Tag: nagarjuna

  • தனுஷிற்கே இவ்வளவு தானா? பாதி சம்பளத்தை குறைத்த ராஷ்மிகா… குபேரா படத்தின் சம்பள அப்டேட்!

    Kuberaa: தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போடும் குபேரா படத்தில் நடித்த முன்னணி பிரபலங்களின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.

    சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா. ஒரு பெரிய அரசின் திட்டத்தை கைப்பற்ற நினைக்கும் வில்லன் அதற்கு பிச்சைக்காரராக இருக்கும் தனுஷை எப்படி பயன்படுத்துகிறார் என்பது தான் கதை.

    முதல் பகுதி சுவாரஸ்யமாக இருந்தாலும் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக ஓடுவதால் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவதாக கமெண்ட்கள் வரத்தொடங்கி இருக்கிறது. அதிலும் தமிழில் இப்படத்திற்கு கலவையான வரவேற்பே கிடைக்கிறது.

    நாகர்ஜூனா மேடையிலேயே நான் தான் இப்படத்தின் ஹீரோ எனப் பேசியதும் தமிழ் ரசிகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சம்பள விவரம் கசிந்து இருக்கிறது. ஹீரோ தனுஷிற்கு மட்டுமே மிகப்பெரிய சம்பளமாக 30 கோடி வரை கொடுக்கப்பட்டதாம்.

    ஆனால் இது அவருக்கு தமிழில் வாங்குவதை விட குறைவு எனக் கூறப்படுகிறது. நாகர்ஜூனாவுக்கோ 14 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் தரப்பட்டுள்ளது. இதில் ராஷ்மிகா தான் பாவம். 1100 கோடி வசூல் செய்த புஷ்பா2 படத்தில் இவருக்கு 10 கோடிக்கும் மேல் சம்பளம் தரப்பட்டதாம்.

    அதை தொடர்ந்து சிக்கந்தரில் இன்னும் கூட கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் குபேர படத்தில் 5 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கி இருக்கிறாராம். ஏன் இந்த திடீர் குறைப்பு என்பதற்கான காரணம் கூறப்படவில்லை. சேகர் கம்முலாவிற்கு 10 கோடியும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு 3 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

  • தனுஷின் குபேரா டீசர் எப்படி இருக்கு?.. நாகார்ஜுனாவை அடிக்குற சீன் செம!.. சரஸ்வதி சபதமா இருக்குமோ?

    சரஸ்வதி சபதம் படத்தில் கல்வியா? செல்வமா? வீரமா? என நாரதர் பாட்டுப் பாட ஊமையான சிவாஜி பாட்டுப் பாடும் புலவராக மாறிவிடுவார். கோழையான ஜெமினி கணேசன் வீரமான தளபதியாக மாறிவிடுவார். பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த கே.ஆர். விஜயா கழுத்தில் யானை மாலை போட அவர் ராணியாகி விடுவார்.

    அதுபோல பிச்சைக்காரனாக இருக்கும் தனுஷை செல்வந்தனாக நாகார்ஜுனா மாற்ற அதன் பின்னர் என்ன என்ன பிரச்னை எல்லாம் நடக்கிறது என்கிற கதையில் தான் குபேரா படம் உருவாகி உள்ளது டீசரை பார்த்தாலே தெரிகிறது.

    சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 20ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாகிறது.

    இன்று வெளியான டீசரில் நாகார்ஜுனாவின் காட்சிகள் எல்லாம் மிரட்டலாக இருக்க, அதன் பின்னர் தனுஷை பிச்சைக்காரனாக காட்டும் இடங்களிலும், அவருக்கு கோட் மாட்டி விட்டு நாகார்ஜுனா பெரிய சிக்கலில் கோர்த்து விடப் பார்ப்பதும், ஒரு கட்டத்தில் நாகார்ஜுனாவையே தனுஷ் அடிக்க பாயும் காட்சிகள் என டீசர் முழுக்கவே எமோஷனல் காட்சிகள் பாடல்களின் வழியே கனெக்ட் செய்யப்பட்டு இருப்பது சூப்பர்.

    இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ஃபிளாப் ஆன நிலையில், குபேரா படம் தனுஷுக்கு பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரி ஹர வீர மல்லு படம் வெளியாகும் நிலையில், இந்த படம் தள்ளிப் போகும் என கிசுகிசுக்கள் கிளம்பினாலும் படக்குழு ஜூன் 20 படத்தை வெளியிட உறுதியாக உள்ளனர்.

  • அதிரடியாக வெளியான குபேரா படத்தின் ஆடியோ ரிலீஸ் அப்டேட்… ஆட்டம் களைக்கட்டும் போலயே

    Kubera: தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஃபிடா, லவ் ஸ்டோரி படங்களை இயக்கிய சேகர் கம்முலாவின் அடுத்த திரைப்படமாக உருவாகி வருகிறது குபேரா. சேரியில் இருந்து பணக்கார இடத்துக்கு வரும் கதையாக இருக்கும் என நம்பப்படுகிறது. தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

    மேலும், இப்படத்தில் தனுஷின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என நம்பப்படுகிறது. ஒரு காட்சியில் தனுஷின் நடிப்பு படக்குழுவையே பிரமிக்க வைத்ததாகவும் தகவல்கள் பரவி இருக்கிறது. முதல்முறையாக நாகர்ஜூனா மற்றும் தனுஷ் கூட்டணி வேறு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்துள்ளது.

    இப்படம் வரும் ஜூன் 20ந் தேதி திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் ஜூன் 5ந் தேதியே தக் லைஃப் வெளியாகி விடும் என்பதால் இப்படத்திற்கு பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது எனவும் நம்பப்படுகிறது.

    சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. 2 நிமிடம் ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில் பெரும்பாலும் டயலாக் இல்லாமல் இருப்பதே ஆச்சரியத்தை உருவாக்கி வைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பெரிய அளவில் ஆக்‌ஷன் காட்சிகளாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

    மேலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் போய் வா என்ற பாடலை தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷே பாசி இருக்கிறார். ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகி விட்டதால் படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் ஜூன் 1ந் தேதி நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தனுஷ் மற்றும் நாகர்ஜூனா இருவரும் கலந்து கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.

    குபேரா, கூலி தற்போது ஜெயிலர்2 என தொடர்ந்து நாகர்ஜூனா தமிழில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. வரும் மாதங்களில் முன்னணி பிரபலம் ரிலீஸ் ஆக இருப்பதால் திரைப்பட ரசிகர் செம குஷியில் உள்ளனர்.

    வீடியோவைக் காண: https://x.com/KuberaaTheMovie/status/1927666607704232428

  • ஜெயிலர் 2 படத்தில் எத்தனை பிரபலம்… கூட்டு சேரும் இன்னொரு சூப்பர்ஸ்டார்… போதும் தாங்காது!

    Jailer2: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர்2 திரைப்படத்தின் அடுத்த ஆச்சரிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.

    ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதுவே படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இதையடுத்து படம் வெளியாகி பல கோடி வசூலை குவித்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

    முதல் பாகத்தினை போல இந்த பாகத்திலும் ஏகப்பட்ட கேமியோக்கள் உள்ளனர். மோகன்லால், சிவராஜ்குமாரை தாண்டி பாலகிருஷ்ணா, அமீர்கான் உள்ளிட்டோரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு மீடியாவில் இருந்து தகவல் பரவி வருகிறது.

    ஜெயிலர் 2க்கு நாகர்ஜூனாவை படக்குழு அணுகி இருக்கிறதாம். ஒரு முக்கியமான கதாபாத்திரத்துக்காக கேட்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இது இன்னும் உறுதியாகாத சூழலில் நாகார்ஜுனா தரப்பு இதற்கு ஒப்புகொள்ளும் பட்சத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நாகர்ஜூனா இருவரும் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்து வருகின்றனர். கூலி மற்றும் ஜெயிலர்2 இரண்டுமே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தற்போது இந்த அப்டேட் ரசிகர்களை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ‘ஜெயிலர்’ படமே ஒரு மெகா ஹிட். 2023-ல் வந்த அந்த படம் 600 கோடி ரூபாய் கலெக்‌ஷனை தாண்டி, ரஜினி ரசிகர்களை மட்டும் இல்ல, பான் இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையுடன் வந்த அந்த படம், ‘டைகர் முத்துவேல் பாண்டியன்’ கதாபாத்திரத்தை கலக்கலா கொண்டு வந்துச்சு. இப்போ ஜெயிலர் 2ல இயக்குநர் நெல்சன் தான் மீண்டும் இயக்குகிறார். அனிருத் தான் இசை. படத்தின் தயாரிப்பு மீண்டும் Sun Pictures தான். இந்த கூட்டணியிலேயே படம் ஹிட் ஆனதுக்கப்புறம், பார்ட்டு 2ல நாகார்ஜுனா இணைந்தா, அது ஒரு பெரிய அப்டேட் தானே!

    இப்போவே பல ரசிகர்கள், “நாகார்ஜுனா ரஜினியோட அடுத்த கூட்டணியா?”னு பதிவுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.

  • மண்ணை கவ்விய NEEK… குபேரா ரிலீஸுக்கு தயாராகும் தனுஷ்… வெளியான சூப்பர் அப்டேட்

    Kubera: தனுஷின் நடிப்பில் குபேரா திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த ஆச்சரிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.

    தனுஷ் தற்போது நடிப்பில் தொடர்ச்சியாக இட்லிகடை, குபேரா படங்களில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் தன்னுடைய டைரக்‌ஷன் பணிகளையும் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்தியிலும் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.

    சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ரிலீஸானது. அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் கூட டிராகன் படத்தின் ரிலீஸால் படம் வசூலில் பெரிய அடி வாங்கி இருக்கிறது.

    இந்நிலையில் தற்போது தனுஷின் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஜூன் 20ந் தேதி இப்படத்தினை வெளியிட தேதியை குறித்து விட்டனர். இதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.

    இப்படத்தின் மொத்த படப்பிடிப்புமே ஏற்கனவே முடிந்து விட்டது. டப்பிங் மற்றும் எடிட்டிங் வேலைகள் மட்டுமே தற்போது நடந்து வருகிறது. இப்படத்தின் இந்த ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    சேகர் கம்முலு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து தெலுங்கு சூப்பர் நடிகரான நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தனுஷ் இரண்டு வித கேரக்டரில் நடிக்கவும் வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விரைவில் வரிசையாக அப்டேட்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • நான் நாகார்ஜூனா வீட்டு மருமகளா? உண்மையை போட்டு உடைத்த விஜய் நாயகி

    Nagarjuna: நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவின் திருமணம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய வீட்டில் மீண்டும் ஒரு நாயகி மருமகளாக செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்தது. தற்போது இது குறித்து அந்த நாயகியே விளக்கம் கொடுத்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

    சமந்தாவை பிரிந்த நாக சைத்தன்யா சில ஆண்டுகள் கழித்து தற்போது சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுடைய திருமணம் வெகு விமரிசையாக விரைவில் நடைபெற இருக்கிறது.

    இதையும் படிங்க: ரோகிணிக்கு விஜயா வைத்த சூப்பர் செக்.. ராதிகாவை விளாசிய இனியா.. தங்கமயிலின் திட்டம்!..

    இந்நிலையில் நடிகை மீனாட்சி சவுத்ரி நாகர்ஜுனாவின் சகோதரி மகனான தெலுங்கின் முன்னணி நடிகர் சுஷாந்தை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இருவருக்கும் விரைவில் திருமணம் எனவும் கிசுகிசுக்கப்பட்டது.

    இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியான தெலுங்கு பட பிரமோஷனில் கலந்து கொண்ட மீனாட்சி சவுத்ரி விளக்கம் அளித்து இருக்கிறார்.

    இது குறித்த அவர் கூறும் போது, முதலில் நான் பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பதாக வதந்திகள் பரவியது. தற்போது என்னைப் பற்றி காதல் வதந்திகளும் பரவி வருகிறது. இப்பொழுது நான் திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை. சிங்கிளாக தான் இருக்கிறேன். யாருடனும் நீங்களாக விருப்பமில்லை என ஓப்பனாக பதில் பேசி இருக்கிறார்.

    Meenakshi _ Sushant

    இந்த விளக்கத்தின் மூலம் அவர் நடிகர் சுஷாந்துடன் நான் காதலை மறுத்து இருப்பதாக கூறப்படுகிறது. மீனாட்சி சவுத்ரி நடிப்பில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் நிலையில் அவருக்கு தற்போது தென்னிந்திய சினிமாக்களில் வாய்ப்பு குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: lubber Pandhu: படம் ஹிட்டுனா கிஃப்ட் கொடுப்பாங்க! லப்பர் பந்து பட இயக்குனருக்கு நேர்ந்த சோகம்.. பெரிய மோசடி

  • சமந்தாவுக்கும் இப்படித்தான் செஞ்சீங்க… நாக சைத்தன்யாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

    டோலிவுட்டின் இளம் ஹீரோ நாக சைதன்யா தன்னுடைய அடுத்த திருமணத்திற்கு கோலாகலமாக தயாராகி விட்டார். இவரின் முதல் மனைவி சமந்தாவை பிரிந்து ஒரு வருடத்தில் அடுத்த காதலுக்கு தயாராகி விட்டார். மீண்டும் நடிகையுடன் காதல் வயப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை டேட்டிங் செய்து தற்போது அடுத்த மாதம் திருமணமும் செய்ய போகின்றனர்.

    தன்னுடைய சமூக வலைதளத்தில் சமந்தாவின் அனைத்து புகைப்படங்களையும் நீக்கினாலும் ஒரு படம் மட்டும் விட்டு வைத்திருந்தார். சோபிதா துலிபாலாவுடனான நிச்சயதார்த்தத்திற்கு பிறகு அந்த புகைப்படத்தையும் நீக்கி விட்டார்.

    இதையும் படிங்க: சும்மா வரல சினிமாவுக்கு… அடேங்கப்பா ஜி.வி.பிரகாஷ்குமாரோட அனுபவத்தைப் பாருங்க…!

    முன்னதாக ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெறுவதாக கூறப்பட்டது. ஆனால் அது ராசியில்லை என்று நினைத்தார்களோ என்னவோ தற்போது ஹைதராபாத்தில் செட் போட்டு பிரமாண்டமாக திருமணத்தை நடத்திட முடிவு செய்துள்ளனர்.

    தந்தை நாகார்ஜுனா தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு அமலாவை மணந்தார். இத்தனைக்கும் அவரின் மனைவி நடிகர் வெங்கடேஷின் சகோதரி. தற்போது அதேபோல பிள்ளையும் சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு சோபிதவுடன் இரண்டாவது கல்யாணத்திற்கு ரெடியாகி விட்டார்.

    naga chaitanya
    #image_title

    இந்தநிலையில் திருமணத்திற்கு முன்பாக நாக சைதன்யா – சோபிதா துலிபாலா இருவரும் கரம்கோர்த்து பொதுவெளியில் நடந்து வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் சைதன்யா கோட் சூட்டிலும், சோபிதா கவுன் போன்ற உடையிலும் முகமெங்கும் மகிழ்ச்சி பொங்க நடந்து வருகின்றனர்.

    இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘சமந்தாவுடனும் இதுபோல தான் நடந்து வந்தார். கடைசியில் என்ன ஆனது?’ என்று காட்டமாக அவரை விமர்சித்து வருகின்றனர். வேறு சிலரோ, ‘சமந்தா இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீளவில்லை. ஆனால் மனுஷன் ரொம்ப உற்சாகமாக இருக்கிறார்’ என்று கிண்டலடித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: படம் பார்க்கும்போதே அந்த இயக்குனருடன் ஒர்க் பண்ணனும்னு ஆசை… SK.சொன்ன பிளாஷ்பேக்

  • சோபிதாவை தொடர்ந்து நாகர்ஜூனா வீட்டு இளைய மருமகளாகும் விஜய் நாயகி… அடங்கம்மா!…

    Nagarjuna: பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் வீட்டில் கல்யாண சீசன் போல தற்போது அவருடைய வீட்டுக்கு இரண்டாவது நாயகி மருமகளாக செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.

    பிரபல தயாரிப்பாளரின் மகளான லட்சுமியை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தெலுங்கு சினிமாவில் சூப்பர் நடிகராக இருக்கும் நாகர்ஜுனா. இவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா. பின்னர் இத்தம்பதி அடுத்த ஆறு ஆண்டுகளில் விவாகரத்து செய்து கொண்டனர்.

    இதையும் படிங்க: ரோகிணியின் பித்தலாட்டம்… எழில் விஷயத்தை உடைத்த செல்வி… மீனாவை கேள்வி கேட்ட பாண்டியன்

    இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமாக இருந்த நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாகர்ஜுனா. இவர்களுக்கு மகனாக பிறந்தவர் அகில்.  அகிலுடன் நாகசைதன்யாவும் நாகார்ஜுனாவுடன் தான் வளர்ந்தார்.

    முதலில் மகன்களுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த நாகர்ஜுனா சைதன்யாவுக்கு சமந்தாவையும், அகிலுக்கு  பிரபல தொழிலதிபரின் மகள் ஸ்ரேயா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதைத்தொடர்ந்து சைதன்யா மற்றும் சமந்தா திருமணம் முடிந்த கையோடு அகிலின் திருமணம் நிறுத்தப்பட்டது.

    இது குறித்து மற்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அகில் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். ஆனால் அகிலின் திருமணம் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் இதுவரை கசியாமல் இருந்தது.

    இதையும் படிங்க: என்னை கொலை பண்ண வச்சிடாதீங்க…! சிவகுமார் சினிமாவை விட்டு விலக இதான் காரணமாம்…!

    இருவரும் இரண்டு பேரின் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கி விட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரின் திருமணம் முடிந்த கையோடு இந்த திருமணமும் நடக்க வாய்ப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

  • கூலி படத்தில் பெத்த கோடியில் புக் செய்யப்பட்டாரா நாகர்ஜூனா… வெவரம்தான்!..

    Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நாகர்ஜூனா சைமன் வேடத்தில் வாங்கிய சம்பளம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் கூலி. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மீண்டும் பரபரப்பாக இயங்கிவருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்தின் ஷூட்டிக் விசாகபட்டினத்தில் நடப்பதால் விறுவிறுப்பான அப்டேட்கள் குவிந்து வருகிறது.

    இதையும் படிங்க: ஒரு கோடி தேடி வந்தும் உதறித் தள்ளிய அஜித்… ரசிகர்கள் மேல் எவ்வளவு அன்பு?!

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இந்த கூட்டணியின் மூன்றாவது முறையாக இணைவதால் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் லோகேஷின் வழக்கமான பாணியில் இல்லாமல் இப்படம் வித்தியாசமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

    nagarjuna

    இப்படத்தின் படக்குழு குறித்து தினசரி அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. முதலில் ஷாபின் ஷபீர் தயாள் கேரக்டரில் நடிப்பதாக கூறப்பட்டது. சமீபத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் வெற்றியை தொடர்ந்து இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமாகி இருக்கின்றனர்.

    இதையும் படிங்க: வாண்டட் ஆக வலையில் சிக்கிய வெங்கட் பிரபு… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

    இவரை தொடர்ந்து, சைமன் கேரக்டரில் தெலுங்கு  நடிகர் நாகர்ஜூனா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று பிரீத்தி கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த கேரக்டர் அறிவிப்பு யாருடையதாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் இப்படத்தில் இன்னும் சில சூப்பர்ஸ்டார் நடிகர்கள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், சைமனாக நடிக்கும் நாகர்ஜூனாவுக்கு சம்பளம் மட்டுமே 25 கோடி வரை பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

  • நேத்து மலையாளம் இன்னைக்கு தெலுங்கா? கூலியின் இணைந்த உச்ச நட்சத்திரம்..

    Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் படக்குழு குறித்த அப்டேட்கள் நேற்றில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு வரும் நிலையில் இன்று ஒரு முக்கிய நடிகர் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

    லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பொதுவாகவே லோகேஷன் திரைப்படங்கள் எல்சியூ எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சை சார்ந்தே இயக்கப்பட்டு இருக்கும். ஆனால் முதல் முறையாக கூலி திரைப்படத்தை தனி படமாக எடுக்க இருக்கிறார்.

    இதையும் படிங்க: அஜித் மேல் இப்போ வரைக்கும் கோபம் இருக்கு! என்ன லைலா இப்படி சொல்லிட்டாங்க?

    எப்போது போல இல்லாமல் இப்படத்தில் போதை பொருள் குறித்து எந்த காட்சிகளும் அமைக்கப்பட வில்லையாம். அதுபோல நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மும்முரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு மல்டி ஸ்டார் கூட்டணிதான் முக்கிய காரணமாக கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்திலும் மற்ற மொழி உச்ச நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது அடுத்து உருவாகி வரும் கூலி திரைப்படத்திலும் இதே டெக்னிக்கை தான் லோகேஷ் கனகராஜும் பயன்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படக்குழு குறித்த அறிவிப்பு நேற்று முதல் தினமும் மாலை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மலையாளத்தின் நடிகரும், தயாரிப்பாளருமான ஷாபின் ஷாப்பீர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    இதையும் படிங்க: அப்போ பிக்பாஸ் இவர் தானா? புரோமோ ஷூட்டில் கசிந்த வீடியோ… பக்காவா இருக்காரே!..

    மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்தவர் ஷாபின் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று கூலி திரைப்படத்தின் மற்றொரு நடிகராக தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமான நாகார்ஜுனா இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இப்படத்தில் சைமன் என்ற கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

    Nagarjuna

    ரஜினியின் சினிமா வாழ்க்கையில்  சமீபத்திய திரைப்படங்களில்தான்  வெளி மாநில பிரபலங்கள் தொடர்ந்து நடித்து வருவது அதிகரித்து வருகிறது. வேட்டையன் திரைப்படத்தில் அமிதாப் இணைந்த நிலையில் கூலி திரைப்படத்திலும் முன்னணி பாலிவுட் நடிகர் இணைவார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. அடுத்தடுத்த அறிவிப்புகளில் இது குறித்த தகவல் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.