாக இருக்கிறார். இந்தச் சூழலில், வெங்கட் பிரபுவின் ‘மங்காத்தா 2’ கதைக்கு அவர் செவி சாய்ப்பாரா? கால்ஷீட் கொடுப்பாரா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.