Tag: vijay ajith

  • விஜய் பத்தி தப்பா பேசிய நடிகர்!. படத்திலிருந்து தூக்கிய அஜித்!.. அந்த நடிகர் அவரா?….

    விஜய் பத்தி தப்பா பேசிய நடிகர்!. படத்திலிருந்து தூக்கிய அஜித்!.. அந்த நடிகர் அவரா?….

    நடிகர் அஜித்தும், விஜயும் சமகாலத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள்தான். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறி மாஸ் ஹீரோவாக மாறியவர்கள். எம்ஜிஆருக்கு சிவாஜி போல, ரஜினிக்கு கமலை போல, விஜய்க்கு போட்டி நடிகராக அஜித் இருந்தார்.

    அதனால்தான், இருவரின் ரசிகர்களும் அடிக்கடி மோதிக் கொண்டார்கள்.
    அதேநேரம் அஜித்துக்கும், விஜய்க்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இப்போதும் அது தொடர்கிறது. விஜய் அரசியல் கட்சி துவங்கிய போது முதல் ஆளாக திரையுலகில் இருந்து அஜித் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து சொன்னதாக சொல்லப்படுகிறது. மேலும், ஒரு பேட்டியில் கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே காரணமில்லை என அஜித் கூறினார்.

    அதேபோல் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் ‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் சொன்னதாக செய்திகள் வெளியான போது உடனே அதை மறுத்து செய்தி வெளியிட்டார். இதனால் விஜய் ரசிகர்களும் அஜித்தை கொண்டாட துவங்கிவிட்டனர். இந்நிலையில்தான் ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.

    அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபலமான நடிகர் குணச்சித்திர நடிகராக நடிக்கவிருந்தார். ஆனால் அந்த நடிகர் தொடர்ந்து விஜயை பற்றி நெகட்டிவாக பேசிக் கொண்டே இருந்தால் கடுப்பான அஜித் ஆதிக்கை அழைத்து ‘அவர் விஜயை பற்றி மிகவும் மோசமாக பேசுகிறார். படத்திலிருந்து அவரை தூக்கிடுங்க’ என சொல்லிவிட்டாராம்.

    இப்போது இதையும் விஜய் ரசிகர்கள்கொண்டாடி வருகிறார்கள்.. அந்த நடிகர் அனேகமாக பிரகாஷ்ராஜாக இருக்கலாம் என ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.தேர்தலுக்கு முன்பு திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பிரகாஷ்ராஜ் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

  • அரசியலுக்கு வருவார் அஜித்!.. 2031-ல் முதல்வர்!. பிரபல ஜோதிடரின் கணிப்பு!..

    அரசியலுக்கு வருவார் அஜித்!.. 2031-ல் முதல்வர்!. பிரபல ஜோதிடரின் கணிப்பு!..

    அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் அஜித். மங்காத்தா, பில்லா போன்ற திரைப்படங்கள் இவரை மாஸ் ஹீரோவாக மாற்றியது.. அதோடு அந்த படங்கள் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும் உருவாக்கியது..

    தமிழ் சினிமாவில் விஜயின் போட்டி நடிகராக இருந்தவர் அஜித். தற்போது விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் அஜித்துக்கு எந்த போட்டியும் இல்லை.. அதேநேரம் அஜித் சினிமாவில் கவனம் செலுத்தாமல் கார் ரேஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார்.. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் பல நாடுகளிலும் நடக்கும் மோட்டார் ரேஸ் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார்..

    விஜயை போல அஜித்துக்கு அரசியல் ஆர்வமெல்லாம் இல்லை. நான் எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன்.. எனது சுயநலத்திற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என பலமுறை அவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் பிரபல ஜோதிடர் ஒருவர் 2031ம் வருடம் அஜித் அரசியலுக்கு வருவார்.. அவர் முதலமைச்சராவார் என தெரிவித்திருக்கிறார்..

    மேலும் அவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலை குவிக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.. இதில் ஆச்சரியம் என்னவெனில் இப்படி அஜித்தை பற்றி சொன்ன அந்த ஜோதிடர் 2026ம் வருடம் அமெரிக்கா ஈரான் இடையே போர் ஏற்படும்.. துபாயிலும் பாதிப்பு ஏற்படும்./. தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் பிரச்சனை வரும்.. பெட்ரோலுக்காக மக்கள் வரிசையில் நிற்பார்கள் என்றெல்லாம் போன வருடமே கூறியிருந்தார்.. அவர் சொன்னது எல்லாமே நடந்திருக்கிறது.. எனவே அவர் அஜித்தை பற்றி சொன்னதும் நடக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

  • Jananayagan: ‘ஜனநாயகன்’ வசூலை சீர்குலைக்க இப்படியொரு திட்டமா? சுற்றி வளைக்கும் திரையுலகம்

    விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கியிருக்கிறார். படத்தை கேவிஎன் புரடக்‌ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படம் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இன்னொரு பக்கம் விஜய் அரசியலில் முழுத்தீவிரமாக இறங்கி வேலை செய்திருக்கிறார். அதுவும் ஆளும்கட்சியை எதிர்த்து தன்னுடைய கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.

    வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகளுக்குத்தான் போட்டி என தன்னுடைய எதிர்ப்பை தொடர்ந்து காட்டி வருகிறார் விஜய். கரூர் சம்பவத்துக்கு பிறகு முதன் முறையாக தமிழ் நாட்டில் ஈரோட்டில் அவர் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் விஜய் வெறி கொண்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுகவை தீய சக்தி என சொன்னது அரசியலில் பெரும் களக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    இன்னொரு பக்கம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான படமாக ஜன நாயகன் திரைப்படம் இருக்கிறது. விஜயின் இந்த பேச்சால் அந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிரச்சினை வருமே? ஆனால் இதெல்லாம் தெரியாமலா விஜய் இப்படி பேசுவார். என்ன நடந்தாலும் பரவாயில்லை. நான் பார்த்து கொள்கிறேன். ஒரு வேளை படத்தின் தயாரிப்பாளருக்கு ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை வந்தாலும் அதை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்ற வகையில்தான் விஜய் துணிந்து இவ்வாறெல்லாம் பேசி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

    ஆனால் எடுத்த அடியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார் விஜய் என்பது திரையுலகினரை சேர்ந்தவர்களுக்கு தெரியும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரை ஓயவும் மாட்டார். அதனால் அரசியலில் என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் இறங்கியிருக்கிறார். இதற்கிடையில் விஜய்க்கு எதிராக திரையுலகினரை திருப்பவும் இங்கு சதி நடந்து கொண்டிருக்கிறது.

    அதற்கு ஒரு உதாரணம் ஜன நாயகன் படத்தோடு பராசக்தி படத்தை மோதவிடுவதுதான். பெரும்பாலும் இரு பெரிய நடிகர்களின் படங்களை ஒன்றாக ஒரே தேதியில் ரிலீஸ் செய்ய யோசித்துதான் செய்வார்கள். ஆனால் இது வேண்டுமென்றே நடப்பதாகவே தெரிகிறது. இதனால் இரு படங்களின் வசூலும் நினைத்த அளவு வராது என்பதுதான் உண்மை. இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் ஜனவரி 9 ஜன நாயகன் படம் ரிலீஸ்.

    அதே மாதம் ஜனவரி 23 ஆம் தேதியில் அஜித்தின் பெரிய கமெர்ஷியல் ஹிட் படமான மங்காத்தா படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இதுவும் ஜன நாயகன் படத்தின் வசூலை டார்கெட் செய்தே மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

  • விஜய், அஜித்தாக ஆசைப்பட்டு சறுக்கிய சூர்யா!… டிராக் மாறி கோட்டை விட்டுட்டாரே!…

    Suriya karuppu: உண்மையில் சினிமாவுக்கு வரவேண்டும் என்கிற ஆசையெல்லாம் சூர்யாவுக்கு இருந்ததே இல்லை. பல இயக்குனர்கள் கேட்டும் முடியாது. ஆர்வமில்லை என மறுத்துவிட்டார். டெக்ஸ்டைல் தொழிலில் பெரிய அளவுக்கு வரவேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது. ஆனால், நேருக்கு நேர் படத்திலிருந்து அஜித் விலகிய போது அந்த வேடத்தில் சூர்யாவை நடிக்க வைக்க ஆசைப்பட்டார் இயக்குனர் வஸந்த்.

    வஸந்த் கேட்டபோதும் அதே பதிலைத்தான் சொன்னார் சூர்யா. ஆனால், அதன்பின் ‘முயற்சி செய்து பார்க்கலாம்’ என்கிற எண்ணம் வர ஓகே சொன்னார் சூர்யா. நேருக்கு நேர் துவங்கி சாக்லேட் பாயாக பல படங்களிலும் நடித்தார். அவரை மாற்றிய பெருமை அமீர், கவுதம் மேனன், பாலா ஆகியோருக்கு மட்டிமே உண்டு. நந்தா, காக்க காக்க, பிதா மகன் போன்ற படங்கள் சூர்யாவுக்கு முக்கிய படங்களாக அமைந்தது.

    அதே சூர்யாவை கமர்ஷியலாக மாற்றியது இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய ஆறு, வேல், சிங்கம் சிங்கம் 2 போன்ற படங்கள் சி செண்டரிலும் சூர்யாவை பிரபலப்படுத்தியது. கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் ஜெய்பீம், சூரரைப்போற்று போன்ற படங்கள் நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக அமைந்தது. சூர்யா ஒரு சிறந்த நடிகர் என்பதை அந்த படங்கள் காட்டியது.

    அப்படி இருந்தும் அடுத்தடுத்து அவர் நடித்து வெளியான எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ போன்ற படங்கள் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் படங்களாக அமையவில்லை. இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய வலைப்பேச்சு பிஸ்மி ‘சூர்யா நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஒருகட்டத்தில் தனக்கு இருக்கும் ரசிகர்களை பார்த்து தன்னை விஜய், அஜித் ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொண்டார்.

    அதன்பின் அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அங்குதான் அவர் சறுக்கினார். அதேநேரம், அடுத்து வெளியாகவுள்ள கருப்பு படம் அவருக்கு வெற்றிப்படமாக அமையும் என நினைக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார்.

    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கருப்பு படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. டீசரை பார்க்கும்போதே இப்படம் ஒரு பக்கா கமர்ஷியல் மசாலா படம் என்பது தெரிகிறது.

  • பெரிய அப்பாடாக்கரா? கோவா கல்யாணத்துக்கு போற.. விஜயை சீண்டிய கூல் சுரேஷ்

    நேற்று வனங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கூடவே இயக்குனர் பாலா இந்த திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி அவரை கௌரவப்படுத்தும் விதமாக திரைப்படத்துறையில் உள்ள முக்கியமான இயக்குனர்களும் அந்த விழாவில் கலந்து கொண்டனர். இதில் கூல் சுரேஷும் கலந்து கொண்டார்.

    அப்போது கூல் சுரேஷிடம் புஷ்பா 2 படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்கப் போன இடத்தில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை பற்றி கேள்வி எழுப்பினர். அப்போது கொதித்து எழுந்து மொத்த ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்தார் கூல் சுரேஷ். புஷ்பா 2 திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டினாலும் சரி 2000 கோடியை தாண்டினாலும் சரி. அந்த படத்தை பார்க்க போன ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார்.

    அதனால் அந்த படத்தின் ஹீரோவான அல்லு அர்ஜுனை கைது செய்து ஒரு நாள் சிறையில் வைத்து மீண்டும் ஜாமினில் விடுதலை செய்தது. அவர் விடுதலை ஆனதை அறிந்த ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவும் அவர் வீட்டின் முன் குவிந்தனர். அத்தனை பெரிய நடிகர்களும் அல்லு அர்ஜுனை பார்க்க சென்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் வீட்டிற்கு யாராவது சென்றார்களா அல்லது அந்த பெண்ணின் மகன் மூளைச் சாவு அடைந்து, இருந்தும் இல்லாமலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    அவனை பார்த்து ஆறுதல் கூற யாராவது போனார்களா ?இழப்பீடு மட்டும் கொடுத்தால் போதுமா? இது எந்த நடிகராக இருந்தாலும் சரி. ரஜினியாகட்டும் கமல் ஆகட்டும் விஜய் அஜித் யாரா வேணாலும் இருக்கட்டும். பெரிய அப்பாடக்கரா இருக்கட்டும். யாரா இருந்தாலும் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் இன்று காரில் போவதற்கு காரணமே இந்த ரசிகர்கள் தான். ரசிகர்கள் இல்லாமல் நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா ?

    பெரிய பெரிய சொகுசு காரில் போக முடியுமா? தனி விமானத்தில் போக முடியுமா? கோவா கல்யாணத்துக்கு தான் போக முடியுமா ?அதனால் ரசிகர்கள் இல்லை என்றால் நீங்கள் இல்லை. அந்த ரசிகர்களை எப்படி நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ் ரசிகர்கள் அவர்களுடைய நடிகர்களை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள். அதனால் தமிழ் ரசிகர்கள் மிகவும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என கிடைத்த கேப்பில் விஜயையும் சீண்டியிருக்கிறார் கூல் சுரேஷ்.

    ஏனெனில் விஜய் தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்திற்கு சென்று மக்களை சந்திக்காமல் கீர்த்தி சுரேஷின் கல்யாணத்திற்கு மட்டும் சென்றிருந்தது பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. அதனால் அதை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் கூல் சுரேஷ்.

    இதையும் படிங்க: விஜய்னா யாருன்னு கேட்ட சூப்பர்ஸ்டார்…. தயாரிப்பாளர் சொன்ன அந்தத் தகவல்

  • அஜித் ரேஸுக்கும், விருதுக்கும் விஜய் என்ன சொன்னார் தெரியுமா? சுரேஷ் சந்திரா சொல்லும் சர்ப்ரைஸ்…

    Suresh Chandra: நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் என இருவரும் போட்டி நடிகர்களாக அறியப்பட்டாலும் அவர்களுக்குள் ஒரு ஆச்சரியமான நட்பு இருக்கும் என்பதை பல பிரபலங்கள் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர்.

    தமிழ் சினிமாவின் தளபதி மற்றும் தல என ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வந்தவர்கள் விஜய் மற்றும் அஜித் தான். இருவருமே ஒரே நேரத்தில் சினிமாவிற்குள் வந்தவர்கள். ஆனால் விஜயிற்கு தந்தை கொடுத்த சப்போர்ட் அஜித்துக்கு கிடைக்கவில்லை.

    ஆனால் இருவருமே தொடர்ச்சியாக சினிமாவில் உயர்ந்து வந்தனர். நடிப்பில் கொடிக்கட்ட இவர்களுக்கு ரசிகர்களும் குவிந்தனர். ஒரு கட்டத்தில் போர் போல மாற்றி மாற்றி சண்டை போட்டு கொண்டனர். அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை இத்தனை வருடம் கடந்தும் இன்னமும் முடியவே இல்லை.

    ஆனால் இவர்களின் தலைவர்களான அஜித் மற்றும் விஜய் இருவரும் போட்டி மட்டுமே கொண்டு இருக்கின்றனர். பொறாமை என்பது அவர்களிடமே இல்லை. அடிக்கடி இருவரும் சந்தித்து கொள்வதும் தங்களுடைய நட்பை வளர்த்து கொண்டு தான் உள்ளனர்.

    அதற்கு தற்போது ஒரு புது ஆச்சரியத்தை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார். நடிகர் அஜித் துபாயில் நடந்த ரேஸில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தார். தொடர்ந்து சமீபத்தில் அவருக்கு பத்மபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அதற்கு விஜய் தரப்பு எந்தவித வாழ்த்தும் சமூக வலைத்தளங்களில் வெளியிடவில்லை. இதனால் அவருக்கு பொறாமை என பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால் சுரேஷ் சந்திரா கூறுகையில், அஜித் சார் ரேஸில் வென்ற போது வாழ்த்து சொன்ன முதல் பிரபலம் விஜய் சார்தான்.

    அதுமட்டுமல்லாமல் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட போது விஜய் தரப்பில் இருந்து வாழ்த்து வந்துவிட்டது. இருவருமே நெருங்கிய நண்பர்கள். அஜித் சாருக்கு விஜய் சார் வாழ்த்தவில்லை என்பதெல்லாம் உண்மையே இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

  • வெளில போனாலும் தளபதிதான் கில்லி… ரிலீஸ் சமயத்தில் கூட விஜயிடம் தோற்ற அஜித்…

    Vidaamuyarchi: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் விஜயிடம் தோற்று போன ஒரு சுவாரஸ்ய அப்டேட் இணையத்தில் வெளியாகி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர்கள் அஜித், விஜய், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தான். இவர்கள் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் நடிகர் விஜயின் வசூலை இதுவரை மற்ற நடிகர்களாக தொடக்கூட முடியாத நிலை இருக்கிறது.

    இதில் நடிகர் விஜய் நடித்த கடைசி இரண்டு திரைப்படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

    இப்படம் ரிலீஸாக இரண்டு நாள் இருந்த நிலையில் லியோ திரைப்படம் 12 லட்சத்து 78 ஆயிரம் டிக்கெட் விற்கப்பட்டு முதல் இடத்தினை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 6 லட்சத்து 36 ஆயிரத்து டிக்கெட் விற்கப்பட்டு இருக்கிறது.

    இதை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் விஜயின் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இரண்டு நாள் இருக்கும் போது ஐந்து லட்சத்து 65 ஆயிரம் டிக்கெட் விற்கப்பட்டது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தாலும் சில பல காரணங்களால் லியோ சாதனையை முறியடிக்க முடியவில்லை.

    ஆனால் பல மாதங்கள் எதிர்பார்ப்புக்கு பின்னர் வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஃபெப்ரவரி 6ந் தேதி வெளியாக இருக்கிறது. பொங்கல் தினத்தில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது வெளியாக இருக்கும் இரண்டு நாட்களில் இதுவரை 3 லட்சத்து 25 டிக்கெட் மட்டுமே விற்கப்பட்டுள்ளது.

    ஐந்தாவது இடத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இரண்டு நாட்கள் இருக்கும் போது 2 லட்சத்து 98 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்கப்பட்டது. ஆறாவது இடத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் இருந்தாலும் அது இரண்டு நாள்கள் இருக்கும் போது 87 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்கபட்டது.

  • கோலிவுட்டின் சூப்பர் ஹிட் மாஸ் நடிகர்களின் டாப் 5 படங்கள்… திருடப்பட்ட ஒரிஜினல் லிஸ்ட் இதுவா?

    Kollywood: தமிழ் சினிமாவின் சூப்பர்ஹிட் படங்கள் என சொல்ப்படும் டாப் 5 படங்களில் முக்கிய இடம் பிடிக்கும் முன்னணி நடிகரின் படங்களின் லிஸ்ட்டை எடுத்தால் அதில் பெரும்பாலும் ஹாலிவுட் காப்பியாக தான் இருப்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    ஹிஸ்ட்ரி ஆஃப் வயலென்ஸ்: ஒரு சின்ன ரெஸ்டாரண்ட்டில் வேலை பார்க்கும் ஹீரோ தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார். ஒரு நாள் ரெஸ்டாரெண்டுக்கு இரண்டு கேங்ஸ்டர்கள் அங்குள்ள பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சிக்க, ஹீரோ அவர்களின் துப்பாக்கியை வைத்து இருவரையும் போட்டுத் தள்ளுகிறார்.

    இந்த விஷயம் பரவ ஹீரோவை தேடி ரெளடிகள் வருகிறார்கள். அவர் தன்னுடைய அண்ணன் ரெளடியை பார்த்து கொலை செய்துவிட்டு தன்னுடைய வாழ்க்கைக்கு திரும்புகிறார். இப்ப தெரியுதா இந்த கோலிவுட் படத்தின் கதை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த லியோ திரைப்படம்.

    மெமன்டோ: கிரிஸ்டோஃபர் நோலனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மெமன்டோ’. மனைவியை கொன்ற இருவர்களில் ஒருவனை கொன்றுவிடுகிறான் ஹீரோ லியனார்டு. ஆனால் மற்றொருவன் தப்பித்து விடுகிறான். நடந்த அடிதடியால் ஹீரோ அடித்து போடப்பட சில வினாடிகளுக்கு மேல் ஞாபகம் வைத்துக் கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்படுகிறான்.

    இதனால் ஹீரோ தன்னை சுற்றி இருப்பவர்களை போட்டோக்கள் எடுத்து வைத்து கொள்கிறார். மேலும், உடல் எங்கும் எழுதி வைத்திருக்கும் டாட்டூகளையும் வைத்து தப்பித்த அந்த இன்னொருவனைக் கண்டுபிடித்துக் கொல்லுகிறான் என்பது தான் படம். இப்ப தெரியுதா என்ன படம் என்பது சூர்யா நடிப்பில் வெளியான கஜினி.

    ப்ரூவ்ஸ்டர்ஸ் மில்லியன்ஸ்: ஹீரோ ஒரு பேஸ்பால் பிளேயர். திடீரென ஒரு பிரச்னையில் ஜெயிலுக்கு போனவரை ஒருவர் மீட்டு ஒரு இடத்துக்கு அழைத்து வந்து 30 நாட்களில் 30 மில்லியனை செலவு செய்தால் 300 மில்லியன் சொத்து கிடைக்கும் என்கிறார். அப்படி அவர் செய்ய தவறினால் ட்ரஸ்ட்டுக்கு சென்று அதில் பொறுப்பாக இருக்கும் நால்வருக்கு சென்று விடும்.

    யாரிடமும் இப்படி ஒரு விஷயம் என்பதையும் சொல்லக்கூடாது. ஹீரோ உடனே விலை மிகுதியான ஹோட்டல் ரூமை வாடகைக்கு எடுக்கிறார். அடுத்து தேர்தலில் பணத்தை செலவழிக்க திட்டமிடுகிறார். கடைசி நிமிடத்தில் மிச்சமாக ஒரு தொகையை அவரை தோக்க வைக்க வில்லன்கள் பிளான் செய்ய அதையும் தன்னுடைய அசிஸ்டெண்ட்டுக்கு சம்பளமாக கொடுக்கிறார்.

    இந்த திரைப்படத்தின் கதையை தான் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலமாக வெளியானது.

    மிசர்ஸ் டவுட் ப்யர்: ஹீரோவுக்கு மூன்று பிள்ளைகள் ஆனால் மனைவிக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டு டைவர்ஸ் ஆகிவிடுகிறது. மனைவிக்கு குழந்தைகளின் கஸ்டடி சென்று விடுகிறது. அவர்களை பார்த்துக் கொள்ள நாயகி வேலைக்கு பெண்ணை தேடுகிறார். ஹீரோ பெண் போல விஷேசம் போட்டுக்கொண்டு அவர்களை பார்த்து கொள்ள வருகிறார்.

    மனைவியை எப்படி சமாளித்தார் என்பது தான் படத்தின் கதை. இப்படம் கமல்ஹாசன், மீனா நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படமாக கோலிவுட்டில் உருவாகியது.

    தி காட்பாதர்: மாபியாத்தலைவர் தனது கொள்கைகளால் தன்னிடம் உதவி கேட்க வருபவர் விருப்பங்களுக்கு ஏற்ப கொலை மற்றும் கொள்ளை ஆகிய காரியங்களில் ஈடுபடுகிறான். எதிரிகளினால் கொல்லப்படவே இவரது மகனான ஹீரோ அவர் பாதையில் எதிரிகளை பழிதீர்ப்பதே கதை. இப்படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன்.

  • இப்பலாம் யாரு ஹீரோ.. யாரோ வில்லன்னே தெரியல!.. கோபத்தில் பொங்கிய எஸ்.ஏ.சி..

    SA Chandrasekar: சினிமாவில் ஒருவரை ஹீரோவாக காட்ட வேண்டுமெனில் வில்லனாக ஒருவரை காட்ட வேண்டும். வில்லனை அடித்தால்தான் அவன் ஹீரோ. அதாவது வில்லன் என ஒருவன் இல்லையெனில் ஹீரோவே இல்லை, ஹீரோவுக்கும் வேலையும் இல்லை. கெட்டதை தட்டி கேட்டால்தான் அவனை ரசிகன் ஹீரோவாக பார்ப்பான். எம்.ஜி.ஆர் காலம் முதல் இதுதான் திரைப்படங்களின் ஃபார்முலா.

    ஹீரோ வில்லன்: நம்பியார் இல்லையென்றால் எம்.ஜி.ஆருக்கே வேலையே இல்லை. ஹீரோயிசம் காட்டும் நடிகர்கள் நடிக்கும் எல்லா படங்களிலுமே கொடூரமான வில்லன் ஒருவன் இருப்பான். அது இந்த காலம் வரை தொடர்கிறது. வில்லனின் கதாபாத்திரம் ஃபவர்புல்லாக இருந்தால்தான் ‘வில்லனை ஹீரோ எப்படி அழிப்பான்’ என்கிற எதிர்ப்பார்பு ரசிகர்களிடம் உருவாகி அவனை படத்தோடு ஒன்றவைக்கும்.

    ஹீரோ போராடி வில்லனை கொல்லும்போதுதான் ரசிகனுக்கு திருப்தி ஏற்படும். மார்க் ஆண்டனி இல்லையெனில் பாட்ஷாவே இல்லை என்பதுதான் நிஜம். அதனால்தான் பெரும்பாலான இயக்குனர்கள் வில்லன் கதாபாத்திரத்தை மிகவும் ஃபவர்புல்லாக வடிவமைக்கிறார்கள். ஹீரோ என்றால் நல்லவன், வில்லன் என்றால் கெட்டவன் என்பதுதான் காலம் காலமாக இருந்து வந்தது.

    நெகட்டிவ் ஹீரோ: ஆனால், 90களில் நெகட்டிவ் ஹீரோ என்கிற கதாபத்திரங்கள் இயக்குனர்களால் உருவாக்கப்பட்டது. பில்லா மற்றும் மங்காத்தா போன்ற படங்களில் ஹீரோவே கெட்டதுதான் செய்வான். மங்காத்தா படத்தில் 500 கோடிக்காக எல்லா கெட்ட விஷயங்களையும் அஜித் செய்வார். ஆனால், ரசிகர்கள் அதை கொண்டாடினார்கள்.

    லியோ விஜய்: லியோ படத்தில் கூட பிளாஷ்பேக் காட்சியில் வரும் விஜய் கெட்டவனாகத்தான் இருப்பார். ஆனால், ரசிகர்களுக்கு அது தவறாகவே தெரியவில்லை. எனவேதான், பல நடிகர்களும் நெகட்டிவ் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில்தான், விஜயின் அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இது தொடர்பாக தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

    ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் ‘ஒருகாலத்தில் வில்லன்கள் செய்யும் எல்லா கெட்ட விஷயங்களையும் இப்போது கதாநாயகர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். வில்லன் யார்?.. கதாநாயகன் யார்? என்பதே தெரியவில்லை. படம் பார்க்கும் இளைய சமுதாயமும் கெட்டுவிடாதா?.. இயக்குனர்களுகும், கதாசிரியர்களுக்கும் பொறுப்புணர்வு அவசியம்’ என பேசி அட்வைஸ் செய்திருக்கிறார் சீனியர் இயக்குனர்.

  • அஜித் படத்தோட ரிலீஸ் ஆகணும்!.. இயக்குனருக்கு பிரஷர் கொடுத்த விஜய்!.. அட அந்த படமா?!…

    Vijay Ajith: ரஜினி – கமல் போட்டிக்கு பின் அந்த இடத்தை பிடித்தது அஜித் – விஜய் போட்டிதான். இருவருமே ஒரே நேரத்தில் சினிமாவில் வளர்ந்தார்கள். இவர்களின் பல திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகி போட்டி போட்டிருக்கிறது. சில சமயம் அஜித் படமும், சில சமயம் விஜய் படமும் வெற்றி பெற்றிருக்கிறது.

    எப்படி ரஜினி – கமல் ரசிகர்கள் மோதிக்கொண்டார்களோ அது போலவே இப்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை போட்டு கொள்கிறார்கள். ரஜினி கமல் ரசிகர்கள் மோதிக்கொண்டபோது செல்போனும் இல்லை, சமூகவலைத்தளங்களும் இல்லை. ஆனால், இப்போது டிவிட்டரில் அசிங்கமாக ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங் செய்து திட்டிக்கொள்கிறார்கள்.

    அஜித் சொல்லியும் அவரின் ரசிகர்கள் கேட்கவில்லை. விஜயோ இதை கண்டுகொள்ளவே இல்லை. அஜித் படம் வெளியானால் ‘இது மொக்கை படம்.. பிளாப்’ என விஜய் ரசிகர்கள் பதிவிடுவதும், விஜய் படம் வெளியாகும்போது அஜித் ரசிகர்கள் பதிலுக்கு அதையே செய்வதும் என ஓடிகொண்டிருக்கிறது.

    போட்டி என்பது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பொதுவாக பெரிய நடிகர்கள் தங்களின் படங்கள் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய விழா நாட்களில் வெளியாக வேண்டும் என ஆசைப்படுவார்கள். இயக்குனர்களுக்கும் பிரஷர் கொடுப்பார்கள். ரிலீஸ் தேதியை குறி வைத்து வேகமாக ஒரு படத்தை எடுக்கும்போது படத்தில் தவறு நடந்துவிடும். லோகேஷ் கனகராஜ் லியோவை இயக்கியபோது இதுதான் நடந்தது.

    இந்நிலையில், விஜயை வைத்து திருமலை, ஆதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரமணா ஊடகம் ஒன்றில் பேசியபோது ஆதி படத்தின் ரிலீஸ் தேதியில் சந்தித்த பிரச்சனை பற்றி பேசியிருக்கிறார். ஆதி படத்தை 2006ம் வருடம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்ததாக திட்டமிட்டு வேலை செய்து வந்தோம்.

    அஜித்தின் பரமசிவன் திரைப்படம் அதே வருடம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. எனவே, அந்த படத்தோடு ஆதி படமும் வெளியாக வேண்டும். அப்போதுதான் ஹைப் இருக்கும் என விஜயும், அவரின் அபபா எஸ்.ஏ.சியும் கருதி எனக்கு பிரஷர் கொடுத்தார்கள். எனவே, வேகமாக படத்தை எடுத்து ஆதி படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தோம். அதனால்தான் அந்த படம் ஓடவில்லை’ என சொல்லியிருக்கிறார்.