Tag: nagarjuna

  • நாகார்ஜுனாவிடம் பலமுறை அடி வாங்கிய விஜய் பட நடிகை.. டெடிகேஷனு சொல்லி இப்படி ஆயிடுச்சே?

    சினிமாவை பொறுத்தவரைக்கும் எடுக்கும் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில ரிஸ்க்குகளை எடுப்பது அவசியமாகிறது. அதனால்தான் ஸ்டண்ட் காட்சிகளில் முன்னணி ஹீரோக்கள் டூப் போடாமல் நடிக்க முன்வந்தாலும் அதில் உள்ள ரிஸ்கை அறிந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் டூப் போட்டு நடிக்க வைத்து விடுகின்றனர். அதில் ஒரு சில நடிகர்கள் எல்லாரும் மனிதர்கள்தானே என நினைத்து அவர்களே நடித்துக் கொடுப்பதும் உண்டு.

    அப்படி ஒரு காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாகர்ஜூனா பிரபல நடிகையை பல முறை கன்னத்தில் அறைந்து சிவக்கும் அளவுக்கு செய்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. நடிகை இஷா கோபிகர். விஜய் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இஷா கோபிகர். மனசே மனசே குழப்பம் என்ன பாடலை யாராலும் மறக்க முடியாது.

    அதில் விஜய் இஷா கோபிகர் கெமிஸ்ட்ரி அற்புதமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் பிரசாந்துடன் காதல் கவிதை, அரவிந்த்சாமியுடன் என் சுவாசக்காற்றே, விஜயகாந்துடன் நரசிம்மா என சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றார். அதன் பிறகு அவரை கோலிவுட்டில் பார்க்க முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்தின் மூலம் தமிழுக்கு ரீ எண்ட்ரி கொடுத்தார் இஷா கோபிகர்.

    நாகர்ஜூனாவுடன் சந்திரலேகா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காட்சியில் நாகர்ஜூனா இஷா கோபிகர் கன்னத்தில் அறையவேண்டுமாம். அந்தக் காட்சி சரியாக வராததால் பல முறை டேக் எடுக்கப்பட்டிருக்கிறது. தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக 14 முறை அந்த காட்சி எடுக்கப்பட்டதாம் .அதனால் 14 முறை நாகர்ஜூனா இஷா கோபிகர் கன்னத்தில் பளார் என அறைய வேண்டிய சூழ்நிலை.

    isha

    isha

    இதில் இஷா கோபிகர் கன்னத்தில் நாகர்ஜூனாவின் அனைத்து விரல்களும் பதிந்து விட்டதாம். இதை ஒரு பேட்டியில் இஷா கோபிகரே கூறியிருக்கிறார். தற்போது கூலி படத்தில் முக்கிய வில்லனாக நாகர்ஜூனா நடித்திருக்கிறார்.

  • ஆடியோ லாஞ்சுக்கு பிறகாவது தனுஷ் படத்துக்கு ஹைப் வருமா?.. இட்லி கடை பஞ்சாயத்து பத்தி வாய் திறப்பாரா?

    கமல்ஹாசனின் தக் லைஃப் படத்துக்கு கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் மற்றும் அவரது டீம் பல ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு பட்டித் தொட்டி எங்கும் தக் லைஃப் என ஒரு படம் வரப் போகிறது என்பதை தெரிவித்தது மட்டுமின்றி கன்னட மொழி பற்றி பேசி கர்நாடகாவில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி தேசியளவில் வைரல் செய்தியாகவும் தனது படத்தை கமல்ஹாசன் படு ஜோராக வியாபாரம் பார்த்து வருகிறார்.

    ஆனால், ஜூன் மாதம் 20ம் தேதி வெளியாகவுள்ள தனுஷின் குபேரா படம் தொடர்பாக இதுவரை பெரிதாக எந்தவொரு ஹைப்பும் எழவில்லை. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியான நிலையில், தான் தனுஷ் இந்த படத்தில் நல்லா நடிச்சிருக்காரே என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

    நாளை குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய் ராம் கல்லூரியில் மாலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய பிறகு தான் படத்திற்கான ஹைப் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகி விட்டார் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், திட்டமிட்டபடி இட்லி கடை படம் வெளியாகுமா? அமலாக்கத்துறை சோதனையில் தனுஷ் சிக்கினாரா? இல்லையா? தேவையில்லாமல் மற்ற பிரபலங்களின் விவாகரத்து சர்ச்சையில் தனுஷ் பெயர் சிக்குவது உள்ளிட்ட பல சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனாவை பார்க்கவே ஏகப்பட்ட ரசிகர்கள் குபேரா படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு செல்வார்கள் என தெரிகிறது. வரும் ஜூன் 20ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள குபேரா படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது.

  • கூலி பட நடிகரின் மகனுக்கு ஜோராக நடந்த திருமணம்!.. சந்தோஷத்தில் அகில் அக்கினேனி!..

    டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நாகார்ஜுனாவின் இரண்டு மகன்களில் இளைய மகனான அகில் அக்கினேனியின் திருமணம் இன்று காலை கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

    நடிகர் நாகார்ஜுனா 1986இல் தெலுங்கில் வெளியான விக்ரம் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து கீதாஞ்சலி, அன்னமய்யா, சிவா, நின்னே பெல்லடதா போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் “கிங் நாகார்ஜூனா” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தமிழில் ரட்சகன் மற்றும் தோழா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அடுத்ததாக இந்த ஆண்டு தனுஷின் குபேரா மற்றும் ரஜினிகாந்தின் கூலி உள்ளிட்ட படங்களிலும் நாகார்ஜுனா நடித்துள்ளார்.

    நாகார்ஜுனா முதல் மனைவி லஷ்மி ராமா நாயுடு. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இவர்களுடைய மகன் நாக சைதன்யா. பின்பு இரண்டாவதாக நடிகை அமலாவை மணந்துக்கொண்டார், இவர்களுக்கும் அகில் அக்கினேனி என ஒரு மகன் உண்டு. இவரது மகன்கள் நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி இருவரும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்கள்.

    நாக சைத்தன்யா 2017ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்தார். இருவரும் 2021இல் விவாகரத்து பெற்றனர். அதை தொடர்ந்து நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

    இந்நிலையில் இன்று நாகார்ஜுனாவின் இரண்டாவது மகனான அகில் அக்கினேனி ஓவியர் மற்றும் வாசனை திரவிய நிபுணரான ஜைனபை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜுனாவின் இல்லத்தில் இன்று காலை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து, ஜூன் 8 ஆம் தேதி அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் மிக பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், திருமணம் குறித்து நாகர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் ஜைனப்பை குடும்பத்தில் வரவேற்றதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

  • நாகார்ஜுனா மகன் திருமணத்துக்கு வராத அல்லு அர்ஜுன்!.. அந்த கசப்பான சம்பவம் தான் காரணமா?..

    நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகனான அகில் அக்கினேனி ஜைனப் ராவ்ஜியை 2025 ஜூன் 6ம் தேதி அன்று ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தைத் தொடர்ந்து, ஜூன் 8, 2025 அன்று ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக அகில் மற்றும் ஜைனப் காதலித்து வந்தனர், கடந்த 2024ம் ஆண்டு அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும், அகிலுக்கு 30 வயதும், ஜைனப்பிற்கு 39 வயதும் ஆகிறது, இந்த வயது வித்தியாசம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அதை தொடர்ந்து தற்போது அவர்களின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    அகிலின் வரவேற்ப்பு விழாவில் சிரஞ்சீவி, ராம் சரண், யாஷ், மகேஷ் பாபு, நானி, சூர்யா, கிச்சா சுதீப் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகிய அரசியல் பிரபலங்களும் கலந்துக்கொண்டுள்ள நிலையில் அல்லு அர்ஜூன் வரவேற்பு விழாவில் பங்கேற்காமால் இருந்ததற்கு என்ன காரணம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

    புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க வந்த ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததால் அல்லு அர்ஜூனை கைது செய்ய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார். மேலும் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு போதிய ஆவணங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். எனவே ரேவந்த் ரெட்டி திருமணத்திற்கு வந்ததால் கூட அல்லு அர்ஜூன் வராமால் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    அல்லு அர்ஜுன் மட்டுமின்றி பிரபாஸ், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் பிசியாக உள்ள நிலையில், வராமல் இருந்திருப்பார் என்றும் கூறுகின்றனர்.

  • ரொம்ப நாளைக்கு அப்புறம்.. கோட் சூட்டில் கலக்கும் தனுஷ்.. மும்பைனா இப்படியா?

    தனுஷ்: தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் குபேரா. இந்த படம் வரும் ஜூன் இருபதாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. படத்தில் தனுஷுடன் இணைந்து நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர் வெளியானதுமே இந்த படத்தில் தனுஷின் நடிப்பு கெட்டப் என இதுவரை இல்லாத அளவு மிகவும் தனித்துவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    dhanush

    dhanush

    படத்தின் பட்ஜெட்:

    பார்ப்பதற்கு பிச்சைக்காரன் தோற்றத்தில் இருந்தார் தனுஷ். அதுவே அந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளம் கைப்பற்றி இருக்கிறது. படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

    முதல் கூட்டணி:

    படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் தனுஷ் இந்த படத்திலும் யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதன் முறையாக நாகர்ஜுனாவுடன் தனுஷ் இணைந்து நடிக்கும் திரைப்படம் என்பதால் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. நாகர்ஜுனாவுக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

    உண்மையிலேயே குபேராவாக வந்த தனுஷ்:

    ஏற்கனவே நாகர்ஜுனா கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தோழா. இப்போது வரை அனைவருக்கும்மான ஃபேவரைட் திரைப்படம். அந்த வகையில் இப்போது தனுசுடன் நாகர்ஜுனா இணைந்து நடிப்பது பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் எந்த ஒரு விழாவுக்கு போனாலும் குறிப்பாக அவருடைய படங்களின் இசை வெளியீட்டு விழாவை உற்று நோக்கி பார்த்தால் பெரும்பாலும் அவர் வேட்டி சட்டையுடன் தான் இருப்பார்.

    கழுத்தில் கரு நிற மாலை, வேட்டி சட்டை என பார்ப்பதற்கே தமிழ்நாட்டு பாரம்பரியத்தை கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தும் விதமாக அவருடைய உடை இருக்கும். அப்படித்தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் வேட்டி சட்டையுடன் வந்து உற்சாகப்படுத்தினார் தனுஷ். இப்போது இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெறுகிறது. அந்த விழாவில் கோட் சூட்டுடன் வந்து அனைவரையும் சர்ப்ரைஸ் செய்திருக்கிறார் தனுஷ். பார்ப்பதற்கு கல்லூரி மாணவன் போலே காட்சியளிக்கிறார்.


  • புலி போல நடக்கச் சொன்னார் லோகேஷ் கனகராஜ்!.. கூலி பட அனுபவம் பகிர்ந்த குபேரா நடிகர்!..

    டோலிவுட்டின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா தற்போது கூலி, குபேரா போன்ற தமிழ் படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தில் நாகார்ஜூனா ஒரு முக்கிய காதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் பான் இந்திய திரைப்படமாக அனைத்து மொழிகளிலும் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்திலும் நாகார்ஜூனா நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே, அமீர் கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கூலி ஆகஸ்ட் 14, 2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகளவில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது.

    நாகார்ஜூனா தனது இளைய மகன் அகில் அக்கினேனி திருமண கொண்டாட்டத்தில் பிஸியாக இருந்த நிலையில் பேட்டி அளித்த அவர், லோகேஷ் கனகராஜ் மிக அற்புதமான குணம் கொண்டவர், அவர் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்களை எடுத்துக்கொண்டால் படத்தில் உள்ள கதாப்பாத்திரங்கள் அனைத்தும் பிரம்மிப்பாக இருக்கும், அதுவும் விக்ரம் படத்தில் ஃபஹத், விஜய் சேதுபதி மற்றும் ஏஜென்ட் டீனா கேரக்டர் எல்லாம் பார்க்க வியப்பாக இருந்தது. அதை தொடர்ந்து கூலி படத்தில் ரஜினிகாந்தை தவிர உபேந்திரா, அமீர் கான், நான் என பலருக்கும் நல்ல கேரக்டர் உண்டு, எங்களுடைய கதாப்பாத்திரங்கள் படத்திற்கு ஒரு ட்ரம்ப் கார்டாகவும் தனித்துவமாக தெரியும் வகையில் அவர் இப்படத்தை இயக்கியுள்ளார் என பேசியுள்ளார்.

    மேலும், புலி போல தன்னை நடந்து வரச் சொன்னார் என்றும் படம் முழுக்க விசில், விசில், விசில் சத்தம் காதை கிழிக்கப் போகுது என்றும் கூலி படத்துக்கு செம ஹைப் ஏற்றியுள்ளார்.

  • வாய் ஏன் ஒரு சைடா வாங்குது.. தனுஷ் முழுசா ரஜினியா மாறிய தருணம்..

    குபேரா:

    தனுஷ் நடிப்பில் அடுத்த வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் குபேரா. இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கி இருக்கிறார். தெலுங்கில் 13 படங்களை இயக்கியிருந்தாலும் அவர் இயக்கிய அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் சேகர் கம்முலாவுடன் தனுஷ் இணைந்த திரைப்படம் தான் குபேரா. இந்த படத்தில் நாகர்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தீவிரமான புரோமோஷன்:

    ராஷ்மிகா மந்தனா படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கின்றது. வரும் இருபதாம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. சென்னை, ஹைதராபாத், மும்பை என அனைத்து ஊர்களுக்கும் பட குழு சென்று படத்தை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

    பதிலடி கொடுத்த தனுஷ்:

    அந்த வகையில் சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதேசமயம் அவரை ட்ரோல் செய்தும் வருகின்றனர். இதற்கு முன்பு வரை தனுஷை பற்றி பல சர்ச்சைகளும் வதந்திகளும் வந்து கொண்டிருந்தன. அதையெல்லாம் கேட்டுவிட்டு அமைதியாக இருந்த தனுஷ் இந்த மேடையில் அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்திருக்கிறார்.

    dhanush

    dhanush

    கம்பேனியன்ஸ்:

    நம்மைப் பற்றி ஏதாவது உருட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். அதையெல்லாம் பற்றி நாம் கவலை பட கூடாது .தம்பிகளா கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க ராஜா. இந்த சர்க்கஸ் எல்லாம் வேண்டாம். இங்க இருக்கிறவர்கள் அனைவரும் என்னுடைய ரசிகர்கள் மட்டும் கிடையாது 23 வருடங்களாக என் கூடவே வந்த என்னுடைய கம்பேனியன்ஸ். என்னுடைய வழி துணை.

    செங்கலை கூட ஆட்ட முடியாது:

    நீங்க சும்மா நாலு வதந்தியை பரப்பி இத காலி பண்ணிடனும்னு நினைச்சா அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமே கிடையாது. ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது என்று அந்த மேடையில் பேசியிருந்தார். ஆக்ரோஷமாக அவர் பேசியிருந்தாலும் அவருடைய இந்த பேச்சையும் பேசிய விதத்தையும் ரசிகர்கள் ரஜினியுடன் ஒப்பிட்டு தனுஷை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    ரஜினி மாதிரி வாயை கூட ஒரு சைடுல வச்சு பேசுறாரே எனக் கூறி வருகின்றனர். தனுஷின் சமீப கால பேச்சுக்கள் ரஜினியை பின்பற்றுவது மாதிரியே தான் இருந்தது. ஆனால் குபேரா ஆடியோ விழாவில் இதுவரை இல்லாத வகையில் தனுஷ் அவருடைய வாயை கூட ஒரு சைடாக ரஜினி மாதிரியே தூக்கி வைத்து பேசினார். அது இப்போது பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வீடியோவை பார்க்க: https://x.com/VinodhRavi4/status/1934967487403372730

  • குபேராவா?.. கூலியா?!.. கன்பியூஸ் ஆன நாகார்ஜுனா !.. அப்செட் அன தனுஷ் .

    Kubera Coolie: தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமா நடிகர்களுக்கு நன்றாகவே பரிட்சயம் ஆனவர் நாஜார்ஜுனா. ஏனெனில், உதயம், இதயத்தை துள்ளாதே, ரட்சகன், தோழா போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இவர். சென்னை கிண்டி இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தவர். எனவே, தமிழ் நன்றாகவே பேசுவார். மேலும், சமந்தாவின் முன்னள் மாமனார் இவர். அந்த வகையிலும் இவர் கோலிவுட் ரசிகர்களுக்கு நெருக்கமானவர்தான்.

    இப்போது தனுஷுடன் இணைந்து குபேரா படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இவர் தெலுங்கில் ஒரு நல்ல இயக்குனராக பார்க்கப்படுபவர். குபேரா ஒரு சோஷியல் திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.

    இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார். மேலும் ராஷ்மிகா மந்தனாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர், டிரெய்லர் எல்லாமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் வருகிற 20ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

    எனவே, படக்குழு தொடர் புரமோஷன்களில் ஈடுபட்டிருக்கிறது. மும்பை, சென்னை, ஹைதராபாத் போன்ற ஊர்களில் படக்குழு ரசிகர்களை சந்தித்து பேசியது. இதில், தனுஷ் தன்னை பற்றி மோசமாக விமர்சைப்பவர்கள் பற்றி பேசினார். என் ரசிகர்கள் இருக்கும்வரை என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என பன்ச் வசனமெல்லாம் பேசினார்.

    ஒருபக்கம், லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தில் நாகார்ஜுனா வில்லனாக நடித்திருக்கிறார் என்பதான் இப்போது ஹாட் டாப்பிக். லோகேஷுக்கும், ரஜினிக்கும் அதிக ரசிகர்கள் என்பதால் இப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான். குபேரா பட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் நாகார்ஜுனாவிடம் கூலி பற்றிய கேள்விகளே அதிகம் கேட்கப்படுகிறது.

    எந்த யுடியூப்பிற்கு அவர் பேட்டி கொடுத்தாலும் கூலி படம் பற்றிய அதிக கேள்விகள் கேட்கிறார்கள். அவரும் முடிந்த அளவுக்கு அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவிலும் கூலி பற்றி நிறைய பேசினார். அப்போது தனுஷின் முகமே மாறியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது. மொத்தத்தில் குபேரா பட புரமோஷனை நாகார்ஜுனா கூலி பட புரமோஷனாக மாற்றிவிட்டார். இதில் தனுஷே கொஞ்சம் அப்செட் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

  • தனுஷுக்கு ராஜ யோகம் தான்!.. இருந்தாலும் ஏகப்பட்ட குறை இருக்கே பாஸ்.. குபேரா விமர்சனம்!..

    பல கோடி ரூபாய் சொத்துக்களை கை மாற்ற வேண்டும் என்பதற்காக ஒன்றுமே தெரியாத பிச்சைக்காரர்களை பினாமியாக்கலாம் என்கிற ஐடியா எல்லாம் ஓகே தான். ஆனால், அதை கடைசி வரை மெயின்டெயின் பண்ணாத இடத்தில் தான் படம் பல இடங்களில் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆவது போல தெரிகிறது.

    சேகர் கம்முலா எழுதி இயக்கியுள்ள குபேரா திரைப்படம் இன்று வெளியானது. படத்திற்கு பெரிதாக டிக்கெட் புக்கிங் இல்லாத நிலையில், படத்துக்கு ஹைப் இல்லாததே கடைசியில் பெரிய பிளஸ் ஆக மாறியுள்ளது. தனுஷின் நடிப்பை பார்த்த ரசிகர்களுக்கு மனுஷன் இன்னம்மா நடிச்சிருக்காரு என கொண்டாடுகின்றனர்.

    ஆனால், ராஷ்மிகா மந்தனாவின் போர்ஷன் மற்றும் அவருக்கு பின்னாடி தனுஷ் ஹட்ச் டாக் போல போகும் காட்சிகள் எல்லாம் படத்திற்கு பெரிய வேகத்தடையாகவே தெரிகிறது.

    4 பிச்சைக்காரர்களை வைத்து 40 ஆயிரம் கோடி பணத்தை லஞ்சமாக கொடுக்கும் பணியை நாகார்ஜுனா ஏற்று செய்வதாக கமிட் ஆகி வருவது எல்லாம் ஓகே தான். ஆனால், அவருடைய கதாபாத்திரத்தில் ஏதாவது அண்டர்கிரவுண்ட் ஆபரேஷன் போல பிரில்லியண்ட் ஆன ரைட்டிங்கை சேகர் கம்முலா எழுதாமல் விட்டதும் அவருடைய முடிவும் படத்தை தொங்க விட்டு விடுகிறது.

    திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தேவா கதாபாத்திரத்தில் அறிமுக காட்சியிலேயே தனுஷ் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறார். கொடுத்த காசுக்கு தேவையான பல விஷயங்களை படம் முழுக்க கொடுத்தாலும், கடைசியில் ஏதோ அவசர கதியில் படத்தை முடித்து விட்டது போலவும், பிச்சைக்காரனாக இருக்கும் ஒருவரை பணக்காரன் அத்தனை ஆட்களையும் அரசையும் கையில் வைத்துக் கொண்டு பிடிக்க முடியாமல் தவிப்பது எல்லாம் லாஜிக் மீறல்களாகவே உள்ளன.

    இன்னமும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால், தனுஷ் நடித்த நடிப்புக்கும், நாகார்ஜுனா போட்ட உழைப்புக்கும் பலனாக இருந்திருக்கும். வில்லன் ஜிம் சர்ப்பை கடைசியில் பிச்சை எடுக்க விடுவதெல்லாம் ஒட்டவே இல்லை.

    குபேரா ரேட்டிங்: 3.25/5

  • ஒரு செங்கல கூட உருவ முடியாதுனு சொன்னீங்க தனுஷ்! மொத்தத்தையும் உருவிட்டாரே நாகர்ஜூனா

    தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா ,ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா.. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படம் உருவானது. அதன் பிறகு கன்னடம் மலையாளம் ஹிந்தி என மூன்று மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    சமீபகாலமாக தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது. அதனால் அவருக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்பட்ட நிலையில் பல விருதுகளை அள்ளி குவித்த சேகர் கம்முலா இயக்குனருடன் அவர் இணைகிறார் என்று தெரிந்ததும் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். அவர் நடித்த வாத்தி, நானே வருவேன் ராயன் போன்ற திரைப்படங்கள் எல்லாம் ஓரளவு வரவேற்பை பெற்றது.

    கடைசியாக அவர் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் மோசமான தோல்வியை தழுவியது. அதனால் கண்டிப்பாக ஒரு வெற்றியை கொடுத்து ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தனுஷ் சேகர் கம்முலா உடன் இணைந்தார். ஏற்கனவே வாத்தி என்ற நேரடி தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார் தனுஷ். இரண்டாவதாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கும் திரைப்படம் தான் குபேரா.

    ஆனால் இந்த படமும் கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது. மோசமான திரைக்கதை இரண்டாம் பாதி மிகவும் ஸ்லோவாக இருக்கிறது என பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தனுஷின் நடிப்புதான் படத்தை ஓரளவுக்கு காப்பாற்றி இருப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சோசியல் மீடியாக்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது .

    படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு நாகார்ஜுனா பேசிய ஒரு கருத்து என்னவெனில் இது நாகார்ஜுனா படமோ தனுஷ் படமோ ராஷ்மிகா மந்தனாவின் படமோ கிடையாது. சேகர் கம்முலாவின் படம் என குறிப்பிட்டிருந்தார். ரிலீசுக்கு பின்பு இன்று அவர் பேசும் பொழுது இந்த படத்தில் ஹீரோவாக நான் கருதப்பட்டேன். தீபக் என்ற கேரக்டரை சுற்றியே தான் படம் நகருகிறது.

    kubera

    kubera

    ஆரம்பத்திலிருந்து படம் முடியும் வரை தீபக் கேரக்டரை மையப்படுத்தி தான் படம் சுற்றிக்கொண்டு வந்தது. அதனால் குபேரா படத்தின் ஹீரோ நான் என எனக்கு தோன்றியது என்று ஒரு பேட்டியில் பேசுகிறார் நாகர்ஜுனா. உடனே அந்த கிளிப்பிங்ஸை எடுத்து நம்மூர் ஆட்கள் அது எப்படி எல்லா கிரெடிட்சையும் அவரே எடுத்துக்கொள்ள முடியும். படத்தில் தனுஷின் ஆத்மார்த்தமான நடிப்பு அவருடைய பெர்பாமன்ஸ் எந்த அளவுக்கு படத்தை உயர்த்தியது என அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கையில் நாகார்ஜுனா இப்படி பேசலாமா என அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.