Category: vishal

  • ஆகஸ்ட் 14-ல் விஷாலின் மகுடம் ரிலீஸாவதில் இப்படி ஒரு சிக்கலா?

    ஆகஸ்ட் 14-ல் விஷாலின் மகுடம் ரிலீஸாவதில் இப்படி ஒரு சிக்கலா?

    விஷால் நடித்து, இயக்கியுள்ள புதிய படம் தான் ‘மகுடம்’. இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார்.

    இதே தேதியில் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ மற்றும் கவின் – நயன்தாராவின் ‘ஹாய்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாகவிருக்கிறது.

    தற்போது, ‘மகுடம்’ சொன்ன தேதியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விஷால் ரூ.50 கோடி செட்டில் செய்ய வேண்டியுள்ளதாம்.

    இன்னும் படத்தின் சாட்டிலைட் மற்றும் OTT ரைட்ஸையும் யாரும் வாங்கவில்லையாம். இதனால் பணத்தை ரெடி பண்ணுவதற்கு தாமதம் ஆகும் என்பதால், படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கலாம் என விஷால் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • ‘பாயும் புலி’ பாத்துட்டு ராஜமௌலி சாரோட உதவியாளர் சொன்ன விஷயம் எனக்கொரு பாடம்… சுவாரஸ்யத் தகவல் சொன்ன இயக்குநர் சுசீந்திரன்!

    ‘பாயும் புலி’ பாத்துட்டு ராஜமௌலி சாரோட உதவியாளர் சொன்ன விஷயம் எனக்கொரு பாடம்… சுவாரஸ்யத் தகவல் சொன்ன இயக்குநர் சுசீந்திரன்!

    தமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் சுசீந்திரன். ‘பாண்டிய நாடு’ படத்துக்கு பிறகு மீண்டும் விஷால் – சுசீந்திரன் காம்பினேஷனில் 2015-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் ‘பாயும் புலி’.

    இதில் ஹீரோயினாக காஜல் அகர்வாலும், வில்லனாக சமுத்திரக்கனியும் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியது.

    சமீபத்தில், இயக்குநர் சுசீந்திரன் கொடுத்த பேட்டியில் இந்த படம் குறித்து பேசுகையில் “‘பாண்டிய நாடு’ வந்து முதல்ல வேற ஒரு ஹீரோவுக்காக பண்ண கதை. அப்புறம் விஷாலுக்காக கொஞ்சம் மாத்தி பண்ணோம்.

    Paayum puli samuthirakani suseenthiran

    அந்த படம் நிச்சயம் வெற்றியடையும்ன்னு நான் மட்டுமில்லாம, என்னோட டெக்னீஷியன்கள் எல்லாருமே நம்புனாங்க. ஆனா, அது மிஸ்ஸானதுக்கான காரணம் நான் எழுதின அந்த வில்லன் கதாபாத்திரம் தான். நான் அதுக்கப்புறம் பண்ண ஒரு படத்தோட டிஸ்கஷனுக்கு தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி சாரோட உதவி இயக்குநராக பணியாற்றிய கண்ணன் என்பவர் வந்தார்.

    அவர் ‘பாயும் புலி’ பாத்துட்டு சொன்ன விஷயம், நீங்க சமுத்திரக்கனி கேரக்டர் பக்கம் இருந்த நியாயத்தை சொல்லியிருக்கவே கூடாது. அந்த நியாயத்தை சொல்லும்போது, அவன் ஒரு வில்லனாகமா, அவனும் ஒரு ஹீரோவாகிடுறான். ஒரு கதைல வில்லன்-ங்குறவன் வில்லனாவே இருந்தா தான் அந்த படம் வந்து வெற்றியடையும்ன்னு அவர் சொன்னார். அது வந்து எனக்கொரு பாடமா இருந்துச்சு” என்று கூறியுள்ளார்.

  • விஷாலின் ‘சிவப்பதிகாரம்’ படம் அல்ல, பாடம்… உண்மையை போட்டுடைத்த கரு.பழனியப்பன்!

    விஷாலின் ‘சிவப்பதிகாரம்’ படம் அல்ல, பாடம்… உண்மையை போட்டுடைத்த கரு.பழனியப்பன்!

    தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் கரு.பழனியப்பன். இவர் இயக்கிய முதல் படமான ‘பார்த்திபன் கனவு’ 2003-ஆம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

    இதில் ஸ்ரீகாந்த், சினேகா ஜோடியாக நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஸ்ரீகாந்தை வைத்து ‘சதுரங்கம்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் ஃபைனான்ஷியல் பிரச்சனை காரணமாக தாமதமாக தான் வெளிவந்தது.

    படமாக ரிலீஸ் ஆன வரிசையில் கரு.பழனியப்பன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன இரண்டாவது படம் ‘சிவப்பதிகாரம்’. 2006-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஷால், ரகுவரன், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இது கரு.பழனியப்பனுக்கு தோல்வி படமாக அமைந்தது. சமீபத்தில், இப்படத்தின் தோல்வி குறித்து பேட்டி ஒன்றில் கரு.பழனியப்பன் பேசுகையில் “வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு சரியாக வந்துவிட்டால் அது படம். சரியாக வரவில்லை என்றால் அது நமக்கு பாடம். படிச்சுட்டு அடுத்த படத்துக்கு நாம் சென்று விட வேண்டும்.

    நான் மோசமாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைக்கவே இல்லை. படக்குழுவினர் எல்லாருமே நல்லா வேலை செஞ்சாங்க. அந்த படத்துல நான் செஞ்ச தவறு வந்து, அதுல கொலை நடக்கும் காட்சிகளை இன்னும் கவனமாக எடுத்திருக்கணும். கொலை முக்கியம் இல்லை, கொலைக்கான காரணம் தான் முக்கியம்ன்னு நான் தவறாக நினைத்து கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

  • நான் காற்று வாங்க போனேன்!.. ஜாக்கெட்டுக்கு இல்லை!.. தமன்னா பேன்ட்டுக்கே ஜன்னல் வச்சிட்டாரே!..

    நான் காற்று வாங்க போனேன்!.. ஜாக்கெட்டுக்கு இல்லை!.. தமன்னா பேன்ட்டுக்கே ஜன்னல் வச்சிட்டாரே!..

    நடிகை தமன்னா தற்போது பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல படங்களில் பிஸியாக இருக்கும் தமன்னா தனது வித்தியாசமான ஃபேஷன் லுக்குகளாலும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறார். இந்நிலையில், தமன்னாவின் பேன்ட் டிசைனை பார்த்து பலரும் ஜொள்ளு விட ஆரம்பித்துள்ளனர்.

    நான் காற்று வாங்க போனேன்!.. ஜாக்கெட்டுக்கு இல்லை!.. தமன்னா பேன்ட்டுக்கே ஜன்னல் வச்சிட்டாரே!..

    நடிகை தமன்னா தற்போது பல புதிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து அவர் நடித்து வரும் வான் – ஃபோர்ஸ் ஆஃப் தி ஃபாரஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கான சிறப்பு காமிக் புத்தகம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அப்போது தமன்னாவின் புதிய அவதார லுக்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    நான் காற்று வாங்க போனேன்!.. ஜாக்கெட்டுக்கு இல்லை!.. தமன்னா பேன்ட்டுக்கே ஜன்னல் வச்சிட்டாரே!..

    இதனைத் தொடர்ந்து, ஏக்தா கபூர் தயாரிப்பில் உருவாகும் ராகினி 3 திரைப்படத்திலும் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரர் த்ரில்லர் வகையில் உருவாகும் இப்படத்தில் ஜுனைத் கான், நர்கிஸ் ஃபக்ரி மற்றும் ஆயுஷ் ஷர்மா உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நான் காற்று வாங்க போனேன்!.. ஜாக்கெட்டுக்கு இல்லை!.. தமன்னா பேன்ட்டுக்கே ஜன்னல் வச்சிட்டாரே!..

    இந்த புகைப்படங்களில், வெள்ளை நிற டீ-ஷர்ட்டுடன் நீல நிற ஜீன்ஸை தமன்னா அணிந்துள்ளார். அந்த பேண்டின் இடுப்புப் பகுதியில் நட்சத்திர வடிவில் செய்யப்பட்ட கட் மற்றும் அலங்காரங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த லுக்கில் தோன்றிய புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் பலரும் “ஸ்டைல் குயின்”, “கிளாமர் ஐகான்” என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், தமன்னாவின் புதிய ஃபேஷன் தேர்வு மீண்டும் ட்ரெண்டாகியுள்ளது.