Category: pooja hegde

  • Jana Nayagan Box Office : இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ஜன நாயகன் செய்த வசூல்?

    Jana Nayagan Box Office : இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ஜன நாயகன் செய்த வசூல்?

    16 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’, சூர்யாவின் ‘கருப்பு’ போன்ற தமிழ் படங்களை விநியோகம் செய்தது வெங்கட்.கே.நாராயணாவின் ‘KVN புரொடக்ஷன்ஸ்’ தான்.

    இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் தான் ‘ஜன நாயகன்’. இதில் கதாநாயகனாக ‘தளபதி’ விஜய் நடித்திருக்கிறார். 

    தெலுங்கில் ஹிட்டான ‘பகவந்த் கேசரி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இதை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். இதில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடி ஆடியிருக்கிறார் பூஜா ஹெக்டே.

    இதற்கு இசையமைத்திருப்பது அனிருத் தான். கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை உலக அளவில் ரூ.310.03 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • கேரளாவில் இதுவரை ஜன நாயகன் செய்துள்ள வசூல் இவ்ளோவா?

    கேரளாவில் இதுவரை ஜன நாயகன் செய்துள்ள வசூல் இவ்ளோவா?

    கேரளாவில் உள்ள முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லாலுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அதேபோல் தான் அங்கு ‘தளபதி’ விஜய்-க்கும்.

    இவரது படங்கள் அங்கு வெளியானால் FDFS பார்த்து ரசித்து கொண்டாடுவார்கள் ரசிகர்கள். இதனால் கேரளாவிலும் விஜய் படங்கள் அதிக வசூல் செய்வது வழக்கம்.

    கடந்த வாரம் ஜூலை 23-ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படம் வெளியானது. இந்த படத்தை ‘வலிமை’ இயக்குநர் வினோத் தான் இயக்கியுள்ளார்.

    இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாபி தியோலும் நடித்திருக்கிறார்கள். இப்படம் இதுவரை கேரளாவில் மட்டும் ரூ.14.25 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

  • Jana Nayagan Box Office : 5 நாட்களில் விஜய்யின் ஜன நாயகன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

    Jana Nayagan Box Office : 5 நாட்களில் விஜய்யின் ஜன நாயகன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

    5 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள புதிய படம் தான் ‘ஜன நாயகன்’.

    இவரின் கடைசி படமான இது கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரைக்கு வந்தது. இதை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச்.வினோத் தான் இயக்கியிருக்கிறார்.

    இதில் விஜய்யுடன் சேர்ந்து மமிதா பைஜு, கெளதம் மேனன், பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ், நாசர், சுனில், ரேவதி, ஜி.எம்.சுந்தர், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், ஏ.எல்.அழகப்பன், ஶ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்த படம் விஜய் ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தாலும், நெகட்டிவ் விமர்சனங்களே அதிகம் வருகிறது. தற்போது, இப்படம் கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.233.24 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் ஶ்ரீ ஶ்ரீ படத்தின் பொம்மா பொம்மா பாடல்!

    துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் ஶ்ரீ ஶ்ரீ படத்தின் பொம்மா பொம்மா பாடல்!

    துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘ஶ்ரீ ஶ்ரீ’. இந்த படத்தை இயக்குநர் ரவி நெலகுடிதி இயக்கி வருகிறார்.

    இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ‘ஜன நாயகன்’ பூஜா ஹெக்டே நடிக்கிறார். சமீபத்தில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், நாளை (ஜூலை 28-ஆம் தேதி) துல்கர் சல்மானின் பிறந்தநாள் என்பதால் இன்றே ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ரெடியாகியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ‘பொம்மா பொம்மா’ (தமிழில் ‘வானே வானே’) ரிலீஸ் ஆகியுள்ளது.

    படத்தை இந்த ஆண்டு (2026) டிசம்பர் மாதத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

  • கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஜன நாயகன் ஹீரோயின்!

    கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஜன நாயகன் ஹீரோயின்!

    தமிழில் ‘ரெட்ரோ, பீஸ்ட், முகமூடி’-ன்னு குறைவான படங்களில் நடித்திருந்தாலும் பூஜா ஹெக்டேவுக்கு ஃபேன்ஸ் அதிகம் தான். அதற்காகவே இவரை ரஜினியின் ‘கூலி’ படத்தில் ‘மோனிகா’ என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட வைத்தார்கள்.

    Pooja hegde 1

    பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான படம் ‘ஜன நாயகன்’. இதில் இவர் ‘தளபதி’ விஜய்-க்கு ஜோடியாக நடித்துள்ளார். 

    Pooja hegde 2

    இது இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருக்கும் இரண்டாவது படம். ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜன நாயகன்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

    Pooja hegde 3

    இதையடுத்து பூஜா ஹெக்டே துல்கர் சல்மானின் ‘ஶ்ரீ ஶ்ரீ’ படத்தில் நடித்து வருகிறார். இன்று இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை லைக்ஸ் போட வைத்துள்ளார்.

    Pooja hegde 4

    Pooja Hegde 5

    Pooja Hegde 6

    Pooja Hegde 7

  • Jana Nayagan Box Office : 4 நாட்களில் விஜய்யின் ஜன நாயகன் செய்த வசூல் இத்தனை கோடியா?

    Jana Nayagan Box Office : 4 நாட்களில் விஜய்யின் ஜன நாயகன் செய்த வசூல் இத்தனை கோடியா?

    4 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு’ என படங்கள் பண்ணியவர் இயக்குநர் ஹெச்.வினோத்.

    இவரை அழைத்து தனது 69-வது படம், அதுவும் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து ஹிட்டான ‘பகவந்த் கேசரி’ படத்தை ரீமேக் பண்ண சொன்னார் விஜய். வினோத்தும் ஓகே சொல்லி அவர் ஸ்டைலில் கொஞ்சமும், ‘தளபதி’-யின் மாஸுக்கு தகுந்த மாதிரியும் மாற்றி பண்ண படம் தான் ‘ஜன நாயகன்’.

    இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விட்டதால், இது தான் சினிமாவில் அவருக்கு கடைசி படம். இதை இயக்கிய பெருமை வினோத்துக்கே சேரும்.

    கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இப்படத்தில் மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். விமர்சன ரீதியாக இந்த படம் பாராட்டை குவிக்கவில்லை என்றாலும், பாக்ஸ் ஆபிஸில் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.217.48 கோடி வசூல் செய்திருக்கிறது.

  • Jana Nayagan Box Office : 3 நாட்களில் விஜய்யின் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

    Jana Nayagan Box Office : 3 நாட்களில் விஜய்யின் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

    3 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்திருக்கும் படம் தான் ‘ஜன நாயகன்’.

    சமீபத்தில், தமிழக முதல்வராக பதிவியேற்ற விஜய்யின் கடைசி படம் இதுதானாம். இது கடந்த ஜூலை 23-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.

    இதில் முக்கிய வேடங்களில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், நரேன், பிரியாமணி நடித்திருக்கிறார்கள். ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு அனிருத் தான் இசையமைத்திருக்கிறார்.

    விஜய்யின் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி லைக்ஸ் போட்டு வருகிறார்கள். தற்போது, இந்த படம் கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.171.84 கோடி வசூல் செய்துள்ளதாம்.

  • Jana Nayagan Box Office : 2 நாட்களில் விஜய்யின் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

    Jana Nayagan Box Office : 2 நாட்களில் விஜய்யின் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

    2 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த ‘தளபதி’ விஜய் தான் இப்போது தமிழ்நாட்டின் CM.

    அரசியலில் நுழையும்போதே ‘ஜன நாயகன்’ தான் கடைசி படம் என்று சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து விட்டார் ‘தளபதி’. இருப்பினும் தியேட்டருக்கு சென்று இவரின் கடைசி படத்தை பார்த்து கொண்டாட வேண்டும் என்று நினைத்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கடந்த 6 மாதங்களாக வெயிட் பண்ண வைத்து விட்டது சென்சார் குழு.

    ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படம் பல பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக நேற்று முன் தினம் (ஜூலை 23-ஆம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இதில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

    இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், கடைசியாக ஒரு முறை விஜய்யை திரையில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று தான் அனைத்து ரசிகர்களும் நினைக்கிறார்கள். தற்போது, இந்த படம் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.112.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

  • கேரளாவில் மாஸ் காட்டிய தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’!

    கேரளாவில் மாஸ் காட்டிய தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’!

    தமிழ்நாட்டில் ‘தளபதி’ விஜய்-க்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதேபோல் தான் கேரளாவிலும். விஜய் நடித்திருக்கும் புதிய படம் ‘ஜன நாயகன்’.

    இப்படம் நேற்று (ஜூலை 23) தான் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியிருக்கும் விஜய்யின் கடைசி படம் இது என்பதால், அங்கையும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

    இதனால் கேரளா பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டியுள்ளார் ‘தளபதி’. கேரளாவில் இந்த படத்தை விநியோகம் செய்த ‘SSR எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் எக்ஸ் தளத்தில் இதன் முதல் நாள் வசூல் ரூ.5.80 கோடி (கேரளாவில் மட்டும்) என்று அறிவித்திருக்கிறது.

    ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.

  • Jana Nayagan Box Office : விஜய்யின் ‘ஜன நாயகன்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

    Jana Nayagan Box Office : விஜய்யின் ‘ஜன நாயகன்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

    ‘ஜன நாயகன்’ முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. ஒரு வழியாக விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ பல்வேறு பிரச்சனைகளை கடந்து நேற்று (ஜூலை 23-ஆம் தேதி) உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.

    இப்போது விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ‘துணிவு’ இயக்குநர் ஹெச்.வினோத் தான் இயக்கியுள்ளார். 

    இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தளபதியின் வளர்ப்பு மகளாக மமிதா பைஜு நடித்துள்ளார். ஹிந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.

    இப்படம் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இதன் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.78.27 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.