Tag: ஜெய்சங்கர்

  • ஜெய்சங்கர் செய்ததை பாடமாக எடுத்து கொண்டேன்!.. கமல்ஹாசன் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..

    எம்.ஜி.ஆர், சிவாஜி பீக்கில் இருந்தபோதே சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு தனி ரூட்டில் பயணித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜெய்சங்கர். அந்த காலத்தில் நன்றாக படித்திருந்தும் சினிமாவில் நுழைந்த நடிகர்களில் ஜெய்சங்கர் முக்கியமானவர். அதற்கு காரணம் நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம்.

    அதோடு, தயாரிப்பாளர்களின் நடிகராக ஜெய்சங்கர் இருந்தார். சம்பள விஷயத்தில் கூட கறார் காட்ட மாட்டார். தயாரிப்பாளர் மிகவும் கஷ்டப்பட்டால் ‘படம் முடிந்து வியாபாரம் ஆனபின் கொடுங்கள்’ என சொல்லிவிடுவார். அதனால்தான், ஜெய்சங்கரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர்.

    இதையும் படிங்க: சிவாஜிக்கு அவர் எப்படியோ கேப்டனுக்கு இவரு!.. விஜயகாந்தின் காட்ஃபாதர் இவர்தானாம்!….

    அதேபோல், பல புதிய தயாரிப்பாளர்களை உருவாக்கிய நடிகர் இவர். தயாரிப்பாளரிடம் போதிய பணம் இல்லை என்றால் மற்ற நடிகர், நடிகர்களிடம் பேசி ‘படம் முடிந்தபின் உங்களுக்கு நான் சம்பளம் வாங்கி தருகிறேன். படத்தில் நடியுங்கள்’ என அவரே எல்லோரிடம் பேசி படத்தை எடுக்க உதவி செய்வார்.

    அதேபோல், தான் சம்பாதிக்கும் பணத்தில் வெளியே தெரியாமல் பலருக்கும் உதவிகள் செய்திருக்கிறார். மேலும், படப்பிடிப்பில் எப்போதும் கலகலப்பாக இருப்பார். நடிகைகளிடம் மிகவும் டீசண்ட்டாக நடந்து கொள்வார். யாருக்கேனும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர் உதவி செய்வதையே காட்டிக்கொள்ளாமல் உதவி செய்வார். இதற்கு உதாரணமாக கமல்ஹாசனே ஒரு சம்பவத்தை சொல்லி இருக்கிறார்.

    இதையும் படிங்க: ரூம் விஷயத்தில் புதிய வெடியை கிள்ளி போட்ட பாட்டி… அடுத்த ரவுண்ட் என்ன நடக்குமோ?

    ஒருபடத்தில் அவருடன் இணைந்து நடித்து கொண்டிருந்தேன். படப்பிடிப்பு முடிந்ததும் அவரை அழைத்து செல்ல கார் வந்துவிட்டது. ஆனால், எனக்கு கார் வரவில்லை. அதை பார்த்ததும் என்னிடம் வந்து ‘நான் உன்னை வீட்டில் விட்டு விட்டு போகிறேன்’ என அவர் சொல்லி இருந்தால் அவர் எனக்கு உதவி செய்கிறார் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர் அதை செய்யவில்லை.

    என்னிடம் வந்த ஜெய்சங்கர் ‘கமல் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும். காரில் பேசிக்கொண்டே போகலாம். அப்படியே உன்னை வீட்டில் விட்டுவிடுகிறேன்’ என சொல்லி அழைத்து போனார். உதவி செய்கிறோம் என்பது கூட மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என அவர் நினைத்தது என்னை ஆச்சர்யப்படுத்தியது. எனது வாழ்க்கையில் அதை ஒரு பாடமாகவும் கற்றுக்கொண்டேன்’ என சொல்லி இருக்கிறார் கமல்ஹாசன்.

  • எம்.ஜி.ஆர் பார்முலாவை பின்பற்றும் சூப்பர்ஸ்டார்… அடுத்த வில்லன் யார் தெரியுமா?..

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடித்த வில்லன்கள் குறித்து பிரபல விநியோகஸ்தர் தேனி கண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    பைரவி படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஸ்ரீகாந்த் நடித்து இருப்பார். அந்த சமயத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாகவும் பரபரப்பாக நடித்து வந்த காலம். இவருக்கு அடுத்தபடியாக ரஜினி படங்களில் செந்தாமரை முக்கியமான வில்லன். மூன்று முகம் படத்தில் செம மாஸாக நடித்து இருந்தார். ரஜினிக்கு சவால்விடும் வகையில் மீசையை முறுக்கி என் பேரைச் சொன்னா கருவில இருக்குற குழந்தையும் வாயைப் பொத்திக்கிடும்னு சொல்வார்.

    இதையும் படிங்க...லோகேஷ் போல நான் இல்லை… கோட் பட டிரைலரில் குறித்து வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்…

    அதற்கு ரஜினி அதே குழந்தை என் பேரைச் சொன்னா தன் வாயையும் பொத்திக்கிட்டு அவங்க அம்மா வாயையும் பொத்திக்கிடும்னு சொல்வார். எம்ஜிஆர் எப்படின்னா, தன்னோட நடிக்கும் சக கலைஞர்களோட பாத்திரம் பலமா இருக்கணும். அப்போ தான் தன்னோட கேரக்டர் பேசப்படும்னு உறுதியா இருந்தார். இது தான் எம்ஜிஆர் பார்முலா. இதைத் தான் ரஜினியும் பின்பற்றினார்.

    முரட்டுக்காளை படத்தில் கதை தயாரானதும் யார் வில்லன் என பலரும் பேசி வந்தார்கள். இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க ஜெய்சங்கரை தேர்ந்தெடுத்தார்களாம். ஆனால் அவரை எப்படி அந்த வேடத்தில் நடிக்க வைப்பது? அவர் கதாநாயகனாக நடித்துக் கொண்டு இருக்கிறாரே என்று சங்கோஜப்பட்டார்களாம். ஆனால், அந்தக் கதையை சொன்னதும் ஓகே என்று சொல்லிவிட்டாராம் ஜெய்சங்கர்.

    அந்த விஷயத்தில் ரஜினி உறுதியாக சொன்னாராம். எந்த விளம்பரத்திலும் என்னோட படத்தைப் பெரிதாகவும், ஜெய்சங்கரின் படத்தை சின்னதாகவும் போடக்கூடாது என்றாராம். படத்திலும் ஜெய்சங்கருக்கு ரொம்பவே முக்கியத்துவம் தரும் வகையில் கேரக்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

    சண்டைக்காட்சிகளிலும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஜூடோ ரத்னம் எடுத்திருப்பார். ரஜினிக்கும், ஜெய்சங்கருக்கும் சமபலத்துடன் மோதுவது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கும். அது ஒரு டிரெய்ன் பைட். உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி அது. கேமரா வியூவும் டெக்னிகலாக எடுக்கப்பட்டது. இந்தக்காட்சியில் ஜெய்சங்கரும், ரஜினியும் டூப் போடாமல் நடித்தார்களாம்.

    இதையும் படிங்க...எல்லோரும் பயந்த டைட்டில்!.. துணிச்சலாக நடிச்ச ரஜினிகாந்த்!.. அஜித்துக்கும் வாழ்க்கை கொடுத்த படம்!

    அந்த வகையில் மிஸ்டர் பாரத் படத்தில் சத்யராஜ், பாட்ஷா படத்தில் ரகுவரன் இருவரும் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்கள். தமிழ்த்திரை உலகில் ரஜினியை அடித்து விட்டு கைதட்டல் வாங்கிய ஒரே வில்லன் ரகுவரன் தான். மார்க் அண்டனி என்ற அந்தக் கேரக்டர் டெரராக இருக்கும். படையப்பா படத்தில் வில்லியாக நடித்தவர் ரம்யா கிருஷ்ணன்.

    அடுத்த படத்தில் சத்யராஜ் வில்லனாக வரலாம் என்றும் பேசப்படுகிறது. சத்யராஜ் நடிக்கவே மாட்டார். அதைத் தவிர்ப்பதற்காக 5 கோடி கொடுத்தால் தான் நான் நடிப்பேன் என்று கூட சொல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • அருமையான வாய்ப்பை எம்ஜிஆருக்காக விட்டுக் கொடுத்த ஜெய்சங்கர்… எந்தப் படத்திற்கு தெரியுமா?

    எம்ஜிஆர், சிவாஜியின் காலகட்டத்தில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு நடிப்பில் மாஸ் காட்டியவர் நடிகர் ஜெய்சங்கர். இவரது நடிப்புக்கு தாய்க்குலங்களின் ஆதரவு அதிகம். தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான நடிகர். இவர் நடித்த படங்கள் நஷ்டமே வராதாம். அதே போல கொடுத்த சம்பளத்தை வாங்கிக் கொள்வாராம். இவர் ஒருமுறை எம்ஜிஆருக்காக தனக்கு வந்த ஒரு அருமையான சினிமா வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளார். எப்படி என்று பார்ப்போமா…

    இரவும் பகலும், பஞ்சவர்ணக்கிளி, நீ எங்க வீட்டுப் பெண், குழந்தையும்; தெய்வமும் என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்றும் அழைக்கப்பட்டார்.

    ஒருமுறை எம்ஜிஆருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். அந்தப் படத்தில் நடிக்க முதல் நாளில் படப்பிடிப்புக்குச் சென்றார் ஜெய்சங்கர். 3 மணி நேரம் காத்திருந்தார். ஆனாலும் படப்பிடிப்பு தொடங்கவில்லையாம். இது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாம்.

    Anbe vaa
    Anbe vaa

    தன்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். ஒரு படத்திற்கு இவ்வளவு நேரம் என்னால் ஒதுக்க முடியாது என்று முடிவு செய்த அவர் அந்த நாளே படத்தில் இருந்து விலகிக்கொண்டாராம். அதனால் எம்ஜிஆர் அவர் மீது வருத்தத்தில் இருந்தாராம்.

    இந்த நிலையில் தான் அந்த அருமையான வாய்ப்பும் ஜெய்சங்கருக்கு வந்தது. அது ஏவிஎம் நிறுவனத்தின் அன்பே வா பட வாய்ப்பு. இந்தப் படத்தில் முதலில் ஜெய்சங்கர் தான் நடிப்பதாக இருந்ததாம். அதனால் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமும் ஆகி விட்டார். அதே நேரம் அந்தப் படத்திற்கான கதையைக் கேட்ட எம்ஜிஆருக்கு அந்தப் படத்தில் நடிக்க ஆசை வந்ததாம். இதை அறிந்த ஜெய்சங்கர் எம்ஜிஆருக்காக தான் நடிக்க இருந்த அந்தப் படத்தை விட்டுக்கொடுத்தாராம்.

    சிலர் பழிக்குப் பழி வாங்குவார்கள். ஆனால் ஜெய்சங்கர் அப்படியல்ல. முட்டினாலும், மோதினாலும் அடுத்தவருக்காக விட்டுக் கொடுப்பதில் வள்ளல்.

  • சம்பள பாக்கியா? நோ டென்சன்!.. சம்பளமே இல்லையா?.. நோ மென்சன்! இவர்தான் ரியல் ஹீரோ!..

    தமிழ்த்திரை உலகில் வெள்ளிக்கிழமை ஹீரோ, தென்னகத்து ஜேம்ஸ்பாண்டு என்று அன்போடு அழைக்கப்படுபவர் ஜெய்சங்கர். இவர் 70களில் வருடத்திற்குப் பத்து படங்கள் நடிப்பாராம். இவரது படங்கள் எல்லாமே வெள்ளிக்கிழமை தான் ரிலீஸ் ஆகுமாம். அதனால் தான் இவருக்கு அந்தப் பெயரே வந்தது.

    இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமே வராதாம். தாய்மார்களின் மத்தியில் பேராதரவு பெற்ற நடிகர். இவர் நடித்த துப்பறியும் படங்கள் எல்லாமே ஹாலிவுட்டில் நடிக்கும் ஜேம்ஸ்பாண்டு படங்களுக்கு நிகராக இருப்பதால், இவரை தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்றும் சினிமா வட்டாரத்தினர் அழைத்தனர். சிஐடி சங்கர் படமே அதற்கு சாட்சி.

    CID Sankar
    CID Sankar

    இவரைப்பற்றி, பிரபல சினிமா வசனகர்த்தாவும், இயக்குனருமான சித்ராலயா கோபு இவ்வாறு சொல்கிறார்.

    70களில் எல்லாம் சில லட்சங்கள் இருந்தால் போதும். தரமான படங்கள் தயாரித்து நல்ல லாபம் பார்த்துவிடலாம். இதற்குக் காரணமே அப்போது கொடிகட்டிப் பறந்த நடிகர்கள் தான். ஜெய்சங்கர், முத்துராமன் போன்றவர்கள் தான் என்று சொல்லும் இவர் குறிப்பாக ஜெய்சங்கரைப் பற்றி இப்படி சொல்கிறார்.

    ஜெய்சங்கர் தங்கமான இதயம் கொண்டவர். 70களில் வருடா வருடம் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொடுத்தார். இவர் கேட்கும் சம்பளமும் குறைவு. அந்தக் குறைந்த சம்பளத்திலும் பாக்கின்னா, அதையும் கேட்கவே மாட்டாராம். அவங்களுக்கு என்ன கஷ்டமோ, தர முடியாம இருக்காங்கன்னு சொல்வாராம். அது மட்டுமல்லாமல், கிடைக்கும்போது தரட்டும்னு அப்படியே இருந்துவிடுவாராம். அவர்களைப் போய் பாக்கிய கொடு, பாக்கிய கொடுன்னு டார்ச்சர் பண்ண மாட்டாராம்.

    அதே போல அவர்களுக்கு பணம் கிடைத்தும் தராமல் போனாலும் பரவாயில்லை என்று விட்டுவிடுவாராம். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரிலாக்ஸாக இருப்பாராம்.

    இதையும் படிங்க… நடிகர் திலகத்துக்கு நடிப்பின் மீது ஆசை வர காரணம் என்ன தெரியுமா?!. அட இது தெரியாம போச்சே!…

    அதே போல கால்ஷீட் விஷயத்தில் சொதப்ப மாட்டார். சொன்ன நேரத்துக்குக் கரெக்டா வந்துவிடுவார். அதே மாதிரி இந்த வில்லனைப் போடுங்க. அந்த நடிகையைப் போடுங்கன்னும் சொல்லவே மாட்டாராம். தான் உண்டு. தன் வேலை உண்டுன்னு கடமையே கண்ணா இருப்பாராம். இப்படியும் நடிகர்கள் அந்தக்காலத்தில் இருந்தார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறார் ஜெய்சங்கர்.

  • அந்த நடிகருடன் படு கிளாமராக நடித்த ஜெயலலிதா!.. தியேட்டரில் அலைமோதிய கூட்டம்!..

    1970களில் எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்தபடியாக முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெமினிகணேசன் தங்களுக்கு என ஒவ்வொரு பாதையை வகுத்துக்கொண்டு வெற்றி நடைபோட்டனர்.

    வெள்ளிக்கிழமை தோறும் ஸ்பை திரில்லர் படங்களைக் கொடுத்த ஜெய்சங்கரின் படங்களில் ஒன்று தான் வைரம். பெயருக்கு ஏற்றாற்போல வைரத்தைக் கைப்பற்றும் கதை தான் வைரம். 1972ல் வெளியான விக்டோரியா நம்பர் 203 என்ற இந்திப் படத்தின் ரீமேக்காக வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. இந்தியில் சாய்ராபானு கவர்ச்சியில் தாராளம் காட்டினார். இதே போல தமிழில் ஜெயலலிதா கேபரே டான்ஸ் ஆடி படுகவர்ச்சியாக நடித்தார். இதற்காகவே வைரம் படத்திற்கு கூட்டம் அலைமோதியது.

    Vairam movie
    Vairam movie

    கர்நாடகாவின் கோலாரில் இந்தப் படம் செம மாஸ் ஹிட் அடித்தது. இந்தப்படத்தின்  உரிமை கண்ணதாசனிடம் இருப்பதை அறிந்து தயாரிப்பாளர்கள் பலர் அவரிடம் வாங்க போட்டி போட்டார்களாம். ஜெய்சங்கர் நடித்த படங்களில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஆக்ஷன், சஸ்பென்ஸ், காமெடி, திரில்லர் என அனைத்தும் கலந்த காமெடி படம் இது. டி.ஆர்.ராமண்ணா இயக்கியுள்ளார்.

    படத்தின் கதை இதுதான். குதிரை வண்டியை ஓட்டுபவராக சகஸ்ரநாமன் வருகிறார். ஒரு கும்பல் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வதைப் பார்க்கிறார். இதைப் பார்த்ததால் கொலை பழி இவர் மீது விழுகிறது.

    கும்பலில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் குதிரை வண்டியில் ஒரு பையில் வைரத்தை ஒளித்து வைக்கிறான். வண்டி ஓட்டுநரின் மகள் ஜெயலலிதா. அவளோ தந்தை சிறை சென்ற பின் ஆண் வேடம் போட்டு ஊர் சுற்றி பிழைப்பு நடத்துகிறாள். இவர் பணக்கார கும்பல் தலைவரின் மகன் ஜெய்சங்கரை சந்திக்கிறாள்.

    இதையும் படிங்க… எங்களால முடியாது ராசா… தக் லைஃபில் இருந்து கழண்ட அடுத்த நடிகர்… போச்சா!

    இருவரும் காதலிக்கின்றனர். இதற்கிடையில் வைரங்களைத் தேடி கும்பல் வருகிறது. ஜெயலலிதாவையும் கடத்துகிறது. இவர்களிடமிருந்து வைரங்களையும், ஜெயலலிதாவையும் மீட்கிறார் ஜெய்சங்கர். வைரங்களைக் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார். இதுதான் கதை. கடைசியில் ஜெயலிலதாவின் தந்தையும் விடுதலையாகிறார்.

  • அந்த விஷயத்தில் எம்ஜிஆர் – சிவாஜிக்கே முன்னோடியாக இருந்த ஜெய்சங்கர்..!

    எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஏவிஎம்.ராஜன், முத்துராமன் என பலரும் திரை உலகில் கோலோச்சிய காலம். அப்போது தனக்கென தனித்துவமான நடிப்பைக் கொண்டு சினிமாவில் தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் தான் நடிகர் ஜெய்சங்கர். இவரைப்பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

    வக்கீல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கோ சினிமாவில் மோகம். அதனால் பல கம்பெனிகளில் ஏறி வாய்ப்புத் தேடினார். அப்போது தான் ஜோசப் தளியத் என்ற இயக்குனர் இந்தப் பையன்கிட்ட ஏதோ ஒரு திறமை இருக்கு என்பதைக் கண்டு கொண்டு தனது படத்தில் நடிக்க வைத்தார். அது தான் ஜெய்சங்கருக்கு முதல் படம். பெயர் இரவும் பகலும். முதல் படமே வெற்றி. அடுத்ததாக இவர் நடித்த படம் பஞ்சவர்ணக்கிளி. ஏவிஎம் படைப்பு. கே.சங்கர் இயக்கம்.

    படத்தைப் பார்த்ததும் தாய்;மார்கள் அனைவருக்கும் இவரைப் பிடித்துவிட்டது. இவரது சுறுசுறுப்பைக் கண்டுகொண்டது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். இவரை மாதச்சம்பளம் பேசி நடிக்க வைத்தது. வல்லவன் ஒருவன், சிஐடி சங்கர் என பிரம்மாண்டமான படங்களைத் தந்து அசத்தியது. இந்தப் படங்கள் வசூலில் அபார சாதனை படைத்தது.

    CID Sankar
    CID Sankar

    ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் தமிழ் சினிமாவில் துப்பறியும் நிபுணராக வந்து அசத்தினார். அவரது நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் தென்னகத்து ஜேம்ஸ்பாண்டு என்ற பட்டத்தையே கொடுத்துவிட்டனர். இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். சிவாஜி நடித்த தங்கச்சுரங்கம், எம்ஜிஆர் நடித்த ரகசிய போலீஸ் படங்களுக்கு ஜெய்சங்கர் தான் முன்னோடி.

    அதே நேரம் பொம்மலாட்டம், வரவேற்பு, பூவா தலையா என காமெடிப் படங்களிலும் ரசிகர்களை ரசிக்க வைத்தார் ஜெய்சங்கர். பாலசந்தர் இயக்கிய நூற்றுக்கு நூறு படம் மிகச்சிறந்த நடிகராக்கியது. எம்ஜிஆர், சிவாஜியை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்டவர்கள் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போனால் அவர்களது அடுத்த சாய்ஸ் ஜெய்சங்கர் தான். குறைந்த சம்பளத்தில் தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான இடைஞ்சலையும் தராமல் நடித்துக் கொடுத்து அசத்தினார். கால்ஷீட் சொதப்பல்களும் இருக்காது.

    இவர் படங்கள் என்றாலே போட்ட பட்ஜெட்டுக்கு நாலு மடங்கு லாபத்தைத் தந்து விடும். இவர் நடிப்பில் யார் நீ, வைரம், செல்வமகள், டீச்சரம்மா, குழந்தையும் தெய்வமும், கண்ணன் வருவான், மன்னிப்பு, அவசர கல்யாணம் படங்கள் சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டியவை.

     

  • அதென்ன டூரிங் டாக்கீஸ்…? இதுக்குப் பின்னாடி இவ்வளவு சுவாரசியமான விஷயங்கள் இருக்கா…?

    அந்தக் காலங்களில் கொட்டகை தியேட்டர்களை டூரிங் டாக்கீஸ்னு சொல்வாங்க. அங்கே பெரிய திரை இருக்கும். பழைய படங்கள் ஓடும். 80, 90கள் வரை நாம் கண்டு ரசித்த தியேட்டர்கள் என்றால் அது டூரிங் டாக்கீஸ் தான். எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, கமல் என்று பல முன்னணி நடிகர்களின் படங்களை இங்கு இருந்து கைதட்டி, ரசித்துப் பார்க்கும்போது இருக்கும் சுகமே அலாதியானது.

    பகல் முழுக்க வெயிலில் கிடந்து கஷ்டப்பட்டு உழைத்த விவசாய வர்க்கத்தினர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு இங்கு வந்து மணல் கூட்டி அதன் மேல் அமர்ந்து படம் பார்ப்பது தான் உடல் களைப்பையும், மன உளைச்சலையும் போக்கும் அருமையான இடம். இங்கு படம் ஓடும்போது சிலைடு போடுவார்கள். அதுதான் விளம்பரம். அருகில் உள்ள பெரிய பெரிய கடைகளுக்கு நல்லா விற்பனை வரவேண்டும் என்றால் இந்தத் தியேட்டரில் தான் இடைவேளையின் போது சிலைடு போடுவார்கள்.

    Touring talkies
    Touring talkies

    அதெல்லாம் சரி. இந்த டூரிங் டாக்கீஸ்க்கு எப்படி இந்தப் பெயர் வந்ததுன்னு தெரியுமா? ஆரம்ப காலகட்டத்தில் சினிமா பேசாத வெறும் ஊமைப்படங்களாகத் தான் வந்தன. அதன்பிறகு பின்னணி இசையுடன் சேர்ந்து வந்தது. சார்லி சாப்ளின் படங்கள் இப்படித் தான் வந்தன. காலப்போக்கில் சினிமாவில் வசனங்களுடன் பேசும்படங்களாக வர ஆரம்பித்தன. அந்தக் காலத்து மக்கள் இதைப் பார்க்கும்போது சினிமாவில் உள்ளவர்கள் நம்ம கிட்ட பேசுறாங்கன்னு ஆச்சரியப்பட்டாங்க. அதனால் தான் டாக்கீஸ்னு சொன்னாங்க.

    இதை ஊர் ஊராகச் சென்று எல்லோருக்கும் காட்ட வேண்டுமே என்ற எண்ணத்தில் அந்த பெரிய திரையையும், கூடாரத்தையும் சுருட்டி எடுத்துக்கொண்டு ஊர் ஊராக டூர் சென்று அங்கு போய் மக்கள் மத்தியில் டெண்ட் போட்டு படத்தைக் காட்டினார்களாம். இதுவே டூரிங் டாக்கீஸாக காலப்போக்கில் மாறிவிட்டது. டிவி வராத காலகட்டங்களில் எல்லாம் இந்தத் தியேட்டர்களுக்குத் தான் மவுசு அதிகம்.

  • கோடிகளில் புரளும் விஜயிற்கு முதல் கார் கொடுத்த நடிகர் யார் தெரியுமா? அதுவும் அட்வான்ஸே இல்லாமல் தந்த ஆச்சரியம்

    Vijay: நடிகர் விஜய் தற்போது கோடிகளில் காரை அடிக்கடி புதிதாக வாங்கி கொண்டு இருக்கிறார். ஆனால் அவரின் முதல் கார் கிடைத்த நிகழ்வு தான் ரொம்பவே சுவாரஸ்யமானது. அதை ஒரு பெரிய நடிகரே செய்த நிகழ்வு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

    விஜயும், அவரின் அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது சந்திரசேகர் மூன்று படம் மட்டுமே இயக்கி இருக்கிறார். பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அப்போது ஒரு சிக்னலில் ஒரு வெள்ளை அம்பாசிடர் பக்கத்தில் நிற்கிறது.

    இதையும் படிங்க: சங்கீதாவுக்கு முன்னாடியே விஜய் வாழ்க்கையில் தென்றலாய் வீசிய பெண்! உயிர்த்தோழன் பகிர்ந்த சீக்ரெட்

    கண்ணாடி திறக்க ஒரு பெரிய நடிகர் உள்ளே இருக்கிறார். என்ன சார் நீங்க மூன்று படம் இயக்கிட்டீங்க? இன்னும் கார் வாங்கலையா? எனக் கேட்கிறார். உடனே சிக்னலும் போட்டுவிட இருவரும் ஒதுங்கி நின்று பேசுகின்றனர். சந்திரசேகருக்கோ ஆச்சரியம். பெரிய நடிகர் நமக்காக பேசுகிறாரே என்று.

    நான் இன்னும் சில படம் இயக்கிவிட்டு கார் வாங்கிக்கிறேன் சார் என்றாராம். ஆனால் அந்த நடிகரோ இல்லை, இல்லை ஒரு கமிட்மெண்ட் இருந்தால் தான் தொடர்ந்து ஓட முடியும். என்னிடம் ஒரு சிகப்பு அம்பாசிடர் கார் இருக்கு வந்து எடுத்து கொள்ளுங்கள் என்கிறார்.

    சந்திரசேகர் இல்லை சார் பரவாயில்லை என நாசுக்காக மறுத்துவிடுகிறார். ஓசியில் எடுக்க தயங்குகிறார் என நினைத்த நடிகர், நீங்க சும்மா எடுத்துக்க வேண்டாம். காசு கிடைக்கும் போதெல்லாம் அதை தவணையாக கொடுங்கள் என்று ஒரு கம்மி விலையை சொன்னாராம்.

    இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் ஒரு மகா முட்டாள்!. விஜய் அரசியல் வேலைக்கு ஆவாது!.. போட்டு தாக்கும் பயில்வான் ரங்கநாதன்..

    உடனே சந்திரசேகரும் சந்தோஷமாக அதற்கு ஓகே சொல்லி அந்த காரை எடுத்து கொள்கிறார். பல வருடமாக எஸ்.ஏ.சந்திரசேகர் உயர்ந்த போதும் அவருடனே இருந்த அந்த காரின் எண் 7191. அதை தாராள மனதுடன் கொடுத்தது மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். அதன் பின்னர் எத்தனை பெரிய கார் வாங்கினாலும் விஜயின் பேவரிட் அந்த சிகப்பு அம்பாசிடர் தானாம்.