Category: photos

  • கருப்பு கவுனில் கவர்ந்திழுக்கும் பிரியங்கா மோகன்

    கருப்பு கவுனில் கவர்ந்திழுக்கும் பிரியங்கா மோகன்

    சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.

    முதல் படத்திலேயே தனது கியூட்டான எக்ஸ்பிரஷன்களால் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த அவர் தொடர்ந்து டான் , சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் , தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் ஜெயம் ரவியுடன் பிரதர் என முன்னணி நடிகர்களுடன் நடித்து குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோயின்கள் பட்டியலில் இணைந்தார். தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரியங்கா மோகன் சமீபத்தில் கருப்பு நிற உடை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியது.

  • வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

    வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

    தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் இவர். இவரது நடனத்திற்கென்றே தனி ரசிகர்கள் உண்டு.

    இவரது நடிப்பில் துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘ரமணா’ நட்புக்காக போன்ற பல மாபெரும் வெற்றிப் படங்களில் தனது சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பார்.

    இந்த நிலையில் தற்போது ஸ்டைலான லுக்கில் போட்டோஸ்களை சமூக வலைதளங்களில் சிம்ரன் வெளியிட்டுள்ளார். 40+ வயதில் இருக்கும் சிம்ரனின் இந்த போட்டோஸ்களை பார்த்த ரசிகர்கள் வயசானாலும் அந்த ஸ்டைல் குறையவில்லை என்று கமெண்ட் செய்துவருகின்றனர்.

  • சிலம்பரசனை நேரில் சந்தித்த யூத் படக்குழு

    சிலம்பரசனை நேரில் சந்தித்த யூத் படக்குழு

    கென் கருணாஸ் இயக்கி நடித்து கடந்த மார்ச் 19 அன்று வெளியான படம் யூத். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ல் இந்த படம் மொத்த பட்ஜெட்டே ரூ 5.5 கோடி. ஆனால் படம் இதுவரை மொத்தம் ரூ 25 கோடி வரை வசூல் செய்துள்ளது.

    இன்னும் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் இளைஞர்கள் காட்சிக்கு கட்சி கைதட்டி மகிழ்கிறார்கள். கிட்டதட்ட ஒரு புதுமுக நடிகருக்கு இவ்வளவு பெரிய வசூலா என்று திரையுலகினரே அச்சரியப்படுகின்றனர்.

    இந்த நிலையில் யூத் டீம் நடிகர் சிலம்பரசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படத்தின் நடிகர் கென் கருணாஸ் உடன் நாயகிகள் மற்றும் உடன் நடித்தவர்கள் நேரில் சென்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  • Vani bhojan: கருப்பு சேலையில் ஜொலிக்கும் வாணி போஜன் – லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

    Vani bhojan: கருப்பு சேலையில் ஜொலிக்கும் வாணி போஜன் – லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

    சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டவர் வாணி போஜன். தெய்வமகள் சீரியலின் மூலம் பலரையும் சென்றடைந்தார்.

    அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டான ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆன இவர் இன்று பிஸியான முன்னணி நாயகிகளுள் ஒருவராக உள்ளார்.


    அதனைத் தொடர்ந்து ‘லாக்கப்’, ‘மலேஷியா டு அம்னீஷியா’, சூர்யாவின் தயாரிப்பில் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’, ‘மிரள்’, ‘லவ்’, மற்றும் விக்ரம் பிரபுவுடன் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ எனத் பல படங்களில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் கருப்பு சேலை அணிந்து எட்த்த புகைப்படங்கள தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…இவானா க்யூட் போட்டோஸ்

    கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…இவானா க்யூட் போட்டோஸ்

    பாலாவின் நாச்சியார் படம் மூலம் அறிமுகமாகமானவர் நடிகை இவானா. ஆனால் லவ் டுடே படத்தின் பிரம்மாண்ட வெற்றி இஅவரி பல்ருக்கு அடையாளம் கொடுத்தது.

    லவ்டுடே வெற்றி பெற்றாலும் இவானா தொடர்ந்து திரையுலகில் காணாமல் போனார். சில படங்கள் வந்தாலும் வந்த சுவடே தெரியாமல் போனது.

    இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை இவானா, ஒரு மிகப்பெரிய கூட்டணியுடன் இணைந்துள்ளார். சிவா மனசுல சக்தி படத்திற்குப் பிறகு சுமார் 16 ஆண்டுகள் கழித்து நடிகர் ஜீவா, இயக்குநர் எம்.ராஜேஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன் .

    இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். முழுக்க முழுக்க ராஜேஷ் ஸ்டைலில் காமெடி மற்றும் காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

    விரைவில் படத்தின் டீஸர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இவானாவின் திரைப்பயணத்தில் மீண்டும் ஒரு திருப்புமுனையாக அமையும் எனத் தெரிகிறது.

  • இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய்- புகைப்படங்கள்

    இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய்- புகைப்படங்கள்

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்றுசெங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

  • ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமண புகைப்படங்கள்

    ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமண புகைப்படங்கள்

    நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய தேவரகொண்டாகவும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தார்கள். இதையடுத்து பெற்றோர்களும் சம்மதித்தை அடுத்து இருவரும் திருமணம் செய்து முடிவெடுத்தார்கள். இதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட மாளிகையில் திருமண ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே நடந்தது.

    தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தத் தருணம் ஒருவழியாக வந்துவிட்டது. பல ஆண்டுகளாகத் தங்களது காதல் விவகாரத்தை “நாங்கள் வெறும் நண்பர்கள் தான்” என்று கூறி மறைத்து வந்த நட்சத்திர ஜோடி விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, இன்று (பிப்ரவரி 26) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள லேக் பேலஸில் கரம் பிடித்தனர்.

    ராஜஸ்தானின் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில், விஜய் தேவரகொண்டா சந்தன நிறத்திலான விலையுயர்ந்த ஷெர்வானி அணிந்து கம்பீரமாகத் காட்சியளித்தார். மணமகள் ராஷ்மிகா மந்தனா, தங்க நிற வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு நிற லெஹங்கா அணிந்து தேவதை போல் ஜொலித்தார்.


    ‘கீதா கோவிந்தம்’ படத்தில் தொடங்கிய இவர்களது திரைப் பயணம், இப்போது நிஜ வாழ்க்கையிலும் வெற்றிகரமாகத் தொடங்கியிருப்பது அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா திருமண புகைப்படங்கள் இதோ…

  • Anaswara rajan: வித் லவ் அனஸ்வரா ராஜன் அழகிய புகைப்படங்கள்

    Anaswara rajan: வித் லவ் அனஸ்வரா ராஜன் அழகிய புகைப்படங்கள்

    அனஸ்வரா ராஜன் மலையாளம் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு என தென் இந்திய படங்களில் பிஸியான நடிகையாக வளர்ந்து வருகிறார்.

    அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான With Love என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்தத் படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும் சுமார் ₹25 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இவர் நடித்த Lucky என்ற படம் நேற்று (பிப்ரவரி 20) நேரடியாக JioHotstar ஓடிடி தளத்தில் வெளியானது. இது ஒரு நாய் குட்டியை மையமாகக் கொண்ட நகைச்சுவை கலந்த குடும்பத் திரைப்படமாகும்.

  • Anupama Parameswaran: சொக்க வைக்கும் அழகி அனுபமா பரமேஸ்வரன் அழகிய போட்டோஸ்

    Anupama Parameswaran: சொக்க வைக்கும் அழகி அனுபமா பரமேஸ்வரன் அழகிய போட்டோஸ்

    அனுபமா பரமேஸ்வரன் 2015-ல் வெளியான பிரேமம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்துள்ளார். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவில் இவர் தற்போது அதிக கிளாமர் வேடங்களில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் அனுபமா தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு…

  • Tamanna: விருது நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக வந்த தமன்னா

    Tamanna: விருது நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக வந்த தமன்னா

    ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் மூலம் 2கே கிட்ஸ்களிடமும் சென்றடைந்தவர் தமன்னா.

    இதற்கு முன் பல படங்கள் நடித்திருந்தலும் அப்போது கிடைக்காத புகழ் இந்த ஒரு பாடல் மூலம் இந்தியா முழுவதும் அவரை கொண்டு சென்றது.

    பொதுவாக தமன்னா விழாக்களுக்கு வரும்போது கவர்ச்சியான உடைகள் அணிந்து வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ELLE list 2026 விழாவில் கவர்ச்சியான உடை அணிந்து வந்தார்.

    அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது லைக்குகளை அள்ளி வருகின்றன.