Tag: jason sanjay

  • ராயன் எல்லாம் இல்ல… ஜேசன் சஞ்சய் படத்தில் இதுதான் ஹைலைட்!… ஹீரோவே சொல்லிட்டாரே!..

    SundeepKishan: பிரபல நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் முதல் படத்தில் தான் ஒப்பந்தமான சுவாரசிய சம்பவம் குறித்து பேசி இருக்கிறார்.

    நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் சென்று படித்துக் கொண்டிருந்தார் என்ற தகவல் தான் பலருக்கும் முதலில் தெரிந்திருந்தது. ஆனால் திடீரென கடந்த ஆண்டு லைக்கா நிறுவனம் சார்பில் படம் இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது.

    இதையும் படிங்க: அதென்ன 11.08? ‘விடாமுயற்சி’ டீஸர் வெளியான நேரத்துக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

    நடிகராக அப்பா வழியில் இல்லாமல் இயக்குனராக தாத்தா வழியை தேர்ந்தெடுத்தார் ஜேசன் சஞ்சய். லைக்காவுடன் கையெழுத்திடும் நிகழ்வில் இவர் மட்டும் தனித்திருக்க எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் விஜய் எனக் கூட யாருமே இல்லாதது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதைத் தொடர்ந்து இவருடைய இந்த படம் குறித்து பல யூகங்கள் இணையதளங்களில் கசிந்தது. அது மட்டுமில்லாமல் ஹீரோவாக துருவ் விக்ரம்,  விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான் என பல நடிகர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்தது. ஒரு கட்டத்தில் நடிகர் சுந்தீப்கிஷன் தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் கசிந்தது.

    இதையும் படிங்க:  மீனாவுக்கு கிடைத்த சூப்பர் ஆர்டர்… கோமதியின் கோபத்தால் மிரண்ட குடும்பம்… கோபி நிலைமை அறிந்த ராதிகா!..

    இருந்தும் பல கட்ட யூகங்களுக்கு பின்னர் நேற்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இதில் ஹீரோவாக  சுந்தீப் கிஷன் மற்றும் இசையமைப்பாளராக தமன் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் வித்தியாசமான பேக்ரவுண்ட் இருந்ததால் படத்தின் கதை ரசிகர்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

    இந்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் நடிகர் சுந்தீப்கிஷன், நானும் ஜேசன் சஞ்சயும் ராயன் படத்தின் ரிலீஸுக்கு முன்னரே சந்தித்தோம். அப்போதே இணைந்து வேலை செய்ய முடிவெடுத்தோம். என்னிடம் இடைவெளி இல்லாமல் 50 நிமிடம் அவர் சொன்ன கதை ஆச்சரியப்படுத்தியது.

    இந்த ஸ்கிரிப்டில் அவர் கொடுத்திருக்கும் உழைப்பு தெரிந்தது. இந்த படத்தில் பேன் இந்தியா சாயல் இருக்கிறது. அவருடைய முதல் கனவு படத்துக்கு என் ஆதரவு இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  • சிங்கக்குட்டி சூப்பர் எண்ட்ரி… ஒருவழியாக வெளியான ஜேசன் சஞ்சய் பட அறிவிப்பு… ஹீரோ இவர்தானாம்!..

    Jason Sanjay: தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு ஒரு வழியாக அதிகாரப்பூர்வமாக லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

    தளபதி விஜய் தன்னுடைய 69 ஆவது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு சினிமாவிலிருந்து விலகி அரசியலில் தன்னுடைய கவனத்தை செலுத்த இருக்கிறார். இந்த நேரத்தில் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் சினிமா இயக்க கோலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார்.

    இதையும் படிங்க: ரொம்ப பெருமையா இருக்கு!.. திடீரென விஜய் சேதுபதியை வாழ்த்திய எஸ்கே.. எதுக்கு தெரியுமா?..

    சில மாதங்கள் முன்னர் லைக்கா நிறுவனத்திடம் தன்னுடைய முதல் படத்தை கையெழுத்து விட்டார் ஜேசன் சஞ்சய். இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இவருடைய ஹீரோ யாராக இருக்கும் என பல யூகங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது. விஜய் சேதுபதி தொடங்கி துல்கர் சல்மான் வரை பலரின் பெயரும் அடிபட்டது.

    கவின், துருவ்விக்ரம் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கலாம் என பலரும் எதிர்பார்த்தனர். இப்படத்தின் படக்குழு குறித்த தகவல்களும் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் பல நாட்கள் காத்திருப்பதற்குப் பின்னர் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை லைக்கா நிறுவனம் என்று அறிவித்திருக்கிறது.

    இதையும் படிங்க: மருமகள் முதல் கயல் வரை… இன்றைய சன் டிவி சீரியல்களின் புரோமோ அப்டேட்

    லியோ பட செக் போல இருக்கும் மங்காத்தா போன்ற கொள்ளை கதையாக இருக்கும் எனவும் பேச்சுக்கள் அடிபட தொடங்கி இருக்கிறது. விரைவில் படத்தின் பூஜை நடத்தப்பட்டு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மோஷன் போஸ்டருக்கு: https://www.youtube.com/watch?v=e3gZEn9tvaU

  • தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோ? விழி பிதுங்கி நிற்கும் ஜேசன் சஞ்சய்

    Jason Sanjai: அப்பாவைப் போல மகனும் இந்த சினிமா துறையில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வருவார் என எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஆரம்பமே இப்படியா என்பதைப் போல இருக்கிறது ஜேசன் சஞ்சயின் நிலைமை. என்னதான் அப்பா இந்த கோலிவுட்டில் ஒரு பெரிய வசூல் சக்கரவர்த்தியாக இருந்தாலும் அவருடைய இன்ஃப்ளுயுன்ஸ் இல்லாமல் தானாக வாய்ப்புகளை தேடி அலைந்தார்  சஞ்சய்.

    கனடாவில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்புகளை படித்து முடித்து இந்தியா வந்ததும் எடுத்ததுமே ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்தார். லைக்கா நிறுவனத்துடன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆனதும் ஜேசன் சஞ்சய் மீது ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கையெழுத்து ஒப்பந்தமானதோடு சரி. அதற்கான எந்த ஒரு முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

    இதையும் படிங்க: வணங்கானில் பட்ட அடி சாதாரண அடியா? சுதா கொங்கராவை அலைய வைக்கும் சூர்யா

    இது நாள் வரை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்னும் அவருடைய படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஏன் ஒரு பூஜை கூட போடப்படவில்லை. என்னதான் நடக்கிறது என்று பார்த்தால் லைக்கா நிறுவனத்திற்கு ஏகப்பட்ட பொருளாதார நெருக்கடி. வேட்டையன் படம் ரிலீஸ் ஆகி லைக்காவை காப்பாற்றுமா என்ற நிலையில் தான் அந்த நிறுவனத்தின் நிலைமையே இருக்கிறது.

    அதுவும் ஜேசன் சஞ்சய் ஆரம்பத்தில் இருந்தே அவருடைய படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் வந்து போய் விட்டார்கள். முதலில் துருவ் விக்ரம் .அடுத்து கவின், ஹரிஷ் கல்யாண், அதர்வா என பல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கடைசியில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற ஒரு செய்தியும் வெளியானது.

    இதையும் படிங்க: பிரியங்காவுக்கு விழுந்த செருப்படி… கோமாளிக்கும் குக்குக்கும் என்ன சம்பந்தம்? ஷாக்கிங் தகவல்!

    ஆனால் அதுவுமே இன்னும் பேச்சு வார்த்தையில் தான் இருக்கிறதாம் .இந்த படத்தில் சந்தீப் கிஷன் நடித்தால் நன்றாக இருக்கும் என  சஞ்சய் வைக்காவிடம் சொல்லி இருக்கிறாராம். லைக்காதான் இனிமேல் பேச்சு வார்த்தை நடத்தி அதற்கான அடுத்த கட்ட முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இதைப் பற்றி கோடம்பாக்கத்தில் கூறும்போது ஒருவேளை ஜேசன் சஞ்சய் படம் நடக்காமல் கூட போகலாம் என்றும் சொல்கிறார்கள். அதற்கு காரணம் லைக்காவின் பொருளாதார நெருக்கடி தான் என சொல்லப்படுகிறது.

  • வாரிசு பிரபலங்கள் லைக்காவை வச்சு செய்றத விடலை போலயே!.. ஜேசன் சஞ்சயின் படக்கதை இதானாம்…

    Jason Sanjay: தளபதி விஜயின் மகன் இயக்க இருக்கும் முதல் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் நடிகர் குறித்த முக்கிய அப்டேட்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

    தளபதி விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு தளபதி தன்னுடைய சினிமா கேரியரில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதையும் படிங்க: கோட் படத்தில் எஸ்.கே, ஜீவன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவங்கதானா? நல்லா இருக்கே!

    இதே நேரத்தில், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தன்னுடைய தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் வழியில் இயக்குனராக கோலிவுட் காலடி எடுத்து வைக்கிறார். இது குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு லைக்கா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

    இயக்குனராக ஜேசன் சஞ்சயை லைக்கா அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் முதற்கட்ட அறிவிப்பு ஜேசன் கையெழுத்திட்ட புகைப்படத்துடன் வெளியானது. ஆனால் அவருடன் விஜயோ, சந்திரசேகர் இல்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாக அமைந்தது.

    இதைத்தொடர்ந்து ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க இருக்கும் நடிகர் யார் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதில் பல முன்னணி பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டது. விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான் என பல பிரபலங்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: விஜயுக்கு அண்ணியா கேட்டப்ப நோ சொன்ன பிரபல நடிகை… ஆனா பின்னாடி நடந்து செம பிளான்…

    அந்த வகையில் தற்போது இப்படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படத்தில் தனுஷின் தம்பியாக நடித்திருந்த சந்தீப் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார்.

    Jason_Sandeep

    இதை தொடர்ந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருக்கும் நிலையில் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இத் திரைப்படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதையாக தான் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இதையும் படிங்க: நாங்க பேசிக்க மாட்டோமா? வெங்கட் பிரபுவை ஒரே மாதிரி கலாய்த்த அஜித் விஜய்

    ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படமும் கிரிக்கெட் கதையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது. ஆனால் அப்படத்தின் தோல்வியால் தற்போது வரை திரைப்படம் ஓடிடியில் கூட வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது.

    தற்போது ஜேசனும் இதே கதையை உருவாக்க இருப்பது ரசிகர்களிடம் விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது. வேட்டையின் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர் இப்படத்தின் அறிவிப்பு குறித்த தகவல்கள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • கடையை மூடும் லைகா!.. புது கம்பெனியை தேடி ஓடும் விஜய் மகன்!.. பிரபலம் சொன்ன ஷாக் தகவல்!..

    நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா தயாரிப்பில் புதிய படத்தை இயக்கப் போவதாக பல மாதங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இன்னமும் அந்த படம் என்ன ஆனது? படத்துக்கு பூஜை போடப்பட்டதா? இல்லையா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

    பயங்கர நிதி நெருக்கடியில் இருக்கும் லைகா நிறுவனம் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு பட்ஜெட் ஒதுக்குவதற்கே ஆறு மாத காலம் போராடி வரும் நிலையில், விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் படத்தை அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.

    இதையும் படிங்க: படத்துலதான் அப்படின்னா!.. நிஜத்துலயுமா?. காதலியை பிடித்து தள்ளி விட பார்த்த வில்லன் நடிகர்!..

    கூடிய விரைவில் லைகா நிறுவனம் படங்களை தயாரிக்கும் பணியை நிறுத்திவிட்டு தங்களது தொழிலில் மட்டும் கவனம் செலுத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றால் லைகாவுக்கு பேரிடியாக அமைந்து விடும் என்கின்றனர்.

    இந்த விஷயங்களை எல்லாம் அறிந்துகொண்ட ஜேசன் சஞ்சய் தற்போது வேறு சில தயாரிப்பு நிறுவனங்களை நாடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அதான சும்மா இது நடக்குமா?! SK – சீமான் சந்திப்புக்கு பின்னனியில் இருக்கும் காரணம் இதுதான்!…

    நடிகர் விஜயின் அட்மின் ஜெகதீஷ் ‘ தி ரூட்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான மகாராஜா படத்தையே அந்த நிறுவனம் தான் வாங்கி வெளியிட்டது.

    மேலும், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட சில படங்களையும் அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. அதை எல்லாம் விட்டுவிட்டு லைகா நிறுவனத்தை நம்பி பல மாதங்களை ஜேசன் சஞ்சய் வீணடித்து விட்டார் எனக் கூறுகின்றனர். இந்தியன் 2 மற்றும் வேட்டையன் படங்கள் அடுத்தடுத்தடுத்து வெற்றிப் பெற்றால், லைகாவிலேயே ஜேசன் சஞ்சய் படம் பண்ணவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: தனுஷ் அதை செய்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்ல!.. நெகிழும் வில்லன் நடிகர்…

  • திணறும் ஜேசன் சஞ்சய்!.. எஸ்கேப் ஆகும் நடிகர்கள்!.. ஒரு வருஷம் ஆகியும் ஒன்னும் நடக்கலயே பாஸ்!..

    நடிகர் விஜயின் மகன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைககரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் வந்து நடனமாடினார். அதன்பின் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. விஜய் பெரிய ஹீரோவாக வளர்ந்துள்ள நிலையில், ஜேசன் சஞ்சய் டீன் ஏஜ் வாலிபராக மாறி இருக்கிறார்.

    அப்பா நடிகர் என்பதால் சஞ்சயும் நடிகராவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென இயக்குனர் அவதாரம் எடுத்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார். அதுவும் லைக்கா நிறுவனம் அவரின் படத்தை தயாரிப்பதாக செய்திகள் வந்ததும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகமே ஆச்சர்யப்பட்டது.

    லண்டனில் சினிமா இயக்கம் பற்றி படித்திருக்கும் சஞ்சய் நண்பர்களுடன் இணைந்து சில குறும்படங்களில் வேலை செய்திருக்கிறார் என நம்பப்படுகிறது. பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அழைத்தும் நடிக்க விருப்பமில்லை என சொல்லிவிட்டார். ஒரு இயக்குனர் ஆக வேண்டும் என்பதே சஞ்சயின் விருப்பமாக இருக்கிறது.

    லைக்கா தயாரிப்பில் சஞ்சய் படம் இயக்குகிறார் என்கிற செய்தி வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால், கிணத்தில் போட்ட கல்லாக அப்படத்தின் அப்டேட் அப்படியே இருக்கிறது. கவினிடம் கதை சொல்லி இருக்கிறார், துல்கர் சல்மான் நடிக்கிறார் என பல செய்திகளும் வெளிவந்தது. ஆனால், இந்த தகவலை கவின் மறுத்தார்.

    ஆனால், கவின் மற்றும் துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களிடம் ஜேசன் கதை சொன்னது உண்மைதான் எனவும், அவர்கள் கேட்ட சில விளக்கங்களுக்கு ஜேசனிடம் பதில் இல்லை என்பதாலும், இயக்கத்தில் அவருக்கு பெரிய அனுபவம் இல்லை என்பதாலும் அவரின் இயக்கத்தில் நடிக்க யாரும் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது.

    அதோடு, அந்த படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்கும் ஜேசன் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், விஜய் சேதுபதி எஸ்கேப் ஆகிவிட்டாராம். இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீனை இசையமைக்க வைக்க ஜேசன் ஆசைப்படுகிறார். அதேபோல், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் இதில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.

    ஆனால், பிரபலமான நடிகர்கள் யாரும் ஆர்வம் காட்டாததால் படம் டேக் ஆப் ஆகவில்லை என சொல்லப்படுகிறது. அதோடு, தன்னை நம்பாமல் படத்திற்கு ஆலோசனை கொடுக்க லைக்கா தயாரிப்பில் சூப்பர்வைசர் நியமிக்கப்பட்டிருப்பதும் ஜேசன் சஞ்சய்க்கு அப்செட்டை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஏற்கனவே ஒரு வருடம் போய்விட்ட நிலையில் இந்த வருடமாவது ஜேசன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • நான் ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்கிறேனா? ஓபனாக சொன்ன கவின்.. அப்போ அது உண்மைதானா?

    Jason sanjay: இயக்குனர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் அந்த படத்தில் தான் நடிக்கிறேனா என்பது குறித்த தகவலை கவின் தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

    கோலிவுட்டின் முன்னணி நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். லைகா புரோடக்‌ஷன் இயக்கத்தில் தன்னுடைய  முதல் படத்தினை டைரக்ட் செய்ய இருக்கிறார். இப்படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் தான் தொடர்ந்து சமூக வலைத்தள கேள்வியாக இருக்கிறது.

    இதையும் படிங்க: ‘பில்லா’ படத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்! 16 வருஷம் கழிச்சு வெளிச்சத்திற்கு வந்த உண்மை

    விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான் தொடங்கி பல ஹீரோக்களின் பெயர்கள் அடிப்பட்டது. முக்கியமாக கவின் தான் நடிப்பார் எனவும் பலர் கிசுகிசுத்தனர். இந்நிலையில் கவின் தான் ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்கிறேனா என்ற கேள்விக்கு சமீபத்திய பேட்டியில் பதில் அளித்து இருக்கிறார்.

    அந்த பேட்டியில் இருந்து, அந்த படம் குறித்து ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. அது நட்புரீதியான சந்திப்பாகவே இருந்தது. எனக்கும் தொடர்ச்சியாக படங்கள் இருந்ததை சொல்லினேன். அவர்களும் முடிவெடுத்துவிட்டு வருவதாக சொன்னார்கள். இன்னும் வரவில்லை. விஜய் சாரும் பேசுவதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் பார்ப்பதற்கு ரொம்ப சிம்பிளாகவே இருப்பார்.

    இதையும் படிங்க: அரண்மனை 4 எப்படி இருக்கு?.. தமன்னா, ராஷி கன்னாவ பார்க்குறதுக்கே துட்டை அள்ளி வீசலாம் போல!..

    அப்படி தான் அவரின் மகன் ஜேசன் சஞ்சயும் ரொம்ப சிம்பிளாக தான் இருந்தார். அவரை பார்த்து இவர்களே இப்படி இருக்கும் போது நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.

    கவின் வீடியோவைக் காண: https://twitter.com/Chrissuccess/status/1786245618765062188

  • விஜய் மகனுக்கும் அஜித்துக்கும் உள்ள ஒரே ஒற்றுமை! ஷாக் கொடுத்த ஷாலினி அஜித்

    Ajith Sanjay: இன்று தமிழ் சினிமாவிற்கே தளபதியாக விளங்கும் விஜய் அடுத்ததாக அரசியலை நோக்கி நகர இருக்கிறார். அதனால் சினிமாவிற்கு கொஞ்சம் பிரேக் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஜயின் மகனான சஞ்சய் விஜய் அடுத்ததாக அவருடைய இன்னிங்ஸை ஆரம்பிக்க இருக்கிறார்.

    ஏற்கனவே கனடாவில் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து தேர்ச்சி பெற்ற சஞ்சய் சில குறும்படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் லைக்காவுடன் தன் முதல் படத்திலேயே களமிறங்க காத்திருக்கிறார் ஜேசன் சஞ்சய். அது சம்பந்தமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியானது.

    இதையும் படிங்க: என்ன அண்ணே இது… ஃபகத் பாசிலுக்கு ஓவர் பில்டப் கொடுத்தது வீணா போச்சே.. வேட்டையனில் என்ன கேரக்டர் தெரியுமா?

    சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக துருவ் விக்ரமும் அதிதி சங்கரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் அந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் மகன் இசையமைப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

    இந்த நிலையில் சஞ்சய் இயக்கும் படத்திற்கு பி.ஆர்.ஓவாக அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திராதான் பணியாற்ற இருக்கிறாராம். இதனால் படக்குழு ஆரம்பத்தில் சுரேஷ் சந்திராவை அணுகிய போது முதலில் சுரேஷ் சந்திரா தயங்கினாராம். இதை அஜித்திடம் தெரிவிக்க அதற்கு அஜித் தராளமாக போய் பணியாற்றுங்கள் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

    இதையும் படிங்க: என்ன நடிகன்னு நினைச்சியா!.. தப்பு செய்தவரை எட்டி உதைத்த எம்ஜிஆர்!. ராமாவரம் தோட்டத்து ரகசியங்கள்..

    அதுமட்டுமில்லாமல் சஞ்சய்க்கு அஜித் தொலைபேசி மூலமாக அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது .அஜித்தை தொடர்ந்து அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்தும் சஞ்சய்க்கு தொலைபேசி மூலமாக அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறாராம்.

    ஏற்கனவே அஜித் குடும்பமும் விஜய் குடும்பமும் ஒரு நல்ல நெருக்கமான நண்பர்களாகவே பழகி வந்த நிலையில் இப்போது சுரேஷ் சந்திராவும் இந்த குடும்பத்தில் இணைந்திருக்கிறார் என்பதுதான் கூடுதல் தகவல்.

    இதையும் படிங்க: அரை மணி நேரத்தில் 6 பாட்டு!. 2 மணி நேரத்தில் ரெக்கார்டிங்!.. கமல் படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!..

  • விஜய் மகனை நம்ப மறுக்கும் ஹீரோக்கள்!.. கவின் முதல் சிவகார்த்திகேயன் வரை இத்தனை பேர் எஸ்கேப்பா?..

    அப்பா விஜய்க்கு எதிராகத்தான் மகன் சஞ்சய் விஜய் இயக்குநராக போகிறார் என்கிற பேச்சுக்கள் கிளம்பிய நிலையில், ஜேசன் சஞ்சய் படத்தில் நடிப்பதற்கு ரசிகர்கள் தயங்கி வருகின்றனர். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு படம் எடுக்க லைகா வாய்ப்பு கொடுத்த நிலையில், லால் சலாம் எனும் ஹார்ட் டிஸ்க் தொலைந்த காவியத்தை எடுத்துக் கொடுத்தார்.

    அதே போல விஜய்யின் வாரிசும் முதல் படத்தை எப்படி இயக்குவார் என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், விஜய்யை பகைத்துக் கொள்வது போல ஆகிவிடுமோ என நடிகர்கள் நினைத்து ஓகே சொல்ல மறுத்து வருவதாக கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: தொடர்ச்சியாக காணாமல் போகும் லைகா படத்தின் ஹார்ட்டிஸ்க்… அம்மணிய தப்பா பேசிட்டாங்களேயப்பா…!

    அப்பா விஜய் மூலம் ஜேசன் சஞ்சய் சினிமாவுக்கு வந்தால் அவரை ஹீரோவாக்க கூட பல பிரபலங்கள் தயாராக இருப்பதாகவும் விஜய்யை எதிர்த்து எதையும் செய்ய வேண்டாம் என்கிற முடிவில் இருப்பதாக கூறுகின்றனர்.

    சஞ்சய் நடிப்பில் கவின் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அவர் நோ சொல்லி எஸ்கேப் ஆகி விட்டாராம். துருவ் விக்ரம், அதிதி ஷங்கரை வைத்து சஞ்சய் படம் எடுப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், துருவ் விக்ரமும் நடிக்கப் போவதில்லை என நைஸாக கழந்து கொண்டு விட்டதாக கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: மகனை களம் இறக்கி காணாமல் போன தயாரிப்பாளர்!.. எவ்வளவு ஹிட் கொடுத்த மனுஷன்!..

    மாவீரன் படத்தை விஜய்யின் மனைவி சங்கீதா தியேட்டருக்கு எல்லாம் சென்று பார்த்ததே சிவகார்திகேயனை வைத்து பெரிய படத்தை தனது மகன் இயக்கி ஒரே படத்தில் பெரிய இயக்குநராக வரவேண்டும் என்கிற ஐடியாவில் தானாம். ஆனால், ஜேசன் சஞ்சய் சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடிக்காததால் தான் கவின் பக்கம் அவர் திருப்பி விட்டதாக கூறுகின்றனர்.

    லைகா அறிவிக்கும் படங்கள் எல்லாம் இப்படி ஆரம்பிக்காமலும் ஆரம்பித்தால் சொதப்பியும் ஏன் போகின்றன என்கிற கேள்வி எழுந்துள்ளது. இப்போதைக்கு விஜய் மகன் சஞ்சய்க்கு ஒரு ஹீரோ கூட கிடைக்காமல் லைகா ஆபிஸ் ரூமிலேயே கதையை திருத்தும் பணியில் தான் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

  • ஜேசன் சஞ்சய் படத்துக்கு சூனியம் வச்சிராதீங்கப்பு… வெளியாகும் அப்டேட்களால் கடுப்பாகும் விஜய் ரசிகர்கள்…

    Jason Sanjay: விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தின் அப்டேட்கள் தொடர்ச்சியாக கசிந்து வரும் நிலையில் அதை பார்த்த விஜய் ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

    கடந்த வருடம் லைகா புரோடக்‌ஷன் தயாரிப்பில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு படத்தினை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அப்பா ஹீரோவாக இருந்த நிலையில் தாத்தா போல டைரக்‌ஷனை சஞ்சய் தேர்வு செய்து இருந்தார். அதுவே பலரிடத்திலும் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் தாத்தா எஸ்.ஏ.சி மற்றும் அப்பா விஜய் இருவருமே ஒப்பந்தம் கையெழுத்தான போது உடன் இல்லை.

    இதையும் படிங்க: லைக்கா மீது அஜித்துக்கு கோவமா? ‘ஏகே 63’ பட போஸ்டர் வெளியிட்டதன் பின்னனி காரணம் இதுதானா?

    இதன்பின் பல யூகம் பிறந்தது. விஜயின் மனைவி சங்கீதாவின் தந்தை லண்டனில் மிகப்பெரிய கோடீஸ்வரர். அவர் லைகா சுபாஸ்கரனுக்கு நெருக்கம் என்பதால் அவர் கொடுக்கும் தொகையை வைத்தே பேரனின் படத்தினை தயாரிக்க கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. கதை டிஸ்கஷன் வேலைகள் தொடர்ச்சியாக நடந்து வந்தது.

    இப்படத்தின் ஹீரோவாக பல முன்னணி நடிகர்கள் பேச்சுவார்த்தையில் இருந்தனர். கவின், விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் என லிஸ்ட் நீண்டது. தற்போது துருவ் விக்ரமின் ஐந்தாவது படமாக தான் இப்படம் உருவாக இருக்கிறதாம். நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஒரு ரூபாய்க்கு செக் கொடுத்த கமல்!.. ஆடிப்போன தயாரிப்பாளர்!.. ஆளவந்தானில் நடந்த அக்கப்போறு..