Category: vishal

  • Magudam Box Office : 4வது நாளில் வெறும் 12 லட்சம் வசூலித்த மகுடம்!

    Magudam Box Office : 4வது நாளில் வெறும் 12 லட்சம் வசூலித்த மகுடம்!

    4 நாட்களில் ‘மகுடம்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. ‘இரும்புத் திரை’ படத்துக்கு பிறகு தொடர்ச்சியாக தோல்வி படங்களாக கொடுத்து வந்த விஷாலுக்கு கம்பேக் கொடுத்த படம் ‘மார்க் ஆண்டனி’ தான்.

    அதன் பிறகு ‘ரத்னம்’ வெற்றிபெறவில்லை. ‘மதகஜராஜா’ பல ஆண்டுகள் காத்திருந்து லேட் ரிலீஸ் ஆகி விஷாலே எதிர்பார்க்காத ஒரு வெற்றியை பெற்றது.

    இந்த நிலையில், விஷால் இயக்குநர் சீட்டில் அமர்ந்து டைரக்ட் பண்ணதுடன், இரண்டு வேடங்களில் நடிக்கவும் செய்துள்ள படம் தான் ‘மகுடம்’. இப்படம் கடந்த வாரம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தான் வெளியிடப்பட்டது.

    படத்தை பார்த்த ஒவ்வொருவரும் போதும்டா சாமி என கதறி வரும் நிலையில் தான் ரிசல்ட் வந்த வண்ணமிருக்கிறது. தற்போது, இந்த படம் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.2.22 கோடி தான் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

  • Magudam Box Office : அடக்கடவுளே… மகுடம் 2வது நாள் வசூலும் இவ்ளோதானா?

    Magudam Box Office : அடக்கடவுளே… மகுடம் 2வது நாள் வசூலும் இவ்ளோதானா?

    2 நாட்களில் ‘மகுடம்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் பக்கா மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக கொடி கட்டி பறந்தவர் விஷால்.

    இப்போது ஆக்ஷன் கட் சொல்லி ‘மகுடம்’ படத்தின் மூலம் இயக்குநராகி விட்டார். இப்படம் நேற்று முன்தினம் தான் ரிலீஸ் ஆனது.

    இதில் விஷால் கிருபாகரன், லிங்கா என டபுள் ஆக்ஷனில் நடித்துள்ளார். கிருபாகரன் கேரக்டருக்கு ஜோடியாக துஷாராவும், லிங்கா கேரக்டருக்கு ஜோடியாக அஞ்சலியும் நடித்துள்ளனர்.

    இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல், தியேட்டருக்கு போன ரசிகர்களின் பொறுமையை ரொம்பவும் சோதித்து விட்டது. பாக்ஸ் ஆபிஸிலும் கடந்த 2 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.1.49 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. 

  • 1 கோடிய கூட நெருங்க முடியல… மகுடம் படத்தின் பரிதாப நிலை!

    1 கோடிய கூட நெருங்க முடியல… மகுடம் படத்தின் பரிதாப நிலை!

    விஷால் இயக்கி, நடித்து நேற்று (ஆகஸ்ட் 14-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான படம் தான் ‘மகுடம்’.

    இதில் விஷால் இரண்டு வேடங்களில் வலம் வந்துள்ளார். இந்த படத்தின் கதையை இயக்குநர் ரவி அரசு தான் எழுதினார்.

    ஆனால், திரைக்கதையை விஷால் எழுதி சொதப்பி விட்டார் என்று தான் பார்த்த அனைவரின் விமர்சனமாக இருக்கிறது. 

    இதன் முதல் நாள் வசூல் இந்தியாவில் மட்டும் ரூ.68 கோடி என்று தகவல் கிடைத்திருக்கிறது. ஒரு கோடிய கூட விஷாலால் நெருங்க முடியலையே, என்று அவரது ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

  • விஷாலின் இயக்குநர் அவதாரம்… வெளியானது மகுடம் மேக்கிங் வீடியோ!

    விஷாலின் இயக்குநர் அவதாரம்… வெளியானது மகுடம் மேக்கிங் வீடியோ!

    Magudam : ‘புரட்சி தளபதி’ விஷாலை நடிகராகவே நாம் பார்த்து பழகி விட்டோம். அவருடைய நீண்ட நாள் ஆசை இயக்குநர் ஆவது.

    ‘செல்லமே’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்பே அவர் அர்ஜுன் இயக்கி, நடித்த ‘வேதம்’ படத்தில் உதவி இயக்குநராக வொர்க் பண்ணியிருந்தார். 

    தற்போது, விஷாலின் ஆசை ‘மகுடம்’ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இப்படம் இன்று தான் உலகமெங்கும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. 

    இப்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். இயக்குநர் + நடிகர் என மாறி மாறி விஷால் வொர்க் பண்ணும் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

  • ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 3 படங்கள்!

    ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 3 படங்கள்!

    ஆடியன்ஸ் இந்த வாரம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி தியேட்டருக்கு போய் என்ஜாய் பண்ண மூன்று தமிழ் திரைப்படங்கள் வெளியாகப் போகிறது. ஆல்ரெடி இம்மூன்று படங்களுக்கான டிக்கெட் புக்கிங்கும் ஓபன் பண்ணியாச்சு ரசிகர்களே. அந்த 3 படங்களோட லிஸ்ட் இதோ…

    1.விஸ்வநாத் & சன்ஸ் :

    Vishwanath and sons

    இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் தான் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

    2.மகுடம் :

    Magudam

    ரவி அரசு எழுதியுள்ள கதைக்கு, விஷால் திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கும் படம் தான் ‘மகுடம்’. இதில் விஷால் டபுள் ஆக்ஷனில் நடித்திருக்கிறார். ஒரு விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலியும், இன்னொரு விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் நடித்திருக்கிறார்கள்.

    3.தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட் :

    The end of oak street

    டைனோசரை மையமாக வைத்து ஹாலிவுட்டில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் ‘தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட்’. இப்படத்தை தமிழ் மொழியிலும் டப் செய்துள்ளனர். இதை இயக்குநர் டேவிட் ராபர்ட் மிட்செல் இயக்கியுள்ளார்.

  • தமிழ் சினிமா மேலும் ஒரு சிறந்த நடிகரை இழக்கும்- தனுஷ் குறித்து விஷால் கருத்து

    தமிழ் சினிமா மேலும் ஒரு சிறந்த நடிகரை இழக்கும்- தனுஷ் குறித்து விஷால் கருத்து

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை மூலம் அறிமுகம் ஆன அவர் கிட்டத்தட்ட 50 படங்களை கடந்துவிட்டார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர் இவர். விஜய் அரசியலில் வெற்றி பெற்றதை அடுத்து பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை அதிகரித்துள்ளது. அதில் தனுஷ் முக்கியமானவர். சமீபகாலமாக தனுஷ் செயல்பாடுகள் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவதாகவே தெரிகிறது. அதனை உறுதிப்ப்பப்டுத்தும் விதமாக தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக தலைவர்களை நியமிப்பதில் ஈடுபட்டு வருகிறார். இது அவரது அரசியல் வருகையை உறுதிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் நடிகர் விஷால் தனுஷ் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், தனுஷ் அரசியலுக்கு வர உள்ளதாக நிறைய  பேச்சுக்கள் வந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருந்தால் முதலில் அவருக்கு நான் என்னுடைய   வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள்  சேவை என்ப்பது சாதாரண விசயம் இல்லை. பச்சை மையில் கையெழுத்து ப்போட்டால மக்களுக்கு அதிகமாக நல்லது செய்ய முடியும். தனுஷ் ஒரு சிறந்த நடிகர். சிறந்த இயக்குனர். இப்படிப்பட்ட ஒருவர் அரசியலுக்கு சென்றால் தமிழ் சினிமா மேலும் ஒரு சிறந்த நடிகரை இழக்கும் என்று கூறினார்.
     

  • 3 ரோல்களில் விஷால் நடித்துள்ள மகுடம் ட்ரெய்லர்!

    3 ரோல்களில் விஷால் நடித்துள்ள மகுடம் ட்ரெய்லர்!

    விஷால் மூன்று வித்தியாசமான ரோல்களில் நடித்திருக்கும் புதிய படம் தான் ‘மகுடம்’. இதற்கு கதை எழுதியிருப்பது ‘ஈட்டி, ஐங்கரன்’ இயக்குநர் ரவி அரசு தான்.

    திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் விஷால். இது தான் இயக்குநராக விஷாலுக்கு முதல் படம். ஏற்கனவே, ‘துப்பறிவாளன் 2’-வை இயக்குவதாக இருந்தது. ஆனால், அது ஆரம்பிக்கவே இல்லை.

    ‘மகுடம்’ படத்தில் 2 ஹீரோயின்ஸ் நடித்துள்ளார்கள். ஒருவர் அஞ்சலி, இன்னொருவர் துஷாரா விஜயன். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு அபினந்தன் ராமானுஜம், ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

    தற்போது, இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

  • மகுடம் சென்சார் ரிசல்ட் என்ன தெரியுமா?

    மகுடம் சென்சார் ரிசல்ட் என்ன தெரியுமா?

    விஷாலின் ஆக்ஷன் படங்களுக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ‘மதகஜராஜா’ படம் பல வருஷங்களுக்கு பிறகே ரிலீஸ் ஆச்சு.

    ஆனாலும், பெரிய ஹிட்டாயிருச்சு. ‘துப்பறிவாளன் 2’ துவங்க தாமதமாகி கொண்டே போனதால் விஷாலின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். 

    அவர்களுக்காகவே அடுத்த படமான ‘மகுடம்’-ஐ இயக்கி, நடித்து விட்டார். படமும் முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது.

    தற்போது, இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் U/A சான்றிதழ் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. படத்தை வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

  • விஷால், துஷாரா டூயட் பாடும் காத்தாக வாழப்போறோம் பாடல்!

    விஷால், துஷாரா டூயட் பாடும் காத்தாக வாழப்போறோம் பாடல்!

    விஷால் இயக்கி, நடித்திருக்கும் புது படம் ‘மகுடம்’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கிறது.

    இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய், வம்சி கிருஷ்ணா, அர்ஜை ஆகியோர் முக்கிய ரோல்களில் வலம் வரப் போகிறார்கள். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    ஆல்ரெடி ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ‘ரைஸ் ஆஃப் லிங்கா, நச்சிந்தி மச்சானே, கலங்காதே’ ஆகிய மூன்று பாடல்கள் வெளி வந்தது.

    தற்போது, இதன் நான்காவது பாடலான ‘காத்தாக வாழப்போறோம்’ ரிலீஸ் ஆகியிருக்கிறது. இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  • மகுடம் ட்ரெய்லர் ரிலீஸுக்கு நாள் குறித்த விஷால்!

    மகுடம் ட்ரெய்லர் ரிலீஸுக்கு நாள் குறித்த விஷால்!

    இதுவரை நடிகர் விஷாலை தான் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். ‘சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, பாண்டியநாடு, துப்பறிவாளன், இரும்புத்திரை’ என பல படங்களில் மாஸ் காட்டி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

    ஆனால், நாம் பார்க்காத வேறு ஒரு திறமை விஷாலிடம் உள்ளது. நடிகர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் ‘வேதம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் விஷால்.

    தற்போது, பல படங்களில் நடித்து மற்ற இயக்குநர்களிடமும் நிறைய கற்றுக் கொண்ட நடிகர் விஷால் மகுடம் படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கியிருக்கிறார். 

     

     

    இதில் அஞ்சலி, துஷாரா விஜயன் என ரெண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது, இந்த படத்தின் ட்ரெய்லரை நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7-ஆம் தேதி) வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக விஷால் அறிவித்துள்ளார்.