Tag: AK64

  • விஜய் பத்தி தப்பா பேசிய நடிகர்!. படத்திலிருந்து தூக்கிய அஜித்!.. அந்த நடிகர் அவரா?….

    விஜய் பத்தி தப்பா பேசிய நடிகர்!. படத்திலிருந்து தூக்கிய அஜித்!.. அந்த நடிகர் அவரா?….

    நடிகர் அஜித்தும், விஜயும் சமகாலத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள்தான். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறி மாஸ் ஹீரோவாக மாறியவர்கள். எம்ஜிஆருக்கு சிவாஜி போல, ரஜினிக்கு கமலை போல, விஜய்க்கு போட்டி நடிகராக அஜித் இருந்தார்.

    அதனால்தான், இருவரின் ரசிகர்களும் அடிக்கடி மோதிக் கொண்டார்கள்.
    அதேநேரம் அஜித்துக்கும், விஜய்க்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இப்போதும் அது தொடர்கிறது. விஜய் அரசியல் கட்சி துவங்கிய போது முதல் ஆளாக திரையுலகில் இருந்து அஜித் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து சொன்னதாக சொல்லப்படுகிறது. மேலும், ஒரு பேட்டியில் கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே காரணமில்லை என அஜித் கூறினார்.

    அதேபோல் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் ‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் சொன்னதாக செய்திகள் வெளியான போது உடனே அதை மறுத்து செய்தி வெளியிட்டார். இதனால் விஜய் ரசிகர்களும் அஜித்தை கொண்டாட துவங்கிவிட்டனர். இந்நிலையில்தான் ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.

    அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபலமான நடிகர் குணச்சித்திர நடிகராக நடிக்கவிருந்தார். ஆனால் அந்த நடிகர் தொடர்ந்து விஜயை பற்றி நெகட்டிவாக பேசிக் கொண்டே இருந்தால் கடுப்பான அஜித் ஆதிக்கை அழைத்து ‘அவர் விஜயை பற்றி மிகவும் மோசமாக பேசுகிறார். படத்திலிருந்து அவரை தூக்கிடுங்க’ என சொல்லிவிட்டாராம்.

    இப்போது இதையும் விஜய் ரசிகர்கள்கொண்டாடி வருகிறார்கள்.. அந்த நடிகர் அனேகமாக பிரகாஷ்ராஜாக இருக்கலாம் என ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.தேர்தலுக்கு முன்பு திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பிரகாஷ்ராஜ் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

  • ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அல்வா!.. அஜித்தின் புதிய படத்தை இயக்கப்போவது அவரா?!..

    ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அல்வா!.. அஜித்தின் புதிய படத்தை இயக்கப்போவது அவரா?!..

    நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது கார் ரேஸ்களிலும் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக அஜித் தொடர்ந்து கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார். குட் பேட் அக்லி படத்திற்கு பின் இதுவரை அஜித் எந்த படத்திலும் நடிக்கவில்லை. குட் பேட் அக்லி படம் சூப்பர்ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்குகிறார் என சொல்லப்பட்டது. ஆதிக் ரவிச்சந்திரனும் அதை உறுதி செய்தார்..

    ஆனால் அஜித் 185 கோடி சம்பளம் கேட்டதால் அந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. இறுதியாக மும்பையை சேர்ந்த ஒரு தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான், இப்போது ஒரு டிவிஸ்ட் வந்திருக்கிறது.
    சமீபத்தில் சிறுத்தை சிவா அஜித்தை சந்தித்திருக்கிறார்.

    அப்போது, கங்குவா படத்திற்கு பின் என்னை யாரும் மதிப்பதில்லை. என்னிடம் கதை கேட்க எந்த நடிகரும் முன்வருவதில்லை. ரஜினி சாரை சந்தித்து பேசினேன். ‘பெரிய ஹீரோவை வைத்து படம் பண்ணுங்கள்’ என சொல்லி அனுப்பிவிட்டார். விஜய் சேதுபதியிடம் பேசினேன். முழுக்கதையையும் கொடுங்கள். படித்துவிட்டு சொல்கிறேன்’ என்கிறார் என புலம்பியிருக்கிறார்.

    இதைக்கேட்டு அப்செட் ஆன அஜித் ‘என்னுடைய அடுத்த படத்துக்கு நீங்கதான் இயக்குனர்’ என சொல்லிவிட்டதாக செய்திகள் கசிந்திருக்கிறது. எனவே, அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு சிறுத்தை சிவாவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்துக்காக ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு வருடமாக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித்தை வச்சி எடுக்கும் படம் வேறவெல்ல இருக்கும்!.. ஹைப் ஏத்தும் SK..

    அஜித்தை வச்சி எடுக்கும் படம் வேறவெல்ல இருக்கும்!.. ஹைப் ஏத்தும் SK..

    தொலைக்காட்சியில் ஆங்கராக பணிபுரிந்து அதன்பின் சினிமாவில் நுழைந்து தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்தவர்தான் சிவகார்த்திகேயன்.
    சில வருடங்களிலேயே தனக்கு முன்னால் சினிமாவுக்கு வந்த பல சீனியர் நடிகர்களையும் ஓரங்கட்டி அவர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்..

    சினிமாவில் ஹீரோவாக வளரும்போதே தயாரிப்பாளராகவும் மாறினார்.. அவர் நடித்த சில படங்களை அவரே தயாரித்தார்.. அதில் அவருக்கு 100 கோடி வரை கடன் வரவே அதை நிறுத்திவிட்டு சின்ன பட்ஜெட் படங்களை மட்டும் தற்போது தயாரித்து வருகிறார்.. அப்படி அவரின் தலைப்பில் நேற்று வெளியான திரைப்படம்தான் தாய் கிழவி.

    இந்த படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்க ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது
    . இந்நிலையில் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது ‘அஜித்தை வைத்து நீங்கள் படம் தயாரிப்பீர்களா?’ என ஒருவர் கேள்வி எழுப்பினார்..

    அதற்கு பதில் சொன்ன சிவகார்த்திகேயன் ‘அந்த அளவுக்கு என்னுடைய நிறுவனம் பெரிய நிறுவனம் அல்ல.. நாங்கள் சின்ன சின்ன பட்ஜெட்டில் படங்களை எடுத்து வருகிறோம்.. அஜித் சாரை வைத்து படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் செய்வோம். அது வேற லெவலில் இருக்கும்.. அது எனக்கு கனவுதான்’ என பதில் சொல்லியிருக்கிறார்..

  • AK64: ரேஸுக்கு கொஞ்சம் கேப்!.. 2 படங்களை இறக்கும் ஏகே!.. வெளியான அப்டேட்!..

    நடிகர் அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். எனவே குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் அவர் எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை.

    அஜித்தின் 64வது படத்தை குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியானாலும் தயாரிப்பாளர் முடிவாகவில்லை. அதற்கு காரணம் இந்த படத்தில் நடிக்க அஜித் 185 கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. எனவே அவ்வளவு சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை..

    எனவே மும்பைக்கு சென்று தயாரிப்பாளரை அஜித் தரப்பு தேடியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் தற்போது ஒரு புதிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. அதாவது அஜித்தின் 64வது படத்தின் தயாரிப்பாளர் உறுதியாகி விட்டதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களில் துவங்கவுள்ளதாகவும், 2027ம் வருடம் இப்படம் வெளியாகும் எனவும் சொல்கிறார்கள். அதேபோல் அஜித்தின் 65வது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும் 2027 மே மாதத்திற்கு பின்ர் வெளியாகும் என்ன சொல்கிறார்கள்..

    சமீபத்தில் ஊடகத்தில் பேசிய சிறுத்தை சிவா ‘அடுத்த அஜித் சாருடன் எப்போது படம் பண்ணுவீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து என்னிடம் கேட்கிறார்கள்.. எல்லாம் சரியாக அமையும் போது அறிவிப்பு வெளியாகும்.. இது என்ன மாதிரியான படம் என்பதை இப்போது சொல்ல முடியாது.. அஜித் சார் அவருக்கு பிடித்த கார் ரேஸ் மற்றும் சினிமா இரண்டிலும் பயணித்து வருகிறார்’
    என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Ajith: அந்த இயக்குனருடன் இணையும் அஜித்!.. இது வேறலெவல் டிவிஸ்ட்!….

    தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக பார்க்கப்படுபவர் அஜித். பல வருடங்களாகவே நடிகர் விஜய்க்கு சரியான போட்டி நடிகராக அஜித் வலம் வந்தார். தற்போது விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் அஜித் முக்கிய நடிகராக பார்க்கப்படுகிறார். ஒருபக்கம் அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

    துபாய், ஐரோப்பிய நாடுகள், மலேசியா என பல நாடுகளிலும் நடந்த கார் ரேஸ் போட்டி தற்போது மீண்டும் துபாயில் நடந்து வருகிறது. இதில் அஜித்தின் டீம் கலந்து கொண்டு வருகிறது.. ஒருபககம், அஜித்தின் புதிய புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகியிருந்தாலும் இந்த படத்துக்கு இதுவரையிலும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.. அதற்கு முக்கிய காரணம் அஜித் 185 கோடி சம்பளம் கேட்கிறார்.. அவ்வளவு சம்பளத்தை அவருக்கு கொடுக்க இங்கே தயாரிப்பாளர்கள் யாரும் இல்லை. எனவே பேச்சுவார்த்தை இழுபறியிலேயே இருக்கிறது.

    இந்நிலையில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு பிறகு அஜித் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் தற்போது அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான டாக்குமெண்ட்ரியை இயக்குனர் ஏ.எல் விஜய்தான் எடுத்து வருகிறார்..

    அவருடன் பழகியதில் அவரை அஜித்துக்கு பிடித்து போனதால் ‘மீண்டும் நாம் இணைந்து ஒரு படம் செய்வோம்’ என அஜித் அவரிடம் சொல்லியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து க்ரீடம் படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். அஜித்தை வைத்து ஏ.எல். விஜய் இயக்கும் திரைப்படம் ஒரு குடும்ப காமெடி படமாக இருக்கும் என சொல்கிறார்கள்.. இது அஜித்தின் 65வது திரைப்படமாக இருக்கும்.

  • இப்ப விஜய் இல்ல.. அஜித்துக்கு மார்க்கெட் இல்ல!.. பிரபலம் பேட்டி!….

    நடிகர் அஜித்தும் விஜயும் சமகாலத்தில் தமிழ் சினிமாவில் வளர்ந்தவர்கள்தான்.. அஜித் சாக்லேட் பாய் லுக்கில் ரசிகர்களை இழுத்தால் விஜயோ தனது நடனத் திறமை மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.. இருவருமே துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்து படிப்படியாக ஆக்சன் ரூட்டுக்கு மாறினார்கள்.. அதேபோல் ஒரு கட்டத்தில் இருவருமே மாஸ் நடிகர்களாகவும் மாறினார்கள்..

    பில்லா, தீனா, மங்காத்தா போன்ற படங்களை அஜித் பயன்படுத்திக்கொண்டார். அதேபோல் பகவதி, திருமலை போன்ற படங்களை விஜய் பயன்படுத்திக் கொண்டார்.. விஜய் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது தெரிந்து அதற்கேற்ப சம்பளம் வாங்கினார் அஜித். எனவே விஜயை வைத்துதான் அஜித்துக்கு சம்பளம் என்கிற நிலையும் சினிமாவில் உருவானது..

    ஏனெனில் விஜயின் போட்டி நடிகராக அஜித் திரைத் துறையில் வலம் வந்தார்.. ஆனால் தற்போது விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றுவிட்டார்.. இந்நிலையில்தான் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. ஏனெனில் அஜித் 185 கோடி சம்பளம் கேட்கிறார். அதை கொடுக்க யாரும் முனவரவில்லை. அவர் தயாரிக்கிறார்.. இவர் தயாரிக்கிறார்.. என சமீப காலமாக செய்திகள் வெளியானாலும் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.. அஜித்தின் புதிய படத்தை தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் முன் வந்தாலும் ‘அஜித்துக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது. இவ்வளவு கோடி அட்வான்ஸ்.. லாபத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கு’ என்றுதான் பேசுகிறார்களாம்.

    இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ‘விஜய் சினிமாவில் இருந்த வரைக்கும்தான் அஜித்துக்கு மார்க்கெட் இருந்தது.. விஜயின் போட்டி நடிகர் என சொல்லி அவரும் ஒரு ரசிகர் கூட்டத்தை திரட்டினார்.. தற்போது அஜித்தின் படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் கூட முன்வரவில்லை’ எனக் கூறியிருக்கிறார்..

  • இறங்கிவந்த அஜித்!.. இவ்ளோதான் பட்ஜெட்!.. டேக் ஆப் ஆகும் AK64!….

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. ஒருபக்கம் கடந்த சில வருடங்களாகவே அஜித் தொடர்ந்து கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.. மேலும், அவரின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டது..

    ஆனால் அஜித் 185 கோடி சம்பளமாக கேட்டதாலும், படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி வந்ததாலும் இந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை .மும்பைக்கெல்லாம் சென்று தயாரிப்பாளரை தேடி வந்தார்கள்.. ஆனால், எதுவும் கிளிக் ஆகவில்லை. இந்நிலையில்தான், தற்போது மும்பையை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறது..

    ஆனால் இப்போதுள்ள வியாபாரப்படி 185 கோடி சம்பளமாக கொடுக்க முடியாது. 50 கோடி அட்வான்ஸ் கொடுக்கிறோம்.. படத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கு என சொல்ல அதை அஜித்தும் ஏற்றுக் கொண்டதாக செய்திகள் கசிந்திருக்கிறது.

    மொத்தமாக ஏகே 64 திரைப்படம் 167 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
    இந்த மாத இறுதிக்குள் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் எனத் தெரிகிறது.. அனேகமாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்..

  • AK64: அடுத்த பட அக்கப்போரு!.. நல்லவேளை கார் ரேஸை வச்சி தப்பிச்சிட்டாரு ஏ.கே!..

    அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடும் போட்டி, ரிமோட் ஹெலிகாப்டர், பைக்கில் பல நூறு கிலோ மீட்டர் தனியாக பயணம் செய்வது என அவருக்கு பிடித்த பல விஷயங்களில் அவருக்கு ஆர்வம் அதிகம். மோட்டார் ரேஸ் துறையில் சாதிக்க பணம் வேண்டும் என்பதற்காகத்தான் அஜித் சினிமாவுக்கே நடிக்கவந்தார் என சொல்வதுண்டு.

    90களில் சினிமாவில் நடித்துக்கொண்டே பைக் ரேஸ்களிலும் கலந்துகொண்டு வந்தார் அஜித். அப்போது சிலமுறை விபத்தில் சிக்கி அவரின் உடலில் பல இடங்களில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதனால், உடலில் அவருக்கு பல பிரச்சனைகளையும் ஏற்பட்டது.

    ஆனாலும் பைக் மற்றும் கார் ரேஸ் மீதான காதல் அஜித்துக்கு இன்னும் குறையவே இல்லை. திருமணத்திற்கு பின் பல வருடங்கள் கார் ரேஸ்களில் கலந்து கொள்ளாமல் இருந்த அஜித் தற்போது மீண்டும் கார் ரேஸ்களில் கலந்து கொள்ள துவங்கி விட்டார். தற்போது மலேசியாவில் நடக்கும் கார் ரேஸில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

    ajith

    ஒருபக்கம் அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல மாதங்களாகியும் இன்னும் அடுத்த அப்டேட் வெளியாகவில்லை. அதற்கு முக்கிய காரணம் அஜித் கேட்கும் 185 கோடி சம்பளம்தான். அஜித்துக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளரும் தயாராக இல்லை. எனவே மும்பைக்கு சென்று கூட தயாரிப்பாளர்களை தேடி பார்த்தார்கள். ஆனால் பலன் இல்லை. அந்த படம் அப்படியே தேங்கி நிற்கிறது.

    நல்லவேளை அஜித் இப்போது கார் ரேஸில் இருக்கிறார்.. எனவே, அவர் ரேஸில் இருப்பதால்தான் சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார் என பலரும் நினைக்கிறார்கள். இல்லை என்றால் அஜித்தின் அடுத்த படத்திற்கு தயாரிப்பாளரே கிடைக்கவில்லை என்கிற இமேஜ் வெளியே கசிந்திருக்கும். இது அஜித்துக்கு அவமானமாகவும் இருந்திருக்கும்.. நல்லவேளை கார் ரேஸ் அவரை அவரின் இமேஜை காப்பாற்றி விட்டது என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

  • வசூலே இல்ல.. ஆனா பல கோடி சம்பளம்!.. அஜித்தை கிழித்து தொங்கவிட்ட திருப்பூர் சுப்பிரமணியன்…

    80களில் மிகவும் குறைந்த செலவில்தான் படம் எடுத்தார்கள். அதற்கு முக்கிய காரணம் ஹீரோக்களின் சம்பளம் சில லட்சங்களில்தான் இருந்தது. ஆனால் ஹீரோக்களின் சம்பளம் படிப்படியாக உயர்ந்து இப்போது பெரிய நடிகர்களின் சம்பளம் 100 கோடியை தாண்டி விட்டது.

    அதுவும் விஜய் 250 கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. தற்போது விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு 185 கோடி சம்பளம் கேட்டதால் அந்த படம் இன்னமும் டேக் ஆப் ஆகாமல் இருக்கிறது.

    குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள படத்தில் அஜித் நடிப்பது உறுதியானது. ஆனால் அஜித்துக்கு 185 கோடி சம்பளம் மற்ற நடிகர், நடிகைகள் சம்பளம், படமெடுக்க என படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி வருகிறது. ஆனால் அஜித்துக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என கோலிவுட்டின் முக்கிய தயாரிப்பாளர்கள் மறுத்து விட மும்பைக்கு சென்று தயாரிப்பாளர்களை தேடி வருகிறார்கள். இதுவரை தயாரிப்பாளர் உறுதி செய்யப்படவில்லை.

    இந்நிலையில், இதுபற்றி உலகம் ஒன்றில் பேசிய வினியோகஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் ‘விஜய் சினிமாவிலிருந்து விலகிவிட்டார் என்பதால்தான் அஜித்தின் அடுத்தபட வேலைகள் துவங்காமல் இருக்கிறது என சொல்வதில் உண்மையில்லை. அஜித்தின் புதிய படம் டேக் ஆப் ஆகாமல் இருப்பதற்கு காரணம் அவர் கேட்கும் அதிக சம்பளம்தான்.

    300 கோடி பட்ஜெட்டில் படம் எடுக இங்கே ஆள் இல்லை. சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ், வேல்ஸ் இண்டர்நேஷனல் போன்ற தயாரிப்பாளர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் போட்ட பணத்தை எடுக்க முடியாது. ஏனெனில் வியாபாரம் இல்லை. தியேட்டர் மூலமாக வியாபாரம் இல்லை.. ஓடிடி மூலமும் வியாபாரம் இல்லை.. ஆடியோ மூலமும் வியாபாரம் இல்லை’ என பேசியிருக்கிறார்.

  • ரஜினி.. விஜய்.. அஜித்.. சூர்யா.. 2026-ல் ரிலீஸாகும் பெரிய நடிகர்களின் படங்கள்!..

    2025 கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த வருடத்தை பொருத்தவரை தமிழ் சினிமாவிற்கு சரியாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்த வருடம் நிறைய படங்கள் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். எனவே 2026 தங்களுக்கு கை கொடுக்கும் என சினிமா உலகினர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த வகையில் 2026ம் வருடம் என்னென்ன முக்கிய படங்கள் வெளியாகிறது என பார்ப்போம்.

    2026 துவக்கத்திலேயே அதாவது பொங்கல் விருந்தாக விஜயின் ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதியும், சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ம் தேதியும் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்களும் வசூலை அள்ளிவிட்டாலே 2026 நன்றாக இருக்கும் என விநியோகஸ்தர்கள் செண்டிமெண்டாக கருதுகிறார்கள்.

    lik
    lik

    அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த பல மாதங்களாக கிடப்பில் இருக்கும் LIK திரைப்படம் பிப்ரவரி 13ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு டைம் மெஷின் கலந்த சயின்ஸ் பிக்சன் கதை என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
    அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் 2026 மார்ச் மாதம் வெளியாகும் என்கிறார்கள். இந்த படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படாததால் ரிலீஸ் தேதி மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    அதேபோல் கார்த்தியின் சர்தார் 2 மற்றும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அவரின் 46வது திரைப்படம் ஆகிய இரண்டு படங்களும் மே மாதம் வெளியாகியுள்ளது. மேலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் ஜூன் மாதமும், போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அவரின் 54வது திரைப்படம் ஜூலை மாதமும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் 2026 தீபாவளிக்கும் வெளியாகியுள்ளது.

    மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் அரசன், சூர்யா தற்போது நடிக்க துவங்கியுள்ள அவரை 47 வது திரைப்படம் மற்றும் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படம் ஆகிய படங்களும் 2026 இரண்டாம் பாதியில் வெளியாகும் என தெரிகிறது. இதில் எந்தெந்த படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று அதிக வசூலை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.