Category: pooja hegde

  • விஜய்யின் ‘ஜன நாயகன்’-ல் நடித்தவர்கள் & பணியாற்றியவர்கள் வாங்கிய சம்பளம்?

    விஜய்யின் ‘ஜன நாயகன்’-ல் நடித்தவர்கள் & பணியாற்றியவர்கள் வாங்கிய சம்பளம்?

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடித்துள்ள படம் ‘ஜன நாயகன்’. சினிமா கேரியரில் ‘தளபதி’-யின் கடைசி படம் இதுவே.

    ஆகையால், இவரின் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் வருத்தம் தான். இன்னொரு பக்கம் நாளை (ஜூலை 23-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகப்போகும் இந்த படத்தின் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க டிக்கெட் எடுத்து கையில் வைத்திருக்கிறார்கள்.

    Jana nayagan cast

    கடைசியாக விஜய்யை பெரிய திரையில் பார்த்து கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். தற்போது, இப்படத்தில் நடித்தவர்கள் மற்றும் பணியாற்றியவர்கள் வாங்கிய சம்பளம் எவ்ளோ?-ன்னு பார்ப்போம்.

    ஹீரோ விஜய்க்கு ரூ.220 கோடியாம். இதை இயக்கியிருக்கும் இயக்குநர் ஹெச்.வினோத்திற்கு ரூ.25 கோடியாம். தளபதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3 கோடியாம். விஜய்யின் வளர்ப்பு மகளாக நடித்திருக்கும் மமிதா பைஜுவிற்கு ரூ.60 லட்சமாம். 

    H Vinoth anirudh

    வில்லனாக நடித்திருக்கும் பாபி தியோலுக்கு ரூ.3 கோடியாம். சூப்பரான பாடல்களை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு ரூ.13 கோடியாம். இதர நடிகர்கள் மற்றும் டெக்னிஷியன்களின் மொத்த சம்பளம் ரூ.8 கோடியாம்.

  • விஜய்யின் ‘ஜன நாயகன்’ இந்த தேதியில் தான் ரிலீஸாகப்போகுது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த கனடா விநியோகஸ்தர்!

    விஜய்யின் ‘ஜன நாயகன்’ இந்த தேதியில் தான் ரிலீஸாகப்போகுது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த கனடா விநியோகஸ்தர்!

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜோசப் விஜய். தமிழ் சினிமாவில் இதுவரை இவர் நடித்த 68 படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறது.

    இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் 69-வது படம் தான் ‘ஜன நாயகன்’. விஜய் அரசியலில் நுழையும்போதே இது தான் திரையுலகில் தனது கடைசி படமாக இருக்கும் என தெளிவாக சொல்லிவிட்டார்.

    ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். நெகட்டிவ் ரோலில் ஹிந்தி நடிகர் பாபி தியோல் நடித்திருக்கிறார்.

    விஜய்யின் வளர்ப்பு மகளாக மலையாள நடிகை மமிதா பைஜு நடித்திருக்கிறார். தற்போது, இந்த படம் வருகிற ஜூலை 24-ஆம் தேதி தான் வெளியாகப்போகிறது என்று கனடாவில் விநியோகம் செய்யும் ‘யோர்க் சினிமாஸ்’ நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

  • ஒரே போட்டோ… எல்லோரையும் வாயை பிளக்க வைத்த பூஜா ஹெக்டே

    ஒரே போட்டோ… எல்லோரையும் வாயை பிளக்க வைத்த பூஜா ஹெக்டே

    தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே. முதல் அபத்தின் ப்படுதோல்வி வருக்கு அடுத்தடுத்து தமிழ் படங்கள் கிடைக்கவில்லை. த்னது கவனத்தைன் பூஜா ஹெக்டே தெலுங்கில் செலுத்தினார். அங்கு அவர் நடித்த படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. குறிப்பாக அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த வைகுண்டபுரம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.

    இந்த வெற்றிகளுக்கு பின் தமிழில் விஜயுடன் பீஸ்ட், ஜனநாயகன், சூர்யாவுடன் ரெட்ரோ என நடித்தார். தற்போது பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பூஜா ஹெண்டேவின் சமீபத்ய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிரடி கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாலிவுட் திரையுலகைப் பொறுத்தவரை கடுமையான போட்டி உள்ளது. அங்கு ஜான்வி கபூர், சாரா அலிகான் போன்ற இளம் நடிகைகளுக்குப் போட்டியை சமாளிக்க வேண்டுமென்றால், கவர்ச்சி மற்றும் ஸ்டைலில் சமரசம் செய்யக்கூடாது என்பதில் பூஜா உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.