Tag: actor vijayakanth

  • ரோபோ சங்கரின் கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்ட கேப்டன்!.. மறக்க முடியாத சம்பவம்!…

    Vijayakanth: திரையுலகிலும், ரசிகர்களின் மத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது விஜயகாந்தின் மறைவுதான். அதற்கு காரணம் விஜயகாந்த் மீது மக்களுக்கு இருந்த இமேஜ்தான். அப்படி சொல்வதை விட விஜயகாந்த் மக்களிடம் ஏற்படுத்தியிருந்த தாக்கம் என்றே சொல்லலாம். எல்லோரின் மீது அவர் காட்டிய இரக்கம், சுயநலம் இல்லாத குணம், எப்போதும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் என சொல்லிக்கொண்டே போகலாம்.

    விஜயகாந்த் ஒரு நடிகர் என்பதைவிட அவர் ஒரு நல்ல மனிதர் என்பதே அவர் மக்களிடம் உருவாக்கிய இமேஜ். அதை அவர் ஒன்றும் திட்டமிட்டு செய்யவில்லை. அவரின் இயல்பான குணம் அது. சிரித்த முகத்தோடு எப்போதும் எல்லோரையும் அணுகும் அவரின் குணம், வெள்ளந்தியான அவரின் குணாதிசியம் இதுதான் அவரை எல்லோருக்கும் பிடிக்கக் காரணம்.

    விஜயகாந்த் என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது அவரின் கணீர் குரலும், திரைப்படங்களில் அவர் வசனம் பேசும் ஸ்டைலும்தான். உரக்க குரலில் பல கருத்துள்ள வசனங்களை அவர் திரைப்படங்களில் பேசியிருக்கிறார். தவறான காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் என எல்லோரையும் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்திருக்கிறார்.

    பல படங்களில் அவர் அப்படி பேசியிருந்தார்லும் கேப்டன் பிரபகாரன், ஏழை ஜாதி போன்ற படங்களில் அரசியல் வசனங்கள் தூக்கலாகவே இருக்கும். ரசிகர்கள் அப்படி பார்த்த விஜயகாந்த் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சரியாக பேச முடியாமல், நிற்க முடியாமல், எதையும் நினைவுப்படுத்தி கொள்ள முடியாமல் இருந்த நிலையை பார்த்து பலரும் வருத்தப்பட்டனர்.

    விஜயகாந்துடன் நெருக்கமாக பழகிய பலரும் அவரின் உடல்நிலை பற்றி ஊடகங்களில் பேசினார்கள். அதில், சிலர் விஜயகாந்தை நேரில் பார்க்க முடியவில்லை என்றும் சொன்னார்கள். ரஜினி, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் விஜயகாந்தை நேரில் போய் பார்த்தார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. 2023ம் வருடம் டிசம்பர் மாதம் விஜயகாந்த் இறந்துபோனார். அவரின் இறுதி ஊர்வலத்தில் பலரும் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘கேப்டன் இறந்து போவதற்கு 2 வருடங்களுக்கு முன் அவரின் வீட்டுக்கு போனேன். ‘உங்களை மாதிரியே பேசுவாரே ரோபோ சங்கர். அவர் வந்திருக்காருன்னு’ அவரிடம் பிரேமலதா மேடம் சொன்னாங்க. அதற்கு அவர் ‘பேச சொல்லு’ என்பது போல கையை காட்டினார்.

    நானும் அவரை மாதிரியே அவரிடம் பேசிக்காட்டினேன். அப்போது அவர் என் கையை தேடிப்பிடித்து அப்படியே நெஞ்சில் வைத்துக்கொண்டு எடுக்கவே இல்லை. அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. எனக்கு அந்த இடத்தை விட்டு வரவே மனம் இல்லை. அதை என்னால் மறக்கவே முடியாது’ என உருக்கமாக பேசியிருந்தார்.

  • அந்த பிரபலத்தை பற்றி விஜயகாந்த் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண முரளி.. அப்பவே இந்த பிரச்சனை இருந்திருக்கா?..

    தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் வெளிவந்த பல காமெடி திரைப்படங்கள் இன்றளவும் ஃபேமஸாக இருந்து வருகின்றது. இந்த திரைப்படங்கள் அனைத்துமே டிவிகளில் போடும்போது மக்கள் ஆவலுடன் கண்டுகளித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் சுந்தரா டிராவல்ஸ். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை காமெடியில் புகுந்து விளையாடி இருப்பார்கள்.

    இந்த திரைப்படம் மலையாள திரைப்படமான ‘ஈ பறக்கும் தளிக்கா’ என்கின்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் தமிழில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் முரளி, வடிவேலு, ராதா, இயக்குனர் வாசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

    இந்த திரைப்படத்தை இயக்குனர் அசோகன் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்திற்கு பரணி இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தங்கராஜ் தயாரித்திருந்தார். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஒரு பேருந்து மற்றும் அதை சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து மிகச் சிறப்பாக கொண்டு சென்றிருப்பார்கள். படம் வெளியாகி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

    இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து தயாரிப்பாளர் தங்கராஜ் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘இந்த படத்தை எடுத்து முடித்த பிறகு எனக்கும் முரளிக்கும் இடையே சில மனஸ்தாபம் ஏற்பட்டது/ அதாவது படத்தை எடுத்து முடித்தவுடன் அதன் ஃபர்ஸ்ட் காப்பியை தனக்கு போட்டு காட்டும்படி முரளி கூறியிருந்தார்.

    ஆனால் நான் உங்களுக்கு சம்பளம் கொடுத்தாச்சு அல்லவா அது எல்லாம் உங்களுக்கு எதற்கு என்று ஃபர்ஸ்ட் காப்பியை போட்டு காட்ட முடியாது என்று கூறிவிட்டேன். அதன் பிறகு முரளி நேராக சென்று விஜயகாந்த் அவர்களிடம் கம்ப்ளைன்ட் பண்ணி விட்டார். நான் எப்போதும் நடிகர் சங்கத்தில் தான் அதிகமாக இருப்பேன். அங்கு தான் விஜயகாந்த் சார் இருப்பார்.

    அவருடன் தான் பெரும்பாலான நேரங்களை செலவிடுவேன். ஒரு நாள் அவரை பார்க்க செல்லும் போது நடிகர் முரளி அங்கு இருந்தார். என்னை பார்த்ததும் உங்கள் மீது நான் மிகுந்த கோபத்தில் இருக்கின்றேன் என்றார், விஜயகாந்த் உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை அவர் படத்தை போட்டு காட்ட தானே சொன்னார் காட்டி விட வேண்டியது தானே என்று கூறினார்.

    பிறகு விஜயகாந்த் சார் வார்த்தைக்காக படத்தை போட்டு காட்டினேன். நான், முரளி, விஜயகாந்த் சார் மூவரும் அமர்ந்து அந்த திரைப்படத்தை பார்த்தோம். படத்தை பார்த்து முடித்து விட்டு விஜயகாந்த் அவர்கள் மிகவும் பாராட்டினார்கள்’ என்று கூறியிருந்தார். தற்போது தான் படங்களை எடுத்து முடித்த பிறகு இயக்குனர் தயாரிப்பாளருக்கு படத்தை போட்டு காட்ட மறுக்கின்றார் என்றெல்லாம் பிரச்சனை வருகின்றது என்று பார்த்தால் அப்போது இந்த பிரச்சனை எல்லாம் இருந்திருக்கின்றது.

  • வாயை விட்டு அடி வாங்கி மயங்கி விழுந்த மன்சூர் அலிகான்!.. விஜயகாந்த் பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்!..

    Mansoor alikhan: திரைத்துறையில் டெரரான துறைதான் சண்டை பயிற்சி அமைப்பது. ஒவ்வொரு ஸ்டண்ட் இயக்குனரிடமும் பல சண்டை கலைஞர்கள் இருப்பார்கள். சண்டை பயிற்சி யூனியனில் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் குடும்பங்கள் இருக்கிறது. தமிழ் திரையுலகில் உருவாகும் 90 சதவீத படங்களில் சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. எனவே, அதை நம்பியே பல கலைஞர்கள் இருக்கிறார்கள்.

    ஸ்டண்ட் நடிகர்கள்: அதேசமயம் ஸ்டண்ட் நடிகர்களின் வாழ்க்கை எப்போதும் ரிஸ்க் நிறைந்ததாகவே இருக்கிறது. சண்டை காட்சி படமாக்கப்படும்போது ஆபத்தான காட்சிகளில் நடிக்கும் சில நடிகர்கள் உயிரையும் விட்டிருக்கிறார்கள். ஷங்கரின் அந்நியன் படம் உருவாகும்போது சண்டைக்காட்சியில் 2 பேர் இறந்து போனார்கள். அதேபோல், ரிஸ்க்கான காட்சிகளில் நடித்து பலருக்கும் கை, கால்கள் போயிருக்கிறது.

    ஷூட்டிங் நடக்கும்போது யாரிடம் கோபத்தை காட்டினாலும் ஹீரோக்கள் ஸ்டண்ட் நடிகர்களிடம் கோபத்தை காட்டமாட்டார்கள். ஏனெனில், அடிப்பது போல் நடிக்கும்போது உண்மையாக அடித்துவிடுவார்கள். இது பல நடிகர்களுக்கும் நடந்திருக்கிறது. ரஜினியின் குசேலன் படத்தில் கூட வடிவேலுவை இப்படித்தான் போட்டு பொளப்பார்கள்.

    கேப்டன் பிரபாகரன் வாய்ப்பு: அந்தவகையில், ஸ்டண்ட் நடிகர்களிடம் மன்சூர் அலிகான் அடி வாங்கிய நிகழ்வு பற்றி பார்ப்போம். ஸ்டண்ட் நடிகர், நடன நடிகர் என பல வேலைகளை செய்து வந்த அவரை கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக்கினார் விஜயகாந்த். மன்சூர் அலிகான் கொஞ்சம் வாய் பேசுவார்.

    அந்த படத்திலேயே அப்படி ஸ்டண்ட் நடிகர்களிடம் வாய் பேசியிருக்கிறார். ஒரு சண்டை காட்சியில் ஸ்டண்ட் நடிகர்கள் சுற்றி வளைத்து அவரை உண்மையிலேயே அடித்து விட்டார்களாம். அவர்கள் அடித்ததில் மன்சூர் அலிகான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டாராம். அதன்பின்னர்தான் ஸ்டண்ட் நடிகர்களிடம் அதிகம் பேசக்கூடாது என்கிற முடிவை எடுத்திருக்கிறார் மன்சூர் அலிகான்.

  • அந்த விஷயத்தில் எம்ஜிஆரை விஞ்சிய விஜயகாந்த்… கேப்டன்னாலே கெத்துதான்!

    தற்போது எல்லாம் தமிழ் சினிமாவில் நடிக்க வரும் கதாநாயகர்கள் பல மொழிப்படங்களில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மக்கள் திலகம் எம்ஜிஆர் அந்த வகையில் தனிப்பிறவி தான். அவர் தமிழைத் தவிர வேறு மொழிப்படங்களில் நடித்ததே இல்லை. அப்படி நடித்த ஒரே படம்தான் இது. என்னன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனே சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

    ஜெனோவா: மக்கள் திலகம் எம்ஜிஆர் வேற்று மொழிப்படங்களில் நடித்துள்ளாரான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். எம்ஜிஆர் ஒரே ஒரு வேற்றுமொழிப்படத்தில் தான் நடித்துள்ளார்.

    அதன் பெயர் ஜெனோவா. இது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவானது. இந்தப் படத்தில்தான் எம்எஸ்.விஸ்வநாதன் முதன்முறையாக அறிமுகம் ஆனார்.

    கருப்பு எம்ஜிஆர்: எம்ஜிஆர் இப்படின்னா அதே மாதிரிதான் கருப்பு எம்ஜிஆர். அவர் ஒரு படி மேலன்னு சொல்லலாம். அவர் தமிழைத் தவிர இதுவரை வேறு எந்த மொழிப்படங்களிலும் நடிக்கவில்லை. விஜயகாந்த் 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்துள்ளார் என்றால் அந்த பெருமை தமிழ்த்திரை உலகிலேயே அவரை மட்டுமேச் சாரும்.

    தனித்துத் தெரிந்தவர்: பிலிம் இன்ஸடிட்யூட் மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார். சண்டைக்காட்சிகளா? எனக்கு டூப்பே வேண்டாம் என்று மறுத்துவிடுவார். கமல், ரஜினி என இரு பெரும் ஜாம்பவான்கள் மட்டுமே கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் அவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்துத் தெரிந்தவர் தான் விஜயகாந்த்.

    இளம் நடிகர்களின் வளர்ச்சியில் அக்கறை: மனிதாபிமானம் மிக்க கேப்டன். நடிகராக இருந்தே நடிகர் சங்கத்துக்குத் தலைவராகவும் ஆனார். இளம் நடிகர்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டி அவர்களைக் கைகொடுத்துத் தூக்கி விட்டவர் இவர்தான். ஏழை எளியவர்களுக்கு உதவ முதல் ஆளாக ஓடோடி வருபவர் விஜயகாந்த் தான். இவரை கருப்பு எம்ஜிஆருன்னும், புரட்சிக்கலைஞருன்னும் ரசிகர்கள் அன்போடு அழைத்தனர்.

  • விஜயகாந்துக்காக சத்யராஜ் சொன்ன கதை இந்தப் படம்தானா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே

    சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி மக்களின் அபிமானங்களை பெற்ற கலைஞராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். தனக்கென தனி முத்திரை பதித்து ஏகப்பட்ட ரசிகர்களை தன்னகத்தே கொண்டவர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் 150 படங்களுக்கு மேல் நடித்து சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் .எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நடிகர் விஜயகாந்த் .

    அதைப்போல அரசியலிலும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். அரசியலில் குதித்த குறுகிய காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதாவுக்கு எதிராக சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் விஜயகாந்த். அவர் இறங்கும் இடம் கெத்து என்பதைப் போல ஒரே பரபரப்பாக தான் இருக்கும் .இந்த நிலையில் சத்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் ஒரு படம் உருவாகுவதாக இருந்ததாம்.

    இதையும் படிங்க: திருப்பதியில் சந்தானம்.. லட்டு கொடுக்கப்போன ரசிகர்! சந்தானத்தின் ரியாக்‌ஷனை பாருங்க

    அதைப்பற்றி சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதற்கு முன் சத்யராஜ் 25 ஆவது ஆண்டு விழாவை தமிழ் சினிமா கொண்டாடியது. அப்போது விஜயகாந்த் மேடையில் தோன்றி சத்யராஜ் எனக்காக ஒரு கதை சொன்னார். ஆனால் அந்த படம் எடுக்க முடியாமல் போய்விட்டது என்ற ஒரு தகவலை கூறி இருப்பார் .இதைப் பற்றி சத்யராஜிடம் கேட்டதற்கு  ‘ஆமாம் நூறாவது நாள் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது விஜயை சந்தித்து அவருக்காக ஒரு கதை சொன்னேன் .

    அதைக் கேட்டதும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது .உடனே பண்ணலாம் என கூறினார். ஆனால் நூறாவது நாள் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்திற்கு பிறகு நான் பிஸியாகிவிட்டேன். அதனால் என்னால் அவரை வைத்து இயக்க முடியவில்லை. அதனால் அந்த கதையை தெலுங்கில் விற்று விட்டேன். தெலுங்கில் அந்தக் கதையை கர்ஜா தொங்கன் என்ற பெயரில் மணிவண்ணன் இயக்கினார்.

    இதையும் படிங்க: திருமண விழாவில் நயன்!.. அட நம்ம தனுஷும் போயிருக்காரே!.. அதுவும் இவ்வளவு பக்கத்துலயா!..

    அதில் சுமன் ஹீரோவாகவும் விஜயசாந்தி ஹீரோயின் ஆகவும் நடித்திருந்தனர். அந்த படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது’ என கூறினார் சத்யராஜ் .தற்போது சத்யராஜ் கூலி திரைப்படத்தில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போல ஜீப்ரா என்ற படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .தமிழ் தெலுங்கு கன்னடம் என அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் சத்யராஜ்.

  • என் கூட நடிக்க மாட்டேன்னு விஜயகாந்த் சொல்லிட்டாரு.. நடிகை சொன்னதின் பின்னணி..

    Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் புரட்சிக் கலைஞர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். அனைவரிடத்திலும் சகஜமாக எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் பழகும் ஒரு உன்னதமான மனிதர் விஜயகாந்த். சினிமாவில் மட்டுமல்ல பொதுவெளியிலும் இவருக்கு என ஒரு தனி மரியாதையே இன்று வரை இருந்து வருகிறது .

    ரஜினி கமல் இவர்களைத் தாண்டி விஜயகாந்துக்கு என  ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். ஒருவரின் பெருமை அவர் போன பிறகுதான் தெரியும் என்று சொல்வார்கள். அது விஜயகாந்த் வாழ்க்கையில் உண்மையாகி இருக்கிறது. அவர் இருக்கும் வரை யாரும் அவரை கொண்டாடவில்லை. அவர் போன பிறகுதான் அவருடைய பெருமையை கூறி வருகிறார்கள்.

    இதையும் படிங்க: SaiPallavi: சாய்பல்லவியின் கிரஷ் யாரு தெரியுமா? அட இவ்ளோ ஓப்பனா சொல்றாங்க.. மனைவிக்கு தெரிஞ்சா?

    எம்ஜிஆருக்கு அடுத்து:விஜயகாந்தின் இறப்பிற்கு லட்சக்கணக்கான பேர் வந்து அஞ்சலி செலுத்துவதை பார்க்க முடிந்தது. இதுவரை இல்லாத ஒரு கூட்டம் விஜயகாந்துக்காக கூடியது என்றே சொல்லலாம் .எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக விஜயகாந்த் இறப்பிற்கு தான் அவ்வளவு கூட்டத்தை பார்க்க முடிந்தது என்றும் பல பேர் கூறினார்கள். எம்ஜிஆரை போல விஜயகாந்த் அண்ணன் தங்கை பாசத்துடனும் சகோதரத்துவத்துடன் பழகுவதில் ஒரு சிறந்த மனிதராக இருந்திருக்கிறார்.

    இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் இவரைப் பற்றி எந்த ஒரு கிசுகிசுக்களும் வந்ததே இல்லை. நடிகை ராதிகாவை காதலித்தார் என்பதை விட வேறு எந்த பெண்ணோடும் இவரை இணைத்து பேசியதே இல்லை. அந்த அளவுக்கு ஒரு கண்ணியமான நடிகராகவும் இருந்திருக்கிறார் விஜயகாந்த். இந்த நிலையில் பிரபல நடிகை ஊர்வசி விஜயகாந்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

    தங்கச்சியை போய் ஜோடியா?:ஊர்வசியை எப்போதுமே விஜயகாந்த் தங்கச்சி தங்கச்சி என்று தான் அழைப்பாராம். விஜயகாந்துடன் இணைந்து இரண்டே படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறாராம் ஊர்வசி. ஊர்வசி ஹீரோயின் என சொன்னதும் முதலில் விஜயகாந்த் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம். தங்கச்சி என அவருடன் பழகி வருகிறேன். எப்படி எனக்கு ஜோடியாக ஊர்வசியை நினைக்க முடியும் என்ற ஒரு காரணத்தினால் தான் விஜயகாந்த் நடிக்க மாட்டேன் என சொல்லி இருக்கிறார்.

    urvasi
    urvasi

    இதையும் படிங்க: ஜாலி போலீசாக வைப் பண்ணும் கார்த்தி!… வா வாத்தியாரே டீசரே சும்மா தாறுமாறா இருக்கே?!..

    அதன் பிறகு அனைவரும் சம்மதிக்க வைத்து படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல படத்தில் நடிக்கும் பொழுது விஜயகாந்த்  ‘அவருடைய கலர் என்ன. என்னுடைய கலர் என்ன .கிட்டவே நிற்க முடியல’ என்றெல்லாம் கலரை வைத்து கிண்டல் பண்ணி பேசுவாராம் விஜயகாந்த். இதை ஒரு பேட்டியில் ஊர்வசி கூறி இருக்கிறார்.

    இதே போல் தான் நடிகை நளினியும் சொல்லியிருந்தார். எப்போதுமே விஜயகாந்தை அண்ணன் என்று தான் அழைப்பேன். அவரும் என்னை தங்கை போன்று தான் பாசத்துடன் பழகி வந்தார். அதனாலேயே நாங்கள் நடித்த படங்களில் நெருங்கி நடிக்கிற மாதிரி சீன் இருந்தால் எங்களுக்குள் ஒர்க் அவுட்டே ஆகாது என்று நளினி ஒரு பேட்டியில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • மாசத்துல பாதி நாள் விஜயகாந்த் இங்கதான் இருப்பாராம்.. தோண்ட தோண்ட அரிய தகவல்

    Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக இருந்தவர் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மத்தியில் தனக்கான ஒரு தனி இடம் பிடித்தவர் .எல்லாருக்கும் எல்லாம் என்பது விஜயகாந்திற்கு மிகவும் பொருந்தும். தனக்கு என்ன மாதிரியான வசதிகள் கொடுக்கப்படுகிறதோ அதுதான் தன் யுனிட்டில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர் விஜயகாந்த்.

    ஒரே வகையான உணவு: அதற்கு உதாரணமாக அவர் படப்பிடிப்பில் விஜயகாந்துக்கு என்ன மாதிரியான உணவுகள் வழங்கப்படுகிறதோ அதுதான் அங்கு வேலை செய்யும் அனைத்து டெக்னீசியன்களுக்கும் கிடைக்க வழிவகை செய்தார். அது கடைசி வரை தொடர்ந்து கொண்டே இருந்தது. பறப்பன, நீந்துவன, ஊர்வன, நடப்பன என எதுவாக இருந்தாலும் எல்லாருக்கும் அது கிடைக்க ஏற்பாடு செய்தார்.

    இதையும் படிங்க: Shariq: என் pant-அ பிடிச்சு! முழு நேர வேலையாவே இததான் பண்றாரு போல.. குசும்பு பிடிச்ச ஷாரிக்

    சினிமாவில் எப்படி ஒரு சிறந்த நடிகராக இருந்தாரோ அதை போல அரசியலிலும் ஒரு நல்ல தலைவராக இருந்தார் விஜயகாந்த். யாருமே எதிர்க்க முடியாத திமுக, அதிமுக என இந்த இரு கட்சிகளையும் ஆட்டம் காண வைத்தார் விஜயகாந்த். அரசியலுக்குள் நுழைந்த குறுகிய காலத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவராக உட்கார்ந்தார். அது அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

    கெத்து காட்டிய கேப்டன்: செல்வி ஜெயலலிதாவிற்கு எதிர் இருக்கையில் அமர்ந்து கெத்தாக அவர் பேசிய வசனங்கள் இன்றுவரை மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவில் பிரச்சார பேச்சாளராக இருந்தவர் நடிகை விந்தியா. ஜெயலலிதாவால் மிகவும் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் இணைந்தார் விந்தியா. இவர் விஜயகாந்துக்கு எதிராக சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

    vindhya
    vindhya

    இதையும் படிங்க: Nepoleon: நெப்போலியன் மகன் தனுஷுக்கு மனைவி கொடுத்த முதல் பரிசு!… செம லவ்வா இருக்கே!…

    ஆனால் அரசியலில் கொள்கைகளில் எங்களுக்குள் முரண்பாடு இருந்தாலும் சினிமாவில் என்னுடைய ஃபேவரைட்டான நடிகர் என்றால் அது விஜயகாந்த்தான் என ஒரு பேட்டியில் கூறினார் விந்தியா. ஏழை பணக்காரன், இயக்குனர் , தயாரிப்பாளர் என எந்த வேறுபாடும் பார்க்காமல் சகஜமாக பழகக் கூடியவர். மாசத்துல பாதி நாள் விஜயகாந்த் ராயப்பேட்டை மருத்துவமனையில் தான் இருப்பார். ஏனெனில் அங்கு சிகிச்சைக்காக பல பேருக்கு உதவிகள் செய்வதே விஜயகாந்த்தான் என விந்தியா கூறினார்.

  • Vijayakanth: கேப்டனை கொண்டாடுறதுக்கு இதுதான் காரணம்.. அவர் நடிச்ச இத்தனை படங்களில் மாறாத ஒன்னு

    Vijayakanth: தமிழ் சினிமாவில் எத்தனையோ பல நல்ல நடிகர்களை நாம் சந்தித்திருக்கிறோம். அதில் சில பேரை மட்டும்தான் காலம் கடந்தும் நினைவில் வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களை உதாரணமாக சொல்லலாம். நடிப்பிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் சிவாஜி. அதை போல நல்ல குணத்திற்கு உதாரணமாக வாழ்ந்தவர் எம்ஜிஆர். அந்த வரிசையில் இப்போது விஜயகாந்தும் இணைந்திருக்கிறார்.

    ரஜினி, கமலுக்கு டஃப் கொடுத்த நடிகர்: ரஜினி கமல் என இருவருமே ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை தன் கையில் வைத்திருந்த சமயம். அப்போது திடீரென முளைத்து வந்தார் விஜயகாந்த். வில்லன் , துணை நடிகர் என ஆரம்பத்தில் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் பின்னாளில் ரஜினி கமலுக்கே டஃப் கொடுக்கும் நடிகராக மாறினார் விஜயகாந்த். பார்ப்பதற்கு ரஜினியை போன்ற தோற்றத்தில் இருந்ததனால் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.

    இதையும் படிங்க: Vijay: இதெல்லாம் எம்ஜிஆர், சிவாஜி காலத்துலயே பண்ணிட்டாங்க… விஜய் செஞ்சது பழைய டெக்னிக் தான்..!

    எம்ஜிஆர் போன்ற குணம்: ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் எம்ஜிஆருக்கு அடுத்த படியாக இருந்தவர் விஜயகாந்த். யாருக்காவது எந்த நேரத்தில் உதவி வேண்டுமானாலும் உடனே ஓடி வந்து உதவி செய்வார். அப்படித்தான் ஒரு சமயம் இரவு 12 மணி இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏதோ பிரச்சினை என போன் வர உடனே அங்கு சென்று அந்த பிரச்சினயை தீர்த்து வைத்தார் விஜயகாந்த்.

    இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் அஜய் ரத்தினம் விஜயகாந்தை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அஜர் ரத்தினம் பல படங்களில் வில்லனாக போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் ராதிகாவின் சித்தி தொடரில் நடித்து மிகப்பெரிய புகழ் பெற்றார். அதில் ராதிகாவிற்கு மேலாளராக அஜய் ரத்தினம் நடித்திருப்பார். அவர் கூறியதாவது:

    ajai
    ajai

    100 படங்களில் மாறாதது: விஜயகாந்த் 100 படங்கள் நடித்திருப்பார். அந்த 100 படங்களுக்கும் ஒரே கேமிரா மேன் தான். ஒரே மேனேஜர்தான்.ஒரே காஸ்டியூமர்தான். நேரடியாக அவரே மக்களை வந்து சந்தித்து லவ் பண்றவரு. எம்ஜிஆருக்கு அப்புறம் அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு என்ற முறையை கொண்டு வந்தார் விஜயகாந்த் என அஜய் ரத்தினம் கூறினார்.

    இதையும் படிங்க: Sivakarthikeyan: அடுத்த விஜய்?!. நான் நேத்து வந்தவன்!. அது ரொம்ப ஸ்பெஷல்!.. ஃபீல் ஆகும் எஸ்.கே…

    எல்லா வகை உணவு: மூன்று வகை உணவுகள் இருக்கும். கோழி, மீன், ஆட்டிறைச்சி என எல்லா வகை உணவுகளும் கண்டிப்பாக தினமும் இருக்கும். கூடவே முட்டையும் இருக்கும். தான் மட்டும் சாப்பிட்டால் போதாது. அனைவருக்கும் இது கிடைக்க வேண்டும் என எல்லாருக்குமே இந்த உணவுகள்தான் பரிமாறப்பட்டது. விளையாடிட்டே இருப்பார். அதுவும் எல்லாரிடமும் ஹேப்பியா விளையாடிட்டே இருப்பார்.

    கேப்டன் என்ற பெயர்: யாருக்காவது பிறந்த நாள் அல்லது திருமண நாள் என்றால் உடனே விஜயகாந்தை பார்க்க வந்து விடுவார்கள். வாழ்த்துக்களை பெற்று செல்வார்கள். அதனால்தான் அவருக்கு கேப்டன் என்ற பெயர் வந்தது. இந்தளவுக்கு இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். இப்படிப்பட்ட குணம் படைத்தவரை இன்று வரை கொண்டாடுவதற்கு இதுதான் காரணம் என அஜய் ரத்தினம் கூறினார்.

  • கேப்டன் நடிப்பில் வெளியான டாப் 5 திரில்லர் படங்கள்! கொலை நடுங்க வைத்த ‘ஊமை விழிகள்’

    தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் மறைவு திரையுலகத்திற்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்தது. எம்ஜிஆரை எந்தளவு ரசிகர்கள் போற்றி வருகிறார்களோ அதே அளவுக்கு இன்று வரை விஜயகாந்தை போற்றி பாராட்டி வருகிறார்கள் மக்கள். அவரின் நினைவிடத்திற்கு நாள்தோறும் சென்று அவரை வணங்கும் மக்களை இப்போது வரை பார்க்க முடிகிறது.

    அந்தளவுக்கு ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களின் நெஞ்சங்களில் ஆழமாக குடிபெயர்ந்திருக்கிறார் விஜயகாந்த்.அவருடைய மகன் விஜயபிரபாகரன் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இன்னொரு மகனான சண்முக பாண்டியன் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரில்லர் மற்றும் ஆக்‌ஷன் கதையில் அமைந்த படங்களை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.

    எப்போது டிவியில் போட்டாலும் சளிக்காமல் நம்மை பார்க்க தூண்டும் விஜயகாந்தின் டாப் 5 திரில்லர் படங்களைத்தான் பார்க்க இருக்கிறோம். 1991 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் விஜயகாந்துக்கு 100வது படமாக அமைந்தது. அதுவும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. காட்டில் வில்லத்தனம் பண்ணிக் கொண்டு இருக்கும் மன்சூர் அலிகானை வேட்டையாடும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார்.

    அடுத்ததாக 1986 ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் படத்தை சொல்லலாம். தீன தயாளன் கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக வரும் விஜயகாந்த் சோழா பிக்னிக் வில்லேஜில் நடக்கும் மர்மமான கொலைகளை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை. இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியது.

    அடுத்ததாக 1984 ஆம் ஆண்டு மணி வண்ணன் இயக்கத்தில் வெளியான நூறாவது நாள் திரைப்படத்தை குறிப்பிடலாம். நளினிக்கு வரும் மர்மமான கனவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு தரமான க்ரைம் படமாக நூறாவது நாள் திரைப்படம் அமைந்தது.

    அடுத்ததாக புலன் விசாரணை படத்தை சொல்லலாம். இந்தப் படத்தில் வில்லனாக வரும் ஆனந்த் ராஜை பிரபல ரவுடி ஆட்டோ சங்கருடன் ஒப்பிட்டு வடிவமைத்திருப்பார்கள். மேலும் சில மருத்துவமனையில் நடைபெறும் உடல் உறுப்பு திருட்டுக்களை மையப்படுத்தி வந்த ஒரு தரமான இன்வெஸ்டிகேஷன் படமாக புலன் விசாரணை திரைப்படம் அமைந்தது.

    அடுத்ததாக கடலில் மர்மமான முறையில் கடலில் சில பேர் இறந்துபோகிறார்கள். அதற்கான காரணத்தை திறமையான நேவி ஆஃபிஸர் கதாபாத்திரத்தில் வரும் விஜயகாந்த் எப்படி கண்டிபிடித்தார் என்பதுதான் உளவுத்துறை படத்தின் கதை. இது 1998 ஆம் ஆண்டு வெளியான பக்கா ஆக்‌ஷன் கலந்த க்ரைம் திரில்லர் படமாகும்.

  • தயாரிப்பாளரின் மீசையை எடுக்க வைத்த முரளி! தெரிஞ்சு விஜயகாந்த் சும்மா இருப்பாரா?

    முரளி வடிவேலு நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை அசோகன் என்பவர் இயக்க எஸ்.வி. தங்கராஜ் படத்தை தயாரித்தார். ஆனால் இந்தப் படம் ஆரம்பிக்கும் போது ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான தங்கராஜ். முரளி மற்றும் வடிவேலுவால் தான் என்னென்ன பிரச்சினைக்கு உட்பட்டேன் என்றும் விஜயகாந்த் தான் எல்லா பிரச்சினையையும் சரி செய்தார் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் தங்கராஜ்.

    எப்படியாவது ஒரு தனி ஆளாக படத்தை தயாரித்து சினிமாவில் நல்ல பேர் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்திருக்கிறார் தங்கராஜ். அதனால் மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியான ஈ பறக்கும் தளிகா படத்தை தமிழில் எடுக்க முயற்சி செய்தார் தங்கராஜ். அந்தப் படம் தான் சுந்தரா டிராவல்ஸ்.

    எத்தனையோ நடிகர்களிடம் ஈ பறக்கும் தளிகா படத்தின் கேசட்டை கொடுத்து பார்க்க சொல்லியிருக்கிறார் தங்கராஜ். ஆனால் படத்தை பார்த்த அனைவரும் இந்தப் படத்தில் நடிக்க மாட்டோம் என்று சொல்லி மறுத்துவிட்டார்களாம். கடைசியாக முரளியிடம் கொடுத்து பார்க்க சொல்லியிருக்கிறார். படத்தை பார்த்ததும் முரளிக்கு படம் பிடித்துவிட்டது. ஆனால் நடிக்க முடியாது என சொல்லியிருக்கிறார்.

    ஏனெனில் மலையாளத்தில் திலீப் பிரம்மாதமாக நடித்திருந்தாராம். அவர் போல என்னால் நடிக்க முடியாது என சொல்ல தயாரிப்பாளரோ ‘அதை பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறார். கூடவே வடிவேலுவையும் ஒப்பந்தம் செய்து படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

    படப்பிடிப்பின் நடுவே முரளி மது அருந்திவிட்டு பெரும் பிரச்சினை செய்தாராம். அவருடன் வடிவேலுவும் சேர்ந்து கொள்வாராம். இருவரும் சேர்ந்து தயாரிப்பாளர் தங்கராஜை மிகவும் வேதனைக்கு ஆளாக்கியிருக்கிறார். உடனே தங்கராஜ் விஜயகாந்திடம் பிரச்சினையை சொல்ல நேராக படப்பிடிப்பிற்கே வந்துவிட்டாராம் விஜயகாந்த்.

    முரளி மற்றும் வடிவேலுவை பார்த்து சத்தம் போட்டாராம். இது என் படம். ஒழுங்கா இருந்து நடித்துக் கொடுக்கனும் என சொல்லி சத்தம் போட்டு சென்றாராம். அதன் பிறகு ஒழுங்காக படப்பிடிப்பிற்கு முரளியும் வடிவேலுவும் வந்தார்களாம். அதன் பின் ஒரு நாள் இரவு 12 மணி அளவில் மீண்டும் தங்கராஜுடன் பிரச்சினை செய்தாராம் முரளி. நான் நடிக்க மாட்டேன். அப்படி நடிக்கனும்னா உன் மீசையை எடுக்கனும் என முரளி தங்கராஜிடம் கேட்டிருக்கிறார்.

    இவருக்கு எப்படியாவது படம் முடியவேண்டும் என்ற எண்ணத்தில் அன்றிரவே மீசையையும் எடுத்துவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் இந்த விஷயத்தை விஜயகாந்துக்கு போன் செய்து சொல்ல இரவு 12 மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்துவிட்டாராம் விஜயகாந்த். தங்கராஜை பார்த்ததும் விஜயகாந்த் முகமெல்லாம் சிவந்து போய்விட்டதாம். முரளியை பார்த்து மிகவும் ஆவேசமாக பேசி சத்தம் போட்டு போனாராம் விஜயகாந்த். இப்படித்தான் சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் எடுத்தேன் என ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் தங்கராஜ் கூறினார்.