Tag: AK64

  • AK64: புரட்யூசர் கிடைக்காமல் லோல் படும் ஆதிக் ரவிச்சந்திரன்!.. ஒரு முடிவுக்கு வாங்கப்பா!…

    குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்படவில்லை. அதற்கு காரணம் இந்த படத்தில் நடிக்க அஜித் கேட்ட 185 கோடி சம்பளம். மொத்த செலவையும் சேர்த்தால் இப்படத்தின் பட்ஜெட் 300 கோடி வருகிறது.

    அஜித்தை வைத்து அவ்வளவு பட்ஜெட் போட முடியாது என தமிழ்நாட்டில் உள்ள எல்லா பெரிய தயாரிப்பாளர்களும் பின்வாங்கி விட மும்பையில் சென்று தயாரிப்பாளரை தேடி வந்தார்கள்.
    ஒரு பக்கம் அஜித் கார் ரேஸில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அஜித்தின் கார் ரேஸ் கம்பெனி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

    அஜித்தின் கார் ரேஸுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்யும் எனவும் அந்நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் தொடர்பான விளம்பரத்தில் அஜித் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். கார் ரேஸுக்கு இடையில் மலேசியாவில் Campa Engery என்கிற குளிர்பான விளம்பரத்தில் அஜித் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இதை இயக்கி வருகிறார் என சொல்லப்பட்டது.

    இந்நிலையில்தான் அஜித்தின் புதிய படத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தையே தயாரிப்பாளராக்கும் முயற்சிகள் நடந்து வருகிறதாம். ஒருபக்கம் கோகுலம் சினிமாஸ் நிறுவனத்திடமும் பேசி வருகிறார்களாம். அநேகமாக கோகுலம் சினிமாஸ் நிறுவனமும், ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து AK 64 படத்தை தயாரிக்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

  • அஜித் படத்துக்கு ஜிவி பிரகாஷை கழட்டிவிட்ட காரணம்!.. ஆதிக் போட்ட மெகா ஸ்கெட்ச்..

    AK64: திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தில் ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடித்ததோடு மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் இருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்குப் பின் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்கிற படத்தை இயக்கினார் ஆதிக். சிம்பு கொடுத்த குடைச்சலில் படத்தை சரியாக முடிக்க முடியாமல் எடுத்தவரை ரிலீஸ் செய்து படம் ஊத்திக் கொண்டது. இந்த படத்தால் தனக்கு 11 கோடி வரை நஷ்டம் என இப்படத்தின் தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு புகார் கொடுக்கும் வரை சென்றது. தற்போது வரை இந்த பஞ்சாயத்து முடியவில்லை.

    அந்த படத்திற்கு பின் சிம்பு பக்கம் ஆதிக் போகவே இல்லை. பிரபுதேவாவை வைத்து பகீரா என்கிற படத்தை இயக்கினார். அதுவும் ஓடவில்லை. அப்போதுதான் எச்.வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு ஆதிக்கிற்கு கிடைத்தது. அப்போது உங்களை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன் என ஆதிக் சொல்ல ‘ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்துவிட்டு வா.. கண்டிப்பாக பண்ணலாம்’ என அஜித் சொன்னார்.

    எனவே விஷால் எஸ்.ஜே சூர்யாவை வைத்து மார்க் ஆண்டனி என்கிற படத்தை இயக்கினார் ஆதிக். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே ஆதிக் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார் அஜித். அப்படி உருவான
    குட் பேக் அட்லி சூப்பர் ஹிட் அடித்தது. அஜித்திற்கும் ஆதிக்கோடு வேலை செய்வது பிடித்து போனது. எனவே தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் ஆதிக்கிற்கு அஜித் கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்கி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வரை நடைபெறவுள்ளது.

    aniruth

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. வழக்கமாக ஆதிக்கின் படங்களுக்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைப்பார். இன்னும் சொல்லப்போனால் ஆதிக்கை இயக்குனர் ஆக்கியதே ஜிவி பிரகாஷ்தான். அவர் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டதால்தான் திரிஷா இல்லனா நயன்தாரா படமே உருவானது. அப்படி இருக்கும்போது அவரை விட்டுவிட்டு அனிருத் பக்கம் ஏன் ஆதிக் சென்றார்? என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.

    இந்நிலையில், இதற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அனிருத்துடன் பழக்கம் ஏற்பட்டால் ரஜினியை வைத்து படம் பண்ணலாம் என ஆதிக் நினைக்கிறாராம். ஆதிக்கிடம் கதை சொல்லி அவருக்கு பிடித்தால் அவர் தன்னை ரஜினியிடம் அழைத்துச் செல்வார் என ஆதிக்கம் நினைக்கிறார். கூலி பட கதையை லோகேஷ் கனகராஜ் அனிருத்திடம் சொன்னபோது ’வா நான் தலைவரிடம் கூட்டிப் போகிறேன்’ என சொல்லி அனிருத் தான் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்தார். இதுபோல அனிருத் மூலம் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு அமையும் என ஆதிக் கணக்கு போடுகிறாராம்.

  • கையை விரித்த தயாரிப்பாளர்கள்!. சம்பளத்தை குறைத்த அஜித்!.. ஏகே-வுக்கு இது தேவையா?!…

    Ajithkumar: கடந்த சில வருடங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் உள்ள பெரிய நடிகர்களின் சம்பளம் எல்லாம் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. அதற்கு காரணம் பெரும்பாலான படங்கள் பேன் இண்டியா வகையில் உருவாகி வருகிறது. அதாவது தெலுங்கில் எடுக்கப்பட்டு அது தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. அதில் அதிக வசூல் வருவதால் பேன் இண்டியா நடிகர்களின் சம்பளமும் அதிகரித்துவிட்டது.

    அல்லு அர்ஜூன், ராம் சரண், பிரபாஸ், கேஜிஎப் யாஷ் போன்றவர்களின் சம்பளமெல்லாம் இப்படித்தான் உயர்ந்தது. அவர்களாவது பேன் இண்டியா நடிகர்களாக இருக்கிறார்கள். ஆனால், ரஜினி, விஜய், அஜித் போன்றவர்களெல்லாம் இன்னும் பாகுபலி போலவோ, கேஜிஎப் போலவே ஒரு சூப்பர் ஹிட் பேன் இண்டியா படத்தை கொடுக்கவில்லை.

    ஆனால், சம்பளத்தை மிகவும் அதிகமாகவே கேட்கிறார்கள். இவர்களுக்கு இடையே ‘யாருக்கு அதிக சம்பளம்?’ என்கிற போட்டியே நடக்கிறது. கோலிவுட்டை பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார். ஏனெனில், இவரின் படங்கள் 400 கோடிக்கும் மேல் வசூலை பெறுகிறது. தற்போது நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் அவருக்கு 225 கோடி சம்பளம் என சொல்லப்படுகிறது.

    ஆனால், அஜித்தெல்லாம் தொடர் வெற்றியை கொடுக்கும் ஒரு நடிகர் இல்லை. ஆனாலும், விஜயின் சம்பளத்தில் 60 சதவீதம் கேட்கிறார். ‘விஜய்க்கு கொடுக்கும்போது எனக்கும் கொடுங்கள்’ என்பதே அஜித்தின் பார்வையாக இருக்கிறது. அஜித்தின் விடாமுயற்சி படம் ஓடவில்லை. அதேபோல், குட் பேட் அக்லி படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு 70 கோடி நஷ்டமே ஏற்பட்டது.

    இந்நிலையில்தான், ஆதிக் ரவிச்ச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்திற்கு அஜித் தரப்பில் 180 கோடி சம்பளம் கேட்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முடியாது என கைவிரித்துவிட்டது. எனவே, ஏஜிஎஸ், சன் பிக்சர்ஸ், வேல்ஸ் இண்டர்நேஷனல் உள்ளிட்ட 5 தயாரிப்பு நிறுவனங்களிடம் பேசி இருக்கிறார்கள். அஜித் சொன்ன சம்பளத்தையும் படத்தின் பட்ஜெட்டையும் கேட்டுவிட்டு அவர்கள் எல்லோருமே முடியாது என சொல்லிவிட்டனர்.

    கடைசியாக மீண்டும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடமே அஜித் தரப்பு பேசியிருக்கிறது. அஜித்துக்கு 100 கோடி மட்டுமே சம்பளமாக கொடுப்போம் என அவர்கள் சொல்ல, அஜித் தரப்பு இறங்கி வந்து 130 கோடி என பேசி முடித்திருக்கிறார்களாம். அனேகமாக இது இறுதி செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

  • அஜித் படத்தில் பராசக்தி பட நடிகை!.. லப்பர் பந்து நடிகையும் இருக்கிறாராம்!..

    AK64: அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். விடாமுயற்சி படம் ரசிகர்களை திருப்திபடுத்தாத நிலையில் குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. இப்படம் கேங்ஸ்டர் கதை என்பதால் முழுக்க முழுக்க ஹீரோயிசம் கொண்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

    இந்த படத்தை முடித்தவுடன் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ள போய்விட்டார். அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கவுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

    இப்பத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்கி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம்வரை நடைபெறவுள்ளது. குட் பேட் அக்லி போல் கேங்ஸ்டர் படமாக இல்லாமல் இது வேறு மாதிரியான படம் என ஆதிக் சொல்லிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகை ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர் தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருப்பவர். தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

    அதேபோல் லப்பர் பந்து படத்தில் நடித்த சுவாசிகாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். அஜித் இனிமேல் தன்னுடைய வயதை ஒட்டிய நடிகைகளுடன் மட்டுமே ஜோடி போடுவார் என சொல்லப்பட்ட நிலையில் ஸ்ரீலீலா எப்படி அஜித்துக்கு பொருத்தமாக இருப்பார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

  • ஏற்கனவே 5 பேரு லிஸ்ட்ல இருக்காங்க!.. இப்ப இவர் பேரும் அடிபடுதே!. ஏ.கே.64 அப்டேட்!…

    Ajithkumamar: கோலிவுட்டில் ஸ்டைலீஷ் ஹீரோவாக வலம் வருபவர் அஜித்குமார். விஜயை போலவே இவருக்கும் பெரிய ரசிகர் கூட்டம் ஒன்று. இதனால் பல வருடங்களாகவே விஜய் – அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மோதிக்கொள்கிறார்கள். திரையில் போட்டி நடிகர்களாக இருந்தாலும் இருவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது

    விஜய் அரசியல் கட்சி துவங்கியது அஜித் அவருக்கு வாழ்த்து சொன்னார். அதேபோல், அஜித் கார் ரேஸில் வெற்றி பெற்றபோது விஜய் அவருக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார். அஜித்தின் விடாமுயற்சி படம் கடந்த 6ம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்கிற படத்தின் ரீமேக் என்றாலும் கதையில் பல மாற்றங்களை செய்திருக்கிறார்கள். கதாநாயகியை ஒரு குரூப் கடத்துகிறது என்பதை தவிர மற்ற எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்கள்.

    அஜர்பைசான் நாட்டில் நடைபெறும் கதை என்பதால் மேக்கிங் ஹாலிவுட் படம் போல இருக்கிறது என பலரும் சொன்னார்கள். ஆனாலும், படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெற்றதான் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் எனத்தெரிகிறது.

    ஒருபக்கம், அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. கங்குவா படம் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பெற்ற போது சிறுத்தை சிவாவிடம் அஜித் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அதேபோல், விஷ்ணு வர்தன் மற்றும் வெங்கட்பிரபு ஆகியோரும் அஜித்தின் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். அதன்பின் மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சுவாமி நாதன் மற்றும் போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா ஆகியோரும் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் கசிந்தது.

    இந்த 5 பேரில் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்பது தெரியாத நிலையில் இப்போது கார்த்திக் சுப்பாராஜின் பெயரும் அடிபடுகிறது. இவர் ஏற்கனவே விஜயை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டு அவரிடம் கதையெல்லாம் சொன்னார். ஆனால், அவர் சொன்ன கதை பிடிக்காமல் ஹெச்.வினோத்தை தேர்ந்தெடுத்தார் விஜய்.

    இப்போது அஜித்துடன் கார்த்திக் சுப்பாராஜ் பெயர் அடிபடுகிறது. அஜித்தை வைத்து ஜெயிலர் படம் போல ஒரு டார்க் ஹியூமர் படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது என ஒருமுறை கார்த்திக் சுப்பாராஜ் சொல்லியிருந்தார். மேலும், விஜய், அஜித்தை வைத்து படங்களை இயக்கினால்தான் முன்னணி இயக்குனர் என சொல்லக்கூடாது. நல்ல படங்களை இயக்கும் இயக்குனர்கள் எல்லாமே சிறந்த இயக்குனர்கள்தான் என ஒருமுறை சொல்லியிருந்தார். எப்படியும் குட் பேட் அக்லி படம் வெளியான பின் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

  • இந்த காம்போ எதிர்பார்க்கவே இல்லையே!… அஜித்தின் அடுத்த படத்தினை இயக்க போவது இவரா?

    Ajithkumar:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தன்னுடைய திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், அடுத்தடுத்த படங்களுக்கான அப்டேட்கள் தொடர்ந்து கசிய தொடங்கி இருக்கிறது.

    துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அப்படத்தை இயக்க இருந்த விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கு பெரிய அளவில் திருப்தியை கொடுக்காததால் அவரை உடனே படத்தில் இருந்து விலக்கினார்.

    இதையும் படிங்க: இதனால் தான் திடீரென வெளியானது குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக்… செம ஐடியா தான்!

    அவருக்கு பதில் இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கி வருகிறார். சென்ற வருட கடைசியில் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியும் 50 சதவீத படப்பிடிப்பை மட்டுமே  முடித்திருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்து இருக்கிறது. இந்த படத்தை நம்பினால் இப்போது வேலைக்காது என முடிவெடுத்தார் அஜித்.

    உடனடியாக கதை கேட்டு ஆதிக் ரவிச்சந்திரனை தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனராக முடிவெடுத்தார். படத்திற்கு குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டுள்ளது  முதற்கட்ட படப்பிடிப்பும் கடந்த வாரம் ஹைதராபாத்தில் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படத்தை இந்த வருட இறுதிக்குள் முடித்து அடுத்த தைப்பொங்கலில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: போதுமப்பா விட்ருங்க.. சீக்கிரம் கோட் படத்தினை கழட்டிவிட போகும் தளபதி விஜய்… அடுத்த ப்ளான் என்ன தெரியுமா?

    சமீபத்தில் அஜித்தை சந்தித்த மோகன் ராஜா கதை சொல்லி இருந்தாராம். அஜித்துக்கும் அந்த கதை பிடித்துவிட ஏகே64 திரைப்படத்தினை ராஜா இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துக் கொண்டு இப்படத்தில் இணையவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.