Tag: ஜெய்சங்கர்

  • ஜெய்சங்கர், நாகேஷ் அதுல கெத்துதான்… ஆனா உதாரணமா எடுக்காதீங்க!

    ஜெய்சங்கர், நாகேஷ் அதுல கெத்துதான்… ஆனா உதாரணமா எடுக்காதீங்க!

    தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஜெய்சங்கர். அதே போல அந்தக் காலகட்டத்தில் நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு கொடிகட்டிப் பறந்தவர் நாகேஷ். இவர்களைப் பற்றி வியக்கத்தக்க தகவலை நடிகர் சோ பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

    என்னுடைய அனுபவத்தில் சினிமாவில் சேரணும்னு ஆசையை வச்சிக்கிட்டு வெற்றி பெற்ற இருவர்னா அதுல ஒருவர் கதாநாயகன் ஆன ஜெய்சங்கர். இன்னொருவர் நகைச்சுவை நடிகரான நாகேஷ் என்கிறார் சோ. திரையுலகிலே கதாநாயகனாக உருவெடுப்பதை மனதிலே ஒரு லட்சியமாகவே வைத்துக் கொண்டு தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு சரியான முறையில் திட்டமிட்டு சொன்னதை செய்தும் காட்டியவர் ஜெய்சங்கர்.

    அதே மாதிரி அசாத்தியமான ஒரு திறமை இருந்தால் தான் இந்த சினிமா உலகிலே முன்னேற முடியும் என்பதற்கு உதாரணமாக நான் நாகேஷைப் பார்க்கிறேன். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக தான் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை விட்டுட்டு, நாடகங்களில் நடிக்க ஆரம்பிச்சி அதுக்குப் பின்னால கொஞ்சம் கொஞ்சமாக திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று சினிமா உலகிலே ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக முன்னேறியவர் தான் நாகேஷ்.

    சினிமா உலகிலே சேர்வதற்கு இவங்க ரெண்டு பேரையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமா என்றால் நிச்சயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றுதான் நான் சொல்வேன் என்று சொன்னார் சோ. காலமும், நேரமும் ஒத்துழைத்தால் திரைப்பட வாய்ப்பு கிடைக்கும். என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவங்களுக்கும் இது பொருந்தும் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியிலே சோ தெரிவித்துள்ளார்.

  • ரெண்டு ஜெய்சங்கர் படத்தையாவது பார்த்து கதை எழுத வேண்டியதுதானே…! மிஸ்டர் எக்ஸை வறுத்த புளூசட்டை மாறன்

    ரெண்டு ஜெய்சங்கர் படத்தையாவது பார்த்து கதை எழுத வேண்டியதுதானே…! மிஸ்டர் எக்ஸை வறுத்த புளூசட்டை மாறன்

    மனு ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மிஸ்டர் எக்ஸ். இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தை பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் இப்படி சொல்கிறார்.

    இது ஒரு ஸ்பை திரில்லர் படம். படத்தோட ஆரம்பத்துல ஹீரோ ரா ஏஜென்ட்டா வாராரு. ஜி20 மாநாடு சென்னையில் நடக்குது. இந்தியாவுல நியூக்ளியர் டிவைஸ ஒரு ஏஜென்ட் பாதுகாத்து வர்றாரு. அவரையும், அந்த டிவைஸையும் கடத்திக் கொண்டு போய் வெளிநாட்டுல வச்சிடுறாங்க.

    இந்த ஏஜென்டையும், டிவைஸையும் பாதுகாப்பா கொண்டு வரணும்னு ஒரு வேலையை ஹீரோக்கிட்ட கொடுக்குறாங்க. அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. முதல் பாதியில் நிறைய கேரக்டர்கள். ஓரளவு ஓகே. 2வது பாதியில சஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸ் வச்சி, டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் வச்சி கதையைவே குழப்பிட்டாங்க. அதிலும் மெய்னா தங்கச்சி கேரக்டரைக் கொண்டு வந்து காட்டுனதுக்கு பிறகு பல்லை இளிச்சிடுது சஸ்பென்ஸ்.

    படம் ஆரம்பிச்சதுல இருந்து கடைசி வரைக்கும் டுவிஸ்ட் வைக்கிறேன் பாருன்னு கடைசில ஒரு டுவிஸ்ட் வைக்கிறாங்க. அது தேவையே இல்லாத டுவிஸ்ட். இந்த மாதிரி படங்களை எல்லாம் பார்த்துட்டு நாம வெளியே வரும்போது நம்முடைய ராணுவ வீரர்கள் தியாகம் பண்ணி இருக்கணும். இந்த மாதிரி ஏஜென்ட்டுகள், உளவாளிகள் எல்லாம் எவ்ளோ உயிரைக் கொடுத்து நம்மைக் காப்பாத்திருப்பாங்க அப்படிங்கற சந்தோஷத்தோட, திருப்தியோட வரணும். ஆனா இவங்க என்ன பண்ணிருப்பாங்கன்னா நம்ம ஏஜென்ட் எல்லாரையுமே டபுள் ஏஜென்ட் மாதிரி காட்டுறாங்க. அவங்களைப் பார்த்து பயப்படுற மாதிரி படம் எடுத்து வச்சிருக்காங்க.

    இவங்க ஹாலிவுட் மாதிரி ஸ்பை திரில்லர் படம் எடுக்கப் போறேன்னு கிளம்புனது எல்லாம் தப்பு கிடையாது. அது ரொம்ப ஈசியான வழி. நிறைய படம் ரெஃப்ரன்ஸ் இருக்கு. அதைப் பார்த்து ஒழுங்கா ஒரு கதையை எழுதி இருக்கலாம். குறைஞ்சது ரெண்டு ஜெய்சங்கர் படத்தையாவது பார்த்து கதை எழுதி இருக்கலாம். இவங்க போட்டு குழப்பி சாகடிச்சிட்டாங்க. இந்தப் படத்துக்கு எல்லாம் ஹீரோக்கு எதுக்கு பெரிய ஃபேமிலி பேக்ரவுண்டு ஸ்டோரி?

    வில்லனுக்கு எதுக்கு பிளாஷ்பேக்.? இது மாதிரி தேவையில்லாத விஷயத்தை எல்லாம் படத்துல வச்சி கடுப்பேத்தி விட்டாங்க. ஹீரோயிசம் பண்றேங்கற பேருல ஒரு சாகசம் பண்றாரு. சி4 பாம் நிலத்துல வெடிச்சா பெரிய சேதம் வரும்னு அதைக் கையிலே எடுத்துப் போய் நடுக்கடல்ல வெடிக்க வைக்காரு. அது பயங்கரமா வெடிக்கும். வெடிச்சி அடுத்த செகண்டே ஹீரோ உசுரோட வர்றாரு.

    எப்படிடா தப்பிச்சி வந்தாருன்னு பார்த்தா அவரு அண்டர்வேர்ல்டு ஸ்பெஷலிஸ்ட். தண்ணிக்குள்ள தம் கட்டி நீச்சல் அடிச்சி வருவாரு. திரைக்கதையில கோட்டை விட்டுட்டாங்க. படத்துல நிறைய கிரின்ச் சீனையா வச்சி படத்தையே காலி பண்ணிட்டாங்க. படம் முழுக்க வயிறு முட்ட பொங்கலைத் தின்னுட்டு உட்கார்ந்து பார்த்த மாதிரியே இருந்துச்சு என்கிறார் புளூசட்டை மாறன்.

  • ஜெய்சங்கரின் கண்கள் சின்னதா இருக்கு… வேணாம்னு சொன்ன ஏவிஎம்..! எந்தப் படம்னு தெரியுமா?

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் ஒரு நல்ல மனிதாபிமானி. அவர் தனது பிறந்தநாளன்று அன்னதானம் செய்வது வழக்கம். அவருக்குத் திரை உலகில் நண்பர்களே இல்லாதவர் இல்லை எனலாம். அந்தளவு மிகப்பெரிய நண்பர்கள் வட்டாரத்தைப் பெற்று இருந்தவர் ஜெய்சங்கர். அவருக்குத் தயாரிப்பாளர்கள் வரிசையில் ரொம்ப நெருக்கமாக இருந்தவர்கள் ஏவிஎம் சரவணனன், பாலசுப்பிரமணியம், எம்.குகன்.

    ஏவிஎம் தயாரிப்பில் ஜெய்சங்கர் முதலில் நடித்தது குழந்தையும் தெய்வமும். அது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்னாலேயே ஜெய்சங்கர் ஏவிஎம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்திருக்க வேண்டியது.

    அதற்காக அவருக்கு மூவி டெஸ்ட் எல்லாம் எடுத்தாங்க. தனக்குத்தான் அந்த வாய்ப்புன்னு திடமாக நம்பிக்கொண்டு இருந்தார். அந்தப் படத்தின் பெயர் அன்னை. அதில் ஜெய்சங்கர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஒரு தெலுங்aகு நடிகர். அந்தப் படத்தில் ஜெய்சங்கர் நடிக்க முடியாமல் போகக் காரணம் அவரது கண்கள் சிறியனவாக இருக்கு என்பதுதான்.

    அதனால் உணர்ச்சிகளைக் கடத்த முடியாதுன்னு சொல்லி ஏவிஎம் நிராகரிச்சிட்டாங்க. அந்தப் படத்தில் ஜெய்சங்கருக்கு ஏவிஎம் வாய்ப்பு தராததுகூட ஒருவகையில் நல்லதுதான். அந்தப் படத்தில் நடித்து இருந்தால் அவருக்கும் 2ம் கதாநாயகன் வாய்ப்புதான் கிடைத்து இருக்கும். இரவும் பகலும் படத்தில் அவர் முழுக்க முழுக்க கதாநாயகனாக நடித்து இருந்தார்.

    ஜோசப் தலியத்தின் இயக்கத்தில் ஜெய்சங்கர் நடித்த முதல் படம் இதுதான். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சதுக்கும், அன்னை படத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கும் முக்கியமான காரணம் ஜெய்சங்கரின் நல்ல மனசுதான். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

  • கமலை முழுசா நம்பிய ஜெய்சங்கர்! அவருக்கே அது ஆப்பா முடிஞ்சுடுச்சு..

    கமல் எந்த ஒரு விஷயத்திற்கு ஆதரவு கொடுத்தாலும் அந்த விஷயம் உருப்படாமலேயே போய்விடும் என பிரபல சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபலமாக அறியப்படும் தயாரிப்பாளர் கே ராஜன். ஒவ்வொரு பட விழாவின் போதும் தயாரிப்பாளர்களுக்காக எப்போதுமே குரல் கொடுப்பவர்.

    அதே நேரம் பெரிய நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை பற்றி கடுமையாக விமர்சித்து பேசுபவர். அவருடைய இந்த பேச்சுக்காகவே அனைவரும் காத்திருப்பார்கள். அந்த அளவுக்கு பெரிய நடிகர் என்று கூட பார்க்காமல் அனைவரையுமே பாரபட்சமில்லாமல் கடுமையாக விமர்சிப்பார் கே ராஜன். அந்த வகையில் ஜெய்சங்கர் விஷயத்தில் கமல் செய்த ஒரு பெரிய தவறு என்ன என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

    ஜெய்சங்கர் வண்டிக்காரன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது மிகவும் பீக்கில் இருந்தார் ஜெய்சங்கர். அந்த நேரத்தில்தான் வண்ணாரப்பேட்டையில் காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியை நான் ஆரம்பித்திருந்தேன். அந்த பள்ளியின் திறப்பு விழாவிற்கு ஜெய்சங்கரை அழைத்தேன். அதன் பிறகு பள்ளிக்கூடம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

    அதை பார்த்த ஜெய்சங்கர் தனக்கும் அப்படி ஒரு பள்ளிக்கூடத்தை கட்ட வேண்டும் என ஆசைப்பட்டு என்னிடம் வந்து கேட்டார். வளசரவாக்கத்தில் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டலாம் என முடிவு செய்திருப்பதாக ஜெய்சங்கர் கூறினார். ஆரம்பத்தில் எல்கேஜி யுகேஜி முதல் வகுப்பு இதை மட்டும் ஆரம்பியுங்கள். போகப் போக மீதி கட்டிடத்தை கட்டிவிடலாம் என்று ஐடியா கொடுத்தேன். அதேபோல ஜெய்சங்கரும் செய்தார்.

    அந்த பள்ளி திறப்பு விழாவிற்கு கமலை அழைக்கலாம் என்ற ஒரு முடிவை ஜெய்சங்கர் என்னிடம் வந்து கூறினார். அப்போது நான் வேண்டாம் என சொன்னேன். இந்த விஷயத்திற்கு எல்லாம் ஏன் கமல் என கேட்டேன் .அதற்கு ஜெய்சங்கர் என்னுடைய நல்ல நண்பர் .அதனால் தான் எனக் கூறினார். அவர் சொன்னதை போல கமல்தான் அந்த பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார் .

    krajan

    அவர் திறந்து சரியாக இரண்டு வருடத்தில் அந்த பள்ளியையே மூட வேண்டிய நிலைமையை ஆகிவிட்டது .அதனால் தான் சொல்கிறேன் கமல் எந்த விஷயத்திற்கு ஆதரவு கொடுத்தாலோ அல்லது ஒரு விஷயத்தை ஆரம்பித்தாலோ அது வந்து நல்லபடியாக முடியாது என கே ராஜன் கூறினார். இதை வைத்து நெட்டிசன்கள் வழக்கம் போல அவர்களுடைய கருத்துக்களை பதிய ஆரம்பித்து விட்டனர் .இப்பொழுது தான் திமுகவுக்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து இருக்கிறார். அப்போ வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு அழிவு காலம் தானோ என கிண்டலாக கமெண்ட்களை கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

  • ஜெய்சங்கருக்குக் கிடைக்க வேண்டிய 2 அருமையான வாய்ப்பு… ஆனால் தட்டிப் பறித்ததோ எம்ஜிஆர், ஜெமினி!

    ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் 2 மிக முக்கியமான படங்களைத் தவறவிட்டவர் ஜெய்சங்கர். இவ்வளவுக்கும் ஏவிஎம்மின் பிள்ளைகளான சரவணன், குமரன், பாலசுப்பிரமணியம் அனைவருடனும் நெருங்கிய நட்பு கொண்டவர் மக்கள் திலகம் ஜெய்சங்கர். எம்ஜிஆர் நடித்த அன்பே வா கலரில் உருவானது.

    அந்தப் படத்தில் முதலில் ஜெய்சங்கர் நடிப்பதாக இருந்தது. அவரைத் தான் ஹீரோவாகப் போடணும்னு ஏவிஎம். நினைத்தார். இதற்கிடையில் எம்ஜிஆரின் கால்ஷீட் உடனடியாகக் கிடைக்கவே அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு எம்ஜிஆரை நடிக்க வைத்தார்கள்.

    அதே போல ஜெய்சங்கர் தவற விட்ட இன்னொரு முக்கியமான படம் ராமு. ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த குழந்தையும், தெய்வமும் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனால் தனது அடுத்த படத்திலும் ஜெய்சங்கரையே ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என ஏவிஎம் நினைத்தனர்.

    இந்த நிலையில்தான் ராமு என்ற ஒரு படத்தை ஏவிஎம் எடுக்கப்போவதை ஜெமினிகணேசன் அறிந்தார். உடனே அவர் மெய்யப்பச் செட்டியாரைத் தொடர்பு கொண்டு அந்தப் படத்தில் எப்படியாவது எனக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    அப்போது நீ வாங்கற சம்பளம் அதிகம். நான் இந்தப் படத்தை சின்ன பட்ஜெட்ல எடுக்கலாம்னு நினைக்கிறேன்னு ஏவிஎம். சொன்னாராம். அதற்கு ஜெமினி நீங்க என்ன சம்பளம் கொடுக்குறீங்களோ கொடுங்க. ஆனா நான் தான் இந்தப் படத்தில ஹீரோவா நடிப்பேன்னு சொன்னாராம் ஜெமினி.

    ஜெமினி ஏற்கனவே களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்து ஹிட் கொடுத்தவர். அதனால் அவரது பேச்சைத் தட்ட முடியாத ஏவிஎம். தன்னுடைய மகன்களிடம் அந்தப் படத்தில் ஜெய்சங்கருக்குப் பதிலாக ஜெமினிகணேசனை ஒப்பந்தம் செய்யலாம்னு சொன்னார்.

    அப்பாவின் பேச்சைத் தட்ட முடியாத சரவணன், குமரனுக்கோ ஜெய்சங்கரை மாற்ற துளி கூட விருப்பமில்லை. என்றாலும் அப்பா சொன்னதை தட்டாமல் இருவரும் ஏற்றனர். அதனால்தான் ராமு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு ஜெமினிகணேசனுக்கு அமைந்தது. ஜெய்சங்கருக்கு அது மிஸ் ஆனது.

  • ரஜினியின் பெர்ஷனல் எல்லாமே தெரிந்த நடிகர்.. கடைசியில் அவருக்கே வில்லனாக மாறிட்டாரே

    தமிழ் சினிமாவில் அனைவருக்கும் ஒரு மூத்த நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த 50 ஆண்டுகளில் அவர் செய்யாத சாதனைகள் கிடையாது. அடையாத வெற்றிகள் கிடையாது. வில்லனாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த ரஜினி அதன் பிறகு தன்னுடைய அபார நடிப்பாலும் உழைப்பாலும் படிப்படியாக வளர்ந்து ஹீரோவாக முன்னேறினார்.

    ஆரம்பத்தில் ரஜினி எல்லா கெட்ட பழக்கத்திற்கும் அடிமையாக இருந்தார். அதனால் மன உளைச்சல்,அழுத்தம், உடல்நிலை மோசமாவது என இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு கட்டத்தில் அவர் பிழைப்பாரா மாட்டாரா என்ற ஒரு சூழ்நிலையிலும் ரஜினி இருந்தார். அதன் பிறகு பாலச்சந்தர், ஸ்ரீ பிரியா இவர்களின் உதவியால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஆன்மீகத்தில் இறங்கி இன்று ஒரு முழு மனிதராக மாறி இருக்கிறார்.

    அவருடைய வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் நடந்திருக்கிறது. யாருக்கும் தெரியாத சில விஷயங்களும் நடந்து இருக்கிறது. இதைப் பற்றி நடிகர் ஜெய்சங்கரிடம் நிறைய பேசுவாராம் ரஜினி. ஒய் ஜி மகேந்திரன் இதைப்பற்றி கூறும் பொழுது ரஜினிக்கும் ஜெய்சங்கருக்கும் இடையே இருந்த பாண்டிங் மிகவும் ஆச்சரியமானது. ரஜினி எல்லா விஷயங்களையும் ஜெய்சங்கரிடம் விவாதிப்பார்.

    அவருடைய பர்சனல் எல்லாவற்றை பற்றியும் ஜெய்சங்கரிடம்தான் தெரிவிப்பார். இருவரும் கிள்ளி கிள்ளி விளையாடுவார்கள். அது போல முரட்டுக்காளை படத்தில் தான் ஜெய்சங்கர் வில்லனாக புது அவதாரம் எடுத்தார். அந்த படத்திற்கு பிறகு தான் அவர் நடித்த அனைத்து படங்களும் முழு சம்பளம் கிடைத்ததாகவும் ஜெய்சங்கர் கூறினாராம்.அதற்கு முன்பு வரை அவர் ஹீரோவாக நடித்த படங்களில் சில நேரங்களில் அவருக்கு சம்பளம் பாக்கி இருக்கும்.

    jai

    jai

    அதைப்பற்றி அவர் என்றைக்குமே கவலைப்பட்டதே கிடையாது. சில நேரங்களில் சம்பளமே வேண்டாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். ஆனால் எப்பொழுது வில்லனாக நடிக்க ஆரம்பித்தாரோ அதன் பிறகு அவருடைய மார்க்கெட்டும் உயர்ந்தது. அதற்கான சம்பளமும் முழுவதுமாக எனக்கு கிடைக்க ஆரம்பித்தது என ஜெய்சங்கர் ஒய் ஜி மகேந்திரனிடம் கூறினாராம்.

  • Flash Back: ரசிகர்கள் அளவுகடந்த உற்சாகம்… ஆபரேட்டர் அறையில் போய் ஒளிந்த ஜெய்சங்கர்…!

    ஜெய்சங்கருக்கு எந்த ஆண்டு தனது படம் வெளியாகிறதோ அதுதான் தலை தீபாவளி. 1966ல் ஜேம்ஸ்பாண்டாக நடித்த வல்லவன் ஒருவன் படம் ஜெய்சங்கரின் திரையுலக வாழ்வில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். தமிழில் வெளியான முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் இதுதான்.

    தனது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ரிசல்ட் எப்படி இருக்குன்னு தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றுள்ளார் ஜெய்சங்கர். ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டம். அளவு கடந்த உற்சாகம். என்னை ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டால் படத்தை இன்டர்வெல்லுக்கு அப்புறம் நிம்மதியா பார்க்க முடியாது. அதனால் இன்டர்வெல்லுக்கு சிறிது நேரம் முன்பாகவே ஆபரேட்டர் அறையில் போய் ஜெய்சங்கர் ஒளிந்து கொண்டாராம்.

    அப்படி இருந்தும் அந்தத் தியேட்டரில் நான் படம் பார்த்தது ரசிகர்களுக்கு எப்படியோ தெரிந்து விட்டது. ஆபரேட்டர் அறையை ரசிகர்கள் சூழ்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அவங்ககிட்ட இருந்து தப்பிச்சி நான் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி தப்பித்து வீட்டுக்குப் போனேன்.

    அப்போ அந்த ஆட்டோ டிரைவர் ‘என்ன சார் படத்துல எல்லாம் நடிக்கிறீங்க… ஒரு கார் வாங்கி இருக்கக்கூடாதா?’ என கேட்டார். அந்தக் கேள்வி இன்று வரையில் என் மனதில் நிலைத்து இருக்கிறது என ஒரு பத்திரிகை பேட்டியில் ஜெய்சங்கர் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

    1966ல் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய படம் வல்லவன் ஒருவன். ஜெய்சங்கர், எல்.விஜயலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். வேதா இசை அமைத்துள்ளார். படத்தில் ஜெய்சங்கர் ஜேம்ஸ்பாண்டு மாதிரி குற்றப்புலனாய்வு அதிகாரி சங்கராக நடித்துள்ளார். தேங்காய்சீனிவாசன், மனோகர், விஜயலலிதா உள்பட பலர் நடித்துள்ளனர். கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். அம்மம்மா கன்னத்தில், பளிங்கினால் ஒரு மாளிகை, தொட்டு தொட்டு பாடவா, இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால், முத்துப் பொண்ணு வாமா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

  • சைக்கிளில் வந்த சிவகுமாருக்கு ஜெய்சங்கர் கொடுத்த உற்சாகம்… இதுக்கெல்லாம் வருத்தப்படாதே!

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அறிமுகமான காலகட்டத்தில் எப்படிப்பட்ட கலைஞராக இருந்தார் என்பதை சிவகுமார் ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

    1960களில்தான் ஒரு ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஏவிஎம்.ராஜன், ஸ்ரீகாந்த், நான் ஆகிய 5 பேரும் கதாநாயகர்களாக அறிமுகமானோம். இதுல தொடர்ந்து படங்கள் நடிக்கக்கூடிய வாய்ப்புன்னா அது ஜெய்சங்கருக்குத்தான் கிடைத்தது.

    தயாரிப்பாளர், லைட்மேன் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காத ஒரு நடிகராக ஜெய்சங்கர் இருந்தார். அனைவரின் தோள்மீதும் கைபோட்டு சர்வசாதாரணமாக அவர் பேசுவார். அதேமாதிரி மற்றவர்களைக் காயப்படுத்துகிற மாதிரியான வார்த்தை எதுவும் அவரது வாயில் இருந்து வராது. எனக்கு தெரிஞ்சி சினிமா உலகிலே எதிரிகளே இல்லாமல் இருந்த நடிகர்னா நான் ஜெய்சங்கரைச் சொல்வேன்.

    jaisankar

    jaisankar

    பல தருணங்களில் எனக்கு ஆதரவாக ஜெய்சங்கர் இருந்திருக்கிறார். நான் தொடர்ந்து பல போராட்டங்களை சந்தித்து வந்த அந்தக் காலகட்டத்தில் நடிகர் சங்க வளாகத்தில் டென்னிஸ் ஆடுவதற்காக பல முக்கியமான கதாநாயகர்கள் எல்லாம் வருவாங்க.

    அப்போது ஜெய்சங்கரும் தனது காரில் வருவார். நான் அப்போ என்னுடைய சைக்கிள்ல நடிகர் சங்க வளாகத்துக்குப் போவேன். அப்போது எனது வசதி அப்படி. எனது முகத்தில் இருந்த மாற்றத்தைப் பார்த்த ஜெய்சங்கர் ‘ஏன் சிவா வாட்டமா இருக்கே, சினிமா உலகிலே வெற்றி, தோல்வி என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது.

    உனக்கு ஒரே ஒரு நல்ல வாய்ப்பு வந்தா போதும். உன்னுடைய வாழ்க்கையே தலைகீழா மாறிடும். அதனால இதுக்கெல்லாம் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காதே’ன்னு ஆறுதல் சொன்னார் ஜெய்சங்கர். மிகுந்த மன வருத்த்தில் இருந்த எனக்கு அந்தளவுக்கு தைரியத்தைத் தந்தன என்கிறார் சிவகுமார்.

    மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.வசதியில்லாமல் சைக்கிளில் வந்த சிவகுமாரைப் பார்த்து நக்கல் பண்ணாமல், அவரது மனவேதனையை அவரது முகத்தில் குறிப்பால் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப பக்குவமாகப் பேசி உள்ளார் ஜெய்சங்கர். அதுமட்டுமல்லாமல் அவருடைய மனவேதனைக்கு மாமருந்தாக அமைந்து ஒரு நல்ல தைரியத்தைக் கொடுத்துள்ளது ஜெய்சங்கரின் பேச்சு.

  • 90ஸ்ல அந்தப் படத்தைத் தனியா பார்த்தா 1000 ரூபாய் பரிசு…! அதென்ன அப்படி ஒரு திரில்லர் மூவி?

    பேய்ப்படங்களைப் பார்ப்பது என்றால் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்குமே ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டினால் ஆர்வம் தானே. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பேய்ப்படங்களுக்கு என்று ஒரு மவுசு இருக்கத் தான் செய்கிறது.

    Also read: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸுக்கு தேதி குறித்த முருகதாஸ்!.. எஸ்.கே.23 பரபர அப்டேட்!…

    அப்போது ஜெகன் மோகினி, மாயமோகினின்னு ஆரம்பித்து இப்போது அரண்மனை 1, 2, 3, 4, சந்திரமுகி 1, 2, பேய்மாமா, முனி, காஞ்சனா1, 2, 3, 4 என தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

    அந்த வகையில் எப்போதும் பேய்ப்படங்களை மிகவும் பயப்படுபவர்கள் தான் பார்ப்பதற்கும் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் தனியாகப் போய்ப் பார்க்க மாட்டார்கள். ஒரு குரூப்பாகத் தான் போவார்கள். ஏன்னா பயம். அப்படி ஒரு பயம். இன்னும் ஒரு சிலர் குரூப்பாகப் போனாலும் கூட பேய் வரும்போதெல்லாம் பேயை விட மேலாகக் கத்திக் கூப்பாடு போடுவர்.

    இது ஏன்னா தங்கள் பயத்தைப் போக்கிக் கொள்ளத் தான். முக்கியமாக டிவியில் படத்தைப் பார்ப்பதை விட தியேட்டரில் சென்று பேய்ப்படத்தைப் பார்த்தால் தான் ஒரு தனி எபெக்ட் இருக்கும். அதிலும் திடீர் திடீர்னு மியூசிக்கே நம்மை பயமுறுத்தி விடும்.

    ஹார்ட் அட்டாக் வரும் நோயாளிகள், இருதய நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் இந்தப் படங்களைப் போய்ப் பார்ப்பதைத் தவிர்ப்பதே நல்லது. அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களைக் கதிகலங்கச் செய்த படம் ஒன்று உள்ளது.

    அது இப்போது பார்த்தாலும் நமக்குள் ரத்தமே உறைந்து விடும். அப்படி ஒரு பயம் கொண்ட சினிமா தான் என்றே சொல்ல வேண்டும். இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் கூட தனியாக உங்கள் வீட்டு டிவியில் இந்தப் படத்தைப் போட்டுப் பாருங்கள். அப்போது உங்களால் தாக்குப் பிடிக்க முடிந்தால் உண்மையிலேயே நீங்கள் தைரியசாலி தான்.

    அப்படி என்ன படம் என்று கேட்கிறீர்களா?

    13m number veedu
    13m number veedu

    13ம் நம்பர் வீடு தான். மலையாள இயக்குனர் பேபியின் இயக்கத்தில் நிழல்கள் ரவி, ஜெய்சங்கர், லலிதா குமாரி, ஸ்ரீப்ரியா, நளினிகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியுமே நமக்குத் திகிலூட்டும் வகையில் தான் இருக்கும். இப்படி எல்லாம் படம் எடுக்க முடியுமா என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.

    Also read: ஹாலிவுட் படத்தில் நடிக்கும் யோகிபாபு… அதுக்கெல்லாம் மச்சம் இருக்கணும்யா…!

    13ம் நம்பர் வீடு படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் நமக்குள் அப்படிப்பட்ட ஒரு பயத்தைத் தரும் படம் என்றால் அது இதுதான்.

    அந்த சமயத்தில் இந்தப் படத்தை யார் தனியாக தியேட்டரில் போய் பார்க்கிறார்களோ அவர்களுக்கு 1000 ரூபாய் பரிசு என்று கூட பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.

  • நாகேஷ் பண்ணிய சேட்டை… ஜெய்சங்கர், லட்சுமிக்கு இடையில் இப்படியா செஞ்சாரு?

    பிரபல தயாரிப்பாளரும் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணன் லென்ஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.

    அன்றைக்கு ஜெய்சங்கர், லட்சுமி இருவரும் இணைந்து நடித்த ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. யாரோ எழுதிய காதல் கடிதத்தை லட்சுமி தனக்கு எழுதியதாக நினைத்துக் கொண்டு ஜெய்சங்கர் பாடுவதைப் போன்ற ஒரு பாடல் இது. அந்தப் பாடலின் படப்பிடிப்பு நடுவே, நாகேஷ் ஜெய்சங்கரிடம் இந்த லட்டரை லட்சுமி உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்கன்னு கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த ஜெய்சங்கருக்கு அதிர்ச்சி.

    இதையும் படிங்க… ஏங்கடா! லட்டு மாதிரி அஜித்-விஜய் படங்கள் கிடைச்சா மிஸ் பண்ணுவேனா? ஷாக் கொடுத்த சாய் பல்லவி!..

    காரணம் அது ஒரு காதல் கடிதம். அதன் கீழ் லட்சுமி என கையெழுத்துப் போடப்பட்டு இருந்தது. லட்சுமியை உங்கிட்ட தனியா பேசணும்னு ஜெய்சங்கர் அழைத்தாராம். காதல் கடிதத்தை எழுதி நாகேஷ்ட கொடுத்து அனுப்பிருக்க? நீ செய்றது நல்லாருக்கான்னு ஆத்திரத்துடன் கேட்டுள்ளார்.

    லட்சுமிக்கு எதுவுமே புரியவில்லையாம். அதைப் படித்துப் பார்த்ததும் தான் அவருக்கே விஷயம் தெரிந்ததாம். நாகேஷ் எந்தப் படத்தில் இருந்தாலும் இதுபோன்ற குறும்புகளுக்குப் பஞ்சமே இருக்காதாம். இதை லட்சுமியே ஒரு முறை பதிவிட்டுள்ளாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    நாகேஷைப் பொருத்தவரை படப்பிடிப்பில் மட்டுமல்ல நிஜத்திலும் கலகலப்பானவர். அவர் வந்தாலே அந்த இடம் களைகட்டும்னு சொல்வாங்களே அப்படித்தான் இவரும். அதனால் அவர் என்ன செய்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க…நாடோடி மன்னன் படத்தை எடுப்போமான்னு கேட்ட விஜயகாந்த்… இது எப்போ நடந்தது?

    1971ல் கே.பாலசந்தர் இயக்கிய நூற்றுக்கு நூறு படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி உடன் இணைந்து நாகேஷூம் நடித்துள்ளார். இந்தப்படத்தில் லட்சுமியின் கேரக்டர் பெயரும் லட்சுமி தான். ரமேஷ் என்ற வேடத்தில் நாகேஷ் நடித்துள்ளார். பிரகாஷாக ஜெய்சங்கர் நடித்துள்ளார்.

    ஜெமினிகணேசன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். உங்களில் ஒருவன் நான், நான் உன்னை வாழ்த்தி, நித்தம் நித்தமொரு, உழைப்புக்கு, பூலோகமா ஆகிய பாடல்கள் உள்ளன. வி.குமார் இசை அமைத்துள்ளார். இது தவிர வீட்டுக்கு வீடு, பெண் தெய்வம் உள்பட பல படங்களில் இந்த மூவரும் நடித்துள்ளனர்.