Tag: actor vijayakanth

  • 15 நிமிஷத்துல விஜயகாந்திகிட்ட இருந்து போன் வந்தது!.. ஜெயபிரகாஷ் சொன்ன சம்பவம்!..

    15 நிமிஷத்துல விஜயகாந்திகிட்ட இருந்து போன் வந்தது!.. ஜெயபிரகாஷ் சொன்ன சம்பவம்!..

    நடிகர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணத்தை உடைத்தவர் விஜயகாந்த்.. எந்த ஈகோவும் இல்லாமல் பந்தா காட்டாமல், செயற்கையாக நடந்து கொள்ளாமல் மிகவும் இயல்பாக, நல்லவராக நடந்து கொண்டவர்தான் விஜயகாந்த்.

    பெரிய நடிகராக இருந்தும் அவரிடம் தலைக்கணம் இல்லை.. எல்லாவகையிலும் மற்றவர்களுக்கு உதவியவர். அவர் முன் யாரேனும் கஷ்டப்பட்டால் உடனே தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்.. பலருக்கும் உணவளித்தார்.. பல புதிய இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் உருவாக்கினார்.. இதனால்தான் திரை உலகத்திற்கு அவரை பிடித்தது..

    அதனால்தான் விஜயகாந்தை பற்றி தவறாக திரை உலகில் யாருமே பேச மாட்டார்கள்.. திரையுலகில் விஜயகாந்தை மோசமாக விமர்சித்து பேசிய ஒரே ஆள் வடிவேலு மட்டும்தான்.. அது கூட அவரின் தனிப்பட்ட கோபம்தான்.. அவருக்கும் விஜயகாந்தை பிடிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இந்நிலையில்தான், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜெயபிரகாஷ் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்..

    விஜயகாந்த் சார் அரசியல்ல 25 சீட் ஜெயிச்சி பரபரப்பா இருந்த டைம்.. நான் அவரை நேர்ல பாக்கணும்னு ஆசைப்பட்டு அவரோட மேனேஜர்கிட்ட சாரை பாக்கணும்னு அப்பாயின்மென்ட் வாங்கி கொடுங்கன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.. அரசியலில் ஜெயிச்ச பரபரப்பு.. எப்படியும் ஒரு வாரம் இல்லை 10 நாட்கள் கழிச்சு கூப்பிடுவாருன்னு நெனச்சேன்..

    ஆனா அடுத்த 15 நிமிஷத்துல சார் உங்களை வர சொன்னாருன்னு அவர் ஆபிஸ்ல இருந்து போன் வந்துச்சி.. அவ்ளோ கூட்டத்துல என்னை ஆபிஸ்குள்ள கூட்டிட்டு போய் என்ன சார்.. என்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுட்டு.. இது நம்ம ஆபீஸ்.. நீங்க எப்போ வேணா வரலாம்னு சொன்னார்.. உண்மையா சொல்றேன்.. அவரோட இடத்துல வேற யாரு இருந்தாலும் இதெல்லாம் நடக்காது’ என்று கூறியிருக்கிறார்..

  • விஜயகாந்த் சார் ஒரு தங்கம்!. அந்த சம்பவத்தை மறக்கமாட்டேன்!. பிரபுதேவா ஃபீலிங்…

    மதுரையிலிருந்து சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி பல அவமானங்களை சந்தித்து, அதன்பின் வாய்ப்புகளை பெற்று துவக்கத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து, இடையிடையே வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னேறியவர்தான் விஜயகாந்த்.

    அவரிடத்தில் யாராக இருந்தாலும் சினிமாவை விட்டு போய் இருப்பார்கள். ஆனால் தன்னம்பிக்கையுடன் முயற்சிகள் செய்து முக்கிய இடத்தை பிடித்தார். ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் ஆகியோருக்கு போட்டி நடிகராக விஜயகாந்த் மாறினார். அவர்கள் இரண்டு பேரின் படங்களை விட விஜயகாந்தின் படங்கள் அதிக வசூலை பெற்றது..

    விஜயகாந்த் ஒரு நடிகர் என்பதைத் தாண்டி ஒரு மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதர் என்றே அவர் அடையாளம் காணப்படுகிறார். திரைத்துறையில் இவரால் வளர்ந்தவர்கள் பலர். யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை விஜயகாந்த் செய்யாமல் இருந்ததில்லை. எனவேதான் அவரை மரணத்திற்கு பின்னரும் மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள்.. ஒருபக்கம் தான் ஒரு பெரிய நடிகர் என்கிற எந்த பந்தாவும் இல்லமால் எளிமையாக வாழ்ந்தவர்தான் விஜயகாந்த்.

    1992ம் வருடம் வெளியான பரதன் படத்தில் புன்னகையில் மின்சாரம் என்ற பாடலுக்கு விஜயகாந்த் பானுப்பிரியாவுடன் இணைந்து அசத்தலாக நடனமாடியிருப்பார். அந்த பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குனர் பிரபுதேவா ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘விஜயகாந்த் சார் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது.. அவருடைய பரதன் படத்துல ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலுக்கு நான் டான்ஸ் மாஸ்டரா வேலை செஞ்சேன்.

    எனக்கு தெரிஞ்சு தமிழ் சினிமாவுல வந்த பாட்டிலேயே அதிக கட் இருக்கிறது அந்த பாட்டுதான். அந்த ஒரு பாட்டை 10 நாள் எடுத்தோம். அந்த பாட்டு எடுத்தப்ப அவர் பீக்ல இருந்தார்.. ஆனால் நான் என்ன பண்ண சொன்னேனே அது அப்படியே பண்ணினார். அதுதான் அவருக்கு முதல் சினிமா மாதிரி நடந்துகிட்டார்.. அவர் ஒரு தங்கம்.. அவர் மாதிரி வராது’ என புகழ்ந்து பேசியிருக்கிறார்.

  • அப்பா இறந்தபோது நான் ஊர்ல இல்ல.. விஜயகாந்த் செஞ்சதை மறக்கவே முடியாது!.. பிரபு ஃபீலிங்!…

    கோலிவுட்டில் நடிப்பு சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி என்கிற படம் மூலம் நடிக்கத் தொடங்கி அதன்பின் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி. இவர் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை என சொல்லுமளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் நடித்தார்..

    எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ அதே கதாபத்திரமாக மாறிவிடும் திறமையை சிவாஜி கணேசனுக்கு உண்டு. அவரைப் போல ஒரு நடிகர் இந்தியாவிலேயே இல்லை என பலரும் அவருக்கு புகழாரம் சூட்டினார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001 ஜூலை 21ம் தேதி மரணமடைந்தார். அப்போது சடங்குகள் செய்து சிவாஜி கணேசன் உடலை வண்டியில் ஏற்றி ஊர்வலமாக சென்று அடக்கம் செய்தார்கள் அந்த பொறுப்பை முழுக்கமாக ஏற்றுக் கொண்டவர் நடிவர் விஜயகாந்த்..

    இந்நிலையில் நடிகர் விஜயகாந்த்துக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மீசை ராஜேந்திரன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘சிவாஜி சார் இறந்தபோது பிரபு சார் ஊர்ல இல்ல.. கேப்டன்தான் புள்ளை மாதிரி எல்லாத்தையும் செய்தார்.. நீங்க பார்த்திருப்பீங்க.. அவ்வளவு கூட்டத்தை ஒத்த ஆளா துண்டை வச்சி விரட்டினார்.. பிரபு சார் என்கிட்ட பேசும்போது ‘அப்பா இறந்தப்போ நான் வெளிநாட்டில் இருந்தேன்.

    vijayakanth

    விஜி ஒரு பிள்ளை மாதிரி கூடவே இருந்து குளிக்காம, தூங்காம, சாப்பிடாம எல்லா காரியமும் செய்தார். வந்தவங்க எல்லாரும் போயிட்டாங்க.. ஆனா விஜி மட்டும் அடுத்த நாள் என் கூடவே இருந்து வீட்டுக்கு வந்து அம்மா கைய புடிச்சு அழுதுட்டு ‘இனி உங்கள் பையனுக்கு நாங்க இருக்கோம்.. கவலைப்படாதீங்கனு எங்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்லிட்டு 2 மணி நேரம் இருந்துட்டுதான் போனாரு’ என என்னிடம் சொன்னார்’ என கூறியிருக்கிறார்…

  • விஜயகாந்த் செய்த உதவி!.. பொண்ணு இப்ப தாசில்தார்!.. இயக்குனர் நெகிழ்ச்சி!…

    திரைத்துறையில் எம்ஜிஆருக்கு பின் பலருக்கும் உதவி செய்த ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே. குறிப்பாக விஜயகாந்த் பலரும் கஷ்டப்படுவதை தெரிந்து அவரே நேரில் சென்று உதவி செய்தார். அதனால்தான் விஜயகாந்தை மக்கள் கொண்டாடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் விஜயகாந்த் செய்த பல விஷயங்களை எம்.ஜி.ஆர் கூட செய்தது இல்லை.

    சினிமா துறையில் விஜயகாந்தின் உதவியை பெற்று வளர்ந்தவர்கள் பலரும் இருக்கிறார்கள்.. அதேபோல் பலருக்கும் இக்கட்டான சூழ்நிலைகளில் உதவி இருக்கிறார் விஜயகாந்த். இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகள் மற்றும் நடிகர் தனுஷின் சகோதரியை மருத்துவ கல்லூரியில் சேர்த்து விட்டதே விஜயகாந்த்தான். என் மகள் இப்போது மருத்துவராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் கேப்டன்தான் என கஸ்தூரி ராஜாவே பேட்டி கொடுத்தார்..

    இந்நிலையில், தமிழ் சினிமா முக்கிய திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்திருக்கிறார். எனக்கு தெரிந்த நண்பர் ஒருத்தர் அவரோட பொண்ணுக்கு பீஸ் கட்டணும்.. அதற்கு விஜயகாந்த் சாரிடம் உதவி கேட்கணும் என என்னிடம் வந்தார்.. நானும் அவரை விஜயகாந்த் சாரிடம் அழைத்துச் சென்றேன்..

    அவர் கேட்டது ஒரு வருஷத்துகான பீஸ்.. கேப்டன் சார் ரெண்டு வருஷம் காலேஜ் ஃபீஸ், அது மட்டும் இல்லாம ரெண்டு வருஷம் ஹாஸ்டல் பீஸும் சேர்த்து கொடுத்தாரு.. அப்போதிலிருந்து அவர் மேல் எனக்கு அவ்வளவு காதல், மரியாதை வந்துருச்சு.. இப்ப அந்த பொண்ணு தாசில்தாரா இருக்காங்க’ என சொல்லியிருக்கிறார்.

  • கேப்டன் சொன்ன வார்த்தை!.. சண்முக பாண்டியன் படத்தில் நடித்தேன்!.. சரத்குமார் ஃபீலிங்!….

    சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் திரைப்படம்தான் கொம்பு சீவி. இந்த திரைப்படத்தில் சரத்குமாரும் முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார்.

    இந்த படம் தொடர்பான விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய சரத்குமார் விஜயகாந்த் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். கொம்பு சீவி படத்தில் நான் நடிச்சதுக்கு முக்கிய காரணம் கேப்டன்தான். என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். நான் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்த போது சினிமாவில் நடிக்க முடிவெடுத்தேன். அவரிடம் சென்று வாய்ப்பு கேட்டேன். எனக்கு புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கொடுத்தவர் அவர்தான்.

    என்னை பார்த்த உடனே அந்த படத்தில் நடிக்க இவர் சரியாக இருப்பார் என அவர் முடிவெடுத்தார். உடனே ஆர்கே செல்வமணியையும், இப்ராஹிம் ராவுத்தரையும் போய் பாருங்கள் என்றார். அப்போதே இந்த படத்தில் நான்தான் என முடிவு செய்துவிட்டேன். அதேபோல் அடுத்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

    சில காட்சிகள் நடித்தபின் எனக்கு கழுத்தில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து ஆறு மாசம் என்னால் பேச முடியவில்லை. மருத்துவமனையில் இருந்தேன். என்னை வைத்து சில காட்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. வேறு ஒருவரை வைத்து எடுத்துக்கொள்ளலாம் என இயக்குனர் சொன்னபோது ‘வேண்டாம் சரத்குமார்தான் இதை செய்ய வேண்டும்.. ஆறு மாதம் ஆனாலும் பரவாயில்லை’ என்று சொல்லி எனக்காக காத்திருந்தார்.. அதுதான் விஜயகாந்தின் மனது. அதனால்தான் இந்த படத்தில் சண்முக பாண்டியன் நடிக்கிறார் என சொன்னதுமே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்’ என்று பீலிங்காக பேசியிருக்கிறார் சரத்குமார்.

    கொம்பு சீவி திரைப்படம் வருகிற 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

  • விஜயகாந்துக்காக வேற ரூட்டில் ஆபிஸ் போன முதலமைச்சர்!.. செம பிளாஷ்பேக்!..

    Vijayakanth: பள்ளிக்கு சரியாக போகாததால் அப்பாவின் ரைஸ் மில்லை பார்த்துகொண்டிருந்தவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. எனவே, நண்பர் ராவுத்தருடன் சென்னை வந்து வாய்ப்பு தேடினார் விஜய ராஜா. அவருக்கோ யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. ரஜினிகாந்த் பிரபலமான ஹீரோவாக இருந்ததால் தனது பெயரை விஜயகாந்த் என வைத்துக்கொண்டார். ‘அதான் ஒரு காந்த் இருக்காரே இன்னொரு காந்த் எதுக்கு?’ என வாய்ப்பு தேடி போன இடங்களில் நக்கலடித்தார்கள்.

    பல அவமானங்களை சினிமாவில் நடிக்க துவங்கி வெற்றிப்படங்களை கொடுத்து எல்லோராலும் கவனிக்கப்படும் ஹீரோவாக மாறினார் விஜயகாந்த். அதன்பின் அவரின் அசுர வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்போது முன்னணி நடிகர்களாக கலக்கி வந்த ரஜினி, கமல் ஆகியோருக்கே டப் கொடுத்தார்.

    அரசியலில் ஈடுபாடு கொண்ட விஜயகாந்த் கலைஞர் கருணாநிதியுடன் நெருங்கி பழகி வந்தார். எப்போது நினைத்தாலும் கலைஞருடன் தொலைப்பேசியில் பேசவும், நேரில் சந்திக்கவும் விஜயகாந்த்தால் முடிந்தது. கலைஞரை அடிக்கடி சந்தித்து பேசியும் வந்தார் விஜயகாந்த். கலைஞரும் விஜயகாந்த் மீது அன்பு கொண்டவராகவே கலைஞர் இருந்தார்.

    ஆனால், அரசியல் இவர்களுக்கு இடையே விரிசலை உண்டாக்கியது. தனிக்கட்சி துவங்கிய பின் திமுகவின் எதிரியாக மாறினார் விஜயகாந்த். பாலம் வருவதாக சொல்லி விஜயகாந்தின் திருமண மண்டபத்தையே இடித்தார்கள். எனவே, கலைஞரை கடுமையாக விமர்சிக்க துவங்கினார் விஜயகாந்த். அப்படி இருந்தாலும் கலைஞர் மரணமடைந்த செய்தி கேட்டு வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த போதும் அழுதுகொண்டே வீடியோ போட்டார் விஜயகாந்த். அதோடு, சென்னை வந்ததும் நடக்க முடியாத நிலையிலும் கலைஞரின் சமாதிக்கு போய் அழுதார். தற்போது விஜயகாந்தும் நம்முடன் இல்லை.

    இந்நிலையில், விஜயகாந்தை வைத்து வல்லரசு படம் எடுத்த இயக்குனர் மகராஜன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘வல்லரசு படத்தின் முக்கிய காட்சியை காலை 7 மணிக்கு துவங்கி 11 மணிக்குள் மவுண்ட் ரோட்டில் பீச் அருகே படமாக்க திட்டமிட்டோம். பல பஸ்களை நிறுத்தி போராட்டம் நடத்துவது போன்ற காட்சி அது. ஆனால், வண்டியெல்லாம் வந்து நிற்கவே 11 மணி ஆகிவிட்டது. எப்படியும் 2 மணி வரை நேரம் தேவைப்பட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை.

    ஏனெனில் முதல்வர் அந்த வழியாகவே கோட்டைக்கு செல்லும் நேரம் அது. இதை நான் விஜயகாந்திடம் சொன்னவுடன் உடனே கலைஞரின் உதவியாளரிடம் பேசினார். சிறிது நேரத்தில் கலைஞரே பேசினார், விஜயகாந்த் விஷயத்தை சொல்ல கலைஞரோ ‘ஒன்றும் பிரச்சனை இல்லை. நான் வேற ரூட்டில் கோட்டைக்கு போகிறேன்’ என சொல்லிவிட்டார். அந்த அளவுக்கு விஜயகாந்துக்கு செல்வாக்கு இருந்தது’ என அவர் பேசியிருக்கிறார்.

  • பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் குட்டி கேப்டன்!.. படைத்தலைவன் 4 நாள் வசூல் விவரம்!..

    Padai thalaivan: விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் நடிப்பில் கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம்தான் படை தலைவன். இந்த படத்தை அன்பு என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக யாமினி சந்தர் நடித்திருக்கிறார். மேலும் தனுஷின் அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

    இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். அதோடு, இந்த படத்தில் சண்முக பாண்டியனின் அப்பா விஜயகாந்தை ஏஐ மூலம் சில காட்சிகளில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இது விஜயகாந்த் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸை கொடுத்திருக்கிறது. தான் ஆசையாக வளர்க்கும் யானையை சிலர் கடத்தி சென்றுவிட சண்முக பாண்டியன் எப்படி போராடி மீட்டார் என்பதுதான் படத்தின் கதை.

    விஜயகாந்த் மகன் என்பதால் படம் முழுக்க ஆக்சன் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். எனவே, விஜயகாந்த் ரசிகர்கள் இவரை குட்டி கேப்டனாகவே பார்த்து ரசிக்கிறார்கள். நாளுக்கு நாள் விஜயகாந்தின் ரசிகர்கள் இப்படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசிப்பது அதிகரித்துக்கொண்டே போகிறது.

    படம் வெளியான 13ம் தேதி இப்படம் 1.29 கோடியும், 14ம் தேதி 1.22 கோடியையும், 15ம் தேதி 1.75 கோடியையும் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், 4வது நாளான நேற்று இப்படம் 0.67 கோடி (67 லட்சம்) வசூல் செய்திருக்கிறது. பொதுவாக சின்ன பட்ஜெட்டில் வரும் படங்களுக்கு வசூல் இருக்காது. அதுவும் ஞாயிறு முடிந்துவிட்டால் தியேட்டர்களில் காத்து வாங்கும்.

    ஆனால், 4வது நாளான நேற்றும் இப்படம் 67 லட்சம் வசூல் செய்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை இப்படம் தமிழகத்தில் 5 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை குபேரா உள்ளிட்ட புதிய படங்கள் வெளியாகவுள்ளதால் வியாழக்கிழமை வரை படை தலைவனுக்கு வசூல் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

  • விஜயகாந்த் செய்த உதவி!.. கண்கலங்கி நன்றி சொன்ன எம்.எஸ்.பாஸ்கர்!..

    சின்னத்திரை நடிகர், பின்னணி குரல் கொடுப்பவர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என பல திறமைகளை கொண்டவர் எம்.எஸ்.பாஸ்கர். பல படங்களில் பல நடிகர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமான காமெடி சீரியலான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் மூலம்தான் எம்.எஸ்.பாஸ்கர் ரசிகர்களிடம் பிரபலமானார்.

    சினிமாவுக்கு வருவதற்கு முன் நிறைய நாடகங்களிலும் நடித்திருக்கிறார். சில வருடங்கள் எல்.ஐ.சி ஏஜெண்ட்டாகவும் இவர் பணிபுரிந்திருக்கிறார். ஆல் இண்டியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் டிவியிலும் இவர் வேலை செய்திருக்கிறார். 90களில் தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானபோது காமெடி நடிகர்களுக்கெல்லாம் தமிழில் குரல் கொடுத்தவர் இவர்தான்.

    நம் குடும்பம், விழுதுகள், கங்கா யமுனா சரஸ்வதி, மாயாவி மரிச்சான் உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். எங்கள் அண்ணா, சிவகாசி, தர்மபுரி, 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. குறிப்பாக ரதா மோகன் இயக்கிய மொழி படத்தில் மகன் இறந்த அதிர்ச்சியில் காலம் கடந்துபோனது தெரியாமல் பேசும் வேடத்தில் அசத்தலாக நடித்திருந்தார்.

    பார்க்கிங் படத்தில் இவருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. இவருக்கும், ஹரீஸ் கல்யாணுக்கும் இடையே நடக்கும் ஈகோதான் படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த இயக்குனரின் படத்தில்தான் சிம்பு அடுத்து நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் சசிக்குமார் – சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலும் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருந்தார்.

    இந்நிலையில், எம்.எஸ்.பாஸ்கரின் சினிமா வாழ்க்கையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் எவ்வளவு முக்கியமான நடிகர் என்பது பற்றி பார்ப்போம். சீரியலிலிருந்து விலகி சினிமாவில் நடிக்க வந்தபோது எம்.எஸ்.பாஸ்கரிடம் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை இல்லை. அது இல்லாமல் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியாத நிலை. ஆனால், அதை வாங்க சில லட்சங்கள் தேவை. அந்த பணம் இல்லாததால் உறுப்பினர் அட்டை இல்லாமலேயே சினிமாவில் நடித்து வந்திருக்கிறார்.

    இது நடிகர் சங்க தலைவர் விஜயகாந்துக்கு தெரியவரவே எம்.எஸ்.பாஸ்கருக்கு உறுப்பினர் அட்டையை வாங்கி கொடுத்திருக்கிறார். அதற்கு கண்ணீர் மல்க நன்றி சொன்னாராம் எம்.எஸ்.பாஸ்கர். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பாஸ்கர் ‘உறுப்பினர் அட்டையை நான் இப்போது திருப்பி கொடுத்தால் எனக்கு பல லட்சம் கிடைக்கும். ஆனால், அண்ணன் விஜயகாந்த் எனக்கு இதை சாதாரணமாக வாங்கி கொடுத்தார். அவரை போல ஒரு மனிதரை பார்க்க முடியாது’ என உருகியிருக்கிறார்.

  • கலைஞர், ஜெயலலிதாவை எதிர்த்து பேசி வாழ முடியுமா? விஜயகாந்த் கொடுத்த தரமான பதில்

    விஜயகாந்த்:

    விஜயகாந்த் நம்மை விட்டு மறைந்தாலும் அவரைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகிக் கொண்டே வருகின்றன. ஒருவர் இருக்கும் வரை அவருடைய அருமை தெரியாது. அவர் போன பிறகு தான் அருமை தெரியும் என சொல்வார்கள். அது விஜயகாந்து விஷயத்தில் உண்மையாகி இருக்கிறது. அவர் இருக்கும் வரை சினிமாவை விட அரசியலில் மக்கள் அவரை பற்றி புரிந்து கொள்ளவே இல்லை.

    அப்படி புரிந்து கொண்டிருந்தால் இந்நேரம் இந்த நாட்டின் தலைவராகி இருப்பார் விஜயகாந்த். மக்களுக்கு நல்லதையே செய்ய வேண்டும் என்று தன் வாழ்நாள் வரைக்கும் நினைத்துக் கொண்டிருந்தவர் கேப்டன். ஊழலை ஒழிக்க வேண்டும், மதுவை ஒழிக்க வேண்டும், தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என பல நல்ல விஷயங்களை மக்களுக்காக கொண்டு வர வேண்டும் என நினைத்தார்.

    தயாரிப்பாளர்களின் நடிகன்:

    ஆனால் அரசியலில் அவரால் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை. எத்தனையோ பேருக்கு ஏராளமான உதவிகளை செய்தவர் விஜயகாந்த். தயாரிப்பாளர்கள் எந்த வகையிலும் கஷ்டப்படக் கூடாது என்பதை எப்பொழுதுமே அவர் தன் நினைவில் வைத்திருப்பார். அவரால் ஒரு முறை கூட தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் என்பது வந்ததே கிடையாது. அப்படியே வந்தாலும் தன்னுடைய பணத்தை போட்டு அந்த படத்தை எடுத்து முடித்து விடுவார் விஜயகாந்த்.

    சினிமாவில் இருக்கும் எந்த பிரபலங்களை கேட்டாலும் ஏதாவது ஒரு வகையில் விஜயகாந்துடன் ஒரு நல்ல அனுபவங்களை கொண்டிருப்பார்கள். இது விஜயகாந்த் செய்தது ,விஜயகாந்தால் நான் இந்த நிலைமையில் இருக்கிறேன், விஜயகாந்த் இல்லை என்றால் என் நிலைமை என்னவாகியிருக்கும் என்பது போல அவரால் பலனடைந்தவர்கள் ஏராளமான பேர் இருக்கின்றனர்.

    மீசை ராஜேந்திரன் சொன்ன விஷயம்:

    அந்த வகையில் மீசை ராஜேந்திரனும் ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். மீசை ராஜேந்திரன் ஒரு தீவிர விஜயகாந்த் ரசிகர் என்பது அனைவருக்குமே தெரியும். பல படங்களில் போலீஸ் கெட்டப்பில் நடித்திருக்கிறார். அரசியலிலும் தன் பங்களிப்பை கொடுத்திருக்கிறார். ஒருமுறை விஜயகாந்தை பார்க்க மீசை ராஜேந்திரன் மற்றும் அவருடைய மகள் ஆகிய இருவரும் போனார்களாம்.

    அப்போது விஜயகாந்த் மீசை ராஜேந்திரனின் மகளுக்கு ஒரு ஃபாரின் சாக்லேட் பாக்ஸ் .அதன் மதிப்பு 7000 இருக்குமாம். அதை அப்படியே தூக்கி கொடுத்தாராம். அந்த நேரம் என் மகள் விஜயகாந்திடம் என்னுடைய அப்பா கலைஞர் பற்றியும் ஜெயலலிதாவை பற்றியும் கடுமையாக விமர்சித்து மேடைகளில் பேசி வருகிறார். அதனால் எங்களுக்கு பயமாக இருக்கிறது.

    அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என எங்களுக்கு பயமாக இருக்கிறது எனக் கூறினாராம். அதற்கு விஜயகாந்த் கவலப்படாதம்மா உங்க அப்பாவுக்கு ஒன்றும் ஆகாமல் நான் பார்த்துக்கிறேன். நான் இருக்கிற வரைக்கும் உன் அப்பாவுக்கு ஒரு கெட்டதும் நடக்க விடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறினாராம் விஜய்காந்த். இதை சொல்லும் போது மீசை ராஜேந்திரன் அப்படியே அழுதுவிட்டார்.

  • எம்ஜிஆர் படத்துக்கே அது நடக்கல.. விஜயகாந்துக்கு நடந்துச்சு.. இது புது ரெக்கார்டால இருக்கு

    ஒரு காலத்தில் 80களில் கமல் ரஜினி என இரு பெரும் ஆளுமைகள் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது சத்தமே இல்லாமல் உள்ளே நுழைந்தவர் விஜயகாந்த். தனக்கென தனி பாணியை அமைத்துக் கொண்டு கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு மெல்ல மெல்ல தன்னுடைய வளையத்தை பெருக்கிக் கொண்டே போனார் விஜயகாந்த். அது ஒரு கட்டத்தில் ரஜினி கமலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைந்தது .

    சிவாஜி காலத்தில் மூவேந்தர்களாக திகழ்ந்தவர்கள் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன். அதைப்போல 80 கள் காலகட்டத்தில் மூவேந்தர்களாக திகழ்ந்தனர் ரஜினி கமல் விஜயகாந்த். அப்பொழுதெல்லாம் ஒரு சென்டிமென்ட் இருக்கும்.. ரஜினி கமல் பிரபு கார்த்திக் இவர்களின் நூறாவது படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக அமைந்ததில்லை .அமையாது என்ற ஒரு சென்டிமென்டே இருக்கும்.

    ஆனால் அந்த செண்டிமெண்ட்டை தகர்த்தெறிந்தவர் விஜயகாந்த். இவருடைய நூறாவது படம் கேப்டன் பிரபாகரன் யாரும் எதிர்பாராத பெரிய அளவு பிளாக்பஸ்டர் வெற்றியை கண்ட படமாக மாறியது. அதுவரை எந்த நடிகருக்கும் 100வது படம் வெற்றி படமாக அமைந்ததே இல்லை. அந்த வகையிலும் விஜயகாந்த் ஒரு பெரும் சாதனை புரிந்திருக்கிறார். இவரை கருப்பு எம்ஜிஆர் என்றே ஒரு காலத்தில் அழைத்து வந்தனர்.

    பிறகு வேண்டாம் என விஜயகாந்தை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த அளவுக்கு எம்ஜிஆர் மக்களுக்காக என்னெல்லாம் செய்ய வேண்டும் என நினைத்தாரோ அதை விஜயகாந்த் செய்து வந்தார். மக்கள் நலனில் மிகவும் அக்கறை கொண்டவராக இருந்தார். அதனாலேயே எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு விஜயகாந்தை ரசிகர்கள் பேசத் தொடங்கினர்.

    இந்த நிலையில் ரெப்பல் ரவி விஜயகாந்த் பற்றி ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்து இருக்கிறார். சென்னை பட் ரோட்டில் அமைந்திருக்கும் ஒரு தியேட்டரில் விஜயகாந்தின் வசந்த ராகம் திரைப்படம் இரண்டு வாரங்கள் தொடர்ந்து நான்கு ஷோக்களாக ஓடியதாம். இது எம்ஜிஆர் படத்துக்கே நடந்ததில்லை. ஆனால் விஜயகாந்தின் அந்த வசந்த ராகம் திரைப்படம் தான் நான்கு ஷோக்களாக தொடர்ந்து இரண்டு வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது என ரெப்பல் ரவி கூறி இருக்கிறார். அதுவும் இது ஒரு பெரிய ரெக்கார்டு என்றும் கூறியிருக்கிறார்.