Tag: director shankar

  • Thalaivar173: கமல் கேமியோ. ஷங்கர் வில்லன்.. எல்லாம் ரஜினி கையில் இருக்கு!..

    Thalaivar173: கமல் கேமியோ. ஷங்கர் வில்லன்.. எல்லாம் ரஜினி கையில் இருக்கு!..

    கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினியின் 173 வது படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் திடீரென அந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகினார். அதன்பின் அந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரும் வெளியானது..

    ஆனால் திடீரென சிபி சக்கரவர்த்தியும் இந்த படத்திலிருந்து இருந்து விலகவிருப்பதாகவும் அவருக்கு பதில் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது. அதன்பின் சில நாட்களில் அந்த கதையில் சில மாற்றங்களை ரஜினி செய்ய சொல்லியிருப்பதகவும், சிபி அதற்காக வேலையி ஈடுபட்டிருக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. கதையை மாற்றியபின் ரஜினிக்கு அது பிடித்திருந்தால் சிபியே இயக்குனதாக தொடர்வார்.. இல்லையெனில் அஸ்வத் மாரிமுத்து உள்ளே வருவார் எனவும் சொல்லப்பட்டது.

    ரஜினியை வைத்து தான் இயக்கவிருந்த படத்தில் கமல்ஹாசனை ஒரு கேமியோ வேடத்திலும், இயக்குனர் ஷங்கரை வில்லனாகவும் நடிக்க வைக்கலாம் என சிபிராஜ் சொல்ல கமல், ஷங்கர் இருவரிடம் பேசி ஒப்புதலையும் வாங்கி வைத்திருந்தார்களாம். அதேநேரம், ரஜினியின் 173வது படத்தை சிபி இயக்கினால் மட்டுமே இது நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

  • ரஜினியிடமிருந்து வந்த போன் கால்!.. 3 மணி நேரத்தில் முழு கதையையும் உருவாக்கிய ஷங்கர்!…

    ரஜினியிடமிருந்து வந்த போன் கால்!.. 3 மணி நேரத்தில் முழு கதையையும் உருவாக்கிய ஷங்கர்!…

    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் ஷங்கர்.. ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என அதிக பட்ஜெட்டில் படங்களை இயக்கி இந்திய அளவில் பேசப்பட்டவர். தமிழ் சினிமாவில் பாடல் காட்சிகளுக்காக பல வெளிநாடுகளுக்கும் சென்று படமாக்கிய பெருமை இவருக்கு உண்டு
    க.. டந்த சில வருடங்களாக இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.. எனவே அடுத்து ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார்.. அனேகமாக ஷங்கரின் அடுத்த படைப்பு வேள்பாரியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..

    ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய மூன்று படங்களை ஷங்கர் இயக்கியிருக்கிறார்.. இந்த மூன்று படங்களுமே ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த படங்கள்தான். இந்நிலையில், ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஹோசிமின் என்பவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்

    ஒருநாள் நான் அலுவலகத்தில் இருந்த போது ரஜினி சாரிடம் இருந்து போன் வந்தது.. ஷங்கர் சாரிடம் அவர் ஒரு அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.. அதன்பின் மேலே இருந்து கீழே வந்த ஷஞ்கர் சார் ‘எல்லா உதவி இயக்குனர்களையும் கூப்பிடுங்கள்.. நாளை நாம் ஊட்டிக்கு செல்கிறோம்.. ஒரு படத்திற்கான கதை டிஷ்கசன்’ என்றார்.. எல்லோரும் ஊட்டிக்கு சென்றோம்..

    எழுத்தாளர் சுஜாதாவும் அந்த கதை விவாதத்தில் கலந்து கொண்டார்.. எல்லா இயக்குனர்களும் ஒவ்வொன்று சொன்னர்கள். ஒருகட்டத்தில் ஒரு கருவை ஷங்கர் சார் பிடித்தார். சொன்னால் நம்பமாட்டார்கள். மாலை 6 மணிக்கு கதை பேசத் தொடங்கி இரவு 9 மணிக்கு முழு கதையையும் உருவாக்கி விட்டார்கள்.. அதுதான் முதல்வன் திரைப்படம்.. மிரண்டு போய்விட்டேன்’ என்று கூறியிருக்கிறார். அதேநேரம், அந்த கதையியில் ரஜினி நடிக்காமல் அர்ஜூன் நடித்து சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

  • ஷங்கரின் வீட்டுக்கே போன ரஜினி!.. இந்தியன் 3 டேக் ஆப் ஆனதன் பின்னணி!…

    Indian3: ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்து 1996ம் வருடம் வெளியான திரைப்படம் இந்தியன். சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் லஞ்சத்தை எதிர்த்து களம் இறங்கிய கதை. லஞ்சம் வாங்கினால் இந்தியன் தாத்தா கத்தியால் குத்துவார் என்கிற பிம்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் இது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு படம் மிகவும் பிடித்திருந்ததால் படம் சூப்பர் ஹிட் ஆனது.

    இந்த படம் வெளியாகி 28 வருடங்கள் கழித்து இந்தியன் 2-வை எடுத்தார் ஷங்கர். லைக்கா புரடெக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவான இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்தது. இந்தியன் 2 துவங்கும் போது கமலுக்கு பேசிய சம்பளம் 30 கோடி. ஆனால், விக்ரம் சூப்பர் ஹிட் ஆனதால் கமல் அதிக சம்பளம் கேட்டார். ஒருபக்கம், ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை துவங்கினார்.

    லைக்காவுக்கும், ஷங்கருக்கும் முட்டிக்கொள்ள ‘இந்தியன் 2-வை முடிக்கமால் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது’ என லைக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன்பின் அது பேசி தீர்க்கப்பட்டு ஷூட்டிங் துவங்கியது. ஒரே நேரத்தில் இந்தியன் 2, கேம் சேஞ்சர் என 2 படங்களையும் ஷங்கர் இயக்கினார்.

    இந்தியன் 2-வுக்கு பெரிய பில்டப் கொடுக்கப்பட்டது. ஆனால், படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதோடு, படம் ட்ரோலிலும் சிக்கியது. ஷங்கர் ஒரே ஃபார்முலாவில் படம் எடுக்கிறார். ஒரே கிரின்ச்சாக இருக்கிறது. ஷங்கர் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என பலரும் சொன்னார்கள். ஒருபக்கம், இந்தியன் 2 எடுக்கும்போதே இந்தியன் 3-க்கான காட்சிகளையும் ஷங்கர் எடுத்துவிட்டார். இன்னும் ஒரு பாடல் காட்சியும், சில கிராபிக்ஸ் வேலைகளும் மட்டுமே பாக்கி இருக்கிறது.

    ஆனால், இந்தியன் 2 ஓடவில்லை என்பதால் கமல் இதில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில்தான் ரஜினி கமலிடமும், லைக்காவிடமும் பேசி இந்தியன் 2 டேக் ஆப் ஆக உதவியிருக்கிறார் என நேற்று செய்திகள் வெளியானது. ஆனால், நடந்ததே வேறு என்கிறார்கள். ரஜினியை தொடர்பு கொண்டு பேசிய லைக்கா சுபாஷ்கரன் ‘இந்தியன் 2-வில் இவ்வளவு கோடி முதலீடு செய்திருக்கிறோம். நீங்கள் கமல்,ஷங்கர் இருவரிடமும் பேசி படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள்’ என கோரிக்கை வைத்தாராம்.

    உடனே களத்தில் இறங்கிய ரஜினி ஷங்கரின் வீட்டுக்கே நேரில் போயிருக்கிறார். படத்தை முடிக்க 6 கோடி செலவாகும் என ஷங்கர் சொல்ல அங்கிருந்தவாறே சுபாஷ்கரனுக்கு போன் போட்டிருக்கிறார் ரஜினி. ‘6 கோடி முடியாது ஒன்றரை கோடியில் முடிக்க சொல்லுங்கள்’ என சுபாஷ்கரன் சொல்ல ஷங்கர் அப்செட் ஆகிவிட்டார். அதன்பின் ரஜினி பேசி சுமூக முடிவை எட்ட உதவி செய்திருக்கிறார்.

    இந்தியன் 3 ரிலீஸாகும் வரை ஷங்கரும், கமலும் சம்பளம் கேட்கக் கூடாது. படம் வியாபாரம் ஆகும்போது அவர்களின் சம்பளத்தை கொடுத்துவிடுகிறோம் என லைக்கா தரப்பு சொல்லியிருக்கிறது. கமலும், ஷங்கரும் இதை ஏற்றுக்கொண்டார்கள் என்றே சொல்லப்படுகிறது. கமல் நடித்த காட்சிகளை ஷங்கர் ஏற்கனவே எடுத்துவிட்டார் என்பதால் மற்ற நடிகர்கள் மட்டுமே இதில் நடிக்கவுள்ளனர். விரைவில் இதற்கான வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • இந்தியன் 3 படத்தால் அன்பறிவுக்கு சிக்கல்..! பிரபலம் சொல்லும் லேட்டஸ்ட் அப்டேட்!

    இந்தியன் 3 படத்துக்கு ரஜினி நேராக ஷங்கரிடமே போய் பேசி சுமூகமான தீர்வைக் கொடுத்து விட்டதாகச் சொல்லப்பட்டது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், கமல் தனது எம்பி பதவியைத் தொடங்குவதை அறிவிக்கும் வகையிலும் ரஜினியைப் போய் சந்தித்தார். தொடர்ந்து இந்தியன் படம் டேக் ஆப் ஆகிறது என்றார்கள். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

    இந்த வருட இறுதிக்குள் இந்தியன் 3 ரிலீஸ் ஆவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கு. இந்தியன் 3ல் 80 பர்சன்ட் எடுத்தாச்சு. 20 பர்சன்ட் இன்னும் எடுக்க வேண்டியது பாக்கி இருக்குன்னு சொல்றாங்க. இந்தியன் 2 மட்டும் வராம இருந்ததுன்னா இந்தியன் 3 யோட ரேஞ்சே வேற.

    படத்தைப் பார்த்தவங்க எல்லாருமே எக்ஸலன்ட்டா இருக்குறதா சொல்றாங்க. இது இந்தியன் முதல் பாகத்துக்கு ஈக்குவலாக இருப்பதாக சொல்றாங்க. அதனால தான் இந்தப் படத்தை எப்படியாவது வெளியே கொண்டு வந்துடணும்னு நினைக்கிறாங்க.

    இந்தியன் 3 படத்தில் 20 பர்சன்ட் சூட்டிங்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறதாம். இந்தப் படம் ரிலீஸ் ஆகும் பட்சத்தில் இந்தியன் 2 படத்தால் ஏற்பட்ட கரையை நிச்சயம் இந்தியன் 3 துடைக்கும் என்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்தப் படம் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

    வீரதீரசூரன் பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருடன் இணைந்து கமல் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்தியன் 3 படப்பிடிப்பு ஆரம்பித்தால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

    இந்தியன் 3ல் தான் முதலில் கவனம் செலுத்துவார்கள் என்று தெரிகிறது. எப்படிப் பார்த்தாலும் செப்டம்பருக்குள் இந்தியன் 3 முடித்தாலும் அக்டோபர்ல தான் அருண்குமார் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். இப்போ அன்பறிவு படத்துக்குத் தான் சிக்கல். எப்படியும் அருண்குமாரின் படப்பிடிப்பு ஜனவரி 2026 வரை நடக்கும். அடுத்த வருஷம் தேர்தல் என்பதால் அன்பறிவு படம் தள்ளிப்போகும் என்று நினைக்கிறேன் என்கிறார் சித்ரா லட்சுமணன்.

  • வேள்பாரிக்கு முன்னாடி அந்த படத்தை முடிக்கணும்!. ஷங்கருக்கு செம செக்!…

    Indian 3: கோலிவுட்டில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ஷங்கர். அதிக பட்ஜெட்டில் படமெடுத்து தயாரிப்பாளரை கதறவிடும் இயக்குனர்களில் இவர் முக்கியமானவர். ஒரு பாடல் காட்சிக்கே மினிமம் சில கோடிகள் செலவு செய்வார். ராம் சரணை வைத்து இவர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தில் 5 பாடல் காட்சிகளுக்கும் சேர்த்து 80 கோடி வரை செலவு செய்தார். அதில் ஒரு பாடலுக்கு மட்டும் 15 கோடி செலவு செய்தார்.

    ஆனால், அப்படி வெளியான கேம் சேஞ்சர் படம் சூப்பர் பிளாப் ஆனது. இப்படத்தை தயாரித்த தில் ராஜுவுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. இந்த படத்திற்கு முன் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படமும் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. இந்தியன் படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் லைக்கா தயாரிப்பில் உருவான இந்தியன் 2 ரசிகர்களை கவரவில்லை.

    ஷங்கர் இன்னமும் அப்படியே இருக்கிறார். கரண்ட் டிரெண்ட் அவருக்கு தெரியவில்லை. இப்போது அவர் படத்தில் வரும் காட்சிகள் கிரின்ச்சாக இருக்கிறது. அவர் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பலரும் சொன்னார்கள். இந்தியன் 2 எடுக்கும்போதே இந்தியன் 3-க்கான காட்சிகளையும் ஷங்கர் எடுத்துவிட்டார். ஆனால், இந்தியன் 2 ஓடவில்லை என்பதால் இந்தியன் 3 கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.

    இன்னும் சில கோடிகள் கொடுத்தால் படத்தை முடிக்கிறேன் என்கிறே ஷங்கர். ஆனால், லைக்காவோ கொடுக்க முடியாது என்கிறது. ஒருபக்கம் கமலும் இந்தியன் 3-ல் ஆர்வம் காட்டவில்லை. எனவே, லைக்கா தரப்பு ரஜினி மூலம் இந்த பிரச்சனை தீர்த்து இந்தியன் 3-யை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இந்த படத்திற்காக பேசப்பட்ட சம்பள விஷயத்திலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

    ஒருபக்கம் வேள்பாரி நாவலை திரைப்படமாக எடுக்கு முயற்சியில் ஷங்கர் இறங்கியுள்ளார். இந்த கதையை 3 பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருக்கும் ஷங்கர் இதற்காக ஒரு பெரிய தயாரிப்பாளரை எதிர்பார்க்கிறார். ஆனால், இந்தியன் 2, கேம் சேஞ்சர் என தொடர் தோல்வியை ஷங்கர் கொடுத்ததால் வேள்பாரியை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. ஒருபக்கம், இந்தியன் 3-வை முடித்துவிட்டு வேள்பாரிக்கு செல்லும் நெருக்கடியும் ஷங்கருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியன் 3 பட வேலைகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஷங்கரின் மகனுக்கு ஜோடி அந்த கனவு கன்னியா?!.. செமயா ஸ்கெட்ச் போட்றாங்களே!,,

    தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். பிரம்மாண்டம் என்பதெல்லாம் இப்போது அவருக்கு வொர்க் அவுட் ஆகவில்லை. ஆரம்பத்தில் அவருடைய படங்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் புது புது இயக்குனர்களின் அவதாரம் ஷங்கரின் மவுசு குறைந்து போவதற்கும் காரணமாக அமைந்தது.

    அதற்கேற்ப அவருடைய சமீபகால படங்களும் காலை வாரியது. குறிப்பாக இந்தியன் 2 படம் மிகப்பெரிய அளவில் மோசமான விமர்சனத்தை சந்தித்தது. வசூலில் மண்ணை கவ்வியது. அதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய அடியாகவும் இருந்தது. அதற்கு அடுத்து அவரின் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படமும் மோசமான தோல்வியை தழுவியது.

    கேம் சேஞ்சர் படத்தை பொறுத்தவரைக்கும் பாடலை மட்டும் மிகப்பெரிய பொருட்செலவில் படமாக்கினார். ஷங்கர் அடுத்து வேள்பாரி நாவலை கையில் எடுத்திருக்கிறார். அதற்கான வேலைகள் தான் தற்போது நடந்து வருகின்றன. நாவலை பொறுத்தவரைக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நாவல். அதனால் கதை எல்லாருக்கும் தெரிந்தது என்றாலும் படமாக அதை பெஸ்ட்டாக கொடுக்க வேண்டும்.

    இந்த நிலையில் ஷங்கரின் மகன் அர்ஜித் இப்போது ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். ஏற்கனவே ஷங்கரின் மகள் அதிதீ சங்கரும் ஹீரோயினாக தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது அவருடைய மகனும் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் அர்ஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்க உள்ளார் என்பதுதான்.

    mamitha
    mamitha

    இப்போது அனைவருக்கும் ஒரு கனவுக்கன்னியாக வலம் வரும் மமிதா பைஜுதானாம். ஜன நாயகன் படத்தில் மமிதா பைஜூ முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். கோலிவுட் பக்கம் இப்போதுதான் பிரபலமாகி வருகிறார் மமிதா பைஜு.

  • நிஜத்துலயும் களை எடுக்குறதுல இந்தியன் தாத்தா கில்லாடிதான்… தெறிக்க விடும் மீம்ஸைப் பாருங்க..!

    களை எடுத்தால் தான் இந்தியா முன்னேறும். அதுக்காகத் தான் இந்தக் கொலைன்னு லஞ்சப்பேர்வழிகளை ஒவ்வொருவராக கொலை செய்வார் இந்தியன் தாத்தா. அதைப் படமாக்கிய விதமும், திரைக்கதை அமைத்த விதமும் ஷங்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    இதுதான் இந்தியன் படத்தின் மகத்தான வெற்றிக்குக் காரணம். இந்தியன் படத்தின் முதல் பாகம் எவ்வளவு வெற்றிகரமாக அமைந்ததோ அதற்கு நேர் எதிராக அமைந்து விட்டது இந்தியன் 2. இந்தப் படத்தின் தோல்வியை ட்ரோல் செய்தனர். மீம்ஸ்களாகப் போட்டு சமூகவலைதளத்தில் ஷங்கரையும், கமலையும் வச்சு செய்தனர்.

    இந்தப் படத்தின் தோல்விக்குக் காரணம் படத்தின் நீளம் என்றார்கள். ஷங்கர் 2ம் பாகத்தை 5 மணி நேரம் எடுத்துவிட்டார். அதனால் படத்தை 2 மற்றும் 3ம் பாகம் என எடுக்கத் திட்டமிட்டார். 2ம் பாகத்தை விட 3ம் பாகம்தான் படு விறுவிறுப்பு. அதே நேரம் 2ம் பாகம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை.

    இதுவே இப்படி என்றால் 3ம் பாகத்தைத் திரையிட யார் முன்வருவார்கள்? இது இப்படி இருக்க படத்துக்கு இன்னும் பட்ஜெட் தேவை என்ற ஷங்கரின் கோரிக்கை நிறைவேறவில்லை போலும். அதனால் படத்தை ஓடிடியில் தான் வெளியிடுவார்கள் என்றும் சொல்கின்றனர். கமலே 3ம் பாகத்தின் கதை தான் நல்லாருக்கு என்றும் சொல்லி அதனால் தான் படத்தில் நடிக்க முன்வந்தேன் என்றும் சொன்னதாக ஒரு தகவல் உண்டு. இதற்கிடையில் ஷங்கர் கேம் சேஞ்சர் என்ற தோல்விப்படத்தையும் கொடுத்து விட இந்தியன் 3 கவனிப்பாரற்ற நிலைக்குப் போனது.

    அந்த வகையில் இந்தியன் 3 இப்படியே கிடப்பில் கிடக்க மணிரத்னம் 38 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்க இணைகிறோம் என தக் லைஃப்பை எடுத்தார். படம் படுபிளாப் ஆனது. சமூகவலைதளங்களில் அவரையும், ஷங்கரையும் வறுத்து எடுத்தனர். கமலுக்கு தோல்வி பெரிய அளவில் பாதிப்பில்லை.

    ஏன்னா அவரு நிறைய வெற்றி, தோல்விகளைப் பார்த்தவர். அதனால் இப்போது கமலை வைத்து ஷங்கரையும், மணிரத்னத்தையும் மீம்ஸ்கள் போட்டு வறுத்தெடுக்கத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள். அப்படி ஒரு மீம்ஸ்தான் இது. நான் வேணும்னே குப்ப படம் குடுக்கல. களை எடுத்துட்டு இருக்கேன்னு இந்தியன் தாத்தா கமல் நிழல்கள் ரவியைக் கொலை செய்யும் சீனை எடுத்துப் போட்டு விட்டு அதில் கமலை ஆண்டவர் என்றும் நிழல்கள் ரவியை ஷங்கர், மணிரத்னம் என்றும் போட்டு விட்டார்கள்.

    இந்த மீம்ஸைப் பார்க்கும்போது கமல் வேணும் என்றே தான் இந்தியன் 2, தக் லைஃப் மாதிரியான குப்பைப் படங்களில் நடித்துள்ளார் என்றும் அதெல்லாம் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்களை களை எடுக்கத்தான் என்றும் சொல்வது போல உள்ளது.

  • கோலிவுட்டிலேயே இதுதான் முதல்முறை.. ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்த ‘கூலி’

    கூலி சாதனை:

    ரஜினியுடன் பல மெகாஸ்டார்கள் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தின் ஓவர்சீஸ் உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி .இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. படத்தில் ரஜினிகாந்த் உடன் நாகார்ஜுனா, அமீர்கான், சத்தியராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாகிர் என பல மொழி முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

    ஓவர்சீஸ் உரிமை:

    படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் இந்த படத்திற்கான ஓவர்சீஸ் உரிமை கிட்டத்தட்ட 81 கோடிக்கு விற்று இருப்பதாக தெரிகிறது. கோலிவுட்டிலேயே இந்த படத்திற்கு தான் இதுவரை கிடைத்த அதிகபட்ச ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது.

    விஜய்க்கே இவ்வளவுதான்;

    5 தசாப்தகால உச்ச நட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் இன்னும் அவருடைய அந்தஸ்தை விட்டுக் கொடுக்காத அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறார். இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திற்கும் இவ்வளவு பெரிய விலை கொடுத்து யாரும் வாங்க முன்வரவில்லை. இதற்கு முன் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ஓவர்சீஸ் உரிமை அறுபது கோடிக்கு விற்றதாக தெரிகிறது.

    அதிகபட்ச ஒப்பந்தம்:

    அடுத்ததாக கூலி திரைப்படம் தான் அதிகபட்சமாக 81 கோடி வரைக்கும் விற்பனையாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவே ஒரு பெரிய சாதனை என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் படம் ரிலீஸ் ஆவதற்கு ஒன்றரை மாத காலம் இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி இன்னும் படத்தை பெரிய அளவில் கொண்டு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

    coolie

    coolie

    ஒட்டுமொத்தமாக இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து வந்த லோகேஷ் இப்போது ரஜினியுடன் இணைந்து இருப்பது இன்னும் இந்த படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. எப்படி கமலுக்கு விக்ரம் என்ற ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தாரோ அதைப்போல ரஜினிக்கும் அதைவிட ஒரு பெரிய அளவில் வெற்றியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஷங்கரை நம்பி என் காசெல்லாம் போச்சி!.. புலம்பும் கேம் சேஞர் புரடியூசர்!…

    Director shankar: தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் படங்கள் என்கிற கான்செப்ட்டை கொண்டு வந்தவர் ஷங்கர். ஒருகட்டத்தில் அதுவே அவரின் ஸ்டைலாக மாறி அவரே நினைத்தாலும் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்க முடியாது என்கிற நிலையும் உருவானது. ஜீன்ஸ் படத்தில் உலகின் ஏழு அதிசயங்களையும் ஒரு பாட்டில் காட்டினார். ரசிகர்களுக்கு அது ட்ரீட்தான் என்றாலும் படம் வசூலை பெறவில்லையெனில் தயாரிப்பாளருக்கு கடும் நஷ்டம்தான்.

    ஷங்கருக்கு ஒரு பழக்கம் உண்டு. அதிக பட்ஜெட், அதுவும் சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடிக்கமாட்டார். அதற்கும் மேல் பல கோடிகள் செலவு செய்வார். இவ்வளவு நாளில் படத்தை முடித்துவிடுவேன் என சொல்ல மாட்டார். அவர் நினைக்கும் வரை எடுத்துக்கொண்டே இருப்பார். அப்படி படத்தை முடித்த பின்னரும் படத்தை தயாரிப்பாளருக்கு போட்டு காட்டமாட்டார். இதையெல்லொம் அவர் பல வருடங்களாக பின்பற்றி வருகிறார்.

    அதனால்தான் அவர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கு மேல் நடக்கும். துவக்கத்தில் ஜென்டில்மேன், காதலன், இந்தியன் என ஹிட் படங்களை கொடுத்தாலும் ஒருகட்டத்தில் இவரின் படங்கள் தோல்வியை பெற்று தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்க துவங்கியது. பாய்ஸ், ஐ, இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

    இதில் கேம் சேஞ்சர் படத்தை தெலுங்கில் பெரிய தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜூ தயாரித்தார். ராம் சரண் ஹீரோவாக நடித்திருந்தார். தில் ராஜு வசமாக சிக்கியதால் 186 கோடி செலவில் அப்படத்தை எடுத்தார். இதில் 5 பாடல்களுக்கு மட்டுமே 75 கோடிக்கும் மேல் செலவு செய்தார் ஷங்கர்.

    அப்படி வெளியான கேம் சேஞ்சர் ரசிகர்களை கவரவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. இந்த படத்தில் தில் ராஜுவுக்கு 100 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டது. இந்த படத்தின் முழு தோல்விக்கும் ஷங்கர் மட்டுமே காரணமாக இருந்தார்.

    இந்நிலையில ஊடகம் ஒன்றில் பேசிய தில் ராஜூ ‘என் கெரியரில் ஷங்கர் போன்ற ஒரு இயக்குனருடன் நான் வேலை பார்த்ததே இல்லை. கேம் சேஞ்சர் நான் செய்த முதல் தவறு. எனக்கு தேவையானவற்றை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபின் தயாரிப்பை தொடங்கியிருக்க வேண்டும். அதை செய்யாதது என் தவறுதான்’ என சொல்லியிருக்கிறார்.

  • வேள்பாரிக்கெல்லாம் இனி வாய்ப்பே இல்லை… ஷங்கர் விஷயத்தில் அலார்ட்டான தயாரிப்பாளர்கள்!

    கேம்சேஞ்சர் படத்துக்கு ஒரு வருஷமா எடிட் பண்ணினார்களாம். ஏழரை மணி நேரமாக ஃபுட்டேஜ் கொடுத்தாரு. அதை என்னதான் குறைச்சாலும் 3 மணி நேரத்துக்கு மேல குறைக்க முடியல அப்படின்னு அந்தப் படத்தை விட்டே ஷமீர் வேணாம்னு போயிட்டாரு. அவரு என்ன சொல்றாருன்னா ஷங்கர் பக்கத்துலயே இருந்து இந்த ஆர்டர், அந்த ஆர்டர்னு மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு இருந்தாரு.

    அதனாலயே அவர் அந்தப் படத்தை விட்டுப் போயிட்டாரு. அவர் மலையாளத்துலயே 50 படங்களுக்கு மேல பணியாற்றியுள்ளார். இப்போ ஸ்பாட் எடிட்டிங் இருக்கு. அந்த வகையில் எடிட்டர் ஷமீருக்கு அதெல்லாம் தெரியும். நினைச்சதை எல்லாம் எடுத்துட்டு வந்து கொடுக்காரு. எது படம்னே கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்லிருக்காரு. அவரு சொன்னதுல நியாயம் இருக்குறதா தான் நான் பார்க்கிறேன் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. இது தவிர வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க…

    ஒரு இயக்குனரைப் பொருத்தவரைக்கும் அவருக்கு எடிட்டிங் நாலெட்ஜ் வேணும். ஒரு விஷயத்தைக் கதையா சொல்றது பெரிய விஷயம் கிடையாது. அதை செயலாக்கம் பண்ணிக் கொண்டு வரணும். அவங்களுக்கு எடிட்டிங் நாலெட்ஜ் இருக்கணும்.

    இன்னைக்குப் பல இயக்குனர்களுக்கு அந்த எடிட்டிங் நாலெட்ஜே இல்லை. என்ன எடுக்குறோம்? எந்தளவுக்கு எடுக்குறோம்? எதைப் படத்து வைக்கப் போறோம்? இதோட போதும் அப்படிங்கற நாலெட்ஜ் இல்ல. ஷார்ட் பிலிம் எடுத்த இயக்குனருக்கு எந்த அனுபவமுமே இருக்காது. எடிட்டிங், டப்பிங், மிக்சிங், டான்ஸ், பைட், டப்பிங்னு 24 கிராப்ட் இருக்கு. அத்தனை பேருக்கிட்டேயும் வேலை வாங்கத் தெரியணும். அவர் தான் ஒரு மிகச்சிறந்த இயக்குனர்.

    கேம் சேஞ்சர் பெரிய தோல்வி. ஆனா அந்;தப் புரொடியூசர் தில் ராஜூ பாதிக்கப்பட்டார். இந்தியன் 2 படத்தை லைகா தயாரிச்சாங்க. பொருளாதார ரீதியா லைகாவைத் தான் பாதிச்சது. இந்த மாதிரி என்ன வேணாலும் எடுக்கலாம். ஒருத்தன் பணம் போடுறான்னு சில இயக்குனர்கள் படம் எடுக்குறாங்க. அந்த மாதிரி இயக்குனர் தான் ஷங்கர். அனுபவம் இருந்தும் ஷங்கர் பிரம்மாண்டத்துல போய் விழுறாரு.

    100 கோடிக்கு ஒரு படத்தை முடிக்கலாம்னா 500 கோடியில கொண்டு போய் விடுறாரு. 45 நாள்ல ஒரு படத்தை எடுக்க வேண்டியதை 250 நாள் படத்தை எடுத்தா எவ்வளவு செலவு ஆகும்? ஷங்கரும் அப்படித்தான் எடுக்குறாரு. ஷங்கரை வச்சி இனிமே படம் எடுக்க முடியுமான்னா அதுக்கான தயாரிப்பாளர்களே கிடையாது. வேள்பாரியை பிரம்மாண்டமா எடுக்கணும்னு நினைக்கிறாரு.

    ஆனா அதுக்கான தயாரிப்பாளர்கள் கிடையாது. டூரிஸ்ட் ஃபேமிலி படம் உலகளவில் 75 கோடி கலெக்ட் பண்ணிருக்கு. 4 கோடியில எடுத்த படம் இந்தியாவுல 55 கோடி கலெக்ட் பண்ணிருக்கு. அதுல சசிக்குமார், சிம்ரன் தான் நடிச்சிருக்காங்க. படம் ஜெயிக்கக் காரணம் கன்டன்ட் தான். அழுத்தமான கதை. அதனால கன்டன்ட் தான் முக்கியம்.

    அப்போ தான் படம் ஜெயிக்கும். ஒரு தலை ராகம் டி.ராஜேந்தருக்கு முதல் படம். பாலாவுக்கு முதல் படம் சேது படங்களே இதற்குச் சான்று. கன்டன்ட்டோடு படம் எடுத்தா ஜெயிக்கலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் டூரிஸ்ட் ஃபேமிலி தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.