துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் ஶ்ரீ ஶ்ரீ படத்தின் பொம்மா பொம்மா பாடல்!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘ஶ்ரீ ஶ்ரீ’. இந்த படத்தை இயக்குநர் ரவி நெலகுடிதி இயக்கி வருகிறார்.

இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ‘ஜன நாயகன்’ பூஜா ஹெக்டே நடிக்கிறார். சமீபத்தில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நாளை (ஜூலை 28-ஆம் தேதி) துல்கர் சல்மானின் பிறந்தநாள் என்பதால் இன்றே ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ரெடியாகியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ‘பொம்மா பொம்மா’ (தமிழில் ‘வானே வானே’) ரிலீஸ் ஆகியுள்ளது.

படத்தை இந்த ஆண்டு (2026) டிசம்பர் மாதத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.