Author: Saranya M

  • தன் வினை தன்னைச் சுடும்!.. அழுதுகொண்டே போன அமீர்கான் மகள்.. அதுக்குள்ள டைவர்ஸா?..

    அமீர்கான் தன் 60வது பிறந்தநாளை பல பாலிவுட் பிரபலங்களுடன் கோலாகலமாக கொண்டாடி இருந்தார். மேலும், தனது மூன்றாவது திருமணத்தை பற்றியும் அறிவித்திருந்தார். இந்நிலையில் அமீர்கானின் மகள் இரா கான் கண் கலங்கிய படி காரில் ஏறிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அமீர்கான் கஜினி, லக் பை சான்ஸ், ஃபனா, ரங் தே பசந்தி, தில் சாத்தா ஹை, லகான், மேலா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தாரே ஜமீன் பர், ஜானே தூ யா ஜானே, டெல்லி பெல்லி போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார். மேலும், குயாமத் சே குயாமத் டக், ஹம் ஹெயின் ரஹி பியார் கே ஆகிய படங்களை எழுதியும் இயக்கியுமுள்ளார்.

    பாலிவுட்டில் முன்னனி ஹிரோக்களில் ஒருவரான அமீர்கான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அமீர்கானின் பிறந்த நாளை முன்னிட்டு அமீர்கான் கூலி படத்தில் நடித்திருப்பதற்கான அப்டேட்டை வெளியிட்டார் இயக்குனர் லோகேஸ் கனகராஜ்.

    நடிகர் அமீர்கானுக்கு ரீனா தத் மற்றும் கிரண் ராவ் என இரு மனைவிகள் உண்டு. அவர்கள் இருவரையும் அவர் விவாகரத்தும் செய்துவிட்டார். மேலும், தற்போது தனது 60வது பிறந்த நாளன்று அவர் 18 மாதங்களாக கௌரி ஸ்பராட் என்பவரை காதலித்து வருவதாக அறிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு அமீர்கானின் மகள் இரா கானுக்கு கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில் தன் தந்தையை சந்தித்து செல்லும் போது இரா கான் கண் கலங்கியபடி காரில் ஏறி சென்றது ரசிகர்கள் மத்தியில் பல கேள்ளிவிகள் ஏழும்பியுள்ளன. இரா கானுக்கும் அவரது கணவருக்கும் ஏதாவது பிரச்னையா என்றும் அமீர்கான் தனது மனைவிகளை விவாகரத்து செய்தது போல இரா கானின் கணவர் விவாகரத்து செய்யப் போகிறாரா என ட்ரோல்கள் பறக்கின்றன.

  • கோட் விஜய்யை போட்டுத்தாக்கிய ஓஜி சம்பவம்!.. ஆதிக் காட்டுத்தனம்!.. குட் பேட் அக்லி பாட்டு எப்படி?..

    அட்டகாசம் படத்தில் “உனக்கென்ன உனக்கென்ன” பாடலை போட்டு விஜய்க்கு எதிராக அஜித் சம்பவம் செய்ததை போல மீண்டும் ஒரு சம்பவத்தை ஓஜி சம்பவம் பாடல் மூலம் செய்திருக்கிறார். கோட் என விஜய் கடந்த ஆண்டு படம் நடித்த நிலையில், அதன் கிளைமேக்ஸில் ஒஜி என ஒரிஜினல் கேங்ஸ்டராக வந்திருப்பார். தற்போது அஜித் குட் பேட் அக்லி படத்தில் ஒஜியாக வருகிறார்.

    ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடலே ஒஜி சம்பவம் என்கிற பெயரில் தான் உருவாகியுள்ளது. போதாக்குறைக்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரும் ஸ்டூடியோவில் மைக்கை மாட்டிக் கொண்டு காட்டுத்தனமாக கத்தி பாடுகிறார்.

    தொண்டையெல்லாம் கிழியப் போகிறது என ஜி.வி. பிரகாஷ் குமார் ஏற்கனவே ப்ரோமோவில் சொன்ன நிலையில், அந்த லெவலை தாண்டி அஜித்துக்காக ரியல் ஃபேன் பா நான் என கத்தி பாடியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

    அஜித் குமாரின் அனைத்து கேங்ஸ்டர் படங்களில் இருந்தும் ஒரு தரமான சம்பவத்தை ரசிகர்களுக்கு டைம் டிராவல் செய்தது போல குட் பேட் அக்லி படத்தில் கொடுத்து ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று அஜித்தை எப்படி பார்க்க ஆசைப்படுகிறார்களோ அந்த விஷயத்தை 100 சதவீதம் பூர்த்தி செய்யும் விதமாக ஆதிக் கொடுத்திருப்பார் என்பது இந்த பாடலை பார்த்தாலே தெரிகிறது.

    துப்பாக்கி, பீரங்கி எல்லாம் வந்தாலும் ஓஜி சம்பவம் செய்யும் என பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள நிலையில், துப்பாக்கி விஜய் மற்றும் கோட் விஜய்யை டைரக்ட் அட்டாக் செய்துள்ளார் அஜித் குமார் என்கின்றனர்.

  • பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி எப்படி இருக்காரு பாருங்க!.. பிரபல கோயிலில் சாமி தரிசனம்!..

    நடிகர் பிரபுதேவா தனது இரண்டாவது மனைவி ஹிமானி சிங்குடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மூத்த நடன இயக்குனரான சுந்தரம் அவர்களுக்கு ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத், பிரபு தேவா என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் மூவருக்குமே நடனம் மற்றும் நடிப்பில் இருக்கும் திறமையால் 90களில் பல ரசிகர்களை கவர்ந்த்துள்ளனர். அதிலும் பிரபுதேவாவின் ரசிகர்கள் எண்ணற்ற அளவில் உள்ளனர்.

    பிரபுதேவா இந்து, காதலன், லவ் பேர்ட்ஸ், காதலா காதலா, பெண்ணின் மனதை தொட்டு, டபுள்ஸ், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்னி நட்சத்திரம், இதயம், ஜென்டில்மேன் போன்ற படங்களில் நடனமாடி இருந்தாலும் அவர் கதாநாயகனாக நடித்திருந்த மின்சார கனவு படத்தில் வரும் வெண்ணிலவே பாடலுக்கு சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றார்.

    டான்ஸ் மற்றும் நடிப்பை தொடர்ந்து போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். கடைசியாக அவர் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த கோட் படத்தில் நெகடிவ் ரோலிலும் அசத்தியிருந்தார்.

    பிரபுதேவாவின் முதல் மனைவி ராம்லாத், இவர்களுக்கு இரு மகன்கள் அதில் முதல் மகன் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டான். அதன் பின் பிரபுதேவாநடிகை நயந்தாராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதை தொடர்ந்து ராம்லாத் வழக்கு தொடர்ந்து பல போராட்டத்திற்கு பின்னர் தன் கணவரை நயந்தராவிடம் இருந்து மீட்டெடுத்தார். பின்னர் பிரபுதேவா ராம்லாத்தை சட்டபூர்வமாக விவாகரத்து செய்து டாக்டர் ஹிமான் சிங் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

    இந்நிலையில் பிரபு தேவா தன் இரண்டாவது மனைவி ஹிமானி சிங்குடன் கோவிலுக்கு சென்று பக்தியுடன் கடவுளை வணங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • பொறந்தநாளைக்கு கூட இப்படி புடவை கட்டலையேம்மா!.. மகளிர் தினத்துக்கு ஜிம்மில் சீன் போட்ட சஞ்சனா!..

    ரேணிகுண்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை சஞ்சனா சிங். சமீபத்தில் தனது 39 வது பிறந்தநாளை மும்மையில் வேற லெவல் பார்ட்டி உடன் கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த தொடையழகன் தெரியும்படி கொண்டாடினார்.

    கோ, ரகளைபுரம், அஞ்சான், மீகாமன், தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சக்க போடு போடு ராஜா, நாய் சேகர் ரிட்டன்ஸ், குருமூர்த்தி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். அடுத்ததாக ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் எக்ஸ் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மகளிர் தினத்தை முன்னிட்டு பல முன்னணி நடிகைகள் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு சேலை அணிந்து கொண்டு ஜிம்மில் அனைத்து விதமான ஒர்க் அவுட்டுகளையும் செய்ய முடியும் என செய்து காட்டி வீடியோவாக வெளியிட்டுள்ளார் சஞ்சனா சிங்.

    புடவை அணிந்து கொண்டு இடுப்பழகு மொத்தமும் தெரியும்படி அவர் செய்த உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் இனிமேல் இப்படியே தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என ஜொள்ளுவிட்டு வருகின்றனர். சேலை சமையல் அறைக்கு மட்டுமான உடை அல்ல எந்த இடத்தில் வேண்டுமானாலும் அதை அணிந்து கொண்டு பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என கவர்ச்சி நடிகை சொல்வது தான் மிகப்பெரிய வேடிக்கையான ஒன்று என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    சமீபத்தில் நடைபெற்ற உங்களுடைய பிறந்தநாள் விழாவுக்கு ஏன் சேலை அணிந்து கொண்டு கேக் வெட்டாமல் ஒட்டுமொத்த தொகை அழகும் தெரியும் படி ஓவர் கிளாமர் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டீர்கள். இதற்குப் பெயர்தான் ஃபேக் ஃபெமினிசம் என நெட்டிசன்கள் அடி பொளக்க ஆரம்பித்துவிட்டனர்.



  • விக்ரமன் உள்ளாடையுடன் குடியிருப்பில் அப்படி சுற்றியது ஏன்?.. மனைவி கொடுத்த பரபரப்பு விளக்கம்!..

    பிக் பாஸ் விக்ரமன் பெண்கள் அணியும் உள்ளாடையை அணிந்து கொண்டு குடியிருப்பு ஒன்றில் ஓடியதாக பரவிய காட்சிகள் பெரும் பரபரப்பை எழுப்பிய நிலையில், விக்ரமன் மனைவி அதற்கு மீடியா முன்பாக விளக்கம் கொடுத்து அந்த வீடியோவை பரப்பியவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனன் போல நீதி நேர்மை என பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விக்ரமன். அந்த சீசனில் அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்க வேண்டும் என திருமாவளவன் வரை ட்வீட் போட்டு வாக்கு சேகரித்தார்.

    ஆனால் கடைசியில் விக்ரமனுக்கு பதிலாக அசீம் அந்த சீசன் டைட்டிலை தனதாக்கி கொண்டார். விக்ரமன் மீது இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதன் பின்னர், அந்த சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில், பார்த்திபனிடம் உதவி இயக்குனராக இருந்த பிரிதி கரிகாலன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஒரு இடத்திற்கு வாடகைக்கு சென்றனர். இந்நிலையில், விக்ரமன் உள்ளாடை அணிந்தபடி இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ ஒன்று வைரலாகி அதிர்ச்சியை கிளப்பியது.

    சில செய்தி சேனல்களும் விக்ரமனின் லீலைகள் அம்பலம் என அந்த வீடியோவை வெளியிட நேற்று முழுவதும் சோஷியல் மீடியாவில் விக்ரமனுக்கு எதிராக பிக் பாஸ் ரசிகர்கள், டைட்டில் வின்னரான அசீம் என அனைவரும் ரவுண்டு கட்டினர்.

    இந்நிலையில், தனது கணவரை வைத்து தான் படம் எடுத்து வருவதாகவும் அந்த படத்திற்கான ஒத்திகைதான் அங்கே பார்க்கப்பட்டது என்றும் அவர் எந்த தவறும் செய்யவில்லை. கடந்த மே மாதம் இந்த விஷயம் நடந்தது. அதன் பின்னர் நாங்கள் அந்த ஏரியாவையும் காலி செய்து விட்டு வேறு ஒரு இடத்தில் வசித்து வருகிறோம். தற்போது திடீரென தேவையில்லாமல், எனது கணவர் விக்ரமின் மீது வீண்பழி சுமத்தியுள்ளனர் என பத்திரிகையாளர் சந்திப்பில் விக்ரமன் மனைவி கூறியுள்ளார்.

    மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்திருப்பதாகவும் விரைவில் போலீசார் இந்த வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் விக்ரமன் மற்றும் அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளனர்.

  • ச்சீ.. ச்சீ.. ச்சீ.. பிரா போட்டு பெண்ணுக்கு தொல்லை கொடுத்தது பிக் பாஸ் விக்ரமனா?.. என்ன நடந்தது

    பிக் பாஸ் விக்ரமன் பெண்கள் அணியும் உள்ளாடையை அணிந்து கொண்டு இரவு நேரத்தில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் சுற்றி தெரியும் காட்சி வைரல் ஆகி வருகிறது. மேலும் அவர் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகளை பிக் பாஸ் ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

    இயக்குனர் ராஜு முருகனின் மனைவியும் முன்னாள் சன் மியூசிக் தொகுப்பாளினியான ஹேமா சின்ஹாவுக்கு சமீபத்தில் குடியிருப்பில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிக் பாஸ் விக்ரமன் தான் அப்படி செய்ததாகவும் சர்ச்சைகள் வெடித்துள்ளன.


    சோசியல் மீடியாவில் மட்டுமின்றி சில செய்தி தொலைக்காட்சிகளிலும் விக்ரமன் பிரா அணிந்து கொண்டு பெண் வேடுமிட்டு பெண்ணுக்கு தொல்லை கொடுத்தார் என்று பரபரப்பை கிளப்பியுள்ளனர். அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், அது ஒரு படப்பிடிப்புக் காட்சி உண்மையான தகவல் தெரியாமல் சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்புகின்றன என விக்ரமன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால் அதனை உடனடியாக அவர் நீக்கிய நிலையில், மேலும், சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

    இது சினிமா சூட்டிங் அல்லது உண்மையாகவே விக்ரமன் தப்பு செய்துவிட்டாரா என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். சீக்கிரமே இதற்கான தெளிவான விளக்கம் வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே இலங்கை பெண்ணை காதலித்து விக்ரமன் ஏமாற்றியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் கிளம்பின. அவருக்கு திருமாவளவன் ஆதரவு கொடுத்தார்.

    அதன் பின்னர், ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட விக்ரமன் அந்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் விக்ரமன் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த சீசனில் கடைசியில் அசீம் டைட்டிலை வென்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

  • இதுதான் நெபோடிசம்!.. ஸ்ரீதேவி பெயரை நாறடிக்கும் மகள்!.. நடிக்கத்தெரியாதவருக்கு எத்தனை சான்ஸ்?..

    தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. அவர் மறைந்த பின்னர் அவரது இரு மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் படங்களில் நடித்து வருகின்றனர்.

    ஜான்வி கபூர் பெரிதாக நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்றாலும் தனது கவர்ச்சியை வெளிப்படுத்தி ரசிகர்களை பைத்தியம் பிடிக்க வைத்து வருகிறார். அதன் காரணமாகவே அவருக்கு பட வாய்ப்புகள் அதிக அளவில் கிடைத்து வருகின்றன.

    ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்தின் மூலம் தென்னிந்தியாவிலும் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். அடுத்து ராம்சரண் படத்திலும் அவர் நடித்து வருவது தெலுங்கு திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    ஆனால் அதே நேரத்தில் போனிகபூர் மற்றும் ஸ்ரீதேவிக்கு 2வது மகளாகப் பிறந்த நடிகை குஷி கபூர் ஆர்ச்சிலிஸ் எனும் நெட்பிளிக்ஸ் படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிக அளவில் விமர்சிக்கப்பட்டவர், அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இவானா நடித்த கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அமீர்கான் மகன் ஜுனாயத் கான் நடித்திருந்தார்.

    ஆனால், அந்த படம் பார்க்கவே சகிக்கவில்லை என ரசிகர்கள் கலாய்த்து தள்ளிவிட்டனர். இந்நிலையில், சைஃப் அலி கானின் மகன் இப்ராஹிம் அலிகான் மற்றும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் நடிப்பில் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான Nadaaniyan படத்தை பார்த்த ரசிகர்கள் இதற்கு பெயர் தான் நெப்போடிசம், நல்லாவே நடிக்கத் தெரியாத இருவரையும் படத்தில் போட்டு பல கோடி செலவு செய்து படமெடுத்து ரசிகர்களை முட்டாளாக மாற்றுகின்றனர். தலைவலி தான் மிச்சம் என வறுத்து எடுத்து வருகின்றனர்.

    தமிழில் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் பவிஷ் எப்படி ஹீரோவாக அறிமுகமாகி சொதப்பினாரோ அதே போல அங்கே ஒரு நெபோடிச குப்பை வெளியானதாக போட்டு புதைத்துவிட்டனர்.

  • டிராகன் ஹீரோயின்லாம் பிச்சை வாங்கணும்!.. இடுப்பு டாட்டூவை ரேஷ்மா பசுபுலேட்டி இப்படி காட்டுறாரே!..

    அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் வசூலை தமிழ்நாட்டில் முந்தைய நிலையில் உலக அளவில் கூடிய விரைவில் முந்தப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    டிராகன் படத்தில் பலரும் கயாடு லோஹரை கொண்டாடி வரும் நிலையில், அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்கள் அவர்கள் பங்குக்கு டிராகன் படத்தில் வரும் இடுப்பு டாட்டூ காட்சியை வேற லெவலில் வைரலாக்கி வந்தனர். இந்நிலையில் அதற்கும் தற்போது ஆப்பு வந்து விட்டதாக ரேஷ்மா பசுபுலேட்டி ரசிகர்கள் கூற அட்டகாசமான காரணம் கிடைத்து விட்டது.

    சினிமா மற்றும் சின்னத்திரைகளில் அசத்தி வரும் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி இன்ஸ்டாகிராமில் இளைஞர்களை கவரும் விதமாக தொடர்ந்து பலவித புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், விலங்கு வெப் சீரிஸ், பாக்கியலட்சுமி சீரியல் என அனைத்து விதமான சினிமா பார்மட்டுகளிலும் நடித்து வரும் ரேஷ்மாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர்.

    சுமார் 16 லட்சம் பேர் அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது வெளியிட்டுள்ள இடுப்பழகு தெரியும் விதமான ஹாட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் தனது இடுப்பில் போட்டிருக்கும் டாட்டூவை சட்டையை தூக்கி காட்டி சூடேற்றுவார். அவரை பின்னுக்குத்தள்ளும் விதமாக தனது இடுப்பு டாட்டூவை கிராப் டாப் அணிந்து காட்டி கலக்கி வருகிறார்.

    இப்படியெல்லாம் ஹாட் போட்டோக்களை அப்படியே ஆவிப்பறக்க இறக்கினால் பாவி நெஞ்சம் பதைபதைக்காதா என பசங்க அவரது போட்டோவுக்கு கீழ் கண்டபடி கமெண்ட்டுகளை வழக்கம் போல போட்டுத் தாக்கி வருகின்றனர். அந்தரங்கம் அன்லிமிடட் எனும் பாட்காஸ்ட்டில் 18 பிளஸ்ஸாக பேசிய இவர், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளிக்கும் போது தனக்கு எப்படி மேட்டர் பண்ணா பிடிக்கும் என்கிற அளவுக்கு பச்சையாக பேசி வைரலாகி வருகிறார்.

  • விஜய்க்கே சங்கு ஊதினவன்!.. சிவகார்த்திகேயன்லாம் சின்ன பையன்!.. சீறிப்பாய ரெடியாகும் சிறுத்தை!..

    விஜயின் பிகில் படத்துக்கு போட்டியாக நடிகர் கார்த்தி தனது கைதி படத்தை இறக்கி இந்தியாவையே அதிரவிட்ட சம்பவம் எல்லாம் மறக்க கூடிய ஒன்றா? மீண்டும் அதே போன்று ஒரு சம்பவத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு செய்ய தயாராகி விட்டார் நம்ம சிறுத்தை ஹீரோ என்கின்றனர்.

    தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் விஸ்வரூப வளர்ச்சியை பார்த்து பலரும் பயந்து நடுங்கி தங்கள் படத்தை அவருடன் போட்டியாக வெளியிட விரும்பாத சூழலில், கடந்த 2022 ஆம் ஆண்டு தான் செய்த சம்பவத்தை மீண்டும் செய்வேன் என்கிற உறுதியுடன் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

    சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும் கார்த்தியின் சர்தார் படமும் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியான நிலையில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் தான் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.

    இந்த ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் மதராஸி திரைப்படம் அதிகபட்சமாக தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமரன் படத்தின் அதிரி புதிரி வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எங்கேயோ உயர்ந்துவிட்ட நிலையில், அடுத்த ஆண்டு விஜய்யுடன் போட்டி போட தனது பராசக்தி படத்தை தயார் செய்து வருகிறார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தையே மிஞ்சி வெற்றி பெற்ற நிலையில், சர்தார் 2 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நிலையில், அந்த படத்தின் மீது அளப்பரிய நம்பிக்கையை கொண்டுள்ள நடிகர் கார்த்தி இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் மோத போவது உறுதி என்கின்றனர்.

    சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் முன்னதாக ஆயுத பூஜைக்கு வெளியானால் மட்டுமே இந்த மோதல் தவிர்க்கப்படும் என்றும் திரையுலக வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சர்தார் 2 படத்தில் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் மற்றும் ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்து வருகிறார்.

  • ரஜினி, அஜித் ரசிகர்கள் ஃபுல் வைப்ல இருக்காங்க!.. இன்னைக்கு டிரெண்டிங் கிங் யாருன்னு பார்த்திடலாம்!..

    தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்று ஏகப்பட்ட சினிமா அப்டேட்கள் வரிசை கட்டிக் காத்திருக்கின்றன. ஏற்கனவே திரையரங்குகளில் எட்டுக்கும் மேற்பட்ட படங்கள் இன்று வெளியாகின்றன. எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி உள்ளிட்ட ரீ ரிலீஸ் படங்களும் வெள்ளிக்கிழமை வெளியீடாக வெளியாக உள்ள நிலையில், ரஜினிகாந்தின் கூலி படத்தின் அப்டேட் மற்றும் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் உள்ளிட்டவை வெளியாகப்போகிறது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் முன்னிட்டு ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகுமா என்கிற கேள்விகளை ரஜினிகாந்த் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

    அமீர்கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் என்பதால் கண்டிப்பாக கூலி படத்தில் இருந்து இன்று வெயிட்டான சம்பவம் கிடைக்கும் என காலை முதலே ட்விட்டர் ட்ரெண்டிங்கை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.

    இன்னொரு பக்கம் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் இன்று வெளியாகும் என்கிற நம்பிக்கையுடன் அஜித் ரசிகர்களும் குட் பேட் அக்லி படத்தின் ட்ரெண்டிங்கை ட்விட்டரில் அதகளப்படுத்தி வருகின்றனர். அஜித் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே சோசியல் மீடியா கிங் யார் என்கிற போட்டி இன்று நிலவி வருகிறது.

    ஆனால், அஜித் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிரிகளாக சண்டை போடாமல் மியூச்சுவல் ஃபேன்ஸாக இருக்கும் நிலையில், இரண்டு தரப்புக்கும் இன்று செம ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் இசையில் அனிருத் குரலில் ரெட் டிராகன் பாடல் வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்துள்ள.