Tag: vijay ajith

  • விஜய் அஜித்தோட இது முடிஞ்சது!. இனிமே கதைதான் மாஸ்.. பொளந்து கட்டும் நடிகர்!…

    Vijay Ajith: சினிமாவில் இரண்டு நடிகர்களுக்கு இடையேயான போட்டி என்பது சினிமா துவங்கியது முதல் இருக்கிறது. பெரும்பாலும் இது எல்லா மொழிகளிலும் இருக்கும். குறிப்பாக இந்திய மொழிகளில் இது அதிகமாகவே இருக்கும். எம்.ஜி.ஆர் – சிவாஜி இடையே அந்த போட்டி இருந்தது.

    எம்.ஜி.ஆர் ஆக்சன் படங்களில் நடித்தால் சிவாஜியோ நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள செண்டிமெண்ட் கதைகளில் நடித்து ஸ்கோர் செய்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள் அப்போதே தியேட்டர்களில் சண்டை போட்டு கொள்வார்கள். அவர்களுக்கு பின் ரஜினி – கமல் போட்டி துவங்கியது.

    எம்.ஜி.ஆரின் ரூட்டில் போனார் ரஜினி. எனவே, அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவானர்கள். கமலோ நடிப்புக்கு தீனி போடும் புதுப்புது கதைகளை தேடிப்பிடித்து நடிக்க துவங்கினார். நடிப்பை விரும்புபவர்கள் கமலுக்கு ரசிகர்களாக மாறினார்கள். ரஜினி, கமல் படங்கள் ஒன்றாக தியேட்டர்களில் வெளியாகும்போது அவர்களின் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்வார்கள்.

    இது தொடர்கதையாகவே இருந்தது. தங்களின் படங்கள் ஓட ரஜினிக்கும், கமலுக்குமே இது தேவைப்பட்டது. அவர்களுக்கு அடுத்து விஜய் – அஜித் இடையே இந்த போட்டி உருவானது. கடந்த 20 வருடங்களாகவே இந்த போட்டி நிலவி வருகிறது. மற்ற நடிகர்களின் ரசிகர்கள் தியேட்டர்களில் சண்டை போட்டுக்கொண்டார்கள் என்றால் இவர்களின் ரசிகர்கள் டிவிட்டரில் சண்டை போட்டு கொண்டார்கள்.

    அஜித் படம் வெளியாகும்போது விஜய் தனது படத்தை ரிலீஸ் செய்வார். விஜய் படம் வெளியாகும்போது அஜித் தனது படத்தை ரிலீஸ் செய்வார். யார் வெற்றி பெறுகிறார் பார்க்கலாம் என்கிற மனோபாவம் இருவரிடமும் இருக்கிறது. ஆனால், இப்போது விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு போகிறார். சிம்பு – தனுஷ் போட்டி துவங்கினாலும் சிம்பு தொடர்ந்து படங்களில் நடிக்காததால் அது நீர்த்துப்போனது.

    இந்நிலையில், விஜயின் நண்பரும், நடிகருமான ஷாம் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித்.. இதுல விஜய் – அஜித்தோட முடிஞ்சது. இனி அப்படி ஒன்னு தமிழ் சினிமாவில் இருக்காது. ஏனா இப்போ நிறைய பேர் வந்துகிட்டே இருக்காங்க. அப்போலாம் ஹீரோதான் மாஸ். ஆனா இப்போ கண்டெண்ட்தான் மாஸ்’ என பேசியிருக்கிறார்.

  • விடாமுயற்சி படத்தின் மொத்த பட்ஜெட்.. எவ்வளவு நஷ்டம்னு பாருங்க! இந்த லிஸ்ட் போதுமா?

    மொத்த பட்ஜெட்: விடாமுயற்சி திரைப்படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இப்போது வெளியாகி இருக்கிறது. கடந்த மாதம் ஆறாம் தேதி அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விடா முயற்சி. மகிழ் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளிவந்த திரைப்படம். முதலில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். படத்தில் உள்ள நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீசியன்கள் இவர்களின் சம்பளம் 140 கோடி, தயாரிப்புக்கான செலவு 60 கோடி, வட்டி 20 கோடி, அஜித் சம்பளத்திற்கான வட்டி 50 கோடி, படத்தை புரொமோட் செய்வதற்காக 5 கோடி, விபிஎஃப்க்கான செலவு ஐந்து கோடி என மொத்தமாக படத்தின் பட்ஜெட் 280 கோடி.

    நடிகர்களுக்கான சம்பளம்: இதில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீசியன்களுக்கான சம்பளம் 140 கோடி என பார்த்தோம். இதில் யார் யாருக்கு எத்தனை கோடி சம்பளம் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதில் அஜித்துக்கு 105 கோடி சம்பளமும் த்ரிஷாவுக்கு 4கோடி, அர்ஜுனனுக்கு 7கோடி, ரெஜினாக்கு 50 லட்சம், இயக்குனரான மகிழ் திருமேனிக்கு 5 கோடி, இசையமைப்பாளர் அனிருத்துக்கு 13 கோடி, படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாசுக்கு மூன்று கோடி, மத்த ஆர்டிஸ்ட் மற்றும் டெக்னீசியன்களுக்கு 2.5 கோடி என மொத்தமாக 140 கோடி வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    வருமானம் இல்லை: அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் பிசினஸ் பற்றிய தகவல் இருக்கிறது. இதில் சில ஏரியாக்கள் தவிர பெரும்பாலான ஏரியாக்களில் லைக்காதான் சொந்தமாக ரிலீஸ் செய்திருக்கிறது. அதனால் ரிலீஸுக்கு முன்பாகவே தியேட்டரிக்கல் அடிப்படையில் லைக்காவிற்கு பெரிய வருமானமாக எதுவும் வரவில்லை. பல மாநிலங்களில் டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் கொடுத்ததனால் அது மட்டுமே தான் ரெவன்யூவாக வந்திருக்கிறது. கேரளாவை பொறுத்த வரைக்கும் கோகுலம் மூவிஸ் மூலமாக விடாமுயற்சி படத்தை லைக்காவே சொந்தமாக ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

    தியேட்டரிக்கல் பிஸினஸ்: அதனடிப்படையில் கேரளா தியேட்டரிக்கள் மூலமாக லைக்காவிற்கு அட்வான்ஸ் ஆக கிடைத்த தொகை 10 கோடி. அதன் பிறகு ஆந்திரா மற்றும் தெலுங்கானா இங்கேயும் லைக்காதான் சொந்தமாக ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அதிலும் இவர்களுக்கு அட்வான்ஸ் ஆக 10 கோடி கிடைத்திருக்கிறது. அதன் பிறகு கர்நாடகா தியேட்டரிக்கல் உரிமையாக ஒரு நிறுவனம் ஆறு கோடிக்கு வாங்கி இருந்தார்கள். அதன் பிறகு ஹிந்தியில் தியேட்டரிக்கல் மற்றும் சேட்டிலைட் உரிமையாக 15 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது .அதன் பிறகு விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனம் 70 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது.

    முன்னதாக 2022ல் netflix நிறுவனத்திற்கும் லைக்காவிற்கும் இடையே ஒரு டீலிங் நடந்தது .என்னவெனில் விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் 70 கோடி, சந்திரமுகி 2 படத்தின் டிஜிட்டல் 25 கோடி, நாய் சேகர் படத்தின் டிஜிட்டல் 10 கோடி, அதன்பிறகு சின்ன சின்ன படங்களுக்கு டிஜிட்டல் உரிமையாக 20கோடி என கிட்டத்தட்ட 125 கோடி லைக்காவிற்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கும் ஒரு டீலிங் நடந்திருக்கிறது .

    அதன் பிறகு இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் நிறுவனம் 30 கோடிக்கும் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் 15 கோடிக்கும் வாங்கி இருக்கிறது .அதனால் விடாமுயற்சி படத்தின் ரிலீஸுக்கு முன்பு பார்த்தோம் என்றால் இந்த படத்தின் வியாபாரம் என்பது 156 கோடி. அதனால் பட்ஜெட் 280 கோடி, ரிலீசுக்கு முன்பு இதனுடைய மொத்த பிஸ்னஸ் 156 கோடி ஆக மொத்தம் படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே லைக்காவிற்கு 124 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

  • அஜித் விஜய்க்கு வைக்கப்படும் கோரிக்கை.. குட் பேட் அக்லி டீஸர் ஏற்படுத்திய தாக்கம்

    அஜித்தின் அபார வளர்ச்சி: ஒருவரின் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு அபார வளர்ச்சியை அடைந்திருக்கும் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியானதிலிருந்து கோடம்பாக்கம் ஒரே பரபரப்பாக இருக்கிறது. இதைப் பற்றி பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சில சுவாரசிய தகவல்களை கூறி இருக்கிறார். ரஜினியைப் போல அஜித்தும் ஆரம்பத்தில் ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்துதான் வந்திருக்கிறார்.

    ஒரு ஆம்லெட் கேட்டதற்கு கோழி இன்னும் முட்டை போடல என ரஜினியிடம் சொன்ன உதவியாளர் அதே ரஜினி ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ஆக வந்த பிறகு காடை, கோழி என அசைவ உணவுகளை பரிமாறினாராம். ரஜினி அவரிடம் ‘பேசும் பொழுது பார்த்து பேசணும்’ என சொல்லிவிட்டு வந்திருக்கிறார் .அப்படித்தான் அஜித்தும் அவருடைய ஆரம்ப காலங்களில் முதல் படத்திலிருந்து சில அவமானங்களை சந்தித்திருக்கிறார் .

    அஜித்துக்கு ஏற்பட்ட அவமானம்: எல்லோருக்கும் நாற்காலி கொடுக்கும் பட்சத்தில் இவருக்கு மட்டும் ஸ்டூல் கொடுத்து உட்கார வைத்திருக்கிறார்கள். ஆப்பிள் ஜூஸ் கொடுக்கும் பட்சத்தில் இவருக்கு மட்டும் டீ கொடுத்திருக்கிறார்கள். 2 ஸ்டார் ஹோட்டல் கொடுக்கும் பட்சத்தில் இவருக்கு மட்டும் ஒரு சிறிய லாட்ஜில் அறை கொடுத்திருக்கிறார்கள். இப்படி பல அவமானங்களை சந்தித்து விட்டு தான் வந்தவர் அஜித்.

    ஆனால் இன்று அவருடைய அபார வளர்ச்சியை பார்க்கும் பொழுது அவரை அவமானப்படுத்தியவர்களுக்கு நாம் தெரியாமல் செய்து விட்டோமே என்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கும். டீஸர் வெளியானதும் ஒரு தியேட்டர் உரிமையாளர் என்னிடம் வந்து இந்தப் படத்தை பொங்கலுக்கு விட்டிருக்கலாமே சாமி என புலம்பினாராம். அப்படி ஒரு பேன் பாய் சம்பவமாகத்தான் இந்த படம் உருவாகி இருக்கிறது.

    ஃபேன் பாயாக ஆதிக் செய்த சம்பவம்: ஆதிக் அஜித்தை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்தியிருக்கிறார். ஏன் அஜித்தே இந்த படத்தின் டீசரை பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவதை ஆச்சரியமாக பார்த்திருப்பார். ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்க்கும் பொழுது அஜித்திற்கு 7 ,8 வருடங்களுக்கு முன்பு இந்த மாதிரி படங்களை பண்ணியிருக்கலாமே என நினைக்க வைத்திருக்கும். தான் எதை செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் விடாமுயற்சி போன்ற படம், வலிமை போன்ற படம் என நடித்து வந்தார் அஜித்.

    ஆனால் ரசிகர்களுக்கு எது தேவை? எதைக் கொடுத்தால் அவர்கள் திருப்தி அடைவார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் தான் இந்த குட் பேட் அக்லி திரைப்படம். ஒரு ரசிகனாக படத்தை எடுத்திருக்கிறார் ஆதிக். ஆந்திரா, தெலுங்கில் உள்ளவர்களே ‘ஒரு டீஸரை போய் இப்படி கொண்டாடுகிறார்களே’ என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்களாம். அதனால் இந்த படம் ஒரு பெரிய விருந்தாகத்தான் ரசிகர்களுக்கு இருக்கப் போகிறது .

    சரியாக சொன்ன ஷாம்: அதிலும் சமீபத்தில் நடிகர் சாம் கூறும் பொழுது கூட ரஜினி- கமல், அஜித் -விஜய் இவர்களுக்கு பிறகு யாருமே அப்படி ஒரு போட்டியில் இல்லை. இனிமேல் யாரும் அப்படி இருக்கவும் மாட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு மாஸை இவர்கள் கிரியேட் செய்துவிட்டு போயிருக்கிறார்கள் .இனிமேல் அந்த மாதிரி யாரும் வரவும் மாட்டார்கள் என சொல்லி இருந்தார். ஆனால் அதுதான் உண்மை .இப்படி ஒரு பெரிய மாஸான நடிகர்கள் இப்போது சினிமாவை விட்டு போகும் போது தியேட்டர் உரிமையாளர்களின் நிலைமை என்னவாகும் ?

    அதனால் தான் தியேட்டர் உரிமையாளர்கள் தேர்தல் முடிந்த பிறகு விஜய்க்கு ஒரு கோரிக்கை வைக்கப் போகிறார்களாம். வருசத்துக்கு ஒரு படம், 15 நாள் கால்ஷீட் கொடுத்து விட்டு நடிங்கள் என சொல்லப் போவதாக கூறியிருக்கிறார்களாம் .இன்னொரு பக்கம் அஜித் கார் ரேஸ் என அவருடைய பொழுதுபோக்கு பிடித்த விஷயம் எதுவோ அதில் கவனம் செலுத்தி வருகிறார். அவரிடமும் வருடத்திற்கு மூன்று படம் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப் போகிறார்களாம்.

    ஏனெனில் இவர்களால் தான் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம் வந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் இருவரும் சினிமாவை விட்டு விலகும் பொழுது எங்களின் நிலைமை என்னவாகும் என தியேட்டர் உரிமையாளர்கள் புலம்புகிறார்கள் என செய்யாறு பாலு இந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

  • அஜித் – விஜய் சேர்ந்து நடிச்சும் ஓடாத படம்!.. பல வருடங்கள் கழித்து வெளிவந்த ரகசியம்…

    சினிமாவில் வளரும்போது பல நடிகர்களும் ஒன்றாக இணைந்து நடிப்பார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் வளந்த பின் அப்படி நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் அவ்வளவு நெருக்கமாக இருந்தும் கூட அவர்கள் ஒன்றாக நடித்தது ‘கூண்டுக்கிளி’ என்கிற ஒரே படம்தான்.

    அதேநேரம் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற சில நடிகர்கள் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தார்கள். அவர்களுக்கு பின் கமலுடன் பல படங்களிலும் இணைந்து நடித்தார் ரஜினி. ஆனால், ஒருகட்டத்தில் இருவரும் தனியாக நடிக்க துவங்கினார்கள். அதன்பின் இப்போது வரை ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கவே இல்லை. இனிமேலும் அது நடக்க வாய்ப்பில்லை.

    இதையும் படிங்க: திடீரென கன்னத்தில் ரஜினி செய்த ’அந்த’ விஷயம்… ரம்பாவை தொடர்ந்து அடுத்து ஷாக் சொன்ன நடிகை…

    ரஜினி – கமலுக்கு பின் வந்தவர்கள்தான் விஜய் – அஜித். இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம்தான் ராஜாவின் பார்வையிலே என்கிற படம். 1995ம் வருடம் இப்படம் வெளியானது. இப்படத்தை ஜானகி சௌந்தர் என்பவர் தயாரித்து இயக்கி இருந்தார்.

    இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். எனவே, அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையாக இருக்கும். இந்த படத்தில் அஜித்தின் நண்பனாக விஜய் நடித்திருப்பார். ஆனால், அஜித்திற்கு காட்சிகள் குறைவுதான். ஆனாலும், அழுத்தமாக இருக்கும். ஆனாலும் இந்த படம் பாக்ஸ் ஆபிசில் பெரிய வெற்றிபெறவில்லை.

    இதையும் படிங்க: என்னை ஜெயிக்க அவராலதான் முடியும்!.. ரஜினி சொன்ன அந்த ஹீரோ யார் தெரியுமா?..

    சமீபத்தில் ஜானகி சௌந்தர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது ராஜாவின் பார்வையிலே படம் ஏன் வெற்றிப்படமாக அமையவில்லை என்பது பற்றி பேசினார். ‘அந்த படத்தை வியாபாரம் செய்யும் போது சில தவறுகளை செய்துவிட்டேன். அந்த படத்தை 67 லட்சத்தில் எடுத்தேன்.

    rajavin

    முதலீட்டில் 85 சதவீதம் எனக்கு வந்துவிட்டது. அந்த படத்தின் தொலைக்காட்சியை அவசரப்பட்டு வெறும் 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டேன். 6 மாதங்கள் கழித்து 60 லட்சம் ரூபாய்க்கு கேட்டார்கள். அதனால்தான் அந்த படம் எனக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. ஆனாலும், அந்த படம் எனக்கு முக்கியமான படமாகும்’ என சொல்லி இருந்தார்.