Category: dulquer salmaan

  • இளசுகளிடம் லைக்ஸை அள்ளும் I’m Game-ன் அருகே அருகே பாடல்!

    இளசுகளிடம் லைக்ஸை அள்ளும் I’m Game-ன் அருகே அருகே பாடல்!

    துல்கர் சல்மான் நடித்து ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கும் படம் ‘அயம் கேம்’. இதில் துல்கருக்கு ஜோடியாக ‘இதயம் முரளி, டிராகன்’ போன்ற படங்களில் நடித்த கயாடு லோஹர் டூயட் பாடி ஆடியுள்ளார்.

    இதை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியிருக்கிறார். சமீபத்தில், இதன் ட்ரெய்லர் வெளியானது.

    இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. படத்தை வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டிருக்கிறார்கள்.

    தற்போது, இதன் ‘அருகே அருகே’ என்ற பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.

  • I’m Game ட்ரெய்லர் எங்கடா?… வெயிட் பண்ணி டயர்டான துல்கர் ரசிகர்கள்!

    I’m Game ட்ரெய்லர் எங்கடா?… வெயிட் பண்ணி டயர்டான துல்கர் ரசிகர்கள்!

    மலையாள நடிகர் துல்கர் சல்மான் இன்று (ஜூலை 28-ஆம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு கேரளா மட்டுமின்றி, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

    துல்கர் சல்மான் தனது ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கொடுக்கும் வகையில் ஒரு சூப்பர் ப்ளான் போட்டிருந்தார். அதன்படி இவர் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் ‘I’m Game’ படத்தின் ட்ரெய்லரை இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார்.

    ஆனால், சொன்ன நேரத்திற்கு ட்ரெய்லர் வெளியாகவில்லை. பின், இரவு 9 மணிக்கு வெளிவரும் என்று சொல்லப்பட்டது. ரசிகர்களோ வெயிட் பண்ணி டயர்டாகி விட்டார்கள்.

    தற்போது, டெக்னிக்கல் பிரச்சனை காரணமாக ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுகிறது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  

  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் ஶ்ரீ ஶ்ரீ படத்தின் பொம்மா பொம்மா பாடல்!

    துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் ஶ்ரீ ஶ்ரீ படத்தின் பொம்மா பொம்மா பாடல்!

    துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘ஶ்ரீ ஶ்ரீ’. இந்த படத்தை இயக்குநர் ரவி நெலகுடிதி இயக்கி வருகிறார்.

    இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ‘ஜன நாயகன்’ பூஜா ஹெக்டே நடிக்கிறார். சமீபத்தில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், நாளை (ஜூலை 28-ஆம் தேதி) துல்கர் சல்மானின் பிறந்தநாள் என்பதால் இன்றே ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ரெடியாகியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ‘பொம்மா பொம்மா’ (தமிழில் ‘வானே வானே’) ரிலீஸ் ஆகியுள்ளது.

    படத்தை இந்த ஆண்டு (2026) டிசம்பர் மாதத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.