Tag: Nagesh

  • சரியில்ல… காட்சியை மாற்றுங்க… நாகேஷ் சொன்னதைக் கேட்டு அசந்துபோன டைரக்டர்!

    சரியில்ல… காட்சியை மாற்றுங்க… நாகேஷ் சொன்னதைக் கேட்டு அசந்துபோன டைரக்டர்!

    பொதுவாக படப்பிடிப்புத் தளத்தில் அந்த டைரக்டருக்கு யாராவது நடிகர்கள் ஆலோசனைக் கூறினால் பெரும்பாலான டைரக்டர்கள் அந்த ஆலோசனையை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் தான் இந்த இயக்குனர். தமிழ், தெலுங்கு, இந்தியில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் தான் எல்வி.பிரசாத்.

    ஒரு வீட்டில் ஒருவர் இறந்து விட்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் எப்படி துக்கத்தில் இருப்பார்கள் என்ற காட்சியைப் படமாக்கிக் கொண்டு இருந்தார் எல்வி.பிரசாத். வீட்டு வேலைக்காரன் கேவி கேவி அழ, இன்னும் கொஞ்சம் அழு. இன்னும் கொஞ்சம் அழுன்னு காட்சிகளைப் படமாக்கிக் கொண்டு இருந்தார் பிரசாத். ‘கொஞ்சம் கட் சொல்றீங்களா”ன்னு நாகேஷ் சொல்ல, எதுக்காகக் கட் பண்ணச் சொன்னன்னு கேட்கிறார் எல்வி.பிரசாத். ;’சார் செத்தது வீட்டு எஜமானி.

    அந்த அம்மா புருஷனே அப்படி அழல. வேலைக்காரன் இந்தளவுக்கு விக்கி விக்கி அழுதான்னா படத்தைப் பார்க்கிற ரசிகர்களுக்கு சந்தேகம் வராதா?” என்று டைரக்டரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார் நாகேஷ். படப்பிடிப்பு தளத்தில் டைரக்டரைப் பார்த்து இப்படி ஒரு நடிகர் சொன்னாருன்னா, ‘தம்பி இந்தக் காட்சியை எப்படி படமாக்குவதுன்னு எனக்குத் தெரியும். நீ உன் வேலையைப் பாரு. செட்டை விட்டு வெளியே போ. காட்சிகளைப் படமாக்கி விட்டு உன்னை கூப்பிடுறேன”; என்பார்.

    ஆனால் இங்கு நடந்தது அப்படி அல்ல. டைரக்டரிடம் நாகேஷ் இப்படி சொன்னார். எஜமானி இறந்த துக்கத்தைத் தாங்கிக்கிட்டு அப்படி வெளியே போய் துண்டை எடுத்துட்டு வாயைப் பொத்தியபடி அழுதான்னா ரொம்ப நல்லாருக்கும்னு நாகேஷ் சொன்னார். அந்த யோசனையை ஏற்றுக் கொண்டு திரைக்கதையைப் படமாக்கியதோடு மட்டும் இல்லாமல் நாகேஷைப் பார்த்து எல்வி.பிரசாத் ஒண்ணு சொல்றாரு. அதுதான் முக்கியம்.

    ‘நாகேஷ் ஒரு டைரக்டராகக்கூடிய எல்லா திறமையும் உங்கிட்ட இருக்கு” என்று அவரைப் பாராட்டி இருக்கிறார் எல்வி.பிரசாத். இந்த பெருந்தன்மை எல்லாம் எத்தனை இயக்குனர்ககள்கிட்ட எதிர்பார்க்க முடியும்? என்று கேட்கிறார் பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

  • ஜெய்சங்கர், நாகேஷ் அதுல கெத்துதான்… ஆனா உதாரணமா எடுக்காதீங்க!

    ஜெய்சங்கர், நாகேஷ் அதுல கெத்துதான்… ஆனா உதாரணமா எடுக்காதீங்க!

    தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஜெய்சங்கர். அதே போல அந்தக் காலகட்டத்தில் நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு கொடிகட்டிப் பறந்தவர் நாகேஷ். இவர்களைப் பற்றி வியக்கத்தக்க தகவலை நடிகர் சோ பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

    என்னுடைய அனுபவத்தில் சினிமாவில் சேரணும்னு ஆசையை வச்சிக்கிட்டு வெற்றி பெற்ற இருவர்னா அதுல ஒருவர் கதாநாயகன் ஆன ஜெய்சங்கர். இன்னொருவர் நகைச்சுவை நடிகரான நாகேஷ் என்கிறார் சோ. திரையுலகிலே கதாநாயகனாக உருவெடுப்பதை மனதிலே ஒரு லட்சியமாகவே வைத்துக் கொண்டு தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு சரியான முறையில் திட்டமிட்டு சொன்னதை செய்தும் காட்டியவர் ஜெய்சங்கர்.

    அதே மாதிரி அசாத்தியமான ஒரு திறமை இருந்தால் தான் இந்த சினிமா உலகிலே முன்னேற முடியும் என்பதற்கு உதாரணமாக நான் நாகேஷைப் பார்க்கிறேன். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக தான் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை விட்டுட்டு, நாடகங்களில் நடிக்க ஆரம்பிச்சி அதுக்குப் பின்னால கொஞ்சம் கொஞ்சமாக திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று சினிமா உலகிலே ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக முன்னேறியவர் தான் நாகேஷ்.

    சினிமா உலகிலே சேர்வதற்கு இவங்க ரெண்டு பேரையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமா என்றால் நிச்சயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றுதான் நான் சொல்வேன் என்று சொன்னார் சோ. காலமும், நேரமும் ஒத்துழைத்தால் திரைப்பட வாய்ப்பு கிடைக்கும். என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவங்களுக்கும் இது பொருந்தும் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியிலே சோ தெரிவித்துள்ளார்.

  • 120 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய நாகேஷ்.. பயந்த பாலசந்தருக்கு வச்ச பஞ்ச் டயலாக்!

    நாகேஷை வைத்து எதிர்நீச்சல், நீர்க்குமிழி ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் கே.பாலசந்தர். இவருக்கு மிகவும் பிடித்த நடிகர் நாகேஷ். ரஜினி, கமலுக்கு நடிக்கத் தெரியாத போது நாகேஷைப் பார்த்துக் கத்துக்கோங்கடான்னு சொல்வாராம்.

    அந்த அளவு நாகேஷ் மீது ஒரு நட்பையும், அன்பையும், பாசத்தையும் வைத்து இருந்தார் பாலசந்தர். அவரிடம் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பு நாகேஷ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

    நாகேஷைப் பத்தி நினைக்கும் போது எல்லாம் கண்ணுல தண்ணீ வந்துடும். நாகேஷ் வந்து ஒரு பிறவி நடிகன். அதாவது அவருக்கு எக்ஸ்ட்ராடினரி திங்கிங் இருக்கும். ‘இப்படி வச்சிக்கலாமா பாலு, அப்படி வச்சிக்கலாமா பாலு’ன்னு ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பான். வச்சிக்கலாம். வச்சிக்கலாம். அதை அடுத்த நாளே கூட வச்சிக்கலாம்னு சொல்லி அவரை அமைதியாக்குவேன்.

    இதுக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் வச்சிக்கணும். இதை விட்டு வெளியே போகக்கூடாது. அதை வேற எங்கயாவது வச்சிக்கோ. வேற எங்காவது நடிக்கப் போனா அங்க வச்சிக்கோ. இங்க வச்சிக்காதே. அல்லது நாம அடுத்த நாள் வரும்போது பண்ணிக்கலாம்னு சொல்லுவேன். அதனால நாகேஷ் மறக்க முடியாத நண்பனா வந்துட்டான்.

    மறக்க முடியாத இழப்புன்னே சொல்லலாம். நான் டைரக்ட் பண்ணதை எல்லாம் பார்த்துட்டு ‘நீ வந்து ஸ்ரீதர் மாதிரி பெரிய டைரக்டரா வருவே’ன்னு சொன்னான். இதை வந்து சோ ஒரு தடவை எங்கிட்ட சொன்னாரு. அவரு நாடகத்தை டைரக்ட் பண்ணும்போது சொன்னாரு. எனக்கு சினிமாவுல இன்ட்ரஸ்ட் கிடையாதுன்னு சொன்னேன்.

    சர்வர் சுந்தரம் நாடகம் முதல் நாள் ஆரம்பிக்கும்போது நாங்க ரெண்டு பேரும்தான் கார்ல வர்றோம். நாகேஷ் என்னை வச்சி 120 கிமீ வேகத்துல காரை ஓட்டுறான். நான் ‘எனக்கு பயமா இருக்கு’ன்னு சொன்னேன். அப்போ அவன் என்ன சொன்னான்னு தெரியுமா? ‘பயப்படாதே பாலு. என் பக்கத்துல யாரை வச்சி ஓட்டிக்கிட்டுப் போறேன்னு தெரியுமா? எதிர்கால தமிழகத்தின் மிகச்சிறந்த டைரக்டர்’ அப்படின்னு அவன் சொன்னது இன்னமும் ஞாபகம் இருக்கு என கண்கலங்குகிறார் இயக்குனர் சிகரம் பாலசந்தர்.

  • எம்ஜிஆரே புகழ்ந்த காமெடி நடிகர்… வேறு யாருக்கும் கிடைக்காத பாக்கியம்..! யாரு அந்த லக்கிமேன்?

    எம்ஜிஆர், சிவாஜி என இருபெரும் ஜாம்பவான் நடிகர்கள் சினிமாவில் கோலோச்சிய காலகட்டம். நகைச்சுவையில் பல நடிகர்கள் வந்தார்கள். சந்திரபாபு, மனோரமா, நாகேஷ், உசிலைமணி, குண்டு கல்யாணம், போண்டாமணி அப்படி இப்படின்னு வந்து போனாங்க. ஆனால் இவர்களில் நாகேஷைத் தான் பலரும் ரசித்தார்கள். உடல் மொழியே அவருக்கு பிளஸ் பாயிண்ட்.

    அவர் படங்களில் நடித்தால் 40 சதவீதம் கேரண்டி. படம் வெற்றி தான் என்று எம்ஜிஆரே தெரிவித்துள்ளார். தேவர் பிலிம்ஸ், ஏவிஎம், பத்மினி பிக்சர்ஸ், ஏ.பி.நாகராஜன் என அனைவரின் படங்களிலும் நடித்துத் தூள் கிளப்பியுள்ளார் நாகேஷ்.

    எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நாகேஷ் வரும் காட்சிகள் எல்லாம் அதகளமாக இருக்கும். வார்த்தையை மாற்றி மாற்றிப் பேசி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுவார். அதே போல தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தியாக வந்து பட்டையைக் கிளப்புவார்.

    திருவிளையாடல் படத்தில் வரும் தருமி கேரக்டரை இன்றும் மறக்க முடியாது. அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சிவாஜிக்கே டஃப் கொடுத்து இருப்பார். அவரிடம் கேள்வி கேட்கும்போது பின்புறமாக கொஞ்சம் கொஞ்சமாக வளைந்து கொண்டே நடந்து கொண்டு கேள்வி கேட்கும் அழகோ அழகு தான். அது அவருக்கு மட்டுமே உரித்தான தனிச்சிறப்பு.

    சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் ஹீரோவாக நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகர் என்றும் நிரூபித்து இருப்பார். இயக்குனர் சிகரம் பாலந்தர் இயக்கிய படம் இது. அவருக்குப் பிடித்த நடிகர் என்றால் அது நாகேஷ் தான். அடிக்கடி கமலிடம் நாகேஷைப் பார்த்து நடிக்கக் கத்துக்கோங்கப்பான்னு சொல்வாராம்.

    nagesh

    nagesh

    காதலிக்க நேரமில்லை படத்தில் செல்லப்பாவாக வந்து அசர வைப்பார். பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி படங்கள் அவரது டிரேடு மார்க். எதிர்நீச்சல் படத்தில் மாடிப்படி மாதுவாக வந்து சென்டிமென்ட் சீன்களிலும் தூள் கிளப்பி இருப்பார்.

    வேட்டைக்காரன், கலாட்டா கல்யாணம், நூற்றுக்கு நூறு, ஊட்டி வரை உறவு என இவர் நடித்த படங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனையிலும் முத்தாய்ப்பான நடிப்பு தான். இவர் சாகாவரம் பெற்ற கலைஞன் என்பார்கள். ஏன்னா எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனிமுத்திரை பதித்து விடுவார்.

  • பார்த்திபன் நடிக்க வந்ததுக்கு காரணமே அந்தக் காமெடி நடிகர் தானாம்… இது என்ன புதுக்கதையா இருக்கு?

    நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பு எந்த நிலைமையில் இருந்தார்? அவர் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லெட்சுமணன் சொல்கிறார். என்னன்னு பார்க்கலாமா…

    பார்த்திபனோட அப்பா சினிமா கம்பெனிகளுக்கு கார் ஓட்டிக் கொண்டு இருந்தாராம். அப்போ அவருடைய அப்பாவுடன் சேர்ந்து போவாராம் பார்த்திபன். ஒரு தடவை அப்படிப் போகும்போது நாகேஷ் நடிக்கிறதைப் பார்த்துள்ளார். அதைப் பார்த்து வியந்த பார்த்திபன் நாமும் அப்படி நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தனது நடிகனாகும் ஆசையை அம்மாவிடம் தெரிவித்துள்ளாராம்.

    ‘அப்பா தான் நிறைய சினிமா கம்பெனிகளுக்கு கார் ஓட்டுறாரே… அவரிடம் சொல்லி எனக்கு நடிக்கிறதுக்கு சான்ஸ் வாங்கி தரச் சொல்லுங்க’ன்னு கேட்டாராம். இதைக் கேள்விப்பட்ட அப்பா, அம்மாவிடம் ‘முதல்ல அவனை நாலு வார்த்தையை ஒழுங்கா சேர்ந்தா மாதிரி தப்பு இல்லாமப் பேசச் சொல்லு.

    அப்புறம் நடிக்கிறதைப் பத்திப் பேசிக்கலாம்’னு சொன்னாராம். அதன்பிறகு பலமுறை நடிகனாக முயற்சி செய்துள்ளார். எதுவுமே எடுபடவில்லை. நாடகக்குழுவில் சேர்ந்தா நடிகராகி விடலாம்னு நினைச்சி சேர்ந்தாராம். எஸ்.வி.ராமதாஸ் நாடகக்குழுவில் எல்லாம் சேர்ந்து நடிச்சாரு. ஆனா அவரோட துரதிர்ஷ்டம் என்னன்னா எஸ்.வி.ராமதாஸோட நாடகம் ஒண்ணு கூட சென்னையில நடக்கல.

    அந்தக் காலகட்டத்துல சபாக்கள் கிடைக்கிறது எல்லாம் கஷ்டம். அவர் நாடகம் எல்லாம் செங்கற்பட்டு தாண்டித்தான். அங்கே எந்தத் தயாரிப்பாளர் போவாரு? அதனால அவர் ரூட்டை மாத்துறாரு. அந்தக் காலகட்டத்துல தான் பாக்கியராஜ் கதாநாயகன் ஆனாரு. அந்த வகையில் அவர் எப்படி ஆனாருன்னு பார்த்தா பாரதிராஜாவிடம் உதவி இயக்குனரா சேர்ந்துருக்காரு.

    அப்படின்னா உதவி இயக்குனரா சேர்ந்தா கதாநாயகனா ஆகிடலாம்னு நினைச்சிருக்காரு. அப்படியே பாக்கியராஜிடம் உதவி இயக்குனரா மாறிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி அவரிடம் உதவியாளராக சேர்கிறார். அப்படித்தான் நடிகராகி இருக்கிறார் பார்த்திபன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • எம்ஜிஆரிடம் நாகேஷ் கேட்ட கேள்வி… சிரிப்பைத் தாங்க முடியாமல் வாத்தியார் சொன்னது இதுதான்..!

    புரட்சித்தலைவரின் பல படங்களில் நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ் நடித்து அசத்தியுள்ளார். தமிழ்சினிமாவில் இந்த அளவுக்குப் புகழ் பெற மக்கள் திலகமும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.

    அப்போது நாகேஷ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலம். ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்க எம்ஜிஆர் வந்துள்ளார். நாடகத்தில் நாகேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் நாகேஷ் அட்டகாசமாக நடித்துக் கொண்டு இருந்தாராம். அதில் வயிற்றுவலி நோயாளி வேடம் அவருக்கு. நிஜமான நோயாளியாகவே மாறிப் போய் மாஸ் காட்டினாராம்.

    எம்ஜிஆர் நாகேஷின் நடிப்பைப் பார்த்து சிரி சிரின்னு சிரித்தாராம். சிரித்து சிரித்தே ஓய்ந்து போனாருன்னா பார்த்துக்கோங்க.

    நாடகம் முடிந்ததும் நாகேஷை மேடைக்கு அழைத்து ஒரு கப்பைக் கொடுத்துள்ளார். அதை வாங்கிய நாகேஷ், எம்ஜிஆரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். என்னன்னா அது தான் ஹைலைட். அப்படி ஒரு கேள்வியை யாருமே கேட்டுருக்க மாட்டாங்க.

    ‘அண்ணே எல்லாரு முன்னாடியும் கப்பைக் கொடுத்துட்டீங்க. அப்புறமா பிடுங்கிற மாட்டீங்களே…’ன்னாராம். அது மட்டுமல்லாமல், ‘நான் அவ்வளா ஒண்ணும் நடிக்கல…’ன்னு சொல்லிருக்காரு நாகேஷ். அதைக் கேட்டதும் சிரித்துக் கொண்ட எம்ஜிஆர், ‘நீ தான்பா உண்மையான காமெடியன்’னும் மனசார வாழ்த்தினாராம்.

    அப்புறம் நாகேஷின் லெவலே வேறன்னு சொல்லலாம். குறிப்பாக சிவாஜி மற்றும் இயக்குனர் சிகரம் பாலசந்தரையே அசரடித்தவர். பாலசந்தர் ரஜினி, கமலைப் பார்த்து அவர்கள் சிரமப்படும் நேரத்தில் நாகேஷ்னு ஒரு நடிகன் இருக்கான். அவன் மட்டும் இந்தக் காட்சியில நடிச்சிருந்தா…ன்னு அடிக்கடி சொல்லி கடுப்பேற்றுவாராம்.

    படகோட்டி, நாளை நமதே, அன்பே வா, தாழம்பூ, எங்க வீட்டுப் பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், படகோட்டி, குடியிருந்த கோயில், பணக்காரக் குடும்பம் என பல படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நாகேஷ் நடித்துள்ளார்.

    எம்ஜிஆர், நாகேஷ் இருவரும் நடித்த படங்கள் என்றாலே அது சூப்பர்ஹிட் தான். உலகநாயகன் கமலும் கூட நாகேஷின் ரசிகன் தான் நான் என்று ஒருமுறை தெரிவித்துள்ளார்.

  • நாகேஷூக்குப் போயா இந்தப் பாட்டை வைப்பீங்க..? டிஎம்எஸ் எரிச்சல்… சாதித்த தயாரிப்பாளர்

    சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் தோன்றிய ‘அவளுக்கென்ன…’ பாடல் பிறந்த கதையை தயாரிப்பாளர் ஏவிஎம்.குமரன் இவ்வாறு சொல்கிறார்.

    பாடலுக்கு ரெக்கார்டிங் எப்படி நடக்குது? கம்போஸ் எப்படி நடக்குது? அங்கிருந்து சூட்டிங் எப்படி நடக்குதுன்னு எல்லாத்தையும் காட்டணும்னு சொன்னேன். கண்டிப்பா காட்டுவோம்னு சொன்னார் டைரக்டர் பஞ்சு. அதுதான் சர்வர் சுந்தரம் படத்தில் வரும் அவளுக்கென்ன பாடல்.

    அப்போ எம்எஸ்.வி.கிட்ட சார் இந்த மாதிரி ஒரு ஐடியான்னு சொன்னேன். ஐயய்யோ நான்லாம் நடிக்க மாட்டேன்னாரு. இந்தப் பாட்டு எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துருக்குன்னு ஜனங்க உணரனும்.

    நீங்க கொஞ்சம் சூட் போட்டு உங்க ட்ரூப்போடு வந்து கோஆப்ரேட் பண்ணுங்கன்னு சொன்னேன். அப்புறம் எம்எஸ்வி. ஒத்துக்கிட்டாரு. டிஎம்எஸ்சும் ஒத்துக்கிட்டாரு. அவரு கேட்குறாரு.

    இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பாட்டை எடுக்கறீங்களே… இதுல யார் நடிக்கப் போறான்னு கேட்டாரு. நாகேஷ்னு சொன்னேன். ஏன் சார் இவ்ளோ நல்ல பாட்டைப் போயி எம்ஜிஆரோ, சிவாஜியோ வந்து ஆடுனா அது மசாலா. ஜனங்க எப்படி என்ஜாய் பண்ணுவாங்க? இதைப் போயி நாகேஷ்னு சொல்றீங்களேன்னு கேட்டாரு.

    படத்துல அந்தப் பாட்டு வந்து சூப்பர்ஹிட்டாச்சு. ஒரு நாள் வாக்கிங் வந்தாரு. நானும் வந்தேன். நீ ஜெயிச்சிட்டய்யான்னு சொன்னாரு. அது போதும் சார் உங்க வாழ்த்து ரொம்ப சந்தோஷம்னு சொன்னேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    பொதுவா ஒரு படத்துல மழை பெய்றது, காத்து அடிக்கிறதுன்னு படப்பிடிப்பை எல்லாம் அந்தக் காலத்துல படத்துல காட்ட மாட்டாங்க. ஆனா வித்தியாசமா எல்லாத்தையும் காட்டியுள்ளார் ஏவிஎம் தயாரிப்பாளர். சர்வர் சுந்தரம் படத்தில் தான் இதுபோன்ற காட்சிகள் வருகின்றன.

    பிற்காலத்தில் நாம் பல படங்களில் படம் முடிந்ததும் காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டன என கேமரா படம் பிடிப்பது, பாடலுக்கு ஆடுவது, காமெடி செய்வது என சூட்டிங்கின் போதும், அந்தத் தருணத்திலும் நடந்த விஷயங்களைக் காட்டினார்கள். தசாவதாரம், அவ்வை சண்முகி போன்ற படங்களில் இப்படி காட்டப்படும்.

    இது ஹாலிவுட் படங்களில் அதிகம் காட்டப்படும். குறிப்பாக ஜாக்கிஷான் படங்களில் நாம் தவறாமல் பார்த்திருப்போம். ஆனால் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக நாகேஷ் படத்திலேயே அது வந்துள்ளது ஆச்சரியம் தான். அதற்கு ஏவிஎம் தயாரிப்பாளர் குமரனின் மாறுபட்ட சிந்தனையே காரணம்.

  • நாகேஷைப் பார்க்க சைக்கிளில் வந்த பிரபல இயக்குனர்… அட அவரா…?!

    வாலியும் அவரது நண்பரான நாகேஷூம் நண்பர்களாக இருந்தனர். ஒரு காலகட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் முட்டி மோதிக் கொண்டவர்கள் பின்னாளில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த போது நண்பர்களானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ்.

    இதையும் படிங்க… கவுண்டமணியோடலாம் எப்படி நடிச்சாங்கன்னே தெரியல!… இப்படி சொல்லிட்டாரே விஜய் சேதுபதி!.

    அப்போது நாகேஷ் ஒல்லியாக பார்க்கவே முடியாதவாறு கன்னம் எல்லாம் ஒட்டிப் போய் இருப்பாராம். அவர் சினிமா வாய்ப்பு தேடி வந்த போது ‘நீ எல்லாம் எந்த நம்பிக்கையில் இங்கு சினிமாவுக்கு வந்த? உனக்கு ரயில்வே வேலை தான் லாயக்கு’ என்றாராம் வாலி. அப்போது ‘நீர் எந்த நம்பிக்கையில சினிமாவுக்கு வந்தீர்? நீர் என்ன பெரும் புலவரா?’ என பதிலுக்கு வாலியைக் கிண்டலடித்துள்ளார் நாகேஷ்.

    அதன்பிறகு இருவரும் சினிமாவிற்காக சென்னை உஸ்மான் ரோட்டில் இருந்த ஒரு கிளப் ஹவுஸில் தங்கி இருந்தார்களாம். அங்கு இருந்து கொண்டு ஒவ்வொரு இடமாக சென்று சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார்கள். வாலி எப்போது பார்த்தாலும் தூங்கிக் கொண்டே இருப்பாராம்.

    அதனால் நாகேஷ் அவரைப் பார்த்து ‘ஏன் தூங்கிக்கொண்டே பொழுதை வீணாகக் கழிக்கிறாய்? நான் வேணும்னா பேப்பரும், பேனாவும் வாங்கித் தர்ரேன். கிடைக்குற நேரத்துல ஏதாவது கவிதை எழுது. அது உனக்குப் பிற்காலத்தில் பயன்படும்’னு சொல்லி பேப்பரும், பேனாவும் வாங்கிக் கொடுத்து அவரைக் கவிதை எழுத வைப்பாராம்.

    இதையும் படிங்க… முகமா முக்கியம்!.. அந்த ஷேப்பை பார்த்தே தூக்கத்தை தொலைங்க!.. இளைஞர்களை ஏங்கவிடும் தர்ஷா குப்தா!..

    அந்த அளவுக்கு வாலியின் மீது ஒரு அன்பு கொண்டுள்ளார் நாகேஷ். அதே நேரம் அவரும் பல படங்களில் காமெடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கத் தொடங்கி விட்டார். பாலசந்தரின் சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு காலத்தில் அவரே நாகேஷைப் பார்க்க வேண்டும் என்று சைக்கிளை அழுத்திக் கொண்டு அங்கு வருவாராம். கமலிடம் அடிக்கடி இந்தக் காட்சியில் நாகேஷ் இருந்தா எப்படி நடிச்சிருப்பான்னு அடிக்கடி சொல்வாராம் பாலசந்தர்.

  • நாகேஷை சங்கடப்பட வைத்த இயக்குனர்… ஆனா அவருக்குப் பாருங்க… என்ன ஒரு பெருந்தன்மை..!

    தமிழ்த்திரை உலகில் பல சம்பவங்கள் ஆச்சரியப்படத்தக்க அளவில் உள்ளன. அப்படித்தான் நகைச்சுவை ஜாம்பவனான நாகேஷின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. இதுபற்றி பிரபல தயாரிப்பாளரும் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணன் என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…

    எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த ‘நல்லவன் வாழ்வான்’ என்ற படத்தில் பாடல் எழுதக்கூடிய வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது. அது அவர் அறிமுகமான காலகட்டம். அப்போது அவர் துணையாக நண்பர் நாகேஷையும் உடன் அழைத்துச் சென்றார்.

    Vaali
    Vaali

    அந்தப் படத்தை டைரக்ட் பண்ணியவர் ப.நீலகண்டன். அவரது அறைக்கு வாலியும், நாகேஷூம் வந்தனர். உங்க இரண்டு பேர்ல யார் வாலின்னு கேட்டார். நான் தான் வாலி. இவர் யாருன்னு கேட்டார். இவர் நாகேஷ். என்னுடைய நண்பன் என்றாராம் வாலி.

    உடனே நாகேஷைப் பார்த்து நீங்க கொஞ்சம் வெளியே இருங்க. நீங்களா பாட்டு எழுதப் போறீங்கன்னு சொன்னாராம் டைரக்டர். அந்த சம்பவத்தின்போது நாகேஷின் மனசு எந்த அளவு சங்கடப்பட்டு இருக்கும்?

    ஆனா அந்த சம்பவத்துக்குப் பின்னால் நாகேஷ் தமிழ் சினிமா உலகிலேயே தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்தார். இன்னும் சொல்லப்போனால் அந்த டைரக்டருடைய பல படங்களில் அவர் நடித்தும் இருந்தார்.

    அவர் மட்டும் நான் ப.நீலகண்டனுடைய படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருந்தால் எம்ஜிஆர் நடித்த பல படங்களின் வாய்ப்பு ப.நீலகண்டனை விட்டு கைநழுவிப் போய் இருக்கும்.

    ஆனா நாகேஷ் அதைச் செய்யவில்லை. அப்படிப்பட்ட பெருந்தன்மையான மனசுக்கு சொந்தக்காரர் தான் நாகேஷ் என்று கட்டுரை ஒன்றில் கவிஞர் வாலியே பதிவு செய்துள்ளாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ஆளைப்பார்த்து யாரையும் எடை போடக்கூடாது. அவரது குணம் எப்படி என்பது அவருடன் பழகிப் பார்த்தால் தான் தெரியும் என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

    இதையும் படிங்க… ராமராஜன், மோகனுடைய படங்கள் எல்லாம் இப்ப எடுபடுமா…? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்..?

    ப.நீலகண்டன் எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர். இவர் சக்கரவர்த்தி திருமகள், நீதிக்குத் தலைவணங்கு, என் அண்ணன், மாட்டுக்கார வேலன், காவல்காரன், கண்ணன் என் காதலன், திருடாதே உள்பட பல படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் எம்ஜிஆரின் 50வது படம் தான் நல்லவன் வாழ்வான்.

     

  • சிவாஜி படத்தில் நாகேஷூக்கு வந்த சிக்கல்… ஆனா எம்ஜிஆரோ அந்த விஷயத்துல கில்லாடி..!

    நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ் தமிழ்த்திரை உலகில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் பல நடிகர்களுடைய படங்களிலும் ஒரே சமயத்தில் நடிப்பாராம். அப்போது அவருக்குப் பலவிதமான சிக்கல்கள் வந்ததுண்டு. ஏன்னா படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் அவரால் கலந்து கொள்ள முடியாது. அந்த மாதிரி நேரங்களில் அவர் எப்படி சமாளித்தார் தெரியுமா? வாங்க, பார்க்கலாம்.

    இதையும் படிங்க… கமல் கேட்ட அந்தக் கேள்வி… ராமானுஜம் சொன்ன பதில்… பாலுமகேந்திரா எடுத்த முயற்சி

    நாகேஷ் ஒரு நாளைக்கு 5 படங்கள் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். ஒரு படப்பிடிப்பு அவருக்கு 2 மணி நேரத்தில் முடிந்து விடும். அதனால் அவருக்காக எல்லா நடிகர்களும் காத்துக் கொண்டு இருப்பார்களாம். பெரிய நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜியும் கூட இப்படிக் காத்துக்கொண்டு இருப்பாராம். இது போன்ற பெரிய நடிகர்களை இது மாதிரியான நேரங்களில் எப்படி சமாளிப்பீர்கள் என ஒருமுறை பத்திரிகை நிருபர் நாகேஷிடம் கேட்டாராம்.

    அதற்கு இந்த இரண்டு பேர்களில் சிவாஜியை சமாளக்கிறது தான் ரொம்ப கஷ்டம். ஏன்னா காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் அவர் காலை 6.50 மணிக்கே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார். மிகச் சரியான நேரத்திற்கு வரும் அவரது படப்பிடிப்புக்குத் தாமதமாகப் போனால் அவரது மனநிலை எப்படி இருக்கும்? ஆனாலும் அந்தக் கோபத்தை எல்லாம் மனதிலே வைத்துக் கொள்வாரே தவிர சிவாஜி அதை நேரடியாக வெளிப்படுத்த மாட்டாராம்.

    இதையும் படிங்க… ஓவராக உண்மையை உடைக்கும் சுசித்ரா… வாயை திறக்காமல் இருக்கும் பிரபலங்கள்… ரகசியம் சொன்ன பிரபலம்!

    டிபன் சாப்பிடும்போது லேசாகக் கிண்டலோடு நான் தாமதமாக வந்ததைப் பற்றிச் சொல்வார் என்கிறார் நாகேஷ். ஆனால் எம்ஜிஆர் அப்படி அல்ல. அவருக்கு என்னோட நிலையும் தெரியும். நான் தாமதமாக வருவேன் என்பது பற்றியும் தெரியும். அவரைப் பொருத்தவரை ஒரு நடிகர் என்பது மட்டுமல்ல. இயக்குனர் என்பதால் அந்தக் காட்சியில என் சம்பந்தப்பட்ட ஷாட்டுகளை மட்டும் தவிர்த்து விட்டு, மற்ற ஷாட்டுகளை எல்லாம் படமாக்கச் சொல்லி அந்த இயக்குனரிடம் அவர் சொல்லி விடுவார். அதனால அவருடைய படப்பிடிப்புகளில் நான் பெரிய பிரச்சனையை சந்தித்தது இல்லை என்று பதில் அளித்தாராம் நாகேஷ்.

    மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.